
(படைப்புவாதம், பரிணாமவாதம்- இரண்டுக்கும் அப்பால்)
நாம் வாழும் இப்பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டதா? அல்லது, அது
தானே தோன்றியதா? இப்பூமியில் உயிரினங்களையும், மனிதனையும்
கடவுள் படைத்தாரா? அல்லது, அவை பரிணாமத்தின் விபத்து -போன்ற
விளைபொருட்களா?
இப்பிரபஞ்சத்தையும், பூமியில் உயிரினங்களையும், மனிதனையும் கடவுள்
தான் படைத்தார் என படைப்புவாதிகள் கூறுகிறார்கள். பரிணாமவாதி
களோ, இல்லை, இப்பிரபஞ்சம் தானே தோன்றியது, உயிரினங்களும், மனித
னும் பரிணாமத்தின் விபத்து போன்ற விளை பொருட்களே என்கின்றனர்.
இவ்விரண்டில் எது உண்மை? இவ்விரண்டு கூற்றுகளும் உண்மையல்ல என்-
றால், பிறகு எதுதான் உண்மை என்பதைப்பற்றியதுதான் இக்கட்டுரை!
நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும்.அதாவது, நாம் பிரபஞ்
சம் எனும் ஒரு மாபெரும் அமைப்பிற்குள், அதன் ஒரு 'பகுதி'யாக இருக்கி
றோம், ஆனால், அதன் தோற்றம் மற்றும், அதன் தலைவிதி குறித்து நமக்கு
அறுதியாக எதுவும் தெரியாது! ஆக, அப்பிரபஞ்சத்தின் ஆரம்பம் குறித்தும்,
அதன் வளர்ச்சிப்போக்கு, மற்றும் முடிவு குறித்தும், அதற்கும் நமக்குமான
தொடர்பு குறித்தும், குறிப்பாக, பிரபஞ்சத்தின் எத்தகைய பகுதியாக நாம்
விளங்குகிறோம் என்பதையும் அறியாமல் நம் வாழ்க்கை சிறிதும் அர்த்தம்
பெறவியலாது!
நான் படைப்பிற்கும், பரிணாமத்திற்கும் எதிரானவனல்ல. அதேவேளையில்,
படைப்புவாதம், பரிணாமவாதம் இரண்டையும் மறுக்கிறேன்! ஏனெனில்,
பரிணாமத்தை மறுக்கும் படைப்புவாதமும், படைப்பை மறுக்கும் பரிணாம
வாதமும் மட்டுப்பாடானது, ஆகவே தவறானது. எனவே, இவ்விரண்டையும்
கடந்து செல்லவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறேன்.இவற்றுக்கு
பதிலாக, "படைப்புப்பூர்வமான-பரிணாமத்தை" (Creative-Evolution)
முன்வைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் படைப்பும்,பரிணாமமும் வேறு
வகைப்பட்டவை. நான் முன்வைக்கும் "படைப்புப்பூர்வமான-பரிணாமம்"
இறுதி-மெய்ம்மையை , அதாவது 'கடவுளை' மறுப்பதில்லை. ஆம், நான்
சொல்லும் 'கடவுளும்' வேறுவகைப்பட்டவர், அவர் படைப்பிற்கு முன் இருப்ப
தில்லை; மாறாக, அவர் பரிணாமத்தின் முடிவில், இலக்கு நிலையான முழு
மையில் வெளிப்படவிருக்கும் "மெய்ம்மை"ஆவார்!
ஆகவே நாம் உள்ளதிலிருந்து, நம்மைச்சூழ்ந்தமைந்திருக்கும் உலகிலிருந்து
இப்பிரபஞ்சத்திலிருந்து தான் நமது ஆய்வை, புரிதலை, வாழ்க்கையைத்
தொடங்கி மெய்ம்மையை அடைந்திட வேண்டுமே தவிர , கடவுள் எனும்
கருத்திலிருந்தும், வெறும் நம்பிக்கையிலிருந்தும் தொடங்கிடலாகாது! அது
நம்மை மெய்ம்மையிடம் கொண்டு சேர்க்காது!
அதே நேரத்தில், இப்பிரபஞ்சத்தை முடிந்த முடிவான நிஜமாகக்கொள்வதும்,
அது தன்னில் தானே தோன்றியதாக, என்றென்றும் இருந்துவருவதாக, இனி
என்றென்றைக்கும் சாசுவதமாக இருக்கும் என்பதாகக்கொள்வதும் முறை
யாகாது. ஏனெனில், பிரபஞ்சம் தன்னில்தானே தோன்றிட முடியாது என்பது
ஒரு எளிய தருக்க உண்மையாகும்; இப்பிரபஞ்சம் தோன்றிடஏதோவொன்று
காரணமாக அமைந்திருக்கவேண்டும்; ஆம், "வித்து" இல்லாமல் விருட்சம்
இல்லை. ஆனால், அந்தவொன்று கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்ப
தில்லை! கடவுள் என்பதென்ன? நாம் ஏற்றிச்சுமத்தும் பண்புகளைத்தவிர
அக்கடவுள் உள்ளீடற்ற ஒன்றுதானே!
பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல-காரணமான அந்த ஒன்று எதுவாயினும்,
எவ்வாறேனும் அது இப்பிரபஞ்ச அமைப்பினுள் உட்பட்டிருப்ப (involved)
தாய்,பின்னப்பட்டதாய் இருக்கவேண்டும். அப்போதுதான் 'படைப்பாளன்',
'படைப்பு' எனும் இருமை தோன்றாமல் மெய்ம்மையின் 'ஒருமை' தக்கவைக்
கப்படவியலும்! ஒருவேளை,கடவுளே இப்பிரபஞ்சத்தைப்படைத்திருப்பினும்
அவர் அதிலிருந்து வேறாய் இருக்கமுடியாது-எவ்வாறேனும் அவர் இந்நிபந்த
னையை நிறைவேற்றாமலிருக்க முடியாது.
ஆம், கடவுளால் படைக்கமுடியாது! இன்னும், அவருடைய 'சர்வ- வல்லமை'
யைக்கொண்டு படைக்கமுடியலாம் என்றாலும்கூட அவரால் அதைச்செய்ய
முடியாது! ஆனால், அவரால் எதுவாகவும் உருமாற முடியும்! என்றாலும் அவ
ருடைய 'சர்வ- வல்லமை' அதற்கு அனுமதியாது! ஏனெனில் அவரே எல்லா
வகையிலும் "இறுதியானவர்" என்பதால், அவரால் அவரை விஞ்சிய எது
வொன்றாகவும் உருமாறவியலாது! ஆனால், ஒரேயொரு சாத்தியம் மட்டும்
திறந்திருக்கிறது, அவரால் அவருக்குக் குறைவான எதுவாகவும் உருமாற
முடியும் - ஆனால், அது அவருக்கு ஏற்ற ஒரு சவாலாய் அமையாது! ஆகவே,
அவர் முற்றிலும் வித்தியாசமான, விபரீதமானதொரு பரிசோதனைக்குத்
தன்னை உட்படுத்திக்கொண்டார்! அவர் தனது "சர்வ-வியாபி" நிலையைத்
(OMNI-PRESENCE)துறந்து, "எங்குமில்லாமை" நிலையைத்(OMNI-ABSENCE)
தழுவிக்கொண்டார்! வேறு சொற்களில் சொன்னால், அவர் தன்னை முற்றி
லுமாக மறைத்துக்கொண்டுவிட்டார்!அதுவே அவருக்கு ஏற்ற சவாலாக ஆகி
யது போலும்!
ஒரு 'விதை' யானது விருட்சமாக மாறுவதைப்போல, கடவுள் இப்பிரபஞ்ச
மாக மாறியுள்ளார். விதையின் 'மறைவு' விருட்சத்தை எழச்செய்வது போல
கடவுளின் 'மறைவு' பிரபஞ்சத்தை எழச்செய்தது. விதைக்கும் விருட்சத்திற்
குமான இடைவெளியைப் போலவே, பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்குமான
இடைவெளி (வித்தியாசம்) அளவிடமுடியாதது! மேலும், கடவுளின் மறைவே
பிரபஞ்சத்தைத் தோன்றச்செய்தது என்பதைத்தான் கடவுளின் "எதிர்மறை-
படைப்பு" (Negative-Creation)என்று கூறுகிறேன்!
பிறகு, விருட்சத்தினுடைய வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில் மலர்கள்
தோன்றுகின்றன,அதன்பிறகு பிஞ்சுகள் தோன்றுகின்றன.அதைப்போலவே
பிரபஞ்சத்தினுடைய பரிணாம வரலாற்றின் ஒரு கட்டத்தில் உயிரி தோன்று
கிறது. அதன்பிறகு, மனிதஜீவிகளாகிய நாம் தோன்றுகிறோம்.
ஆனால், ஒரு மரத்தின் பகுதிகளான பிஞ்சுகளுக்கும், பிரபஞ்சத்தினுடைய
பகுதிகளாகத்திகழும் மனிதஜீவிகளாகிய நமக்கும் உள்ள ஒருவித்தியாசம்
அவை உணர்வற்றதாய் உள்ளன; நாம் உணர்வுள்ளவர்களாய், ஆகவே நமது
மூலத்தைப்பற்றி விசாரிப்பவர்களாய் உள்ளோம் என்பதுதான்.
ஆனால், நம்மில் சிலர் ( இயற்கைவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நாத்திக
வாதிகள், பொருள்முதல்வாதிகள்,டார்வினிஸ்டுகள்,பௌதீகவிஞ்ஞானிகள்
ஆகியோர்) வித்து இல்லாமல் விருட்சம் வந்தது என்கிறார்கள், அதாவது பிர-
பஞ்சமானது தானே தோன்றியது என்கிறார்கள்!நம்மில் சிலர் (ஆத்திகவாதி
கள், படைப்புவாதிகள், அறிவுக்கூர்மையின்-வடிவமைப்பு வாதிகள், ஆகி-
யோர்) இப்பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டதாகவும், கடவுள் சொர்க்
கத்தில் இருப்பதாகவும், அவசியமேற்படும் போதெலாம் அவர் வரலாற்றில்
இடையீடு செய்வதாகவும் கூறுகிறார்கள்!
ஆனால், இந்த இரு பிரிவினரிடமும் உள்ள மையப்பிரச்சினை என்னவென்-
றால், "மெய்ம்மை" குறித்த அவர்களுடைய தவறானஅணுகுமுறையேஆகும்.
இன்னும் சொல்லப்போனால், அவர்களிடம் "மெய்ம்மை" குறித்த அணுகு
முறை என்பதே இல்லை என்று சொல்லலாம்!
பரிணாம வாதிகளும், பொருள்முதல்வாதிகளும் வெறும் பிரபஞ்சத்தை
(விருட்சத்தை) மட்டுமே காண்கிறார்கள், கணக்கில்கொள்கிறார்கள். விருட்
சத்தைக்கண்டு ஏற்றுக்கொள்ளும் இவர்கள், வித்து இல்லாமல் விருட்சம்
தோன்ற முடியாது ; ஒன்றுமில்லாததிலிருந்து எதுவும் தோன்றாது என்ற
உண்மையை மறுப்பது மடைமையே தவிர வேறில்லை! ஏனெனில், விருட்சத்
தின் மூலமான வித்தை மறுக்கும் இவர்கள் விருட்சம் விளைவிக்கும் வித்துக்
களை மறுப்பதும் நிச்சயமல்லவா? விஞ்ஞானி கார்ல் சாகன்(Carl Sagan)
அவர்கள், கடவுள் தான் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று சொல்பவர்
களிடம், அப்படியானால், 'கடவுள் எங்கிருந்து வந்தார்' என்று கேட்டுவிட்டு,
'கடவுள் எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்று நாம் சொல்வோமெனில்,
ஒரு படியை மிச்சப்படுத்தி, பிரபஞ்சம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது
என்ற முடிவிற்கு ஏன் வரக்கூடாது?' என ஆலோசனை கூறினார் என்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு "பெரு-வெடிப்பு" நிகழ்வில்
நமது பிரபஞ்சம் தோன்றியதாகக்கூறப்பட்டு, பரவலாக விஞ்ஞானிகளால்
ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞானக் கோட்பாட்டை கார்ல் சாகன் அவர்கள்
கேள்விப்படவில்லையா? அதுபோகட்டும், இன்னும் 280கோடி ஆண்டுகளுக்
குப் பிறகு, நமது பிரபஞ்சம், ஒரு "வெப்பச் சாவில்" (Heat Death)மடிந்து
போகக்கூடும் என்பதாக, 1851 ம் ஆண்டிலேயே விஞ்ஞானி வில்லியம் தாம்-
ஸன் (William Thomson) அவர்கள் கணித்துச் சொன்னதையும் கார்ல்
சாகன் கேள்விப்படவில்லையா? பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும்,
அது கேலக்ஸியானாலும், நட்சத்திரமாயினும் பிறக்கிறது, வளர்கிறது,பிறகு
முதிர்ந்து மடிந்து போகிறது; அதுபோலவே,ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பிறக்
கிறது, பிறகு ஒருகட்டத்தில் மடிந்துபோகிறது என விஞ்ஞானிகள்தான் கூறு
கிறார்கள்! பிரபஞ்சத்தின் முடிவு பற்றிய கருத்துகளும், சிந்தனைகளும்
1777 ம் ஆண்டிலேயே, பிரெஞ்சு வானவியலாளர், ழான் ஸில்விய்ன் பெய்லி
போன்றோரால் தொடங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், நம்முடைய தலைபோகிற பிரச்சினை, இன்னும் 280 கோடி ஆண்டு
களில் பிரபஞ்சம் மடிந்து விடப்போகிறது என்பது பற்றியதல்ல! மாறாக,
மனிதகுலம் இந்த 21ம் நூற்றாண்டு வரையிலாவது தாக்குப்பிடித்து நிலைக்
குமா என்பது ஒருபுறமிருக்க, வெறும் 70, அல்லது 80, அல்லது அதிகபட்சம்
100 ஆண்டுகளே ஆயுளைக்கொண்ட நம்முடைய 'வாழ்காலம்' எவ்வளவு
குறுகியது என்பது குறித்து நாம் சிரத்தையுடன் சிந்திக்கவேண்டாமா? விஞ்
ஞானி கார்ல் சாகன் (1934-1996), அவர்கள் வெறும் 62 ஆண்டுகள் மட்டுமே
வாழ்ந்தார்! ஆனால், அவரோ: " இருப்பது இப்பிரபஞ்சம் மட்டுமே, முன்னே
யும், இனி எப்போதும்" ("The cosmos is all that is, ever was, or
ever will be.") என்றெழுதி புகழ்பெற்ற அவரது "பேரண்டம்" நூலைத்
தொடங்கினார்! ஆனால், பிரபஞ்சம் அழிவில்லாமல் சாசுவதமாக என்றென்
றும் இருந்தாலென்ன, அல்லது அதைவிட படைப்புவாதிகள் கூறுகிற கடவுள்
இன்னும் சாசுவதமாக, நித்தியமாக இருப்பார் என்றால்தான் என்ன? நம்மு
டைய 'வாழ்காலம்' குறுகியதாய் இருப்பதும் பிரச்சினையல்ல! எது முக்கிய
மெனில், நம் வாழ்வின் "அர்த்தம்" மட்டுமே !
விருட்சத்தின் அர்த்தம், அல்லது, உண்மை என்பது அதன் வேரிலோ, அடித்
தண்டிலோ, கிளைகளிலோ, இலைகளிலோ தங்கியிருப்பதில்லை; மாறாக,
கனிகளில் மட்டுமே விருட்சத்தின் இரகசியம், அர்த்தம் வெளிப்படும்! உண்
மையில், விருட்சத்தைவிட வித்துதான் முக்கியம்! விருட்சம் என்பது வித்து
தன்னை மறுபடைப்பு செய்துகொள்வதற்கான ஒரு உபாயம் அல்லது ஊட-
கம், அவ்வளவுதான்! பிரபஞ்சத்தின் இரகசியம், அல்லது, உண்மை என்பதும்
பௌதீகப்பண்புகொண்ட அதன் எப்பகுதியிலும், தொலைவிலுள்ள கேலக்
ஸியிலோ, எவ்வொரு நட்சத்திரத்திலோ, அண்ட வெளியிலோ எங்கும் இருப்
பதில்லை! மாறாக, பிரபஞ்சத்தின் புதிரைத்தியானிக்கும்(Contemplating)
பிரபஞ்சத்தின் கனி போன்ற மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சத்
தில் தான் உள்ளது! "மரமானது அதன் கனியினால் தான் அறியப்படும்"
படைப்புவாதிகளோ, பிரபஞ்சத்தைப்பார்த்து அதன் உள்ளார்ந்த சிக்கலான
வடிவமைப்பு நேர்த்தியைக்கண்டுவியந்து 'இல்லாத' கடவுளின் 'சர்வ-வல்ல
மை'யைப்போற்றிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்!பரிணாமவாதிகளுக்கும்
படைப்புவாதிகளுக்கும் உள்ள ஒருவித்தியாசம் என்னவென்றால், பரிணாம
வாதிகள் 'வித்து இல்லாமல் விருட்சம் வந்தது!' என்கிறார்கள். அதாவது,
'விருட்சம் தோன்றுவதற்கு வித்து எதுவும் தேவையில்லை' எனவும் சொல்
கிறார்கள்! இன்னும், அவ்விருட்சம் வித்துக்களை விளைவிக்கக்கூடுமே என்
பது குறித்தும் அவர்கள் சிறிதும்கருதுவதில்லை, அக்கறைகாட்டுவதில்லை.
படைப்புவாதிகளோ, 'வித்து மறையாமலேயே விருட்சம் தோன்றும்!' என்கி
றார்கள். அதாவது, வித்தும் இருக்கிறது, விருட்சமும் இருக்கிறது! என்கிறார்
கள்.
மொத்தத்தில், இரண்டு பிரிவினரும் மனிதஜீவிகளின் (பிஞ்சுகள்/ காய்கள்)
முக்கியத்துவத்தையும், அம்மனிதஜீவிகள் ஒவ்வொருவரின் பரிணமிக்கும்
உணர்வும் (Evolving Consciousness)வளர்ந்து முற்றிக்கனிந்து அடைய
விருக்கும் 'உணர்வின் முழுமை' ( பிரபஞ்ச-விருட்சத்தின் வித்தைக்கொண்
டிருக்கும் கனி) யின் மகத்துவத்தையும் உணர்ந்தறியத் தவறிவிட்டனர்.
உண்மையில், "கடவுள்"தான் பிரபஞ்சத்தின் வித்து ஆவார்! அவர் தன்னைத்
தானே விதைத்துக்கொண்டு, 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்ச
மாக முளைத்தெழுந்தார்! நமது பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்
தோன்றியதோ, அல்லது வெறும் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதோ
அதுவல்ல முக்கியம்! மாறாக, இப்பிரபஞ்ச-விருட்சத்திலிருந்து இறுதியாக
வெளிப்படப்போவது 'எது' என்பதே, ஆம், பிரபஞ்ச-விருட்சத்தின் வித்தைக்
கொண்டிருக்கும் 'கனிகள்' மட்டுமே முக்கியம்! உண்மையில், கனிகளாகக்
கனிய வேண்டியது மனித ஜீவிகளாகிய நாம் தான். ஆனால், நாமோ இன்
னும் நமது உணர்வில் பிஞ்சுகளாகவே உள்ளோம். நாம் எப்போது நம் உணர்
வில் முற்றி 'முழு-உணர்வு' எனும் கனிந்த நிலையை அடைகிறோமோ அப்
போது பிரபஞ்சத்தின் மூல-வித்தாகிய 'கடவுளை' நம்முள்ளே நேரடியாகத்
தரிசிப்போம்.
தொடர்ந்து மேலே செல்வதற்கு முன், ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்
திக்கொள்வது நல்லது. அது என்னவென்றால், படைப்புவாதிகள் கூறும் கட-
வுளுக்கும், இங்கு நான் குறிப்பிடும் கடவுளுக்கும் மாபெரும் வித்தியாசம்
உள்ளது. அவர்கள் கூறும் கடவுள், நம்பிக்கையின் கடவுளாகும்! அப்படி ஒரு
கடவுள் இருந்தால், நமக்கு சௌகரியமாகத்தான் இருக்கும்! அவர், நமது
கஷ்ட- நஷ்டங்களையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் போக்கி
நம்மைக் காப்பாற்றக்கூடும்! ஆனால், நான் குறிப்பிடும் கடவுள் வித்தியாச
மானவர், நாம் ஒவ்வொருவரும்தான் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்க்க
வேண்டும்!!
உண்மையில், 'கடவுள்' இல்லாமல் எவரும் இல்லை; எவரும் இருக்கவும்
முடியாது! ஏனெனில், "உணர்வு"(Consciousness)என்பதன் ஒரு சிறு கீற்று
கூட இல்லாமல் எவ்வொரு சிறு புழு,பூச்சியும், விலங்கினங்களும் உயிர்வாழ
இயலாது. ஆம்,புலன்களின் உணர்வுதான் விலங்குஜீவிகளின் கடவுள் ஆகும்.
ஆக, படைப்புவாதிகளின் கடவுளை 'நம்பிக்கையின் கடவுள்' என்றால், பரி
ணாமவாதிகள்,நாத்திகவாதிகளின் கடவுளை 'பகுத்தறிவின் கடவுள்' என்று
தான் சொல்லவேண்டும். அப்படியென்றால், நான் குறிப்பிடும் கடவுள் எத்த
கையவர் என்றால், அவரை 'முழு-உணர்வின் கடவுள்' என்று குறிப்பிடலாம்.
'நம்பிக்கை', 'பகுத்தறிவு', 'முழு-உணர்வு' ஆகிய இவை யாவும் உணர்வின்
வெவ்வேறு நிலைகளையே குறிக்கின்றன. ஒருவகையில், "உணர்வு" தான்
கடவுள் என்று சொல்லிவிடலாம். ஆனால், 'உணர்வு' என்பது ஒருபடித்தான
தல்ல என்பதால், ஒரு சிறு திருத்தத்துடன், "முழு-உணர்வு" , அதாவது முழு
மையானதொரு உணர்வு தான் கடவுள் என ஐயமின்றி அறிவித்துவிடலாம்!
'கடவுள்', அல்லது, தனி முதலான அல்லது தனி முடிவான 'மெய்ம்மை' என்று
ஒன்று இருக்குமானால், நிச்சயம் அதை அறிவதற்கும், அணுகுவதற்குமான
கருவியும், ஊடகமும், வழியும் இருந்தாக வேண்டும். அத்தகைய உண்மை-
யை,மெய்ம்மையை அறியக்கூடிய ஒன்று அம் மெய்ம்மையில் பங்குகொள்
வதாயும் இருக்கவேண்டும். அத்தகைய ஒன்று இப்பிரபஞ்சத்தில் உள்ளது
என்றால், அது மனிதனிடம் உள்ள "உணர்வு" மாத்திரமே! ஏனெனில், மனித-
உணர்வைக்கொண்டும், மனித உணர்வின் வழியாகவும்தான் ஒட்டுமொத்த
பிரபஞ்சமும் தனது ஒப்பற்ற இலக்கான "முழு-உணர்வை" அடையவிருக்
கிறது. இம்முயற்சியில், பிரபஞ்சமானது தனது (1500 கோடி ஆண்டு) நெடிய
பரிணாமப் பிரயத்தனத்தின் பலனாக தற்போது மிகவும் முக்கியமான கட்ட
மாக மனிதனுள் சுய- உணர்வாக எழுந்துள்ளது! ஆம், பரிணாமத்தில் பரிண
மிப்பது எது என்றால், அது "உணர்வு" என்பது தான். பல்வேறு வகைப்பட்ட
வினோதமான விலங்குயிரினங்களை உருவாக்கிடும் வழிமுறை அல்ல பரி
ணாமம் என்பது! உயிரியல்- பரிணாமவாதிகள் வெறும் விலங்கினங்களை
மட்டுமே காண்கின்றனரே தவிர, அவ்விலங்கினங்களினூடாக படிப்படியாக
வளர்ந்தெழுகிற உணர்வின் முன்னேற்ற நிலைகளைக் காண்பதில்லை!
நம்பிக்கை, பகுத்தறிவு என்பவை மனிதன் தற்போது பெற்றுள்ள உணர்வின்
அதாவது, 'அகந்தை' என்று சொல்லப்படும் சிற்றுணர்வின் மட்டுப்பாடான
கருவிகளாகும். அவற்றைக்கொண்டு கடவுளை அறியவும், உணர்ந்து அனுப
வம் கொள்ளவும் இயலாது. ஆனால், "முழு-உணர்வு" என்பது மனித-உணர்
வைக் கடந்த, ஒவ்வொரு தனிமனிதனாலும் அடையப்படவேண்டிய இறுதி-
நிலை உணர்வாகும்.
நாம் மீண்டும் நமது ஆய்வைத்தொடர்வோம். ஆம், கடவுள் பிரபஞ்சமாக
உருமாறியுள்ளதால், அவர் உலகில் உள்ளடங்கியிருப்பதாக (Immanent)ச்
சொல்லலாம். ஆனால், அதன் அர்த்தம் கடவுள் உலகினுள், ஒவ்வொரு அணு
விலும், தூணிலும்,துரும்பிலும் இருக்கிறார்,அல்லது வசிக்கிறார் என்பதல்ல!
மாறாக, அவரே உலகமாக, பிரபஞ்சமாக இருக்கிறார் என்பதே சரியானது.
அதனால் உடனே, பிரபஞ்சத்தையே கடவுள் என்று நாம் கருதிவிடக்கூடாது!
ஆக, கடவுள் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியுள்ளதால், பரிணாமம் நிகழ்கிறது,
அதாவது, நமது அசலான கடவுள் ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையாகும்! எவ்
வாறெனில், வித்து மறைந்து விருட்சமாக எழுந்ததும் வித்து இருப்பதில்லை!
விருட்சம் நன்கு வளர்ந்து, பூக்கள்விட்டு, பிஞ்சுகள் தோன்றி, பிஞ்சுகள் காய்
களாகி, காய்கள் முற்றிக் கனிகளாக மாறும் போது, அக் கனிகளுக்குள்ளே
தான் மீண்டும் வித்துக்கள் தோன்றுகின்றன!
எவ்வாறு ஒரு மரமானது எண்ணற்ற பிஞ்சுகள், காய்கள் வழியே கனிகளை
(வித்துக்களை) விளைவிக்கின்றதோ, அவ்வாறே இப்பிரபஞ்ச-விருட்சமும்
எண்ணற்ற மனிதப்-பிஞ்சுகளை, காய்களை உருவாக்கியுள்ளது. ஆனால்,
துரதிருஷ்டவசமாக எல்லா மனிதப்-பிஞ்சுகளும் காய்களாகி, உணர்வில்
முற்றிக்கனிந்து கனிகளாக ஆவதில்லை! இதற்குக் காரணம் மனிதஜீவிகள்
சுதந்திர-சித்தம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் தம்தம் மனம்
போனபடி உலகியல் சார்ந்த மதிப்புகளையும், இலட்சியங்களையும்,இலக்கு
களையும் அடைவதற்காக தம்தம் உணர்வைத் தவறாகப்பிரயோகிப்பதே
ஆகும்!
நமது ஆய்வில், மேலே செல்வதற்கு முன், இன்னொரு விஷயத்தையும் நாம்
தெளிவு படுத்திக்கொள்வது அவசியமாகும். நாம் நமது அன்றாடப்பேச்சு
வழக்கில், பல விஷயங்களை தவிர்க்கவியலாத வகையில், தவறான சொல்
லாடல்களைக் கையாள்வதன் மூலமாகத் தலைகீழாகப் புரிந்துகொண்டு
விடுகிறோம்.உதாரணத்திற்கு, ஒரு மரமானது பூக்களை,அல்லது காய்களை
உருவாக்குகிறது, அல்லது தோன்றச் செய்கிறது, அல்லது விளைவிக்கிறது
என சாதாரணமாகச் சொல்லிச்சென்றுவிடுகிறோம். ஆனால், உண்மையில்
ஒரு மரமானது பூக்களை, அல்லது காய்களை உருவாக்குவதோ, விளைவிப்
பதோ இல்லை. மாறாக, அம்மரமே தான் பூக்களாகவும், பிறகு பிஞ்சுகளா
கவும், பிறகு காய்களாகவும், கனிகளாகவும் மாறுகின்றது! ஏனெனில், இவ்
வழியாகத்தான் ஒரு மரமானது தனது இலக்கை, முழுமையை, நிறைவை,
அல்லது உய்வை அடைகிறது! ஒரு மரம் ஏன் பூக்கிறது, காய்க்கிறது என்கிற
கேள்வியை நாம் என்றாவது நம்முள் கேட்டிருக்கிறோமா? அதாவது, எந்த
மூலத்திலிருந்து மரமானது தோன்றியதோ அந்த மூலத்தை "மறுபடைப்பு"
செய்வதற்காகத்தான் ஒரு மரம் பூக்கிறது, காய்க்கிறது,கனிகளாகிறது!
இப்போது, எவ்வகையில் நாம் நமது பழைய சொல்லாடல்களின் மூலமாக
தவறான புரிதலை அடைகிறோம் என்பதைப்பார்ப்போம். "ஒரு மரமானது
பூக்களை, அல்லது காய்களை உருவாக்குகிறது, அல்லது தோன்றச் செய்
கிறது, அல்லது விளைவிக்கிறது" எனும் சொல்லாடலானது, மரத்தை மைய
மான, பிரதானமான நிஜமாகவும் அம்மரம் விளைவிக்கும் பூக்கள், காய்கள்,
கனிகள் யாவற்றையும் இரண்டாம்பட்சமானவையாகவும்,முக்கியத்துவமற்
றவையாகவும் கருதுமாறு செய்துவிடுகிறது! அதே நேரத்தில், பயன்பாட்டு
நோக்கில், நமக்கு மரமும், அதனுடைய பூக்கள், காய்கள், கனிகள் யாவும்
முக்கியமானவையாகத்தெரிவது என்பது வேறு விஷயம், இதே பயன்பாட்டு
நோக்கில், விதைகளும் நமக்கு அதி முக்கியமானவையாகத் தெரிவதால்
தானே நாம் விதைகளையும் சேகரித்து பத்திரப்படுத்தி வைக்கிறோம்!
உண்மையில், மரத்திற்கும் காய்களுக்கும் உள்ள தொடர்பைப் போன்றதே
பிரபஞ்சத்திற்கும் மனிதஜீவிகளாகிய நமக்கும் உள்ள தொடர்பும். நாம்
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் (கிளையில்) தோன்றிய முக்கியத்துவ
மற்ற (விஞ்ஞானிகள் சொல்வது போல விபத்து போன்ற) விளைபொருட்கள்
அல்ல. மாறாக, பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சியுமான நிலைகளாவோம்!
இன்னும் சொல்லப்போனால், பரிணாமரீதியாக,பௌதீக-பிரபஞ்சத்தைவிட
அதன் நீட்சியும் வளர்ச்சியுமான உணர்வுபெற்ற மனிதஜீவிகள் தான் அதிக
முக்கியத்துவம் உடையவர்கள்! எவ்வகையில், பழைய சொல்லாடலானது
மரத்தை மையப்படுத்துவதாயுள்ளதோ, அதே போல, இங்கு, பிரபஞ்சத்தை
மையப்படுத்துவதாயும், பிரதானப்படுத்துவதாயும், மனித ஜீவிகளையும்
மனித உணர்வின் மகத்துவத்தையும் கணக்கில் கொள்ளாமல் உதாசீனப்
படுத்தும்படியும் செய்துவிடுகிறது. இத்தகைய தவறான,தலைகீழ்-புரிதலை
அதிவிஞ்ஞான உண்மையென பிரபலப்படுத்திய விஞ்ஞானிகளுள்,பௌதீக
விஞ்ஞானி ஸ்டீபன் வெய்ன்பெர்க் அவர்களும், பரிணாமவாதிகளான டார்-
வின், டாக்கின்ஸ், மற்றும் ஸ்டீஃபென் ஜெ. கோவ்ல்டு ஆகியோரும் பிரதான
மானவர்கள் எனலாம்!
இந்த விஞ்ஞானிகளைப்பொறுத்தவரை, அவர்கள் படைப்பையும், 'கடவுள்'
என்று குறிப்பிடப்படும் படைப்பாளியையும் மறுக்கிறார்கள், மிகத் தீவிர
மாக எதிர்க்கிறார்கள்! ஆனால், அவர்கள் முன்வைக்கும் மாற்றுக்களான,
கடவுளின் இடத்தில் 'இயற்கை'யை வைப்பதும், படைப்புக்குப் பதிலாக 'பரி
ணாமத்தை' வைப்பதும் எவ்வகையிலும் பொருத்தமாக இல்லை! அவை எவ்
வகையிலும் நமது புரிதலை மேம்படுத்திடவும் இல்லை, முழுமைப்படுத்திட
வும் இல்லை!
முதலிடத்தில், இப்பிரபஞ்சம் ஏன், எதற்காகாக, எதிலிருந்து தோன்றியது?
உயிரற்ற சடப்பொருளிலிருந்து "உயிர்" ஏன், எதற்காகாகத் தோன்றியது?
பிறகு, உயிரிலிருந்து மனம் அல்லது "உணர்வு" ஏன், எதற்காகாகத் தோன்றி
யது?மனிதவாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு தான் என்ன?என்பதற்கான
பதில்களைக்கண்டறிந்து சொல்லாமல்; பிரபஞ்சம், உயிர், உணர்வு ஆகிய
இவை 'எவ்வாறு' தோன்றியிருக்கக்கூடும் என்பதான மேலோட்டமான ஆய்
வுத் தரவுகளையும், விபரங்களையும்கொண்டு, ஊகம் மற்றும் அனுமானங்
களைக்கொண்டு அளிக்கப்படும் விளக்கங்கள் பயனற்றவை!
டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பது என்ன? மூல-முதல் உயிரின்
தோற்றத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல்,அம்முதல் உயிரியிலிருந்து வெவ்
வேறு உயிரினங்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய டார்வினின்
பயனற்ற விளக்கங்களைத் தவிர அடிப்படைப்புரிதலுக்குரிய வேறு அம்சங்
கள் எதுவும் அவருடையகோட்பாட்டில் இடம்பெறவில்லை! மாறாக, டார்வின்
எடுத்தியம்பிய மாபெரும் 'விஞ்ஞான' உண்மைகள் இவைதான்:
* பரிணாமம் குறிக்கோளற்றது.
* பரிணாமம் திசையற்றது,அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்
செல்லாது.
* சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.
இம்மூன்று விஷயங்களும் தவறானவை, ஏனெனில், அவை பரிணாமத்தை
மறுப்பவை, பரிணாமத்திற்கு விரோதமானவையாகும்! இந்நிலையில்,
டார்வின் கூறிய, 'இயற்கைத்தேர்வு' எனும் விஷயம் இன்னும் அபத்தமானது!
அதாவது, உலகையும், அதில் உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு
கடவுளும் இல்லை எனும்பட்சத்தில், அந்த இடத்தை 'இயற்கை' எடுத்துக்
கொள்ள இயலாது! இயற்கை என்பது உள்ளது; ஆனால், அதனால் எதையும்
தேர்வு செய்ய இயலாது என்பதுதான் உண்மை நிலையாகும். ஏனெனில்,
இயற்கையும், உயிர்-ஜீவிகளும் வெவ்வேறு அல்ல! இயற்கையானது உயிர்-
ஜீவிகளுக்கு முந்தையதுதான் என்பதால், அதனால் 'தேர்வு' செய்யவியலும்
என்பது தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள் உண்மை
யில் இயற்கையின் கிளைப்பு போன்ற வளர்ச்சி நிலையே (out-growth)
ஆகும். மேலும், இயற்கையும், உயிர்-ஜீவிகளும் வேறு வேறானவை அல்ல
என்பதாலும், அதிமுக்கியமாக,பரிணாமத்திற்கு நோக்கமும்,குறிக்கோளும்
உள்ளது என்பதாலும்; "வலியதே(அல்லது பொருத்தமானதே)வாழும்","உயிர்-
பிழைப்புக்கான போராட்டம்" போன்ற மேலோட்டமான விஷயங்களை
பரிணாமப்-பேருண்மைகளாகச் சித்தரிப்பது பிழையானதாகும்.
டார்வினிய பரிணாமம் உயிரியல் கோளத்திற்கு மட்டுமே பொருந்துவது,
அதிலும், அதனால் உயிரியல் கோளத்தையும்கூட முழுமையாக விளக்கிச்
சொல்லிவிட முடியாது! டார்வினிய பரிணாமம் உயிரினங்களின் மேலோட்ட
மான மாற்றத்தையும், மாறுபாட்டையும் (Variation)பற்றியது மட்டுமே!
ஆனால், அசலான பரிணாமம் என்பது(எவ்வாறு தோன்றியது என்பதே தெரி
யாத) ஒரு மூல-முதல் உயிரி எவ்வாறு பல்வேறு வகைப்பட்ட உயிரினங்
களாக மாற்றம் பெற்றது என்பதைப்பற்றியதல்ல! முக்கியமாக, பரிணாமம்
என்பது ஒன்று இன்னொன்றாக, அந்த இன்னொன்று வேறொன்றாக, இவ்
வாறு முடிவேயில்லாத , நோக்கமற்ற, குறிக்கோளற்ற, இலக்கற்ற பயணம்
அல்ல!
மேலும், பரிணாமமானது மிகக்குறிப்பான தொலைவானதொரு இலக்கைக்
கொண்ட இயக்கமாதலால், அது ஒரு குறிப்பான திசையில், அதாவது கட்டம்
கட்டமான, உயர்வளர்ச்சி நிலைகளின் வழியாக அது தனது இலக்கு நோக்கி
முன்னேறிச்செல்வதாய் உள்ளது! ஏற்கனவே நான் சொல்லியபடி, நான் முன்
வைக்கும் பரிணாமம் வித்தியாசமானது, உயிரியல் தளத்தை உள்ளடக்கிய
தும், இன்னும் அனைத்து தளங்களையும் ஒருங்கிணைப்பதும் கடந்து செல்
வதுமானது! நான் சொல்லுகிற பரிணாமம் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்தே
தொடங்கிவிடுகிறது. நான் சொல்லுகிற பரிணாமம் படைப்புப்பூர்வமானது;
படைப்பு பரிணாமபூர்வமானது.பரிணாமம் என்பது எவ்வொரு கட்டத்திலும்
நிலையிலும் படைப்புப்பூர்வமானது. ஆம்,பரிணாம நிகழ்வுப்போக்கின் ஒவ்
வொரு கட்டத்திலும், பண்பு-நிலை மாற்றத்திலும், ஒவ்வொரு வளைவிலும்,
திருப்பத்திலும் அது புத்தம்-புதியது, முன்-மாதிரியற்றது! ஆக, நோக்கமற்ற,
குறிக்கோளற்ற, இலக்கற்ற; இன்னும், உயர்-வளர்ச்சியற்ற, திசைகளற்ற ஒரு
இயக்கத்தை நாம் பரிணாமம் என்றழைக்கமுடியாது! அதாவது, குறிக்கோள்,
இலக்கு,நோக்கம், உயர்-வளர்ச்சி ஆகியவற்றை மறுக்கின்ற, இவை எதுவும்
இடம்பெறாத டார்வினிய பரிணாமம், உண்மையில் பரிணாமம் பற்றியதே
யல்ல. மாறாக, டார்வினுடையது, உயிரினங்கள் உட்படுகின்ற வெறும்
மேலோட்டமான மாற்றங்களையும், மாறுபாடுகளையும் விளக்கும் மிகவும்
மட்டுப்பாடான கோட்பாடேயாகும்!
டார்வினின் தத்துவம், 'சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.'
என்பதை அடித்தளமாகக்கொண்டது.அதாவது டார்வின் ஒரு பொருள்முதல்
வாதியும், இயற்கைவாதியும், சுருக்கல்வாதியும், நாத்திகவாதியும் ஆவார்!
'சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்' என்பது உண்மையே
என்று சொல்லலாம், அதாவது, சடப்பொருளே சடப்பொருளுக்கு ஆதாரம்,
அல்லது அடித்தளம் என்பது உண்மையாயிருந்தால்! அதாவது, நாம் இப்பிர
பஞ்சதிலுள்ள அனைத்தையும் - புழு, பூச்சி, செடி, கொடி, மரம் , மட்டை, ஈ,
எறும்பு, யானை, மனிதன் என எல்லாவற்றையும்; இன்னும், பூமி, சந்திரன்,
சூரியன், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள் போன்ற இவைகளின் தொகுப்பான
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் பொருளின் ஆகச் சிறிய அடிப்படை அணுத்
துகள்களுக்குச் சுருக்கிக் காணலாம்! ஆனால், அணுத்துகள்களை எதற்குச்
சுருக்குவது? அணுத்துகள்களைச் சுருக்கினால் என்ன கிடைக்கும்? எதுவும்
கிடைக்காது! ஏனெனில், பொருள் (அணுத்துகள்கள்) சுருக்கப்படுவதற்காக
தோன்றியது அல்ல; மாறாக, விரிக்கப்படுவதற்காகத் தோன்றியதாகும்!
பொருள் ஏன் பரிணமிக்கிறது?அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொரு
ளாய் விளங்குகிறது? இயற்கை என்பது நிரந்தரமான ஒரே தன்மையை,
அல்லது சாரத்தைக்கொண்ட ஒன்றல்ல! இயற்கையின் இயற்கை எத்தகை
யது? இயற்கை என்பது ஒரு இயக்கமாகும் - அது தனது அசலான இயற்
கையை நாடிச் செல்கிறது! (Nature seeks its own true nature).
அந்த வழிமுறையைத்தான் நாம் பரிணாமம் என்கிறோம். இயற்கையின்-
உலகில் நிகழும் விஷயங்களை, நிகழ்வுகளை இயற்கையானது என்று
குறிப்பிடுவது வழக்கத்தின் பாற்பட்டது, புரிந்து கொள்ளப்படக்கூடியது,
மேலோட்டமானது, ஆகவே அது பிழையானது! இன்னும், இயற்கையானது
என்பது இறுதியானதல்ல! முதலிடத்தில், இயற்கையின் தோற்றம் அல்லது
தொடக்கம் என்பதும் இயற்கையானதல்ல! மாறாக, அது இயற்கையல்லாத
வேறொரு மெய்ம்மையின் மாறியதொரு வடிவமே,விளைவே ஆகும்!ஆகவே
இயற்கையை, உலகை அல்லது பிரபஞ்சத்தை, அல்லது பௌதீகச் சடப்பொ
ருளை(இவையனைத்தும் ஒன்றுதான்; ஆகவே இவை எதையும்) முதன்மைப்
படுத்தவோ, அடிப்படை அம்சம் எனக்கொள்ளவோ முடியாது!
பிரபஞ்சம் ஒரு 'பெரு(ம்)-வெடிப்பில்' தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கி
றது; அப் பெரு-வெடிப்பைத் தொடர்ந்து நிகழ்கின்றவைகளை நாம் நிகழ்வு
கள் அல்லது சம்பவங்கள் என்று சொல்வதில் தவறில்லை; ஆனால், பெரு-
வெடிப்பு என்பது பிற நிகழ்வுகளைபோன்ற ஒரு நிகழ்வு அல்ல; மாறாக, அது
ஒரு விசேடமான படைப்பு! அதாவது, படைப்பாளியே( மூல-நிஜம்) தன்னைத்
தானே உட்படுத்திக்கொண்ட படைப்பு! அதே நேரத்தில், இது படைப்புவாதி
களின் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டு அவரால் பராமரிக்கப்படும்
படைப்பு அல்ல!
பூமியில் உயிர் தோன்றியது இயற்கையான ஒரு நிகழ்வோ, அல்லது சாத்தி
யப்பாடுகளை மீறி நிகழ்ந்துவிட்டதொரு விபத்தோ அல்ல! அதே நேரத்தில்,
அது, கடவுளால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு படைக்கப்பட்டதுமல்ல!
இதே போல், இப்பிரபஞ்சமும், உயிரும், உணர்வுள்ள மனிதனும், பிறவனைத்
தும் கடவுளால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு படைக்கப்பட்டவையல்ல!
ஏனெனில், நாம் குறிப்பிடுகின்ற கடவுள் தன்னை விதையாக விதைத்துக்
கொண்டு மறைத்துக்கொண்டவர், அதாவது, விதை மரத்தை வடிவமைப்
பதோ, படைப்பதோ கிடையாது!
பிரபஞ்சம், உயிர், உணர்வுள்ள மனிதன் தோன்றியது இயற்கையான நிகழ்
வுமல்ல, கடவுளால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு படைக்கப்பட்டவையு
மல்ல என்றால், பின் எவ்வாறு இவை தோன்றின? பிரபஞ்சம், இயற்கை, சடப்
பொருள் என்று இவற்றை எவ்வாறு அழைத்தாலும், இவை தானே தோன்றிட
முடியாது! "சடப்பொருளுக்கு தன்னில் தானே தோன்றுவதற்கான ஆற்றல்
உண்டு" எனவும், "சக்தி அல்லதுஆற்றல்தான்சடப்பொருளின் சாரம்" எனவும்
"ஆகவே, பொருளை அல்லது சக்தியை நாம் 'கொடுக்கப்பட்ட' (Given)
மூல-முதல் அம்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" எனவும், பொருள்முதல்
வாதிகளும், ஒரு சில விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும் கருதலாம்.
ஆனால், ஒரு பெரு-வெடிப்பில் தோன்றியதாக விஞ்ஞானிகளால் சொல்லப்
படுகின்ற பொருள் (=அணுத்துகள்கள்) தொடர்ந்து பரிணமிக்கும் பொரு
ளாக இருப்பதால், அதாவது அணுத்துகள்கள் பல்வேறு கட்டமைப்புகளில்
(Structures)அமைந்து உயிர், மனம் அல்லது உணர்வு ஆகிய பரிமாணங்
களை வெளிப்படுத்தும் வகையிலான ஊடகமாகச் செயல்படுவதால்,
பொருளை, "மூல-முதல் அம்சமாக"க் கொள்வதியலாது. முக்கியமாக பொரு
ளானது (எப்போதும்)பிறிதொரு அம்சத்தைச் சுட்டி நிற்பது, தன்னில் தானே
முழுமையான அம்சமாக அது இல்லை என்பதையே காட்டுகிறது!அப்படியா
னால்,பொருள் என்றால் என்ன? அது எதைக் குறிக்கிறது என்றால், பொருள்
என்பது, உணர்வின் ஆகச்சுருங்கிய அடி-மட்ட நிலையை, அதாவது உணர்
வற்ற தன்மையை பிரதிநிதித்துவம் செய்வதாயுள்ளது! அதாவது ஒரு
பேருணர்வின் ஆகச் சுருங்கிய நிலையே பொருளாகும். ஆகவேதான் அது
சடமாக, உயிரற்ற,உணர்வற்ற ஒன்றாக விளங்குகிறது! அதாவது, பொருளா
னது வேறொரு மெய்ம்மையின் சுருங்கிய வடிவம் என்பதால், அதற்கென
தனித்த அர்த்தமோ, சாரமோ, உள்ளீடோ எதுவும் கிடையாது! பொருளுக்
கான அர்த்தம் அதனுடைய பொருண்மையை(பொருள்-தன்மையை) மீறிய
தொரு அம்சத்தைச் சார்ந்தே இருப்பதாகும் ! ஆகவேதான், பொருளானது
'உயிரை" வெளிப்படுத்தும், தாங்கும் வகையிலான கட்ட(ட)மைப்பில்
(=உடலாக) தன்னை திரட்டிக்கொண்டது! இவ்வாறு உயிரைத் தாங்குவதற்
கான பாத்திரமாக மாறுவதற்கான நோக்கம் உணர்வை எட்டுவதற்காகவே
ஆகும். உணர்வை எட்டும் வழிமுறையில், உயிர் என்பது ஒரு முக்கியமான
படிக்கல் ஆகும்.
உயிர் என்பது, பௌதீகச்சடப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு வெளிப்
பட்ட அபௌதீகப் (Non-Material) பரிமாணம் ஆகும். மேலும், உயிர் என்
பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது கட்டமைப்பின்
உச்சியில் எழுந்த, ஒருமையப்பட்ட ஒரு தனிப்பண்பு (Life is discrete
particles of matter unified and individualized.)ஆகும்! அதா
வது, யாதொரு மையமும் இல்லாமல் இயங்கும் பிரபஞ்சத்தினுள், தனி-
மையம் கொண்ட ஒரு ஜீவியாக எழுந்த புதிர்தான் 'உயிர்' ஆகும்! உயிர், அது
ஒரு சிறு புழுவாக இருந்தாலும், என்ன தான் அது சுற்றியுள்ள உலகைச்
சார்ந்திருந்தாலும், அது இவ்வுலகினுள் தன்னளவில் இன்னொரு உலகமாக,
பண்பினடிப்படையில் இவ்வுலகிலிருந்து முற்றிலும் வேறானதாய்த்திகழும்
அற்புதம் ஆகும்!
மனிதன் என்பவன், உயிருள்ள ஜீவியும், அணுத்துகள்களின் ஒன்றிணப்பு
மற்றும் ஒருமையப்பட்ட தன்மையையும் உணர்ந்த உணர்வு ஆவான்!
(A human being is a living entity became conscious of
matter's unification and individualization in his consci-
ousness)
நம்முடைய 'புதிய ஆதியாகமம்' படி, ஆதியில் மூல-மெய்ம்மை ஒன்று இருந்
தது; அது தனது சாரத்தில், 'சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை' யாகத்
திகழ்ந்தது. அது முழுமையின் முழுமையாக, ஆரம்பமும் முடிவுமின்றி நித்தி
யமாய் நிலவியது! அதன் புனிதத்தை 'புனிதம்' என்ற சொல்லால் கூட்டவும்
முடியாது, குறைக்கவும் முடியாது! இந்த 'மூல-மெய்ம்மையை' "கடவுள்" என
நாம் குறிப்பிடுவோமெனில், நம்முடைய கடவுள் 'எல்லாம் அறிந்தவர்' அல்ல,
ஏனெனில், அவருக்கு எதையும் அறிய வேண்டிய தேவை எதுவும் இல்லை!
அனைத்து அறிவையும் கடந்தவர் அவர்! இதைப்போலவே, அவர் 'எல்லாம்
வல்ல' வரும் அல்ல! ஏனெனில், அவர் அனைத்துத் தேவைகளையும் கடந்த
வர்! ஏற்கனவே குறிப்பிட்டோம், கடவுள் பிரஞ்சத்தையோ, அதிலுள்ள உயி-
ரையோ, மனிதனையோ படைக்கவில்லை. மாறாக, அவரே பிரபஞ்சமாக
வும்,அதிலுள்ள அனைத்துமாகவும் மாறினார் என்றோம்.ஆனால், அதில் ஒரு
சிறு திருத்தத்தை, துல்லியம் வேண்டிச் செய்திடுவோம்.
அதாவது, கடவுள் பிரபஞ்சமாக உருமாறவேண்டும் என்று எண்ணியோ,
திட்டமிட்டோ, விரிவாக வடிவமைத்தோ எதையும் செய்யவில்லை! கடவு-
ளைப்பொறுத்தவரை, அவர் தன்னை ஒரு விதையாகச் சுருக்கிக்கொண்டு
தன்னைத் தானே விதைத்துக் கொண்டார், அவ்வளவுதான், அதற்கு மேல்
அவருக்கு எதுவும் தெரியாது! அவ்விதை முளைத்து பிரபஞ்சமாக எழும் என்
பதோ, அதில் உயிர் தோன்றக்கூடும் என்பதோ, பிறகு, உயிரியல் பரிணா
மத்தின் உச்சமாக, சுய-உணர்வுகொண்ட மனிதஜீவி வெளிப்படுவான் என்
பதோ, எதுவும் அவருக்குத் தெரியாது!
உண்மையில், படைப்பு படைப்புக்காக இல்லை, மனிதனும் தனக்காக
இல்லை! மூல-மெய்ம்மை அல்லது கடவுளைப்பொறுத்தவரை, தன்னுடன்
தான் மேற்கொண்ட, தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட(அதாவது முத-
லீடு செய்துகொண்ட) பரிசோதனையும், அதிலிருந்து தன்னை முழுமையாக
மீட்டெடுத்துக் கொள்வதும் மட்டுமே முக்கியம் - இடையில் என்னென்ன
விளைகிறது என்பதல்ல! கடவுள் படைப்பைச்செய்திட எண்ணியதுமில்லை!
அதில் மனிதன் தோன்றிடுவான் எனவும் அவர் எதிர்பார்க்கவில்லை! மனித
னுக்கு ஏற்படும் அற்பமான அசௌகரியங்களையும், அபத்தமான பிரச்சி
னைகளையும் அவர் எதிர்நோக்கிடவில்லை! தன்னையுணராததினால் மனி
தனைப்பீடித்திடும் அச்சத்திலிருந்தும், மரண பயத்திலிருந்தும், அவனது
அன்றாட வாழ்வில் நேரிடும் விபத்துகளிலிருந்தும், இழப்புகள் மற்றும்
துன்பங்களிலிருந்தும்; நோய் நொடிகளிலிருந்தும் மனிதனைக்காப்பாற்று
வது கடவுளின் பணியல்ல! மனிதர்களுக்கிடையே எழும் சண்டை சச்சரவு
களைத்தீர்ப்பதோ, அல்லது மனிதனது தீயசெயல்களை,பாவங்களைப் பட்டி
யலிட்டு இறுதி நாளில் தீர்ப்பு வழங்குவதோ கடவுளின் வேலையல்ல! ஏனெ
னில், படைப்பு என்பது திட்டமிட்ட படைப்பாக்கம் அல்ல! மாறாக, அது தவறு
களைத் திருத்தியமைத்து, மட்டுப்பாடுகளை மாற்றியமைத்து (Trial and
Error)குறித்த இலக்கு நோக்கி முன்னேறிச்செல்லும் பரிணாம வழிமுறை
யாகும்!
ஒருவகையில், இயற்கையின் உலகில் விலங்கினங்களுக்கிடையே நிகழும்
குரூரங்களையும், உலகில் காணப்படும் தீமைகளையும் சுட்டிக்காட்டிடும்
நாத்திகவாதிகள், எவ்வாறு பூரணமானவரும், கருணைமிக்கவருமான
கடவுள், தீமைகளையும் குரூரங்களையும் அனுமதித்தார் என குற்றம்சாட்டி
கடவுளை மறுப்பதற்கான ஆயுதங்களாகக் கொள்வதற்கும்; மேலும், பரந்த
பிரபஞ்ச இயற்கையின் பாராமுகமான (Indifference) தன்மையைக்
குறிப்பிட்டு, வாழ்க்கை எவ்வளவு அபத்தமாகவுள்ளது என இருத்தலியல்
வாதிகளும், விஞ்ஞானிகளும், சாமானியர்களும் குறைபட்டுக்கொள்வதற்
கும், அவநம்பிக்கை கொள்வதற்கும் காரணம், படைப்புக்கும், கடவுளுக்கும்
நேரடிச் சம்பந்தம் இல்லை; கடவுள் படைப்பைச் செய்யவில்லை என்கிற
அதிர்ச்சியூட்டும் அந்நியப்படுத்துகிற உண்மையே ஆகும்!!
இதற்குக்காரணம், 'படைப்பு' என்பது கடவுள் தன்னை ஒளித்துக் கொண்ட
தில் (மறைத்துக்கொண்டதில்)தொடங்குகிறது; பரிணாமம் என்பது (ஒளிந்து
கொண்ட) கடவுளைத்தேடிக்கண்டு பிடிக்கும் வினோதமான கண்ணாமூச்சி
ஆட்டமாகத்தொடர்கிறது என்பதுதான்! இவ்விபரீத ஆட்டத்தில் கண்களைக்
கட்டிக்கொண்டு கடவுளும் நம்முடன் இணைந்து தன்னைத் தேடிக்கொண்டி
ருக்கிறார். அதாவது, கடவுளும் நம்முடன் இணைந்து பரிணமிக்கிறார்!
கடவுளைப்பொறுத்தவரை, அவர் நம்மைக்கண்டுபிடித்துவிட்டார். அதாவது
நாம் பரிணமித்துவிட்டோம்! நம்மில் ஒரு சிலரைத் தவிர, இன்னும் நாம்
அவரைக் கண்டு பிடிக்கவில்லை! நாம் ஒவ்வொருவரும் கடவுளைக்கண்டு
பிடிக்கும்வரை, கடவுள் நமக்கு இல்லை! இந்த ஒட்டுமொத்த ஆட்டமும் கடவு
ளுடையது, அதாவது , கடவுள் தான் "மையம்". இந்த உண்மையைப் புரிந்து
கொள்ளாதவரை, நம் வாழ்வு மையமற்றதே, அர்த்தமற்றதே, நிறைவற்றதே,
பயனற்றதே!
டார்வினிலிருந்து டாக்கின்ஸ் வரை, பரிணாமம் குறிக்கோளற்றது, இலக்கற்
றது என்று குறிப்பிடுவதற்குக் காரணம், சடப்பொருளை அவர்கள் அடி நாத
மான மெய்ம்மையாக, மையமான உண்மையாகக் கொண்டுவிட்ட மட்டுப்
பாடே ஆகும்!உயிரியலை பௌதீகத்திற்கும், உணர்வை மூளையின் செயல்
பாட்டிற்கும் சுருக்கிக் காண்பதை சாதனையாகக் கருதும் இவர்களுடைய
மூளைகளுக்கு சடப்பொருளுக்கும், உயிருக்கும்; விலங்கிற்கும், மனிதனுக்
கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை! சடப்பொரு
ளுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்
ளத இயலாதவர்கள் எவ்வாறு முழு-உணர்வின் (கடவுளின்) மகத்துவத்தைப்
புரிந்துகொள்ள இயலும்?
உண்மையில், நாம் ஒன்றும் படைப்புவாதிகளது கடவுளை பின்-கதவின்
வழியாக வீட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கவில்லை! ஒரு மரத்தின் கனி
அம்மரத்திற்கு அந்நியமாயிருப்பதில்லை! நான் சொல்லும் கடவுள் பிரபஞ்ச
விருட்சத்திலிருந்து வெளிப்படும் பரிணாமக் கனியாகும்! மனிதஜீவி தான்
பிரபஞ்ச விருட்சத்தின் உணர்வுப் பிஞ்சு ஆவான். மனிதன் தன் உணர்வில்
முற்றிக் கனியாவதில் தான் பிரபஞ்சத்தின் முழுமையும், நிறைவும்; மனித
னுடைய முழுமையும், நிறைவும்; முழு-உணர்வாகிய கடவுள் தன்னை திரும்
பச் சந்திக்கும் வட்டம் முழுமை பெறும்!
அணுத்துகள்கள் விரிந்து (பரிணமித்து) பேரண்டமாகவும், அதனுள் உயிராக
வும், மனிதனாகவும், மனிதனுள் சுய-உணர்வாகவும் வெளிப்பட்டன எனக்
காண்பதில் பொருள்முதல்வாதிகளுக்கும், சுருக்கல்வாதிகளுக்கும், மற்றும்
பரிணாம வாதிகளுக்கும் எந்தச் சிரமமும் இருப்பதில்லை! அதே போல்,
உணர்வை, மனிதமூளையின் செயல்பாட்டிற்குச் சுருக்கிக் காண்பதிலும்;
இன்னும், ஒரு உயிரியை, ரசாயணங்களின் சேர்க்கையாகக் காண்பதிலும்,
அதையே இன்னும் சுருக்கி அணுத்துகள்களின் தொகுப்பாகக்காண்பதிலும்
அவர்களுக்கு யாதொரு சிரமமும் கிடையாது! ஆனால், இவர்களது பார்வை
யைச் சற்று மாற்றி, பரிணாமத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் சடப்
பொருள் (அணுத்துகள்கள்) உண்மையில் அடிப்படையானதோ, மூல-முதன்
மையானதோ அல்ல; மாறாக, பரிணாமத்தில் மனித-உணர்வைக் கடந்து,
இறுதியாக வெளிப்படும் (அல்லது வெளிப்படவிருக்கும்) உணர்வின் முழு
மைதான் ஆதியும் அந்தமுமானது, மூலமும் முடிவுமானது, அதுவே பரம்
பொருள் என்பதாகக்காணச் சொன்னால், அவர்களுக்கு ஏற்புடையதாயிருப்
பதில்லை! ஆனால், இவ்வாறு காண்பதில், எவ்வித தருக்கக் குலைவும்,
பிழையும், இழப்பும், நஷ்டமும் ஏற்பட்டுவிடாது! அதாவது, உயிரும் உணர்வு
மற்ற பௌதீகச் சடப்பொருள் ( அணுத்துகள்கள் ) விரிந்து உயிராகவும்,
உணர்வாகவும் வெளிப்பட்டது என்று காண்பதைவிட, ஒரு பேருணர்வு தான்
சுருங்கி, உணர்வின் ஆக அடி-மட்ட நிலையான உணர்வற்ற பௌதீகச்சடப்
பொருளாக (அணுத்துகள்களாக) ஆகியது. இந்த உணர்வற்ற அடி-மட்ட
நிலையிலிருந்து எழுந்து மீண்டும் உணர்வின் முழுமையை (பேருணர்வை)
எட்டும் வழிமுறைதான் பரிணாமம் என்று காண்பது தான் சாலச் சரியான
தும் பொருத்தமானதும் ஆகும்!
ஏனெனில், உயிரும் உணர்வுமற்ற பௌதீகச் சடப்பொருளாலான சடப்பிர
பஞ்சம், தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றிடமுடியும், ஆகவே, 'சடப்
பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்' என்பதைவிட, பேருணர்வு
தான் மிக எளிதாக, தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றியிருக்கமுடியும்,
ஆகவே, பேருணர்வுதான் அடியும் முடியுமான மெய்ம்மை, உண்மை என்பது
தான் மிக்கப்பொருத்தமாய் இருக்கும்!
மெலும், சடப்பொருள் பரிணமித்து உணர்வு நிலையை எட்ட வேண்டுமா
னால், அதற்கு நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டாகவேண்டும். உணர்
வற்ற சடப்பொருள் நிலையிலிருந்து மனித உணர்வை எட்டுவதற்கு பிரபஞ்
சத்திற்கு 1500 கோடி ஆண்டுகள் ஆயின! அதே நேரத்தில், பேருணர்வு நிலை
யிலிருந்து உணர்வற்ற சடப்பொருள் நிலைக்கு கீழிறங்க ஒரு நொடியே
போதும்! ஆம், உணர்விழப்பது எளிது; உணர்வு பெறுவது கடினம்!
பேருணர்வு தான் "கடவுள்"! பேருணர்வு தனது உணர்வைத் துறந்த அந்த
விசேட நிகழ்வு தான் பிரபஞ்சத்தின் பிறப்புக்கு அடிப்படையாக அமைந்த
"பெரு-வெடிப்பு" ஆகும். துறந்த உணர்வை மீண்டும் அடையும் வழிமுறைக்
குப்பெயர்தான் "பரிணாமம்". பிரபஞ்சம் என்பது வெறும் சடப்பொருளால்
ஆனது மட்டுமல்ல; 'உயிர்' எனும் பரிமாணமும், 'உணர்வு' எனும் பரிமா
ணமும் வெளிப்பட்டுள்ளன.ஆகவே, 'உயிர்' மற்றும் 'உணர்வு' ஆகிய பரிமா
ணங்களையும் இணைத்துப் புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சத்தைப் புரிந்து
கொள்ள இயலாது! பிரபஞ்சம், மனிதன், கடவுள் இம்மூன்றும் இறுதியில்
ஒன்றே! இம்மூன்றும் ஒருமைப்படுவது, சடப்பொருளில் சாத்தியமல்ல; மனி
தனின் அரை-உணர்வு அல்லது சிற்றுணர்விலும் அது நிகழ்வதில்லை; முழு-
உணர்வு அல்லது பேருணர்வில் மட்டுமே அனைத்தும் கரைந்து ஒருமைப்
படுகின்றன!
மா.கணேசன்/3.09.2016
--------------------------------------------------------------------------