Tuesday, 4 October 2016

"சுயநலங்கொண்ட மரபணு"


அல்லது டாக்கின்ஸின் 'குருட்டுக் கடவுள்'
(The Selfish Gene Or Dawkins' Blind God))

      "நம்முடைய மரபணுக்கள் (genes)நம்மை உருவாக்கின. நாம்
       விலங்குகள், நாம்  இருப்பது  அம்மரபணுக்களைப் பாதுகாப்பதற்
       குத்தான்.   பயன்கொள்ளப் பட்டதும்   வீசியெறியப்படும்   உயிர்-
       பிழைப்பு  எந்திரங்கள்  என்பதற்கு மேல் நாம் வேறொன்றுமில்லை.
       சுயநலங்கொண்ட மரபணுக்களின் உலகம் என்பது குரூரமிக்க
       போட்டியும்,கருணையற்ற ஏய்ப்பும், ஏமாற்றும்  நிறைந்த ஒன்றாகும்.  
       ஆனால்,   இயற்கையில்   காணப்படும்   பொது- நலங்கொண்ட
       செய்கைகள்  - அதாவது, தேன் -கூட்டைக் காப்பாற்றுவதற்காக
       எதிரியினங்களைக்கொட்டி தன் கொடுக்குகளையிழந்து தன்னை
       மாய்த்துக்கொள்ளும் தேனீக்கள், அல்லது பருந்தின் வரவைக்கண்டு
       குரலெழுப்பி அறிவித்து பிற பறவைகளை எச்சரிக்கை செய்வதன்
       விளைவாக பருந்தை தன் பக்கம் ஈர்த்து வலிய ஆபத்தில் சிக்கிக்
       கொள்ளும் பறவைகள் மரபணுவின் சுயநலம்  எனும் மரபை மீறுகின்
       றனவா? எவ்வகையிலும் இல்லை: மாறாக,  சுயநலங்கொண்ட மரபணு
       தந்திரமானதும்கூட  என்பதை டாக்கின்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.
       அதே வேளையில், பூமியில் நம் (மனித)இனம் மட்டும்தான்,
       'சுயநலங்கொண்ட மரபணுக்களின்' சதித்திட்டத்தை எதிர்த்து கலகம்
       செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது என நம்பிக்கையூட்டுகிறார்
       டாக்கின்ஸ் .அவரது  'சுயநலங்கொண்ட மரபணு' எனும் நூல், நம்மை
       போருக்கு ஆயத்தமாகச் சொல்லும் அழைப்பு ஆகும். அந்நூல் ஒரு
       விதிஏடும், கொள்கைவிளக்க அறிக்கையும் ஆகும். அது ஒரு துப்பறியும்
       நாவலைப்போல நம்மைப் பற்றுகிறது. ...."

இவ்வாறெல்லாம்,  1976-ல்   வெளியான,   ரிச்சர்ட்  டாக்கின்ஸ்-ன்,   'சுயநலங்
கொண்ட மரபணு'   நூலைப்பற்றி  நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் உயிரியல்
விஞ்ஞானி  சர் பீட்டர் மெடாவர் (Sir Peter Medawar) குறிப்புரை  எழுதி
யுள்ளார்.

ஆனால்,   யார்  அந்த  ரிச்சர்ட்  டாக்கின்ஸ்?  அவரது முழு பெயர், கிளிண்டன்
ரிச்சர்ட்  டாக்கின்ஸ்  ( Clinton Richard Dawkins)  பிறந்தது   கென்யா,
மார்ச் 26, ஆண்டு 1941.  அவர் ஒரு சிறந்த விலங்கியலாளர்,  பரிணாம-உயிரி
யல் விஞ்ஞானி; இவை மட்டுமல்ல, டாக்கின்ஸ் ஒரு டார்வினியவாதி,  நாத்தி
கவாதி,   பொருள்முதல்வாதி,    இயற்கைவாதி   மற்றும்  ஒரு  சுருக்கல்வாதி
(Reductionist)யும் ஆவார். எல்லாவற்றுக்கும்மேலாக, அவரது துறைக்குச்
சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும்  சர்ச்சைக்குரிய விவா
தங்களில் ஈடுபடும் ஒருவர்.

திரு டாக்கின்ஸ்  அவர்கள்  பரிணாமக் கோட்பாட்டை   சிறப்பாக  விளக்கிச்
சொல்வதுடன் நிறுத்திக்கொண்டிருந்தால், இந்தக்கட்டுரையை எழுதவேண்
டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அவர், பரிணாமக்கோட்பாட்டை, குறிப்பாக
டார்வினிய  பரிணாமக்  கோட்பாட்டை  விளக்கிச்சொல்ல  வந்துவிட்டு, அக்
கோட்பாட்டின்   உணர்த்துகோல்களை  வாழ்வின்  எல்லா  அம்சங்களுக்கும்
நீட்டித்து,   ஏதோ  டார்வினியம் என்பது  வெறும்  ஒரு விஞ்ஞானக்கோட்பாடு
மட்டுமல்ல,  அது ஒரு பிரபஞ்சமாளாவிய மகா தத்துவம்  என முன்வைத்தது
தான் பிரச்சினையாகும்.

திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் தமது 'சுயநலங்கொண்ட மரபணு' நூலில்
பரிணாமம்   குறித்து  அப்படி  என்ன புரட்சிகரமான,  அரிய விஞ்ஞான உண்
மையை, அல்லது, தனது உலகமகா கண்டுபிடிப்பை, வாழ்வின் அடிப்படைத்
தத்துவத்தை   எழுதியுள்ளார்?   இதோ, டாக்கின்ஸ்  அவர்கள்  தனது  1976 -ல்
வந்த முதல் பதிப்பில் தனது நூல் குறித்து எழுதிய முன்னுரையின் தொடக்க
வரிகள் :
 
   " இந்நூலை கிட்டத்தட்ட  ஒரு விஞ்ஞானப் புதினத்தை வாசிப்பது போல
     வாசிக்கவேண்டும்.  இந்நூல் கற்பனையைக் கவரும் வகையில் வடிவ
     மைக்கப்பட்டதாகும். ஆனல், இது  விஞ்ஞானப் புதினம் அல்ல : இது
     விஞ்ஞானம்.  வெறும் வழக்குச்சொல்லோ, அல்லது இல்லையோ,
     'புனைவைவிட வினோதமானது' என்பதாகவே நான் இதன் உண்மையை
      உணர்கிறேன்.  நாம் உயிர்-பிழைப்பு எந்திரங்கள்- ரோபோ ஊர்திகள்,
      மரபணுக்கள் என்றறியப்பட்ட  சுயநலங்கொண்ட மூலக்கூறுகளைப்
      குருட்டுத்தனமாக பாதுகாக்குமாறு நிரலமைப்பு செய்யப்பட்டுள்ளோம்.
      இது ஒரு உண்மை, இது என்னை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரு
      கிறது. பல வருடங்களாக நான் இவ்வுண்மையை அறிந்தவனாக இருந்
      தாலும் இன்னும் நான் அதற்கு முழுமையாகப் பழக்கப்படவில்லை.
      எனது நம்பிக்கைகளில் ஒன்று என்னவெனில், மற்றவர்களையும் ஆச்சரி
      யத்தில் ஆழ்த்துவதில் நான் ஓரளவு வெற்றி பெறுவேன் என்பதுதான்...."

ஆனால்,  பொதுவாக  நாம்  படித்தறிந்த உண்மை யாதெனில்,  மரபணுக்கள்
என்பவை நம்உடலின் ஒவ்வொரு ஸெல்லிலும் அடங்கியுள்ள மூலக்கூறுகள்,
அவைதான்  நம்முடைய உடலியல் அம்சங்களை - கண்களின் நிறம் உள்பட
பிற  பல குணாம்சங்களைத்  தீர்மானிக்கின்ற  காரணிகள் என்பதாக அறிந்
துள்ளோம்.  ஆனால், டாக்கின்ஸ் சொல்லுகிற 'புது' உண்மையோ முற்றிலும்
தலைகீழாக உள்ளது. அதாவது, "மனித ஜீவியோ, அல்லது, விலங்கு ஜீவியோ
எதுவாயினும்,   அது   'DNA'  எனப்படும்   மரபணுக்களின்  கருவியே தவிர
இதற்கு மாறான வழியில் அமைவதில்லை" என்பதாக டாக்கின்ஸ் அடித்துக்
கூறுகிறார்.

டாக்கின்ஸ்    அவர்களின் கூற்றின்படி,  மரபணுக்கள்  ( DNA மூலக்கூறுகள்)
மட்டுமே  பிரதானமானவை,  அவை தான் "உயிர்க்கரு" . மரபணுக்கள் இருக்
கின்றன; அவைதம்மைத்தாமே பிரதியெடுத்துக்கொண்டு, தம்மைப்பெருக்
கிக்கொள்வதற்காக,   எத்தனையெத்தனை  அவதாரங்கள் (உடல்கள்) எடுத்
தாலும், அவை எலியின் வடிவத்திலிருந்தாலும், அல்லது மனிதனின் வடிவத்
திலிருந்தாலும், இன்னும் கோடாணுகோடி வடிவங்களை எடுத்தாலும், அடிப்
படையில்,  அவற்றின் சாரத்தில்  எல்லா உயிரினங்களும்  ஒன்றுதான் எனும்
பட்சத்தில்;  அதாவது,  மரபணுக்கள்  தம்மைத்தாமே பிரதியெடுப்பதற்கான
வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்கள்தான் உயிரினங்கள்(species)என்-
றால்,  இவ்வாறு  வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்களை,  அல்லது ஊர்தி
களை, அதாவது வெவ்வேறு  இட-அமைவுகளுக்கும், சூழலுக்கும்  ஏற்றவாறு
தகவமைந்து   உயிர்-பிழைப்பதற்கான   கருவிகளைக் கட்டமைப்பதற்கான
ஒரு வழிமுறைதான் 'பரிணாமம்' என்றால்; அதிலும், மரபணுக்கள் தம்மைத்
தாமே பிரதியெடுத்துப் பெருகி நிலைப்பதைத் தாண்டி, அம்மரபணுக்களுக்
கும்,  பரிணாமத்திற்கும் வேறு குறிக்கோளும்,  இலக்கும்   இல்லை எனும் பட்
சத்தில்,  பரிணாமம் பற்றிய ஆய்வுகளும், கோட்பாடுகளும் எதற்கு,  அவற்றி
னால் என்ன பயன்?

டாக்கின்ஸ் அவர்களைப்பொறுத்தவரை,அவர் ஒன்றேஒன்றை மட்டும்தான்        
சொல்லவில்லை,  அதாவது,   DNA எனப்படும்  மரபணுக்கூறு தான்  'கடவுள்'
என்று அவர் சொல்லவில்லை! அவர் அதை வெளிப்படையாகச்சொல்லாவிட்
டாலும்,அவரது கூற்றுகள்யாவும் அதைத்தான்குறிக்கின்றன!எவ்வாறெனில்
முதல் உயிர்  அல்லது முதல் மரபணு  எவ்வாறு தோன்றியது என்பது அவருக்
கும்  தெரியாது;  அவரது  ஆசான்,  டார்வினுக்கும்  தெரியாது!  முதல் மரபணு
எவ்வாறோ  தோன்றிவிட்டது எனும்  முன்-நிகழ்வின் தொடர்ச்சியான தொரு
வழிமுறையைத்தான் 'பரிணாமம்' எனும் சொல்லைக்கொண்டும், 'இயற்கை
தேர்வு'(Natural Selection)எனும் நுட்பமுறையைக்கொண்டும்  டார்வின்
தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார்.

உண்மையில்,  டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பது  பெரிதும் மட்டுப்
பாடானதாகும்;  வெறும்  மட்டுப்பாடு  மட்டுமின்றி பெரிதும் குறைபாடானது
மாகும்!

டார்வினின்  பரிணாமக்  கோட்பாடு  என்பது  என்ன?   மூல-முதல்   உயிரின்
தோற்றத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல்,அம்முதல் உயிரியிலிருந்து வெவ்
வேறு  உயிரினங்கள்  எவ்வாறு   பரிணமித்தன என்பது  பற்றிய டார்வினின்
பயனற்ற விளக்கங்களைத் தவிர அடிப்படைப்புரிதலுக்குரிய வேறு அம்சங்
கள் எதுவும் அவருடையகோட்பாட்டில் இடம்பெறவில்லை! மாறாக, டார்வின்
எடுத்தியம்பிய மாபெரும் 'விஞ்ஞான' உண்மைகள் இவைதான்:
   
    * பரிணாமம் குறிக்கோளற்றது.
    * பரிணாமம் திசையற்றது,அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்
      செல்லாது.
    * சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.

இம்மூன்று விஷயங்களும் தவறானவை, ஏனெனில்,  அவை  பரிணாமத்தை
மறுப்பவை,    பரிணாமத்திற்கு    விரோதமானவையாகும்!      இந்நிலையில்,
டார்வின் கூறிய, 'இயற்கைத்தேர்வு' எனும் விஷயம் இன்னும் அபத்தமானது!
அதாவது, உலகையும், அதில் உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு
கடவுளும்  இல்லை  எனும்பட்சத்தில்,  அந்த   இடத்தை   'இயற்கை'  எடுத்துக்
கொள்ள இயலாது!  இயற்கை என்பது உள்ளது;  ஆனால்,  அதனால் எதையும்
தேர்வு   செய்ய  இயலாது   என்பதுதான்  உண்மை  நிலையாகும்.  ஏனெனில்,  
இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்  வெவ்வேறு அல்ல!  இயற்கையானது உயிர்-
ஜீவிகளுக்கு  முந்தையதுதான் என்பதால், அதனால்  'தேர்வு' செய்யவியலும்
என்பது  தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள் உண்மை
யில்  இயற்கையின்  கிளைப்பு  போன்ற  வளர்ச்சி நிலையே (out-growth)
ஆகும்.  மேலும்,  இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்   வேறு  வேறானவை அல்ல
என்பதாலும், அதிமுக்கியமாக,பரிணாமத்திற்கு நோக்கமும்,குறிக்கோளும்
உள்ளது என்பதாலும்; "வலியதே(அல்லது பொருத்தமானதே)வாழும்","உயிர்-
பிழைப்புக்கான போராட்டம்"    போன்ற     மேலோட்டமான    விஷயங்களை
பரிணாமப்-பேருண்மைகளாகச் சித்தரிப்பது பிழையானதாகும்.

டார்வினிய  பரிணாமம்    உயிரியல்  கோளத்திற்கு  மட்டுமே  பொருந்துவது,
அதிலும்,  அதனால்  உயிரியல் கோளத்தையும்கூட  முழுமையாக  விளக்கிச்
சொல்லிவிட முடியாது! டார்வினிய பரிணாமம் உயிரினங்களின் மேலோட்ட
மான மாற்றத்தையும், மாறுபாட்டையும் (Variation)பற்றியது மட்டுமே!

ஆனால், டார்வினிய பரிணாமக்கோட்பாடு எவ்வளவு மட்டுப்பாடானது,  தவ
றானது,   பரிணாம விரோதமானது    என்பதை      விலாவாரியாக   விளக்கிச்
சொல்லி   நிரூபிப்பதல்ல    இக்கட்டுரையின்   நோக்கம் ,  அதை இன்னொரு
கட்டுரையில் நிச்சயம் செய்திடுவோம்.

இப்போதைக்கு,    டார்வினின்  பெயரைப்  பயன்படுத்திக்கொண்டு,  அவரது
மொண்ணையான   பரிணாமக்கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு,
அதாவது, டார்வினிய கோட்பாட்டை முன்னிறுத்தி அதற்குப்பின்னால் பதுங்
கிக்கொண்டு, 'புதிய டார்வினியம்', 'சமூக டார்வினியம்', என்ற பெயர்களில்,
விஞ்ஞானத்திற்கு  விரோதமானவகையில்,       பொருள்முதல்வாதத்தையும்,
நாத்திகத்தையும்   பேசி வருகிறவர்களில் முன்னனியில் விளங்கும் ரிச்சர்ட்
டாக்கின்ஸ்-ன் சுருக்கல்வாதப்பிதற்றல்களை, குறிப்பாக, அவரது  'சுயநலங்
கொண்ட மரபணு' எனும் வெற்றுக்கருத்தின், பயனற்ற தன்மையை வெளிப்
படுத்துவது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

முதலிடத்தில்,  "மரபணு"  (gene) என்பதையும், அதைத்தாங்கியுள்ளதாகக்
கூறப்படும்  உயிர்-ஜீவியையும்  பிரித்துப்பேச வியலுமா  என்பது  மிக மைய
மான கேள்வியாகும்.  உண்மைதான்,  மரபணுக்கள் இல்லாமல்,  எந்த உயிர்-
ஜீவியும்  இருக்க  முடியாது!   அதே நேரத்தில்,   'சாகா நிலை பெற்றவை'  என
டாக்கின்ஸ்    அவர்களால்   குறிப்பிடப்படும்  மரபணுக்கள்    மரிப்பதில்லை,
அதாவது அவை ஒரு உயிர்-ஜீவியின் சந்ததிகளின் வழியாக தொடர்ந்து
உயிர்-பிழைத்துச் செல்கின்றன. அதாவது தனி ஜீவிகள் தான் சாகின்றன
அவற்றின் மரபணுக்கள் அந்த தனி ஜீவியின் சந்ததிகள், சந்ததிகளின் சந்த
திகள்  மூலம்  தொடர்ந்து  சிரஞ்சீவியாக  உயிர்  வாழ்ந்து  செல்கின்றன!
ஆனால்,  ஒரு உயிர்-ஜீவிக்கு வெளியே(அதாவது ஒரு உயிர்-ஜீவி இல்லாமல்)
மரபணுக்கள் தனியே உயிர் வாழ்வதில்லை. அதாவது மரபணுக்கள் இல்லா
மல்   எந்த உயிர்-ஜீவியும் இல்லை; ஒரு உயிர்-ஜீவியும்  இல்லாமல் மரபணுக்
கள் என்பதும் இல்லை.

ஆக,    மரபணுக்களும்,   உயிர்-ஜீவிகளும் பிரிக்கவியலாதவை எனும் நிலை
யில்  மரபணுக்கள் சுய நலங்கொண்டவையாக உள்ளனவா,  அல்லது உயிர்-
ஜீவிகள்  சுயநலங்கொண்டவையாக விளங்குகின்றனவா என்றகேள்விக்கே
இடமில்லையல்லவா?   பொதுவாக  எல்லா உயிரிகளும்,   குறிப்பாக மனிதர்
களும் சுயநலமுள்ளவர்களாக இருப்பதற்குக்காரணம் மரபணுக்கள்தானா?
அப்படியானால்  தாங்கள்  சுய நலமிகளாயிருப்பதற்குக் காரணம்  தாங்கள்
அல்ல, மாறாக, மரபணுக்கள்தான் என பழியை மரபணுக்களின்மீது சுமத்தி
விடமுடியுமா?

முதலிடத்தில்,   "சுய நலம்"   என்றால்  என்ன?  அது எதைக்குறிக்கிறது?  "சுய
நலம்"  என்ற சொல்லைக்கொண்டு  டாக்கின்ஸ் அவர்கள்   நம்முள்   ஒருவித
குற்ற உணர்வை விதைத்து,  பிறகு மரபணுக்கள் தான் நம்முடைய சுய நலத்
திற்குக்  காரணம்  என்று  சொல்வதுடன்,  மரபணுக்கள்  அடிப்படையிலேயே
சுயநலமானவை என்று சொல்வதுடன், மனிதஜீவிகளை அல்லது பொதுவாக
உயிர்-ஜீவிகளைவிட மரபணுக்கள் தான் பிரதானமானவை, மையமானவை
என்று நிலை நாட்டுவதன் பொருள் என்ன?  தனது  நூல் நெடுகிலும்  மரபணு
வின் புகழைப் பாடிவிட்டு,   நூலின்  இறுதியில்   'சுயநலங்கொண்ட மரபணு'
வுக்கு எதிராக  நம்மை போருக்கு ஆயத்தமாகச் சொல்வது,அதாவது நம்மை
பொது நலம் கொள்ளச்சொல்வது ஏன்?

இயற்கையில்,பொதுவாக பல்வேறு உயிரினங்களிடம், தனிஜீவிகளுக்கிடை
யேயும்,   குழுக்களுக்கிடையேயும்  பொது நலம்  கருதுவதும்,      ஒத்துழைப்பு
நிலவுவதும், இசைவு காண்பதும் ஆதியிலிருந்தே, உயிர் தோன்றிய காலத்தி
லிருந்தே  இருந்துவருகின்ற அம்சங்களாகும்.  ஆனால், டாக்கின்ஸ் அவர்கள்
ஏற்கனவே   இருந்துவருகின்ற  ஒரு அம்சத்தை, அதாவது பொது நலம் எனும்
அம்சத்தை,  இல்லாத ஒன்றாகச் சித்தரித்துவிட்டு, அதற்கான பழியை மரப
ணுக்களின் மீது சுமத்திவிட்டு, திடீரென புதிதாக நம்மை பொது நலம் கருது
மாறு போதிப்பது என்பது நம் அனைவரையும் முட்டாளாக்கும் விஷயமல்லா
மல் வேறென்ன?

திரு டாக்கின்ஸ் அவர்கள்,  கிட்டத்தட்ட  நாற்பது ஆண்டுகளாக,  நம்மைவிட
தனது      சக-உயிரியலாளர்களையும்,      விஞ்ஞானிகளையும் தான்  அதிகம்
முட்டாள்களாக ஆக்கியுள்ளார் என்பதுதான் உண்மை. ஏனெனில், மேலோட்
டமானதும், வெளிப்படையானதுமான விபர-உண்மைகளைக்கண்டு ஆச்சரி
யப்படுவதும்,  அவ்விபர  உண்மைகளைக்கொண்டு  பயனற்ற நெடிய கோட்
பாடுகளை    உருவாக்கி   முடிவிலாது   அவை குறித்து   விவாதித்துக்கொண்
டிருப்பதும் பெரும்பாலும் விஞ்ஞானிகள் மட்டும்தான்!

மரபணுக்கள்  இல்லாமல்  மனிதன் இல்லை; மனிதன்  இல்லாமல் மரபணுக்
களும் இருக்கமுடியாது.   இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.  ஆக,
மரபணுக்களும் உயிர்-ஜீவிகளும் பிரிக்கமுடியாதவை எனும் பட்சத்தில், மர
பணுக்கள் சுயநலமானவை என்றாலும், உயிர்-ஜீவிகள் சுயநலமானவை என்
றாலும் ஒன்றுதான்.  உயிர்-ஜீவிகளைச் சுருக்கினால், முடிவில் மரபணுக்கள்
தான்  மிஞ்சும்;  மரபணுக்களையும்  சுருக்கினால்,  அடிப்படை  அணுத்துகள்
கள்தான் மிஞ்சும்.  ஆனால்,  நாம் அவ்வளவு தூரம் செல்லத்தேவையில்லை!
ஏனெனில்  சுருக்கிக்காண்பதன்  வழியாக  நாம் மேலதிகப்புரிதலை பெறப்
போவதில்லை. ஆம், விரிந்து வளர்ந்து பரிணமித்துச்செல்லும்  இயற்கைக்கு
மாறாக, மனிதன் எதையும் சுருக்கிக்காணாதிருப்பானாக!

மரபணுக்கள் சுய நலமிக்கவை,   ஆகவே நாம் சுயநலமிக்கவர்களாக இருக்
கிறோம்    என்பதாக  ரிச்சர்ட் டாக்கின்ஸ்  கூறியது  ஒன்றும்   பெரிய கண்டு
பிடிப்போ,  அல்லது,   அது    ஒரு    மாபெரும்   பிரபஞ்ச உண்மையோ   அல்ல.
'வெண்மை வெண்மையாக உள்ளது' என்று சொல்வது பெரும் கண்டுபிடிப்பு
அல்ல; அது வெளிப்படையானதொரு விபர உண்மையாகும்.   அதுபோலவே,
மரபணுக்கள் சுய நலமிக்கவை என்பதும் பெரும் கண்டுபிடிப்பு அல்ல.

ஆனால்,   மரபணுக்கள்  'ஏன்'  சுயநலமிக்கவையாக  உள்ளன என்பதற்கான
பதிலைக்  கண்டுபிடிப்போமெனில்,  அது  குறிப்பிடத்தக்க ஒரு  கண்டுபிடிப்
பாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை!  மரபணுக்கள் சுய நலங்கொண்ட
வையாக  விளங்குகின்றன என்று சொன்ன  ரிச்சர்ட் டாக்கின்ஸ், அவை ஏன்
சுய நலங்கொண்டவையாக   விளங்குகின்றன  என்பதை அவர் கண்டறிந்து
சொல்லவில்லை!

அதற்கான பதிலை நாம் கண்டுபிடிப்போம். ஆம், மரபணுக்கள் சுயநலமான
வையாகும், ஏனெனில் அவை அப்படித்தான் இருந்தாகவேண்டும், அவ்வாறு
இல்லாவிடில், பூமியின் மீது யாதொரு உயிரும் தோன்றி நிலைத்திருக்க முடி
யாது!அப்பட்டமாக சுயநலங்கொண்டிருப்பதற்கு, வெறுமனே உயிர்-பிழைத்
திருப்பது  என்கிற உடனடி குறிக்கோளையும்தாண்டிய  மிகத்தொலைவான
தொரு உயர்- நோக்கமும் உள்ளது!   சுயநலம்  என்பது  உயிர்-ஜீவிகள் யாவற்
றுக்கும் மையமாக அமைந்த  சுய-பாதுகாப்பு எனும் இயல்பூக்கியின் (self
-preservation instinct)சாரம் ஆகும்!

மேலும்,  உயிர்த்தோற்றம் (Origin of Life)என்பது  ஒரு-முறை மட்டுமே
சம்பவிக்கும்   நிகழ்வாகும் என்பதால், முதன் முதலாகத்தோன்றுகிற உயிர்-
ஜீவியானது தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் வகையில் அமை
வது   உயிர்-ஜீவியின்  அடிப்படை  விதிகளில்   ஒன்றாகும்.   ஆம்,   தன்னைத்
தானே பிரதியெடுத்துக்கொள்ளும்   'உள்-அமைந்த'  அம்சம்  இல்லாமல் எவ்
வொரு   உயிர்-ஜீவியும்  இருக்க முடியாது.   எவ்வொரு   உயிரற்ற சடப்பொரு
ளும்,   உதாரணமாக,   ஒரு   கூழாங்கல்   தன்னைத்தானே   பிரதியெடுத்துக்
கொள்வது  முடியாது.    இவ்விடத்தில்,   இப்படியுமில்லாத,  அப்படியுமில்லாத
விளிம்பு- நிலை   விஷயங்களான   படிகங்கள்,   தாதுக்கள்   போன்றவற்றை
நாம் கணக்கில் கொள்ளவில்லை.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்-ன்    'சுயநலங்கொண்ட மரபணு'   எவ்வகையிலும்   ஒரு
மாபெரும் கண்டுபிடிப்போ,  புரட்சிகரமான புதுமையோ அல்ல. அவர் அந்த
நூலை எழுதியதன் நோக்கம் உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்ன
என்பதைக்  கண்டுபிடிக்கும்   வகையிலான  ஆய்வுகளில்   ஈடுபட்டிருக்கும்
தனது   சக-உயிரியல்  விஞ்ஞானிகளின்  கவனத்தை  சிதறடித்துக் குழப்பிக்
கெடுப்பதும்,   பொதுமக்களின் கவனத்தை  தம் பக்கம் ஈர்த்துக் கவருவதும்
தானாகும்!  ஆயினும், டெனிஸ் நோபில்(Denis Noble)போன்ற உயிரியலா
ளர்கள்  டாக்கின்ஸ்-ன்   கோட்பாட்டில்  உள்ள  மட்டுப்பாடுகளையும்,  குறை
பாடுகளையும் பட்டியலிட்டு சுட்டிக்காட்டாமலில்லை!

டாக்கின்ஸ்-ன்    "மரபணுவின்-கண் பார்வை" யிலமைந்த  பரிணாமம் ஓரள
விற்கு  முறையாகத்  தொடங்குகிறது  என்றபோதிலும்,  அது   பெரிதும் குறு-
நோக்குடையதாகத்(too short-sighted) தேங்கிவிடுகிறது என்பதுதான்
உண்மை நிலை.   உயிரியல்  பரிணாமத்திற்கான  ஒரு   அடிப்படை  என்கிற
வகையில்,  'சுயநலங்கொண்ட மரபணு' என்பது மிகவும் இன்றியமையாதது
என்றபோதிலும்,  மரபணுவின் 'சுய நலம்' எவ்வகையிலும்,அம்மரபணுவுக்கு
இறுதியான முக்கியத்துவம் எதையும் வழங்கிடுவதில்லை! ஆனால், ரிச்சர்ட்
டாக்கின்ஸ் அவர்கள், மரபணுவின் சுயநலத்தை அமளிப்படுத்தியதுமட்டும்
தான் மிச்சம்,  சுயநலத்தின்  உண்மையான  செயல்பாடு (function)என்ன
என்பதை அவர் கண்டுபிடிக்கத்தவறிவிட்டார்.

நல்லது,   நாம்  இப்போது  மரபணுக்கள் 'ஏன்'  சுயநலமிக்கவையாக உள்ளன
என்பதற்கான பதிலின் கருவான பகுதிக்குச்செல்வோம். அதாவது 'சுயநலங்
கொண்டிருப்பதற்கு, வெறுமனே  உயிர்-பிழைத்திருப்பது  என்கிற உடனடிக்
குறிக்கோளையும்  தாண்டிய  மிகத்தொலைவானதொரு  உயர் -நோக்கமும்
உள்ளது'  என்று  ஏற்கனவே  குறிப்பிட்டிருந்தோம்.  அது எத்தகைய நோக்கம்
அல்லது குறிக்கோள்- அதை அடைவதற்காக  சுய நலம்  என்பது  கடைபிடிக்
கப்படுகிறது?   எவ்வொரு  உயிர்-ஜீவியும்   உள்ளார்ந்த வகையில்  சுய நலங்
கொண்டதாக   இல்லையெனில்,   உயிர்-பிழைப்பது  பற்றி  அது     பெரிதாக
அக்கறை கொள்ளாது! ஆம், சுயநலம் உயிர்-பிழைத்திருத்தலை(survival)
ஊக்குவிக்கிறது! உயிர்-பிழைத்திருத்தலை தக்கவைக்காமல்,பல்வேறுபட்ட
உயிரினங்களின் தோற்றம் (speciation)சாத்தியமில்லை!

ஆம், உடனடித்தேவையும்,  இலக்குமான உயிர்-பிழைத்திருத்தலைச் சாதிக்
காமல்,  பல்வேறுபட்ட உயிரினங்களின் தோற்றம் (speciation) சாத்திய
மில்லை!  பல்வேறுபட்ட உயிரினங்கள் தோன்றாமல், பரிணாமத்தின் மிகத்
தொலைவான  இலக்கு அடையப்படவியலாது.  பல்வேறுபட்ட உயிரினங்கள்
தோன்றுவதற்கான நோக்கம் தான் என்ன?  நிச்சயமாக, மனித இனம் அல்ல
பரிணாமத்தின்  அந்த தொலைவான இலக்கு!   ஒருவேளை,  பரிணாமத்தை
நாம்   உயிரியல்   கோளத்திற்குரியதாகச்  சுருக்கிக்   காண்போமேயானால்,
பைபிள்-சார்ந்த படைப்புவாதிகள்  கருதுவது போல மனிதனை  பரிணாமத்
தின் உச்சமாகவும், பரிணாமத்தின் முடிவாகவும் கொள்ளலாம்.

பெரும்பாலான   பரிணாம-உயிரியலாளர்கள்,   பரிணாமம்  'பெரு-வெடிப்பு'
எனும்    பிரபஞ்சத்தின்  பிறப்புக் கணத்திலிருந்து   தொடங்குவதாகக் காண
விரும்புகிறார்கள் எனலாம்; ஏனெனில், அவர்கள் உயிரியலை, பௌதீகவிய
லுக்குச்  சுருக்கிக் காண்பதை    தங்கள்   பாக்கியம்   எனக்  கருதுகிறார்கள்!
ஆனால், எவ்வொரு உயிரியலாளரிடமும், பரிணாமவாதியிடமும், குறிப்பாக
டார்வினிய பரிணாமவாதியிடம்,   பரிணாமம் என்பது  உண்மையில் உயிரி
யல் தளத்தைக்கடந்துசெல்வதாயுள்ளது, அல்லது செல்லக்கூடும் என்பதான
ஒரு சிறு கருத்தும், கற்பனையும்கூட கிடையாது! டார்வினிலிருந்து, (ரிச்சர்ட்)
டாக்கின்ஸ் வரை   அனைத்து    உயிரியலாளர்களும்,   பரிணாமவாதிகளும்
"உயிர்-விருட்சம்"  ('Tree of Life') படிப்படியாக   பல்வேறு  உயிரினங்
களாக,    கிளைவிட்டு    ஓங்கி    வளர்ந்த  அந்த  மகத்தான  கண்கொள்ளாக்
காட்சியினால்  ('The Greatest Show on Earth')முட்டாள்களாக  ஆக்
கப்பட்டார்கள்!   ஆனால்,   அவர்களில்  எவருமே  உயிர்-விருட்சத்தின்  "கனி"
குறித்து  யோசிக்கவும் இல்லை!  உயிர்-விருட்சத்தின் "கனி" பற்றிய பதிலை
யும்,  விளக்கங்களையும் இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் காண்போம்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடும்,  அவரது  கோட்பாட்டை ஒட்டி எழுப்பப்
பட்ட பிற உயிரியல்விஞ்ஞானிகளின்,அதாவது,பொதுவான விஞ்ஞானவகை
பரிணாமக்கோட்பாடுகளும் சரி,  யாவும்,   மனிதன் எவ்வாறு தோன்றினான்
எனும் ஒற்றைக்கேள்விக்கான பதிலளிப்புகளேதவிர,அவை எவ்வகையிலும்
"பரிணாமம்"  என்றால் என்ன?   பரிணாமத்தில் பரிணமிப்பது எது?   பரிணா
மத்தின்  உண்மையான குறிக்கோள், இலக்கு தான் என்ன? என்பன போன்ற
அடிப்படையான,ஆழமான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான
பதில்களைக் கண்டறியும் முயற்சியாக இதுவரை இருந்ததில்லை!

உயிரியல் பரிணாமம் என்பது பூமியின் மீது நிகழ்ந்துள்ளது.  சந்தேகமின்றி,
மனிதன் உயிரியல் பரிணாமத்தின் விளைபொருள்தான்.  மேலும்,  மனிதன்
உள்பட அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதை-இனத்திலிருந்து கிளைத்
துத் தோன்றியவைதான் என்பதிலும் சந்தேகம் இல்லை.  ஆனால், அடுத்தது
என்ன?  80,00,000 க்கும் மேற்பட்ட  பல்வேறு உயிரினங்களில் மனித இனமும்
ஒன்று என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை!  ஆனால், அடுத்தது என்ன?

டாக்கின்ஸைப்  பொறுத்தவரை,    உயிரினங்கள்  வெவ்வேறாயினும்  அவற்
றின்    DNA   எனப்படும்   மரபணுக்கூறுகளானவை  அடிப்படை   ரசாயண
அமைப்பில்    ஒரே  தன்மையிலானதாகவே  உள்ளன  என்பதால்;   ஈ,  கொசு,
எறும்பு, யானை,பூனை, மனிதன் எல்லாமே ஒன்றுதான் என்கிறார்! அதாவது
எல்லாக்  கட்டடங்களும்    செங்கற்களால்    கட்டப்பட்டவை  என்பதால்,  ஒரு
கோதுமைக்கிடங்கும், ஒற்றை அறை வீடும், பல அறைகளைக்கொண்ட ஒரு
பங்களாவும்,   பல மாடிகளைக்கொண்ட  ஒரு  மாளிகையும்,   யாவும்  ஒன்று
தான்   என்கிறார்!    

ஆனால்,    கட்டடங்கள்    யாவும்    செங்கற்களால்     கட்டப்பட்டவை  என்பது
கட்டடங்களைப்பற்றிய ஒரு பொதுவான அடிப்படை விபர-உண்மை (Fact)
தான்  என்பதை  எவரும்  மறுக்க இயலாது.  அதே நேரத்தில்,  கட்டடங்களும்,  
செங்கற்குவியலும்  ஒன்றல்ல!    நாம்    ஒரு   கட்டடத்தைப்   பார்க்கும் போது  
அதன்    செங்கற்களை   எண்ணிக் கொண்டிருப்பது   என்பது    முட்டாள்தன
மானதாகும்.  செங்கற்கள்  எவ்வாறு,  எத்தகைய  வடிவமைப்பில் அடுக்ககப்
படுகின்றன       என்பதிலிருந்து     எழுகின்ற    பண்பு    அல்லது    பரிமாணம்
(Emergent Property) தான்   கட்டடம் ஆகும்.    இத்தகைய   பண்பினடிப்
படையிலான மாற்றத்தைத்தான் "நாம்" பரிணாமம் என்கிறோம்.

ஆனால்,   டார்வினும்,   அவரது  சீடர்  டாக்கின்ஸும் கிடைமட்டத்திலமைந்த
பரிணாமத்தின்     ஒரு   போக்கினை  மட்டுமே  'பரிணாமம்'   என்கிறார்கள்;
செங்குத்தாக   உயர்ந்து  செல்லும்  பரிணாமத்தின்   அதி முக்கியமான இன்
னொரு   போக்கினை   முற்றிலுமாக  மறுதலித்து  விடுகிறார்கள்.    இரண்டு
போக்குகளையும்     சேர்த்துப் பார்க்காமல்,  பரிணாமத்தை  முழுமையாகப்
புரிந்துகொள்ள முடியாது.

கிடைமட்டத்திலமைந்த பரிணாமத்தின்  போக்கு என்பது வெறும் மேலோட்
டமான மாறுபாடுகளால் அமைவதாகும்.

செங்குத்தாக  உயர்ந்து செல்லும்பரிணாமத்தின்  போக்கு என்பது பண்பின்
அடிப்படையில் பெரும் மாற்றங்களால் அமைவதாகும்.

பரிணாமத்தின்,  கிடைமட்டப்  போக்கும்  செங்குத்தான போக்கும்,  இரண்டு
போக்குகளுமே      தெளிவாகவும்,    வெளிப்படையாகவும்     தெரிகிற போது
ஒன்றை  கணக்கில் கொண்டு  மற்றொன்றைத் தவிர்ப்பது  என்பது கண்கள்
இருந்தும்    குருட்டுப் போக்கில்    செல்வதற்குச்  சமமாகும்.      உண்மையில்,
டார்வின்   முதல்  டாக்கின்ஸ்,  ஸ்டீபன் ஜெ. கௌல்ட்  வரை பரிணாமம் குரு
டானது,    குறிக்கோளற்றது,    திசையற்றது,   மற்றும்   உயர்-வளர்ச்சியற்றது
என்று    காண்பதற்கு   அவர்கள் பரிணாமத்தின்  கிடைமட்டப்  போக்கினை
மட்டுமே கணக்கில் கொண்டதுதான் காரணம்,  உண்மையில் இக்கிடை மட்
டப்போக்கு   கிட்டத்தட்ட  குருட்டுப் போக்கானதுதான்;    இன்னும்    மனிதன்
தொடர்ந்து   குருடாகவே,  அதாவது,  உணர்வுக்கு வராமலே தொடரும்வரை,
பரிணாமத்தின்    செங்குத்தான  போக்கும்கூட  குருட்டுப்  போக்காகத்தான்
தெரியும்!    ஏனெனில்,   அடியோட்டமாக  பரிணாமம்  என்பது  உணர்வுப்பரி
ணாமம்  தான்;     ஆம்,   பரிணாமத்தில்   பரிணமிப்பது   உணர்வு தானாகும்.
புறத்தே,   மேலோட்டமாக  பல்வேறு   உயிரினங்களின்  வடிவில் பரிணாமம்
வெளிப்படு வதாகத்  தெரிந்தாலும்,   உயிரி களின்    உயிரியல் - அடிப்படை
என்பது   மரபணுக்களே  என்றாலும்,     எல்லா   உயிரினங்களும்   ஒன்றல்ல;
மாறாக, அவை  உணர்வின் வெவ்வேறு வளர்ச்சி- நிலைகளைப் பிரதிநிதித்
துவம்  செய்யும்  பரிணாமக் கட்டங்களும் (Stages), பிரதிநிதி (Agents)
களுமேயாகும்.

ஏனெனில்,     சடப் பொருளாக    வெளிப்பட்ட   (ஆதி) இயற்கை,   தொடர்ந்து,
கடைசிவரை உயிரற்றதாக, உணர்வுமற்றதாகத் தொடரமுடியாது!அவ்வாறு
தொடர்ந்திருந்தால்,   நாம் இவ்வாறு பரிணாமம் குறித்து  ஆராய்ந்துகொண்
டும், விவாதித்துகொண்டும் இருக்கமுடியாது! மிகக்குறைந்த உணர்வுநிலை
யிலிருந்து   (  கிட்டத்தட்ட   உணர்வற்ற   சடப்பொருளின்   நிலையிலிருந்து  )
மேலுயர்ந்து   முழு-நிறைவான தொரு  உணர்வு நிலையை   அடையும்    வழி
முறைக்குப்பெயர்தான் பரிணாமம் ஆகும்!

இயற்கை   "உயிர்"   பெற்று  எழுந்த நிலைதான்  உயிரினங்கள்! அடுத்தகட்ட
மாக "உயிர்" பெற்று எழுந்த இயற்கை "உணர்வு"  பெற்று எழுந்த நிலைதான்
மனிதன்!   ஆனால்,   பரிணாமத்தின்  இறுதியான நிறைவு நிலை   'மனிதன்'
அல்ல! ஆயினும், 'உயிர்-விருட்சத்தின்' "கனி" போன்ற அந்த முழுமை-நிலை
மனிதனின்   உணர்வுப் பூர்வமான   ஒத்துழைப்புடன்,  மனிதனின் வழியாக,
மனிதனால்   மட்டுமே அடையப்பட ஒன்றாகும். ஒருவகையில் மனிதன்  என்
பவன்  எல்லாம் வல்ல  'கடவுளால்' விசேடமாகப் படைக்கப்பட்டவனல்ல என்
றாலும்,  பரிணாமத்தினால் அவனுக்கு விதிக்கப்பட்ட  பரிணாமக் கடமையி
னால்   விசேடமானவனாக  ஆகிறான்!   மனிதனின்  பரிணமிக்கும்  உணர்வு
தான்  அவனுக்கு   அந்த  விசேடத் தகுதியைப்   பெற்றுத்தருகிறது.   மனிதன்
உணர்வற்றவனாய் இருந்தால், அவனும் ஒரு விலங்குஜீவியைப்போலத்தான்
இருப்பான்.

டார்வினைப் பொறுத்தவரை,   "பரிணாமம்  முன்னோக்கிய  உயர்-வளர்ச்சி
குறித்தது அல்ல" என்பதே அவரது முடிவு! டார்வின் மனிதனை இன்னுமொரு
விலங்கினமாகத்தான் கண்டார்! டாக்கின்ஸைப்பொறுத்தவரை, மனிதஜீவி
யாயினும்,   விலங்கு   ஜீவியாயினும்,    DNA  எனப்படும்   மரபணுக்கூறுகள்
மட்டுமே முக்கியமானவை என்பதே அவரது முடிவு!

DNA எனப்படும்   மரபணுக்கள்  உயிர்-பிழைப்பதற்காகவே  பல்வேறு உடல்
களை,   அதாவது   உயிரினங்களை உருவாக்கி அவ்வுடல்களை  (உயிரினங்
களை) ப் பயன்படுத்திக்  கொண்டு தம்மைத்தாமே துல்லியமாகப்பிழையே
துமின்றி  பிரதியெடுத்துக் கொண்டு,  அவ்வுயிரினங்களின்     சந்ததிகளின்
மூலமாகத்   தொடர்ந்து   உயிர்-பிழைத்துச்  செல்கின்றன.  ஆம்,    மரபணுக்
களுக்கு    இன்னொரு    பெயர்   "பிரதியெடுப்பான்கள்".      மரபணுக்களைப்
பொறுத்தவரை  தொடர்ந்து  உயிர்-பிழைத்திருப்பதற்கு  சிறுபிழையுமின்றி
துல்லியமாகத் தங்களைப் பிரதியெடுப்பது மிகவும் முக்கியமாகும். மேலும்,
துல்லியமாகப்   பிரதியெடுப்பதையே   'இயற்கைத்தேர்வு'ம்     ஆதரிக்கிறது.
ஆனால்,     பரிணாமத்தைப்    பொறுத்தவரை   பிரதியெடுப்பு - பிழைகளை
(copying errors) அடிப்படையாகக் கொண்டுதான்  புதிய புதிய   உயிரி
னங்களை உருவாக்குகிறது.

ஆனால்,   டாக்கின்ஸைப் பொறுத்தவரை,   அவர்  பரிணாமத்திற்கு எதிராக
இருப்பதாகவே   தெரிகிறார்!   அதாவது   அவரது    கூற்றுப்படி,   "பரிணாமம்
( புதிய  புதிய   உயிரினங்கள்   தோன்றுவது )  என்பது,    துல்லிய மற்றதொரு
வகையில்.  'நல்ல விஷயமாக'  தோற்றம்தருகிறது, முக்கியமாக நாம் அதன்
ஒரு விளை-பொருளாக அமைந்துள்ளோம் என்பதால். ஆனால்,உண்மையில்
எதுவும்  'பரிணமிக்க' விரும்புவதில்லை. மாறாக, பரிணாமமானது பிரதியெ
டுப்பான்களின்    (மரபணுக்களின்)    அனைத்து   தடுப்பு   முயற்சிகளையும்
தாண்டி, எவ்வாறோ,விரும்பியோ,விரும்பாமலோ நிகழும்ஒன்றாக உள்ளது."
என்கிறார். அதாவது, மூலமுதல் மரபணு எவ்வாறு, ஏன், எதற்காகத் தோன்றி
யது   என்பது  டாக்கின்ஸுக்கும்  தெரியாது,  அவரது  ஆசான் டார்வினுக்கும்
தெரியாது,   எனும்  நிலையில்,  டாக்கின்ஸ்-ன்  மிதமிஞ்சிய மரபணு-மையப்
பார்வையின்    தாக்கத்தினால்   அவர்   மரபணுவை   பிரதானமானதாகவும்,
அதையே   இறுதியான  (சிரஞ்சீவித்தன்மை  கொண்ட)  நிரந்தர  மெய்ம்மை
யாகவும் காண்பவராக உள்ளார்!

டாக்கின்ஸுக்கு,   "மரபணு"   தான்  கடவுள்,  மற்றும்,  எல்லாமும்!    அவரைப்
பொறுத்தவரையில்,   மரபணுவுடன்  பரிணாமம்  முடிந்துவிட்டது.  அதாவது,
'பிரதியெடுப்பான்கள்'  (replicators) எனும்  மரபணுக்கள் பிழையின்றி
வெற்றிகரமாக தங்களைப் பிரதியெடுத்துக்கொண்டுதங்களது நிலையைத்
தக்கவைத்துக் கொள்ளும்வரை,  பரிணாமம்,  அதாவது  புதிய புதிய  உயிரி
னங்கள்  தோன்றுவதற்கான  வாய்ப்பே  இல்லை  என்கிறார்!   ஆனால், மரப
ணுக்களின்  அனைத்து முயற்சிகளையும் தாண்டி பிரதியெடுப்பதில்  பிழை
நேர்ந்துவிடுவதன்  விளைவாகத்தான்,   இன்று  நாம்  பல்வேறு  வகைப்பட்ட
உயிரினங்களைக் காண்கிறோம். மற்றபடி,

அப்படியே   புதிய  உயிரினங்கள்  தோன்றினாலும், டார்வினின் கூற்றுப்படி,
உயிரினங்களுக்கிடையேயான  வித்தியாசம் என்பது வெறும் அளவு  ரீதியா
னதே தவிர, வகை ரீதியாக வேறானதல்ல ( much of the species diffe
rence is a difference “of degree and not of kind”).அதாவது,
உயிரினங்களுக்கிடையே     பெரிய    வித்தியாசம்    என்பதில்லை     என்பது
பரிணாமத்தை  மறுக்கும்  பார்வையும்  போக்கும்  அல்லாமல் வேறென்ன?

முதலில்,   முதல் உயிர்  (உயிர்-ஜீவி)  தோன்றிட வேண்டும்.   அடுத்தது  அந்த
உயிர்-ஜீவி    நிலைத்து    வாழவேண்டும்,      அதையடுத்து      அவ்வுயிர்-ஜீவி
கிளைத்து பண்பளவில் வெவ்வேறு உயர் உயிர்-ஜீவிகளாக, அதாவது உயிரி
னங்களாக  வெளிப்பட வேண்டும்.  இதுதான்   முழுமையான பரிணாம வழி
முறையாகும்.   பண்பளவிலான  உயர் வளர்ச்சியை  மறுக்கும்   பார்வையும்
போக்கும்   அசலான  பரிணாமத்திற்கு  விரோதமானதாகும்.  இவ்வகையில்,
டார்வினும், அவரது சீடர் டாக்கின்ஸும் பரிணாம விரோதிகளே யாவர்.

டாக்கின்ஸைப்பொறுத்தவரை, அனைத்து உயிரி(னங்)களும்  மரபணுத் தக
வல்களைத் தாங்கிச் செல்லும்  வெறும்  தற்காலிகக் கலன்(பாத்திரம்) களே;
மரபணுக்களை  மறுஉற்பத்தி செய்ய உதவும்  கருவிகளே  என்கிறார்.  அதா
வது,    ஒரு உயிரி,   அது   எலியோ,  மனிதனோ,  அல்லது  வேறு எதுவாயினும்
அது   மரபணுக்களின் கருவியே;   அதாவது,  டாக்கின்ஸைப் பொறுத்தவரை
மரபணுக்களைத்தாண்டி உயிரிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை!
அதாவது,மனிதஜீவிகள் உள்பட அனைத்து விலங்குஜீவிகளின் ஒரே இலக்கு
தம்தம்   மரபணுக்களை  மறுஉற்பத்தி செய்வது மட்டுமே;  அதற்காகத்தான்
அவை உயிர் வாழ்கின்றன!

ஆனால்,    DNA  எனப்படும்  மரபணுக்கள்  என்பவை  உண்மையில்  என்ன?
உயிரியல்  விஞ்ஞானிகளும்,  டார்வினிய  பரிணாமவாதிகளும்  மரபணுக்க
ளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்!  அவர்களுடைய விளக்
கங்கள்   நம்மையும்,  நம் வாழ்க்கையையும்  புரிந்துகொள்ள உதவாது!  DNA
என்பது ஒரு உயிரி உருவாவதற்கான அடிப்படை, அதாவது "உயிர்க்கரு" என
நாம்  கொள்ளலாம்.  இக்கட்டுரையின்  தொடக்கத்தில்  குறிப்பிட்ட படி  DNA
எனப்படும்  மரபணுக்கள்  இல்லாமல்  எவ்வொரு  உயிரியும்  இல்லை;  அதே
நேரத்தில்,   ஒரு  உயிரி,  அல்லது  ஜீவி  இல்லாமல்  மரபணுக்களும்  இல்லை;
அதாவது   ஒரு  உயிரிக்கு,   அல்லது   ஒரு  ஜீவிக்கு   வெளியே   மரபணுக்கள்
உயிர்வாழ்வதில்லை!  இதையே வேறு வகையில் சொன்னால்,  முட்டை  இல்
லாமல்  கோழி  இல்லை;   கோழி  இல்லாமல் முட்டை இல்லை! அதே வேளை
யில்,  இது   ஒரு விபரீத வட்டமும் அல்ல.   ஏனெனில்,  ஆதியில்,   முதல் உயிர்
தோன்றியபோது,   "உயிர்க்கரு"    என்கிற   அளவில்   முட்டைதான்   முதலில்
தோன்றியிருக்க  முடியும்!   மனிதன்  என்பவன்  உண்மையில்  விந்தணுவும்
கருமுட்டையும்   இணைந்து  தாயின்  கருப்பையில்  ஒரு  முழு  'ஸெல்'  லாக
ஆகி,  அந்த ஒரு 'ஸெல்' இரண்டாகி, இரண்டு நாலாகி, .... இப்படியே வளர்ந்து
கைகள்,  கால்கள்,   உள் உறுப்புகள்,  கண்,  காது,  மூக்கு,   என முழு உடலாக
உருவாகியதும்  பிறக்கிறான்.

ஒரு  உயிர்-ஜீவிக்கு  மரபணுக்கள் தான்  அடிப்படை  என்பதை நாம்  மறுக்க
வில்லை; மறுக்கவும் முடியாது. ஆனால், டாக்கின்ஸ் போன்ற உயிரியல் விஞ்
ஞானிகள்,  மரபணுக்களை  மட்டும்    கணக்கில்  கொண்டு    உயிர்-ஜீவியை
கணக்கில்  கொள்ளாமல் மறுக்கும்  சுருக்கல்வாதப் போக்கைத்தான் மறுக்
கிறோம்,  தீவிரமாக  எதிர்க்கிறோம். சுருக்கிக்காணவேண்டும் என்று முடிவு
எடுத்துவிட்டால்,   உயிர்-ஜீவிகளை   DNA மூலக்கூறுகளுக்குத்தான்  சுருக்க
முடியும் என்பதில்லை;   DNA மூலக்கூறுகளுக்கும்  அடிப்படையாக விளங்கு
வதாகக்கூறப்படும்    RNA எனப்படும்   ஒற்றை  இழை   மரபணு   மூலக்கூறு
களுக்கும்; அதையும் இன்னும் சுருக்கி எல்லாம் அடிப்படை அணுத்துகள்கள்
தான் என்ற நிலைக்கும் கீழிறங்கலாம்!

"சுயநலங்கொண்ட மரபணு" எனும் தலைப்பில், ஒரு முழுநீள நூலை எழுதிய
ரிச்சர்ட் டாக்கின்ஸ்,     அந்நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தின் கடைசி
யில், சாத்தான் வேதம் ஓதுவதைப்போல, திடீரென,
   
      "தேவைப்படுமெனில், சுயநலங்கொண்ட மரபணுவினை எதிர்த்துப்
       போராடக்கூடிய ஆற்றல் நமக்கு உள்ளது. இன்னும், நாம் திட்டநோக்
       குடன், தூய பொது நலத்தை வளர்த்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்
       கலாம்; அப்படியொரு பொது நலம் எனும் அம்சம் இவ்வுலகின் ஒட்டு
       மொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது. ஏனெனில், நாம் மரபணு
       எந்திரங்களாக . . . .கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால், நம்மைப்
       படைத்த அந்த மரபணுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஆற்றல்
       நம்மிடம் உள்ளது.   பூமியில் நாம்  மட்டும்தான்,   'சுயநலங்கொண்ட
       பிரதியெடுப்பான்களின் (மரபணுக்களின்)' கொடுங்கோன்மையை
       எதிர்த்து கலகம் செய்ய இயலும்."

என்பதாக   அறிவித்து  அறிவியலாளரான டாக்கின்ஸ்  அறவியல் போதனை
யாளராக அவதாரம் எடுத்து விடுகிறார்! ஆனால்,  பொதுநலம் எனும் அம்சம்
இப்பூவுலகின் ஒட்டுமொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது என்ற அவரது
கூற்று அப்பட்டமானதொரு உயிரியல் வரலாற்றுப்புரட்டு என்றுதான் சொல்
லவேண்டும். ஏனெனில்,  அலெக்ஸாண்டர் மெய்னெஸ்  (Alexandre Mein
esz)எனும் எனும் உயிரியல்  விஞ்ஞானி,

         "பல ஸெல்களால் ஆன விலங்குகள், பூஞ்சைக்காளான்கள், கடற்
          பாசிகள் ஆகியவற்றின் தோற்றமானது, ஒரு பிரபஞ்சமளாவிய
          தருக்கத்தின்படி,  அதாவது, "ஒற்றுமையே வலிமை" எனும் பழைய
          மொழிக்கிணங்க விளைந்ததாகத் தெரிகிறது. இத்தகைய
          கூட்டொருமைதான் நம் கண்களுக்குப்புலப்படக்கூடிய அளவிலான
          பல ஸெல்லுயிரிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. முதல் விலங்கு
          மற்றும் தாவர ஸெல்கள் 'பாக்டீரியா' ( bacteria)எனப்படும் நுண்
          ணுயிரிகளின் இணைவினால் உருவானவையே. ஒன்றுக்குள் ஒன்றாக
          உள்-இணைந்த (Endosymbiosis)ஒத்தியை வாழ்வுப்பண்பு எனும்
          கூட்டிணைவில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் அமைந்ததே விலங்கு
          மற்றும் தாவர உயிரிகளுக்கு வலிமை சேர்த்தது ."

என்பதாக,   "உயிர்  எவ்வாறு  தோன்றியது?"   ("How Life Began") எனும்
தனது  நூலில்  மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்,  ஆக, சுய நலம்  என்பது
மரபணுக்களின் ஒரு அடிப்படைப்பண்பு தானே தவிர முடிவான இறுதியான
பண்பு  அல்ல.  "உயிர்"   என்பது   அடிப்படையில்   உயிரற்ற   சடப்பொருளின்
உலகில் உதித்த, சடப்பண்பிற்கு எதிரான ஒரு எழுச்சியும் இயக்கமும் ஆகும்.
ஆகவே,சுயநலம் என்பது, சடத்தனமான ஒரு அந்நிய உலகில் எவ்வாறேனும்
தகவமைந்து உயிர்-பிழைத்தாக வேண்டும் எனும் முனைப்பைக் குறிப்பதே
தவிர, அது ஒரு மோசமான பண்பு அல்ல.

மரபணுவின் 'சுய நலம்' என்பது அகவயமானதுமல்ல,   நடத்தைபூர்வமானது
மல்ல. மாறாக, மரபணுவின் "சுயநலம்" என்பது உயிரின் மிகவும் அடிப்படை
யான   விதி (Law-like) போன்றதொரு  அம்சமாகும். அதாவது, தன்னைத்
தானே பிரதி எடுத்துக்கொள்ளும் (Replication)அம்சம் போல. தன்னைத்
தானே   மறுபடைப்பு  செய்துகொள்ளும்  அம்சமே  உயிரற்ற  பொருளுக்கும்
ஒரு    உயிர்-ஜீவிக்கும்   உள்ள  பிரதான  ஒற்றை  வித்தியாசமாகும்.  மேலும்,
"சுயநலம்"  தான் உயிர்-ஜீவிகளின்  "சுய-பாதுகாப்பு"(self preservation)
எனும்  இயல்பூக்கி (instinct)யின் வேர் ஆகும். மேலும், மரபணுவின்  சுய
நலம்   தான்   உயிர்-ஜீவிகளின்  சுயநல   நடத்தையாக  எழுகிறது.   மனிதன்
உள்பட எல்லா உயிரினங்களும் சுயநலமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

வழக்கமாக, பிற உயிரினங்கள் பறவைகள், விலங்குகள் சுயநலம் கொண்ட
வைகளாக   இருப்பதாக  நாம்  குற்றம் சொல்வதில்லை.  மேலும்,  எவ்வொரு
மனிதஜீவியும் தமக்குத் தெரிந்தோ,அல்லது விரும்பியோ சுயநலமாக இருப்
பதில்லை!   ஏனெனில்,  சுயநலம்  என்பது  உள்-அமைந்த ஒரு இயல்பு ஆகும்.
அதே நேரத்தில், போதியஅளவு உணர்வுக்கு வந்த எவ்வொரு மனிதனும் தம்
இயல்பான   சுயநலத்தை  கட்டுப்படுத்த,  அல்லது   ஒழுங்கமைக்க இயலும்.
அதாவது, கார்லாஸ் காஸ்டனிடா(Carlos Castaneda)வின், டான் ஜுவான்
(Don Juan)போதித்த "கட்டுப்படுத்தப்பட்ட முட்டாள்தனம் "(Controlled
Folly)என்பதை ஒத்தவகையில்!

அதாவது, அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவர்களாகத்தான் தொடங்
குகிறோம் என்பதில்  தவறேதுமில்லை! ஆனால், அந்த சுயநலத்தினால் நாம்
சாதிப்பது  வெறும் 'உயிர்-வாழ்தல்' என்பது மட்டுமே.  அதாவது  உயிர்-வாழ்
தல்  என்பது  உண்மையான ( உயர்)-வாழ்தலுக்கான அடிப்படை மாத்திரமே
என்பதால்,  மேலும்,    நாம்  உணர்வுடைய  ஜீவிகள்  என்பதால்   இவ்வெல்லா
விஷயங்களையும்  நாம்  உணர்ந்து  புரிந்து   கொள்ளமுடியும் ;  இந்த  உணர்
தலும் புரிதலும்தான் மனிதனை மனிதனாக்குகிறது. ஆகவே, நம்மால் நமது
சுய நலத்தைப்புரிந்து கொண்டு அதைக்கடந்து சென்றிட முடியும்.

ஆகவே,  டாக்கின்ஸ் அவர்களின் போதனையான,   'சுயநலங்கொண்ட மரப
ணுக்களுக்கு  எதிராகக் கலகம்  செய்வது'   என்பது தேவையற்றது.  மாறாக,
"சுய நலம்"    என்பதன்   உண்மையான  ஆழமான    தன்மையைச்  சரியாகப்
புரிந்து கொள்வது ஒன்றே போதுமானது. இயற்கையுலகின் அனைத்து தடை
கள்   மற்றும்  மட்டுப்பாடுகளிலிருந்து  நம்மை  விடுவித்துக்கொள்ளும் ஒரே
வழி  பரந்து  விரிந்த  இப்பிரபஞ்சத்திட்டத்தில்,  நம்மைப்பற்றியும், நம் இடம்,
மற்றும் பரிணாமப் பாத்திரம் ஆகியவற்றை உணர்வதொன்றே ஆகும்.

இதன் அர்த்தம்,   உயிரின்   ஜீவியாகத்தோன்றிய  மனிதன்,  உணர்வின் ஜீவி
யாக எழுவதும் முடிவாக ஒருமையும் முழுமையான உணர்வாக மாற்றமடை
வதும் தான் பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கு ஆகும்.


மா.கணேசன்/13.9.2016
----------------------------------------------------------

Saturday, 17 September 2016

வித்து இல்லாமல் விருட்சம் இல்லை!



(படைப்புவாதம், பரிணாமவாதம்- இரண்டுக்கும் அப்பால்)

நாம்   வாழும்  இப்பிரபஞ்சம்  கடவுளால்  படைக்கப்பட்டதா?  அல்லது,    அது
தானே  தோன்றியதா?      இப்பூமியில்  உயிரினங்களையும்,   மனிதனையும்
கடவுள்  படைத்தாரா?   அல்லது,   அவை   பரிணாமத்தின்  விபத்து -போன்ற
விளைபொருட்களா?

இப்பிரபஞ்சத்தையும், பூமியில் உயிரினங்களையும்,  மனிதனையும் கடவுள்
தான் படைத்தார்   என   படைப்புவாதிகள்   கூறுகிறார்கள்.    பரிணாமவாதி
களோ, இல்லை, இப்பிரபஞ்சம் தானே தோன்றியது, உயிரினங்களும், மனித
னும்   பரிணாமத்தின்  விபத்து போன்ற  விளை பொருட்களே என்கின்றனர்.
இவ்விரண்டில் எது உண்மை? இவ்விரண்டு கூற்றுகளும் உண்மையல்ல என்-
றால், பிறகு எதுதான் உண்மை என்பதைப்பற்றியதுதான் இக்கட்டுரை!

நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும்.அதாவது, நாம் பிரபஞ்
சம்  எனும்  ஒரு மாபெரும் அமைப்பிற்குள்,  அதன்  ஒரு 'பகுதி'யாக   இருக்கி
றோம்,   ஆனால்,  அதன் தோற்றம் மற்றும், அதன் தலைவிதி குறித்து நமக்கு
அறுதியாக  எதுவும்  தெரியாது!  ஆக, அப்பிரபஞ்சத்தின் ஆரம்பம் குறித்தும்,
அதன் வளர்ச்சிப்போக்கு,  மற்றும்  முடிவு குறித்தும்,  அதற்கும்  நமக்குமான
தொடர்பு  குறித்தும்,  குறிப்பாக,  பிரபஞ்சத்தின் எத்தகைய பகுதியாக  நாம்
விளங்குகிறோம் என்பதையும் அறியாமல்  நம் வாழ்க்கை  சிறிதும் அர்த்தம்
பெறவியலாது!

நான் படைப்பிற்கும், பரிணாமத்திற்கும் எதிரானவனல்ல. அதேவேளையில்,
படைப்புவாதம்,  பரிணாமவாதம்   இரண்டையும்   மறுக்கிறேன்!   ஏனெனில்,
பரிணாமத்தை மறுக்கும் படைப்புவாதமும், படைப்பை மறுக்கும் பரிணாம
வாதமும்  மட்டுப்பாடானது,   ஆகவே தவறானது.  எனவே, இவ்விரண்டையும்
கடந்து  செல்லவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறேன்.இவற்றுக்கு
பதிலாக,   "படைப்புப்பூர்வமான-பரிணாமத்தை"  (Creative-Evolution)
முன்வைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் படைப்பும்,பரிணாமமும் வேறு
வகைப்பட்டவை.   நான்  முன்வைக்கும்    "படைப்புப்பூர்வமான-பரிணாமம்"
இறுதி-மெய்ம்மையை ,  அதாவது   'கடவுளை'  மறுப்பதில்லை.   ஆம்,    நான்
சொல்லும் 'கடவுளும்' வேறுவகைப்பட்டவர், அவர் படைப்பிற்கு முன் இருப்ப
தில்லை;  மாறாக, அவர் பரிணாமத்தின் முடிவில்,  இலக்கு நிலையான  முழு
மையில்  வெளிப்படவிருக்கும் "மெய்ம்மை"ஆவார்!

ஆகவே நாம் உள்ளதிலிருந்து, நம்மைச்சூழ்ந்தமைந்திருக்கும் உலகிலிருந்து
இப்பிரபஞ்சத்திலிருந்து தான்  நமது   ஆய்வை,    புரிதலை,  வாழ்க்கையைத்
தொடங்கி   மெய்ம்மையை   அடைந்திட  வேண்டுமே  தவிர ,  கடவுள்  எனும்
கருத்திலிருந்தும், வெறும் நம்பிக்கையிலிருந்தும் தொடங்கிடலாகாது!   அது
நம்மை மெய்ம்மையிடம் கொண்டு சேர்க்காது!

அதே நேரத்தில், இப்பிரபஞ்சத்தை முடிந்த முடிவான நிஜமாகக்கொள்வதும்,
அது தன்னில் தானே தோன்றியதாக, என்றென்றும்  இருந்துவருவதாக, இனி
என்றென்றைக்கும்  சாசுவதமாக  இருக்கும்  என்பதாகக்கொள்வதும் முறை
யாகாது.  ஏனெனில், பிரபஞ்சம் தன்னில்தானே தோன்றிட முடியாது என்பது
ஒரு எளிய தருக்க உண்மையாகும்; இப்பிரபஞ்சம் தோன்றிடஏதோவொன்று
காரணமாக அமைந்திருக்கவேண்டும்;  ஆம்,  "வித்து"   இல்லாமல்  விருட்சம்
இல்லை.  ஆனால், அந்தவொன்று  கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்ப
தில்லை!   கடவுள்  என்பதென்ன?  நாம்  ஏற்றிச்சுமத்தும் பண்புகளைத்தவிர
அக்கடவுள் உள்ளீடற்ற ஒன்றுதானே!

பிரபஞ்சம்  தோன்றுவதற்கு  மூல-காரணமான  அந்த  ஒன்று   எதுவாயினும்,
எவ்வாறேனும்  அது  இப்பிரபஞ்ச அமைப்பினுள் உட்பட்டிருப்ப  (involved)
தாய்,பின்னப்பட்டதாய் இருக்கவேண்டும்.  அப்போதுதான்    'படைப்பாளன்',
'படைப்பு' எனும் இருமை தோன்றாமல் மெய்ம்மையின் 'ஒருமை' தக்கவைக்
கப்படவியலும்! ஒருவேளை,கடவுளே இப்பிரபஞ்சத்தைப்படைத்திருப்பினும்
அவர் அதிலிருந்து வேறாய் இருக்கமுடியாது-எவ்வாறேனும் அவர் இந்நிபந்த
னையை நிறைவேற்றாமலிருக்க முடியாது.

ஆம்,  கடவுளால் படைக்கமுடியாது!   இன்னும்,  அவருடைய 'சர்வ- வல்லமை'
யைக்கொண்டு படைக்கமுடியலாம் என்றாலும்கூட அவரால் அதைச்செய்ய
முடியாது! ஆனால், அவரால் எதுவாகவும் உருமாற முடியும்!   என்றாலும் அவ
ருடைய   'சர்வ- வல்லமை'   அதற்கு அனுமதியாது!  ஏனெனில் அவரே எல்லா
வகையிலும்   "இறுதியானவர்"  என்பதால்,  அவரால்  அவரை   விஞ்சிய    எது
வொன்றாகவும் உருமாறவியலாது!   ஆனால்,  ஒரேயொரு சாத்தியம் மட்டும்
திறந்திருக்கிறது,   அவரால்   அவருக்குக்  குறைவான  எதுவாகவும் உருமாற
முடியும் -  ஆனால்,  அது  அவருக்கு ஏற்ற ஒரு சவாலாய் அமையாது!  ஆகவே,
அவர்   முற்றிலும்   வித்தியாசமான,  விபரீதமானதொரு   பரிசோதனைக்குத்
தன்னை உட்படுத்திக்கொண்டார்!  அவர்  தனது "சர்வ-வியாபி" நிலையைத்
(OMNI-PRESENCE)துறந்து, "எங்குமில்லாமை" நிலையைத்(OMNI-ABSENCE)
தழுவிக்கொண்டார்!  வேறு சொற்களில் சொன்னால்,  அவர் தன்னை முற்றி
லுமாக மறைத்துக்கொண்டுவிட்டார்!அதுவே அவருக்கு ஏற்ற சவாலாக ஆகி
யது போலும்!

ஒரு   'விதை'  யானது  விருட்சமாக  மாறுவதைப்போல,  கடவுள்  இப்பிரபஞ்ச
மாக மாறியுள்ளார். விதையின்  'மறைவு' விருட்சத்தை எழச்செய்வது  போல
கடவுளின்  'மறைவு'  பிரபஞ்சத்தை  எழச்செய்தது. விதைக்கும் விருட்சத்திற்
குமான    இடைவெளியைப் போலவே,   பிரபஞ்சத்திற்கும்    கடவுளுக்குமான
இடைவெளி (வித்தியாசம்) அளவிடமுடியாதது!  மேலும், கடவுளின் மறைவே
பிரபஞ்சத்தைத் தோன்றச்செய்தது என்பதைத்தான் கடவுளின் "எதிர்மறை-
படைப்பு" (Negative-Creation)என்று கூறுகிறேன்!

பிறகு,   விருட்சத்தினுடைய   வளர்ச்சிப் போக்கின்   ஒரு கட்டத்தில்  மலர்கள்
தோன்றுகின்றன,அதன்பிறகு பிஞ்சுகள் தோன்றுகின்றன.அதைப்போலவே
பிரபஞ்சத்தினுடைய பரிணாம வரலாற்றின் ஒரு கட்டத்தில் உயிரி தோன்று
கிறது.  அதன்பிறகு, மனிதஜீவிகளாகிய நாம் தோன்றுகிறோம்.

ஆனால்,  ஒரு  மரத்தின்  பகுதிகளான பிஞ்சுகளுக்கும்,  பிரபஞ்சத்தினுடைய
பகுதிகளாகத்திகழும்  மனிதஜீவிகளாகிய நமக்கும் உள்ள ஒருவித்தியாசம்
அவை உணர்வற்றதாய் உள்ளன; நாம் உணர்வுள்ளவர்களாய், ஆகவே நமது
மூலத்தைப்பற்றி விசாரிப்பவர்களாய் உள்ளோம் என்பதுதான்.

ஆனால்,   நம்மில் சிலர்  ( இயற்கைவாதிகள்,  பகுத்தறிவுவாதிகள்,   நாத்திக
வாதிகள், பொருள்முதல்வாதிகள்,டார்வினிஸ்டுகள்,பௌதீகவிஞ்ஞானிகள்
ஆகியோர்) வித்து இல்லாமல் விருட்சம் வந்தது என்கிறார்கள், அதாவது பிர-
பஞ்சமானது தானே தோன்றியது என்கிறார்கள்!நம்மில் சிலர் (ஆத்திகவாதி
கள்,  படைப்புவாதிகள்,  அறிவுக்கூர்மையின்-வடிவமைப்பு  வாதிகள்,  ஆகி-
யோர்)   இப்பிரபஞ்சம்   கடவுளால் படைக்கப்பட்டதாகவும்,    கடவுள் சொர்க்
கத்தில்  இருப்பதாகவும்,  அவசியமேற்படும் போதெலாம் அவர் வரலாற்றில்
இடையீடு செய்வதாகவும் கூறுகிறார்கள்!

ஆனால்,  இந்த இரு பிரிவினரிடமும் உள்ள மையப்பிரச்சினை என்னவென்-
றால், "மெய்ம்மை" குறித்த அவர்களுடைய தவறானஅணுகுமுறையேஆகும்.
இன்னும்  சொல்லப்போனால்,  அவர்களிடம்   "மெய்ம்மை"   குறித்த  அணுகு
முறை என்பதே இல்லை என்று சொல்லலாம்!

பரிணாம  வாதிகளும்,   பொருள்முதல்வாதிகளும்   வெறும்    பிரபஞ்சத்தை
(விருட்சத்தை) மட்டுமே காண்கிறார்கள், கணக்கில்கொள்கிறார்கள். விருட்
சத்தைக்கண்டு  ஏற்றுக்கொள்ளும்  இவர்கள்,  வித்து    இல்லாமல்  விருட்சம்
தோன்ற முடியாது ;   ஒன்றுமில்லாததிலிருந்து   எதுவும்   தோன்றாது      என்ற
உண்மையை மறுப்பது மடைமையே தவிர வேறில்லை! ஏனெனில், விருட்சத்
தின் மூலமான வித்தை  மறுக்கும் இவர்கள் விருட்சம் விளைவிக்கும் வித்துக்
களை மறுப்பதும் நிச்சயமல்லவா?   விஞ்ஞானி கார்ல் சாகன்(Carl Sagan)
அவர்கள்,   கடவுள் தான்   பிரபஞ்சத்தைப்  படைத்தார்   என்று      சொல்பவர்
களிடம்,   அப்படியானால்,  'கடவுள் எங்கிருந்து வந்தார்'  என்று கேட்டுவிட்டு,
'கடவுள் எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்று நாம்  சொல்வோமெனில்,
ஒரு படியை மிச்சப்படுத்தி,  பிரபஞ்சம்  எப்போதும்  இருந்து   வந்திருக்கிறது
என்ற முடிவிற்கு ஏன் வரக்கூடாது?' என ஆலோசனை கூறினார் என்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.

ஆனால்,  1500  கோடி  ஆண்டுகளுக்கு  முன்  ஒரு "பெரு-வெடிப்பு"  நிகழ்வில்  
நமது  பிரபஞ்சம்   தோன்றியதாகக்கூறப்பட்டு,  பரவலாக விஞ்ஞானிகளால்  
ஏற்றுக்  கொள்ளப்பட்ட  விஞ்ஞானக் கோட்பாட்டை  கார்ல் சாகன்  அவர்கள்

கேள்விப்படவில்லையா? அதுபோகட்டும்,  இன்னும் 280கோடி  ஆண்டுகளுக்
குப்  பிறகு,  நமது பிரபஞ்சம்,  ஒரு  "வெப்பச்  சாவில்"  (Heat Death)மடிந்து
போகக்கூடும்  என்பதாக,  1851 ம் ஆண்டிலேயே விஞ்ஞானி வில்லியம்  தாம்-
ஸன்  (William Thomson) அவர்கள்  கணித்துச்   சொன்னதையும்  கார்ல்
சாகன்  கேள்விப்படவில்லையா?  பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு  பொருளும்,
அது கேலக்ஸியானாலும், நட்சத்திரமாயினும் பிறக்கிறது, வளர்கிறது,பிறகு
முதிர்ந்து மடிந்து போகிறது; அதுபோலவே,ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பிறக்
கிறது, பிறகு  ஒருகட்டத்தில் மடிந்துபோகிறது என விஞ்ஞானிகள்தான் கூறு
கிறார்கள்!   பிரபஞ்சத்தின்  முடிவு  பற்றிய    கருத்துகளும்,   சிந்தனைகளும்
1777 ம் ஆண்டிலேயே,  பிரெஞ்சு வானவியலாளர்,    ழான் ஸில்விய்ன் பெய்லி
போன்றோரால் தொடங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், நம்முடைய தலைபோகிற பிரச்சினை,  இன்னும்  280 கோடி ஆண்டு
களில்   பிரபஞ்சம்  மடிந்து விடப்போகிறது  என்பது   பற்றியதல்ல!   மாறாக,
மனிதகுலம் இந்த 21ம் நூற்றாண்டு வரையிலாவது தாக்குப்பிடித்து நிலைக்
குமா என்பது  ஒருபுறமிருக்க,  வெறும் 70,  அல்லது 80,   அல்லது  அதிகபட்சம்
100  ஆண்டுகளே   ஆயுளைக்கொண்ட  நம்முடைய  'வாழ்காலம்'    எவ்வளவு
குறுகியது  என்பது குறித்து நாம் சிரத்தையுடன் சிந்திக்கவேண்டாமா? விஞ்
ஞானி  கார்ல் சாகன் (1934-1996),      அவர்கள் வெறும் 62 ஆண்டுகள் மட்டுமே
வாழ்ந்தார்! ஆனால், அவரோ:  " இருப்பது   இப்பிரபஞ்சம் மட்டுமே,  முன்னே
யும், இனி எப்போதும்" ("The cosmos is all that is, ever was, or
ever will be.") என்றெழுதி  புகழ்பெற்ற அவரது  "பேரண்டம்"  நூலைத்
தொடங்கினார்!  ஆனால், பிரபஞ்சம் அழிவில்லாமல் சாசுவதமாக என்றென்
றும் இருந்தாலென்ன, அல்லது அதைவிட படைப்புவாதிகள் கூறுகிற கடவுள்
இன்னும்  சாசுவதமாக,  நித்தியமாக இருப்பார் என்றால்தான் என்ன?  நம்மு
டைய  'வாழ்காலம்' குறுகியதாய் இருப்பதும் பிரச்சினையல்ல! எது முக்கிய
மெனில், நம் வாழ்வின் "அர்த்தம்" மட்டுமே !

விருட்சத்தின் அர்த்தம்,  அல்லது,  உண்மை  என்பது  அதன் வேரிலோ, அடித்
தண்டிலோ,  கிளைகளிலோ,  இலைகளிலோ தங்கியிருப்பதில்லை; மாறாக,
கனிகளில்  மட்டுமே விருட்சத்தின் இரகசியம், அர்த்தம் வெளிப்படும்!  உண்
மையில்,  விருட்சத்தைவிட  வித்துதான்  முக்கியம்!  விருட்சம் என்பது வித்து
தன்னை  மறுபடைப்பு  செய்துகொள்வதற்கான ஒரு உபாயம் அல்லது ஊட-
கம், அவ்வளவுதான்! பிரபஞ்சத்தின் இரகசியம், அல்லது, உண்மை என்பதும்
பௌதீகப்பண்புகொண்ட  அதன் எப்பகுதியிலும், தொலைவிலுள்ள  கேலக்
ஸியிலோ,  எவ்வொரு நட்சத்திரத்திலோ, அண்ட வெளியிலோ எங்கும் இருப்
பதில்லை! மாறாக, பிரபஞ்சத்தின் புதிரைத்தியானிக்கும்(Contemplating)
பிரபஞ்சத்தின்  கனி போன்ற  மனிதனின் உணர்வுப் பரிணாமத்தின் உச்சத்
தில் தான் உள்ளது!  "மரமானது அதன் கனியினால் தான் அறியப்படும்"

படைப்புவாதிகளோ, பிரபஞ்சத்தைப்பார்த்து அதன் உள்ளார்ந்த சிக்கலான
வடிவமைப்பு நேர்த்தியைக்கண்டுவியந்து  'இல்லாத' கடவுளின் 'சர்வ-வல்ல
மை'யைப்போற்றிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்!பரிணாமவாதிகளுக்கும்
படைப்புவாதிகளுக்கும் உள்ள ஒருவித்தியாசம் என்னவென்றால், பரிணாம
வாதிகள்     'வித்து  இல்லாமல்  விருட்சம்  வந்தது!'  என்கிறார்கள்.   அதாவது,
'விருட்சம்  தோன்றுவதற்கு  வித்து  எதுவும் தேவையில்லை'   எனவும்  சொல்
கிறார்கள்! இன்னும், அவ்விருட்சம் வித்துக்களை விளைவிக்கக்கூடுமே என்
பது குறித்தும் அவர்கள் சிறிதும்கருதுவதில்லை, அக்கறைகாட்டுவதில்லை.
படைப்புவாதிகளோ,  'வித்து மறையாமலேயே விருட்சம் தோன்றும்!'  என்கி
றார்கள். அதாவது, வித்தும் இருக்கிறது,  விருட்சமும் இருக்கிறது! என்கிறார்
கள்.

மொத்தத்தில், இரண்டு பிரிவினரும் மனிதஜீவிகளின்  (பிஞ்சுகள்/ காய்கள்)
முக்கியத்துவத்தையும்,  அம்மனிதஜீவிகள்  ஒவ்வொருவரின் பரிணமிக்கும்
உணர்வும் (Evolving Consciousness)வளர்ந்து முற்றிக்கனிந்து அடைய
விருக்கும்   'உணர்வின் முழுமை'  ( பிரபஞ்ச-விருட்சத்தின் வித்தைக்கொண்
டிருக்கும் கனி) யின் மகத்துவத்தையும் உணர்ந்தறியத் தவறிவிட்டனர்.

உண்மையில்,  "கடவுள்"தான் பிரபஞ்சத்தின் வித்து ஆவார்! அவர் தன்னைத்
தானே விதைத்துக்கொண்டு,  1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  பிரபஞ்ச
மாக  முளைத்தெழுந்தார்! நமது பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்
தோன்றியதோ,  அல்லது  வெறும்  5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதோ
அதுவல்ல முக்கியம்!  மாறாக,   இப்பிரபஞ்ச-விருட்சத்திலிருந்து  இறுதியாக
வெளிப்படப்போவது  'எது' என்பதே,  ஆம், பிரபஞ்ச-விருட்சத்தின்  வித்தைக்
கொண்டிருக்கும் 'கனிகள்' மட்டுமே முக்கியம்!   உண்மையில், கனிகளாகக்
கனிய  வேண்டியது மனித ஜீவிகளாகிய நாம் தான்.  ஆனால்,   நாமோ   இன்
னும் நமது உணர்வில் பிஞ்சுகளாகவே உள்ளோம். நாம் எப்போது நம் உணர்
வில்   முற்றி  'முழு-உணர்வு'  எனும் கனிந்த நிலையை அடைகிறோமோ அப்
போது   பிரபஞ்சத்தின் மூல-வித்தாகிய  'கடவுளை'  நம்முள்ளே நேரடியாகத்
தரிசிப்போம்.

தொடர்ந்து  மேலே  செல்வதற்கு முன், ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்
திக்கொள்வது நல்லது.  அது என்னவென்றால், படைப்புவாதிகள் கூறும் கட-
வுளுக்கும்,  இங்கு  நான்  குறிப்பிடும்  கடவுளுக்கும்  மாபெரும்  வித்தியாசம்
உள்ளது.  அவர்கள் கூறும் கடவுள்,  நம்பிக்கையின் கடவுளாகும்! அப்படி ஒரு
கடவுள்   இருந்தால்,  நமக்கு  சௌகரியமாகத்தான்  இருக்கும்!  அவர்,   நமது
கஷ்ட- நஷ்டங்களையும்,  பிரச்சினைகளையும்,   துன்பங்களையும் போக்கி
நம்மைக் காப்பாற்றக்கூடும்!  ஆனால், நான்  குறிப்பிடும் கடவுள் வித்தியாச
மானவர்,  நாம்  ஒவ்வொருவரும்தான்  அவரைக்  காப்பாற்றிக் கரை சேர்க்க
வேண்டும்!!

உண்மையில்,    'கடவுள்'  இல்லாமல்  எவரும்   இல்லை;    எவரும்  இருக்கவும்
முடியாது!  ஏனெனில், "உணர்வு"(Consciousness)என்பதன் ஒரு சிறு  கீற்று
கூட இல்லாமல் எவ்வொரு சிறு புழு,பூச்சியும், விலங்கினங்களும் உயிர்வாழ
இயலாது. ஆம்,புலன்களின் உணர்வுதான் விலங்குஜீவிகளின் கடவுள் ஆகும்.
ஆக, படைப்புவாதிகளின்  கடவுளை  'நம்பிக்கையின் கடவுள்'  என்றால், பரி
ணாமவாதிகள்,நாத்திகவாதிகளின் கடவுளை 'பகுத்தறிவின் கடவுள்' என்று
தான் சொல்லவேண்டும்.  அப்படியென்றால்,  நான் குறிப்பிடும் கடவுள் எத்த
கையவர் என்றால், அவரை  'முழு-உணர்வின் கடவுள்'  என்று குறிப்பிடலாம்.
'நம்பிக்கை',  'பகுத்தறிவு',  'முழு-உணர்வு'  ஆகிய இவை யாவும்   உணர்வின்
வெவ்வேறு  நிலைகளையே  குறிக்கின்றன.  ஒருவகையில், "உணர்வு"  தான்
கடவுள்  என்று  சொல்லிவிடலாம். ஆனால்,  'உணர்வு'  என்பது  ஒருபடித்தான
தல்ல என்பதால்,  ஒரு  சிறு  திருத்தத்துடன்,  "முழு-உணர்வு" , அதாவது  முழு
மையானதொரு உணர்வு தான் கடவுள் என ஐயமின்றி அறிவித்துவிடலாம்!

'கடவுள்', அல்லது, தனி முதலான அல்லது தனி முடிவான 'மெய்ம்மை' என்று
ஒன்று இருக்குமானால்,  நிச்சயம் அதை  அறிவதற்கும், அணுகுவதற்குமான
கருவியும், ஊடகமும், வழியும் இருந்தாக வேண்டும்.   அத்தகைய  உண்மை-
யை,மெய்ம்மையை அறியக்கூடிய ஒன்று   அம் மெய்ம்மையில் பங்குகொள்
வதாயும்  இருக்கவேண்டும்.   அத்தகைய  ஒன்று  இப்பிரபஞ்சத்தில்  உள்ளது
என்றால், அது மனிதனிடம் உள்ள "உணர்வு" மாத்திரமே!  ஏனெனில், மனித-
உணர்வைக்கொண்டும், மனித உணர்வின் வழியாகவும்தான் ஒட்டுமொத்த
பிரபஞ்சமும்   தனது  ஒப்பற்ற  இலக்கான   "முழு-உணர்வை"  அடையவிருக்
கிறது.   இம்முயற்சியில்,  பிரபஞ்சமானது தனது  (1500 கோடி ஆண்டு) நெடிய
பரிணாமப் பிரயத்தனத்தின் பலனாக தற்போது மிகவும் முக்கியமான கட்ட
மாக மனிதனுள் சுய- உணர்வாக எழுந்துள்ளது! ஆம், பரிணாமத்தில் பரிண
மிப்பது  எது  என்றால்,  அது  "உணர்வு"  என்பது தான்.  பல்வேறு வகைப்பட்ட
வினோதமான  விலங்குயிரினங்களை உருவாக்கிடும் வழிமுறை அல்ல பரி
ணாமம் என்பது!  உயிரியல்- பரிணாமவாதிகள் வெறும் விலங்கினங்களை
மட்டுமே காண்கின்றனரே தவிர, அவ்விலங்கினங்களினூடாக படிப்படியாக
வளர்ந்தெழுகிற உணர்வின் முன்னேற்ற நிலைகளைக் காண்பதில்லை!

நம்பிக்கை, பகுத்தறிவு என்பவை மனிதன் தற்போது பெற்றுள்ள உணர்வின்
அதாவது,   'அகந்தை'   என்று சொல்லப்படும் சிற்றுணர்வின் மட்டுப்பாடான
கருவிகளாகும். அவற்றைக்கொண்டு கடவுளை அறியவும், உணர்ந்து அனுப
வம்  கொள்ளவும்  இயலாது.  ஆனால், "முழு-உணர்வு"  என்பது  மனித-உணர்
வைக்  கடந்த,  ஒவ்வொரு தனிமனிதனாலும் அடையப்படவேண்டிய இறுதி-
நிலை உணர்வாகும்.

நாம்  மீண்டும்  நமது  ஆய்வைத்தொடர்வோம்.  ஆம்,   கடவுள்  பிரபஞ்சமாக
உருமாறியுள்ளதால்,  அவர்  உலகில் உள்ளடங்கியிருப்பதாக (Immanent)ச்
சொல்லலாம். ஆனால், அதன் அர்த்தம் கடவுள் உலகினுள், ஒவ்வொரு  அணு
விலும், தூணிலும்,துரும்பிலும் இருக்கிறார்,அல்லது வசிக்கிறார் என்பதல்ல!
மாறாக,  அவரே உலகமாக,  பிரபஞ்சமாக  இருக்கிறார்  என்பதே சரியானது.
அதனால்  உடனே, பிரபஞ்சத்தையே கடவுள் என்று நாம்  கருதிவிடக்கூடாது!
ஆக,  கடவுள் பிரபஞ்சத்தில்  உள்ளடங்கியுள்ளதால், பரிணாமம் நிகழ்கிறது,
அதாவது, நமது அசலான கடவுள் ஒரு பரிணமிக்கும் மெய்ம்மையாகும்!  எவ்
வாறெனில், வித்து மறைந்து விருட்சமாக எழுந்ததும் வித்து இருப்பதில்லை!
விருட்சம் நன்கு வளர்ந்து, பூக்கள்விட்டு, பிஞ்சுகள் தோன்றி, பிஞ்சுகள் காய்
களாகி,  காய்கள்  முற்றிக் கனிகளாக மாறும் போது, அக் கனிகளுக்குள்ளே
தான் மீண்டும் வித்துக்கள் தோன்றுகின்றன!

எவ்வாறு  ஒரு மரமானது  எண்ணற்ற பிஞ்சுகள், காய்கள் வழியே கனிகளை
(வித்துக்களை)  விளைவிக்கின்றதோ,  அவ்வாறே   இப்பிரபஞ்ச-விருட்சமும்
எண்ணற்ற  மனிதப்-பிஞ்சுகளை,  காய்களை  உருவாக்கியுள்ளது.   ஆனால்,
துரதிருஷ்டவசமாக   எல்லா  மனிதப்-பிஞ்சுகளும்  காய்களாகி,   உணர்வில்
முற்றிக்கனிந்து கனிகளாக ஆவதில்லை! இதற்குக் காரணம் மனிதஜீவிகள்
சுதந்திர-சித்தம்  கொண்டவர்களாக  இருப்பதால்  அவர்கள்   தம்தம்   மனம்
போனபடி உலகியல் சார்ந்த மதிப்புகளையும், இலட்சியங்களையும்,இலக்கு
களையும்  அடைவதற்காக  தம்தம்  உணர்வைத்   தவறாகப்பிரயோகிப்பதே
ஆகும்!

நமது ஆய்வில், மேலே செல்வதற்கு முன்,  இன்னொரு விஷயத்தையும்  நாம்
தெளிவு  படுத்திக்கொள்வது  அவசியமாகும்.   நாம்  நமது  அன்றாடப்பேச்சு
வழக்கில், பல விஷயங்களை தவிர்க்கவியலாத வகையில்,  தவறான சொல்
லாடல்களைக்    கையாள்வதன்  மூலமாகத்  தலைகீழாகப் புரிந்துகொண்டு
விடுகிறோம்.உதாரணத்திற்கு, ஒரு மரமானது பூக்களை,அல்லது காய்களை
உருவாக்குகிறது,  அல்லது  தோன்றச் செய்கிறது,   அல்லது விளைவிக்கிறது
என  சாதாரணமாகச் சொல்லிச்சென்றுவிடுகிறோம். ஆனால், உண்மையில்
ஒரு மரமானது பூக்களை, அல்லது  காய்களை  உருவாக்குவதோ, விளைவிப்
பதோ  இல்லை.   மாறாக,  அம்மரமே தான் பூக்களாகவும்,  பிறகு பிஞ்சுகளா
கவும்,  பிறகு காய்களாகவும்,  கனிகளாகவும் மாறுகின்றது!  ஏனெனில், இவ்
வழியாகத்தான்  ஒரு மரமானது  தனது  இலக்கை,  முழுமையை,  நிறைவை,
அல்லது உய்வை அடைகிறது!  ஒரு மரம் ஏன் பூக்கிறது, காய்க்கிறது என்கிற
கேள்வியை  நாம்  என்றாவது  நம்முள்  கேட்டிருக்கிறோமா?  அதாவது, எந்த
மூலத்திலிருந்து  மரமானது  தோன்றியதோ  அந்த மூலத்தை  "மறுபடைப்பு"
செய்வதற்காகத்தான் ஒரு மரம் பூக்கிறது, காய்க்கிறது,கனிகளாகிறது!

இப்போது,  எவ்வகையில்  நாம்  நமது  பழைய  சொல்லாடல்களின் மூலமாக
தவறான  புரிதலை  அடைகிறோம்  என்பதைப்பார்ப்போம்.  "ஒரு மரமானது
பூக்களை,  அல்லது  காய்களை  உருவாக்குகிறது,  அல்லது   தோன்றச்  செய்
கிறது, அல்லது விளைவிக்கிறது"  எனும்  சொல்லாடலானது,  மரத்தை  மைய
மான, பிரதானமான நிஜமாகவும் அம்மரம் விளைவிக்கும் பூக்கள்,  காய்கள்,
கனிகள் யாவற்றையும் இரண்டாம்பட்சமானவையாகவும்,முக்கியத்துவமற்
றவையாகவும்  கருதுமாறு  செய்துவிடுகிறது!  அதே நேரத்தில், பயன்பாட்டு
நோக்கில்,  நமக்கு  மரமும்,  அதனுடைய  பூக்கள், காய்கள்,  கனிகள்  யாவும்
முக்கியமானவையாகத்தெரிவது என்பது வேறு விஷயம், இதே பயன்பாட்டு
நோக்கில்,   விதைகளும்   நமக்கு  அதி  முக்கியமானவையாகத் தெரிவதால்
தானே நாம் விதைகளையும்  சேகரித்து பத்திரப்படுத்தி வைக்கிறோம்!

உண்மையில்,  மரத்திற்கும்  காய்களுக்கும்  உள்ள தொடர்பைப் போன்றதே
பிரபஞ்சத்திற்கும்   மனிதஜீவிகளாகிய   நமக்கும்    உள்ள   தொடர்பும். நாம்
பிரபஞ்சத்தின்  ஏதோ ஒரு மூலையில் (கிளையில்) தோன்றிய முக்கியத்துவ
மற்ற  (விஞ்ஞானிகள் சொல்வது போல விபத்து போன்ற) விளைபொருட்கள்
அல்ல.  மாறாக, பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சியுமான நிலைகளாவோம்!
இன்னும் சொல்லப்போனால், பரிணாமரீதியாக,பௌதீக-பிரபஞ்சத்தைவிட
அதன்  நீட்சியும் வளர்ச்சியுமான உணர்வுபெற்ற மனிதஜீவிகள் தான் அதிக
முக்கியத்துவம்  உடையவர்கள்!   எவ்வகையில்,  பழைய  சொல்லாடலானது
மரத்தை  மையப்படுத்துவதாயுள்ளதோ,  அதே போல,  இங்கு, பிரபஞ்சத்தை
மையப்படுத்துவதாயும்,   பிரதானப்படுத்துவதாயும்,   மனித   ஜீவிகளையும்
மனித உணர்வின்  மகத்துவத்தையும்  கணக்கில் கொள்ளாமல்   உதாசீனப்
படுத்தும்படியும் செய்துவிடுகிறது. இத்தகைய தவறான,தலைகீழ்-புரிதலை
அதிவிஞ்ஞான உண்மையென பிரபலப்படுத்திய விஞ்ஞானிகளுள்,பௌதீக
விஞ்ஞானி ஸ்டீபன் வெய்ன்பெர்க் அவர்களும், பரிணாமவாதிகளான டார்-
வின், டாக்கின்ஸ், மற்றும்  ஸ்டீஃபென் ஜெ. கோவ்ல்டு ஆகியோரும் பிரதான
மானவர்கள் எனலாம்!

இந்த விஞ்ஞானிகளைப்பொறுத்தவரை,  அவர்கள் படைப்பையும்,  'கடவுள்'
என்று  குறிப்பிடப்படும்   படைப்பாளியையும்  மறுக்கிறார்கள்,  மிகத்  தீவிர
மாக எதிர்க்கிறார்கள்!   ஆனால்,  அவர்கள்  முன்வைக்கும்  மாற்றுக்களான,
கடவுளின் இடத்தில்  'இயற்கை'யை வைப்பதும், படைப்புக்குப் பதிலாக 'பரி
ணாமத்தை' வைப்பதும் எவ்வகையிலும் பொருத்தமாக இல்லை! அவை எவ்
வகையிலும் நமது புரிதலை மேம்படுத்திடவும் இல்லை, முழுமைப்படுத்திட
வும் இல்லை!

முதலிடத்தில்,    இப்பிரபஞ்சம்  ஏன், எதற்காகாக,  எதிலிருந்து  தோன்றியது?
உயிரற்ற   சடப்பொருளிலிருந்து  "உயிர்"   ஏன்,  எதற்காகாகத்  தோன்றியது?
பிறகு, உயிரிலிருந்து மனம் அல்லது "உணர்வு"  ஏன்,  எதற்காகாகத் தோன்றி
யது?மனிதவாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு தான் என்ன?என்பதற்கான

பதில்களைக்கண்டறிந்து  சொல்லாமல்;  பிரபஞ்சம்,  உயிர், உணர்வு   ஆகிய
இவை 'எவ்வாறு'  தோன்றியிருக்கக்கூடும்  என்பதான மேலோட்டமான ஆய்
வுத் தரவுகளையும்,  விபரங்களையும்கொண்டு, ஊகம் மற்றும்  அனுமானங்
களைக்கொண்டு அளிக்கப்படும் விளக்கங்கள் பயனற்றவை!

டார்வினின்  பரிணாமக்  கோட்பாடு  என்பது  என்ன?   மூல-முதல்   உயிரின்
தோற்றத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல்,அம்முதல் உயிரியிலிருந்து வெவ்
வேறு  உயிரினங்கள்  எவ்வாறு   பரிணமித்தன என்பது  பற்றிய டார்வினின்
பயனற்ற விளக்கங்களைத் தவிர அடிப்படைப்புரிதலுக்குரிய வேறு அம்சங்
கள் எதுவும் அவருடையகோட்பாட்டில் இடம்பெறவில்லை! மாறாக, டார்வின்
எடுத்தியம்பிய மாபெரும் 'விஞ்ஞான' உண்மைகள் இவைதான்:
   
    * பரிணாமம் குறிக்கோளற்றது.
    * பரிணாமம் திசையற்றது,அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்
      செல்லாது.
    * சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.

இம்மூன்று விஷயங்களும் தவறானவை, ஏனெனில்,  அவை  பரிணாமத்தை
மறுப்பவை,    பரிணாமத்திற்கு    விரோதமானவையாகும்!      இந்நிலையில்,
டார்வின் கூறிய, 'இயற்கைத்தேர்வு' எனும் விஷயம் இன்னும் அபத்தமானது!
அதாவது, உலகையும், அதில் உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு
கடவுளும்  இல்லை  எனும்பட்சத்தில்,  அந்த   இடத்தை   'இயற்கை'  எடுத்துக்
கொள்ள இயலாது!  இயற்கை என்பது உள்ளது;  ஆனால்,  அதனால் எதையும்
தேர்வு   செய்ய  இயலாது   என்பதுதான்  உண்மை  நிலையாகும்.  ஏனெனில்,  
இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்  வெவ்வேறு அல்ல!  இயற்கையானது உயிர்-
ஜீவிகளுக்கு  முந்தையதுதான் என்பதால், அதனால்  'தேர்வு' செய்யவியலும்
என்பது  தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள் உண்மை
யில்  இயற்கையின்  கிளைப்பு  போன்ற  வளர்ச்சி நிலையே (out-growth)
ஆகும்.  மேலும்,  இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்   வேறு  வேறானவை அல்ல
என்பதாலும், அதிமுக்கியமாக,பரிணாமத்திற்கு நோக்கமும்,குறிக்கோளும்
உள்ளது என்பதாலும்; "வலியதே(அல்லது பொருத்தமானதே)வாழும்","உயிர்-
பிழைப்புக்கான போராட்டம்"    போன்ற     மேலோட்டமான    விஷயங்களை
பரிணாமப்-பேருண்மைகளாகச் சித்தரிப்பது பிழையானதாகும்.

டார்வினிய  பரிணாமம்    உயிரியல்  கோளத்திற்கு  மட்டுமே  பொருந்துவது,
அதிலும்,  அதனால்  உயிரியல் கோளத்தையும்கூட  முழுமையாக  விளக்கிச்
சொல்லிவிட முடியாது! டார்வினிய பரிணாமம் உயிரினங்களின் மேலோட்ட
மான மாற்றத்தையும், மாறுபாட்டையும் (Variation)பற்றியது மட்டுமே!

ஆனால், அசலான பரிணாமம் என்பது(எவ்வாறு தோன்றியது என்பதே தெரி
யாத)   ஒரு   மூல-முதல் உயிரி   எவ்வாறு  பல்வேறு வகைப்பட்ட   உயிரினங்
களாக மாற்றம் பெற்றது என்பதைப்பற்றியதல்ல! முக்கியமாக, பரிணாமம்
என்பது  ஒன்று  இன்னொன்றாக,  அந்த  இன்னொன்று  வேறொன்றாக, இவ்
வாறு  முடிவேயில்லாத ,  நோக்கமற்ற,  குறிக்கோளற்ற,  இலக்கற்ற பயணம்
அல்ல!

மேலும், பரிணாமமானது மிகக்குறிப்பான தொலைவானதொரு இலக்கைக்
கொண்ட இயக்கமாதலால், அது ஒரு குறிப்பான திசையில், அதாவது கட்டம்
கட்டமான, உயர்வளர்ச்சி நிலைகளின் வழியாக அது தனது இலக்கு நோக்கி
முன்னேறிச்செல்வதாய் உள்ளது! ஏற்கனவே நான் சொல்லியபடி, நான் முன்
வைக்கும் பரிணாமம் வித்தியாசமானது,  உயிரியல் தளத்தை உள்ளடக்கிய
தும்,  இன்னும்  அனைத்து தளங்களையும் ஒருங்கிணைப்பதும் கடந்து செல்
வதுமானது! நான் சொல்லுகிற பரிணாமம் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்தே
தொடங்கிவிடுகிறது. நான் சொல்லுகிற பரிணாமம் படைப்புப்பூர்வமானது;
படைப்பு பரிணாமபூர்வமானது.பரிணாமம் என்பது எவ்வொரு கட்டத்திலும்
நிலையிலும் படைப்புப்பூர்வமானது. ஆம்,பரிணாம நிகழ்வுப்போக்கின் ஒவ்
வொரு கட்டத்திலும்,  பண்பு-நிலை மாற்றத்திலும்,  ஒவ்வொரு வளைவிலும்,
திருப்பத்திலும் அது புத்தம்-புதியது, முன்-மாதிரியற்றது! ஆக, நோக்கமற்ற,
குறிக்கோளற்ற, இலக்கற்ற; இன்னும், உயர்-வளர்ச்சியற்ற, திசைகளற்ற ஒரு
இயக்கத்தை நாம் பரிணாமம் என்றழைக்கமுடியாது! அதாவது, குறிக்கோள்,
இலக்கு,நோக்கம், உயர்-வளர்ச்சி ஆகியவற்றை மறுக்கின்ற,  இவை எதுவும்
இடம்பெறாத டார்வினிய  பரிணாமம்,  உண்மையில் பரிணாமம்  பற்றியதே
யல்ல.   மாறாக,   டார்வினுடையது,    உயிரினங்கள்    உட்படுகின்ற   வெறும்
மேலோட்டமான மாற்றங்களையும், மாறுபாடுகளையும்  விளக்கும்  மிகவும்
மட்டுப்பாடான கோட்பாடேயாகும்!

டார்வினின் தத்துவம்,  'சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.'
என்பதை அடித்தளமாகக்கொண்டது.அதாவது டார்வின் ஒரு பொருள்முதல்
வாதியும்,  இயற்கைவாதியும்,  சுருக்கல்வாதியும்,  நாத்திகவாதியும் ஆவார்!
'சடப்பொருள்தான்  அனைத்து  இருப்பின் அடித்தளம்'  என்பது  உண்மையே
என்று  சொல்லலாம்,  அதாவது,   சடப்பொருளே  சடப்பொருளுக்கு ஆதாரம்,
அல்லது அடித்தளம் என்பது உண்மையாயிருந்தால்!  அதாவது,  நாம்  இப்பிர
பஞ்சதிலுள்ள  அனைத்தையும் - புழு,  பூச்சி,  செடி,  கொடி, மரம் ,  மட்டை, ஈ,
எறும்பு, யானை, மனிதன்  என எல்லாவற்றையும்;  இன்னும்,   பூமி,  சந்திரன்,
சூரியன், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள் போன்ற இவைகளின் தொகுப்பான
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் பொருளின் ஆகச் சிறிய அடிப்படை அணுத்
துகள்களுக்குச் சுருக்கிக் காணலாம்!  ஆனால்,  அணுத்துகள்களை  எதற்குச்
சுருக்குவது?   அணுத்துகள்களைச் சுருக்கினால் என்ன கிடைக்கும்?  எதுவும்
கிடைக்காது!  ஏனெனில், பொருள் (அணுத்துகள்கள்)  சுருக்கப்படுவதற்காக
தோன்றியது அல்ல; மாறாக, விரிக்கப்படுவதற்காகத் தோன்றியதாகும்!

பொருள் ஏன் பரிணமிக்கிறது?அதாவது, பொருள் ஏன் பரிணமிக்கும் பொரு
ளாய்   விளங்குகிறது?   இயற்கை  என்பது   நிரந்தரமான  ஒரே  தன்மையை,
அல்லது சாரத்தைக்கொண்ட ஒன்றல்ல!  இயற்கையின்  இயற்கை எத்தகை
யது?     இயற்கை  என்பது  ஒரு  இயக்கமாகும் -  அது  தனது  அசலான  இயற்
கையை    நாடிச் செல்கிறது!    (Nature seeks its own true nature).
அந்த  வழிமுறையைத்தான்  நாம்  பரிணாமம் என்கிறோம்.  இயற்கையின்-
உலகில்    நிகழும்   விஷயங்களை,   நிகழ்வுகளை   இயற்கையானது   என்று
குறிப்பிடுவது    வழக்கத்தின் பாற்பட்டது,     புரிந்து  கொள்ளப்படக்கூடியது,
மேலோட்டமானது, ஆகவே அது பிழையானது!    இன்னும்,    இயற்கையானது
என்பது இறுதியானதல்ல!   முதலிடத்தில்,   இயற்கையின் தோற்றம் அல்லது
தொடக்கம் என்பதும்  இயற்கையானதல்ல!  மாறாக, அது இயற்கையல்லாத
வேறொரு மெய்ம்மையின் மாறியதொரு வடிவமே,விளைவே ஆகும்!ஆகவே
இயற்கையை, உலகை அல்லது பிரபஞ்சத்தை, அல்லது பௌதீகச்  சடப்பொ
ருளை(இவையனைத்தும் ஒன்றுதான்; ஆகவே இவை எதையும்) முதன்மைப்
படுத்தவோ, அடிப்படை அம்சம் எனக்கொள்ளவோ முடியாது!

பிரபஞ்சம்  ஒரு  'பெரு(ம்)-வெடிப்பில்'  தோன்றியதாக  விஞ்ஞானம் சொல்கி
றது; அப் பெரு-வெடிப்பைத் தொடர்ந்து  நிகழ்கின்றவைகளை நாம் நிகழ்வு
கள்  அல்லது  சம்பவங்கள் என்று  சொல்வதில்  தவறில்லை;  ஆனால், பெரு-
வெடிப்பு என்பது பிற நிகழ்வுகளைபோன்ற ஒரு நிகழ்வு அல்ல; மாறாக, அது
ஒரு விசேடமான படைப்பு! அதாவது, படைப்பாளியே( மூல-நிஜம்) தன்னைத்
தானே உட்படுத்திக்கொண்ட படைப்பு!  அதே நேரத்தில்,  இது படைப்புவாதி
களின்  கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டு அவரால்  பராமரிக்கப்படும்
படைப்பு அல்ல!

பூமியில் உயிர் தோன்றியது  இயற்கையான  ஒரு நிகழ்வோ,  அல்லது சாத்தி
யப்பாடுகளை  மீறி  நிகழ்ந்துவிட்டதொரு விபத்தோ அல்ல! அதே நேரத்தில்,
அது,   கடவுளால்   திட்டமிட்டு   வடிவமைக்கப்பட்டு   படைக்கப்பட்டதுமல்ல!
இதே போல், இப்பிரபஞ்சமும், உயிரும், உணர்வுள்ள மனிதனும், பிறவனைத்
தும்   கடவுளால்   திட்டமிட்டு  வடிவமைக்கப்பட்டு படைக்கப்பட்டவையல்ல!
ஏனெனில்,  நாம்  குறிப்பிடுகின்ற  கடவுள்  தன்னை விதையாக விதைத்துக்
கொண்டு மறைத்துக்கொண்டவர்,   அதாவது,  விதை  மரத்தை   வடிவமைப்
பதோ, படைப்பதோ கிடையாது!

பிரபஞ்சம்,  உயிர்,  உணர்வுள்ள மனிதன் தோன்றியது இயற்கையான நிகழ்
வுமல்ல,  கடவுளால்   திட்டமிட்டு  வடிவமைக்கப்பட்டு  படைக்கப்பட்டவையு
மல்ல என்றால், பின் எவ்வாறு இவை தோன்றின? பிரபஞ்சம், இயற்கை, சடப்
பொருள் என்று இவற்றை எவ்வாறு அழைத்தாலும், இவை தானே தோன்றிட
முடியாது!    "சடப்பொருளுக்கு   தன்னில் தானே தோன்றுவதற்கான ஆற்றல்
உண்டு" எனவும், "சக்தி அல்லதுஆற்றல்தான்சடப்பொருளின் சாரம்" எனவும்
"ஆகவே,    பொருளை  அல்லது  சக்தியை  நாம்  'கொடுக்கப்பட்ட'   (Given)
மூல-முதல்  அம்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்" எனவும், பொருள்முதல்
வாதிகளும், ஒரு சில விஞ்ஞானிகளும், இயற்கைவாதிகளும் கருதலாம்.

ஆனால், ஒரு பெரு-வெடிப்பில் தோன்றியதாக விஞ்ஞானிகளால்   சொல்லப்
படுகின்ற   பொருள் (=அணுத்துகள்கள்)  தொடர்ந்து   பரிணமிக்கும்   பொரு
ளாக    இருப்பதால்,   அதாவது அணுத்துகள்கள் பல்வேறு கட்டமைப்புகளில்
(Structures)அமைந்து  உயிர், மனம் அல்லது உணர்வு ஆகிய பரிமாணங்
களை     வெளிப்படுத்தும்   வகையிலான   ஊடகமாகச்      செயல்படுவதால்,
பொருளை, "மூல-முதல் அம்சமாக"க் கொள்வதியலாது. முக்கியமாக பொரு
ளானது (எப்போதும்)பிறிதொரு  அம்சத்தைச் சுட்டி நிற்பது,  தன்னில் தானே
முழுமையான அம்சமாக அது இல்லை என்பதையே காட்டுகிறது!அப்படியா
னால்,பொருள் என்றால் என்ன?  அது  எதைக் குறிக்கிறது என்றால், பொருள்
என்பது, உணர்வின் ஆகச்சுருங்கிய  அடி-மட்ட நிலையை,   அதாவது  உணர்
வற்ற    தன்மையை    பிரதிநிதித்துவம்   செய்வதாயுள்ளது!    அதாவது    ஒரு
பேருணர்வின்   ஆகச் சுருங்கிய  நிலையே பொருளாகும்.  ஆகவேதான் அது
சடமாக, உயிரற்ற,உணர்வற்ற  ஒன்றாக விளங்குகிறது! அதாவது, பொருளா
னது   வேறொரு  மெய்ம்மையின்  சுருங்கிய  வடிவம்  என்பதால், அதற்கென
தனித்த   அர்த்தமோ,  சாரமோ,  உள்ளீடோ  எதுவும்  கிடையாது!   பொருளுக்
கான  அர்த்தம் அதனுடைய பொருண்மையை(பொருள்-தன்மையை)  மீறிய
தொரு   அம்சத்தைச் சார்ந்தே  இருப்பதாகும் !   ஆகவேதான்,  பொருளானது
'உயிரை"     வெளிப்படுத்தும்,     தாங்கும்     வகையிலான   கட்ட(ட)மைப்பில்
(=உடலாக)  தன்னை  திரட்டிக்கொண்டது!  இவ்வாறு உயிரைத் தாங்குவதற்
கான  பாத்திரமாக மாறுவதற்கான நோக்கம் உணர்வை எட்டுவதற்காகவே
ஆகும்.   உணர்வை  எட்டும் வழிமுறையில்,  உயிர் என்பது ஒரு முக்கியமான
படிக்கல் ஆகும்.

உயிர் என்பது, பௌதீகச்சடப்பொருளைப் பயன்படுத்திக்கொண்டு வெளிப்
பட்ட   அபௌதீகப் (Non-Material) பரிமாணம் ஆகும். மேலும், உயிர் என்
பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது கட்டமைப்பின்
உச்சியில்  எழுந்த,  ஒருமையப்பட்ட ஒரு  தனிப்பண்பு (Life is discrete
particles of matter unified and individualized.)ஆகும்!   அதா
வது, யாதொரு மையமும்   இல்லாமல்   இயங்கும்   பிரபஞ்சத்தினுள்,     தனி-
மையம் கொண்ட ஒரு ஜீவியாக எழுந்த புதிர்தான் 'உயிர்' ஆகும்!  உயிர், அது
ஒரு   சிறு  புழுவாக  இருந்தாலும்,   என்ன தான்  அது    சுற்றியுள்ள  உலகைச்
சார்ந்திருந்தாலும், அது இவ்வுலகினுள்  தன்னளவில் இன்னொரு உலகமாக,
பண்பினடிப்படையில்  இவ்வுலகிலிருந்து முற்றிலும் வேறானதாய்த்திகழும்
அற்புதம் ஆகும்!

மனிதன்  என்பவன்,  உயிருள்ள  ஜீவியும்,  அணுத்துகள்களின் ஒன்றிணப்பு
மற்றும் ஒருமையப்பட்ட தன்மையையும்  உணர்ந்த உணர்வு ஆவான்!
(A human being is a living entity became conscious of
matter's unification and individualization in his consci-
ousness)

நம்முடைய 'புதிய ஆதியாகமம்' படி, ஆதியில் மூல-மெய்ம்மை ஒன்று  இருந்
தது;    அது   தனது  சாரத்தில்,  'சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை'    யாகத்
திகழ்ந்தது. அது முழுமையின் முழுமையாக, ஆரம்பமும் முடிவுமின்றி நித்தி
யமாய் நிலவியது!  அதன் புனிதத்தை  'புனிதம்'  என்ற சொல்லால் கூட்டவும்
முடியாது,  குறைக்கவும் முடியாது!  இந்த 'மூல-மெய்ம்மையை' "கடவுள்" என
நாம் குறிப்பிடுவோமெனில், நம்முடைய கடவுள் 'எல்லாம் அறிந்தவர்' அல்ல,
ஏனெனில்,  அவருக்கு  எதையும்  அறிய  வேண்டிய  தேவை எதுவும் இல்லை!
அனைத்து அறிவையும் கடந்தவர் அவர்!   இதைப்போலவே,  அவர்  'எல்லாம்
வல்ல' வரும் அல்ல!  ஏனெனில்,  அவர்  அனைத்துத் தேவைகளையும் கடந்த
வர்!  ஏற்கனவே  குறிப்பிட்டோம்,  கடவுள்  பிரஞ்சத்தையோ, அதிலுள்ள உயி-
ரையோ,  மனிதனையோ  படைக்கவில்லை.  மாறாக,  அவரே  பிரபஞ்சமாக
வும்,அதிலுள்ள அனைத்துமாகவும் மாறினார் என்றோம்.ஆனால், அதில் ஒரு
சிறு  திருத்தத்தை,   துல்லியம் வேண்டிச் செய்திடுவோம்.

அதாவது,   கடவுள்  பிரபஞ்சமாக  உருமாறவேண்டும்   என்று    எண்ணியோ,
திட்டமிட்டோ,   விரிவாக வடிவமைத்தோ  எதையும்  செய்யவில்லை!   கடவு-
ளைப்பொறுத்தவரை,  அவர்  தன்னை ஒரு விதையாகச் சுருக்கிக்கொண்டு
தன்னைத் தானே  விதைத்துக் கொண்டார்,   அவ்வளவுதான்,   அதற்கு மேல்
அவருக்கு எதுவும் தெரியாது! அவ்விதை  முளைத்து பிரபஞ்சமாக எழும் என்
பதோ,  அதில்   உயிர் தோன்றக்கூடும்  என்பதோ,  பிறகு, உயிரியல்  பரிணா
மத்தின்  உச்சமாக,  சுய-உணர்வுகொண்ட மனிதஜீவி வெளிப்படுவான் என்
பதோ, எதுவும் அவருக்குத் தெரியாது!

உண்மையில்,   படைப்பு    படைப்புக்காக  இல்லை,      மனிதனும்  தனக்காக
இல்லை!  மூல-மெய்ம்மை   அல்லது   கடவுளைப்பொறுத்தவரை,  தன்னுடன்
தான் மேற்கொண்ட, தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட(அதாவது முத-
லீடு செய்துகொண்ட) பரிசோதனையும், அதிலிருந்து தன்னை முழுமையாக
மீட்டெடுத்துக் கொள்வதும்  மட்டுமே  முக்கியம் -    இடையில்     என்னென்ன
விளைகிறது என்பதல்ல! கடவுள் படைப்பைச்செய்திட எண்ணியதுமில்லை!
அதில் மனிதன் தோன்றிடுவான் எனவும் அவர் எதிர்பார்க்கவில்லை! மனித
னுக்கு  ஏற்படும்   அற்பமான அசௌகரியங்களையும்,  அபத்தமான   பிரச்சி
னைகளையும் அவர் எதிர்நோக்கிடவில்லை! தன்னையுணராததினால் மனி
தனைப்பீடித்திடும்  அச்சத்திலிருந்தும்,   மரண  பயத்திலிருந்தும்,     அவனது
அன்றாட  வாழ்வில்   நேரிடும்    விபத்துகளிலிருந்தும்,   இழப்புகள்    மற்றும்
துன்பங்களிலிருந்தும்;  நோய்  நொடிகளிலிருந்தும்  மனிதனைக்காப்பாற்று
வது  கடவுளின்  பணியல்ல!  மனிதர்களுக்கிடையே  எழும்  சண்டை சச்சரவு
களைத்தீர்ப்பதோ, அல்லது மனிதனது தீயசெயல்களை,பாவங்களைப் பட்டி
யலிட்டு இறுதி நாளில் தீர்ப்பு வழங்குவதோ கடவுளின் வேலையல்ல!   ஏனெ
னில், படைப்பு என்பது திட்டமிட்ட படைப்பாக்கம் அல்ல! மாறாக, அது தவறு
களைத் திருத்தியமைத்து, மட்டுப்பாடுகளை மாற்றியமைத்து (Trial and
Error)குறித்த இலக்கு நோக்கி  முன்னேறிச்செல்லும் பரிணாம வழிமுறை
யாகும்!

ஒருவகையில்,  இயற்கையின் உலகில் விலங்கினங்களுக்கிடையே நிகழும்
குரூரங்களையும்,  உலகில்  காணப்படும்  தீமைகளையும்  சுட்டிக்காட்டிடும்
நாத்திகவாதிகள்,    எவ்வாறு    பூரணமானவரும்,      கருணைமிக்கவருமான
கடவுள்,  தீமைகளையும் குரூரங்களையும் அனுமதித்தார் என குற்றம்சாட்டி
கடவுளை மறுப்பதற்கான ஆயுதங்களாகக் கொள்வதற்கும்;  மேலும்,  பரந்த
பிரபஞ்ச இயற்கையின்   பாராமுகமான  (Indifference)  தன்மையைக்
குறிப்பிட்டு,   வாழ்க்கை   எவ்வளவு  அபத்தமாகவுள்ளது  என   இருத்தலியல்
வாதிகளும்,  விஞ்ஞானிகளும்,  சாமானியர்களும்  குறைபட்டுக்கொள்வதற்
கும்,  அவநம்பிக்கை கொள்வதற்கும் காரணம், படைப்புக்கும், கடவுளுக்கும்
நேரடிச் சம்பந்தம்  இல்லை;  கடவுள்   படைப்பைச் செய்யவில்லை    என்கிற
அதிர்ச்சியூட்டும் அந்நியப்படுத்துகிற உண்மையே ஆகும்!!

இதற்குக்காரணம்,  'படைப்பு'  என்பது  கடவுள்  தன்னை ஒளித்துக் கொண்ட
தில் (மறைத்துக்கொண்டதில்)தொடங்குகிறது; பரிணாமம் என்பது (ஒளிந்து
கொண்ட) கடவுளைத்தேடிக்கண்டு பிடிக்கும் வினோதமான கண்ணாமூச்சி
ஆட்டமாகத்தொடர்கிறது என்பதுதான்! இவ்விபரீத ஆட்டத்தில் கண்களைக்
கட்டிக்கொண்டு கடவுளும் நம்முடன் இணைந்து தன்னைத் தேடிக்கொண்டி
ருக்கிறார்.   அதாவது,   கடவுளும்   நம்முடன்    இணைந்து   பரிணமிக்கிறார்!
கடவுளைப்பொறுத்தவரை, அவர் நம்மைக்கண்டுபிடித்துவிட்டார். அதாவது
நாம்  பரிணமித்துவிட்டோம்!    நம்மில்  ஒரு   சிலரைத் தவிர,   இன்னும்  நாம்
அவரைக் கண்டு பிடிக்கவில்லை!  நாம்  ஒவ்வொருவரும்  கடவுளைக்கண்டு
பிடிக்கும்வரை, கடவுள் நமக்கு இல்லை! இந்த ஒட்டுமொத்த ஆட்டமும் கடவு
ளுடையது, அதாவது , கடவுள் தான் "மையம்".   இந்த  உண்மையைப்  புரிந்து
கொள்ளாதவரை, நம் வாழ்வு மையமற்றதே, அர்த்தமற்றதே, நிறைவற்றதே,
பயனற்றதே!

டார்வினிலிருந்து டாக்கின்ஸ் வரை, பரிணாமம் குறிக்கோளற்றது, இலக்கற்
றது என்று குறிப்பிடுவதற்குக் காரணம்,  சடப்பொருளை அவர்கள் அடி நாத
மான  மெய்ம்மையாக,  மையமான உண்மையாகக்  கொண்டுவிட்ட மட்டுப்
பாடே ஆகும்!உயிரியலை பௌதீகத்திற்கும், உணர்வை மூளையின் செயல்
பாட்டிற்கும்  சுருக்கிக் காண்பதை   சாதனையாகக் கருதும் இவர்களுடைய
மூளைகளுக்கு  சடப்பொருளுக்கும், உயிருக்கும்;   விலங்கிற்கும், மனிதனுக்
கும்    இடையே   பெரிய  வித்தியாசம்   எதுவும்  தெரிவதில்லை!   சடப்பொரு
ளுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தைப்  புரிந்துகொள்
ளத இயலாதவர்கள் எவ்வாறு முழு-உணர்வின் (கடவுளின்) மகத்துவத்தைப்
புரிந்துகொள்ள இயலும்?

உண்மையில்,   நாம்   ஒன்றும்   படைப்புவாதிகளது  கடவுளை  பின்-கதவின்
வழியாக வீட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கவில்லை!   ஒரு மரத்தின்  கனி
அம்மரத்திற்கு அந்நியமாயிருப்பதில்லை!  நான் சொல்லும் கடவுள் பிரபஞ்ச
விருட்சத்திலிருந்து வெளிப்படும் பரிணாமக் கனியாகும்!    மனிதஜீவி தான்
பிரபஞ்ச விருட்சத்தின் உணர்வுப் பிஞ்சு ஆவான்.   மனிதன்  தன்  உணர்வில்
முற்றிக்  கனியாவதில் தான்  பிரபஞ்சத்தின்  முழுமையும், நிறைவும்; மனித
னுடைய முழுமையும், நிறைவும்; முழு-உணர்வாகிய கடவுள் தன்னை திரும்
பச் சந்திக்கும் வட்டம் முழுமை பெறும்!

அணுத்துகள்கள் விரிந்து (பரிணமித்து) பேரண்டமாகவும், அதனுள் உயிராக
வும்,  மனிதனாகவும்,  மனிதனுள்  சுய-உணர்வாகவும்  வெளிப்பட்டன எனக்
காண்பதில் பொருள்முதல்வாதிகளுக்கும், சுருக்கல்வாதிகளுக்கும், மற்றும்
பரிணாம வாதிகளுக்கும்    எந்தச் சிரமமும்     இருப்பதில்லை!   அதே போல்,
உணர்வை,  மனிதமூளையின்   செயல்பாட்டிற்குச் சுருக்கிக்   காண்பதிலும்;
இன்னும்,  ஒரு உயிரியை,  ரசாயணங்களின் சேர்க்கையாகக் காண்பதிலும்,
அதையே இன்னும் சுருக்கி அணுத்துகள்களின் தொகுப்பாகக்காண்பதிலும்
அவர்களுக்கு  யாதொரு சிரமமும் கிடையாது!  ஆனால், இவர்களது பார்வை
யைச்  சற்று  மாற்றி,    பரிணாமத்தின்    தொடக்கத்தில்   இடம்பெறும்  சடப்
பொருள் (அணுத்துகள்கள்)  உண்மையில் அடிப்படையானதோ,  மூல-முதன்
மையானதோ அல்ல;   மாறாக,  பரிணாமத்தில்  மனித-உணர்வைக்  கடந்து,
இறுதியாக  வெளிப்படும்  (அல்லது வெளிப்படவிருக்கும்)   உணர்வின்  முழு
மைதான்   ஆதியும்  அந்தமுமானது,    மூலமும்  முடிவுமானது,   அதுவே  பரம்
பொருள் என்பதாகக்காணச் சொன்னால், அவர்களுக்கு ஏற்புடையதாயிருப்
பதில்லை!   ஆனால்,   இவ்வாறு   காண்பதில்,   எவ்வித    தருக்கக் குலைவும்,
பிழையும், இழப்பும், நஷ்டமும் ஏற்பட்டுவிடாது!  அதாவது, உயிரும்  உணர்வு
மற்ற     பௌதீகச் சடப்பொருள் ( அணுத்துகள்கள் )  விரிந்து      உயிராகவும்,
உணர்வாகவும் வெளிப்பட்டது என்று காண்பதைவிட,  ஒரு பேருணர்வு தான்
சுருங்கி,  உணர்வின் ஆக அடி-மட்ட நிலையான உணர்வற்ற  பௌதீகச்சடப்
பொருளாக  (அணுத்துகள்களாக)  ஆகியது.     இந்த   உணர்வற்ற   அடி-மட்ட
நிலையிலிருந்து எழுந்து மீண்டும்   உணர்வின்  முழுமையை (பேருணர்வை)
எட்டும்  வழிமுறைதான்  பரிணாமம்  என்று காண்பது தான்  சாலச் சரியான
தும் பொருத்தமானதும் ஆகும்!

ஏனெனில்,  உயிரும்   உணர்வுமற்ற  பௌதீகச் சடப்பொருளாலான சடப்பிர
பஞ்சம்,  தன்னில்  தானே  சுயம்புவாகத்  தோன்றிடமுடியும்,   ஆகவே,   'சடப்
பொருள்தான்  அனைத்து  இருப்பின் அடித்தளம்'  என்பதைவிட,  பேருணர்வு
தான் மிக எளிதாக,  தன்னில் தானே சுயம்புவாகத் தோன்றியிருக்கமுடியும்,
ஆகவே, பேருணர்வுதான் அடியும் முடியுமான மெய்ம்மை,  உண்மை என்பது
தான் மிக்கப்பொருத்தமாய் இருக்கும்!

மெலும்,   சடப்பொருள்  பரிணமித்து  உணர்வு  நிலையை  எட்ட  வேண்டுமா
னால்,  அதற்கு  நீண்ட  நெடும் பயணம்  மேற்கொண்டாகவேண்டும்.  உணர்
வற்ற சடப்பொருள் நிலையிலிருந்து மனித உணர்வை எட்டுவதற்கு  பிரபஞ்
சத்திற்கு 1500 கோடி ஆண்டுகள் ஆயின! அதே நேரத்தில், பேருணர்வு நிலை
யிலிருந்து    உணர்வற்ற   சடப்பொருள்  நிலைக்கு  கீழிறங்க  ஒரு  நொடியே
போதும்!  ஆம், உணர்விழப்பது எளிது; உணர்வு பெறுவது கடினம்!

பேருணர்வு தான் "கடவுள்"!   பேருணர்வு    தனது    உணர்வைத் துறந்த அந்த
விசேட  நிகழ்வு தான்  பிரபஞ்சத்தின்  பிறப்புக்கு  அடிப்படையாக அமைந்த
"பெரு-வெடிப்பு" ஆகும்.  துறந்த உணர்வை  மீண்டும் அடையும் வழிமுறைக்
குப்பெயர்தான்  "பரிணாமம்".    பிரபஞ்சம்  என்பது வெறும் சடப்பொருளால்
ஆனது  மட்டுமல்ல;   'உயிர்'  எனும்  பரிமாணமும்,   'உணர்வு'   எனும்   பரிமா
ணமும் வெளிப்பட்டுள்ளன.ஆகவே, 'உயிர்'  மற்றும்  'உணர்வு' ஆகிய பரிமா
ணங்களையும்   இணைத்துப் புரிந்து கொள்ளாமல்  பிரபஞ்சத்தைப்  புரிந்து
கொள்ள இயலாது!   பிரபஞ்சம்,  மனிதன்,  கடவுள்   இம்மூன்றும்   இறுதியில்
ஒன்றே! இம்மூன்றும் ஒருமைப்படுவது, சடப்பொருளில் சாத்தியமல்ல; மனி
தனின் அரை-உணர்வு அல்லது சிற்றுணர்விலும் அது நிகழ்வதில்லை; முழு-
உணர்வு  அல்லது   பேருணர்வில்  மட்டுமே  அனைத்தும் கரைந்து  ஒருமைப்
படுகின்றன!


மா.கணேசன்/3.09.2016
--------------------------------------------------------------------------

Sunday, 4 September 2016

விஞ்ஞானம் தோற்றுவிட்டது! (2)






இக்கட்டுரை  விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல.  மாறாக, விஞ்ஞானத்தின்
மட்டுப்பாடு பற்றியது.  அம்மட்டுப்பாடு வெளிப்படையாகத் தெரிவதில்லை
என்பதும்கூட      ஒருவகையில்   விஞ்ஞானத்தின்   வெற்றிக்குக் காரணமாக
அமைந்து விடுகிறது எனலாம்.

     விஞ்ஞானமானது அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே
     பதில்களைக் கொண்டிருப்பதான ஒரு மாயையைத் தோற்று
     விக்கிறது.

விஞ்ஞானம் என்பது உள்ள விஷயங்களைப்பற்றியது மட்டுமே,அவ்விஷயங்
களுக்கிடையேயுள்ள தொடர்புகளைக்கொண்டும்,ஒப்பிட்டுப்பார்த்தும், சில
விதிகளை(உ-ம். தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப்பாயும்என)க்கண்டு
பிடித்து,  சில புரிதல்களையும்,   முடிவுகளையும் கொண்டு  தனது அறிவைக்
கட்டமைக்கிறது.    இத்தகைய  அறிவினால்,   மனித  குலத்திற்கு எண்ணற்ற
பயன்கள்  விளைந்துள்ளன  என்பதில்  எந்தவித  சந்தேகமும்  இல்லை.  ஆம்,
விஞ்ஞானம் மனிதகுலத்தின் உயிர்வாழ்தலை சுலபமாக்கியுள்ளது,சௌகரி
யமிக்கதாய் ஆக்கியுள்ளது.

ஆனால்,  உள்ள விஷயங்கள் எவ்வாறு தோன்றின?  இப்பிரபஞ்சம் ஏன், எதற்
காகத்தோன்றியது?  அதில் உயிர் ஏன் தோன்றியது?   மனிதன் ஏன் தோன்றி
னான்?  அவனது வாழ்க்கையின் நோக்கம்,  இலக்கு, அர்த்தம்  என்ன என்பது
பற்றியெல்லாம்    அது   உருப்படியாக   எதுவும்  சொல்ல வில்லை!    இதுதான்
விஞ்ஞானத்தின்  மாபெரும்  மட்டுப்பாடு  ஆகும்.   விஞ்ஞானத்தின்    மட்டுப்
பாடுகளை  வெளிச்சத்திற்குக்கொண்டுவரும் அதேவேளையில், மிக அடிப்-
படையானதும்  முக்கியமானதுமான கேள்விகளுக்கான பதில்களைப் பெறு
வதற்காக,   நாம்  நேரடியாக  மதத்திற்குத் தாவிட முடியாது.   மதத்திடம் சில
பதில்கள்,  அரிய உட்-பார்வைகள்   உள்ளன    என்றாலும் அவற்றை எல்லோ
ராலும் எளிதாகப்புரிந்து கொள்ள இயலாது!

உதாரணத்திற்கு, உயிர்   எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு விஞ்ஞான
மும், மதமும் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

       "மிகவும் சக்திவாய்ந்த ரசாயணமானது , தன்னைத்தானே மறு-பதிப்பு
         செய்து கொள்ளும் மூலக்கூறிணை, அதாவது முதல் உயிரை உருவாக்
         கியதாக எண்ணப்படுகிறது"
         என்று விஞ்ஞானம் ஊகமாகக்கூறுகிறது.

        "கடவுள் தான் பிரபஞ்சத்தையும், அதில் உயிரையும் படைத்தார்"
         என்று மதம்  அறுதியிட்டுக்கூறுகிறது.

ஆனால்,    இந்த  இரண்டு   கூற்றுக்களுக்கும்  பெரிதாக  என்ன  வித்தியாசம்
உள்ளது?   ஒன்று     இயற்கையை    மூலமாகக்  கருதுகிறது;      இன்னொன்று
கடவுளை   மூலமாகக் கருதுகிறது.    இயற்கை  எவ்வாறு  தோன்றியது என்ப
தற்கு   விஞ்ஞானத்திடம் பதிலில்லை;  அவ்வாறே அனைத்துக்கும் மூலமான
கடவுள் எவ்வாறு தோன்றினார் என்பதற்கு மதத்திடம் பதிலில்லை!

நம்மைப்பொறுத்தவரை, இயற்கை இருக்கிறது,  அதில் நாம்  இருக்கிறோம்!
அவ்வளவு  தானா?   இருப்பவற்றின்   நடுவே   ஒரு  இருப்பாக  பிற    பிராணி
களைப்போல  எவ்வாறோ தகவமைந்து உயிர்வாழ்ந்து செல்வது தான் நமது
வாழ்க்கையா?  விஞ்ஞானத்தையும்,  மதத்தையும் விட்டால்,  உண்மையைக்
கண்டறிய வேறு வழியேதும் இல்லையா?

'உள்ளது மட்டுமே,அதாவது இயற்கையுலகம் மட்டுமே உண்மை' என்று விஞ்
ஞானம் சொல்கிறது. 'இல்லை,  உலகம்  மாயை,  உலகம் -கடந்த மெய்ம்மை
யான கடவுள் மட்டுமே நிஜம்' என்று மதம் சொல்கிறது. இந்த  இரண்டில் எது
உண்மை?   கடவுள்  பற்றிய கருத்தை,  கோட்பாட்டை  விஞ்ஞானம்  மூட-நம்
பிக்கை என்கிறது.  ஆனால்,  உணர்வுப் பரிணாமத்தில் சிறிது உயர்ந்த தனி
மனிதர்களுக்குத் தெரியும்,  'உள்ளது மட்டுமே உண்மை'  என்பது   இயற்கை
வாதம்; விஞ்ஞானம் இயற்கைவாதம் எனும் மூடநம்பிக்கையை ஊட்டுகிறது.

உண்மையில், விஞ்ஞானம், மதம் இவ்விரண்டையும் கடந்த மூன்றாவது வழி
ஒன்று உள்ளது.  அந்த,  மூன்றாவது-வழியைத் தான் இக்கட்டுரை அறிமுகம்
செய்கிறது!   ஏனெனில்,  உள்ளதை,  உலகைத் தழுவிக்கொண்டு  அதனுடன்
தகவமைந்து  வாழ்ந்து  செல்வது  என்பது  எலிகளுக்கும்,  தவளைகளுக்கும்,
பிற  விலங்கினங்களுக்கும்  மட்டுமே  உரியது,  பொருத்தமானது!     மாறாக,
உள்ளதிலிருந்து  'உண்மை' யை  உய்த்துணர்வதே உண்மையில், சிந்திக்கும்
மனிதனுக்கான  சவாலும், வாழ்க்கையும் ஆகும்!  அவ்வாறு உள்ளதிலிருந்து
உய்த்துணரப்படும் உண்மை உலகைக்கடந்ததாக இருப்பினும் அது உலகை
மறுப்பதில்லை!

உலகம்  மறுக்கவும்,  தவிர்க்கவும் முடியாததாயத் தெரிந்தாலும் அது கடந்து
செல்லப்பட வேண்டிய  தற்காலிக நிஜமாகும்.  உலகமும்  அதிலுள்ளபொருட்
களும் திடமாய்த் தெரிவதால்,  ஸ்தூலத்தின்   சொற்களிலேயே    சிந்திப்பது
என்பது மட்டுப்படுத்தும் பெருந்தடையாகும். ஒருமரத்தின் பூக்கள் சிலமணி
நேரமோ,அல்லது ஒரு நாளோதான் நீடிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் மனிதனின்
வாழ்காலத்தைவிட பிரபஞ்சத்தின் வாழ்காலம் நெடியது என்பது பெரிதல்ல.
எதுமுக்கியமெனில்,மனிதனின் குறுகியவாழ்காலம் தெரிவிக்கும் உண்மை
என்ன என்பதைப்புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையில் எது முக்கிய
மானது என்பதைக்கண்டறிந்து நிறைவேற்றம் காண்பது மட்டுமே முக்கியம்.

உலகம்,  பிரபஞ்சம் என்பது எதைக்குறிக்கிறது எனும் உண்மையைப்புரிந்து
கொள்வது மிகவும் அவசியமே.  இல்லாவிடில், தேவையைத்தாண்டி அது நம்
கவனத்தைச் சிதறடித்துக்கொண்டேயிருக்கும்.  அதே நேரத்தில்,  பிரபஞ்சம்
என்பதும் உண்மையும் ஒன்றல்ல! மேலும், முடிவிலாது பிரபஞ்சத்தை ஆராய்
வது;  அதன் ஒவ்வொரு நுணுக்கமான விபரத்தையும் ஒன்று விடாமல் அறிய
முற்படுவது பயனற்றது; ஏனெனில், அதற்குரிய போதிய காலஅவகாசம் நம்
வசம் இல்லை. எல்லையற்று பரந்து விரிவடையும்  இப்பிரபஞ்சத்தில், மொத்
தம் எத்தனை உடு-மண்டலங்கள்(கேலக்ஸிகள்), நட்சத்திரங்கள்,கிரகங்கள்;
எத்தனை அணுத்துகள்கள் உள்ளன என எல்லாவற்றையும் எண்ணிக்கணக்
கிட்டு,    பட்டியலிடுவது     மூலமாக    ஒருபோதும்    பிரபஞ்சத்தைப்    புரிந்து
கொள்ளஇயலாது! மாறாக,பிரபஞ்சத்தை அதன்சாரத்தில் புரிந்துகொள்ளும்
அணுகு முறையை ஒருவர் பிரயோகிக்கவேண்டும்!

பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்துகொள்வது என்பதன் அர்த்தம், அதன்
அடிப்படையில்  அது எதனால் ஆனது என்பதைப்பற்றியதல்ல!  மாறாக, அது
முடிவாக என்னவாகஆகக்கூடும் என்பதை, அதன் பரிணாமப்போக்கில் என்
னென்னவாக   இதுவரை  ஆகியுள்ளது என்பதன்  தர்க்கரீதியான தொடர்ச்சி
எதைச்சுட்டுகிறது என்பதை உய்த்துணர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். ஒரு
(வளர்ந்த) மனிதனைப்   புரிந்து   கொள்வதற்கு  அம்மனிதனின்  குழந்தைப்
பருவம்  சிறிதளவு மட்டுமே உதவக்கூடும்.  ஆனால்,  பிரபஞ்சத்தைப் புரிந்து
கொள்ள முயலும் விஞ்ஞானிகள்,   வெறும்   சடப்பொருளாலான   பிரபஞ்சப்
பகுதியை  மட்டுமே ஆராய்ந்து கொண்டுள்ளனர்.  உண்மையில், சடப்பொரு
ளாலான  பிரபஞ்சம் என்பது பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவம் போன்றதே!

மேலும்,  ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் "உண்மை" என்பது  அணுத்துகளின்
ஆழத்திலோ,   அல்லது,   பேரண்ட வெளியில்  தொலைதூரத்திலோ  ஒளிந்து
கொண்டிருக்கவில்லை!    இன்னும்    உயிரியல்   மண்டலத்திலோ,   அல்லது,
அனைத்து  உயிரினங்களையும்விட ஆக உயரிய வளர்ச்சிபெற்ற  தலைமை
விலங்கான மனிதனின் விஞ்ஞான மூளைக்குள்ளோ ஒளிந்திருக்கவில்லை!
உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு, பெரிய பெரிய  தொலை நோக்கிகளும்,
மின்னணு நுண்ணோக்கிகளும், துகள்-உடைப்பான்களும்(Particle Acce
lerators),யாதொரு சோதனைக்குழாயும், எதுவும் தேவையில்லை!

மாறாக, பிரபஞ்சப்பரிணாம இயக்கம் தற்போது எங்கு மையம் கொண்டுள்-
ளதோ அங்கே தான் உண்மையைத் தேடவேண்டும்.  பண்பினடிப்படையில்,
ஒரு 'பெரு-வெடிப்பு' நிகழ்வில் சடப்பொருளாக(அணுத்துகள்கள்)தோன்றிய
பிரபஞ்சம், உயிர்ப்பண்பாக எழுந்து, தற்போது மனிதனுள் உணர்வாக உதய
மாகியுள்ளது. ஆம், பரிணாம ரீதியாக பிரபஞ்சமானது தற்போது  ஒவ்வொரு
மனிதனின்  உணர்விலும்  மையம்  கொண்டுள்ளது.   அதாவது,     ஒவ்வொரு
மனிதனின்    உணர்வின்   உள்ளேயும்    ஊடேயுமாகச் சென்று,     உணர்வின்
உச்சத்தை, முழுமையை அடையும் எத்தனத்தில் காத்திருக்கின்றது.!

"உண்மை"  என்பது  யாதொரு  பௌதீகவியல்  அல்லது கணிதவியல் சமன்-
பாட்டு  வடிவிலோ,  அல்லது,  வேறு  எவ்வகை புனிதமிக்க  ஒற்றை,  அல்லது,
இரட்டை எழுத்துக்குறியீட்டு வடிவிலோ அமைந்திருக்கும்ஒன்றல்ல! மாறாக
உணர்வின் உச்ச நிலையே உண்மையாகும். அதை  "முழு-உணர்வு"  அல்லது
"பேருணர்வு" எனவும் குறிப்பிடலாம். இது உண்மை பற்றிய தகவல் மட்டுமே,
"முழு-உணர்வு"   அல்லது   "பேருணர்வு"  தான்   உண்மை  என்று    சொல்லிக்
கொண்டிருப்பதால் ஒரு பயனும் விளையாது!

மாறாக,  ஒவ்வொரு மனிதனும்  தனது உணர்வில் பெருகி  உயர்ந்து ஒப்பற்ற
அந்த உச்சத்தை நேரடியாக அடையப்பெற்றாக வேண்டும். அதற்கு முதலில்
ஒவ்வொருவரும்  உணர்வுக்கு  வந்தாக வேண்டும் - உண்மையில், தான் ஒரு
உணர்வுதான் என்ற உணர்வுக்கு வந்தாக வேண்டும்.

இப்போது,    நாம்  மீண்டும்  விஞ்ஞானம்  பற்றிய  பிரச்சினைக்கு வருவோம்.
விஞ்ஞானம் பற்றி    விஞ்ஞானிகளிடமும்,   பரவலாக    பொது மக்களிடமும்
வழங்கிவரும்  ஒரு தவறான கருத்து  அல்லது  நம்பிக்கை  என்னவென்றால்,
'விஞ்ஞானமானது  அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே பதில்களைக்
கொண்டிருக்கிறது'  என்பதுதான்.  இது  ஒரு  அப்பட்டமான பிரமையே தவிர
வேறில்லை. இது ஒரு நேர்மறையான நம்பிக்கை, அல்லது அறிவுப்பூர்வமான
ஒரே அணுகுமுறை  என சிலர் கருதலாம்.  ஆனால், இது ஒரு ஆபத்தான மூட-
நம்பிக்கையாகும்.   அதற்கான  ஆதாரங்களை  இப்போது  பார்ப்போம்.  மிக
அடிப்படையானதும்,அதி முக்கியமானதுமான கீழ்க்காணும் கேள்விகளுக்கு
விஞ்ஞானம்  இதுவரை  என்ன பதில்களை அளித்துள்ளது  என்பதைப் பார்ப்
போம்.

1. உலகம் அல்லது  பிரபஞ்சம் பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
   (விஞ்ஞானத்தின் உலகப்பார்வை)

2. மனிதனைப்பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
    (மனிதனைப்பற்றிய விஞ்ஞானப் பார்வை)

3. வாழ்க்கையைப்பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
    (வாழ்க்கைப்பற்றிய விஞ்ஞானப் பார்வை)

4 .உண்மை அல்லது மெய்ம்மை பற்றி விஞ்ஞானம் என்னசொல்கிறது?
   ( உண்மை அல்லது மெய்ம்மை பற்றிய விஞ்ஞானப் பார்வை)

முதலாவது     மற்றும்      நான்காவது    கேள்விகளுக்கான     விளக்கங்களை,
அதாவது விஞ்ஞானப்பார்வையின் மட்டுப்பாடுகளை போதுமானஅளவிற்கு,
இக்கட்டுரையிலும்,    இதற்கு  முந்தைய    கட்டுரையிலும்   அலசிவிட்டோம்.  
தேவைப்படுமெனில் ஆங்காங்கே காண்போம்.

இப்போது,   இரண்டாவது மற்றும்   மூன்றாவது  கேள்வியை  எடுத்துக்கொள்
வோம். ஏனெனில், மனித ஜீவியைப்பற்றிப் பேசும்போது அவனது வாழ்க்கை
யைக் கணக்கில் கொள்ளாமல் பேச முடியாது.   இதற்கு  முக்கியக் காரணம்,
மனிதனாவன் விலங்குஜீவிகளின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்
டதொரு வாழ்க்கைக்காக உருவானவன் ஆவான்!

பிரபஞ்சவியல் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு மனிதனை
விட பிரபஞ்சத்தைப்பற்றி மிக அதிகமாகத்தெரியும். (இவ்விடத்தில், உலகம்
அல்லது  பிரபஞ்சம்  என்பதும்,  உண்மை அல்லது  மெய்ம்மை என்பதும் ஒன்
றல்ல  என்பதை நினைவில் கொள்வோம்!).     உயிரியல்    விஞ்ஞானிகளைப்
பொறுத்தவரை அவர்களுக்கு மனிதனைவிட விலங்கினங்களைப் பற்றியே
அதிகம் தெரியும்!  ஆக,  பாமர மக்களுக்கும்,  இன்னும் விஞ்ஞானிகளுக்கும்
அதிகம் தெரியாத ஒரு அம்சம் எதுவென்றால் அது 'மனிதன்' தான்!

'விலங்கினங்களில்  ஆக உயர்ந்த வளர்ச்சியடைந்த விலங்குதான் மனிதன்'
என்பதற்கு மேல்  விஞ்ஞானமானது  மனிதனைப்பற்றி  உருப்படியாக  வேறு
எதையும் வெளிப்படுத்தவில்லை! இன்னும், இன்றைய நவீன உயிரியலாளர்
களைப்பொறுத்தவரை, மனிதன் என்பவன் உயர்வளர்ச்சியடைந்த விலங்கு
கூட அல்ல;  மாறாக, பிற விலங்குகளுக்கு மத்தியில் மனிதனும் ஒரு விலங்கு
மட்டுமே என்கின்றனர்!  அதாவது,  மனிதனுக்கு  யாதொரு  தனிச்சிறப்பான
மதிப்பும், அந்தஸ்தும் இல்லை என்கின்றனர்!

டார்வினிய (சார்லஸ் ராபெர்ட் டார்வின்-1809-1882)பரிணாமக்கோட்பாட்டின்
படி,  உயிரின்  தோற்றத்திற்கு  யாதொரு குறிக்கோள்-சார்ந்த  விளக்கத்தை
யும் தேடுவதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. நாம் இங்கிருக்கிறோம்,
ஏனெனில்  நாம்   பரிணமித்துள்ளோம் - அதாவது,  பரிணாமத்தின்   விளை-
பொருளாக நாம் இங்கிருக்கிறோம்.  மேலும், யாதொரு குறிப்பிட்ட காரணத்
திற்காகவும் பரிணாமம் நிகழ்ந்திடவில்லை.  ஆக,  டார்வினிய பார்வையின்
படி, எவ்வகையிலும் நம் மனித இனம் தனிச்சிறப்பானதுமல்ல, அதோடு நம்
வாழ்க்கையும் இறுதியாக குறிக்கோளற்றது, அர்த்தமற்றது ஆகும்.

டார்வினின் பரிணாமக்கோட்பாடு சொல்வது என்னவென்றால், பரிணாமம்
குறிக்கோளற்றது,  இலக்கற்றது!  அது போலவே,  வாழ்க்கைக்கும் யாதொரு
குறிக்கோளும் இல்லை,  இலக்கும் இல்லை, அர்த்தமும் இல்லை. வெறுமனே
உயிர்-பிழைத்திருப்பது, அதற்காக சந்ததிகளைப் பெருக்கிச் செல்வது என்-
பதற்கு மேல் ஒன்றுமில்லை என்கிறது!

டார்வினின் கோட்பாட்டைத் தழுவி, பின்னாட்களில் உருவான 'புதிய டார்வி
னியம்'  (Neo-Darwinism)  என்ன சொல்கிறது  என்றால்,  அதாவது உயிரி
யலாளர்,      ரிச்சர்ட் டாக்கின்ஸ்  அவர்களின்   " சுயநலங்கொண்ட மரபணு ",
(1976) எனும் தனது நூலில்,

       "நாம்   'உயிர்-பிழைப்பு எந்திரங்கள்',   ஆனால்,  'நாம்'  என்பது  
        மனித இனம்   மட்டுமல்ல. அனைத்து விலங்கினங்கள்,  தாவரங்கள்,
        நுண்ணியிரிகள், வைரஸ்கள் எல்லாம் சேர்ந்தவைதான்.   பூமியின்
        மீதுள்ள  ஒட்டு மொத்த  'உயிர்-பிழைப்பு' எந்திரங்களை'க் கணக்கிடு
        வது இயலாததாகும்.   அவ்வாறே மொத்த உயிரினங்கள் எத்தனை
        என்பதும் தெரியாது."

டார்வினைப்  பொறுத்தவரை  அவர்  நம்மை  ஒரு விலங்காகவாவது  கணக்-
கில் சேர்த்துக்கொண்டார்! ஆனால், டாக்கின்ஸ் அவர்கள் நம்மை ஒரு உயிர்-
பிழைப்பு " எந்திரமாக"ச்சுருக்கிவிட்டார்! அதிலும், உயிர்பிழைப்பது என்பது
உண்மையில்  நாமல்ல!   மாறாக,  நம்மை  ஒரு ஊர்தியாக, ஒரு கருவியாகப்
பயன்படுத்திக்கொண்டு  பிழைப்பது DNA என்று குறிப்பிடப்படும் "மரபணு"
தானாகும்! மேலும் டாக்கின்ஸ் சொல்கிறார்:

       "பல்வேறு வகைப்பட்ட உயிர்-பிழைப்பு எந்திரங்கள் புறத்தேயும் அவற்
         றின் உள்ளுறுப்புகளிலும் மாறுபட்டுத்தெரிகின்றன.  ஒரு ஆக்டபஸ்
         என்பது ஒரு சுண்டெலி போன்றிருப்பதில்லை, இவ்விரண்டும் ஒரு ஓக்
         மரத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் அவை அவற்
         றின் அடிப்படை ரசாயண அமைப்பில் ஒரே தன்மையிலானதாகவே
         உள்ளன, குறிப்பாக, அவ்வுயிரிகள் தாங்கியுள்ள 'பிரதியெடுப்பான்கள்'
         (Replicators), அதாவது மரபணுக்கள், நம் அனைவருள்ளும், ஒரு
         நுண்ணுயிரியிலிருந்து யானைகள் வரை யாவும் அடிப்படையில் ஒரே
         வகைப்பட்ட மூலக்கூறுகளேயாகும். நாம் அனைவரும்  DNAஎனப்படும்
         'பிரதியெடுப்பான்-மூலக்கூறுகளின்'  உயிர்-பிழைப்பு எந்திரங்களே.
         ஆனால், இவ்வுலகில் உயிர்-பிழைப்பதற்கு பல்வேறுவகைப்பட்ட
         வழிகள் உள்ளன. அப்பிரதியெடுப்பான்கள் தம் நோக்கத்தை ஏய்த்து
         நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு பரந்தகன்ற வகைகளிலான
         எந்திரங்களை (உடல்களை) உருவாக்கியுள்ளன. ஒரு குரங்கு என்பது
         மரங்கள் மீதிருந்தவாறு மரபணுக்களைப் பாதுகாத்திடும் எந்திரம்
         ஆகும். ஒரு  மீன் என்பது நீரிலிருந்தவாறு மரபணுக்களைப் பாதுகாத்
         திடும் எந்திரம் ஆகும். .....  DNA மூலக்கூறுகள் புதிரான வழிகளில்
         செயல்படுகின்றன..."
         (ரிச்சர்ட் டாக்கின்ஸ், " சுயநலங்கொண்ட மரபணு " பக்.25  )

டாக்கின்ஸ்    அவர்களின் கூற்றின்படி,  மரபணுக்கள்  ( DNA மூலக்கூறுகள்)
மட்டுமே  பிரதானமானவை,  அவை தான் "உயிர்க்கரு" . மரபணுக்கள் இருக்
கின்றன; அவைதம்மைத்தாமே பிரதியெடுத்துக்கொண்டு, தம்மைப்பெருக்
கிக்கொள்வதற்காக,   எத்தனையெத்தனை  அவதாரங்கள் (உடல்கள்) எடுத்
தாலும், அவை எலியின் வடிவத்திலிருந்தாலும், அல்லது மனிதனின் வடிவத்
திலிருந்தாலும், இன்னும் கோடாணுகோடி வடிவங்களை எடுத்தாலும், அடிப்
படையில்,  அவற்றின் சாரத்தில்  எல்லா உயிரினங்களும்  ஒன்றுதான் எனும்
பட்சத்தில்,  அதாவது,  மரபணுக்கள்  தம்மைத்தாமே பிரதியெடுப்பதற்கான
வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்கள்தான் உயிரினங்கள்(species)என்-
றால்,  இவ்வாறு  வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்களை,  அல்லது ஊர்தி
களை, அதாவது வெவ்வேறு  இட-அமைவுகளுக்கும், சூழலுக்கும்  ஏற்றவாறு
தகவமைந்து   உயிர்-பிழைப்பதற்கான   கருவிகளைக் கட்டமைப்பதற்கான
ஒரு வழிமுறைதான் 'பரிணாமம்' என்றால்; அதிலும், மரபணுக்கள் தம்மைத்
தாமே பிரதியெடுத்துப் பெருகி நிலைப்பதைத் தாண்டி, அம்மரபணுக்களுக்
கும்,  பரிணாமத்திற்கும் வேறு குறிக்கோளும்,  இலக்கும்   இல்லை எனும் பட்
சத்தில்,  பரிணாமம் பற்றிய ஆய்வுகளும், கோட்பாடுகளும் எதற்கு,  அவற்றி
னால் என்ன பயன்?

டாக்கின்ஸ் அவர்களைப்பொறுத்தவரை,அவர் ஒன்றேஒன்றை மட்டும்தான்        
சொல்லவில்லை,  அதாவது,   DNA எனப்படும்  மரபணுக்கூறு தான்  'கடவுள்'
என்று அவர் சொல்லவில்லை! அவர் அதை வெளிப்படையாகச்சொல்லாவிட்
டாலும்,அவரது கூற்றுகள்யாவும் அதைத்தான்குறிக்கின்றன!எவ்வாறெனில்
முதல் உயிர்  அல்லது முதல் மரபணு  எவ்வாறு தோன்றியது என்பது அவருக்
கும்  தெரியாது;  அவரது  ஆசான்,  டார்வினுக்கும்  தெரியாது!  முதல் மரபணு
எவ்வாறோ  தோன்றிவிட்டது எனும்  முன்-நிகழ்வின் தொடர்ச்சியான தொரு
வழிமுறையைத்தான் 'பரிணாமம்' எனும் சொல்லைக்கொண்டும், 'இயற்கை
தேர்வு'(Natural Selection)எனும் நுட்பமுறையைக்கொண்டும்  டார்வின்
தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார்.

அதே நேரத்தில்,  பரிணாமம் பற்றிய கருத்துகளும்,  உலகப்பார்வையும் மிக
நெடுங்காலமாக நிலவிவந்துள்ளன. கிரேக்கத் தத்துவஞானி சாக்கரடீசுக்கு
முந்தைய தத்துவ ஞானியான அனாக்ஸிமேண்டர் (610-546,கி.மு),பரிணாமம்
பற்றிய பார்வையைக்கொண்டிருந்தார். அதாவது, உயிரானது உயிரற்றதிலி
ருந்து  தோன்றியது  எனவும்,  மனிதன் விலங்கினத்திலிருந்து  உருவானவன்
எனவும் அனாக்ஸிமேண்டர் சொன்னதாகக்கூறப்படுகிறது. ஆக,பரிணாமம்
என்பது டார்வினுடைய புதியகண்டுபிடிப்பு அல்ல. டார்வினுடைய கோட்பாட்
டில் உள்ள புதுமை என்னவென்றால், எவ்வாறு உயிரினங்கள் ஒன்றிலிருந்து
இன்னொன்று  தோன்றின  என்பதற்கான  'இயற்கைத்தேர்வு'   எனும்   நுட்ப-
முறையை (mechanism)க் கொண்டு விளக்கியதுதான்.

ஆனால், டார்வினுடைய "உயிரினங்களின் தோற்றம்"(1859) நூலானது, உயிரி
னங்களின்  தோற்றம்  எவ்வாறு நிகழ்ந்தது  என்பதைத்தவிர  பிற எல்லாவற்
றையும் விளக்கியது என்று சொல்லப்படுகிறது.   குறிப்பாக,  ஹார்வர்டு பல்-
கலைக்கழகப்  பேராசிரியர்,   எர்னஸ்ட் மேயர் (Ernst Mayr), புதிய-டார்
வினியத்தை  உருவாக்கியவர்களில்  இவரும் ஒருவர், தனது 91-வது வயதில்,
2001-ல்,   "டார்வின்,  உயிரினங்கள்  எவ்வாறு தோன்றின என்கிற பிரச்சினை
யைத் தீர்க்கத் தவறிவிட்டார்" என்பதாக எழுதினார்.

ஆனால், நம்முடையபிரச்சினை உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது
அல்ல!   மாறாக,  உயிரினங்கள்  ஏன்  தோன்றின,    இன்னும்   துல்லியமாகச்
சொன்னால், "உயிர்" ஏன் தோன்றியது என்பதுதான். உயிர் ஏன் தோன்றியது
என்பதை  முதலில் அறிந்துகொள்ளாமல், உயிர் எவ்வாறு தோன்றியது  என்-
பதை அறிந்துகொள்வதால் அதிகம் பயனில்லை!

நிச்சயம்  டார்வினின்  பரிணாமக்  கோட்பாட்டிற்கும்,   அதைத்தழுவிய  பிற
'புதிய-டார்வினியம்' போன்ற விஞ்ஞானவகைப்பட்ட  பரிணாமக்கோட்பாடு
களுக்கும் உரியதொரு இடமுள்ளது. அவ்விடத்தைக்கடந்து அவற்றிற்கு அள
வில்லா முக்கியத்துவமும், மையத்துவமும் அளிக்கஇடமில்லை. மேலும்,ஒரு
வகையில்,   டார்வினின்  பரிணாமக்கோட்பாட்டை விஞ்ஞானப்பூர்வமானது
தான்  என எடுத்துக்கொண்டாலும்,    அதுவே  பரிணாமத்தின் இறுதிச்சொல்
அல்ல!   இன்னும்,   பழைய-டார்வினியத்துடன்  மரபணுவியலையும் சேர்த்து
உருவாக்கப்பட்ட  'புதிய-டார்வினிய' மாகட்டும்;    இன்னும்     உயிரியலாளர்
களான, எட்வர்டு ஓ. வில்சன் (Edward O.Wilson),ஸ்டீஃபன் ஜே  கௌல்ட்
(Stephen Jay Gould),மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ்( Richard Dawkins)
போன்றவர்களின் பெரும்பங்களிப்புகளாகட்டும், பரிணாமத்தின் அனைத்-
துப் பரிமாணங்களையும் அவை தொட்டுவிடவில்லை! முக்கியமாக பரிணா
மம்  என்பது  வெறும்  'உயிரியல்'  கோளத்திற்குரியது  மட்டுமல்ல  என்பதை
நாம்  புரிந்து கொள்வது  மிகவும் அவசியமாகும்.

அடுத்து, டார்வினியக்கோட்பாடாகட்டும்,  இன்னும் அதைத் தழுவியமைந்த
அனைத்து    விஞ்ஞான வகைப்    பரிணாமக்   கோட்பாடுகளாட்டும்   அவை
அனைத்தும் மிக மேலோட்டமானவையே.   ஏனெனில்,   அவை   அனைத்தும்
உயிரியல்   தளத்தை  மையப்படுத்துபவை,  அல்லது,   உயிரியல் தளத்துடன்
நின்றுவிடுபவை. எட்வர்டு ஓ. வில்சன் அவர்கள் சமுதாயம், மதம், ஆகியவற்
றையும்  உயிரியல் தளத்தின் நீட்சியாகக்காட்ட முனையும் புனிதக் காரியத்
தைச் செய்தார்;  அல்லது, யாவற்றையும் உயிரியலுக்குச் சுருக்கிவிடத் துடித்
தார் எனலாம்!   மேலும், பரிணாமம்  என்பது  உயிரியல் தளத்திற்கு மட்டுமே
உரியது  அல்ல,  அல்லது  பரிணாமம்  என்பது   உயிரியல் தளத்தின்   தத்துப்
பிள்ளையல்ல.   மாறாக,   உயிரியல்  தான்  பரிணாமத்தின்   தத்துப்பிள்ளை
யாகும்.   ஏனெனில்,   பரிணாமம்    எனும்  குடையின்  கீழ்தான் பொருளியல்,
உயிரியல், மற்றும் உணர்வியல் யாவும் இடம்பெறுகின்றன. ஆகவே பரிணா
மத்தை   தங்களது  ஏகபோக    உடமையாகச் சொந்தம்  கொண்டாடுவதற்கு
உயிரியலாளர்களுக்கு  யாதொரு உரிமையும் இல்லை!   பரிணாமம்   குறித்-
தும், டார்வினிய பரிணாமக் கோட்பாடு, மற்றும் பிற விஞ்ஞான வகைப்பட்ட
பரிணாமக் கோட்பாடுகளின்  மட்டுப்பாடுகள் குறித்தும்  இன்னொரு தனிக்
கட்டுரையில் காண்போம்.

உயிரானது   உயிரற்ற   சடப்பொருளிலிருந்துதான்   தோன்றியது   என்பதில்
எந்த   சந்தேகமும் இல்லை.    ஒருவேளை,   கடவுளை   மையமாகக்கொண்ட
படைப்புக் கொள்கையாளர்களுக்கு   இவ்வுண்மை  கசப்பாக    இருக்கலாம்.
ஆனால், விஞ்ஞானிகளைப்பொறுத்தவரை  இவ்வுண்மை இனிப்பாகத்தான்
இருக்கும்.  ஏனெனில், ஒட்டுமொத்தப்  பிரபஞ்சத்தையும்   அதிலுள்ள, உயிர்,
உணர்வு  (மனிதன்)  என அனைத்தையும்  அடிப்படை   அணுத்துகள்களாகச்
சுருக்கிக் காண்பதை  பெரும் சாதனையாகவல்லவா அவர்கள்  கருதுகிறார்
கள்!ஆனால், அடிப்படைக்கேள்விகளைப்பொறுத்தவரை, "எல்லாம் பொருள்
மயம்!"  எனும் விஞ்ஞான அடிப்படைவாதத்திற்கும், " எல்லாம் கடவுள் மயம்!"
எனும்     மத அடிப்படைவாதத்திற்கும்   யாதொரு    வித்தியாசமும்   இல்லை
எனலாம்!

உயிரற்ற   சடப்பொருளிலிருந்து  உயிர் பரிணமித்தது  என்பதை வேறு வழி-
யில்லாமல்தான் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.   ஏனெனில், இயற்-
கையைத்தவிர்த்து கடவுளுக்கோ,வேறு இயற்கைமீறிய சக்திக்கோ உயிரை
உருவாக்கும்  ஆற்றலை  விஞ்ஞானிகள் விட்டுத்தர விரும்புவதில்லை! அதே
வேளையில், சடப்பொருளிலிருந்து 'உயிர்' ஏன் பரிணமிக்க வேண்டும்,   இன்
னும்,  உயிருள்ள  ஜீவியிலிருந்து  'மனம்' அல்லது  'உணர்வு' ஏன்  பரிணமிக்க
வேண்டும்;  அதற்கான நோக்கம், காரணம் என்ன என்பதையெல்லாம்   விஞ்
ஞானிகள்   ஆராய்ந்தறியத்  தயாராயில்லை.   ஆகவேதான்   சொல்கிறோம்,
'பரிணாமம்'   என்பது  ஒரு சொல்,   அதைக்கொண்டு  நிகழ்ந்தேறிய பரிணா
மத்தின் மிகமேலோட்டமானதொரு வழிமுறையை அல்லது அதன்போக்கை
விளக்க முற்படுகிறார்களே தவிர, உயிரியல் விஞ்ஞானிகள் பரிணாமம் என்
றால் என்ன என்பதை இதுவரை விளக்கவேயில்லை!  ஏனெனில், அவர்களுக்
கும்  அது என்னவென்று தெரியாது!

டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" நூலைப்பொறுத்தவரை, அது  இரு
பிரதான  நோக்கத்தைக்கொண்டிருந்தது  எனலாம். முதலாவது, பரிணாமம்
என்பது நிகழ்ந்துள்ளது என்ற வாதத்தை முன்வைப்பது (அதாவது படைப்புக்
கொள்கைக்கு மாற்றாக). இரண்டாவது, எவ்வாறு பரிணாமம் நிகழ்ந்தது என
'இயற்கைத் தேர்வு' எனும் நுட்ப-முறை(mechanism)யைக்கொண்டு விளக்கு
குவது.  அதே  நேரத்தில்,    'இயற்கைத்தேர்வு'  எனும் நுட்ப-முறை,   இயற்கை
யாளர்,   ஆல்ஃபிரட்  வாலஸ் (Alfred Wallace) என்பவராலும்   தனித்துக்
கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்னும் வேறு பலராலும் குறிப்பு காட்டப்பட்ட
தாகவும் சொல்லப்படுகிறது.  எது எப்படியாயினும், டார்வினின்   'இயற்கைத்
தேர்வு'  மாபெரும் கண்டுபிடிப்பு என தத்துவவாதியான டேனியல்  டென்னட்
(Daniel Dennett) போன்றோர் கூறுகிறார்கள்.

ஆனால், இதிலுள்ள பெரும்பிரச்சினை என்னவென்றால், உலகையும், அதில்
உயிரையும்   வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு கடவுளும் இல்லை எனும்பட்
சத்தில், அந்த இடத்தை  'இயற்கை'  எடுத்துக்கொள்ள இயலாது என்பதுதான்
அப்பிரச்சினை!   அதாவது,   இயற்கை  என்பது  உள்ளது;   ஆனால்,  அதனால்
எதையும் தேர்வு செய்ய இயலாது என்பதுதான் உண்மை நிலையாகும். ஏனெ
னில்,   இயற்கையும்,  உயிர்-ஜீவிகளும்  வெவ்வேறு அல்ல!  இயற்கையானது
உயிர்-ஜீவிகளுக்கு  முந்தையதுதான் என்பதால், அதனால் 'தேர்வு' செய்யவி
யலும்  என்பது  தவறான கணிப்பு,  அல்லது   கருத்து ஆகும்!    உயிர்-ஜீவிகள்
உண்மையில்  இயற்கையின்  கிளைப்பு  போன்ற  வளர்ச்சி நிலையே (out-
growth)ஆகும்.

டார்வினிய  பரிணாமக் கோட்பாடு சுட்டுவது போல,  'சுற்றுச்சூழல்  மனிதர்
களுக்காக உருவாக்கப்பட்டதல்ல,  மாறாக,  மனிதர்கள்  சுற்றுச்சூழலுக்குப்
பொருந்தும் வகையில்  பரிணமித்தனர்' என்பது  தவறாகும். உண்மைஎன்ன
வெனில்,  சுற்றுச்சூழலும் (உயிரியல் மண்டலம்) உயிர்-ஜீவிகளும் ஒரு சேரத்
தான் பரிணமித்தன! ஆக, உண்மை இதுவானால், "உயிர்-பிழைத்தலுக்கான
போரட்டம்"  (struggle for survival) என்பதும், " வலியது பிழைக்கும்"
என  தவறாகத்  திரிக்கப்பட்ட,   "பொருத்தமானதே பிழைக்கும்" (survival
of the fittest) எனும் கூற்றுக்களும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பா
னவை ஆகும். ஏனெனில், தற்போது பூமியில், 80,00,000 க்கும் மேற்பட்ட உயிரி
னங்கள்   உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர்.  பூச்சி  இனங்களைப்  பொறுத்த
மட்டில்,  30,00,000  வகைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது!  அவற்றில் ஒவ்-
வொரு வகையிலும் தனிப்பூச்சிகள் மில்லியன் மில்லியன் மில்லியன் எனப்
படுகிறது!    மனிதஜீவிகள்  மட்டும்  700 கோடிக்கும் மேலாக உள்ளனர்!  ஆக,
எவ்வாறு இத்தனை லட்சோபலட்சம் உயிரினங்களும், கோடாணுகோடி தனி
உயிரிகளும்  டார்வின் கூறிய  "உயிர்-பிழைத்தலுக்கானபோரட்டம்" என்பதி
லிருந்தும்",  " வலியது   மட்டுமே  பிழைக்கும்"   எனும்   நிலைமையிலிருந்தும்
தப்பின?

உண்மைதான், இயற்கைச் சூழலில் உயிரினங்களுக்கிடையேயும், தனி ஜீவி
களுக்கிடையேயும்,  உயிர்-பிழைத்தலுக்கான போட்டியையும்,   போராட்டத்
தையும்,  பரஸ்பர அழிவையும்  கடந்து  பரஸ்பர ஒத்துழைப்பும்(symbiosis)
உடன்-இணைந்து  பரிணமிப்பதும் (co-evolution) இல்லாவிடில்,  இன்று
இத்தனை  லட்சோபலட்சம்  உயிரினங்களும்,  கோடாணுகோடி  தனி உயிரி
களும்  இருக்கமுடியாது.   இதிலிருந்து தெரிவது  என்னவென்றால்,  டார்வின்
தனது கோட்பாட்டை பெரிதும் ஊகத்தின் அடிப்படையிலும்,மேலோட்டமான
ஆய்வு விபரங்களைக்கொண்டும்  அமைத்துள்ளார் என்பது தான்.  அதாவது,
பரிணாமம் என்பது நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மையைத்தவிர,அவரது
முடிவுகள்பலவும் தவறானவை! அவரது முடிவுகளில் சரியானவை என்பவை
யும் மேலோட்டமானவை, அல்லது வெளிப்படையானவை.  ஆக, டார்வினின்
பரிணாமக் கோட்பாட்டைக்கொண்டு நம்மால்  பரிணாமத்தை சரியாகவும்,
முழுமையாகவும் புரிந்துகொள்ளமுடியாது!

டார்வினின்  தவறானமுடிவுகளில் பிரதானமானவை எவையெனில், பரிணா
மத்திற்கு  குறிக்கோள்  கிடையாது  என்பதும்,    பரிணாமத்திற்கு    யாதொரு
திசைப்போக்கும்(direction)கிடையாது என்பதும், அதாவது வளர்ச்சி,முன்
னேற்றம்   என்பதுமில்லை  என்பதுமேயாகும்.   இயற்கைத்   தேர்வைப் பற்றி
பிரமாதமாகப் பேசும் டார்வின்,  அதே நேரத்தில், இயற்கையின் தேர்வானது
குருட்டுத்தனமானது,    உணர்வற்றதுமானது  என்கிறார்.    'உயிர்-பிழைப்புப்
போராட்டத்தில்'  ஈடுகொடுத்து  வெற்றிகரமாகத்   தகவமையும்   ஜீவிகளை
இயற்கை தேர்வு செய்கிறது என்பதாக டார்வின் கூறியுள்ளார்.   காலப்போக்
கில் மாற்றங்களைத் திரட்டிக்கொண்டு அந்த ஜீவிகளிலிருந்து புதிய இனங்
கள் தோன்றுவதாகக் கூறியுள்ளார்.

இது ஒரு மாபெரும் முரண்பாடாகும், அதாவது,  குறிக்கோளற்றதும்,  எவ்வித
திசைப்போக்கற்றதும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாததுமான ஒரு
பரிணாம   வழிமுறையில்  புதிய உயிரினங்கள்   தோன்றுகின்றன   என்பது
முரண்பாடல்லாமல்  வேறென்ன?     புதிது  புதிதாக  உயிரினங்கள் தோன்றி
'உயிர்-பிழைப்புப்போராட்டத்தில்'    ஈடுகொடுத்து     வெற்றிகரமாகத்    தக-
வமைந்து,   தமது  சந்ததிகளைப் பெருக்கி,   தொடர்ந்து   வெறுமனே  உயிர்-
பிழைத்திருப்பதன்   வழியாக  உயிரினங்கள் என்ன சாதிக்கின்றன?    இந்த
"அர்த்தமற்ற பிழைப்பு"    பரிணாமத்தினால்  விளைந்தாலென்ன,     அல்லது
கடவுளின்  படைப்பால்  விளைந்தாலென்ன?   இந்த   அர்த்தமற்ற நிலைமை
விலங்குகளுக்கு மட்டுமானதல்ல;  மனிதஜீவிகளுக்கும்   இதே கதிதான் என
டார்வினிய தத்துவம்  போதிக்கிறது!

மனிதன்    உள்பட    அனைத்து   உயிரினங்களுக்கும் தம்தம்  சந்ததிகளைப்
பெருக்கிச்   செல்வதைக்கடந்து  'வாழ்க்கை'   என்பதற்கு வேறு குறிக்கோள்,
இலக்கு ஏதுமில்லை என டார்வினிய  பரிணாமக் கோட்பாடு   போதிக்கிறது!
பிரபஞ்சத்தில் மனிதஜீவிகளின்  'தனிச்சிறப்பான' இடத்தைப்பற்றிச் சொல்-
லும் போது, பேராசிரியர் லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss)சொன்னது :
       
          "நாம் வெறும் ஒரு துளி மாசு (pollution)தான். ...நாம் துடைத்து
           நீக்கப்பட்டாலும்,  இப்பிரபஞ்சம் அப்படியே எப்போதும் போலத்
           தான் இருக்கும். நாம் முற்றிலும் பொருத்தமற்றவர்கள்."

ஆனால்,  இப்பேராசிரியர்கள்  மற்றும் விஞ்ஞானிகளின் கூற்றுகள்  (அவர்க
ளுடைய சொந்த தனித்துறைகளைத்தாண்டிய அம்சங்களைப்பற்றிய  கூற்-
றுகள்)  யாவும்  தவறானவை மட்டுமல்ல,  பெரிதும் அபத்தமானவையாகும்!

ஏனெனில், பரிணாமம் குறிக்கோளுடையது, இலக்குடையது, வளர்ச்சி, முன்
னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மனித வாழ்க்கை அர்த்தம் உள்ளது,
இலக்குடையது.   பிரபஞ்சத்தில்,   மனிதனுக்கென பரிணாமரீதியிலான ஒரு
மையத்துவமான  இடமும், பணியும், பாத்திரமும் உள்ளது.

டார்வினிலிருந்து    டாக்கின்ஸ் வரை,   உயிரியல் விஞ்ஞானிகள்    விளக்கிக்
கூறிய  'பரிணாமம்'  மேலோட்டமானது, பிழையானது,  மற்றும் கொச்சையா
னது. அவர்கள் பரிணாமத்தை தங்கள் 'விலங்கின-உயிரியலுக்குள்' அடக்கி
விட எண்ணுகிறார்கள். அவர்கள் இன்னும் பரிணாமத்தின் வால் நுனியைக்
கூடத் தொட்டதாகத் தெரியவில்லை!  ஒருவேளை, அவர்கள் கூறும் 'பரிணா
மம்' வேறு வகைப்பட்டதாக இருக்கலாம்! ஏனெனில், வளர்ச்சி,முன்னேற்றம்
ஆகியவையற்ற,  குறிக்கோளற்ற,  இலக்கற்ற ஒரு இயக்கத்தை 'பரிணாமம்'
எனும் சொல்லைக்கொண்டு குறிப்பிட முடியாது!

இப்போது நாம்,   இக்கட்டுரை  எழுப்பிய    மையப்பிரச்சினைக்கு வருவோம்.
ஆம்,மனிதனைப்பற்றியும், மனிதவாழ்க்கையைப்பற்றியுமான விஞ்ஞானப்
பார்வை என்ன? மனிதனைப்பற்றியும்,மனிதவாழ்க்கையைப்பற்றியும் அது
என்ன சொல்கிறது?  டார்வின் தொடங்கி,  எட்வர்டு ஓ. வில்சன்  (Edward O.
Wilson),ஸ்டீஃபன் ஜே  கௌல்ட்(Stephen Jay Gould),மற்றும்   ரிச்சர்ட்
டாக்கின்ஸ்( Richard Dawkins) ஆகியோரின் கோட்பாடுகளின் மூலமாக
விஞ்ஞானம்    சொல்வ தென்னவென்றால்,  

          மனிதன் ஒரு விலங்கு,  இன்னும் சொல்லப்போனால்,   'சுய நலம்
          கொண்ட'  மரபணு  ( DNA) மூலக் கூறுகளால்  ஏய்த்து  மேய்க்கப்
          படும்  ஒரு  விலங்கு.  ( DNA) மூலக்கூறுகளைப்  பெருக்குவதற்கு
          உதவுவதைத்தாண்டி அவனது வாழ்க்கைக்கு வேறு குறிக்கோளோ,
          இலக்கோ, அர்த்தமோ எதுவும் கிடையாது!

இவைதான் மனிதனைப்பற்றியும், மனிதவாழ்க்கையைப்பற்றியும் விஞ்ஞா
னம் கூறுகிற அரிய உண்மைகள் ஆகும்! டார்வினின் பரிணாமக்கோட்பாடு
பெரிதும் மட்டுப்பாடானது மற்றும் அதனுடைய உணர்த்துகோள்கள் யாவும்
பிழையானவை அல்லது  தலைகீழானவை என்றபோதிலும்,  தத்துவச் சிந்த-
னையாளர்களிடம் மட்டுமே புழங்கி வந்த 'பரிணாமம்' எனும் கருத்தை அது
சர்ச்சைகளின்  மூலமாக   பரவலாக  பொது மக்களிடமும் கொண்டு சேர்த்த
காரியத்திற்காக   அதை  நாம்  பாராட்டித்தான்  ஆகவேண்டும்! டார்வினின்
பரிணாமக்கோட்பாட்டைப்பொறுத்தவரை, அது, மனிதன் எவ்வாறு அல்லது
எதிலிருந்து   தோன்றினான்    என்கிற   முக்கியத்துவம் வாய்ந்த  கேள்விக்கு
பதிலளிக்க   முயன்று  தோற்றுப்போனது   என்று தான்    சொல்லவேண்டும்.
ஏனெனில், அதன் விளக்கங்கள் பெரிதும்  இயற்கைவாதம் மற்றும் பொருள்
முதல் வாதம் சார்ந்தவையாகத் தேங்கிப்போயின! .....

ஆனால்,  பரிணாமம் என்பது மனிதன் குரங்கிலிருந்து அல்லது வேறு  எதிலி
ருந்து  வந்தான்  என்பதைப்பற்றியது மட்டுமல்ல - அது அவனது  பரிணாமக்
கடந்தகாலம் பற்றியது மட்டுமே!   மாறாக,  பிரதானமாக மனிதன் இனி எது-
வாக,எத்தகைய மெய்ம்மையாகப் பரிணமிக்க இருக்கிறான்,அல்லதுபரிண
மிக்கவேண்டும் என்பதிலேயே அவனது பரிணாம வருங்காலமும், இலக்கும்,
இன்றைய அர்த்தபூர்வமான வாழ்வும், யாவும் பின்னிப்பிணைந்துள்ளன.

மனிதனின்   பிறப்பும்,    தொடக்கநிலையும்    விலங்கையொத்ததாக  இருப்
பினும்,  அவன் கொண்டுள்ள  தனிச் சிறப்பான  "உணர்வு" எனும் அம்சத்தில்
அவன் தொடர்ந்து பரிணமிப்பானெனில்,  மேன்மேலும் உணர்வில் வளர்ந்து
எழுவானெனில்  அவன்  அடையக்கூடிய உச்சம் மட்டுமே  அவனது  முழுமை
யையும்   அவன்   உண்மையில் யார்   என்கிற    உண்மையையும்  அவனுக்கு
உணர்த்துவதாயிருக்கும்!


மா.கணேசன்/16.8.2016
-------------------------------------------------





வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...