Friday, 2 December 2016

அபத்தமான ஐந்து விஞ்ஞானப்பேருண்மைகள்!

 



"ஏன்   இங்கே  ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக  ஏதோவொன்று (உலகம்)
இருக்கிறது?"

ஆம்,   இக்கேள்வி    அடிப்படையிலேயே   தவறானது!    உலகம்  என்று  ஒன்று
இருப்பதனாலும், நாம் அதன் பகுதியாக இருப்பதனாலும்தான் அதற்கு எதிர்
நிலையாக     ஒன்றுமில்லாத   நிலை   பற்றிய   கேள்வியை   எழுப்புகிறோம்!
இதற்கு மாறாக,   நாம்  ஒன்றுமில்லாததின்  பகுதியாக  இருக்கும் பட்சத்தில்
ஏதோவொன்று  இருக்கவேண்டுமே? என்று கேட்போமா என்ற கேள்வியைப்
போன்றே   அக்கேள்வி   அபத்தமானது.  ஆனால்,  உலகம் இருக்கிறது, அதில்
பிற    விஷயங்களோடு   நாமும்   இருக்கின்றோம்.     இந்நிலைமையில்,   எது
சரியான   கேள்வியென்றால்,   உலகம் ஏன் இருக்கிறது, அதாவது எந்த நோக்
கத்திற்காக,     குறிக்கோளுக்காக    இருக்கிறது?   அதில் நாம் ஏன், எதற்காக
இருக்கிறோம்,    நம்  வாழ்க்கையின்  குறிக்கோள்  மற்றும்  அர்த்தம்  என்ன?
என்பன  போன்ற  கேள்விகள்  தான்.  அவற்றிலும்,  நம் வாழ்க்கை பற்றியும்,
நம்மைப்பற்றியும்,  நமது  தோற்றம்  அல்லது  தொடக்கம் பற்றியுமான கேள்
விகளே  உலகை,   பிரபஞ்சத்தைப் பற்றியதாய்  எழுப்பப்படுகின்றன.  அதே
வேளையில்,  பிரபஞ்சம் ஏன், எதற்காகத் தோன்றியது என்கிற கேள்விக்கும்,
பிற  பல  கேள்விகளுக்குமான  பதில்கள்,   பிரபஞ்சம்  என்றால்  என்ன என்ப
தைப்புரிந்து கொள்வதிலேயே அடங்கியுள்ளன!

கேள்விகள்,  அவை,  "ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக ஏதோ
வொன்று (உலகம்)  இருக்கிறது?"  என்பதைப்போன்று தவறானதாக,  அர்த்த
மற்றதாக   இருந்தாலும்;  அல்லது  உலகம்  ஏன்  இருக்கிறது,  அதாவது  எந்த
நோக்கத்திற்காக,குறிக்கோளுக்காக இருக்கிறது?அதில் நாம் ஏன்,எதற்காக
இருக்கிறோம்,   நம் வாழ்க்கையின்  குறிக்கோள்  மற்றும்   அர்த்தம்   என்ன?
என்பன போன்று அர்த்தமுள்ளவையாக இருந்தாலும்; எல்லாக்கேள்விகளும்
மனிதன்  தன்னையும்,   தனது வாழ்க்கையையும், தான் வாழும் இவ்வுலகை
யும் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான தத்துவார்த்தக்கேள்விகளேயாகும்!

தத்துவம்  என்பது  மனிதன்  முதன்முறையாக  சிந்திக்கத்  தொடங்கியதிலி
ருந்தே,  கேள்விகளைக்  கேட்கத்தொடங்கியதிலிருந்தே   தொடங்கிவிட்டது!
தத்துவம்  என்பது  பல்கலைக்கழகத் துறை  சார்ந்ததல்ல;    அது   ஒவ்வொரு
சிந்திக்கும்   மனிதனின் அடிப்படை  குணாதிசயம் ஆகும்.   ஆனால், பெரும்
பாலான  மனிதர்கள் சிந்திப்பதேயில்லை என்பதால்,  தத்துவம் என்பது அரி
திலும்அரிதான சில தனிமனிதர்களின் "அதிசய" குணம் என்பதாகிவிட்டது!

நான் இங்கு குறிப்பிடவிரும்புவது என்னவென்றால், தத்துவச்சிந்தனைதான்
முதலில் தோன்றிய அறிதல் முறையாகும். கலை, இலக்கியம், இசை, சமயம்,
விஞ்ஞானம் போன்ற யாவும் தத்துவச்சிந்தனையைப் பின்பற்றி உருவான
வையேயாகும்! முதன்முதலில், எவரும் சோதனைக்குழாயை கையிலெடுத்
துக்கொண்டு சிந்திக்கத்தொடங்கவில்லை!

சிந்தனை என்பது மனிதனின் அடிப்படைக்குணாம்சம் என்று சொன்னேன்;
ஆனால்,  சிந்தனைக்கான அடிப்படை பற்றியும் சிந்திக்கவேண்டாமா? ஆம்,
தேவைதான்   அறிவுக்கும்,  கண்டுபிடிப்புகளுக்கும்,   அனைத்திற்கும் அடிப்
படையாகும்.  அதே வேளையில், எத்தகைய தேவைகள் தத்துவ அறிவுக்கும்,
தொழில் நுட்பக்கண்டுபிடிப்புக்கும் தாயாக அமைந்தன என்பதைப்பிரித்து
அறிவதும் மிகவும் அவசியமாகும்.   ஏனெனில்,  தேவைகளுக்கிடையேயான
வித்தியாசம் தான்   தத்துவத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும்   உள்ள வித்தியா
சத்தை உருவாக்குகிறது.

உடனடியானதும்,   அன்றாட,  நடைமுறைத் தேவைகளும் தான்  விஞ்ஞானத்
திற்கும், தொழில் நுட்பத்திற்கும் அடிப்படையாகும்.   இத்தேவைகளை நான்
"லௌகீகத் தேவைகள்" என்று குறிப்பிடுகிறேன். இந்த லௌகீகத் தேவைக
ளைக்கடந்த மனிதஜீவிக்கேயுரிய இன்னொரு அதிமுக்கியமானதேவையும்
உள்ளது,   அதை  நான்   "ஆன்மீகத் தேவை"  என்கிறேன்.  "ஆன்மீகம்"   என்ற
சொல்லை  நான்  ஆழமானதொரு  தனி அர்த்தத்தில்   பயன்படுத்துகிறேன்.
அதாவது,   ஒவ்வொரு மனிதனும்  தான்  அடைந்தாக   வேண்டிய   உணர்வுப்
பரிணாமத்தின்  உச்சம் குறித்த விழைவை நான்  "ஆன்மீகத் தேவை"  எனக்
குறிப்பிடுகிறேன்!   மிகத் துல்லியமாகச் சொன்னால், லௌகீகத்தேவைகள்
உயிர்-வாழ்தலுக்குரிய   பல்வேறு    பொருட்களை   இலக்காகக் கொண்டது.
ஆன்மீகத் தேவை  என்பது,    உயிர்-வாழ்தலின்   அர்த்தத்தை,      ஞானத்தை
இலக்காகக்கொண்டது.

தத்துவமாகட்டும்,   விஞ்ஞானமாகட்டும்,  அல்லது  வேறு எவ்வொரு அறிதல்
முறையாகட்டும், எல்லாவித அறிதல் முறைகளுக்கும்  சிந்தனைதான் அடிப்
படையாகும். இன்னும், மிகவும் நடைமுறைரீதியான தொழில்நுட்பத்திற்கும்
சிந்தனை, அல்லது அறிவு தான் அடிப்படையாகும்.

கற்கால  மனிதன்  கல்லைத் தேய்த்துத் தீட்டிக் கூர்மையாக்கி,   அதை    ஒரு
நீண்ட  குச்சியின்     ஒர்முனையில்  கட்டி  ஈட்டி  போன்றதொரு    ஆயுதமாக,
அல்லது   கருவியாக  உருவாக்கும்படிச்செய்தது   ஒரு குறிப்பிட்ட தேவையே
ஆகும்! ஆனால், அத்தேவையை நிறைவேற்றத் தேவையான ஒப்பற்ற கருவி
யாக அமைந்தது மனிதனின் சிந்தனையும், அதன் வழி பெறப்பட்ட அறிவும்
தானாகும்! தொழில் நுட்பத்தின் முன்னோடி கற்கால மனிதனே எனலாம்!

ஆனால்,    கடுமையான   சூழ்-நிலைமைகளில்,   உயிர்-பிழைத்தலே பெரும்
பாடாக இருந்த காலங்களில் கற்கால மனிதன், தன்னைப்பற்றியும், உலகம்
மற்றும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தனது வாழ்க்கையின் அர்த்தம்
பற்றியும்  சிந்தித்திருப்பானா என்பது சந்தேகமே!  ஏனெனில்,  இன்று,  சகல
சௌகரிய (சாதன) ங்களுக்கு   மத்தியில்,   இந்த  21-ம்  நூற்றாண்டிலும் கூட
அடிப்படையான   இவ்விஷயங்கள்  குறித்து நம்மில் பெரும்பாலான மனிதர்
கள் சிந்திப்பதாகத்தெரியவில்லை!

"தத்துவம்"   என்று  நான்  குறிப்பிடுவது,   உயிர்-வாழ்தலின்   தேவைகளைக்
கடந்து, "வாழ்க்கை" என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் மிக ஆழமான
சிந்தனைச் செயல்பாட்டையே  ஆகும்.   ஆனால்,   தத்துவமானது,      தர்க்கம்
(Logic), அறிவுத் தோற்றவியல்(Epistemology),மெய்யியல் (Metaphy
sics),அறவியல் (Ethics),அரசியல் (Politics) என்பதான  உட்பிரிவு
களைக்  கொண்டுள்ளதாகச்  சொல்லப்படும்  பிரிவினையில் எனக்குச்  சிறி
தும் உடன்பாடில்லை! ஏனெனில், வாழ்க்கையை நாம் துண்டுகளாக்கி வாழ
முடியாது; உடைந்த கண்ணாடித்துண்டுகளை ஒட்டுப்போட்டதுபோல ஒன்று
சேர்த்து  அதில்  நம் முகத்தை சிதைவின்றி முழுமையாகக் காண முடியுமா?
மேலும்,  தத்துவத்தை   தர்க்கம்,  அறிவுத் தோற்றவியல்,  மெய்யியல், அறவி
யல்,  அரசியல்  என  ஐந்து  பாகங்களாக  மட்டும்தான் பிரிக்க இயலும் என்ப
தில்லை;   மாறாக,  வாழ்க்கையின் ஒவ்வொரு  அம்சத்தையும் ஒரு தத்துவப்
பிரிவாக,  அல்லது   துறையாக   எண்ணற்ற   வகையில்    துண்டாட முடியும்!
விஷயம் என்னவெனில்,  ஒரு சௌகரியத்திற்காக உட்பிரிவுகளைக்கொண்
டதாக  தத்துவத்தைக் காணலாம்;  எனினும்,   நம்முடைய  தத்துவப்பார்வை
துண்டுபடாத  முழுமையாய் அமையவேண்டும்!

முதலில் தோன்றியது தத்துவம் தான்,   அதுவே   விஞ்ஞானத்திற்கான  அடிப்
படையாகவும் அமைந்தது.ஆரம்பக்காலக்கட்டங்களில் விஞ்ஞானம் என்பது
இயற்கைத்தத்துவம் என்றே அழைக்கப்பட்டது.   விஞ்ஞானம்  என்பது, தத்து
வச்   சிந்தனையிலிருந்து பிரிந்து  போனதொரு சிந்தனைப்போக்கு அல்லது
அறிதல்முறை ஆகும்!    குறிப்பாக, சாக்ரடீஸ்க்கு  முந்தைய கிரேக்க தத்துவ
ஞானிகளில், குறிப்பாக,கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேலீஸ் (Thales,
624-546 BCE) -ன்      சிந்தனைகளுடன்    தத்துவம்   திரிந்து     விஞ்ஞானச்
சிந்தனைக்கு  வித்திட்டது   எனலாம்!    இதே காலக்கட்டத்தில்,     கி.மு. 600 ம்
ஆண்டில்,     இந்தியாவிலும்     சார்வாகர்   தத்துவப்பள்ளியும்   பொருண்மை
வாதக் கோட்பாட்டை உருவாக்கியது!

அதாவது,    சாக்ரடீஸ்க்கு   முந்தைய   கிரேக்க  தத்துவஞானிகள்   இயற்கை
நிகழ்வுகள் குறித்த மரபான புராணிக விளக்கங்களைப் புறந்தள்ளி காரண
காரிய அடிப்படைகளைத்தேடினர். அவர்கள் "பொருட்களின் சாரம்" பற்றிய
கேள்விகளைக்கேட்டனர்.

  • எல்லாம் எங்கிருந்து வந்தன?
   • எதிலிருந்து எல்லாம் உருவாயின?

எனும் இந்த இரு விதிவசமான கேள்விகள் தான்  விஞ்ஞானச் சிந்தனையின்
தொடக்கத்திற்கான அடிப்படையை அமைத்தது எனலாம்.கிரேக்க தத்துவத்
தின் தந்தை என்றழைக்கப்படும்  தேலீஸ்,    "தண்ணீர்" தான்  அனைத்துக்கு
மான  அடிப்படை ஆதிப்பொருள் என்று அ றிவித்தார்.  அவரையடுத்து வந்த
அனாக்ஸிமேண்டர் (Anaximander, 610-546 BCE), பண்புகளேதுமற்ற
"எல்லையில்லாத்தன்மை"யே   அனைத்திற்கும்  மூலம் என்றார்.    அவருக்கு
இளையவரும்,   சமகாலத்தவருமான   அனாக்ஸிமெனெஸ்  (Anaximenes,
585-525 BCE),  "காற்று"  தான்  அனைத்திற்கும்   அடிப்படை  மூலமுதல்
பொருள் என்றார். பிறகுவந்த பித்தாகோரஸ் (Pythagoras,582-496 BCE)
எல்லாம் எண்களே என்றார்.   பிறகு, கி.மு. 5-ம் நூற்றாண்டில்,   லுசிப்பஸ் மற்
றும் அவரது மாணவரான டெமாக்ரிட்டஸ் (Democritus,460-370 BCE)-ம்
முதல் பருப்பொருள் மையக் கோட்பாடான  அணுக்கொள்கையை உருவாக்
கினர்.  அதன்படி,  சிறிய பகுக்கமுடியாத  எண்ணற்ற எண்ணிக்கையிலான
அணுக்களின் சேர்க்கையினால் பலவித பொருட்கள் உருவாயின என்றனர்.
இந்த ஆதி அணுக்கொள்கையே பின் வந்த அணுக்கொள்கைகளுக்கும், இன்
றைய நவீன-அணுத்துகள் பௌதீகத்திற்கும் முன்னோடி எனலாம்.

விஞ்ஞானச்சிந்தனைக்கு வித்திட்டவர்கள் சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க
தத்துவஞானிகள் மட்டுமல்ல;    சாக்ரடீஸ்க்கு பிறகு வந்தவர்களில் பிரதான
மாக, தத்துவஞானி பிளேட்டோவின் மாணவரான அரிஸ்ட்டாட்டில்-ன் தத்து
வச் சிந்தனைகளிலேயே  விஞ்ஞானம் நோக்கிய தடம்-மாறுதல் மிகத்தெளி
வாகத் தொடங்கிவிட்டது என்பதைக்காணலாம்!

நாம்  ஒன்றும்  இக்கட்டுரையில்  விஞ்ஞானத்தின்  வரலாற்றைப்பற்றி விலா
வாரியாக  அலசிக்கொண்டிருக்கவில்லை!   நாம்   கவனிக்கவேண்டிய அதி
முக்கியவிஷயம்,   எவ்வாறு பொதுவானதும்,  அடிப்படையானதுமான   தத்து
வார்த்தக்கேள்விகள் விஞ்ஞானத்திற்குரியதாகக்களவாடப்பட்டது என்பதே!
அதாவது, மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கேள்விகளில் முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?"  என்ற  அசலான  தத்துவக்கேள்விக்கு இன்று
வரை விஞ்ஞானத்தினால் பதில் கண்டுபிடிக்கமுடியவில்லை! அதே வேளை
யில்,  இரண்டாவது கேள்வியான  "எதிலிருந்து எல்லாம் உருவாயின?"  என்ற
கேள்வியை  விஞ்ஞானம் இறுகப்பிடித்துக்கொண்டுவிட்டது எனலாம். ஏனெ
னில்,    "எல்லாம்  பொருளிலிருந்து  உருவானது!"   எனும்   எளிய      பதிலைக்
கொண்டு   விஞ்ஞானம்   தன்னை   வலுவான     அறிதல்முறையாக நிறுவிக்
கொண்டுவிட்டது!    இந்த   இரண்டாவது கேள்விக்கான பதிலைக்கொண்டே
அது முதல் கேள்வியை சமாளித்துக்கொண்டுவருகிறது!

அதாவது,  "எதிலிருந்து எல்லாம் உருவாயின?" என்பதற்கு விஞ்ஞானம் தந்த
பதில்  "எல்லாம் பொருளிலிருந்து உருவானது!" என்பதே. முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?"   என்பதற்கு விஞ்ஞானம் தந்த பதில் மிகவும்
அலாதியானது:  "எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை, ஏனெனில் உலகமானது
என்றென்றுமாய் இங்கேதான் இருக்கிறது! அதற்கு ஆரம்பமும் இல்லை,முடி
வும் இல்லை!  அது,  இயற்கையாக,  யாதொரு   படைப்பாளி அல்லது கடவுள்
எதுவும் தேவைப்படாது தானேதோன்றியதாய் இருக்கிறது!"   என்று சொல்லி
வருகிறது.   மிகவும்   சமீபத்தில்,    2012-ல் வெளியான     பௌதீக விஞ்ஞானி
லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss)தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு
பிரபஞ்சம்" (A UNIVERSE FROM NOTHING) எனும் நூலில், பிரபஞ்சமானது
ஒன்றுமில்லாத  நிலையிலிருந்து   தோன்றியது  என்று அறிவித்த கையோடு,
ஒன்றுமில்லாதது   என்பது உண்மையில் ஒன்றுமில்லாததல்ல,  மாறாக, அது
சக்தியும்  பொருண்மையானதுமாகும்  என்று சொல்லி  தானும் ஒரு பொருள்
முதல்வாதி தான் என்பதை இனம் காட்டியுள்ளார்!

அடிப்படையான தத்துவச்சிந்தனையிலிருந்து தடம் மாறிப்போன சிந்தனை
தான் விஞ்ஞானச்சிந்தனை என்று சொன்னோம். அதாவது வாழ்க்கை எனும்
முழுமையின்   ஒரு  பகுதியான   உலகின்  மீது   தனது  கவனிப்பு,   சிந்தனை
மொத்தத்தையும்   தாரைவார்த்துத்தந்துவிட்ட ஒரு அறிதல்முறைதான் விஞ்
ஞானம்!  அதாவது,  மிகத்துல்லியமாக,   விஞ்ஞானம் என்பது பருப்பொருளா
லான   உலகைப்பற்றிய ஆய்வு என்பதற்கு மேல் வேறில்லை!  ஆனால், பருப்
பொருளாலான  உலகைப் பற்றிய ஆய்வுமுடிவுகளின் வழியாக பெறப்படும்
பௌதீக உலகைப்பற்றிய புரிதலைக்கொண்டு மனித வாழ்க்கை மொத்தத்
தையும் அளவிடுவதும்,மதிப்பிடுவதும்,கணிப்பதும் முறையாகாது என்பதை
நாம் கவனத்திற்கொள்வது அவசியமாகும்

ஏனெனில்,  மெய்ம்மை (Reality)என்பது,  விஞ்ஞானிகள் கருதுவது போல
பருப்பொருளாலான உலகமோ,அதன் விசேடமானதொரு பண்போ, அல்லது
அதன்  சாரமான பண்போ,  அல்லது   எவ்வகையிலேனும்  உலகைச்  சார்ந்த
ஒன்றோ அல்ல!   மாறாக,  மெய்ம்மை  என்பது பருப்பொருளாலான உலகை
உள்ளடக்கியதும்,  அதனைக்கடந்ததும் ஆகும்!

ஒருவகையில்,  அடிப்படையான  தத்துவச்சிந்தனையிலிருந்து  தடம் மாறிப்
போனது தான் விஞ்ஞானம் என்றாலும்,  இவ்வாறு  தடம் மாறிப்போவது  என்
பதும்  தவிர்க்கவியலாத  ஒன்றே  ஆகும்!    ஏனெனில்,    பருப்பொருளாலான
உலகையும்,   அதற்கும்  மனித ஜீவிகளாகிய நமக்கும் உள்ள தொடர்புறவை
யும்  புரிந்துகொள்வதும் அவசியமே!  அதே நேரத்தில்,  வாழ்க்கையில், நமது
புரிதலில், விஞ்ஞானத்தின் முறையான இடம், பங்கு, பணி, பாத்திரம் ஆகிய
வற்றை மிகத்துல்லியமாக வரையறுத்து, அதற்கேற்ப அதைப்  பயன்கொள்
வது என்பது மிகமிக அவசியமாகும். இல்லாவிடில், விஞ்ஞானம் விளைவித்த
கனிகளைக்காட்டி     தத்துவத்தைப்  பின்தள்ளி    தன்னை    முன்னிறுத்திக்
கொண்டுவிடும் அபாயம் நேர்ந்துவிடக்கூடும்! அதற்கான அறிகுறிகள் ஏற்க
னவே பல விஞ்ஞானிகளின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்டுள்ளன.

குறிப்பாக,

• விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெயின்மேன் (Richard Feynman) 'தத்து
வம் ஒரு போதை' என்று குறிப்பிட்டுள்ளார்.

• விஞ்ஞானி ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg) தனது
இறுதிக்கோட்பாடு பற்றிய கனவுகள் (“Dreams of a Final Theory”
1993) எனும் நூலில் "தத்துவத்திற்கு எதிராக" என்ற தலைப்பில் ஒரு அத்தியா
யத்தையே எழுதியுள்ளார்.

• விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking)"தத்துவம் செத்து
விட்டது"  என,  2010-ல் வெளியான, தனது "மகத்தான வடிவமைப்பு" எனும்
நூலில் அறிவித்தார்.

• விஞ்ஞானி  நீல் டெகிராஸி டைஸன் (Neil deGrasse Tyson)
"தத்துவம் ஒரு நேர வீணடிப்பு, இயற்கையுலகைப் புரிந்துகொள்வதற்கு அது
யாதொரு உருப்படியான பங்களிப்பையும் செய்திட வில்லை" என்றார்.

• விஞ்ஞானி லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss),2012-ல் வெளியான
தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு பிரபஞ்சம்" எனும் நூலில், "விஞ்ஞானம்
முன்னேறிச்செல்லுகிறது ஆனால் தத்துவம் இரண்டாயிரம் வருடங்களில்
எவ்வித முன்னேற்றமும் காணவில்லை" என்கிறார்.

இவ்விஞ்ஞானிகளின்  கூற்றுக்களிலிருந்து  தெரியவருவது   என்னவெனில்,
இவர்களுக்கு   உண்மையில்   விஞ்ஞானத்தின்  தத்துவமும் தெரியவில்லை,
தத்துவத்தின்   விஞ்ஞானமும்   புரியவில்லை!   ஏற்கனவே      குறிப்பிட்டபடி,
விஞ்ஞானச் சிந்தனைக்கான வித்துக்களை,   2,500  ஆண்டுகளுக்கு முன்னர்
தூவியவர்கள் தத்துவவாதிகளே!இன்று பெருமிதத்துடன் அனுசரிக்கப்படும்
நவீனவிஞ்ஞானம்  மிஞ்சிப்போனால்,  வெறும்  400 வருடங்களுக்கு  முன்னர்
17-ம் நூற்றாண்டில்  தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" யின் தொடர்ச்சி தான்
என்பதை விஞ்ஞானிகள் மறந்துவிடக்கூடாது! மேலும்,   ''விஞ்ஞானப்புரட்சி"
என்பது    திடீரென 17-ம்  நூற்றாண்டில்,   ஓரிரவில்   ஏற்பட்டதல்ல!    மாறாக,
அதற்கு   முன்னர்  பல நூற்றாண்டுகளாக  அடைகாக்கப்பட்டு  வெளிப்பட்ட
தாகும்.   2,000  ஆண்டுகளாக  தத்துவம்  முன்னேறவேயில்லை,   என்பதாகக்
குறை கூறும் விஞ்ஞானிகள்; 17-ம்  நூற்றாண்டிற்கு முன்புவரை விஞ்ஞானம்
ஏன் பெரிய அளவில் துளிர்க்கக்கூட இல்லை என்பதை உணரவேண்டும்!

தத்துவச்சிந்தனைக்கும் விஞ்ஞானச்சிந்தனைக்கும், வித்தியாசம் தெரியாத
விஞ்ஞானிகளுக்கு  விஞ்ஞானத்தின் அடிப்படைகள்  கூடத்தெரியாது என்று
சொல்லலாம். இதற்குக்காரணம், இன்று ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானப்
பிரிவு,  அல்லது  துறையின் பாடங்களை (சிறிது சிறிதாக சேர்த்து தொகுத்து
வைக்கப்பட்ட  அறிவை)   சிலவருடங்களில்  பயின்று,   பிறகு     அவ்வறிவை
நடைமுறைப்படுத்தும்  வழிகளில்,  விஞ்ஞானியாகிவிட முடியும்!  இவ்வகை
யில்  விஞ்ஞானிகளாக  ஆனவர்கள்தான் தத்துவத்தின் மகத்துவமறியாமல்
தத்துவத்தை  இகழ்ந்து பேசி மலினப்புகழ் தேடிக்கொள்கின்றனர்!    இவர்க
ளுக்கு நிச்சயம் விஞ்ஞானத்தின் தத்துவம் தெரியவாய்ப்பில்லை!  இவ்வாறு
ஒரு குறிப்பிட்டவிஞ்ஞானத்துறையில் தேர்ந்த ஒருவரை ஒரு முழுவிஞ்ஞானி
எனக்குறிப்பிடவியலாது;  வேண்டுமானால், அவரை அத்துறையின் நிபுணர்,
அல்லது வல்லுனர் என்றழைக்கலாம்! விஞ்ஞானி என்ற பெயரில், பட்டத்தில்
பலர் இருக்கலாம்; ஆனால், எல்லோரும் நியூட்டன்களோ,அல்லது ஐன்ஸ்டீன்
களோ அல்ல!இவ்வாறே,ஒருவர் பல தத்துவப்பாடங்களைப்பயின்று உடனே தத்துவஞானியாகிவிட முடியாது! தத்துவம் பயிலும் அனைவரும், சாக்ரடீஸ்
ஆகவோ,     பிளேட்டோவாகவோ,   அரிஸ்ட்டாட்டில்-ஆகவோ,   இம்மானுவல்
காண்ட் ஆகவோ ஆகிவிடுவது கிடையாது!

ஆகவே,   "தத்துவம்   இரண்டாயிரம்  வருடங்களில் எவ்வித முன்னேற்றமும்
காணவில்லை" எனும் 'விஞ்ஞானி' லாரன்ஸ் க்ராஸ் -ன் குற்றச்சாட்டு அர்த்த
மற்றதாகும்.   அவருக்குத்  தத்துவம் பற்றி  எதுவும்  தெரியாது  என்பதைவிட
அவருக்கு  விஞ்ஞானம் பற்றிய அடிப்படையும் தெரியவில்லை என்பதுதான்
அவருடைய மட்டுப்பாடு! அவருடைய துறையில் அவர் விற்பன்னராக இருக்
கலாம் அவ்வளவுதான்!

அடுத்து,    17-ம் நூற்றாண்டில்   தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" தொடர்ந்து
அவ்வாறே  வரலாறு படைத்துச்செல்லும், அதாவது தொடர்ந்து இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு,   அதே  பாய்ச்சலுடன்  முடிவேயில்லாமல்  முன்னேறிக்
கொண்டேசெல்லும் என்று சொல்வதற்கு இடமில்லை! ஏனெனில்,ஏற்கனவே
"விஞ்ஞானத்தின் முடிவு" (THE END OF SCIENCE)பற்றிய முன்னறிவிப்பும்,
அதன்மீதான விவாதங்களும், 1996-லேயே தொடங்கிவிட்டன! இதுபற்றி பிறி
தொரு கட்டுரையில் காண்போம். எனினும், எல்லைகாணமுடியாத அளவில்
உலகம்   பரந்ததாக   இருப்பினும் பருப்பொருளின் பண்புகளும்,  விதிகளும்
அளவிற்குட்பட்டவையே,       ஆகவே,  பருப்பொருளாலான  உலகைப்பற்றிய
ஆய்வான விஞ்ஞானம் ஒரு கட்டத்தில் (முழுமைபெற்று) முடிவடைந்து தான்
ஆகவேண்டும்!ஆக, எவரும், ஐயோ! விஞ்ஞானம் முடிந்துவிட்டதே என அஞ்ச
வேண்டாம்;  ஏனெனில்,  'விஞ்ஞானத்தின் முடிவு'  என்பது உலகின் முடிவோ,
அல்லது, வாழ்வின் முடிவோ அல்ல!

விஞ்ஞானம் என்பது, நம்மைச்சுற்றியுள்ள உலகையும், பரந்த பிரபஞ்சத்தை
யும் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி மாத்திரமே! உலகைப்புரிந்துகொள்
வதென்பது அதன்விதிகளைப்புரிந்துகொள்வதே;அவ்விதிகளைக்கொண்டு
நாம் நம் நடைமுறைவாழ்க்கைக்கான கருவிகளை, உபகரணங்களை, சாத
னங்களை, உருவாக்கிப்பயன்கொண்டு சௌகரியமாக உயிர்வாழ்கிறோம்!
ஆம்,   விஞ்ஞானம்   மனிதவாழ்க்கையின்   ஒரு பாதி  தேவையை   மட்டுமே
நிறைவு செய்யக்கூடியதாகும்   என்பதை நாம் மனதிற்கொள்வது அவசியம்
ஆகும்!வாழ்க்கையின் இன்னொருபாதி தேவையை தத்துவத்தால் மட்டுமே
நிறைவு செய்ய  இயலும்!

விஞ்ஞானத்தின் வளர்ச்ச்சி,  முன்னேற்றம் என்பது அறிவுச்சேகரத்தின் மூல
மாக  நிகழ்வதாகும்!   ஒரு  குறிப்பிட்ட துறையில்   அறிவுச்சேகரமானது  ஒரு
குறிப்பிட்ட திரும்புகட்ட-மதிப்பை(Critical-Value)எட்டியதும்  அத்துறை
யில் பாய்ச்சல்-மிகுந்த திடீர் வளர்ச்சி சம்பவிப்பதாகிறது.மேலும்,விஞ்ஞான                  
அறிவு என்பது, குறிப்பாக, உலகைப்பற்றிய மிக ஆழமானதொரு  விதியைக்
கண்டுபிடிப்பது  எவ்வாறு நிகழ்கிறது என்பது, இன்னும் "விஞ்ஞானம்-மீறிய"
நிகழ்வாகவேயுள்ளது!     ஆகவே,     சர்வசாதாரணமாக    எதற்கெடுத்தாலும்
'விஞ்ஞானம்',   'விஞ்ஞான-ரீதியான', 'விஞ்ஞான-பூர்வமான' என்று அளப்பது
அறிவீனமாகும்!   ஏனெனில்,  விஞ்ஞான-அறிவின்  உதயம்    விஞ்ஞானபூர்வ
மானது அல்ல!!  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  எவ்வாறு சார்பியல் கோட்பாட்டை உரு
வாக்கினார் அல்லது கண்டுபிடித்தார் என்பது எவருக்கும்  தெரியாது!    நாம்
சொல்லலாம், சார்பியல் கோட்பாட்டிற்கான அடிப்படைகள் ஏற்கனவே கண்
டறியப்பட்ட பிற கோட்பாடுகளில் அடங்கியிருந்தன எனலாம். ஆனால்,  ஏன்
அதே  சார்பியல்கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ன் அண்டைவீட்டுக்கார
ரான ராபர்ட் ஹாரிஸன் கண்டுபிடிக்கவில்லை?

ஆம்,விஞ்ஞானவகைப்பட்ட அறிவு, தத்துவவகைப்பட்ட அறிவு, இன்னும் எவ்
வகைப்பட்ட அறிவாயினும்,  "அறிவு"  என்பது உள்ளதிலிருந்து உண்மையை
உய்த்துணரும்  தனிமனிதனின்  உணர்வார்ந்த  ஈடுபாட்டின் வெளிப்பாடே!
வெறும் கண்-கவனிப்பு(Observation),பரிசோதனைகள்(Experiments),
தரவுகள்(Data)இவை மட்டுமே விஞ்ஞானக்கோட்பாடுகளாகவும், அறிவாக
வும் ஆகிவிடுவதில்லை! மாறாக, காரணகாரிய ஆராய்ச்சிகளையும் கடந்து
மனத்தின் அடித்தளத்திலிருந்து பீரிடும், உள்ளுணர்வு(Intuition) மற்றும்
உட்பார்வை(Insight)யின் வெளிப்பாடுகளே அறிவாகும்!

மேலும்,  விஞ்ஞானம்  என்பது தொடர்ந்து சேகரித்துத்தொகுக்கப்படும்  அறி
வைக்கொண்டு எழுப்பப்படும் மாளிகையாகும்! விஞ்ஞானம் முழுமையைத்
துண்டுபடுத்தி,  அத்தனித்தனித்துண்டுகளைப்பற்றிய அறிவை இணைத்து
ஒரு ஒட்டுப்போட்டச் சித்திரத்தை(புரிதலை) உருவாக்கி அதையே உண்மை
என்று அறிவிக்கிறது!  மேலும்,  விஞ்ஞானம்   பௌதீக  உலகையே  முழுமை
எனக் கருதுகிறது!  இதுவே  விஞ்ஞானத்தின் அடிப்படைக்கோளாறும், முதல்
கோணலும் ஆகும். ஆனால், தத்துவம், உலகை முழுமையின் ஒரு பகுதியாக
மட்டுமே   காண்கிறது.    அதாவது,    மனிதன்  தன்  உணர்வை   மையமாகக்
கொண்டு    உலகையும்  பிற அம்சங்களையும் புரிந்துகொள்ளும் வழிமுறை
தான்  தத்துவம்  என்பதாகும்!  ஏனெனில்,   மனிதன் தான்  உலகின் மையம்!
மையத்தை (அதாவது தன்னை)அறிந்துகொள்ளும் விழைவின் ஒரு தொடக்
கம்  தான் உலகையும் ,  பிற அம்சங்களையும்  அறிந்து கொள்ளும்   முயற்சி
யாகும்!

உண்மையில், முறையே விஞ்ஞானம் காண்கிற உலகமும், தத்துவம், சமயம்,
மற்றும் சாமானியமக்கள் காண்கிற உலகமும் ஒன்றல்ல! இவை ஒவ்வொன்
றும்  ஒரு  குறிப்பிட்ட  அம்சத்தை  மையமாகக் கொண்டே  அல்லது சார்ந்தே
உலகைக்காண்கின்றன.   சாமானிய  மக்கள் பொருளாதாரத்தை (அன்றாட
வாழ்க்கை,விலைவாசி)மையமாகக்கொண்டே உலகையும் அனைத்தையும்
காண்கின்றனர்.   சமயப்பார்வை,  படைப்பாளியான கடவுளை மையமாகக்
கொண்டதாகும்.  தத்துவம்  மட்டுமே புறத்தே எதையும்  மையப்படுத்தாமல்,
மனிதன்   எனும்  மையத்திலிருந்து,  உலகையும்,  பிறவனைத்தையும், குறிப்
பாக    எதையும்   விலக்கி   ஒதுக்காமல்   கணக்கில்   கொண்டு  காண்கிறது.
இத்தகைய தத்துவத்தை நான் "முறையான தத்துவம்" (Pure or Proper
Philosophy)என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில், தத்துவங்கள் பலவகைப்
பட்டவையாக உள்ளன.   ஒவ்வொன்றும்  ஒரு அம்சத்தை அல்லது  ஒரு குறிப்
பிட்ட    சித்தாந்தத்தை  (Ideology) மையமாகக்கொண்டுள்ளது,  அல்லது
சார்ந்ததாக உள்ளது.  இவ்வகைப்பட்டவை முறையான தத்துவங்கள் அல்ல!

குறிப்பாக,   பொருண்மைவாதம்  அல்லது   பொருள்முதல்வாதம்    என்பதை
முறையான   தத்துவமாகக் கொள்ளமுடியாது.  ஏனெனில், முன்-முடிவுகளை
வைத்துக்கொண்டு  தத்துவ விசாரத்தில்  இறங்கமுடியாது.    "பொருள் தான்
முதன்மையான நிஜம்"    என பொருளை மையமாகக் கொள்ளும்பட்சத்தில்,
யாவற்றையும்  அப்பொருளின் சொற்களிலேயே காண்பதும்,  விளக்கமளிப்
பதும் தவிர்க்கவியலாத தவறான அணுகுமுறையாக ஆகிவிடும்! ஏனெனில்,
"பொருள் தான்   முதன்மையான    நிஜம்"   என   முடிவு   செய்துவிடும்போது,
எல்லாம்  பருப்பொருளின்  வெவ்வேறு வடிவங்கள்,  நிலைகள்,   பண்புகளே
என     உயிர்,   மனம்,   உணர்வு,  மனிதன்   யாவற்றையும்,    பருப்பொருளின்
ஆகச்சிறிய   கூறான அடிப்படை  அணுத்துகள்களுக்குச் சுருக்கிக்காண்பது
என்பது மிக எளிதான விஷயமாகிவிடும்!

இவ்வாறே,   விஞ்ஞானம்  காண்கிற  உலகம், பிரபஞ்சம், இயற்கை என்பதும்
நிஜமான  உலகமோ,   இயற்கையோ   அல்ல!      அவை     முழுமையிலிருந்து
தனியே    பிரித்தெடுக்கப்பட்ட (Abstracted) வையே ஆகும்! விஞ்ஞானம்
விளக்கிக்காட்டுகிற உலகம் என்பது ஒரு கருத்துச்சித்திரம் என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல!அதைஒரு கருத்துச்சித்திரம் என்பதைவிட கேலிச்சித்திரம்
என்று  குறிப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்!  அதாவது, ஒருவரது
அல்லது   ஒன்றினுடைய  தனி இயல்புகளை  மிகைப்படுத்திக்காட்டும் படம்
அல்லது  வருணனைதான் கேலிச்சித்திரம் என்பதாகும்.  இவ்விடத்தில், விஞ்
ஞானமானது,     உலகம்    பொருளாலானது    என்கிற   அதன்  தனி இயல்பை
மிகைப்படுத்தி,   அதையே, அப்பௌதீகச்சடப்பண்பையே "மெய்ம்மை" என
அறிவிக்கிறது!

இவ்விடத்தில்,  தத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும்  உள்ள அடிப்படை வித்
தியா சத்தைப்புரிந்துகொள்வது அவசியமாகும், இல்லாவிடில், இரண்டிற்கும்
இடையே   முரண்பாட்டைக்  கற்பித்துக்கொண்டு    தடுமாறிக் கொண்டிருப்
போம்! தத்துவம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதானத்தேவையை நிறை
வேற்றுகின்ற,  மனிதவாழ்க்கையைப் பற்றிய முழுமையான, சாரமான பார்
வையை, புரிதலைக்குறிக்கிறது!  மனிதவாழ்க்கை  என்பது,  மனிதனையும்,
பொதுவாக  'வாழ்க்கை' என்று தவறாகக் குறிப்பிடப்படும் அவனது குறுகிய
அன்றாட  உயிர்-பிழைப்பு  விவகாரத்தையும்,  உலகையும்,  அதாவது   ஒட்டு
மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதாகும்.

தத்துவம்  உலகை வாழ்க்கை எனும் முழுமையின் ஒரு பகுதியாகக் காண்கி
றது;   விஞ்ஞானம்   உலகம்  எனும்  பகுதியை  முழுமையாக்க    முயல்கிறது!
அதோடு   அது  மனிதனையும்,  அவனது  வாழ்க்கையையும்,  உலகம்  எனும்
பகுதியின்  முக்கியத்துவம்  ஏதுமற்ற  ஒரு ஓரப்பகுதியாக மாற்றிவிட முயல்
கிறது! சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க தத்துவஞானிகள் இயற்கை நிகழ்வு
கள்  குறித்த மரபான புராணிக விளக்கங்களைப்  புறந்தள்ளி காரணகாரிய
அடிப்படைகளைத்தேடினர் எனக்கண்டோம். ஆனால், நவீன விஞ்ஞானமோ
உலகையே  மெய்ம்மை(Reality)யாகவும், பொருண்மை(Materiality)ப்
பண்பை  மெய்ம்மையின்  சாரமாகவும் காண்கிறது.  இவ்வாறு, சட-உலகை
முதன்மைப்படுத்தும் பான்மையை நான் விஞ்ஞானவகை புராணிகம் என்று
குறிப்பிடுகிறேன்.

அதாவது,  பழம்புராணிக காலங்களில்,  உலகம்   பலவகைப்பட்ட கடவுளர்க
ளாலும்,ஆவிகளாலும் நிறைந்திருப்பதாகவும்,வழக்கத்திற்கு மாறான நிகழ்
வுகள்  சம்பவங்கள் கோபங்கொண்ட கடவுளர்களின் செயல்களென நம்பப்
பட்டன!    இன்றைய   நவீன  விஞ்ஞானக் காலத்தில், "எல்லாம்  பன்னிரண்டு
அணுக்கருத்துகள்கள்  மற்றும்  நான்கு  அடிப்படைவிசைகளின்"  ஜாலங்கள்
என நம்பப்படுகிறது!  எல்லாம் ஆவிகளின் (Spirits)ஜாலங்கள்  என்பதற்
கும்,    எல்லாம்   அணுக்கருத்துகள்களின்   ஜாலங்கள்    என்பதற்கும்  என்ன
பெரிய வித்தியாசம் உள்ளது?  உள்ளது!  ஆவிகளின்  ஜாலங்கள் என்பது அப்
பாவித்தனமான  நம்பிக்கையாகும்.  அணுத்துகள்களின் ஜாலங்கள் என்பது
நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாகப்பெறப்பட்ட புரியாத(அல்லது ஒரு சில
ருக்கு  மட்டுமே  புரியக்கூடிய )   கணிதக் குறியீடுகளாலான   சமன்பாடுகள்
மற்றும்   சூத்திரங்களைக் கொண்டு    நிறுவப்படும்  விஞ்ஞான - நம்பிக்கை
(Educated Belief)யாகும்!

விஞ்ஞானத்தின்  தகிடுதத்தத்தை,   இன்னும் சற்று ஆழமாகச்சென்று பார்ப்
போம்!  அதாவது 17-ம் நூற்றாண்டில், கலிலியோ(Galileo)வும், நியூட்டனும்
(Newton) பொருட்களின்  இயக்கம்பற்றிய  விதிகளை அறிமுகப்படுத்திய
தற்குப்பிறகு,   (இயற்கை) தத்துவமும்,  (விஞ்ஞான)பௌதீகமும்  தனித்தனி
துறைகளாகப் பிரிந்து   சென்றன.  கெப்ளர் (Kepler)கண்டுபிடித்த  கோள்
களின் இயக்கம் தொடர்பான சில ஆரம்ப விதிகளிலிருந்து நியூட்டன் தனது
இயக்க  விதிகளைத்  தருவித்துக்கொண்டார்.    அவ்விதிகளைக்   கொண்டு,
ஹேலிஸ்  வால் நட்சத்திரத்தின்  மறுவருகை 1759-ல் நிகழும் என்ற கணிப்பு
நிறைவேறியது புதியவிஞ்ஞானத்தின் மகத்தான ஆற்றலை, நாமனைவரும்
காணும் வண்ணம் நிகழ்த்திக்காட்டியது!   ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இத்
தகைய விஷயங்கள், கண்டுபிடிப்புகள் பிரமாதமானவையே. ஆனால், அந்த
எல்லைக்கு வெளியே இவை ஒன்றுக்கும் பயன்படாது!

ஏனெனில்,  பொருள்களின் இயக்கமும் அவைபற்றிய விதிகளும், அவற்றை
ஒட்டிய  கண்டுபிடிப்புகளும்  பலவித நடைமுறைப் பயன்களைத் தந்தாலும்
பொருட்களின்  பௌதீக இயக்கத்திற்கும் மெய்ம்மைக்கும் உள்ள தொடர்பு
என்ன?  பொருள், பொருளின் பௌதீக இயக்கம் இவைகள்  மெய்ம்மையின்
(Reality) வெறும் பகுதிகள் தானே!  இவை  எவ்வகையிலும்  இறுதியான
வையல்ல! (There is nothing ultimate about physical motion!)
அதாவது  பௌதீக  இயக்கத்தை  நாம்  முழுமையாகப் புரிந்து  கொள்வதில்
தவறில்லை; ஆனால்,அப்புரிதல் எவ்வகையிலும் மெய்ம்மை என்றாலென்ன
என்று  ஒருபோதும்   விளக்கப்போவதில்லை!  ஆக,  பௌதீக உலகம் பற்றிய
முழுமையான  புரிதல்  பௌதீக உலகின்  உண்மையை மட்டுமே விளக்குவ
தாயிருக்குமே தவிர,   மனிதனைப் பற்றிய   உண்மையை,   அனைத்தையும்
 உள்ளடக்கிய   "வாழ்க்கை"  எனும் முழுமையின் உண்மையை  ஒருபோதும்
அது வெளிப்படுத்திடாது!!

நியூட்டனின் பௌதீகம் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே வெற்றிகரமாகச்
செயல்படக்கூடியது    என்பதை   சௌகரியமாக   மறந்துவிடுபவர்கள் தான்
விஞ்ஞானத்தை   உயர்த்தியும்   தத்துவத்தைத் தாழ்த்தியும்  பேசிவருகிறார்
கள்.   அதாவது,   "பொருளின்   இயக்கவிதிகளே   பௌதீக  உலகில்  நிகழும்
எல்லா   விஷயங்களையும்,   சம்பவங்களையும்  தீர்மானிக்கின்றன;  அதில்,
கடவுளுக்கு   யாதொரு   செயலூக்கமிக்க  பாத்திரமும்  கிடையாது!"    என்று
சொல்லுகிற    விஞ்ஞான-மூளைகளுக்கு,   "அனைத்தையும்   தீர்மானிக்கிற
இயக்கவிதிகளை  தீர்மானித்தது  எந்தவிதிகள்?" எனும் கேள்வி மட்டும் ஏன்
உதிக்காமல் போகிறது என்பது வினோதமே!

மேலும் ,  "எல்லா விஷயங்களையும், சம்பவங்களையும் பொருளின் இயக்க
விதிகளே தீர்மானிக்கின்றன;அதில்,கடவுளுக்கு யாதொரு செயலூக்கமிக்க
பாத்திரமும்  கிடையாது!"  என்றால்,  கடவுளின் இடத்தை   'இயக்க- விதிகள்'
எடுத்துக்கொண்டனவா?அடுத்து, அனைத்தயும் தீர்மானிக்கும்  இயக்கவிதி
களைத் தீர்மானிக்க 'கடவுள்' தான் வேண்டுமா?   இயக்கவிதிகளை இயக்கு
கின்ற   (இன்னும்  விஞ்ஞானம்  அறியாத)  உயர்-விதிகள்  இருக்கக்கூடாதா?
அவ்விதிகள்  ஏன் பொருண்மையல்லாத (Non-Material) ஒருஅம்சத்தின்
கருவிகளாக இருக்கக்கூடாது?

விஞ்ஞானி   ஹாக்கிங்க், மற்றும்  நீல் டெகிராஸி டைஸன்,  லாரன்ஸ் க்ராஸ்
ஆகியோரால்  விஞ்ஞானத்திற்கும்,    தத்துவத்திற்கும்   இடையே  தொடங்கி
வைக்கப்பட்ட சர்ச்சை  தற்போது  கொழுந்துவிட்டு  எரிந்து கொண்டு  இருக்
கிறது. அது ஒரு சர்ச்சைதான் என்றாலும்,  அதில் எவ்வொரு பக்கம் வென்றா
லும் அது நம் அனைவருக்கும்  தோல்விதான் என்று சிலர் கவலை  தெரிவித்
துள்ளனர். அவர்களது கவலை அக்கறைக்குரியதுதான்; ஆனால், அவர்களது
புரிதல்தான்,பாவம்,மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது!அதாவது
மேற்குறிப்பிட்ட சர்ச்சையில்,  விஞ்ஞானம் வெல்லக்கூடுமெனில்,  அதுதான்
நம்  அனைவருக்கும் மிகவும்  அழிவுகரமான தோல்வியாக அமையும்!  ஏற்க
னவே  மனித இனம் அழிவின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது!
தற்போது முன்னனியில் இருப்பது விஞ்ஞானமே, விஞ்ஞான-உலகப்பார்வை
தான் மனித  இனத்தை வழி நடத்திச்செல்கிறது.

ஒருபுறம், அன்றாடத்தைக்கடந்து வேறுஎதைப்பற்றியும் சிந்திக்காத பெரும்
மக்கள் திரள்;   இன்னொருபுறம்,   தவறாகச் சிந்திப்பதையே    தொழிலாகக்
கொண்ட  கனிசமான எண்ணிக்கையிலான அடிப்படைவாத, பொருண்மை
வாத,  சுருக்கல்வாத, நாத்திக  'விஞ்ஞானிகள்"! இவ்விரண்டுக்கும் இடையே
உருப்படியாகச் சிந்திக்கும்   சில விஞ்ஞானிகள்,  மற்றும் தத்துவச்சிந்தனை
யாளர்களின்  குரல்   எடுபடுவதற்குரிய    வாய்ப்புகள் மிக  மிகக்  குறைவே!
விஞ்ஞானத்தின்   (பெரிதும்   தொழில் நுட்பரீதியான)   ஆரவாரமான கண்டு
பிடிப்புகள்   மற்றும்  முன்னேற்றங்கள்  தத்துவம்  உள்ளிட்ட ,   மானுடவியல்,
கலாச்சாரம்,  வரலாறு,  கலை,  இலக்கியம்   ஆகிய பிறதுறைகளையும் ஓரங்
கட்டி பின்னுக்குத்தள்ளிவிட்டன!   நம்மில்    பெரும்பாலானவர்களுக்கு  விஞ்
ஞானம்  கண்டறிந்து சொல்லும்  "உண்மைகள்" வேறு;  விஞ்ஞானம் நமக்குக்
கொடுக்கும் பொருட்கள்(கருவிகள்,சாதனங்கள், உபகரணங்கள்) வேறு என்
பது தெரிவதில்லை!இவ்விரண்டு அம்சங்களிலும் அனுகூலங்களும் உள்ளன;
ஆபத்துகளும் அடங்கியுள்ளன!

விஞ்ஞான  உண்மைகள் ('இயற்கை விதிகள்' எனும் வடிவத்தில் ) இல்லாமல்,
யாதொரு தொழில்நுட்பச் சாதனமும் இல்லை. ஆம், விஞ்ஞானம் இல்லாமல்
அணுகுண்டுகளும் இல்லை, ஹைட்ரஜன்குண்டுகளும்  இல்லை!   ஆக,  விஞ்
ஞான  உண்மைகள்   சமன்பாடுகள் வடிவில்  கரும்பலகையில் எழுதப்படும்
போது  அவை சாதுவாக தோற்றம் தருகின்றன!  ஆனால்,  அவைகளை  நாம்
ஆய்வுக்கூடங்களில் செயல்படவைக்கும்போது அபாயகரமான அணுகுண்டு
களாக மாறிவிடுகின்றன! 1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பிரத்யேக சார்
பியல் கோட்பாட்டின் ஒருபகுதியாக, மிகக்குறைந்த அளவு பொருளிலிருந்து
பெருமளவு சக்தியை வெளிக்கொணரமுடியும் என்கிற, மறைந்துகிடந்தஒரு
பௌதீகஉண்மையை E=mc2 எனும் சமன்பாட்டின் மூலம் வெளிப்படுத்திட,
அது 40 வருடங்களில், @0530 ஜூலை,1945-ல், அணுகுண்டாக வளர்ந்து முதல்
பரிசோதனையிலேயே வெற்றிகரமாக வெடித்து தன் ஆற்றலை நிரூபித்துக்
காட்டியது!

நம்மைப் பொறுத்தவரை,   இக்கட்டுரையில்,    இப்போதைக்கு,  விஞ்ஞானம்
கண்டறிந்து  சொல்லும்   உண்மைகளில்   மறைந்திருக்கும்  ஆபத்துக்களை
மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்;  தொழில் நுட்பத்தின் வழியாக
விஞ்ஞானம்  கொடுக்கின்ற  பொருட்களில்  அடங்கியுள்ள  சம்பத்துக்களை
யும், ஆபத்துக்களையும் பிறிதொருசமயத்தில் காண்போம்! சரி,விஞ்ஞானம்
கடந்த  400 ஆண்டுகளின் ஆராய்ச்சி முடிவுகளாக  அப்படி எத்தகைய அரிய
"பேருண்மைகளை" எடுத்துச் சொல்லிவிட்டன?

 பேருண்மை : 1
•  உலகம், பிரபஞ்சம் என்பது என்றென்றுமாய் இருக்கிறது!  அது மட்டுமே
        நிஜம், அடுத்து  பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும் அடித்தளம்,
        அதுவே மூல-மெய்ம்மை!

பேருண்மை : 2
•  உலகம், பிரபஞ்சம் அர்த்தமற்றது, குறிக்கோளற்றது!

பேருண்மை : 3
•  பரிணாமம் குறிக்கோளற்றது, மற்றும் அது ஒரு குருட்டு நிகழ்வுமுறை!

பேருண்மை : 4
•  மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!

பேருண்மை :5
•  (மனித)வாழ்க்கை  குறிக்கோளற்றது, மற்றும் அர்த்தமற்றது!

இவைதான், 400 ஆண்டுகளின்,   விஞ்ஞான-ஆராய்ச்சி முடிவுகளாக, உலகப்
புகழ்பெற்ற, நோபல் பரிசுபெற்ற பெரிய,பெரிய விஞ்ஞானிகள் கண்டறிந்து
விளம்பிய அரிய விஞ்ஞானப் பேருண்மைகள்! எவ்வளவு அற்புதமான அரும்
பெரும் வெளிப்பாடுகள்!

முதலிடத்தில்,   உலகம்,   பிரபஞ்சம் என்பது இருக்கிறது! அதை நாம் மறுக்க
வில்லை!   ஆனால்,  அது மட்டுமே நிஜம், அதாவது  பௌதீகச்சடப்பொருளே
மூல-மெய்ம்மை!   என்பது  'விஞ்ஞானிகள்'  என்று    சொல்லிக்கொள்கிறவர்
களின்   ஒரு  அக-வயமான கருத்தே,     விஞ்ஞானவகை மூட-நம்பிக்கையே!
இந்தத்  தவறான  தொடங்கு-புள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது ஆய்வு
கள் அபத்தமான முடிவுகளுக்குத்தான் இட்டுச்செல்லும்!

உலகம்,பிரபஞ்சம் மட்டுமே நிஜம்!பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும்
அடித்தளம்,  அதுவே  மூல-மெய்ம்மை!   உலகம்,   பிரபஞ்சம்   அர்த்தமற்றது,
குறிக்கோளற்றது!   பரிணாமம் குறிக்கோளற்றது,  மற்றும் அது ஒரு குருட்டு
நிகழ்வுமுறை! மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!
(மனித)வாழ்க்கை குறிக்கோளற்றது,மற்றும் அர்த்தமற்றது! இத்தகைய படு
அபத்தமான உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு விஞ்ஞானிகள்
எதற்கு? விஞ்ஞானம் எதற்கு? இருத்தலியல்வாதிகளே (Existentialists)
போதுமே?ஆய்வுக்கூடங்கள்,நெடும் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், அதற்
கான ஒதுக்கு நிதிகள் (Funds) ஆகியவையெல்லாம் எதற்கு?

மேலே பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஐந்து அபத்தமான கூற்றுக்கள்,உண்மை
யில்  விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளாக  இருக்க வாய்ப்பில்லை!  மாறாக,
ஆராய்ச்சிகளின் வழியாக திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து, சித்தாந்தச்சார்பு
கொண்ட   விஞ்ஞானிகளால்  தவறாகத்  திரித்துக்கூறப்பட்ட முடிவுகளாகத்
தான் இருக்கமுடியும்! இந்தலட்சணத்தில் இவ்விஞ்ஞானிகள் தத்துவத்தைக்
குறைகூறிக்கிளம்பிவிட்டார்கள்! 2,000 வருடங்களில் தத்துவம் முன்னேறவே
இல்லை; விஞ்ஞானம் மட்டும்தான் வளர்ந்துள்ளது, முன்னேறியுள்ளது என்று
சிறுபிள்ளைத்தனமாக புகார்சொல்லுகிறார்கள்!

ஒருவகையில்,  தத்துவச் சிந்தனையானது தொய்வடைந்து  காணப்படுவது
உண்மையே!   அதே நேரத்தில்,  "தத்துவம் செத்துவிட்டது!"  எனும்  ஸ்டீபென்
ஹாக்கிங்க்-ன் கூற்று அடிப்படையற்றது, அபத்தமானது. ஏனெனில்,விஞ்ஞா
னத்தைப்போல வழிவழியாகச் சேகரித்துத் திரட்டப்பட்ட அறிவுத்தொகுப்பி
லிருந்து கடன்வாங்கிய அறிவைக்கொண்டு தத்துவச்சிந்தனை  வளர்வதோ
முன்னேறுவதோ  இல்லை! ஏனெனில், தத்துவம் தொடர்ச்சியற்றது,  அதற்கு
வாரிசுகள்  கிடையாது!  அது சுயமாக சிந்திக்கும் தனிமனிதர்களின் அர்ப்ப
ணிக்கப்பட்ட  உணர்வில் மட்டுமே உயிர்வாழவும், வளரவும், வளர்ந்து,   கனி
கொடுக்கவும் கூடியது!  அது பல்கலைக்கழகங்களில்   பயிலக்கூடிய  பாடத்
துறையன்று!

இறுதி  உண்மை  (The Ultimate Truth) யைக்கண்டறிவதே   தத்துவம்
மற்றும் விஞ்ஞானம் இவ்விரண்டின் பொதுவான இலக்காக இருப்பதாக பல
காலமாக     பலராலும்  நம்பப்பட்டுவந்தது;   நானும்    அவ்வாறே   எண்ணிக்
கொண்டிருந்தேன்!   ஆனால்,  அது ஒரு தவறான புரிதல் என்பதை இப்போது
நான்  மிகத்தெளிவாகப்புரிந்துகொண்டேன்!   உண்மையில்  இவ்விரண்டின்
குறிக்கோளும்,  இலக்கும் வேறு வேறானவை யாகும்! இரண்டும் மனிதனின்
இரண்டு  வெவ்வேறு  தேவைகளை  நிறைவுசெய்யும் பொருட்டு, தோன்றிய
வையாகும்!

தத்துவம்   மனிதனின் அகத்தேவையான ஆன்மீகத்தேவையை நிறைவேற்
றும்   பொருட்டு   அறியாமையின் கரையிலிருந்து   "ஞானம்"  எனும் இறுதிக்
கரைக்கு  இட்டுச்செல்லும்  வழிகாட்டியாகும்!   பிரபஞ்சம்  எனும் புறவுலகம்,
மனிதன்   எனும்   அகவுலகம்  இவ்விரண்டையும் உள்ளடக்கிய  "வாழ்க்கை"
எனும்   முழுமையின்  உண்மையை  அறிவதே    தத்துவத்தின்   இலக்காகும்!
ஆனால்,    முழுமையின்   பகுதியான புறவுலகின்    உண்மையை      அறிவது
மட்டுமே   விஞ்ஞானத்தின்   இலக்காகும்!   எவ்வொரு   விஞ்ஞானமும்  அடிப்
படைக்கேள்விகளை   எழுப்பி,   அதாவது    தத்துவமாகத்தொடங்கி,    விபர-
உண்மைகளைத் (Facts)திரட்டி,  அவற்றைக்கொண்டு  கோட்பாடுகளைப்
பின்னி,   முடிவில்    தொழில் நுட்பத்தில் (Technology) முடிந்துவிடுகிறது!
விஞ்ஞானம்    மனிதனின் புறத்தேவைகளான    நடைமுறைத்தேவைகளை,
அதாவது  லௌகீகத்தேவைகளை   நிறைவேற்றும் விசுவாசமிக்க சேவகன்
ஆகும்!

தத்துவம்      புறவுலகையும்,   லௌகீக வாழ்க்கையையும்     மறுப்பதில்லை.
மாறாக,   அவற்றைக்கடந்து செல்கிறது. விஞ்ஞானம் அறிந்த,  கண்ணுக்குத்
தெரிகிற  உலக-விருட்சத்தின்   வேர்களில்   உண்மையைத்தேடிக்கொண்டு
இருக்கிறது!   தத்துவமோ   உலக-விருட்சத்தின்  உச்சியில்   அதன்  கனியில்
உண்மையைக் கண்டடைகிறது!

உண்மை என்பது உள்ளதை,   உலகை,  உய்த்துணர்ந்து அறியப்படுவதாகும்!
அவ்வாறு  உய்த்துணரப்பட்ட  உண்மை,  உய்த்துணரும்  (மனித) உணர்வின்
(மையமான) பகுதியாக  உருப்பெறுகிறதே தவிர,  அவ்வுண்மை ஒருபோதும்
பரு-உலகின்  பகுதியாக  இருப்பதில்லை!   ஆம்,   உலகைப்பற்றிய உண்மை
உலகைச்சேர்ந்தது அல்ல!

     •இக்கட்டுரைக்குத் தொடர்பான பிற கட்டுரைகளுக்கு காண்க எனது
                வலைத்தளம்   vicharamarg.blogspot.in

மா.கணேசன்/ நெய்வேலி/ 23.11.2016
----------------------------------------------------------------------------



Thursday, 24 November 2016

நானின்றி அமையாது உலகு!


















"நான்" என இங்கு  நான் குறிப்பிடுவது என்னைத்தான்!
ஏனெனில், "நான்" என என்னை நான் உணர்வது போல
இங்கும், இப்பிரபஞ்சத்தில் வேறெங்கும் எவரும் எதுவும்
இல்லை!

"உலகம் தான் அனைத்தும் என்பதுதான் விஷயம்!"
என்றனர் அதிகம் சிந்தித்த அறிவுஜீவிகள் பலர்!
"நான் இருக்கையில் உலகம் இல்லை!" என்றேன் நான்.

உலகம் இல்லாத நிலையில் நீ எங்கிருக்கிறாய்? என்றனர்.
"முதன்முதலாக உலகம் இருந்த இடத்தில்!" என்றேன்.
"பாழாய்ப் போச்சு!" என்றனர்.

"ஆம், உடலும், உலகமும், உலகைச்சார்ந்த யாவும் முடிவில்
அப்படித்தான் போகும்; ஆனால் பேருணர்வைச் சேர்ந்த நான்
இருப்பேன் என்றென்றும்!" என்றேன்.

ஏனெனில், பேருணர்வு என்பது அழிவற்றதும் ஒருமையும்
முழுமையுமானதொரு தனி மெய்ம்மை!
நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது  என்பதைப்போல
நான் பேருணர்வைச் சேர்ந்தவன்!

நான் மிகவும் முக்கியமானவன் என்பது பிரபஞ்ச உண்மை!
அவ்வாறே நீங்கள் ஒவ்வொருவரும் ஆகலாம்!
என்னைப்போல உங்கள் உள்ளார்ந்த  ஒப்பிடவியலா மதிப்பை
நீங்களும் உணர்ந்தறியும் பொழுது!

அட, சிந்தித்தறியாமல் வேடிக்கை பார்க்கிறவர்களே, நான்
உணர்ந்தது போல நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால்
நீங்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் இருப்பீர்கள், பேசுவீர்கள்!
ஆகவே சிந்திக்கத்தொடங்குங்கள் உடனே!

திடீரென கண் விழித்துப்பார்த்த போது நான் ஒரு ஏணியின் மீது
உயரே இருக்கக்கண்டேன். ஆம், ஏணியின் பகுதியாய், அதன் ஒரு
படியாய்!  கீழே பார்த்தேன், பல படிகள், அடியற்ற ஆழத்திற்குச்
செல்வதாய்த் தெரிந்தன!

மேலே அடுத்த படியில் ஏறலாமெனப் பார்த்தேன் - வேறு
படிகள் ஏதும் இல்லை! நான் நிற்பதே உச்சிப் படியாகவும், நானே
அப்படியாகவும் இருப்பதை உணர்ந்தேன்!

பிறகு புரிந்துகொண்டேன், அந்த ஏணி என்னுடன் முடிந்துவிட
வில்லை; என்னைக்கடந்தும் செல்வதாயிருந்தது; அதாவது
நானே என்னைக்கடந்து வளர்ந்து சென்றிடவேண்டும்!
நானின்றி இறுதி-மெய்ம்மை எங்ஙணம் நிகழும்?

அது மட்டுமல்ல, என்னைச்சுற்றிலும், என்னைப்போலவே
பலரும் நிற்கக் கண்டேன்! இது, ஒரு மரத்தில் பல பிஞ்சுகள்
காய்த்திருப்பதைப்போல இருந்தது!

என்ன? திடீரென ஏணி மரமாக மாறிவிட்டது எனக் குழம்பாதீர்!
உவமைகள் மாறுவது உலகம் நேர்-கோட்டுத்தன்மையில்
இல்லை என்பதைக்குறிக்கிறது!

உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, உண்மையில்
நானின்றி அமையாது உலகு! நீங்கள் சொல்லலாம் எத்தனையோ
கோடானுகோடி பேர் பிறந்து வாழ்ந்து மாண்டுபோயினர் என்று!

'உலகம் மட்டுமே நிலையானது' எனவும் சொல்வீர்கள்! ஆனால்,
நிலையானது, நீடித்து நிலைப்பது என்பதை நீங்கள் காலத்தைக்
கொண்டு அளவிடுகிறீர்கள்! இது ஒரு மகா தவறு!

ஏனெனில், காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை
உங்களால் அறியமுடியுமா? காலம்  என்பதே ஒரு காலாதீதத்
தனி-நிலைப் புள்ளியில் தோன்றியது தானே!

ஒரு கணக்குப்படி காலம் தோன்றி ஆயிரத்து ஐந்நூறு கோடி
ஆண்டுகள் ஆகின்றது! ஒரு வேளை இன்னும் ஆயிரத்து ஐந்நூறு
கோடி ஆண்டுகள்வரை காலம் நீடிக்கலாம்!

அதுவரை இந்த பூமி நிலைக்கவேண்டுமே? பூமி நிலைக்க
சூரியன் நிலைக்கவேண்டுமே! சூரியன் நிலைக்க பால்-வீதி
மண்டலமும் மொத்தப்பிரபஞ்சமும் நிலைக்கவேண்டுமே!

கவலை வேண்டாம்! நான் இப்போது இங்கு இருக்கிறேன்!
ஆகவே, நான் இருக்கும்வரை அனைத்தும் நிலைத்திருக்கும்!
நான் சென்றபிறகும், என்னைப்போன்ற பிற தனிமனிதர்களுக்காக
உலகம் இருக்கும்! காய்த்துக்குலுங்கும் மரம் உடனே பட்டுப்போகாது!

ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பும் என்னுள் குவிந்தது மையம் என!
ஏனெனில், நான் விசேடமானதொரு உணர்வாம்சம் என்பதால்
மட்டுமல்ல; என்னைக் குவியாடியாகக்கொண்டு என்வழியே
அந்த இறுதி  ஒருமையாம் பேருணர்வை அடைந்திடவே!

எனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்புறவு விசித்திரமானது!
நான் இல்லாமல் பிரபஞ்சம் இல்லை; பிரபஞ்சம் இல்லாமல்
நானில்லை! பிரபஞ்சம் விருட்சமானால் நான் அதன் கனி!
என்னுள்ளே விருட்சத்தின் மூலவித்து!

விருட்சத்தைப் பெரிதெனப் போற்றும் உணர்வுப் பிஞ்சுகளா!
வித்தைத் தன்னுள் கொண்ட கனியாக நீங்கள் மாறுவது எப்போது?
வித்தில்லாமல்  விருட்சம் இல்லை என்பது ஏன் புரியவில்லை ?
வித்திற்கும் வித்திற்கும் இடையே தோன்றும் நிகழ்வே விருட்சம்!
வித்துதான் மூலமும் முடிவுமான ஒரே நிஜம்!

பிரபஞ்சம் என்னைக்கொண்டுவந்தது; நான் பிரபஞ்சத்தை
முழுமையடையச் செய்கிறேன்! பிரபஞ்சம் எனக்காகவே
இருக்கிறது என்று சொல்வது படுஅபத்தமானது; நானும் அதற்காக
இல்லை; ஏனெனில் நாங்கள் இரண்டல்ல ஒன்றே!

நாங்கள் இருவரும் இணந்திருப்பது சாரமான வேறொன்றுக்காக!
வித்து விருட்சமாக விரிவதும், விரிந்தவிருட்சம் வித்தினுள்
அடங்குவதும், என்ன விநோதம், இதற்குப்பெயர்தான் பரிணாமம்!
ஆனால், வித்தின் மகத்துவம் விரித்துச் சொல்லவியலாதது!

நான் இப்பிரபஞ்சத்தினுள் இருப்பது எவ்வளவு உண்மையோ,
என்னுள் பிரபஞ்சம் இருப்பதும் அவ்வளவு உண்மையே!
நான் உதயமாகிய போது பிரபஞ்சத்தின் பகுதியாக இருந்தேன்!
நான் தலையெடுத்ததும் பிரபஞ்சம் எனது பகுதியாயிற்று!

பிரபஞ்சத்தின் பகுதியாக நீடிக்கும்வரை, மனிதா, உனக்குச்
சுதந்திரமில்லை! பிரபஞ்சத்தின் முழுமையாக மாறும் மனிதனே
சுதந்திரன்! பிரபஞ்சம் விருட்சமானால், மனிதா,  நீ அதில்
எத்தகைய பகுதி, என்பதைக் கண்டுபிடி!

நீ, அதன் ஒரு கிளையா? இலையா? பூவா? அல்லது பிஞ்சா?
பிரபஞ்சப்பிஞ்சு நீ எனில், உடனே காயாகி, முற்றிக் கனியாகிடு!
முழுமையாதல் மட்டுமே உனது முக்திக்கு ஒரே வழி!
நீ எங்கிருப்பினும், எதனுடைய பகுதியாகவும் இராதே!

நதியாக நீ இருந்தால் உடனே சமுத்திரம் சென்று சேர்ந்திடு!
ஏணியின் படியாக நீ இருந்தால் ஏறிக்கடந்து விண்ணில் தாவிடு!
வட்டத்தினுள் நீ ஒரு புள்ளியாக இருந்தால் அதன் மையமாகிடு!
அரை-உணர்வாய் நீ இருந்தால் முழு-உணர்வாகிடு!

நானின்றி அமையாது உலகு; எனது அறிதலுக்கும் அனுபவத்திற்கும்
வெளியே உலகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்!
அறிபவன்  நானின்றி சட-உலகம் தன்னைத் தானே அறியுமோ?
தன்னையறியாத இருப்பு இருந்தென்ன பயன்?

அட மனிதா!  பேரண்டம் பெரிது என்று சொல்லாதே!
அளவற்றதை அளக்கும் அளவுகோல் எது?
ஏனெனில், உலகை உணர்வு கொள்ளும் மனித-உணர்வே
உலகை, இப்பேரண்டத்தை விடப் பெரியது!

உலகம் என்பதென்ன? பௌதீக விஞ்ஞானிகளது பார்வையில்
அது வெறும் அணுத்துகள்களின் தொகுப்பே, இயக்கத்திலுள்ள
சடப்பொருளே! ஆனால், அவர்கள் அறிந்தது உயிரற்ற வெறும்
சடப்பிரபஞ்சத்தை மட்டுமே! பாவம், அவர்களது பார்வை
(பௌதீக) உலகை மையமாகக்கொண்டது!

ஆனால், எனது பார்வை என்னை மையமாகக் கொண்டது!
பிரபஞ்சம் கனபரிமாணத்தில் பெரிதாக இருப்பதில் எனக்கு
ஆட்சேபனையில்லை! இருந்துவிட்டுப்போகட்டும்! இன்னும்
அது என்றென்றும் நீடித்து நிலைப்பதாகவும் இருக்கட்டும்!
அது என்னுடைய பிரச்சினை அல்ல!

எனது வாழ்-காலம் ஒப்பீட்டளவில் மட்டுமே குறுகியது;
எனக்கு அதுவே போதுமானதிற்கும் அதிகமானது!
எவ்வளவு வருடங்கள் உயிரோடிருக்கிறேன் என்பதல்ல
எவ்வளவு விரைவாக எனதிலக்கை, முழு-உணர்வை
அடைகிறேன் என்பது மட்டுமே முக்கியமானது!

எல்லோரும் உலகைப் பிரதானப்படுத்துகிறார்கள்!
நான் என்னைப் பிரதானப்படுத்துகிறேன்!
என்வழியாக அடையப்படவேண்டிய உன்னத இலக்கிற்காக!
ஏனெனில், உலகின் உட்கிடக்கையை புரிந்தவன் நான்!

காலம், விரிவடையும் வெளி, அணுத்துகள்கள், நிறை, ஈர்ப்புவிசை
மின்காந்தவிசை, பொருள், எதிர்ப்பொருள், பல-பிரபஞ்சம்,
பத்துக்கும் மேற்பட்ட பரிமாணங்கள், மாறாமதிப்பளவை,வெற்றிடம்
ஒளி-வேகம், கருந்துளை, வெடித்துச் சிதறும் நட்சத்திரங்கள்
என விஞ்ஞானிகள் எதையாவது கதைக்கட்டும்!

ஒன்றுமில்லாததிலிருந்து வந்தது உலகம் என்பார் - ஒன்றையும்
அறியார்! பருப்பொருளே பரம்பொருள் என்பார்- பொருளின் பொருள்
அறியார்! கடவுள் படைத்தார் என்பார்- கடவுளைக்கண்டாரில்லை!
உலகம் மாயை என்பார்- உலகில் இருந்துகொண்டே!
உலகம் மட்டுமே நிஜம் என்பார்- தன் நிஜம் அறியாதார்!

அவர்கள் போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்! ஊழிக்காலம்வரை
தேடிக்கொண்டேயிருப்பார்கள்! அவர்கள் உலகையும் அறியார்,
மனிதனையும் அறியார், வாழ்க்கையையும் அறியார்!
நான் நேர்வழியைச் சொல்கிறேன்! மனிதா, நீ உன்னையறிவதே
அனைத்தையும் அறிவதாகும்!

மனிதா! உலகம் உன்னை வந்தடைந்ததும் அதன் பணி முடிந்தது!
இனி உலகம் உனது நிழல்! நீயே உலகின் புதிய பரிமாணம்!
உன்னுடன் தொடங்குகிறது புதியதொரு பரிணாமம்!
உலகம் தனக்காக இல்லை; மனிதா! நீயும் உனக்காக இல்லை!
பின் எதற்காக நீ இருக்கிறாய் என்பதன் உண்மையைக்
கண்டுபிடித்திடவே நீ  இருக்கிறாய்!

மனிதா! கல், மண், மற்றும் நீரால் ஆன உலகில் அல்ல நீ வாழ்வது!
மாபெரும் புதிருக்குள் அல்லவா நீ வாழ்கிறாய்!
ஆகவே அனைத்தையும் புதிரின் சொற்களுக்கு மாற்றிக்காண்!
இதுவே புதிரை விடுவிக்கும் எளிய வழி!

அழியும் சதையும் எலும்பும் ரத்தமும் சேர்ந்த உடலல்ல நீ!
அனைத்தையும் ஊடுருவி உய்த்துணரும் உணர்வு நீ!
ஆகவே அனைத்தையும் உணர்வின் சொற்களுக்கு மாற்றிடு!
அனைத்தையும் உணர்வு வயப்படுத்திச் செரித்துவிடு!

இதுவே உலகைக் கடந்திட உதவும் உன்னத உபாயம்!
பிரபஞ்சம் அது நீ பிறந்த கூடு, அது உனது அசலான வீடு அல்ல!
ஆகவே நீ உணர்வுச் சிறகுகளை விரித்துப் பறந்து வீடடைந்திடு!

நானின்றி அமையாது உலகு! நான் தோன்றியதும் பின்தங்கிற்று
உலகு! ஏனெனில், நானே உலகின் உயர் அவதாரம்!
நானின்றி அமையாது மானிடம்! நானே பிறர்க்கு ஆதாரம்!

என்னைப்பொறுத்தவரை உலகா? நானா? என்றால்
சந்தேகமின்றி நானே முக்கியமானவன்!
உலகைப்பொறுத்தவரையிலும் நானே முக்கியமானவன்!
இல்லாவிடில், உலகம் நானாக ஆகியிருக்காது!

பிரபஞ்சத்திற்கு நான் மிகவும் முக்கியமானவன், ஏனெனில்
அதன் உள்ளார்ந்த விழைவையுணர்ந்து நிறைவேற்றுபவன் நானே!
உயிரும் உணர்ச்சியுமற்ற சடமாகப்பிறந்த உலகின் உணர்வு நான்!

பிரபஞ்சத்துடன்  உணர்வுபூர்வமாகத் தொடர்புகொள்பவனே மனிதன்!
மற்றெல்லோரும் கூண்டுக்குள் அடைபட்ட பயனில் ஜந்துக்களே!
நான் தோன்றும்வரை எல்லாம் உலகைப்பொறுத்ததாயிருந்தது!
நான் தோன்றியபிறகு  எல்லாம் எனது பொறுப்பாயிற்று!

உலகம், இயற்கை பருப்பொருள் என்று போற்றிப்பாடுபவர்கள்
உலகின் உட்கிடக்கையைப் புரிந்துகொண்டாரில்லை!
உலகைச் சடமாகக்கொள்பவர்கள் தாமும் சடமாய்ச் சமைந்தனர்!
அல்லது ஒருபடி மேலேறி விலங்கோடு விலங்காயினர்!

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் உணர்வும்
குழந்தையாக, அதாவது அகந்தையாக இருந்தது நியாயம்!
நீங்கள் வாலிபனாகி, வளர்ந்தமனிதனாகி, வயோதிகனாகியும்
உணர்வில்  நீங்கள் வளரவேயில்லை! உடலின் வளர்ச்சிக்கேற்ப
ஊதிப்பெருத்ததென்னவோ உங்கள் அகந்தை மட்டுமே!

உலகின் பகுதியாக எங்கோ ஒரு ஓரமாக இருக்காதீர்!
உலகின் சாரமாக அதன் கனியாக மாறுங்கள்!
உலகை விலங்குகள் சரணாலயமாக எண்ணி வாழாதீர்!
உயர் பேரறிவாலயமாக மாற்றிடுங்கள்!

பின்னிட்டுப் பார்க்காத பிரபஞ்ச இயக்கத்தின் நீட்சி நான்!
நானும் பின்னிட்டுப்பார்ப்பதில்லை! எதனுடனும் தேங்குவதில்லை!
எனது ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு,  இறுதி-ஒருமையே!

நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உய்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் மகிழ்வு!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் முழுமை!
நானின்றி அமையாது உலகு!  ஏனெனில், நானே உலகின் உண்மை!

மா.கணேசன் / நெய்வேலி / 11.11.2016
---------------------------------------------------------------------------

Monday, 21 November 2016

உணர்வு எனும் மகாபுதிர்!




கண்ணாடி இல்லாமல்  உங்கள் முகத்தை நீங்கள் பார்க்கமுடியாது!
ஆனால், எதைக்கொண்டும் உங்கள் உணர்வை நீங்கள் புரிந்து
கொள்ளமுடியாது- யாதொரு விளக்கமுமுன்றி நேரடியாக உணர்வை
உணர மட்டுமே முடியும் - ஏனெனில், உணர்வு தான் நீங்கள்!

உணர்வைக்கொண்டு பௌதீகப்பிரபஞ்சம் மொத்தத்தையும் அதிலுள்ள
அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்-ஆனால், அப்பௌதீகப்
புரிதலைக்கொண்டு உணர்வைப்புரிந்து கொள்ள ஒருபோதும் இயலாது!
புதிர்களனைத்தையும் விடுவிக்கும் புரிந்தும் புரியா மகாபுதிர் உணர்வு!

ஏணியும் அதன் படிகளுமான இயற்கை இறுதியாக எட்டும் சூக்குமவெளி!
"நீங்கள் யார்?", "உணர்வு என்றால் என்ன?" எப்படிக்கேட்டாலும் ஒன்றே!
எப்படிக்கேட்டாலும் பதிலளிக்காத மௌனமே உணர்வும் பதிலும்!
யாவுமாகியதும் யாவற்றையும் கடந்து நிற்பதும் உணர்வே!

உணர்வே இயற்கையின் மூலகாரணமும் அதன் இரகசிய இலக்கும்!

                 * * * * *
"உணர்வு" (Consciousness) என்றால் என்ன? எனும் கேள்வி எளிமையான
தாகத் தோன்றலாம்;  ஆனால்  அது  அத்தகையதல்ல!  உணர்வு  என்பது மிக
நெருக்கமானதாகவும், பரிச்சயமானதாகவும் தெரியும் அதே நேரத்தில், அது
மிக அந்நியமானதும், தொலைவானதும் ஆகும்! உணர்வைப்புரிந்துகொள்ள
உணர்வைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.  ஆகவே,  அதிலிருந்து  பிரிந்து
நின்று நாம் அதை  ஆராய வியலாது. ஏனெனில், உணர்வு தான் நாம்! நம்மை
இயற்கையுலகின்     நீட்சியான   உடலாகப்  பாவித்துக்கொண்டு  உணர்வை
ஆராயப்புகுகிறோம்;   ஆனால்,   உடலாகத் தன்னைப் பாவிப்பதும்   உணர்வு
தான்,  அதாவது  மனித  உணர்வின் பிரமை,  அல்லது  தவறான அடையாளப்
படுத்துதல் தான்!

பல   நூற்றாண்டுகளாக    தத்துவவாதிகள்    உணர்வைப்     புரிந்து கொள்ள
முயன்று வந்துள்ளனர்;  விஞ்ஞானிகள் அப்பிரச்சினையை மறுத்துவந்தனர்,
பிறகு வேறுவழியின்றி, விஞ்ஞானதிற்குள்ளேயே எழுந்த  நிர்ப்பந்தங்களின்
காரணமாக,  இந்த 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகளும் களத்
தில் இறங்கியுள்ளனர் என்பதை ஒரு நல்ல செய்தியாகக் கொள்வது  என்பது
அவர்களது  ஆய்வு முடிவுகளைக்கொண்டே தீர்மானிக்கப்படமுடியும்!  ஏனெ
னில்,  உணர்வு  என்பது   ஒரு சோதனைக்குழாயில்  இட்டு  ஆய்வு  செய்திடக்
கூடியதொரு பொருள் அல்ல!

அதாவது,  ஒரு  அழகிய  சிற்பம் எத்தகைய பொருளால், அதாவது,  கருங்கல்,
பளிங்கு,   அல்லது,  வெண்கலம்,  அல்லது   வேறு எத்தகைய   உலோகத்தால்
ஆனது       என்பதை     விஞ்ஞானத்தின் மூலம்   எளிதில்    கண்டறிந்திடலாம்.
ஆனால்,  அச் சிற்பத்தின் "அழகு"  பற்றிய எவ்வித புரிதலையும்  விஞ்ஞானத்
தின்  மூலம்  கண்டறியவியலாது!  ஏனெனில்,  "அழகு" என்பது அக-வயமான
தொரு   அனுபவம்   என்பதால் அல்ல.  மாறாக, ஒரு  சிற்பத்தின் அழகு,   அது
எத்தகைய கல்  அல்லது   உலோகத்தால்   ஆக்கப்பட்டிருந்தாலும்,     அக் கல்,
அல்லது      உலோகத்தினுடைய   பண்புகளின்   வெளிப்பாடு    அல்ல!     ஆம்,
"உணர்வு"    என்பது    சிற்பத்தின்    அழகு போன்றது, அது மனித மூளையின்
செயல்பாட்டினால் வெளிப்படும் ஒரு விளைவு அல்ல! மாறாக,  மனிதமூளை
யின் செயல்பாடுகளைக் கொண்டு எட்டப்படும் ஒரு  விசேடமான இருப்பு-நிலை
அல்லது  பரிமாணம் ஆகும்!   அதாவது,   உணர்வு   என்பது    மூளையையோ,
அதன் செயல்பாட்டையோ சார்ந்திருக்கும் ஒன்றல்ல! மாறாக,  மூளையைக்
கொண்ட மனிதஜீவியும், மனிதஜீவியாக எழுந்த பருப்பொருள் பிரபஞ்சமும்
தான்  உணர்வைச்சார்ந்துள்ளன! இல்லாவிடில், பிரபஞ்சத்தின் பிறப்பு  நிகழ்
வாக     விஞ்ஞானிகளால்   குறிப்பிடப்படும்  பெரு-வெடிப்பிலிருந்து    சக்திப்
பொழிவாகவும்   அணுத்துகள்களாவும்  வெளிப்பட்ட  பிரபஞ்சம்,  1500 கோடி
ஆண்டுகளின்   பரிணாம   வழிமுறையின்   விளைவாக  இன்று உணர்வுள்ள
மனித ஜீவியாக   ஏன்  உருப்பெற்றிடவேண்டும்?   ஏனெனில்,   உணர்வு தான்
பரிணாம இயற்கையின் ஒரே இலக்கு ஆகும். அதாவது முழுமையானதொரு
உணர்வில்தான் பிரபஞ்சத்தின் உய்வு அல்லது முழுமை அடங்கியுள்ளது.

உண்மையில், உணர்வு என்பது பிரபஞ்சத்தின் மையத்துவமான (Central)
அம்சம் ஆகும்.   அதுவே பிரபஞ்சத்திற்கு அர்த்தம் அளிக்கும் அம்சமுமாகும்!
ஆனால், உணர்வாகத் தம்மை உணர்ந்திடவேண்டிய மனிதஜீவிகள், தம்மை
உடலாகவும்,   தாம்,   உலகை,  இயற்கையைச் சார்ந்திருப்பதாகவும்  கருதிக்
கொண்டிருக்கிறார்கள்  என்பது  மிகவும்  துரதிருஷ்டவசமானதாகும்!   இந்த
தவறான  புரிதலிலிருந்து  மனிதஜீவிகளை விடுவிக்கும் நோக்கில்தான் இக்
கட்டுரை எழுதப்படுகிறது!  உணர்வில்லையெனில்  மனிதர்களும் தவளைக
ளைப்போலவே யாதொரு புரிதலுமின்றி வெறுமனே உயிர்வாழ்ந்துசெல்வர்.
ஆம்,  மனிதஜீவிகள் தம்மை உணர்வாக உணரவில்லையேல்,  அவர்களுக்கு
உய்வில்லை!

ஆனால்,  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், அதிகம் சிந்திக்கும் தத்துவ
சிந்தனையாளர்களும்,       மெத்தப்படித்தவர்களும்,    அறிவுஜீவிகள்    என்று
சொல்லிக்கொள்பவர்களும்   மனிதஜீவிகளை   இன்னும்  விலங்குகளாகவே
காண்கின்றனர். மேலும், சில விஞ்ஞானிகள் உணர்வை மறுக்கவும்,அல்லது
அதை ஒரு முக்கியத்துவமற்ற உபரி விளைவு அல்லது உப-விளைவு எனவும்,
சொல்லிவருகிறார்கள்.   இன்னும்,  இயற்கைவாதிகளும், பொருண்மைவாதி
களும்,  சுருக்கல்வாதிகளும் உணர்வை இயற்கைப்படுத்திட (Naturaliza
tion),பல விஷயங்களில் அதுவும் ஒன்று என காண்பிக்க முயல்கின்றனர்.
நரம்பியல்துறை விஞ்ஞானிகள் உணர்வை மூளை நரம்புகளின் (Neurons)
அதாவது மூளையின் செயல்பாடுகளின் சொற்களில் விளக்கிவிடலாம் என்
கின்றனர்.  ஆனால்,  இப்பிரபஞ்சத்திலுள்ள எதைக்கொண்டும்  உணர்வைப்
புரிந்துகொள்ளவோ,  விளக்கிடவோ  முடியாது!  ஏனெனில், உணர்வு என்பது
ஒரு  அபௌதீக  மெய்ம்மை ஆகும்!   உலகம்,  இயற்கை  என்பது   பௌதீகப்
பண்பைக்கொண்டதாயிருப்பதால்,  இறுதி  உண்மை   அல்லது    மெய்ம்மை
என்பதும்  பௌதீகப் பண்பாகத்தான் அமையவேண்டும் என எதிர்பார்ப்பது
சிறுபிள்ளைத்தனமான தர்க்கமாகும்!

மேலும், பருப்பொருள் அல்லது  சடப்பொருள் என்பது,  உண்மையில்  என்ன?
அதன் மூலம், அல்லது அடிப்படை எது? பருப்பொருள் இருப்பதற்கான உரிய
நியாயம் அல்லது காரணம் என்ன? என்று எவ்விதக்கேள்வியும் ஆய்வுமின்றி
அதை அப்படியே அடிப்படையான நிஜமாகவும்,  முடிந்த முடிவான  நிஜமாக
வும்  ஏற்றுக்கொள்வது என்பது எவ்வகையில் விஞ்ஞானப்பூர்வமானதாகும்?
அப்படியே   சடப்பொருள்தான்   அடியும்   முடியுமான நிஜம் என்றே எடுத்துக்
கொள்வோம்!   ஆனால்,    அச்சடப்பொருள்   ஏன்,  எதற்காக  பரிணமிக்கவும்
உயிர் எனும் பண்பை நோக்கி உயர்ந்தெழவும்,அதையடுத்து, உணர்வு எனும்
பண்பை எட்டிப்பிடிக்கவும் வேண்டும்?

முக்கியமாக,   ஆரம்பம்   எதுவுமின்றி  சடப்பொருளால் நித்தியமாக இலங்க
முடியுமெனில், நிச்சயம் அதுவே மூல-மெய்ம்மையாக, "கடவுள்" எனச் சொல்
லப்படும் 'எல்லாம்வல்ல', எங்கும்நிறைந்த', எல்லாம்அறிந்த' மாய நிஜமாகத்
தான் இருக்கவேண்டும்!   இல்லாவிடில், எவ்வாறு,  உயிரற்ற,  உணர்ச்சியற்ற,
உணர்வுமற்ற சடப்பொருள்  ஒரு கட்டத்தில் உயிராகவும், இன்னொரு கட்டத்
தில்  (மனிதனுள்)  உணர்வாகவும்   உயர்ந்தெழ முடியும்?    இவ்வாறு   மாறிக்
கொண்டேயிருக்கும்  ஒரு பொருளை எவ்வாறு நாம்  "சடம்" எனும் பண்புடன்
பிணைத்து முடக்க முடியும்?   மேலும்,   உயிராகவும்,    மனித உணர்வாகவும்
எழுந்த  சடம்,  மனித  உணர்வைக்கடந்து   அடுத்தது என்னவாக எழக்கூடும்,
இன்னும்  இறுதியாக  அது   தன் பரிணாமப் பயணத்தில்,  எத்தகைய  பண்பு
நிலையை   எட்டக்கூடும்  என்பதைக்  கருதாமல்   எவ்வாறு பருப்பொருளின்
உண்மையான பண்பை, தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும்?   ஆக, பருப்
பொருள்     என்பது   இன்னதென்று   அறுதியிட்டுப்  புரிந்து கொள்ளாதவரை
பருப்பொருளும் ஒரு மாயப்பொருளே, புரியாப்புதிரே!

உண்மையில்  "பொருள்"   என்றால்  என்ன  என்று புரிந்துகொள்ளவேண்டும்
எனில்,   இறுதியாக  அது எத்தகைய பண்பாக,  அம்சமாக மாற்றமடைகிறது
என்பதைக்கொண்டே  முடிவு செய்திட முடியும்!  உண்மையில்  பொருள் என்
றால்   என்ன என்று புரிந்து கொள்வதும்,  "உயிர்"  மற்றும் "உணர்வு" என்றால்
என்ன  என்று   புரிந்து  கொள்வதும்   ஒன்று தான்!    ஏனெனில்,     மெய்ம்மை
என்பது ஒற்றைப்பண்பு கொண்ட ஏகமாகத்தான் இருக்க முடியும்;   பல்வேறு
பண்புகள்,   தன்மைகளின்  கலவையாக  விளங்க வியலாது!  ஆனால்,  அந்த
ஒற்றைப் பண்பு  எது,     அதை    எவ்வாறு    முடிவு செய்வது    என்பது குறித்த
விஷயத்தில்தான் தத்துவவாதிகள் பிரிந்து வேறுபட்டுப்போகிறார்கள்!

பரிணாமத்தில்  இதுவரை  வெளிப்பட்ட பண்புகளான  சடம், உயிர், உணர்வு
ஆகிய பண்புகளில் மேலானது, தலைமையானது எது என்று பார்த்தால், அது
நிச்சயம் உணர்வாகத்தான் இருக்கமுடியும்! மேலும் அந்த உணர்வைத்தான்
பரிணாமம் தன் இலக்காகக்கொண்டு 1500 கோடிஆண்டுகள் நெடிய பிரயத்
தனங்களின்    பலனாக   தற்போது   மனிதஜீவியினுள்   கண்டடைந்துள்ளது!

பரிணாமத்தில்   உணர்வு   என்பது   வெளிப்படாதிருந்தால்,  "பொருள்  தான்
முதல்",  இல்லை,  "கருத்துதான் முதல்" என்பன போன்ற தத்துவ சர்ச்சைகள்
எதுவும் எழாதிருந்திருக்கும்!  நாமும்  தவளைகளைப்போல வாழ்ந்துகொண்
டிருப்போம்!   இன்னும்,   உயிர்ஜீவிகளும்   தோன்றாதிருந்தால், வெறும் சடப்
பொருள் மட்டும் அநாமதேயமாக   தம் எந்திரத்தனமான பௌதீக  இயக்கத்
தில் ஈடுபட்டிருந்திருக்கும்!  

இல்லை, இக்கூற்றுகள்  யாவும் கற்பனை பூர்வமானவை! ஏனெனில், இப்பிர
பஞ்சத்தில்,   உயிர்   உள்ளது,   உணர்வுள்ள  மனித ஜீவியும்  உள்ளான்!   சடப்
பொருளும்     வெறும்   சடப்பொருளாக   அநாமதேயமாக    இருக்கவில்லை!
ஏனெனில்,   பொருண்மைவாதிகள்    எண்ணுவது  போல   பொருள்   என்பது
சுதந்திரமான தனிப்பொருள் அல்ல;  மாறாக, பொருளானது  பெரிதும்  நிர்ப்
பந்தத்திற்குட்பட்ட (Constrained)பொருளே யாகும்!   மேலும்,  பரிணாமம்
என்பதும்  ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டதொரு   இலக்கு   நோக்கி  முடுக்கி
விடப்பட்டதொரு   வழிமுறையே யாகும்!   எவ்வாறு,    சமுத்திரமே    நதியின்
இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாக  உள்ளதோ,   அவ்வாறே,     உணர்வே
பரிணாமத்தின்   இலக்கு   என   முன்-குறிக்கப்பட்டதாகும்!  அதே நேரத்தில்,
எவ்வாறு, சமுத்திரத்தைச் சென்றடையும் நதியின் பாதையானது முன்குறிக்
கப்படாதிருக்கிறதோ அவ்வாறே பரிணாமம் முன்னேறிச் செல்லவேண்டிய
பாதையும் முன்குறிக்கப்படவில்லை!   இந்த  அம்சம் தான் பரிணாமத்திற்கு
சுவைகூட்டுவதாக, எதிர்பார்க்கவியலாத , முன்னறியமுடியாத தன்மையை
தருவதாயுள்ளது!   எப்படி   எந்தப்பாதையில்  சுற்றிவளைத்துச் சென்றாலும்,
நதி இறுதியில் சமுத்திரத்தைச் சென்றடைந்தேயாக வேண்டும்!  அவ்வாறே,
பரிணாமத்திற்கு  உட்பட்ட  சடப்பொருளானது சென்றடையக்கூடிய, சென்ற
டைந்தேயாகவேண்டிய ஒரே இலக்கு உணர்வு என்பது மட்டுமேயாகும்!

ஒருவகையில், பரிணாம நிகழ்வுமுறையானது தற்போது கிட்டத்தட்ட தனது
இலக்கு நிலையை நெருங்கிவிட்டது எனலாம்.  அதாவது  சடப்பொருளானது
தனது   நெடிய   பரிணாமப் பயணத்தின்   தற்போதைய   கட்டத்தில்,  மனித
உணர்வை மட்டுமே எட்டியுள்ளது. அதாவது, மனிதஉணர்வு என்பது உணர்வு
நிலையின் ஒரு தொடக்கமே தவிர, அதுவே உணர்வின் முழுமை அல்ல! நதி
யானது முகத்துவாரத்தை மட்டுமே தொட்டுள்ளது, இன்னும் அது சமுத்திரத்
தைச்சேரவில்லை!

இப்போது,  சடப்பொருளை  ஒரு கருவியாக,  ஊடகமாகக் கொண்டு இயங்கி
வருகின்ற இயற்கை அல்லது பிரபஞ்சம் எனப்படும் பரிணாமநிகழ்வுமுறை
யின்  முழுமையும்,  அதாவது,   சடப்பொருளின் உய்வும்,  யாவும்   ஒவ்வொரு
மனித ஜீவியினுடைய உணர்வுப்பரிணாமத்தையே சார்ந்துள்ளன! இன்னும்,
ஒவ்வொரு   மனிதனின் உய்வும்,   முழுமையும்   ஒவ்வொருவரும்   அடையக்
கூடிய உணர்வின் முழுமையையே, "முழு-உணர்வை"யே சார்ந்துள்ளன! இது,
எதற்கு ஒப்பாக இருக்கிறது என்றால்,  ஒரு மரத்தில் நிறைய காய்கள் காய்த்
துள்ளன. அதில், ஒவ்வொருகாயும் நன்கு முற்றிக்கனியாக மாறுவதில் தான்
ஒவ்வொரு காயின் நிறைவும், முழுமையும் அடங்கியுள்ளன! அதேநேரத்தில்,
அம்மரத்தின்  முழுமையும்   ஒவ்வொரு காயும்  கனியாவதில் தான்  உள்ளது.
ஏனெனில்,  கனிகள் தான்   ஒரு மரத்தின்   முழுமையைப்   பிரதிநிதித்துவம்
செய்யும் அம்சங்களாகும்!   அதாவது,   மரமானது  தன்  ஒவ்வொரு கனியின்
வழியாகவும்தான் தன்னைக் கடந்து செல்வதாயுள்ளது!

முக்கியமாக,    ஒரு மரத்திற்கும்  அதன் காய்கள் அல்லது கனிகளுக்குமான
தொடர்புறவைச் சரியாகப்புரிந்து  கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெ
னில்,    இதைப் போன்றதே,  உலகம்  அல்லது  பிரபஞ்சத்திற்கும்,  மனிதஜீவி
களாகிய நமக்குமான தொடர்புறவும் ஆகும்!  மனிதன் என்பவன் பிரபஞ்சத்
தின்   முக்கியத்துவமற்ற   ஏதோவொரு  ஓரத்திலுள்ள பகுதி அல்ல! மாறாக,
ஒரு மரத்தின்  காய்கள்,  கனிகள்  வகிக்கும்  மிக   மையமான  இடத்தையும்,
பாத்திரத்தையும்   கொண்டவனாவான்!    ஆம்,  பிரபஞ்சவிருட்சத்தின்  காய்
களையும்,  கனிகளையும்  போன்றவன்  மனிதன்!   ஆனால்,  துரதிருஷ்டவச
மாக,  மனிதர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையில் "உணர்வு" தான் எனும்
உண்மையை உணர்ந்தவர்களாக இல்லை!  தாங்கள் உண்மையில் பிரபஞ்ச
மளாவியவர்கள் என்பதை உணராதவர்களாக,   அதாவது,  பரந்த பிரபஞ்சப்
பரிணாமத்திட்டத்தில் தமது இடம், பங்கு, பணி,பாத்திரம்,பொறுப்பு,மற்றும்
முக்கியத்துவம் ஆகியவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக இல்லை!

மாறாக,  மனிதர்கள் இன்னும் தங்களைத் தங்களது  உடலுடன் அடையாளப்
படுத்திக்கொண்டு,   பெரிதும்    உடல்-ஜீவிகளாகவே  உணவு,   உடை,  உறை
விடம், உறவுகள் என உயிர்வாழ்ந்து செல்கின்றனர்!  உணர்வின்  ஜீவிகளாக
இன்னும் எழவில்லை! மனிதர்கள் இன்னும்  தங்களைப்பற்றிய  உணர்வுக்கு
வரவில்லை!  மனிதர்களுக்கு   "சுய-உணர்வு"   இருக்கிறது   என்பது  வெறும்
பெயரளவுக்கு மட்டுமேயுள்ளது. மனிதர்களது சுய-உணர்வு என்பது, சிறிதும்
ஆழமான வகையில்   சுயத்தைப் பற்றியதாகவும்   இல்லாமல்,   உணர்வைப்
பற்றியதாகவும்  இல்லாமல்,  மிகவும்  மேலோட்டமானதாகவே உள்ளது!

விலங்கினத்திலிருந்து  தோன்றிய  மனிதஜீவியானவன் உணர்வு பெறுவதற்
கான அடிப்படை அம்சமான நன்கு வளர்ச்சிபெற்ற மூளையுடன்  வந்தாலும்,
உணர்வை உணர்வு கொள்வதும்,  உணர்வில் ஆழ்ந்து  நிலைப்பதும்,  மேலும்
மேலும்  உணர்வில் பெருகி உயர்வதும், அவன்  எந்த அளவிற்கு  உணர்வுக்கு
வருகிறான் என்பதைப்பொறுத்த விஷயமாகும்! பொதுவாக மனிதர்களுக்கு
"தாம் இருக்கிறோம்!" என்பது தெரியும்;  ஆனால், தாம் ஏன், எதற்காக   இருக்
கிறோம்? உண்மையில் தாம் யார்? வாழ்க்கை என்பது வெறும் உயிர்பிழைத்
தல் மாத்திரம்தானா?   வாழ்க்கையின்  உண்மையான  குறிக்கோள், இலக்கு
என்ன? என்பதெதுவும் தெரியாது! இக்கேள்விகளை அவர்கள் கேள்விப்பட்டு
இருப்பார்களா  என்பதுகூட சந்தேகமே!   இவை   வெறும்  கேள்விகள் அல்ல!
இவை  சாதாரண மனித உணர்வைப்   பேருணர்வாக  மாற்றமுறச் செய்யும்
இரசவாத மந்திரங்கள் ஆகும்!

உண்மையில்,   "உணர்வு"    என்றவுடன்   விஞ்ஞானிகளும்,   உணர்வு பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நரம்பியல்துறை வல்லுனர்களும், தத்துவவாதி
களும்;  எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,
மூளை  செயல்படும் முறை  ஆகியவற்றின் சொற்களில் உணர்வை விவரிக்
கும் நெடும்பணியில் இறங்கிவிடுகின்றனர்!  உண்மையில்  இவ்வம்சங்கள் :
எண்ணங்கள், உணர்ச்சிகள், மனக்காட்சிகள், அறிநிலை, அனுபவம்,  இன்ன
பிற  யாவும்    உணர்வின்  வெளிப்பாடுகளே,   உணர்விலிருந்து   பெறப்படும்
அம்சங்களே தவிர, இவை வேறு, மிகத்துல்லியமாக  உணர்வு  என்பது வேறு!

பரவலாக,   விஞ்ஞானிகள்  மற்றும்    தத்துவ சிந்தனையாளர்கள்  மத்தியில்
நிலவும்   ஒரு   கருத்து  என்னவென்றால்,   "உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்"
(The science of consciousness)என்பது  முரண்பாடானது,  பொருத்த
மற்றது என்பதேயாகும்!   இக்கூற்றில் உண்மையில்லாமலும்  இல்லை. அதே
வேளையில், இக்கூற்று முழுமையான உண்மையும் இல்லை! அதாவது  விஞ்
ஞானம்  தொடர்ந்து  தனது  பழைய,  எந்திரத் தனமானதும், சுருக்கல் வாதத்
தனமானதும், பொருண்மையானதுமான அணுகுமுறையில் தொடரும்வரை
அதனால் ஒருபோதும் உணர்வைப்புரிந்துகொள்ள இயலாது! அதேநேரத்தில்
உணர்வைப் புரிந்துகொள்ளாவிடில் விஞ்ஞானம் முழுமையடையாது!

மேலும், விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையே நிலவிவரும்  எதிர்ப்
புணர்வும், பகைமையும் ஆரோக்கியமானதல்ல!  இரண்டும்  தம்தம் அணுகு
முறையில் வேறுபடுகின்றனவேதவிர, இரண்டிற்கும் உண்மையை அறிவது
ஒன்றே இலக்குஆகும்! கலை, கவிதை, இசை, இலக்கியம், சமயம், ஆன்மீகம்
இவையும்  அறிதல் முறைகளே;   இவை  இயங்கும் தளங்கள் மட்டுமே வேறு
வேறு ஆகும்.  அறிதல்முறைகள் வெவ்வேறாயினும், அவை பரஸ்பரம் தமது
கனிகளைப்  பரிமாற்றம்  செய்து கொள்ளும் வகையில்,   திறந்த   அமைப்பு
களாகத் திகழ்வது அவசியமாகும்!

விஞ்ஞானம்   என்பது   புறவயமானது (objective), பொதுப்படையானது
(public) எனப்படுகிறது!   அதே வேளையில்,    உணர்வுப்பூர்வ  அனுபவம்
என்பது அகவயமானது (subjective)மற்றும் தனியொருவருக்குச்சொந்த
மானது   அதாவது,   அந்தரங்கமானது (private) எனப்படுகிறது!   ஆகவே,
"உணர்வைப்பற்றிய விஞ்ஞானம்" (science of consciousness)என்பது
முரண்பாடானது,  பொருத்தமற்றது  என்பதாக முழங்கப்படுகிறது!  ஆனால்,
இக்கூற்று  தன்  தர்க்கத்தைத் தொலைத்துவிட்ட குருட்டுவாதமாகும்!  ஏனெ
னில்,     "உணர்வு"   என்பது அதன் அடிப்படையிலும், அதன் சாரத்திலும் அக
வயமானது  என்பதுதான்  உணர்வைப்பற்றிய  மையமான  உண்மையாகும்!
மேலும், அகவயமான அம்சங்கள், மனம், உணர்வு, அனுபவங்கள் ஆகியவை
புறவயமான,   பொருண்மையான   உலகின்    வெளிப்பாடுகள்   மாத்திரமே;
ஆகவே, அவை பொருண்மையான அம்சங்களைப்போன்ற நிஜங்கள் அல்ல
எனும் கருத்து தவறானது. உண்மையில்,புறவயமானதும்,பொருண்மையான
துமான அம்சங்களையும், பொருட்களையும் விட அதிக  நிஜத்தன்மையுடை
யது (objective)மனம், அல்லது உணர்வு எனப்படும் அம்சமேயாகும்!   எவ்
வாறெனில்,  உணர்வும்,   அதன் கருவியுமான மனமும்   இல்லாமல்  நம்மால்
எதையும் அறிந்துகொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலாது!

அடுத்து,  விஞ்ஞானம்  என்பது என்னவாயிருந்தாலும்,  "எது"  இப்புறவுலகை,
பிரபஞ்சத்தைப் பார்க்கிறது, அறிகிறது, ஆராய்கிறது, அதைப்பற்றிய கோட்
பாடுகளை உருவாக்குகிறது என்றால், அது அகவயமான,  தன் சொந்த அனுப
வத்தை வேராகக்(Root)கொண்டதொரு மனித-உணர்வே ஆகும்! அதாவது,
"உணர்வு"  என்பது  என்னவாயிருந்தாலும்,  விவரித்து  விளக்கமுடியாததாய்
இருந்தாலும், விஞ்ஞானம் என்பது மனித - உணர்வின் ஒரு வெளிப்பாடல்லா
மல் வேறென்ன? விஞ்ஞானம் என்பது நேரே சொர்க்கத்திலிருந்து  இறங்கிய
ஒன்று அல்ல! அதாவது, மனித-உணர்வு இல்லாமல் விஞ்ஞானம் இருக்கமுடி
யாது!  அதாவது புறவயமானதும், கறாரான முறைமைகளைக்கொண்ட ஒரு
அறிதல் முறை எனப்படும் விஞ்ஞானம் உண்மையில் அகவயமான பார்வை
யின்  மிகவும் வித்தியாசமானதும், விபரீதமானதுமான  ஒருவகைப் பார்வை
ஆகும்!   எவ்வகையில்  விபரீதமானது என்றால்,  அகவயமானது   எனப்படும்
பரிமாணத்தை மையமாகக்கொண்ட உணர்வு என்பதையே அது அடியோடு
மறுக்கக்கூடியதாக,  'கிணறு வெட்ட கிளம்பியது பூதம்'   என்கிற வகையில்!

உண்மையில்,   எல்லாவித  அறிதலும்,  புரிதலும்,  பார்வையும்  அகவயமான
வையே! விஞ்ஞான அறிதல் முறையானது அது பிரதானமாக ஆராயக்கூடிய
பருப்பொருளின்பண்புகளாலும்,அதன் விதிகளாலும் பெரிதும் கட்டுப்படுத்
தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. ஆனால், உயிருள்ளஜீவியானது,அது என்ன
தான்  பருப்பொருளால்  ஆனதாயிருந்தாலும்,   அதன்  பண்புகள் முற்றிலும்
வேறானது என்பதால், பருப்பொருளின் பௌதீக விதிகளைக்கொண்டு ஒரு
உயிர்ஜீவியை புரிந்துகொள்ளவியலாது! அதாவது,  பௌதீக விதிகள்  வேறு,
உயிரியல் விதிகள் வேறு; அதைவிட, உணர்வியல் விதிகள் முற்றிலும் வேறு!

உயிரற்ற சடப்பொருட்களுக்கும்,  உயிருள்ள ஜீவிகளுக்கும் உள்ள வித்தியா
சத்தை, இடைவெளியை எவ்வித அறிதலைக் கொண்டும் விளக்கிப்போக்கி
விடமுடியாது!  அடுத்து,   சடப்பொருட்களுக்கும்,  உணர்வுள்ள  ஜீவிக்குமான
வித்தியாசம்  முன்னதைவிட  அனந்த-அளவு  பெரியது!  அதாவது,   உணர்வு
(ஒரு முழுமையான உணர்வு) சடப்பொருளாலான ஒட்டுமொத்த  உலகையே
முடிவிற்குக்கொண்டு வந்துவிடக்கூடியதாகும்!

உண்மையில்,  "நமக்குப்புறத்தே வெளியே ஒரு உலகம் உள்ளது!"   என்பதும்,
"அது நம்மைவிடப்பெரியது!",    "நாம் அதன் முக்கியத்துவம் ஏதுமற்ற பகுதி",
"ஆரம்பமும் முடிவுமின்றி   இருப்பது  இந்தப் பௌதீகப்பிரபஞ்சம் மட்டுமே",
"உயிர்த்தோற்றம் விபத்துரீதியானது!",     " உணர்வு  என்பது   மூளைச்செயல்
பாட்டின் ஒரு விளைவு!", "மனிதஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்
களே!","மனிதனுக்கு யாதொரு நிரந்தரசுயமோ,சுதந்திரசித்தமோ இல்லை!"
"பரிணாமம்  குறிக்கோளற்றது; பிரபஞ்சம் அர்த்தமற்றது!"  என்பன போன்ற
கூற்றுக்களும், அர்த்தமற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையாகும்.

உண்மையில், அகம் xபுறம்,  அகவயம் xபுறவயம், உடல் xமனம், ஆகிய பிரச்
சினைகள்  மிகவும் நுட்பமானவையாகும்.  அவற்றை  நாம்  மிக நுட்பமாகப்
புரிந்துகொள்ளவேண்டும்.    முதலிடத்தில்,  அகம் xபுறம்  எனும்  பிரச்சினை
யைத் தோற்றுவித்தது மனிதனல்ல! மாறாக,  இயற்கையே, உலகமே ஆகும்.
முதன்முதலாகத்  தோன்றிய உயிர்ஜீவியுடன் தான் அகம் xபுறம்  எனும்  இப்
பிரச்சினை தொடங்கியது! அதாவது, இயற்கையுலகம் தான் தனது சடத்தன்
மையைக்கடந்துசெல்லும் பொருட்டு உயிர்ஜீவியாக அவதாரம் எடுத்தது!

இயற்கை மட்டும் உயிர்ஜீவியாக பரிணமிக்கவில்லையெனில், அகம்xபுறம்
எனும்    இந்தப் பிரச்சினை, பிளவு, பிரிவினை, முரண்பாடு  எழுந்திருக்காது!
ஆனால், இயற்கை அல்லது, பருப்பொருளால் பரிணமிக்காமல், மாற்றமடை
யாமல்  இருக்க முடியவில்லை!   உண்மையில்,   இயற்கையால்    தொடர்ந்து
இயற்கையாக   இருக்கமுடியாதபோது,  அதை  'இயற்கை'  என்று  சொல்வது
எவ்வகையில்  பொருத்தமானதாயிருக்கமுடியும்?  (காண்க :  "இயற்கையின்
இயற்கை என்ன?' 31.10.2016 @ vicharamarg.blogspot.in) மேலும்,   அது
எத்தகைய இயற்கையாக இருக்கும்?  அடிப்படையில், பிரச்சினை  உலகத்தி
னுடையதே;பருப்பொருளாலான உலகம் பரிணமிக்காமல் இருக்கமுடியாது!
அதற்கு  பருப்பொருளினுள்  உள்ளமைந்த  படைப்புப்பூர்வமான சுய-முரண்
பாடுதான் காரணமாகும்!

அதாவது, ஒரு மையமின்றி அநாமதேயமாக எந்திரத்தனமாக இயங்கிவந்த
அணுத்துகள்களான பிரபஞ்சமானது சுய-அமைப்பாக்க  (Self-Organiza
tion)வழிமுறையில்,   தனி-மையப்பட்டு (Individualization) எழுந்த
நிலை அல்லது அவதாரம் தான் உயிர்ஜீவி என்பதாகும்! உண்மையில்,  புறத்
திற்கும்,  அகத்திற்கும்;   உலகம்(சுற்றுப்புறம்) என்பதற்கும்,   உயிர்ஜீவிக்கும்
இடையே யாதொரு பகையோ, முரண்பாடோ, எதிர்ப்போ எதுவும்கிடையாது.
இத்தகைய நிலையை,   நாம்  "காரியவாத-முரண்பாடு"   என்றழைக்கலாம்!
இவ்வகையில் காணும்போது,   டார்வினின்   'உயிர்-பிழைப்புப் போராட்டம்',
'வலியதே வாழும்',   'இயற்கைத்தேர்வு'   ஆகியவை  தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட கோட்பாடுகளே எனலாம். 'இயற்கையே'  பரிணாமத்திற்கு  உட்படு
கிற,   மாறுகின்ற  இயல்பைக் கொண்ட பொருளாக, கருவியாக,  ஊடகமாக
இருக்கும் பட்சத்தில்,  அங்கே  எந்த இயற்கை,  எந்த இயற்கையைத் "தேர்வு"
செய்யும்??

முதல்  உயிரியான அமீபா (அல்லது ஏதோவொரு பாக்டீரியா) வின்  வருகை
தான் உலகை புறம் எனவும், அகம் எனவும் இரண்டாகப்பிரித்தது.   எனினும்,
தான் ஒரு "அக-ஜீவி" (அகத்தை,உணர்வை மையமாகக் கொண்ட ஜீவி) என்
பதை உணரும் அளவிற்கு அது தன் அகத்தில் (உணர்வில்) ஆழப்படவில்லை.
அதற்கு "சுய உணர்வு" எனும் அவ்வரிய அம்சம் இல்லை. ஆகவேதான், அந்த
அமீபா தான், நெடிய பரிணாமப் பயணத்தின் வழியாக தற்போது சுயவுணர்
வையுடைய மனித ஜீவியாக எழுந்துள்ளது.  ஆம்,   அகம் என்பது  அதற்குரிய
உணர்வுப்பரிமாணத்துடன் முதன்முதலில் மனிதனுடன் மட்டுமே தொடங்கு
கிறது.

உணர்வைப்பற்றிப்பேசும்போது, மனிதஜீவியின் அகவயப் பரிமாணத்தைக்
கணக்கில் கொள்ளாமல்,  ஆகவே   மனிதனையும்  கணக்கில் கொள்ளாமல்
உணர்வின் சமன்பாட்டைச் சமன்செய்ய இயலாது! ஏனெனில், உணர்வுதான்
மனிதன்!  மனிதன் என்பவன் உணர்வேதவிர அவனது மூளையோ, உடலோ
அல்ல! சாதாரண பேச்சுவழக்கில்,  நாம் "உணர்வுள்ள-மனிதன்", மனிதனின்
உணர்வு" என்றெல்லாம் சொல்கிறோம்! ஆனால், உண்மையில்,மனிதனுக்கு
கைகள்,கால்கள்உள்ளன என்பதைப்போல,அவனுக்கொரு உணர்வு உள்ளது
என்று சொல்வது தவறானபுரிதல் ஆகும். மாறாக, மனிதன் உணர்வேயன்றி
வேறெதுவுமல்ல!    " உணர்வுதான் தான்!"   என்பதை   உணரும்  போது தான்
மனிதன் உண்மையில் மனிதனாகிறான்; அதுவரை அவனும் ஒரு விலங்கே!

உணர்வை  அகவயமானதொரு  அம்சம்  என்றுசொல்லி  அதை புறவயமான
உலகிற்குக் குறைச்சலான   விஷயமாகக் கருதுவது  தலைகீழான புரிதலின்
வெளிப்பாடே!   மனிதனுடைய  அறிதலுக்கும்   அனுபவத்திற்கும்   வெளியே
உலகம் இருந்தாலும்,   இல்லாவிட்டாலும்    ஒன்றுதான்!   உலகம் அர்த்தப்பட
வேண்டுமானால்,  உணர்வு  வேண்டும்!   ஆகவேதான்,   பருப்பொருளாலான
உலகம் மனிதனாக(மனித-உணர்வாக)ப் பரிணமித்தது! உயிரும்,உணர்வும்
பிரபஞ்சத்தின்  கட்டாய   விழைவும்   (Cosmic Imperative)  தேவையும்
ஆகும்!   உணர்வு  என்பது,  சடப்பிரபஞ்சத்திற்குள்  எழுந்த உயிர்ப்பிரபஞ்சத்
தின் வழியாக எட்டப்பட்ட மூன்றாவது பிரபஞ்சம் ஆகும்!   இந்த மூன்றாவது
பிரபஞ்சம்  என்பது ஒரு தாழ்-நிலை உணர்வின் சுற்றுப்பாதை (Orbit)என
லாம்!   இதுவரை நிகழ்ந்தேறிய பரிணாம வழிமுறையானது மனிதஜீவியை
இந்தத்   தாழ்-நிலை   உணர்வின்  சுற்றுப்பாதை   (The Lowest Orbit of
Consciousness)யில் ஏவியுள்ளது!  இச்சுற்றுப்பாதையிலிருந்து உணர்வின்
உச்சிப் புள்ளியை (The Summit of Consciousness) எட்டுவது  என்பது
ஒவ்வொரு        தனி மனித ஜீவியினுடைய     உணர்வார்ந்த      விழைவையும்
பொறுத்ததாகும்! அந்த உணர்வின் உச்சியே இறுதி-மெய்ம்மை (Ultimate
Reality)ஆகும்!   அதுவே   அனைத்திற்கும் ஆதியான மூல- மெய்ம்மையும்
ஆகும்!

ஆனால், உணர்வின்ஜீவிகளாக உயர்ந்தெழ வேண்டிய மனிதர்களில்  அறிவு
ஜீவிகளும்,விஞ்ஞானிகளும்,தத்துவவாதிகளும் உணர்வை  உடலியலுடனும்
பொருளியலுடனும் தொடர்புபடுத்தி தாங்களும் குழம்பி,பிறரையும் குழப்பி
வருகின்றனர்; சாமானியர்களோ அன்றாடஉயிர்வாழ்தலின் தேவைகளைக்
கடந்து  சிந்திக்கத் தொடங்கவில்லை இன்னும்!  விஞ்ஞானிகளின்  குழப்பத்
திற்குக்காரணம் அவர்கள் மனிதனை பிரதானமாக ஒரு  உடலியல்ஜீவியாக
காண்பதும், அதைவிட முக்கியமாக, அவர்கள் உணர்வை நேரடியாக முதல்-
நபர்  கண்ணோட்டத்தில்  காணாமல்,   ஒரு  மேசையைக்  காண்பதுபோலக்
காண முயற்சிக்கிறார்கள்;   இந்த முதல்-கோணல், முற்றிலும் கோணல் என
ஆகிவிடுகிறது!  அதாவது,  மூளையும்,  அதன் செயல்பாடுகளும்  உணர்வை
உருவாக்குவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்; ஆகவே மூளையை அவர்கள்
மிக  விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்!   ஆனால்,    சந்தேகமின்றி,
மூளையும்,அதன்செயல்பாடுகளும் உணர்வை எட்டுவதற்காகப்பயன்படுத்
தப்படுகின்றன!    மேலும்,    மனித-மூளை  மட்டுமல்லாமல்,  மனித உடலும்,
இன்னும்  ஒட்டு  மொத்த   உயிரியல்  தளமும்,   ஒட்டுமொத்த     பிரபஞ்சமும்
உணர்வை எட்டுவதற்கான நெடிய ஏணியாகப் பயன்படுத்தப்படுகிறது!

உணர்வைப்பற்றிய அதிமுக்கியமான ஒருஉண்மை என்னவெனில்,உணர்வு
என்பது  அனைத்திலும் இறுதியானது!  ஆம், உணர்வு  என்பது பிரபஞ்சத்தில்
உள்ள பல்வேறு பொருட்களில்,  பண்புகளில்,  அம்சங்களில், அதுவும் ஒன்று
அல்ல! உணர்வே அனைத்திலும் இறுதியானது என்று இங்கு நாம்  குறிப்பிடு
வது, மனித-உணர்வை அல்ல; மாறாக,ஒவ்வொரு மனிதனாலும் எட்டப்படக்
கூடியதும், எட்டப்படவேண்டியதுமான,  அதேநேரத்தில்,  மனித-உணர்வைக்
கடந்த தொரு, பேருணர்வு,  அல்லது   முழு-உணர்வையே குறிப்பிடுகிறோம்!

உணர்வுதான் யாவற்றுக்கும் அடிப்படையான மூலமெய்ம்மையும்,முடிவான
இறுதிமெய்ம்மையும் என இக்கட்டுரையாளர் முன்வைத்திடும் வேளையில்,
உணர்வை முற்றிலுமாக மறுத்திடும் போக்கு ஏற்கனவே வேர்பிடித்து  வெகு
காலமாக தழைத்துக்கொண்டிருக்கவே செய்கிறது!   பிரெஞ்சு தத்துவவாதி,
ரெனே தெகார்த்  (René Descartes (1596–1650)  தொடங்கி    வைத்த
"மனம்-உடல்"  பிரச்சினை  இருமை வாதத்தை (dualism)தத்துவத்திற்குள்
கொண்டுவந்துவிட்டது  பொருண்மைவாதிகளுக்கு  பெரும் தலைவலியாகி
விட,   அவர்களில்  பலரும்  பலவழிகளிலும் இருமைவாதத்தைப்போக்கிவிட
முயன்றனர்,   இன்றளவும்  முயன்றுவருகின்றனர்.  ஆனால், இவர்களுடைய
நோக்கம்,    இருமையை நீக்கி   ஒருமையை   நிலை நாட்டுவதல்ல.   மாறாக,
'பொருண்மையே  அந்த மாபெரும்  ஒருமையும், மூலமெய்ம்மையும்'   என்று
நிரூபிக்கத்தான்!

ரெனே தெகார்த்   தொடங்கி வைத்த   அந்த   "மனம்-உடல்"  பிரச்சினையை
இவ்வாறு எளிமையாகவிளக்கிடலாம்.அதாவது, எனது உடலும், மனமும் மிக
நெருக்கமான   தொடர்பில்    பிணைக்கப்பட்டுள்ளதால்,   அவை   இரண்டும்
"நானே"  என  நான் எண்ணுகிறேன்.  ஆயினும்  உடலும், மனமும்   முற்றிலும்
வெவ்வேறான  தன்மை கொண்டவை  என நான்  கருதும்  பட்சத்தில்,    நான்
என்பது என் மனமா? அல்லது, நான் என்பது என் உடலா? அல்லது,   நான் என்
பது இரண்டுமா?  அப்படியானால்,   இரண்டுக்குமான தொடர்பு தான் என்ன?  
இதுதான் "மனம்-உடல்"  பிரச்சினை!

நிஜத்தில்,  மனத்துக்கும்,  உடலுக்கும்  இடையே பிரச்சினை ஏதும் உள்ளதா?
அல்லது தத்துவவாதிகளின் குழம்பிய சிந்தனை  பிரச்சினை  இருப்பதாகக்
கற்பிக்கின்றதா?   விஷயம்  என்னவெனில்,  முதலிடத்தில், உடலும் மனமும்
என்னுடையவை எனும் பட்சத்தில், அவை நானாக முடியாது. அதாவது  எனது
உடமைகள் என்னுடையவையே; ஆனால், அவையும் நானும் ஒன்றல்ல!எனது
வீடும் நானும் ஒன்றல்ல. எனது வீடு எனக்குப்பாதுகாப்பு தருகிறது; நான் என்
வீட்டை முறையாக பராமரிப்பு செய்கிறேன்.  இவ்வகையில் எனக்கும் எனது
வீட்டிற்கும் நெருக்கமான பிணைப்பு உள்ளது.இவ்வாறே, உணர்வாகிய நான்
என் உடலையும், என் மனத்தையும் சார்ந்திருக்கிறேன்! இவ்விடத்தில், உடல்,
மனம்   இவ்விரண்டையும்  கடந்து  மூன்றாவதாக  உணர்வு என்பது  தொக்கி
நிற்கிறது என்பதை, தத்துவவாதிகள் பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
அதாவது,   எனது  உடலையும்,  எண்ணங்களையும்  (மனதையும்)    என்னால்
அனுபவம் கொள்ள முடிகிறதென்றால், அவை வேறாக, நான் வேறாகத்தான்
இருக்கமுடியும்!  உண்மையில்,  எண்ணங்கள்,  மனம்   என்பவை உணர்வின்
கருவிகளே. நம்மில்,பலர் உணர்வாகத் தங்களை உணரவியலாத நிலையில்
( இன்னும் உணர்வுக்கு வராத நிலையில்), மனதுடனும், எண்ணங்களுடனும்,
அல்லது அதற்கும் கீழமைந்த உடலுடனும், பலவித இச்சைகளுடனும் தவறா
கத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுவிடுகின்றனர்!  இந்தத் தவறு
தான் இல்லாத தத்துவப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிப்படையாகும்!

இருமைப்பிரச்சினை  மனத்திற்கும்,  உடலுக்கும்  இடையே  மாத்திரம் தான்
உள்ளதா? உயிர்-ஜீவிக்கும், உயிரற்ற சட-உலகிற்கும் இடையே  இல்லையா?
உயிரற்ற சடப்பொருள் எவ்வாறு உயிர்-ஜீவியாக எழுந்தது?  சட-உலகிற்கும்,
உயிர் ஜீவிக்கும் இடையேயான "இடைவெளி"யை எந்தவிஞ்ஞானம் அல்லது
தத்துவம் இதுவரை விளக்கித் தீர்வுகண்டுள்ளது?   இடைவெளிகள், இருமை
கள்,  முரண்பாடுகள்   நீக்கமுடியாதவை,    தீர்க்கமுடியாதவை!    ஏனெனில்,
இருமை தான் மாற்றத்திற்குட்பட்ட இருப்பின் அடிப்படையாகும்!

ஏனெனில்,   தொடர்ந்து  வளர்ந்து செல்வதான பரிணாம நிகழ்வுமுறையில்,
முந்தைய ஒருகட்டத்திற்கும், அதற்குப்பிந்தைய கட்டத்திற்கும் வேறுபாடும்,
இடைவெளியும்,   முரண்பாடும்  தோன்றுவது  தவிர்க்கவியலாதவையாகும்!
இன்னும், மாறிக்கொண்டேசெல்லும் ஒரு நிகழ்வுப்போக்கிற்கும் அதன் முடி
வான  அடைவிடம் போன்ற  இலக்கு நிலைக்கும்  இடையே   பண்பு ரீதியான
பெரும் இடைவெளி இருக்கவேசெய்யும்! பண்புரீதியாக வளர்ந்துகொண்டே
செல்லும் பரிணாம நிகழ்வுப்போக்கு என்பது வெறும் ஆற்றோட்டம்போன்ற
தல்ல! ஆறு கடலில் கலந்த பிறகு அது தனது அடையாளத்தை இழந்து, 'கடல்'
எனும் புதிய அடையாளத்தைப்பெற்றுவிடுகிறது!     அதுவரை,    "ஆறு-கடல்"
எனும் இருமை நிலை நீடிக்கவேசெய்யும்! ஆறு கடலில் கலப்பதை,  அது உட்
படக்கூடிய  இறுதி மாற்றம் என நாம் கொள்ளலாம். அதுபோலவே,பரிணாம
நிகழ்வுப்போக்கும்  தனது  இலக்கு  நிலையான  "முழு-உணர்வு"   நிலையை
அடைந்தபிறகு;   அங்கு  இயற்கை,  உலகம்,  பருப்பொருளாலான பிரபஞ்சம்,
இன்னும்  மனிதனும்  (சிற்றுணர்வு)  எதுவும்  இருக்காது!  அனைத்தும்  "முழு-
உணர்வு" அல்லது "பேருணர்வு" எனும் மகா "ஒருமை"யுள் இணைந்துவிடும்!

நதியின் அடைவிடம் சமுத்திரம்.    ஏணியின்   பயன்பாடு ஏறிக் கடந்து மேற்
தளம் அடைதல். மரத்தின் முழுமை கனிகளாக மாறுவது. இயற்கை அல்லது
உலகின் உண்மை பேருணர்வே. ஆம், இயக்கத்தின் அர்த்தம் அது  அடையக்
கூடிய    இலக்கு  நிலையில்  உள்ளது.    இவ்வாறே,   பரிணாம   இயக்கத்தின்
அர்த்தமும், முழுமையும் அது இறுதியாக அடையக்கூடிய இலக்குநிலையில்
தான் உள்ளது.  இயற்கை,   உலகம்,   பிரபஞ்சம்  என்பது ஒரு பரிணாம இயக்
கமே.  இவ்வியக்கம்  பல நூறு கோடியாண்டுகளின் பரிணாம வளர்ச்சியின்
முடிவில், சிற்றுணர்வைத் தாங்கும் மனிதஜீவியை அடைந்துள்ளது. ஆனால்,
இது இறுதி முடிவு அல்ல! மனிதன் என்பவன் பரிணாமத்தின் இறுதிச்சொல்
அல்ல! மாறாக, அவன் பேருணர்வு நிலையை அடைவதற்கான ஒரு  முக்கிய
கருவியே!  பரிணாமம்   முழுமையடைவதற்கு   இன்னும்   ஒரு  படி   உள்ளது.
சிற்றுணர்வாக   எழுந்த   மனிதனின்  உணர்வார்ந்த  முயற்சியால் மட்டுமே
அப் "பேருணர்வு" எனும் இறுதி மெய்ம்மை அடையப்படமுடியும்!

மேலும்,  இறுதிமெய்ம்மையை அடைவது என்பது ஒரே நேரத்தில் ஒவ்வொரு
மனிதனுடைய வாழ்க்கையின் இலக்காகவும்,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின்
பரிணாம இலக்காகவும் அமைந்ததோடல்லாமல்,   அதிமுக்கியமாக,  இறுதி
மெய்ம்மையும் அதில் களிப்பெய்துகிறது!    ஏனெனில்,  இந்த   ஒட்டுமொத்த
பிரபஞ்சம்  என்பது   அந்த   இறுதிமெய்ம்மை   தம்னைத்தாமே முதலீடாக்கி,
முடக்கியதன், அதாவது வித்தாக மாற்றி விதைத்துக்கொண்டதன் விளைவு
தானே!   ஆகவே,  இப்பிரபஞ்சத்திலிருந்து  தம்மை மீட்டெடுத்துக்கொள்வது
என்பது "ஆனந்தக்களிப்பு"  தரும் விஷயமாகத்தானே இருக்க முடியும்! மூல
மெய்ம்மை தம்மைத்தாம்   மீட்டெடுத்துக்கொள்ளும் வழிமுறைக்குப்பெயர்
தான்பரிணாமம்.அதாவது,பரிணாமத்தில் இறுதியாக வெளிப்படும் அம்சம்
அல்லது   மெய்ம்மை  எதுவோ,   அதுவே  பரிணாமத்திற்கு மூல  காரணமாக
அமைந்த அம்சமும், மெய்ம்மையும் ஆகும்.

"உணர்வு என்றால் என்ன?"   எனும் கேள்வியுடன் இக்கட்டுரையைத் தொடங்
கினோம்,  ஆனால், அதற்குரிய நேரடிப்பதிலைத்தவிர, பிற உலக விஷயங்க
ளை, அதாவது,  உணர்வுக்கும், உலகம் மற்றும் உலகிலுள்ள பிற அம்சங்கள்,
பண்புகளுக்கும்    உள்ள    தொடர்புறவுகளைப் பற்றிய   உண்மைகளையும்
உணர்த்துகோள்களையெல்லாம்   ஆழ்ந்தாராய்ந்து   அறிந்து கொண்டோம்!
ஆனால்,  தனியே,  உணர்வு என்றால் என்ன?  என்ற கேள்விக்கான பதிலைப்
பார்ப்போம் :

* உணர்வு,  அதன்  முழுமையான  தனித்த  பேருணர்வு நிலையில்  அது  ஒரு
மகா புதிர் ஆகும்!  அது  சாத்தியப்பாடுகளின் அனந்த நிலை (A State of
Infinite Possibilities)யாகும். அது காலம்-வெளி கடந்த மெய்ம்மை.

* அதாவது, ஆற்றல், சக்தி, பொருண்மை, காலம், வெளி, சடப்பொருள், உயிர்,
உலகம்,  இயற்கை, பிரபஞ்சம், மனிதன்,  என அனைத்தும் உணர்வின் வெவ்
வேறு நிலைகளும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும்.

* உணர்வு என்பது, அதன் ஆகச் சுருங்கிய  அடி மட்டத்தில் உணர்வற்ற சடப்
பொருளே ஆகும். ஆனால்,  'பெரு-வெடிப்பு'  நிகழ்ந்த   அக்கணத்திலிருந்தே
உணர்வுப் பரிணாமம் தொடங்கிவிடுகிறது. அதாவது, மிக நுண்ணிய அடிப்
படை அணுத்துகள்கூட அதனால் கிரகிக்கக்கூடிய அளவிலான உணர்வைப்
பெற்றுள்ளது எனலாம்.  தகவலியல் (Information Theory) சொற்களில்
சொன்னால், உணர்வு என்பது அடிப்படையில், வெறும் "தகவல்-பரிசீலனை"
(Information Processing)என்று சொல்லலாம்.ஆனால், உச்சநிலையில்
உணர்வென்பது "தகவல்களின் அனந்தநிலை" (Infinite Data)எனலாம்.
ஆனால், அந்நிலை அனைத்துத் தகவல்களையும்,தகவல்களைப் பரிசீலிக்க
வேண்டிய தேவையையும் கடந்த பரிமாணம் ஆகும்!   இதன் அர்த்தம் என்ன
வெனில்,   தகவலியல் -சொற்களில்  உணர்வைப் புரிந்து கொள்ள  இயலாது
என்பதுதான்.

* சிலர்,  அதில் குறிப்பாக,   டேவிட் ஜெ, சால்மர்ஸ்,  (David J. Chalmers)
உணர்வின்  "கடினப் பிரச்சினை" எனவும், "சுலபப் பிரச்சினை" எனவும் பேசு
கிறார்.   அதாவது, எவ்வாறு மூளையின் பௌதீகச் செயல்முறைகளானவை
அகவய   அனுபவங்களை உருவாக்குகின்றன   என்பதைப்  புரிந்து கொள்ள
இயலாது என்பதுதான் உணர்வின் "கடினப்பிரச்சினை" எனப்படுகிறது. ஆம்,
சால்மர்ஸின்   இக்கூற்று   மிகச்சரியானதே!   அதே வேளையில்,  உணர்வின்
விஞ்ஞானத்தை (science of consciousness)கட்டியெழுப்பும் விஷயம்
குறித்துப்  பேசுகையில்,   "இறுதியில்   நாம்   மூளையின்   பௌதீகச் செயல்
முறைகளையும், உணர்வுப்பூர்வ அனுபவத்தையும் இணைக்கும் அடிப்படை
விதிகளைப்பற்றிய  கோட்பாட்டினை  அடைந்திடுவோம்!"   என    சால்மர்ஸ்
நம்பிக்கைமிகுந்த   தொனியில்  கூறுவது,  அவர்   முன்வைத்த    உணர்வின்
"கடினப் பிரச்சினை" யுடன் முரண்படுவதாக ஒலிக்கிறது!    ஏனெனில்,  சால்
மர்ஸ் எதிர்பார்க்கின்ற  கோட்பாட்டினை நாம்   அடைந்திட்டாலும், "உணர்வு
என்றால் என்ன?"   "உணர்வு ஏன் எதற்காக எழுந்தது?"   என்பன போன்ற பல
கேள்விகளுக்கான பதில்களை நாம் பெற முடியாது!

அதாவது,  சால்மர்ஸின்  அணுகுமுறையில்  உள்ள கோளாறு என்னவெனில்,
பிற விஷயங்களை அணுகுவதுபோல்,  உணர்வையும் ஒரு பிரச்சினையாகப்
பார்ப்பதுதான்!  ஆனால்,  "உணர்வு"  என்பது ஒரு பிரச்சினை அல்ல! மாறாக,
உணர்வுதான் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான தீர்வு ஆகும்.

* ஆதியும் அந்தமும்,  மூலமும் முடிவும்,  ஆல்ஃபாவும்  ஒமேகாவும் உணர்வே!
அதுமட்டும்   அல்ல,    இடையிலுள்ளவையும்  உணர்வின்   வெவ்வேறு நிலை
களும், வடிவங்களும், வெளிப்பாடுகளுமே ஆகும். ஆம், உணர்வுதான் இறுதி
யானது,   அதாவது,   எல்லா விளக்க பூர்வமான  அம்புகள் யாவும் எப்போதும்
மேல்   நோக்கியதாக  உணர்வையே  குறிக்கின்றன."     இவ்வுண்மையானது
நோபல் பரிசு   பெற்ற    அமெரிக்க  பௌதீகவியல்   விஞ்ஞானி    ஸ்டீவென்
வெய்ன்பெர்க்   (Steven Weinberg) அவர்களின் புகழ் பெற்ற வாக்கியங்
களில்   ஒன்றான,   "எல்லா  விளக்க பூர்வமான அம்புகள் யாவும்  எப்போதும்
கீழ்  நோக்கி  பௌதீகவியலையே  குறிக்கின்றன."    என்பதற்கு    முற்றிலும்
மாறானாது, எதிரானது. ஏனெனில், அவரது இக்கூற்று தவறானது மட்டுமல்ல,
படு அபத்தமானது!

முக்கியமாக,    அவரது   கூற்று  பரிணாம-விரோதமானது.   எந்தப் பரிணாம
நிகழ்வுமுறையானது   உயிரும்,  உணர்வும் அற்ற  அடிப்படை( அணு)த்துகள்
களை,   1,500 கோடி ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களினூடாகச்
செலுத்தி,   தற்போது  உணர்வுள்ள  சிந்திக்கும்  திறனுள்ள    ஒரு  விஞ்ஞானி
யாக, அவரை உருவாக்கியதோ அந்தப்பரிணாமநிகழ்வுமுறையை முற்றிலு
மாக  மறுப்பவராக  ஸ்டீவென் வெய்ன்பெர்க்  விளங்குகிறார்.   மேலும்,   இப்
பிரபஞ்சத்தையும், அதிலுள்ள அனைத்தையும்  -  கல், மண், புழு, பூச்சி, செடி
கொடிகள்,  மரங்கள்,  எலி,  தவளை,  பூனை,  யாணை,  புலி, சிங்கம், குரங்கு,
மனிதன் ஆகியவற்றையும்; உயிர், மனம், உணர்வு என எல்லாப்பண்புகளை
யும்  அடிப்படை  அணுத்துகள்களுக்குச்  சுருக்கிக்காண முடியும்!    ஆனால்,
அணுத்துகள் என்பதென்ன? பருப்பொருள் என்றால் என்ன?அனைத்தையும்
அணுத்  துகள்களுக்குச்  சுருக்கிடும்   பட்சத்தில்,    அணுத்துகளை   எதற்குச்
சுருக்குவது?   பருப்பொருள்   எத்தகைய  பொருளால்   ஆனது?   புகழ் பெற்ற
குவாண்டம் பௌதீகவியல் விஞ்ஞானி,ஹேன்ஸ்-பீட்டர் டோர் (Hans-Peter
Dürr) அவர்களின் சொற்களில்,   "பருப்பொருள்  என்பது  பருப்பொருளால்
ஆனதல்ல"   (Matter is not made out of matter)  என்பது       தான்
உண்மை!   இன்னும்,   "உள்ளது  பருப்பொருள்  மட்டுமே,  பருப்பொருள் தான்
பிரதானமானது,   அனைத்துக்கும்   அடிப்படையானது!"   என்று  தவறாகவும்,
தலைகீழாகவும்  சொல்வதற்குக்கூட  உணர்வின் உதவியில்லாமல் சொல்ல
முடியாது!

* அடுத்து,  "உணர்வு   என்றாலே  அது ஏதாவதொன்றைப்பற்றிய  உணர்வே!"
எனச் சொல்லப்படுவதும்   பிழையானதே.  புலன்வழி-உணர்வு       கொண்ட,
ஆனால்,   சுய-உணர்வற்ற  விலங்குஜீவிகளும், புலன்வழி-உணர்வுடன், சுய-
உணர்வும்    கொண்ட    மனிதஜீவிகளும்    தம்தம்    உணர்வைக் கொண்டே
தம்மைச் சுற்றியுள்ள உலகைப்புரிந்து கொள்கின்றனர்.  புலன்வழி உணர்வு
மற்றும் சுய-உணர்வு ஏதுமற்ற ஒருகூழாங்கல்லினால் அதனுடைய மிகமிகச்
சன்னமான   பௌதீகத்தனமான   உணர்வைக்கொண்டு  எதையும்   புரிந்து
கொள்ளவியலாது! அதே வேளையில், தம் புலனுணர்வைக்கொண்டு புறவுல
கினை  ஓரளவிற்கு அறிந்து  செயல்படும்  விலங்குஜீவிகளால்,    தம் சொந்த
இருப்பினை,   "தாம்  இருக்கிறோம்!"    என்கிற  உண்மையை அறிவதில்லை!
இத்தகைய  பிரத்யேக  சுய-உணர்வு மனிதஜீவிக்கு மட்டுமே வாய்த்துள்ளது
என்பது பெரும் பேறாகும்.

அதாவது,  உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே என்
பது உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்புதானேதவிர அதுவே உணர்வின்
இறுதியான  பூரணமான பண்பு அல்ல.  ஒரு கூழாங்கல்லினால் தன்னையும்
உணரமுடியாது,    தனக்குப் புறத்தே  உள்ளவற்றையும் அறியமுடியாது.  ஒரு
தவளையால், தனக்குப்புறத்தேயுள்ளவற்றை உணரவும், அறியவும் முடியும்.
ஆனால்,  அதனால்,  தன்னையோ   தன்சொந்த   இருப்பையோ     உணரவழி
யில்லை!   அதேவேளையில்,   ஒரு  மனிதஜீவியால்,  தனக்குப் புறத்தேயுள்ள
அருகிலுள்ள சுற்றுப்புறத்தை மட்டுமல்லாமல் இப்பிரபஞ்சம் முழுவதையும்
ஆராய்ந்தறிந்திடவும்; அனைத்திற்கும் மேலாக மனிதனால், தன் சுய-உணர்
வைக்கொண்டு  தம்  சொந்த இருப்பையும், சுயத்தையும்   உணரவும், அறிய
வும் முடியும்!   ஆனால்,   மனிதனுடைய   பிரத்யேகப் பேறான சுய-உணர்வும்
கூட  உணர்வின்  இறுதிச்சொல்லோ,  பண்போ அல்ல!   ஆம்,  ஒரு மனிதஜீவி
யால் தனது சுய-உணர்வையும் கடந்துவளர்ந்து உணர்வின் உச்சநிலையான
பூரண "முழு-உணர்வு" எனும் இறுதி மெய்ம்மையையும் அடையமுடியும்!

ஆக,  'உணர்வு என்றாலே அது ஏதாவதொன்றைப்பற்றிய உணர்வே' என்பது
உணர்வின் ஒரு தொடக்கநிலைப்பண்பு மாத்திரமே; அந்நிலையுடன் உணர்
வைக்குறுக்கிவிட முடியாது! உணர்வு தொடக்கத்தில் புறம் நோக்கிப்பாய்கி
றது.  அதன்  அடுத்தகட்ட வளர்ச்சியாக,  தன் அகம் நோக்கித் திரும்புகிறது!
அதாவது  அது தன்னைப்பற்றிய உணர்வுக்கு வருகிறது.   இறுதியாக, உணர்
வானது  தனது மையத்துவமான முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னுள்ளே
ஆழ்ந்து முழு-உணர்வாகஆகிறது! இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது தன்
உட்பொதிவின் சாரத்தில் உணர்வுதான் என்பதை பரிணாம வழிமுறையின்
இறுதியில் மனித  உணர்வின் மூலமாக உணர்ந்துகொள்கிறது!

* ஆம்,  மனித- உணர்வு  என்பது பரிணாமவழிமுறையின் மிகமுக்கியமான,
திருப்பு முனையான தொரு  வளர்ச்சிக்கட்டமாக விளங்குகிறது!   நதி எனும்
இயக்கமானது பெரிதாக பண்பு நிலையில் எவ்வித மாற்றமும் அடையாமல்
இறுதியாக   தன்   இலக்கு நிலையான   சமுத்திரத்தைச்  சென்றடைந்திடும்.
ஆனால்,  பரிணாம இயக்கமானது, பொருண்மைவாதிகள் சொல்வது போல
வெறும்  "இயக்கத்திலுள்ள பருப்பொருள்" அல்ல.  மாறாக, பரிணாமமானது
பருப்பொருளை  ஒரு ஆரம்ப நிலைப்பண்பாகக்கொண்டு தொடங்குகிறதே
தவிர, இடையில் அது "உயிர்"எனும் பெரும்பண்புநிலை மாற்றத்தைத்தழுவி,
அதையடுத்து,  பல்வேறு  உயிர்ஜீவிகளின் வழியாக புலன்-வழி உணர்வைப்
பெற்று, தற்போது,   மனித ஜீவியின்  வழியாக   "சுய-உணர்வு"   எனும்  அரிய
அம்சத்தை எட்டியுள்ளது. அடுத்து இறுதிக்கட்டமாக, மனிதனின், ஒவ்வொரு
மனிதனின்,   உணர்வார்ந்த   விழைவின்   மூலமாக   உணர்வின்  உச்சமான,
"முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு" நிலையை அடைகிறது. இதுவரையில்
கணிசமான   எண்ணிக்கையிலான   தனிமனிதர்கள்   முழு-உணர்வு  எனும்
அந்நிலையை அடைந்து பிரபஞ்சம் எனும் பரிணாமஇயக்கத்தை முழுமைப்
படுத்தியுள்ளனர்!

* உணர்வு  என்பது   இயற்கையையோ,  பருப்பொருளாலான   இம்மாபெரும்
பிரபஞ்சத்தையோ; அல்லது, வேறு எவ்வொரு பண்பையோ, அம்சத்தையோ
எதனையும்  சார்ந்த  ஒன்றல்ல!   மேலும்,   உணர்வை  ஒருபோதும் வேறு எவ்
வொரு அம்சம், பண்பு, எதற்கும் குறைத்தும், வேறு எதனுடைய சொற்களின்
வழியாக விளக்கியும் புரிந்து கொள்ளமுடியாது!   மாறாக,  உணர்வை  நேரடி
யாக    ஒவ்வொருவரும்   உணர்வு கொள்வதன்   வழியாக  மட்டுமே  உணர்ந்
தறியவும், புரிந்து கொள்ளவும் முடியும்!  இதன் அர்த்தம் அது அகவயமானது
(Subjective) என்பது மட்டுமல்ல. மேலும், அகவயமானது என்பது புறவய
மான  (Objective) நிஜத்தைவிடக்  கீழானதோ,   குறைவானதோ   அல்ல.
மாறாக,புறவயமான நிஜமாகக்கருதப்படும் பருப்பொருளானது பரிணாமம்
எனும்   ஒரு  விசேட  மாற்றத்திற்கு   உட்பட்டு    அகவயபட்டதன் விளைவாக
எழுந்த  நிஜம் தான் மனித-உணர்வு ஆகும்.  ஆக, மேன்மேலும்  அகவயப்படு
வதும், சூக்குமமடைவதும்தான் நிஜத்திலும் அதி-நிஜமாகும் வழியாகும்!ஆக,
புறவயமான நிஜம் என்பது   உண்மையில்  நிஜத்தின் மேலோடு போன்றதே!
ஆக,  விஞ்ஞானிகள்  எதிர்பார்ப்பது போல,  மூளையின் செயல்பாடுகளைக்
கொண்டும்,  மூளையிலுள்ள நியூரான்கள் எனப்படும் நரம்புகளின்  வலைப்
பின்னல்களுக்கும்,   அகவயமான   முதல்-நபர்  அனுபவங்களுக்கும்    உள்ள
தொடர்புடைமைகளைக்  (Neural  Network Correlates) கொண்டும்
உணர்வைப்   புரிந்துகொள்ள  ஒருபோதும்  இயலாது.  அதாவது,   முதல்-நபர்
அணுகுமுறையைக்கொண்டு  மட்டுமே  புரிந்துகொள்ளப்படக்கூடிய   அம்ச
மான     உணர்வை   விஞ்ஞானத்தின்    மூன்றாம்-நபர்    அணுகுமுறையைக்
கொண்டு புரிந்துகொள்ள முடியாது. இவ்வுண்மையை பல விஞ்ஞானிகளும்,
தத்துவ சிந்தனையாளர்களும்  ஏற்றுக்கொள்கின்றனர்  என்பது  பாராட்டுக்
குரிய விஷயமாகும்!

* உணர்வை பருப்பொருளின் ஒரு விசேடப்பண்பாகக் குறைத்திட முயற்சிப்
பதற்கும்,  உணர்வை  இயற்கைப்படுத்திடத்  துடிப்பதற்கும்,  இன்னும் அதீத
மாகச் சென்று உணர்வை முற்றாக மறுப்பதற்கும், விஞ்ஞானபூர்வமானதும்,
தத்துவ பூர்வமானதுமான       காரணங்களையும்,       தர்க்கங்களையும்  விட
சித்தாந்த ரீதியான காரணங்களே அடிப்படையாக விளங்குகின்றன!  ஏனெ
னில்,  உணர்வை முறையாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளும் பட்சத்
தில், அதாவது மூலமும், முடிவும் உணர்வே எனும் அப்புரிதல் இயற்கையின்,
பருப்பொருள்- உலகத்தின்  மேலாண்மையை  செல்லாக்காசாக  ஆக்கிடும்!
அதோடு, விஞ்ஞானம், பொருண்மைவாதம்,சுருக்கல்வாதம், நாத்திகவாதம்,
எந்திரவாதம்,  டார்வினிய பரிணாமவாதம் ஆகியவற்றின் முடிவை அறிவிப்
பதாக அமைந்துவிடும்!  ஆக,  உணர்வின் மையத்துவம் பிறவனைத்தையும்
ஓரங்கட்டிவிடும்! ஆக இத்தகைய அச்சுறுத்துதல்களை உணர்வின் உணர்த்
துகோல்கள்  (Implications) தன்னகத்தே   கொண்டிருக்கிறது!  மேலும்,
உணர்வின் மையத்துவத்தையும்,பிரதானத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்
பட்சத்தில், கருத்து முதல் வாதத்தையும், ஒருசில சமயபூர்வ-உண்மைகளை
(Religious Truths)யும்,  ஆன்மீக உண்மைகளையும் மறுக்கமுடியாமல்
போகும்  நிலை   உருவாகிவிடும்!    ஆக,   இத்தகைய    காரணங்களாலேயே
உணர்வை     உணர்வின்     சொற்களிலேயே      புரிந்து  கொள்வது     என்பது
தொடர்ந்து  தவிர்க்கப்பட்டும், தொடர்ந்து உணர்வுக்குக்  கீழேயுள்ள அம்சங்
கள், பண்புகளைக்கொண்டு உணர்வை விளக்கும்போக்கு நீட்டிக்கப்பட்டும்
வருகிறது.
இத்தகைய    மாய்மாலக்காரர் களுக்கு  மத்தியில்,  தத்துவ சிந்தனையாளர்
கோலின் மேக்கின் (Colin McGinn), தாமஸ் நாஜெல் (Thomas Nagel),
ஜெர்ரி ஃபோடோர் (Jerry Fodor),நோம் சோம்ஸ்க்கி (Noam Chomsky),
மார்ட்டின் கார்டுனர்   (Martin Gardner),  அமெரிக்க      உளவியலாளர்
ஸ்டீவென் பிங்க்கர் (Steven Pinker),  ஆங்கிலேய பௌதீக விஞ்ஞானி
யும், கணிதவியலாளரும், விஞ்ஞானத்தத்துவ சிந்தனையாளருமான ரோஜர்
பென்ரோஸ் (Roger Penrose), அமெரிக்க   நரம்பியல்துறை  விஞ்ஞானி
ஸாம் ஹாரிஸ் (Sam Harris)போன்றோர் உணர்வின் புரியாத்தன்மையை
ஏற்று   அங்கீகரிப்பவர்களாக  விளங்குகின்றனர்.   இவர்கள்    புதிர்வாதிகள்
(The Mysterians)என்று  அழைக்கப்படுகிறார்கள்!  இவர்கள் பிற தத்துவ
வாதிகளைப்போல 'உணர்வு-மறுப்புவாதிகள்' அல்லர்.  இவர்கள் உணர்வை
உணர்வாக  மதித்து  ஏற்றுக்கொள்கின்றனர்.  உணர்வை  உணர்வின் சொற்
களிலல்லாமல்  வேறு பண்புகளின்  சொற்களில்   புரிந்து கொள்ளவியலாது
என்கின்றனர்!

* உணர்வைப்பொறுத்த  ஒரு விசேடத்தன்மை  என்னவெனில், அது அனைத்
தையும் தன்வயமாகவும், தன்மயமாகவும் மாற்றிவிடக்கூடிய தனிமுதலான
(Absolute)ஒரு மெய்ம்மையாகும்! இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள எல்லா
 வுமாகவும்   ஆகியது  உணர்வே!   உணர்வே   பிரபஞ்சத்தின்  சாரம் அல்லது
ஆன்மா ஆகும்!  அது பருப்பொருள் தன்மை கொண்டதுமல்ல!  அது உயிரும்
அல்ல!  இன்னும்,  அது  காலையில்  மலர்ந்து இரவில் உதிர்ந்து போகக்கூடிய
சாதாரண மனித-உணர்வும் அல்ல!  அது  ஒரு மகா புதிர் ஆகும்!   உணர்வின்
புதிர்த்தன்மையைத் தரிசித்தவர்கள் வெகு சிலரே!

புதிரைப்  புதிராக இனம் கண்டுகொண்டவர்களே அப்புதிரை உண்மையில்
புரிந்து கொண்டவர்களாவர்!     அவர்களே ஞானிகள்!    உணர்வு  எனும் மகா
புதிருக்கு இன்னொரு பெயர் : கடவுள்!!

மா.கணேசன்/ 16.9.2016
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...