Sunday, 19 March 2017

இனி ஒரு சூழ்ச்சி செய்வோம்!





நம் முன்னே இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன!  முதலாவது :  முழு-நிறை
வான  வாழ்க்கையை  வாழ்வது!   இரண்டாவது : முதலாவது சவாலை  நிறை
வேற்றுவதற்கான   அடிப்படையைத்  தக்க  வைத்துக்கொள்வது,    அதாவது
உயிர்-பிழைத்திருப்பது!

முதலில்,   முதலாவது  சவால் தொடர்பான சில  குறிப்புகளைக் காண்போம்!
வாழ்க்கையில்   எது  முக்கியமானது   என்பதைக்  கண்டுபிடிப்பது  மட்டுமே
முக்கியமானது!  பிற யாவும்  இரண்டாம்  அல்லது  மூன்றாம்  பட்சமானவை!
இல்லாவிடில்,   நம்  வாழ்க்கை  இரண்டாம் அல்லது  மூன்றாம் தரத்து  விஷய
மாகிடும்!   பிறகு      வாழ்க்கை    துன்பமயமாக   உள்ளது,     அர்த்தமற்றதாக
உள்ளது    என்றெல்லாம்    பயனற்றுப் புலம்பவும்,  புகார் கூறிடவும் நேரிடும்!
புலம்புவதும்,   புகார் கூறுவதும்  பயனற்றது;  ஏனெனில்,  நமது  புலம்பலைக்
கேட்பதற்கும்,     புகார்களைப்   பதிவு   செய்வதற்கும்   இங்கு  எவருமில்லை!
ஏனெனில்,   இங்கு   புலம்பலின்றி,  புகார் பட்டியல்  இன்றி   ஒருவருமில்லை!
எல்லோரும்    இங்கு   ஒரே படகில்  தான்  பயணிக்கின்றோம்;  ஆனால், படகு
கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டுள்ளது!

எல்லா வலிகளும்,  துன்ப துயரங்களும்,  நமக்கு  நாமே  வருவித்துக்கொள்ப
வையே!  எல்லா வெறுப்புகளும்,   சண்டை சச்சரவுகள்,  போர்கள், அமைதிக்
கான   போர்  உட்பட   யாவும்   நம்   சொந்த   உருவாக்கங்களே!   நம்முடைய
இதயங்கள்,  மனங்களிலிருந்து  வெளிப்படுபவையே,  நம்முடைய  குழப்பங்
களிலிருந்து வெளிப்படுபவையே!

ஆம்,   இன்பமோ,  துன்பமோ,  யாவற்றுக்கும்  நாமே  பொறுப்பு;    வாழ்க்கை
நிறமற்றது,  அதற்குத் தெரிவுகள் எதுவும் தெரியாது! வாழ்க்கை துன்பத்தை
வரவேற்பதுமில்லை;  இன்பத்தை விலக்குவதும் இல்லை!  வாழ்க்கை  துன்ப
கரமானதுமல்ல, இன்பமயமானதுமல்ல! மொத்தத்தில், மனிதனுக்கு- மனித
உணர்வுக்கு - வெளியே வாழ்க்கை என்பது இல்லை! உண்மையில், உணர்வு
தான்    வாழ்க்கையும்,   வாழ்க்கையின்    அளவீடும்!    அதாவது,  உணர்வின்
அளவிற்கு   ஏற்பவே   வாழ்க்கை   அமைகிறது!    கொஞ்ச  உணர்வு  என்றால்
கொஞ்ச  வாழ்க்கை;   அதிக  உணர்வு    என்றால்   அதிக வாழ்க்கை!  அப்படி
யானால்,  முழு நிறைவான வாழ்க்கையை அடைய என்ன தேவை என்பதை
இந்த எளிய சமன்பாட்டிலிருந்தே புரிந்துகொள்ளலாம்; ஆம்,முழு உணர்வை
எட்டுவதே முழு நிறைவான வாழ்க்கையாகும்!

மனித ஜீவிகளாகிய நாம்  உணர்வற்றவர்களாயிருந்தால்,  குறிப்பாக, "நான்
இருக்கிறேன்!"   என்றுணரக்கூடிய  "சுய-உணர்வு"  என்பதில்லையென்றால்,
விலங்குஜீவிகளைப்  போலவே  நமக்கும்  எந்தப் பிரச்சினையும்  இருக்காது!
அப்படியே  இருந்தாலும்,  அவை குறித்து நாம் புலம்பவோ, யாரிடமும் புகார்
கூறவோ மாட்டோம்!  ஆனால்,  நாம்  விலங்கு ஜீவிகளுமல்ல,  உணர்வற்றவர்
களுமல்ல  என்பதால் நாம் ஏன் புலம்பவும்,  புகார் கூறவும் வேண்டும்?  அதே
வேளையில்,  விலங்கு ஜீவிகளிடமிருந்து   நாம்  சில  தந்திரோபாயங்களைக்
கற்றுக் கொள்வதில்    நமக்கென்ன    தடைகள்    இருக்கமுடியும்?   அதாவது
கொடிய  விலங்குகளும்,   பெருவிலங்குகளும்   நிறைந்த    கானகச்  சூழலில்
எவ்வாறு சிறு விலங்குகளும், சாதுவான பிராணிகளும் தகவமைந்து வெற்றி
கரமாக   உயிர் பிழைத்து வருகின்றன  என்பதைக்  கற்றுக்கொள்வது   இந்த
இருபத்தொன்றாவது நூற்றாண்டில் அவசியமாகிறது! ஏனெனில்,அதற்கான
சூழல்  தற்போது உருவாகியுள்ளது!   ஆகவே,  நாம்   இனி   ஒரு   சூழ்ச்சி செய்
வோம்!

அதாவது,  சோகத்திலும் சோகமானது, முட்டாள்தனமான சக-மனிதர்களால்
அப்பாவிகளான     சக-மனிதர்களுக்கு    இழைக்கப்படும்   கொடுமைகளும்,
அநீதிகளும்,   அநியாயங்களும்  தான்!   இவற்றை விட   அநியாயமானது  எது
என்றால்,   "இத்தகைய போட்டிகள்,  போராட்டங்கள்,  அநீதிகள் . .  இன்னபிற
யாவும்,     வலியது   வாழும்   எனும்     இயற்கைத்  தேர்வை   அடிப்படையாகக்
கொண்ட      பரிணாம    விதியின்    வெளிப்பாடுகளே!"     எனும்   டார்வினிய
பரிணாமவாதக் கூற்றே யாகும்!

காட்டுச் சூழலில்,    பெரு  விலங்குகள்,    சிறு  விலங்குகள்   என    எல்லாமும்
எவ்வித சமூக ஒப்பந்தமும், உடன்படிக்கையும்; யாதொரு பொதுவான  நெறி
முறையும்,   சட்டமும்,      நீதியும்,   சமத்துவ விதியும்     இல்லாமலேயே  தான்
கோடிக்கணக்கான  ஆண்டுகளாக  வாழ்ந்து  வருகின்றன!  ஆனால்,   விலங்
கினங்கள் ஒவ்வொன்றும் தமக்கேயுரிய தகவமைதலின் படி -  தந்திர  உத்தி
களையும்,  சூழலுக் கேற்றவாறு  தம் நிறத்தை அல்லது வடிவத்தை  மாற்றிக்
கொள்வது,   தற்காப்புக்காக   கொம்புகள்,   முட்கள்,   விஷம்   ஆகியவற்றை
சமயோசிதமாகப் பயன்படுத்தி உயிர்பிழைத்துவருகின்றன!

ஆனால்,  நாட்டுச்சூழலில், சமூக ஒப்பந்தம், உடன்படிக்கை, நெறிமுறைகள்,
சட்டங்கள்,  விதிமுறைகள்,  காவல்துறை,  நீதி மன்றம், மக்களாட்சி, தேர்தல்
எல்லாம்  இருந்தும்  இன்னும் காட்டின் விதிகளே நாட்டிலும் தொடர்கின்றன!
காட்டில்   வாழும்   கொடிய   விலங்குகளைப் போலவே    ஆதிக்க    சக்திகள்,
அதிகாரம் படைத்தவர்கள்,   பணக்காரர்கள், உயர்சாதியினர்  ஆட்சி செய்து
வருகின்றனர்!     ஒருவகையில்,   மனிதனை    விலங்கினங்களில்    ஒன்றாக
வகைப்படுத்தும்  டார்வினியப் பார்வை  சரியென்றே படுகிறது!   ஏனெனில்,
மனிதத் தன்மையற்ற இனத்தை விலங்கினமாகத்தானே கருதமுடியும்!

ஆக,    இத்தகைய   சமூகக்காட்டில்   நாம்  பிழைக்க  வேண்டுமானால்,  நாம்
சமயோசிதம்,   சூழ்ச்சி,   தந்திரம்,  ஆகிய எல்லாவற்றையும்  பிரயோகிப்பது
மீண்டும் அவசியமாகலாம்!

நம்மை   நாம்    தற்காத்துக்  கொள்வதற்காக   நாம்   விஷமுடையவர்களாக
மாறுவது   ஒன்றே வழி!    நம்மை  எவரும் சுரண்ட அனுமதிக்காத வகையில்
நாம்  எல்லாவகைத் தடைகளையும்,  கேடயங்களையும்  உருவாக்கிக்கொள்
வதும் அவசியமாகலாம்!

உலகின் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.  உலக மக்கள்
தொகையில்,    பெரும் செல்வம்  படைத்த  20  சதவிகிதத்தினர்  75  சதவிகித
உலக வருமானத்தைப்  பெறுகிறார்கள்,     அதேசமயம்   40  சதவிகிதத்தினர்
வெறும்  5  சதவிகித வருமானத்தை பெறுகிறார்கள். (ஐ.நா சபையின் மனித
வளர்ச்சி அறிக்கை 2007/2008).      உலகின்    பெரும்பகுதி    மக்கள்    உலகின்
மிகவும்  ஏழ்மையான நாடுகளின் மிக ஏழ்மையான பகுதிகளில், உதாரணத்
திற்கு  சீனாவின் கிராமப்புறங்களிலும்,  இந்தியா  மற்றும்  ஆப்பிரிக்காவின்
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் வாழ்கிறார்கள் (Milanovic, 2002).

மனிதர்கள் ஏழைகள், பணக்கார்கள் என செயற்கையாகவும்,  மிகவும் வஞ்ச
கமான  வகையிலும்  இரு  வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,  அறிவு
என்பது எவ்வொரு வர்க்கத்திற்கும் உரிய தனிச்சொத்து அல்ல என்பதாலும்,
முக்கியமாக உழைப்பு என்பது, அது உடல் உழைப்பாயினும்,  மூளை உழைப்
பாயினும்,  அது  ஏழை வர்க்கத்திற்குரிய  சாபமாக  ஒதுக்கப்பட்டிருப்பதான
நிலைமையை    வரமாக   மாற்றுவது     தற்போது    ஏழை   வர்க்கத்திற்கான
தவிர்க்கக்கூடாத சவால் ஆகும்!   "அறிவு  என்பது  ஆற்றல்!"   என்பதை  நாம்
தற்போது   நினைவில்  கொள்வதும்,   அதையே  நமக்குச் சாதகமாகப்  பயன்
படுத்திக்  கொள்வதும் அவசியமாகும்!

ஏழை மக்கள் வசம்  இரண்டு வகை மூலதனம் உள்ளது; ஒன்று அறிவு, அதை
நாம்  மேன்மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.   இரண்டாவது,  உழைப்பு,
அது  நம்மிடம்  அபரிமிதமாக உள்ளது!    இப்போது  நாம் செய்யவேண்டியது,
அறிவையும்,  உழைப்பையும் நாமே நேரடியாக முதலீடு செய்து அதன் பலன்
களை நாமே நேரடியாக அறுவடை செய்து பயன்கொள்வது தான்!

ஏற்கனவே,   அறிவு,  உழைப்பு   இரண்டையும்   நம்மிடம் வைத்துக்கொண்டு
முதலீட்டாளர்களான  அரசையும்,  பெரு நிறுவனங்களையும்,  தொழிலதிபர்
களையும் நம்பி மோசம் போனோம்! இனி நாம் நம்மையே நம்புவோமாக!

கடமைகளை    நிறைவேற்றிவிட்டு  உரிமைகளுக்காகப்  போராடிக் கொண்
டிருப்பதை   இனியும் வாழ்க்கையாகக் கொள்ள வியலாது!  வாழும் உரிமை,
குறிப்பாக  உயிர் வாழும்  உரிமையைக் கேட்டு எவரும் எவரிடமும்  கையேந்
திக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை! புல்லாயினும், பூண்டாயினும் அவை
எங்கு  முளைத்தனவோ   அவ்விடத்திலேயே  இருந்து   வாழ்வதற்கான  முழு
உரிமையும்   அவற்றுக்கு  உண்டு;   அவ்வுரிமையை   எவரிடமும்   வேண்டிப்
பெறத்தேவையில்லை!  ஆம், வாழும் உரிமையை வழங்கும் அதிகாரம் பெற்
றவர்கள் என்போரும் இங்கு எவருமில்லை! அதேபோல், நாம் புரியவேண்டிய
கடமைகளைப் பணிப்பவர்கள் என்போரும் இங்கு எவருமில்லை!

ஆம், "நம் கடன் பணி செய்துகிடப்பதே!" என்பதும்; "கடமை, கண்ணியம், கட்
டுப்பாடு   எனும்  இந்த  முக்குணமும்  உழைக்கும் வர்க்கத்துக்கே!"  என்பதும்
மக்களை    ஏய்ப்பதற்கான   தந்திர கோஷங்கள் ஆகும்!  மனிதர்கள் உழைப்
பதற்காகப் பிறந்தவர்களல்ல;அவர்கள் வாழப்பிறந்தவர்கள்! வாழ்வதற்காக
உழைப்பது இனிமையானது!  ஆனால்,   உழைப்பதற்காக   வாழ்வது  என்பது
அடிமைச் சுமையாகும்!  வாழ்க்கை என்பது கட்டாய உழைப்பு முகாம் அல்ல!

வறுமை,  வளமை  என்பவை  வாழ்க்கையின் தரத்தைக் குறிக்கும்  அளவீடு
கள்  அல்ல!   ஏனெனில், வறுமை என்பது உயிர்-வாழ்தலையே கேள்விக்குறி
யாக   மாற்றிவிடும்  அவலத்தின் சின்னம் ஆகும்!   வளமை அல்லது  செல்வ
நிலை என்பது மனிதவாழ்விற்கு தவறானதும் தலைகீழானதுமான நோக்கத்
தையும், இலக்கையும் கற்பித்திடும் பிறழ்ச்சி ஆகும்!

செல்வந்தர்கள்  வாழும்  வாழ்க்கை    மனித வாழ்க்கையே  அல்ல!   அது ஒரு
"பகட்டுத்தனமான பன்றி" வாழ்க்கையே ஆகும்!   இது   காழ்ப்புணர்ச்சியின்
கையாலாகாத விமர்சனம் அல்ல!  மாறாக, தன் தேவைகளுக்கு மேல் பணம்
சம்பாதிப்பவன்,    சொத்து சேர்ப்பவன்  பேராசை பிடித்த மிருகம்    ஆவான்!
ஏனெனில்,    அவனுக்கு  தேவைகளின் அளவும் தெரியவில்லை;    அவற்றின்
பயன்பாட்டு  வரம்புகளும் தெரியவில்லை!    அதாவது   தேவைகள்   எதுவும்
மனித வாழ்க்கையை நிறைவு செய்வதுமில்லை, வாழ்வின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துவதில்லை! பசி, உணவின் தேவையைச் சுட்டுகிறது;   உணவு
பசியைப் போக்குகிறது, அல்லது மேலதிகமாக அது ருசியை திருப்திசெய்ய
லாம், அவ்வளவு தான்!  அதற்குமேல்  உணவு  வாழ்வின்  அர்த்தத்தை அளிப்
பதில்லை!இவ்வாறே எல்லாவிதத்தேவைகளும் அவற்றிற்குரிய பயன்பாட்டு
எல்லைகளுடன் முடிந்து போகின்றன! எந்த ஒரு தேவையும் மனிதனை முழு
மைப்படுத்துவதோ  நிறைவு செய்வதோ இல்லை!

தன் தேவைகளுக்குமேல் பன்மடங்கு பணம் சம்பாதிப்பவன்,சொத்து சேர்ப்
பவன் பேராசைபிடித்த மிருகம் மட்டுமல்ல;   அவன் பரந்து பட்ட மக்களுக்கு
எதிராக குற்றம் இழைப்பவனுமாகிறான்! உலக மக்கள்தொகையில்,வெறும்
20   சதவிகிதத்தினர்  75   சதவிகித   உலக  வருமானத்தைப்  பெறுகிறார்கள்
என்பது வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்ல; மாறாக, வரம்புக்கு உட்பட்ட உலக
வளங்களை பிறருக்கு கிடைக்கச் செய்யாமலும்,   வருங்கால  மானிடச் சந்த
திக்கு   விட்டு வைக்காமலும்    சுரண்டிக் கொள்ளையடிக்கும்   அருவருக்கத்
தக்க படு பாதகச்செயலாகும்!

விலங்குகள்  பிற விலங்குகளிடம்  சென்று  பிச்சையெடுப்பதில்லை, கெஞ்சு
வதில்லை! விலங்குகள் அதிகாரப்போட்டியில் ஈடுபடுவதில்லை! ஏனெனில்,
வாழ்க்கைக்கும்    அதிகாரத்திற்கும்    எவ்வித சம்பந்தமும்  இல்லை என்பது
அவைகளுக்கு   எவ்வாறோ   தெரிந்திருக்கிறது!     விலங்குகள்  தற்கொலை
செய்து கொள்வதில்லை!  விலங்குகள் பொறாமைப்படுவதில்லை, பேராசை
கொள்வதில்லை!  சமத்துவம் வேண்டிப் போராடுவதில்லை!  மாறாக, அவை
தங்களுக்குரிய  தனித்தனி  உயிரியல் மாடங்களில்,  அதாவது  இட-அமைவு
களில்   இருந்துகொண்டு  வாழ்கின்றன!   விலங்குகள்  பிற  விலங்குகளுடன்
தம்மை   ஒப்பிட்டுக்  குறைப்பட்டுக்  கொள்வதில்லை!     விலங்குகள்  பொய்
சொல்வதும்  போலியாக நடந்துகொள்வதும்  இல்லை!   தம்மைத் தற்காத்துக்
கொள்வதற்குரிய  தந்திரங்களையும்,  உபாயங்களையும் தவிர அவை வேறு
தகாத   நடவடிக்கைகள்   எதையும் மேற்கொள்வதில்லை!   ஆனால்,  புலிகள்
மான்களை  வேட்டையாடி உண்கின்றன என்பது  "வனசிரம தருமம்"  ஆகும்!
அதில் நாம் பின்பற்றத் தக்கக் குறிப்பு எதுவும் இல்லை!

மனித சமூகத்தில்,     அதிகார  ஏணியில்  உயர் படிகளை  எட்டியவர்கள்  தம்
நிலைகளைத்  தக்கவைத்துக்  கொள்வதன்  வழியாக  மட்டுமே   தாம்  வாழ
முடியும்  என்பதாக எண்ணுகிறார்கள்!  ஆகவே அவர்கள் எல்லாவழிகளிலும்
பிறரை   அடக்கி  ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பது  என்பது   தங்களுடைய
தலையாய தர்மம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்! கீழே உள்ளவர்கள்,
அதிகாரமற்றவர்கள்,  மேலேயுள்ளவர்களது   தவறான  வாழ்க்கைப் பார்வை
யைத் தழுவித் தாங்களும்  அதிகார ஏணியில்  ஏறினால் தான்   சிறக்க வாழ
முடியும்  என்றெண்ணி  முயற்சிக்கையில்  மீண்டும் மீண்டும்  ஒடுக்கப்பட்டு
நசுக்கப்படுகிறார்கள்!    அதிகாரத்தை  அவசியமான தொரு   அம்சம்   எனக்
காணும்    எவரும்,    அவர்   ஏணியின் கீழ்ப்படியில் இருந்தாலும்  அவருக்கும்
அதிகார  ஏணியின் உச்சியிலிருக்கும்  ஒருவருக்கும்  மனநிலையில்   வித்தி
யாசம் ஏதுமில்லை  இடையிலுள்ள படிகளைத்தவிர! அதாவது எல்லாவகைப்
படிமுறை அமைப்புகளும் பயனற்றவையே; அவை  மனிதகுலத்தைப் பிளவு
படுத்துபவையே! அவை வாழ்க்கைக்குப் புறம்பானவையே!

விலங்குகளின்  சமூகத்தில்,   எல்லா விலங்குகளும் பின் பற்றக்கூடிய வகை
யிலான,   அதாவது,    நகல் செய்யக்கூடியதான  கற்பிக்கப்பட்ட பொதுவான
மதிப்பீடுகள்,  கோட்பாடுகள்,  பாணிகள், போக்குகள், வாழ்முறைகள் எதுவு
மில்லை!  விலங்கினங்கள் யாவும்  தத்தம்  சொந்த நெறிமைகளையே கடை
பிடித்து வாழ்கின்றன!எவ்வொரு அம்சத்தையும் ஒரே வார்ப்பிலிட்டதுபோல
நகல் செய்வது தான்   மானிடர்களின்  மாபெரும் மட்டுப்பாடும்,  பிரச்சினை
யும் ஆகும்!  அதாவது,  மனிதர்களின் வாழ்க்கையை அளப்பதற்கென கடை
பிடிப்பதற்கு   யாதொரு  குறிப்பான,  அல்லது பொதுவான "தர-அளவு" என்று
ஏதுமில்லை!

வாழ்க்கையில்  மானிடர்  ஒவ்வொருவரும் அடையப்படவேண்டிய  வளர்ச்சி,
முன்னேற்றம்,வெற்றி என்பவை பரஸ்பரம் ஒருவருக்கு எதிராக ஒருவர் கட்டி
யெழுப்பக் கூடியவையல்ல!  மாறாக, மானிடர் ஒவ்வொருவரும் தன்னுள்ளே
நிர்மாணிக்கப்பட   வேண்டிய   அம்சங்களாகும்!    உண்மையான   வளர்ச்சி,
முன்னேற்றம்,வெற்றி என்பவை ஒருவன் தன்மீது அணிந்து கொள்ளக்கூடிய
புறப்பொருட்கள்,    மதிப்புகள்   ஆகியவற்றாலான    அணிகலன்கள்   அல்ல!
அவை  அக ரீதியானவை;   அவை   அறிவுத்தெளிவு,   அகமலர்ச்சி,  அகந்தை
கடந்த அகண்ட உணர்வு  ஆகியவையே ஆகும்!

கௌரவமான உயிர்வாழ்தலுக்கான தற்சார்புகொண்ட தொழில்நுட்பத்தை
நாம் உருவாக்கியாக வேண்டும்!   "நாம்   உருவாக்கியாக  வேண்டும்"  என்று
சொல்வதால், மீண்டும் கும்பலாக, கூட்டுறவாகச் சேர்ந்து செய்யப்பட வேண்
டும் என்ற அர்த்தத்தில் அல்ல; முடிந்தவரை தனி நபராக,  அவரவரும்  தனித்
தனியே உருவாக்கிக்கொள்ள வேண்டும்!அதாவது,கறையான்களைப்போல
எல்லோரும்    சேர்ந்து   கூட்டுழைப்பின்   மூலமாக   புற்று  கட்டி  வாழ்வதாக
அல்லாமல்;  சிலந்தியைப் போல  தனித்தனியே  தம்தம் கூட்டினை உருவாக்
கிக்கொண்டு   வாழ்ந்திட  வேண்டும்!    ஏனெனில்,   "கூடி  வாழ்ந்தால் கோடி
நன்மை!"    என்பது  இன்னும்  பலன்  தரவில்லை!   கூடி  உழைக்கிறோம்,  உற்
பத்தி  செய்கிறோம்;   ஆனால்,   உழைப்பின்  பலன்கள்   உழைக்கும்  மக்கள்
அனைவருக்கும்  கிடைப்பதில்லை!   ஆகவே தான்,     தற்சார்பு    ரீதியிலான
தொழில்நுட்பத்தின் அவசியம் பற்றி இங்கு பேசுகிறோம்!

நாம்  கூடி உழைக்கிறோம்,  செயல்புரிகிறோம்,  ஆனால், கூடி வாழவில்லை!
கூட்டுழைப்பின் பலன்கள் எல்லோருக்கும் கிடைத்தால்தானே வாழமுடியும்!
அதாவது,  கூட்டுறவு,  கூட்டுழைப்பு  என்பவை ஏய்ப்புக்கும், சுரண்டலுக்கும்
போர்வையாகப்  பயன்படும்  பசப்பல் கோட்பாடுகளேயாகும்! ஆகவேதான்,
கூட்டுறவுக்குப்  பதிலாக   "தற்சார்பு"   பற்றியும்;  சமத்துவத்திற்குப்பதிலாக
"தனித்தன்மை" யை   வளர்த்துக் கொள்வது  பற்றியும்  இங்கு  வலியுறுத்திப்
பேசுகிறோம்!

சமத்துவம்,  சுதந்திரம், சகோதரத்துவம்  போன்ற  கோட்பாடுகள் பிரெஞ்சுப்
புரட்சிக்காலத்தில் இருந்து பேசப்பட்டும்,  விவாதிக்கப்பட்டும் வருகின்றன!
ஆனால்,பெரிதாக எதுவும் இதுவரை சாதிக்கப்படவில்லை! ஏனெனில்,கோட்
பாடுகள்,  சட்டவிதிகள்  என்பவை  வேறு;    நடைமுறை  எதார்த்தம்   என்பது
வேறு! 'சமத்துவம்' என்பது மிகவும் சிக்கலான கோட்பாடு ஆகும்;   இதுவரை
அதற்கு தெளிவானதொரு  விளக்கம்  இல்லை! "எல்லா மனிதர்களும் எல்லா
நிலைகளிலும்   சமமானவர்கள்"   என்பது   உண்மைக்கு  மாறானது.   எல்லா
மனிதர்களையும்  ஒரே மட்டத்திற்கு கத்தரிப்பது  அல்லது நீட்டுவது  என்பது
செயற்கையானது மட்டுமல்ல; அது பெரிதும் தீங்கானது!

எல்லோருக்கும்  பொதுவாக உள்ள அம்சம் என்பது வேறு;  எல்லோரும்  சமம்
என்பது வேறு. ஏனெனில், எல்லோருக்கும் பொதுவாக உள்ள அம்சம் எல்லோ
ரையும் சமப்படுத்திவிடாது!

சில  நல்லெண்ணம் கொண்ட சிந்தனையாளர்கள் கூறுவதென்ன என்றால்,
"எவர்  வேண்டுமானாலும்   சுதந்திரம்,    சமத்துவம்   ஆகியவற்றை  அடைய
ஆவல் கொள்ளலாம்,   ஆனால்,   அவற்றை   அவர்  பிற மனிதர்களின்  உதவி
யின்றி, அதாவது சகோதரத்துவம் இன்றி சாதிக்க இயலாது!"  என்கின்றனர்!
இதிலுள்ள  பிரச்சினை  என்னவென்றால்,  சமத்துவம்,  சுதந்திரம்  போலவே,
"சகோதரத்துவம்" என்பதும் அழகிய இலட்சியபூர்வமான கோட்பாடேயாகும்!
ஆனால்,    அதை   அடைவது  என்பது  சற்றும்  சாத்தியமற்றதாகும்!   மனிதர்
களின்  உளவியல்  அறியாதவர்கள்  வேண்டுமானால்,  இவற்றின் சாத்தியம்
குறித்து நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் பேசி ஆறுதல் அடையலாம்!

மனிதனைப்பற்றிய  ஒரு விசேடமான உண்மை  என்னவெனில்,  தொடர்ந்து
அவன்  உணர்வில்  வளர்ந்து   தன்னைத்தானே  கடந்துசெல்லும்    பரிணாம
விதியைக்  கொண்டவனும்;    அவ்வழிமுறையின்   முடிவில்   ஒப்பற்றதொரு
இலக்கை   அடையவேண்டியவனுமான ஒரு ஜீவியாவான்;   அதாவது, அவன்
ஒரு எலி அல்லது தவளையைப்போல பிறக்கும் போதே பூரணமானவனாகப்
பிறப்பதில்லை!  ஓரு எலியானது எலியாகவே பிறக்கிறது,   கடைசிவரை ஒரு
எலியாகவே வாழ்ந்து மடிந்து போகிறது!   ஆனால்,   மனிதன்  மட்டும்  மனித
னாக ஆகப் பிறக்கிறான்!  அதாவது  மனிதனாக ஆவதற்குரிய  உட்பொதிவு
டன் பிறக்கிறான்!   மனிதன்     தன்னைப் பற்றிய   உணர்வுக்கு   வரவில்லை
யெனில்,   அவனும்  ஒரு  எலியைப் போலவே  உடலளவில் மட்டுமே வளர்ந்து
ஒரு முதுமையடைந்த உடலாக தளர்ந்து நோயுற்று மாண்டுபோவான்!

மனித  வாழ்க்கையும், அதன் இலக்கும்   புறத்தே  உலகில்,  சமூகக்களத்தில்
அரங்கேற்றப் படக்கூடியதோ,  நிர்மாணிக்கப் படக்கூடியதோ அல்ல! அவன்
பூமியின் மீது யாதொரு சொந்த சாம்ராஜ்யத்தையும் நிறுவுவதற்காக இங்கு
வரவில்லை! அவனது ராஜ்யம் அகத்தேயுள்ளது!  விலங்கு ஜீவிகளுக்கு அகம்
என்பது  கிடையாது;   அவற்றின்  வாழ்க்கை  புறத்தே தொடங்கி புறத்தேயே
முடிந்து  விடுகிறது!    மனிதனது   வாழ்க்கை    புறத்தே  தொடங்கி  அகத்தே
முழுமையடைகிறது!

உடலாகிய    மனித ஜீவியினுள்  உதயமாகியுள்ள  உணர்வே  உண்மையான
மனித ஜீவியாவான்!   மனிதன்   தொடர்ந்து  பரிணமிக்கும்  உணர்வு   எனும்
அம்சத்தைக் கொண்டுள்ளதால்  அவன் அவனது  உண்மையான உயரத்தை
அடைவதன்  வழியே அவன் முழுமையடையவேண்டும்; இதைத்தான் இங்கு
நாம் மனிதன் தனக்குத்தானே சமமாதல் என்று குறிப்பிடுகிறோம்!

தனக்குத்தானே சமமாக இல்லாததனால் தான் மனிதன் பிறருடன் தன்னை
ஒப்பிட்டுப்பார்க்கவும் பிறர் மீதுபொறாமை கொள்ளவும் ,பொய்சொல்லவும்,
பிறர் பொருளை களவாடவும்,பிறரை ஏமாற்றவும்,வஞ்சிக்கவும்,கொல்லவும்
செய்கிறான்.

மனிதன்  துன்புறுவதும், விரக்தியில் வெந்து மாய்வதும் எதனால்? தனக்குத்
தானே சமமாக விளங்கும் நேர்வழியைத் தெரிந்தெடுக்காமல் எது எதற்கோ
சமமாக ஆக வேண்டுமென பொய்யும் போலியுமான செயற்கையான மதிப்
புக்களை,இலட்சிய நிலைகளை அடையத்துடிப்பதும், அடையாவிடில் தோல்
வியில் தவிப்பதும் தானே!


மா.கணேசன்/நெய்வேலி/ 15.03.2017
----------------------------------------------------------------------------

Tuesday, 14 March 2017

மனிதனின் வேர்கள் எங்கேயுள்ளன?






மரத்தின் வேர்கள் நிலத்திலே
மனிதனின் வேர்கள் அகத்திலே!

மனிதன்  ஒரு வித்தியாசமான  ஜீவியாவான்;  அவனது வேர்கள் அவனுள்ளே
தான் உள்ளன! அவன் தனது வேர்களைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்!
பிற ஜீவிகள் யாவும் நேரடியாகப் பிறக்கின்றன!   ஆனால்,  மனிதன்  மட்டும்
அவன் பிறந்த பிறகு தான் பிறக்கிறான்!  அதாவது  இரு முறை பிறக்கிறான்!
ஆம்,  மனிதன்  எப்போது  உணர்வுக்கு வருகிறானோ  அப்போதுதான் அவன்
உண்மையில் பிறக்கிறான்!

முதலாவதாகப் பிறக்கும்போது  மனிதன் ஒரு உடல்-சுயமாக மட்டுமே பிறக்
கிறான்;  அதன் பிறகே மனிதன்  ஒரு மனச்சுயமாகப் பிறக்கிறான்.  ஆனால்,
பெரும்பாலானோரது  விஷயத்தில்,    இந்த  இரண்டாவது  பிறப்பானது   ஓரு
விசேடப்பிறப்பாக  உணரப்படாமல்,   உடல்-சுயத்தின்   நீட்சியாக   மட்டுமே
கொள்ளப்படுகிறது   என்பது  தான்    பெரிதும்    துரதிருஷ்டவசமானதாகும்!
அதாவது, பெரும்பாலானோர் இறுதிவரை ஒரு உடல்-சுயமாகவே (அதாவது,
ஒரு உடல்-ஜீவியாகவே) வாழ்ந்து மடிந்துபோய்விடுகின்றனர்!

அதாவது,பெரும்பாலானோர் ஒரு மன-ஜீவியாக எழுவதேயில்லை!அதாவது,
இறுதிவரை உணர்வுக்கு வருவதேயில்லை! இன்னும், ஒரு மன-ஜீவியாக எழு
வதும்கூட இறுதியானதல்ல! இவ்வம்சம் குறித்து பிறகு அதற்குரிய இடத்தில்
காண்போம்.

மனிதன்   ஒரு  மன-ஜீவியாக   எழாததால்   விளைபவை  தான்  அனைத்துப்
பிரச்சினைகளும்!  அவைகளுக்கான  ஒரே தீர்வு,  ஒவ்வொருவரும்  மன-ஜீவி
யாக   விழித்தெழுவதுதான்!   மனிதன்   தன்   மனத்திற்கு   விழிக்காதவரை,
அவன் மனிதனல்ல!  ஒருவன்  தன்  மனத்திற்கு  விழிப்பது  என்றால்  என்ன?
பொதுவாக,   நாம்  'மனித-மனம்'  என்று  குறிப்பிடும்போது,  மனித-உடலின்
ஒரு பகுதி,  அல்லது  அங்கமாகவே மனத்தைக் கருதுகிறோம்!  ஆனால், இது
ஒரு தலைகீழ்ப் பார்வையாகும்! பரிணாம வளர்ச்சிக் கிரமத்தைப்பொறுத்த
வரையில்  முதலில்  வால் தான் வெளிப்படுவதாயுள்ளது,   பிறகுதான்  தலை
வெளிப்படுகிறது!  ஒருவன்  தன் மனத்திற்கு விழிப்பது என்றால், அவன் தன்
னைப்பற்றிய  உணர்வுக்கு வருவதும், 'தான்' உண்மையில் எத்தகைய நிஜம்
என  தன் அடையாளம்  குறித்து அறிவதும் தான்!   ஏனெனில்,  மனம் என்பது
துல்லியமாக  உடலிலிருந்து  வேறானதாகும்!    ஏனெனில்,   மனம்,   அதாவது
உணர்வு தான் மனிதன்!

ஆக,  மனிதன்  தன் மனத்திற்கு விழிக்கவில்லையென்றால்,  அனைத்துவித
அடையாளச்  சிக்கல்களும்   எழுந்து    அவனை  மூழ்கடித்து  முடமாக்கிடும்!
முதலில்,   மனமானது  தன்னை  உடலுடன்  அடையாளப்படுத்திக்  கொண்டு
விடும்!    அதாவது,  அது  தன்னை  உடலாகவே  எண்ணிக்கொள்ளும்!  அதன்
பிறகு  அதை  அதனுடைய  அசலான அடையாளத்தை அறியச்செய்யும்படிச்
செய்வது மிக்கக் கடினமாகிடும்!  பிறகு அது தோன்றிய கூடான உடல் ஆண்
உடலாயிருந்தால்,    தன்னை   ஒரு   ஆணாகவும்;    பெண்   உடலாயிருந்தால்
தன்னை  ஒரு  பெண்ணாகவும்  பாவித்துக்கொள்ளும்!  ஆனால், மனத்திற்கு
பால்  என்பது  கிடையாது!    மனம்   நிறமற்றது  என்பதால்,    அது    எதனுடன்
தன்னை  அடையாளப்படுத்திக் கொள்கிறதோ அதனுடைய  நிறத்தை எடுத்
துக்கொள்ளும்!

இன்னும், மனத்திற்கு யாதொரு பாரம்பரியமும், மரபும், வரலாறும் இல்லை;
அது  எவ்வொரு பரம்பரையின் தொடர்ச்சியோ, அல்லது, விளைவோ அல்ல!
அதற்கு   குலம்,   கோத்திரம்,  சாதி,  மதம்,  கலாச்சாரம்,  எதுவும்  கிடையாது!
இவை  அனைத்தும் அது அமைந்திருக்கும் சூழலிலிருந்து,  அது  சுவீகரித்துக்
கொள்கிறது;அல்லது அதற்குள் திணிக்கப்படுவதாகிறது!இவையனைத்தும்
மனத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும்! இவற்றிலிருந்து அது தன்னை
விடுவித்துக் கொள்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! இவற்றி
னால் மனிதஜீவிகளின் வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் கிட்டப்போவது
இல்லை!   மாறாக,  இக்காரணிகள்  மனித சமூகத்தைப் பிளவுபடுத்தி அவர்
களது வாழ்வைக் குலைக்க மட்டுமே உதவிடும்!

கலாச்சாரம்  என்பதென்ன?  ஒரு  நாட்டின்  அல்லது  இனத்தின்  சமூக நியதி
கள்,  பழக்க வழக்கங்கள்,  நெறிமுறைகள்,  மற்றும் வாழ் முறைகள் தானே!
ஆனால்,  ஒரு  இனத்திற்கு  அல்லது  நாட்டிற்குப்  பொருந்துகிற கலாச்சாரம்,
இன்னொரு  நாட்டிற்கு  அல்லது  இனத்திற்குப் பொருந்தாது  போகிறது   என்
றால்; அதாவது பரஸ்பரம் ஒரு நாட்டின் கலாச்சாரம் இன்னொரு நாட்டிற்குப்
பொருந்தாது என்றால், எவ்வொரு கலாச்சாரத்திற்கும் உள்ளார்ந்த மதிப்பும்,
அர்த்தமும்  இல்லை என்றாகிறதல்லவா?  அப்படியானால்,  கலாச்சாரம் என்
பது அவரவர்க்கு சௌகரியமாக விளங்குகிற நியதிகள்,பழக்கவழக்கங்கள்,
நடைமுறைகள்,  சடங்குகள்  மட்டுமே  என்பதால்,   அதைப்  பெரிதுபடுத்திப்
பேசுவதில்  யாதொரு  அர்த்தமும்  இருக்கவியலாது!  அதாவது, கலாச்சாரம்,
பிராந்தியம், நாடு, தேசம், இனம்,மொழி, சாதி,மதம், தொழில்,  உத்தியோகம்
மற்றும்  இன்னபிற  அடையாளங்கள்  எதுவும்  மனித ஜீவிகளின் வேர்களாக
அமைய முடியாது!  ஏனெனில்,  இவ்வடையாளங்கள்  எதுவும் உண்மையான,
சாரமான மனிதஜீவியை வெளிப்படுத்துவதோ, தொடுவதோ இல்லை!

ஒரு மனிதஜீவியாக இருப்பது,உணர்வது,வாழ்வது என்றால் என்ன என்பதை
அறியாமல்  எவரும் ஒரு மனிதஜீவியாக உருவாக இயலாது! ஆம், மனிதஜீவி
யின்   ஆணி வேர்  அல்லது  மூலம்   கடந்த காலத்திலும்  இல்லை;    இன்னும்
எதிர்காலத்திலும் இல்லை!  மாறாக, அவன் தன்னை முழுமையாக  உணர்வு
கொள்ளும் இக்கணத்தில் தான் உள்ளது! ஆம், மனிதன் தன்னில் தொடங்கி
தன்னிலேயே முடிவடைகிறான், அதாவது முழுமையடைகிறான்! இதற்கான
ஒரு களமாக அமைந்ததுதான் இப்பிரபஞ்சம்!

மனிதன் தன்னை உணர்வுகொள்ளத்தொடங்கும்வரைதான் புறவுலகம், புற
விஷயங்கள் யாவும் அவனது கவனத்தையும், உணர்வையும் ஈர்ப்பதாகவும், முடக்கிப்போடுவதாகவும், முக்கியத்துவம் கொண்டதாகவும் தெரிகின்றன!
ஆரம்பக்கட்டத்தில்,  புறத்தே  வர்ணமயமான  ஒரு உலகம்  உள்ளது என்பது,
மனத்தை,  உணர்வை வியக்கச் செய்து  ஆக்கிரமிக்கிறது!  பிறகு ஒரு கட்டத்
தில்,  இத்தகைய உலகின் நடுவே,  "தான்" இருக்கிறேன்!  என்பது  முதன்மை
பெறத்  தொடங்குகிறது!      மனிதனைச் சுற்றி   ஒரு  மாபெரும்   பிரபஞ்சமே
இருந்தாலும்,  அது   தனது  இருப்பையோ  அல்லது   மனிதனையோ  அல்லது
பிறவற்றின் இருப்பையோ உணர்வது  இல்லை! ஆனால், மனிதன் தன்னைப்
பற்றிய  உணர்வுக்கு  சற்று  தாமதமாக  வந்தாலும்    ( எண்ணற்ற  பலர்  மிக
மேலோட்டமாக  தங்களது  இருப்பை உணர்வதற்கு மேல் தங்களை உணர்வ
தில்லை என்ற போதிலும்)   தமக்குப்  புறத்தேயுள்ள  உலகையும்  அதிலுள்ள
பொருட்களையும் பொதுவாக மனிதஜீவிகள் உணராமல்  அறியாமல்  போவ
தில்லை!  ஆம், பிரபஞ்சத்தை அறிகிற, உணர்வு கொள்ளுகிற மனிதன் தான்
பிரபஞ்சத்திற்கு  அர்த்தம்  தருபவனாகவும்,   பிரபஞ்சத்தின்  அர்த்தமாகவும்
விளங்குகிறான்!

ஆனால்,   பிரபஞ்சத்தை அறிவதன்,    உணர்வதன்  வழியே   பிரபஞ்சத்திற்கு
அர்த்தம்  தருபவனாகவும்,   பிரபஞ்சத்தின்  அர்த்தமாகவும்  விளங்கும்  மனி
தனை  அறிவதும்  உணர்வதும்,  அவனுக்கு  அர்த்தம்  தருவதும்  எது அல்லது
யார்?  வேறு யார்?  ஒவ்வொரு மனிதனும்தான் தன்னைத்தானே உணர்ந்திட
வும்  அறிந்திடவும்  வேண்டும்!    ஆனால்,   தன்னை   உணர்ந்திடும்  மனிதன்
தன்னை  என்னவாக  உணர்கிறான் என்றால்,   தான்  ஒரு   "உணர்வு"   எனும்
உண்மையைத்தான் உணர்கிறான்!  மனிதன் தோன்றும்போதே உணர்வாக,
ஒளியாகத்தான்   தோன்றுகிறான்;    ஆனால்,  அவன்  தான்  ஒரு  "உணர்வே",
அதாவது   "ஒளியே"   என்பதை  உணராமலே போகிறான்!   தனக்குத் தானே
ஒளியாகத் திகழ்பவனே மனிதன்!

ஆனால்,  பெரும்பாலான  மனிதர்கள்  ஏன்  ஆழமாகத் தங்களை உணர்வது
இல்லை!தன்னை உணர்ந்தாகவேண்டும் என்பது மனிதனின் இருப்பிலேயே
உள்ளடங்கியுள்ள  ஒரு  இன்றியமையாத  தேவையைச் சுட்டும்  விதியாகும்!
ஆனால்,  பொதுவாக  மனிதர்கள்  அத்தேவையை  அவ்வளவாக  உணர்வதே
யில்லை!  அதற்குக்காரணம்  அவர்கள்  தமது  மேற்புறச்சுயமான  உடலுடன்
தம்மை  அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டதால்,   உடலின்  தேவைகளை
நிறைவேற்றிக்  கொள்வதைத்  தாண்டி    வேறு   எவ்வொரு   தேவையையும்,
கடமையையும்,  அது  எவ்வளவு  உன்னதமானதாயினும், அவர்களால் அதை
நினைத்துக்கூடப்  பார்க்கமுடியாது!  ஆம்,   மனிதர்கள்  தங்களது  ஆழமான,
உண்மையான  சுயத்தைப்  பொறுத்தவரை   அந்நியர்களாகவே   உள்ளனர்!
அதாவது,    அவர்கள்   தங்களைப் பற்றிய மிகவும்  மேலோட்டமான தன்மை
(உண்மை)யுடனான பரிச்சயத்திலும், தங்களுக்குத்தாங்களே தெரிவுசெய்து
கொண்ட   பலவித  அடையாளங்களிலும்  பரம திருப்தி   காண்பவர்களாகத்
தங்களது மேலோட்டத்தின் ஆழத்திலேயே தேக்கமடைந்து விடுகின்றனர்!

மனிதர்கள்,  தங்களைப்பற்றிய அசலான உண்மையை,  அதாவது  உண்மை
யான   அடையாளத்தைக்  கண்டுபிடிப்பது  பற்றிய   உணர்வற்று,   சமூகத்தி
னால்   மதிக்கப்படக்கூடிய   ஒட்டுச் சீட்டுகளையும்,   மேன்மையேற்றப்பட்ட
அடையாளங்களையும்  தான்   தேடிச்செல்கிறார்கள்!     பலர்     தங்கள்   மீது
திணிக்கப்பட்ட   அடையாளங்களைச் சுமந்து  கொண்டு துன்புறுகின்றனர்!
தனது  வேர்களை   புறத்தே  தேடுபவன்  அவற்றைக்  கண்டுபிடிப்பதில்லை;
அவ்வாறு      கண்டுபிடித்துவிட்டதாகக்    கொண்டாடப்படுபவை     அவனது
உண்மையான வேர்கள் அல்ல!

மா.கணேசன்/ நெய்வேலி/ 12.03.2017
----------------------------------------------------------------------------

Sunday, 12 March 2017

எது பிரும்மாண்டம்?






மனிதனைவிட   ஒரு யானை  பெரியது;   அதைவிட   ஒரு ஆலமரம்  இன்னும்
பெரியது!   அந்தக் காலங்களில்  அரசர்கள்  தங்கள்   பராக்கிரமங்களையும்,
வெற்றிகளையும்   உலகிற்கு  பறைசாற்றுவதற்காக வானளாவிய கோவில்க
ளையும், மண்டபங்களையும், பிரமிடுகளையும், தாஜ்மகால் போன்ற காதல்
சின்னங்களையும், பெரும் வளைவுகளையும், நுழை வாயில்களையும் எழுப்
பினர்!  ஒருவேளை,  இந்த அரசர்கள் தாங்கள் மனித ஜீவிகளாக இருப்பதின்
மேன்மையை,   சிறப்பை,   பெருமையை,  மகத்துவத்தை   உணராததினால்,
தமது உளக்குறைகளை ஈடுகட்டும் பொருட்டு இவ்வாறு பிரும்மாண்டமான
கட்டடங்களையும், சின்னங்களையும் எழுப்பியிருக்கலாம்! நவீனகாலத்தில்
சில அரசுகள், நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் வானளாவிய கட்டடங்
களையும், உலகிலேயே உயரமான கட்டடம் என்று பெயர் பெறுவதற்காகவே
போட்டி போட்டுக்கொண்டு அதி உயரக் கட்டடங்களையும் எழுப்புகின்றனர்.

ஆனால்,  உண்மையிலேயே எது பிரும்மாண்டமானது? மாபெரும் இப்பிரபஞ்
சத்தில்  பால்வீதி மண்டலம் எனப்படும் கோடானுகோடி  நட்சத்திரங்களைக்
கொண்ட    உடுமண்டலம்   என்பது    கோடானுகோடி    உடுமண்டலங்களில்
எங்கோ   ஒரு  ஓரத்தில்  இருக்கும்  ஒன்று  மட்டுமேயாகும்!   அந்தப் பால்வீதி
மண்டலத்தில்  உள்ள  கோடானுகோடி  நட்சத்திரங்களில்  ஒன்று தான் நமது
சூரியன்;   அச்சூரியனைச் சுற்றி  வரும்  ஒன்பது  கிரகங்களில்    ஒரு  கிரகம்
தான் நமது பூமிக்கிரகம்;  ஆக,  இவ்வாறு பரந்து விரியும் பிரும்மாண்டமான
இப்பிரபஞ்சத்தில் தூசியிலும் தூசி அளவிலான பூமிக்கிரகத்தின்மீது ஒட்டிக்
கொண்டிருக்கும்  'தூசு'  தான்  மனிதன் என்பதாக விஞ்ஞானிகளும், தத்துவ
வாதிகளும்,  சிந்தனையாளர்களும்  ஏதோ  பெரிய  அற்புத    உண்மையைச்
சொல்வதைப்  போலச்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!   இத்தகைய  படு
மேலோட்டமான  ஒப்பீட்டுக் கூற்றுகள்   மனிதனைச்  சிறிதும்  புரிந்துகொள்
ளாததையே காட்டுகின்றன!

பிரும்மாண்டத்திற்கான  அளவுகோல்  எது?  எந்த அளவுகோலைக்கொண்டு
பிரபஞ்சத்தையும்,   மனிதனையும்   இன்னும்   வேறெதையும்   அளவிடுவது?
எந்த  அளவுகோலைக் கொண்டு    ஒன்றை  இன்னொன்றோடு  ஒப்பிடுவது?
பொருட்களின்  நீளம், அகலம், உயரம் ஆகியவை சேர்ந்து அமைந்த  கனபரி
மாண அளவைக்கொண்டு அளப்பதா,அல்லது பொருட்களின் பண்புகளைக்
கொண்டு அளப்பதா?  பொருட்களின்  கனபரிமாண அளவு என்பது அவற்றி
னுடைய  மேலோட்டமான பண்பைக் குறிப்பதாகும். மாறாக, பொருட்களின்
சாரமான உள்ளார்ந்த பண்புகள் மட்டுமே அவற்றின் அசலான தன்மையை
தீர்மானிப்பதாய் இருக்கும். ஆக, பிரபஞ்சமானது,  கனபரிமாணத்தில்  பெரி
தாய்  இருந்தாலும்,  பண்பினடிப்படையில்,  அது,  உயிரும்,  உணர்வும்  அற்ற
வெறும் பௌதீகச் சடப்பொருளே! பண்பினடிப்படையில் தரையில் ஊர்ந்து
செல்லும்  ஒரு புழு  இப்பிரபஞ்சத்தைவிட  உயர்ந்ததும்,  மதிப்பு வாய்ந்ததும்
ஆகும்! ஏனெனில், ஒரு புழு என்பது "உயிர்" என்ற பரிமாணத்தைக் கொண்ட
தாகும்!

ஆனால்,  மனிதன்  என்பவன்  "உணர்வு"  எனும் முற்றிலும் வேறு பரிமாணத்
தைக் கொண்டவனாக, வேறு எதனுடனும் ஒப்பிடவியலாத உயரத்தில் இருக்
கிறான்!  மேலும்,   அவன்  தற்போது   அடைந்துள்ள  உயரமும்  இறுதியானது
அல்ல! அவன் இன்னும் அதி உயரத்தை, உயரம் என்பதன் உச்சியை அடைவ
தற்காகவே  உருவானவனாக உள்ளான்!   ஆனால்,   பெரும்பாலான  மனிதர்
களுக்கு  தங்களது   உண்மையான   உயரம்  எதுவென்று தெரியாது; மாறாக,
அவரவரும்  தாம்  இருக்கும்  உயரமே  'அதி-உயரம்'   என்பதான பிரமையில்
ஆழ்ந்துகிடக்கின்றனர்!  மேலும், சுயத்தை அறியாமலேயே வெற்று சுய-முக்
கியத்துவம்     கொண்டாடுகின்றனர்!     யாதொரு    முனைப்பும்      (ஊக்கம்,
நோக்கம்,தீவிரம் எதுவும்)இல்லாமலேயே தன்-முனைப்பு கொண்டு திரிகின்
றனர்!

உணர்வில்லா  தவளைக்கு தற்பெருமையும், தன்முனைப்பும், சுய முக்கியத்
துவமும்  எவ்வாறு  கிட்டின?  உணர்வின்  நுனியை  எட்டியதற்கே  இவ்வளவு
சுய-திருப்தியும், சுய-திளைப்பும் என்றால்;உணர்வின் உச்சத்தை எட்டினால்,
கிட்டக்கூடிய   ஆனந்தமும்,    நிறைவும்,   எவ்வளவு    உண்மையானதாகவும்,
முழுமையாகவும், நிரந்தரமாகவும் இருக்கும்!

மனிதன்  தன்னில்  எதைக்கொண்டாடுவான்?  தனது  உருவத்தையா,  மனத்
தையா?  அறிவையா?  தனக்குத்தானே  கற்பித்துக்கொண்ட  பிம்பத்தையா,
அல்லது,    தனக்கு   மிகவும்  பொருத்தமாக  இருக்கும்  ஒரு   முகமூடியையா?
எதனுடனும்,  எவருடனும்  தன்னை  ஒப்பிட்டுக்காணாமல்,  நேரடியாக தனது
மகத்துவத்தை  அவனால்  கண்டறிய  முடியுமா?   உண்மையில்  தான்   யார்,
எத்தகைய நிஜம் என்பதை உணர்ந்தறியாமல் எவ்வாறு அவனால் தன்னைக்
கொண்டாட முடியும்?

பண்பினடிப்படையில்   எது  மேலானதோ,   மேலானதிலும்   இறுதியானதோ
அதுவே   பிரும்மாண்டமானது!    சந்தேகத்திற்கிடமில்லாமல்,    சடம்     (பருப்
பொருள்), உயிர் ஆகியவற்றைவிட மனித-உணர்வே பெரியது;  மனித உணர்
வைவிட உணர்வின் உச்ச நிலையே அனைத்தையும்விடப் பெரியது! அதுவே
இறுதி  மெய்ம்மையும்,   மூல முதல் மெய்ம்மையும் ஆகும்!   அறிந்துகொள்ள,
புரிந்துகொள்ள  பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் உள்ளன;  ஆனால், அனைத்
தையும்  அறிவது  என்னவோ  மனிதனின்   உணர்வு எனும்  ஒற்றை அம்சமே!
உலகை  உணர்வு  கொள்ளும் (புரிந்துகொள்ளும்) , மனித-உணர்வே உலகை
விடப் பெரியது!  இன்னும்,   தன்னை    உணர்வு கொள்ளும்    மனித-உணர்வு
அடையக்கூடிய நிலையே  அனைத்திலும் பெரியது!

மனிதன்  என்பவன்  சில காலம்  மட்டுமே  இருந்து  உதிர்ந்து  போகும்   மலர்
அல்ல!  ஏனெனில், அவன் வெறும் உடலல்ல, ஒரு நாள் உதிர்ந்து போவதற்கு;
மேலும்,  மனிதன்  என்பவன்  உடலின் பகுதியல்ல;  உடல்  தான்  மனிதனின்
பகுதியாகும்!      இன்னும்  அவன்  பிரும்மாண்டத்தின்  ஒரு  பகுதியும்  அல்ல;
மாறாக,  அவன் மட்டும் உணர்வுகொள்வானேயானால், அந்த இறுதிப்  பிரும்
மாண்டத்தில்  பங்கு கொள்பவனாகவும்,     பங்காளியாகவும்   ஆகக்கூடியவ
னாவான்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 05.03.2017
----------------------------------------------------------------------------

Friday, 10 March 2017

வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?






"வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?"  என்ற  கேள்வி அடிப்படையி
லேயே  தவறானது!   எனினும்   மகிழ்ச்சி,  துன்பம்  இவ்விரண்டையும் கடந்து
"வாழ்க்கை" என்றால் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிப்போமாக!

வாழ்க்கை என்பது முற்றிலும் துன்பமயமானதல்ல!ஏனென்றால்,  வாழ்க்கை
யில்  எவ்வளவோ இனிமையான அம்சங்கள், விஷயங்கள், தருணங்கள் உள்
ளன- நீலவானம், சூரிய உதயம், பறவையின் பாடல், மழலைப்பேச்சு, காதல்,
காமம், . . . என எவ்வளவோ உள்ளன!  வாழ்க்கையில்,  துன்பகரமான அம்சங்
களும்,    நிகழ்வுகளும்,   விபத்துகளும்,  இழப்புகளும்  உள்ளன வென்றாலும்,
நிச்சயம்    வாழ்க்கை    என்பது  துன்பத்தை  மட்டுமே  தயாரித்து  அளிக்கும்
தொழிற்சாலை யல்ல!

'வாழ்க்கை  துன்பகரமானது'   என்று புத்தர் சொல்லியதன் காரணம்,  நோய்,
மூப்பு,    மற்றும்  மரணம்  எனும்  இறுதித்  துன்பத்தை  மனதில்   கொண்டும்,
அதாவது   வாழ்க்கையின்  நிலையாமையை   முன்னிட்டும்  தான்!    ஆகவே
தான்,  அவர் நிர்வாணம்,அல்லது உயர்பேரறிவு எனும் இலக்கைப்  பிரதானப்
படுத்திப் பேசினார்!

உப நிஷத்துகள் பிரம்மத்தைப் பற்றியே பேசின!அதாவது பிரம்மம்
மட்டுமே நிஜம் என்று பிரஸ்தாபித்தன!

இயேசு இங்குள்ள வாழ்க்கையைவிட தேவனின் ராஜ்யத்தைப் பற்றியே
பேசினார்!

இஸ்லாம் இம்மையைப் பற்றி மட்டுமல்லாமல் மறுமையைப் பற்றியும்
பேசியது !

தமிழ்ச் சித்தர்கள் வீடுபேறு பற்றியே பேசினர்!

ரமணர் ஆத்மசாட்ஷாத்காரம் பற்றியே பேசினார்!

அதாவது,   வாழ்க்கையைப்  புரிந்து கொண்ட எவரும் வாழ்க்கையின்  குறிக்
கோள்,  இலக்கு,  சென்றடையும்  இடம்  பற்றியே பேசினர்! எவரும் இங்கேயே
இருந்து குந்தித் தின்பதைப்பற்றிப் பேசவில்லை!

எவ்வொரு பயணத்திற்கும் போய்ச்சேருமிடம், இலக்கு முக்கியம்;அவ்வாறே
வாழ்க்கை எனும்  பயணத்திற்கும் இலக்கு முக்கியம்; பயணத்தின் அர்த்தம்
இலக்கிலேயே   அடங்கியுள்ளது!    இலக்கில்லாத   பயணம்     அர்த்தமற்றது,
பயனற்றது!    விருந்து    சாப்பிடப்போகும்  ஓருவன்  விருந்தில்   என்னென்ன
பரிமாறப்படும்,   எவ்வளவு  ருசியான  உணவு வகைகள்  இடம்பெறும்  என்ப
தையெண்ணி  மகிழ்ந்தவாறே  செல்வதைப்போல;    காதலியைச் சந்திக்கச்
செல்பவன்,  காதலியை  எதிர்நோக்கிய   சந்தோஷத்திலேயே    செல்வதைப்
போல, ஒவ்வொருவரும் வாழ்வின் ஒப்பற்ற இலக்கு குறித்த விசாரத்தில் ஈடு
பட்டவாறே வாழ்ந்து செல்லவேண்டும்!  இலக்கின் அற்புதச்சுவை இறுதியில்
எட்டப்படுவது அல்ல;  மாறாக,  பயணத்தின்  ஒவ்வொரு  அடியிலும்  உணரப்
படும் வகையில்,   வாழ்க்கையை   ஒருவன்   அதி தீவிர  நேசத்துடன்   அணுக
வேண்டும்!

அதாவது,    பயணிப்பவன்,    பயணம்,     பயணத்தின் இலக்கு    இம்மூன்றும்
ஒருமைப்படும்  விதத்தில்,  ஒருவன்    தீவிர   நேசத்துடன்   அணுகவேண்டும்!
மேலும்,   ஒருவன் மிச்சம் மீதமின்றி  தன்னை முழுமையாக வாழ்க்கைக்குக்
கொடுத்தாகவேண்டும்!

வாழ்க்கையின்   மேற்புற  இன்பங்களுடன்  தன்னை   அடையாளப்படுத்திக்
கொண்ட,    பிணைத்துக் கொண்ட   ஒருவனுக்கு   சிறு     அசௌகரியம் கூட
பெருந்துன்பமாகத் தெரிகிறது;   ஒரு பொருள்  தொலைந்து   போனால்,  அது
பேரிழப்பாகத் தெரிகிறது!

வாழ்க்கையில்  இன்பம்,  துன்பம்  இரண்டும்  உள்ளது என்பது வெளிப்படை!
மேலோட்டமான  (நிலைப்பற்ற)   இன்பத்தில்   முதலீடு   செய்தவன்  துன்பம்
கண்டு கலங்குகிறான்;  ஐயோ, வாழ்க்கை எவ்வளவு துன்பமயமானது என்று
புலம்புகிறான்!   ஆனால்,  இன்பம்,  துன்பம் இரண்டையும் கடந்தது தான் அச
லான வாழ்க்கை என்பதை அறிந்தவர் ஒரு சிலரே! ஆக, அசலான வாழ்க்கை
யில் முதலீடு செய்பவனே உண்மையான மனிதன்;  அவனை ஞானி என்றும்
சொல்வர்!

உண்மையான மனித வாழ்க்கை என்பது ஒருவன் உணர்வுகொண்டு வாழ்க்
கையை  உணர்ந்தறியத் தொடங்கும் போது தான் தொடங்குகிறது;   அதற்கு
முன்புவரை அது வெறும் உணர்வற்ற பிராணிய இருப்பாக, அசலான வாழ்க்
கைக்கான (கட்டடச் சாரம் போன்ற) ஒரு ஏற்பாடாக மட்டுமே விளங்குகிறது!
இந்த  உணர்வு பூர்வமான  வாழ்க்கைக்கு   முந்தைய   உணர்வுக்குறைவான
வாழ்க்கையில்  இன்பமும்,  துன்பமும்  கலந்து  இருப்பது  அதன்  இயல்பான
தன்மையாகும்;   அத்தகைய  வாழ்க்கையைத்தான்  அனைத்து விலங்குஜீவி
களும்  புகார்களின்றி,  அலுப்பு சலிப்பு  இன்றி,  விரக்தியின்றி,  அங்கலாய்ப்
பின்றி  வாழ்ந்து கொண்டிருக்கின்றன! விலங்குஜீவிகளின் வாழ்விலும் துன்
பங்களும்,  துயரங்களும், விபத்துகளும்,  இழப்புகளும், மரணங்களும்  இருக்
கத்தான் செய்கின்றன;  ஆனால்,  அவை  குறித்து அவை  யாதொரு புகாரும்
தெரிவிப்பதில்லை,  அவ நம்பிக்கையும்  கொள்வதில்லை!

ஆனால்,அதேநேரத்தில், மனிதஜீவிகளுக்கு உணர்வு  (மூளை, மனம், சிந்திக்
கும்  திறன், அறிவு யாவும்)  இருப்பது  புகார்  தெரிவிப்பதற்கும்,  புலம்புவதற்
கும்,  அவநம்பிக்கை  கொள்வதற்கும், விரக்தியடைவதற்கும் அல்ல  என்பது
மட்டும் நிச்சயம்! அவ்வாறு அவன் புகார் தெரிவிப்பதென்றால்,  அவன் எவரி
டம்  தெரிவிக்க முடியும்?  புகார்களற்ற  வகையில்  தன்னையும், தனது வாழ்
வையும்   நிர்வகிக்கவும், அனைத்துப் புதிர்களையும் விடுவிக்கவும் தோன்றி
யவனல்லவா அவன்!

வாழ்க்கையை    இன்பம்,   துன்பம்   இவ்விரண்டின்  சொற்களில்   காண்பது
என்பது வாழ்க்கைக்கு நாம் அளிக்கும் மிகவும் மட்டுப்பாடானதும் மேலோட்
டமானதுமான பதிலளிப்பு ஆகும்!   ஏனெனில்,   வாழ்க்கை  என்பது  இன்பம்,
துன்பம் இரண்டையும் உள்ளடக்கியதும், இரண்டையும் கடந்ததுமானதொரு
முழுமையாகும்! அது ஒரு அற்புதப்புதிர் ஆகும்!அதை இன்பம்,துன்பம் எனும் நிலைகளுக்குச்சுருக்கிக் காண  முயற்சிப்பது அதைக் கொச்சைப் படுத்துவ
தாகும்! ஏனெனில், இன்பம், துன்பம்  இவ்விரண்டும் அநித்தியமான உலகின்
(பிரபஞ்சத்தின்) மாறி மாறி அமையும் இரு முகங்களாகும்!  இருப்பு, இன்மை;
வாழ்வு, சாவு  எனும்  இரு விதிகளுக்குமான  போராட்டத்தின்   வெளிப்பாடே
இப்பிரபஞ்சம் எனும் இயக்கம்!   அநித்தியமான  இப்பிரபஞ்ச   இயக்கத்தின்
இலக்கு நித்தியமே ஆகும்!  ஆனால்,  அந்நிலை சார்புரீதியிலமைந்த  பிரபஞ்
சத்துள் அடையமுடியாது!  இருப்பா? இன்மையா?  அல்லது,  வாழ்வா? சாவா?
அல்லது,   இன்பமா? துன்பமா?  என்றால், முடிவில் இருப்பும், வாழ்வும், இன்ப
மும் தான் வெற்றி பெறும்!

அதாவது, நிலையாமை என்பது இப்பிரபஞ்சத்தைப்பீடித்த நிரந்த நோயல்ல!
மாற்றத்தை   உள்ளடக்கிய   வளர்ச்சி,  பரிணாமம் எனும்  பிரபஞ்ச இயக்கம்
முடிவில்  அனைத்து மாற்றங்களையும்  தீர்த்து முடித்து  முழுமை  நிலையை
அடைந்தாக  வேண்டும்!

நமது   சூரியன்   இன்னும்  நூறு  கோடி  ஆண்டுகளில்,  தனது  எரிபொருளை
எரித்துத்  தீர்த்துவிட்டு மடிந்துவிடும்;  ஒட்டு மொத்த  பிரபஞ்சமும்  சில நூறு
கோடி ஆண்டுகளில்  தனது  முடிவைத் தழுவிக்கொள்ளும் என்று விஞ்ஞானி
கள்  கூறுவதன் அர்த்தம் இப்பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் அழிந்து போகும் என்
பதல்ல! மாறாக, எந்த நோக்கத்திற்காக இப்பிரபஞ்சம் தோன்றியதோ அந்த
நோக்கம்,  குறிக்கோள் நிறைவேறியதும்,  பிரபஞ்சம் முழுமையை எட்டிவிடு
கிறது எனும் உண்மையை அவர்கள் அறியாததாலேயே பிரபஞ்சம் முடிவிற்கு
வந்துவிடும் அல்லது அழிந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள்! மேலும் பிறக்
கின்ற யாவும் ஒரு நாள் இறந்துபோகும்; தோன்றிய யாவும் ஒரு நாள் அழிந்து
போகும் எனும் கூற்றுகள் மேலோட்டமானவை! பாமரத்தனமானவையாகும்!

ஏனெனில்,   இப்பிரபஞ்சம்  அழிவதற்காகத் தோன்றியதல்ல;   அதே வேளை
யில்,  இப்பிரபஞ்சத்தில்  உள்ளடங்கிய சில பொருட்கள்,  கூறுகள், பகுதிகள்,
நிகழ்வுகள்   ஒட்டு மொத்தத்தின் வளர்ச்சி விதிகளுக்குட்பட்டு  மாற்றத்திற்
குள்ளாகக்கூடும், மடியக்கூடும்;  அவ்வளவு தானே தவிர, ஒட்டு மொத்தமும்,
அதன்  உணர்வுப்பூர்வமான  பிரதிநிதிகளான மனிதஜீவிகளும்  ஒருபோதும்
அழிவதில்லை!   ஆனால்,  மனிதஜீவிகள்  தங்கள்   உணர்வில்   மேன்மேலும்
வளரவில்லையெனில்,   அவர்கள்   ஏற்கனவே வீழ்ச்சியடையவும், அழியவும்
தொடங்கிவிட்டார்கள்  என்பதுதான்  அவர்களைப் பற்றிய   உண்மை  நிலை
யாகும்! அதைப் பொதுமைப்படுத்த முடியாது!

வயிற்றுவலியில்  அவஸ்தைப்படும்  ஒருவனுக்கு  வாழ்க்கை என்பது,  "வலி"
தான்,  வலியைத் தவிர வேறில்லை என்பதாகத் தெரியும்!  தன் காதலியுடன்
தனியே அமர்ந்து அளவளாவிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு இப்பிரபஞ்சம்
ஒரு பெரிய காதல் பூங்கா, காதல் களிப்பு தான் வாழ்க்கை என்பதாகத் தெரி
யக்கூடும்! ஒருவன் தனது வாழ்க்கையில் இன்பம், துன்பம், விரக்தி,கலக்கம்,
ஏமாற்றம், குழப்பம், தெளிவு போன்ற பலவகைப்பட்ட உணர்ச்சிகளை, மன-
நிலைகளை  அனுபவம் கொள்ளக்கூடும்;  ஆனால்,  அவை  யாவும்  எவ்வாறு
ஒருவன் வாழ்க்கைக்குப்பதிலளிக்கிறான் என்பதைப்பொறுத்த விளவுகளே
தவிர,அவை வாழ்க்கையின் வெளிப்பாடுகள் அல்ல!ஆகவே,வாழ்க்கையை
இன்பமாகவோ,  துன்பமாகவோ,  அல்லது  வேறெதுவுமாகவோ  சுருக்கிவிட
முடியாது! அதாவது,  எவனொருவன்  வாழ்க்கைக்கு உணர்வார்ந்த  முறையி
லும், முழுமையாகவும் பதிலளிக்கிறானோ, அவனே இன்பம், துன்பம் இரண்
டையும் கடந்த (இருமைகளைக் கடந்த) வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறான்!

எவ்வொரு  மனிதனுக்கும் எண்பத்திமூன்று பிரச்சினைகள் இருப்பதாகவும்,
அவற்றைத்  தீர்க்க  தன்னால்  உதவமுடியாது   எனவும்  புத்தரை  நாடி  வந்த
ஒருவனிடம் புத்தர் கூறினார்!    "ஆனால்,  ஒருவேளை   தனது  போதனைகள்
உன்னுடைய    எண்பத்தி நான்காவது  பிரச்சினையைத்  தீர்க்க   உதவலாம்!"
என்று புத்தர் கூறினார். அது என்ன அந்த எண்பத்தி நான்காவது பிரச்சினை
என்று கேட்ட அந்த மனிதனிடம் புத்தர் சொன்னார் :  "எந்தப் பிரச்சினையும்
இல்லாமலிருக்க வேண்டும் என நீ விரும்புவது."

ஆக, வலி, துன்பம், கஷ்டம், நஷ்டம், சோகம் . . .  ஆகியவற்றின்  சொற்களில்
வாழ்க்கையைக்  காண்பது  என்பது  மட்டுப்பாடானது  மட்டுமல்ல;  மாறாக,
அது ( வலி, துன்பம், கஷ்டம், நஷ்டம், சோகம் ஆகியவற்றைக் கடந்து) வாழ்க்
கையை   முழுமையாகக்  காணத் தவறுவதும் ஆகும்!   வலியோ, துன்பமோ;
இனிமையோ,   இன்பமோ   அவை  அந்தந்த  நேரத்தின் (மனோ) நிலைகளே.
அதாவது,  வயிற்றுவலியில் துடிப்பவன் என்ன செய்யவேண்டுமெனில்,  அவ்
வலிக்கான  காரணத்தை அறிந்து அதைப் போக்கக்கூடிய ஒரு மருத்துவரை
அணுகுவதுதான்.  அடுத்து, அதேபோன்ற வலி மீண்டும் ஏற்படாதவகையில்,
வலியை உருவாக்கும் காரணிகளைத் தவிர்க்கலாம்.  ஆனால்,  வயிற்றுவலி
போனால், தலைவலியோ, அல்லது பல்வலியோ, வேறு ஏதாவதொரு வலி ஏற்
படலாம்!  ஆக,  வலிகளிலிருந்து  தன்னைப்  பாதுகாப்பதே ஒருவனது வாழ்க்
கையாகிட முடியாது!    ஏனெனில்,   வலிகளற்ற நிலை,  அல்லது   துன்பமற்ற
நிலை எதுவும் இறுதியானதல்ல; அதாவது வாழ்வின் இலக்கு நிலையல்ல!

சிலர்  "சந்தோஷம்" தான் வாழ்வின்  இலக்கு என்பர்!  ஆனால், அது ஒரு பாதி
உண்மை  மட்டுமே!    ஏனெனில்,   மெய்ம்மையுடன்   இணையாத,   சம்பந்தப்
படாத  சந்தோஷம் மலினமானது; அது  உண்மையான,  மேலான சந்தோஷம்
அல்ல!  அதாவது,  இருப்பும்,  உணர்வும் ஒருமைப்பட்ட,  "சத் -சித் -ஆனந்தம்"
(இருப்பு - உணர்வு -ஆனந்தம்)  எனும்  உச்ச ( முழுமை ) நிலை அல்ல!

பொதுவாக மனிதர்கள் அறிந்துள்ள சந்தோஷம், இன்பம், மகிழ்ச்சி  என்பன
யாவும் மட்டுப்பாடானவை, சாதாரணமானவை! ஏனெனில், அவர்கள்  அடை
யக்கூடிய  சந்தோஷம்  அவர்களுடைய கீழான இச்சைகளையும், அடிப்படை
யான   அன்றாடத் தேவைகளையும்,  பலவித புறப் பொருட்களையும்,  உறவு
களையும், போலியான மதிப்பீடுகளையும்,மாறுகின்ற அவர்களது விருப்பங்
களையும்   சார்ந்தவையாகும்!  ஆனால்,  உண்மையான சந்தோஷம் என்பது
ஒருவனது  உள்ளத்தின்  ஆழத்திலிருந்து வெளிப்படுவதாகும்!  அது  புறத்தே
எதையும் சார்ந்திருப்பதில்லை!உண்மையான சந்தோஷம்,மகிழ்ச்சி என்பது
எப்போதாவது   தேடிக்கண்டடையக்கூடியதோ அல்லது  இழக்கக்கூடியதோ
அல்ல!   மாறாக,    அது    எவ்வளவு தான்     செலவு   செய்தாலும்    குறையாத
கையிருப்பு போன்றதாகும்!  ஆனால்,  ஒருவன் தன்னிடம்,  தனது  உட்பொதி
வில்  என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பதை அறியாவிடில், அவன்
ஒரு வறியவனைப்போலவே துன்புறுகிறவனாகிறான்!உண்மையில் எவரும்
ஏழையாகப் பிறப்பதில்லை;   மாறாக,  (தன்னை  அறியாததால்)   ஏழையாக
ஆகிறான்!

"வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?"  என்ற  கேள்வி அடிப்படையி
லேயே   தவறானது!  ஏனெனில்,  வாழ்க்கை என்றால்  இன்னது என்று  கண்டு
பிடிப்பதுதான் வாழ்க்கையாகும்! அது இன்பமானதா,அல்லது துன்பமானதா,
அல்லது,   இவ்விரண்டையும்  கடந்ததா,  அல்லது  வேறு  ஏதோவொன்றா என்
பது ஒவ்வொரு மனிதனும் நேரடியாகஉணர்ந்தறிய வேண்டிய விஷயமாகும்!

"வாழ்க்கை  துன்பமயமானது!"   என்று  புத்தர்  சொல்லிச் சென்றதால்,   நாம்
துவண்டுவிடலாகாது!   அல்லது,   " நம்  உண்மையான சொரூபமே  ஆனந்தம்
தான்!"   என  ரமணர்  சொன்னதாகக்  கேள்விப்பட்டதும்,    "அடடா, தன்னால்
அதை உணர முடியவில்லையே?"   என்று   விரக்தியடைவதும்   முறையன்று!
நாம்  ஒவ்வொருவரும் நேரடியாகப் பதிலளிக்கவேண்டியது வாழ்க்கைக்குத்
தானே தவிர, புத்தரின், அல்லது ரமணரின் அல்லது வேறு ஒருவருடைய
கூற்றுக்கு பதிலளிப்பது அல்ல!

வாழ்க்கையானது  நம்  ஒவ்வொருவரிடமிருந்தும்  நேரடியான, உணர்வுப்பூர்
வமான பதிலளிப்பையே கோருகிறது! இன்னும் துல்லியமாகச் சொன்னால்,
வாழ்க்கை உணர்வையே பதிலாகக் கேட்கிறது! எது கேள்வியாக உள்ளதோ
அதுவே   பதிலாகவும்  உள்ளது!  தனக்குத் தானே  கேள்வியாக   மாறாதவன்
எந்தப் பதிலையும் கண்டுபிடிக்கப் போவதில்லை; அதாவது பதிலாக மாறப்
போவதில்லை!

வாழ்க்கை  என்பது  தீர்க்கப்பட வேண்டிய  ஒரு பிரச்சினை யல்ல;   வாழ்ந்து
அவிழ்க்கப்படவேண்டிய ஒரு அற்புதப்புதிர் ஆகும்! தொடக்கத்திலும், இடை
யிலும்,   இறுதியிலும்   அவிழ்க்க  அவிழ்க்க    ஆர்வமூட்டும்,  அள்ள  அள்ளக்
குறையாது ஆனந்தம் தரும், மாறாத புதிரின் பெயர் தான்  "வாழ்க்கை!"

மா.கணேசன்/ நெய்வேலி/  08-03-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 7 March 2017

விசாரமார்க்கம் எனும் புதிர்ச்சிந்தனைப்பள்ளி!





        "(மிக ஆழமானதொரு பார்வையில்), நாம் ஏதோ மண், கல்,
         மற்றும் நீரால் ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்துகொண்டிருக்க
         வில்லை! மாறாக, நாம் ஒரு மாபெரும் புதிருக்குள் வாழ்ந்து
         கொண்டிருக்கிறோம்!"
                         
              - (மா.கணேசன்/ "2012 : யுகமாற்றத்தின் வாசல்" பக். 62)
                      <•>
பிளேட்டோவின்    சிந்தனைகளை   மையமாகக்கொண்டு   'பிளேட்டோவின்
சிந்தனைப்பள்ளி' எனவும்,  அரிஸ்ட்டாட்டிலை மையமாகக்கொண்டு 'அரிஸ்
டாட்டில்   சிந்தனைப் பள்ளி'    என்றெல்லாம்    வழங்கப்படுகிறது.    ஆனால்,
எதார்த்தம் எப்படியிருக்க வேண்டுமெனில், ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க
வேண்டும்;  சிந்திக்கும்  ஒவ்வொரு மனிதனும் ஒரு சிந்தனைப் பள்ளியாகத்
திகழவேண்டும்!      இதன்  அர்த்தம்  ஒவ்வொரு  மனிதனும்  ஒரு சிந்தனைப்
பள்ளியைத்   தொடங்கிட வேண்டும் என்பதல்ல!  மாறாக, ஒவ்வொரு மனித
னும் முதலில் தனக்குத்தானே சிந்திக்கத் தொடங்கிட வேண்டும் என்பதே!

விசாரமார்க்கம்,  "தன்னை அறிதல்"  என்பதை பிரதான வாழ்க்கைச் செயல்
பாடாக முன்-வைக்கிறது. தன்னை அறிதல் என்பதே பிறரையும், இப்பிரபஞ்
சத்தையும், இறுதி மெய்ம்மை அல்லது 'கடவுள்' என்பதையும் அறிவதற்கான
ஒரே வழியாகும்!

ஒருவன் தன்னை அறிவதற்கான திறவுகோலாக இருப்பது   "வாழ்க்கை என்
றால் என்ன?" என்பதை, அதாவது,மனித வாழ்வின் உண்மையான நோக்கம்,
குறிக்கோள், இலக்கு, அர்த்தம், உண்மை ஆகியவற்றை அறிந்துகொள்வதே
யாகும்! ஒருவன் தனது வாழ்வின் குறிக்கோளை அறிந்து அதற்கேற்ப,அதனு
டன்  பொருந்தி  வாழ்வது   மட்டுமே  உண்மையான மகிழ்ச்சியையும், நிறை
வையும் அளிக்கும்!

புதிர்ப்பள்ளி  என்றால்  என்ன?  புதிர்ப்பள்ளிக்கும்,  சிந்தனைப்  பள்ளிக்கும்
உள்ள   வித்தியாசம்  என்ன?     சிந்தனைப் பள்ளி    என்பது    சிந்தனையற்ற
சமூகத் திரளிலிருந்து  மாறுபட்டு   தன்னைப் பற்றியும்,   உலகைப் பற்றியும்,
வாழ்க்கையைப் பற்றியும்   சிந்திக்கத்  தொடங்கிய   தனிமனிதர்கள்   சிந்த
னையின் அவசியத்தையும், தங்களது சிந்தனைகளையும், கருத்துகளையும்
சக-மனிதர்களுடன்  பகிர்ந்து கொள்ளும் பள்ளி தான் சிந்தனைப்பள்ளி என்
பதாகும். புதிர்ப்பள்ளி என்பது வழக்கமான சிந்தனைப் பள்ளிகளைப்போல
வாழ்க்கையின்  மேற்புறத்தையும்,  பௌதீக  உலகத்தையும்,   அதில்  மனித
னின்   இடத்தையும்  பற்றிச்  சிந்திப்பதுடன்  திருப்தியடைந்து விடாமல் ஆழ
மாகச்  சென்று   அனைத்தின்  சாரத்தை  நேரடியாக உணர்ந்தறியும், புரிந்து
கொள்ளும்  சிந்தனை  முறையைக் கொண்ட,  சிந்தனைப் பள்ளியே  புதிர்ப்
பள்ளி என்பதாகும்!

வழக்கமான  சிந்தனைகள்,  மற்றும்,  சிந்தனைப் பள்ளிகள் மனிதனையும்,
உலகையும், கொடுக்கப்பட்ட நிஜங்களாகக் கண்டு; அதாவது, உலகம் இருக்
கிறது, அதில் மனிதன் இருக்கிறான்; ஆக உலகம் என்றால் என்ன?  மனிதன்
என்றால் என்ன? என்று அறிந்து கொண்டால் போதும் எனும் ரீதியில் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளும் பள்ளிகள் ஆகும்!

ஆனால், புதிர்ப்பள்ளி என்பது, உலகையும், மனிதனையும் வெறும்  கொடுக்
கப்பட்ட நிஜங்களாகக் கொள்ளாமல், அவற்றைப் புதிர்களாகக் காண்பதும்,
மேலும், உலகம், மனிதன், வாழ்க்கை, மெய்ம்மை ஆகிய புதிர்களை ஆழ்ந்து
ஆராய்ந்து  அவற்றைக் கொச்சைப்படுத்தாமல் விடுவிக்கும், புரிந்து  கொள்
ளும் அரிய முயற்சியில், மேலோட்டமான விஞ்ஞானப் புரிதலையும், வெறும்
தர்க்கரீதியிலான தத்துவச்சிந்தனை முறைகளையும் கடந்த அனுபூதிவகை
அணுகுமுறையில் அமைந்த அறிதல்முறையைக்கொண்டதொரு புதிர்ச் சிந்
தனை முறையைக்கொண்டதே புதிர்ப்பள்ளி என்பதாகும்!

புதிர்ப்பள்ளியின்   பிரதான   நோக்கம்,  எவ்வளவு  சிறப்பாக வாழ்க்கையை
வாழ முடியும் என்பதுடன் நில்லாமல்; வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்வதும்,  வாழ்வதும்,  அம்முழுமையின்  வழியாக  மரணத்தைக்  கடந்த
முக்தி,  மோட்சம், வீடுபேறு என்றெல்லாம் குறிப்பிடப்படும் நிலையை அடை
வதுமே ஆகும்!  சுருக்கமாக,  சாதாரணச் சொற்களில் சொன்னால்,  முழுமை
யாக    வாழ்க்கையை   வாழ்வதும்,    முழுமையாக   இறப்பதும் தான்  புதிர்ப்
பள்ளியின் சீரிய நோக்கம் ஆகும்!

புதிர்ப்பள்ளிகள்   3500  ஆண்டுகளுக்கு   முன்பே  புராதன காலங்களிலேயே
தொடங்கி  விட்டதாகச்  சொல்லப்படுகிறது.  அக்காலங்களில்  பிரும்மாண்ட
மான  கோவில்கள்  எழுப்பப்பட்டு  பொதுமக்கள் வழிபாடு செய்தனர்;  அதே
கோவில்களில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், 'காணும்  கண்களையுடைய
வர்களுக்கும்',   'கேட்கும் காதுகளையுடையவர்களுக்கும்'  பிரத்யேக  வகுப்பு
கள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  ஆம்,  அப்போதெல்லாம் புதிர்ப்
பள்ளிகள், பல காரணங்களுக்காக, இரகசியமாகச் செயல்பட்டதாகச் சொல்
லப்படுகிறது. இன்றைய நவீனகாலத்தில்,சில புதிர்ப்பள்ளிகள் உலகெங்கும்
பல கிளைகளுடன் பகிரங்கமாகச் செயல்படுவதாக விளம்பரம் செய்யப்படு
கிறது!  பகிரங்கமாகவோ, அல்லது,  இரகசியமாகவோ செயல்பட்டாலும் அப்
பள்ளிகளில் பயில்வோரின் எண்ணிக்கை எப்போதும்போல மிகக்குறைவே
எனலாம்!    ஏனெனில்,   உண்மை மீது பசி, தாகம் கொண்ட மானிடர்கள்  எல்
லாக் காலங்களிலும் குறைவாகவே உருவாகின்றனர்!

சமீப காலம் வரை,  புதிர்ப் பள்ளிகளின்   போதனைகள் பாதுகாப்புக்   கருதி
இரகசியமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது தான் பரவலாக
அவை வெளியே அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதே
நேரத்தில்,  அவை  சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் அளிக்கப்படுவதில்லை.
மாறாக,  உயர்  ஞானம் மீது  தீவிர ஆர்வம்  கொள்பவர்களையும்,   தங்களை
முழுமையாக  அதற்கு அர்ப்பணம் செய்பவர்களையும் இனம் கண்டு தேர்வு
செய்யப்பட்டவர்கள்  மட்டுமே புதிர்ப்பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!

ஆனால், புதிர்ப்பள்ளியின் போதனைகளையும், பாடங்களையும்  பொறுத்த
வரை  அவற்றை  எல்லோருக்கும் அளித்தாலும்,  எல்லோரும் அதைப்புரிந்து
கொள்ளப் போவதில்லை!

ஆகவேதான், இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம்,
       "ஏன் அவர்களோடே (திரளான ஜனங்களிடம்) உவமைகளாகப்
        பேசுகிறீர்?"
என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்,
      "பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு
       அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை."
என்றார்.

ஆம்,  ஜனத்திரளிடம் அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக உவமை
களினாலே   அவர்களுக்கு   வசனத்தைச்  சொன்னார்.    தமது   சீடர்களோடு
தனித்திருக்கும் போது,  அவர்களுக்கு  எல்லாவற்றையும்  விவரித்துச் சொன்
னார். ஆன்மீக ஞானி பால் பிரண்டன் அவர்களின் ஒரு கணிப்புப்படி இயேசு
தமது   இளவயதிலேயே  எகிப்து நாட்டிலுள்ள அலெக்ஸான்ட்ரியா- வில் ஒரு
புதிர்ப்பள்ளியில் சேர்ந்து பயின்றதாக, தனது Inner Reality(1939,1952)
எனும் நூலில், (பக்கம் 232-ல்) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயேசு  ஒரு இடத்தில்,

        "வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத
         இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை
         நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள்
         வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்"    -(மத்தேயு, 10:26,27)

என்று   கூறியுள்ளதிலிருந்து,   புதிர்ப்பள்ளிகள்   புதிரானவையோ,    அல்லது
உயர் ஞானத்தை   இரகசியமாகப் பூட்டிவைத்துப்  பாதுகாக்கும் மடங்களோ
அல்ல என்பது தெளிவாகிறது! ஆனால், அதே நேரத்தில், வேறொரு இடத்தில்,
இயேசு,

    " பரிசுத்தமானதை நாய்களுக்குக்கொடாதேயுங்கள்; உங்கள்
      முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால்
      தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு
      உங்களைப் பீறிப்போடும்"        -(மத்தேயு, 7: 6)

என்று   சொல்லி  தமது  சீடர்களை  எச்சரிக்கிறார்!   அதாவது,   உயர் ஞானம்
வெகு சுலபமாக,  யாதொரு   பிரயத்தனமும்  இன்றி   கிடைக்கும் பட்சத்தில்,
அது  வெகு  சாதாரணமாக  எடுத்துக் கொள்ளப்படும்  என்பதாலும்,  மேலும்,
பலர்,  உயர் ஞானத்தை  தங்களது தரத்திற்கு கீழிறக்கிக்  கொச்சைப்படுத்தி
விடக்கூடும் என்பதாலும், இயேசு அவ்வாறு தமது சீடர்களை எச்சரித்தார்!

ஆம்,   புதிர்ப்பள்ளிகளின்  பிரதான பிரச்சினை கொச்சைப் படுத்துபவர்கள்
தான்!  அதாவது, கொச்சைப்படுத்துபவர்களை தம் பள்ளிகளில் இடம்பெறா
மல்  தம் பள்ளிகளைப் பாதுகாப்பதும்;  எவ்வாறேனும்  இடம் பெற்றுவிடுகிற
பாசாங்குக்கார  சீடர்களை, போலிகளைப் பக்குவமாகக் களையெடுப்பதும்
தான் அப்பிரச்சினை!

புதிர்ப் பள்ளிகளின்  போதனைகள்  வாழ்க்கையின் மிக ஆழமான அறிவை,
ஞானத்தைக் கண்டடைந்து அவற்றைப் பொக்கிஷமெனப் பாதுகாத்துவரும்
மையங்கள் ஆகும்.  ஆனால்,  இப்பள்ளிகள்  நமது நவீன கால பல்கலைக்கழ
கங்களைப்போல    பல  ஆசிரியர்களையும்,  பல  துறைகளையும்   கொண்ட
அமைப்புகள் அல்ல;   மாறாக,   அவை  எப்போதும் தமது மையத்தில்  புத்தர்,
இயேசு,  ரமணர்  போன்ற  ஒரு  ஒற்றை ஞானாசிரியரைக் கொண்டவையாக
மட்டுமே  திகழ்ந்து  வந்துள்ளன!    இந்த  ஞானாசிரியர்களுடைய போதனை
களின்   முக்கியத்துவத்தை  உணர்ந்த  சீடர்கள்  அவர்களுடைய  போதனை
களை   அர்ப்பணிப்புடன் காலம்காலமாக பாதுகாத்து வந்ததன் விளைவாக
அப்போதனைகள் இன்று நம்மிடமும் வந்து சேர்ந்துள்ளன!

இந்த ஞானாசிரியர்கள்  சிலரது போதனைகள் நிறுவனமாக ஆக்கப்பட்டும்,
பலவகைகளிலும்  திரிபுகளுக் குள்ளாக்கப்பட்டும்,  அல்லது நீர்த்துப்போகச்
செய்யப்பட்டும் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டன! ஒருவகையில்,இன்றைய
காலத்தில் அதிகமானோர் ஆன்மீகத்தில் ஆர்வம்  காட்டுவதாகத் தெரிந்தா
லும், இன்னும் மனிதர்கள் முழுஅளவில் ஆன்மீகத்திற்குத் தயாராகவில்லை
என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது!   ஆக,  புதிர்ப்பள்ளிகளின் கதவு
களை  அகலமாகத் திறந்து வைப்பது  என்பது  அவ்வளவு சரியான ஒன்றாக
இருக்கவியலாது!

மேலும், ஆன்மீகம் என்ற பெயரில், சில சந்தர்ப்பவாதிகள் பிருமாண்டமான
ஆசிரமக்  கட்டடங்களையும்,   சிலைகளையும்  எழுப்பி;  யோகா,   தியானம்
போன்ற பயிற்சிமுறைகளையும்,   வேறு சில நவீன உத்திகளையும் சேர்த்து
பொட்டலமிட்டு   வியாபாரமாக்கி    லட்சக்கணக்கானவர்களைத்    திரட்டித்
தவறாக வழி நடத்திச்செல்லுகிறார்கள்! இத்தகைய கும்பல் - ஆன்மீக இயக்
கங்கள் எவ்வகைப்பள்ளி முறையிலும் சேராது!

இப்போது,   'புதிர்ப்பள்ளி'    என்பதில்  உள்ள  "புதிர்"  எதைக் குறிக்கிறது என்
பதைக் காண்போம்.   "புதிர்"   என்றால்  'மர்மம்',  புரிந்து கொள்ளமுடியாதது
என்று பொருளல்ல -  அது புரிந்து கொள்பவருடைய  தீவிரத்தையும்,   பேரார்
வத்தையும்  பொறுத்தது!  மாறாக, எதுவொன்று எத்தனையெத்தனை யுகங்
களாக முயன்றாலும்,  எவ்வழியிலும் சுருக்கவோ,  குறுக்கவோ,  கொச்சைப்
படுத்தவோ இடமளிக்காததோ அதுவே "புதிர்" என்பதாகும்!*

புதிரான ஒன்றைப்பகுத்து,அதன் பகுதிகளுக்கும்,உட்கூறுகளுக்கும் சுருக்கி
அக்கூறுகளின் இயல்பு அல்லது பண்புகளின் சொற்களில் புரிந்துகொள்வது
தலைகீழான அணுகுமுறையாகும்.  ஏனெனில், ஒரு பொருளானது பல பகுதி
களாலும்,உட்கூறுகளாலும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,அவ்வாறு
கட்டமைக்கப்பட்டது ஒரு புதிய பொருளாகும். அப்பொருளை,  மீண்டும் அத
னுடைய பகுதிகளின் பண்புகளைக்கொண்டு, கீழ் மட்டத்திலிருந்து அறிந்து
கொள்வது  முறையாகாது!  அதற்கு   அப்பொருள்    கட்டமைக்கப்படாமலும்,
உருவாகாமலும் இருந்திருக்கலாமே!*

இதற்கு மாறாக,  ஒரு  பொருள்  எதைச் சுட்டுவதாக,  எந்த  இலக்கை,   குறிக்
கோளை,  நோக்கியதாக  உருவாக்கப்பட்டுள்ளது  என அதை மேல் மட்டத்தி
லிருந்து, அதனுடைய இறுதி நிலையிலிருந்து புரிந்து கொள்வதே சரியானது!
ஆக,  எது  ஒன்று கீழ்மட்டத்திலிருந்து புரிந்துகொள்ளமுடியாததோ, மேல்மட்
டத்திலிருந்து புரிந்துகொள்ளப்பட்டவேண்டியதோ அதுவே புதிராகும்!*

மேலும்,எது ஒன்று முற்றாக விளக்கித் தீர்த்துவிட இடமளிக்காததோ அதுவே
புதிராகும்! மேலும், புதிரைப்பற்றிய விளக்கம் யாவும் அதை மேலும் புதிராக
ஆக்குகிறது; அதுவே புதிரின் நிகரில்லா அழகு!*

மேலும், புதிரானது அதன் உயரத்திற்கு நம்மையும் உயருமாறு  கோருகிறது!
புதிரைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, அப்புதிருக்குச் சமமாக அப்புதிராக ஆகு
தலே! ஆகவே, ஒரு புதிரை எவ்வாறு நாம் அணுகுகிறோம் என்பதே  அதிமுக்
கியம்!*

முதலில்,    இந்த  உலகிலுள்ள  எவை  எவற்றை  நாம்  புதிர்  எனக்  குறிப்பிடு
கிறோம் என்பதைத் தெளிவாக அறிவது அவசியமாகும்!  ஆனால், உண்மை
என்னவெனில், இந்த உலகமே ஒரு மாபெரும் புதிர்தான்! அதிலுள்ள யாவும்
புதிரின்   பாகங்களே!    ஆனால்,  நம்மில்   பெரும்பாலானோர்,     நாம்     ஒரு
மாபெரும்  புதிரின்    நடுவே   வாழ்கின்ற   புதிர்களே  என்பதை  அறியாமல்,
நம்மையும்,  எல்லாவற்றையும்  (தரம்)குறைத்தே, மேம்போக்காகவே புரிந்து
கொள்கிறோம், கையாள்கிறோம்!இதற்குக்காரணம், நாம் புதிரைப் புதிராக
உணர்வதற்குரிய அளவுக்கு இன்னும் உணர்வு பெறவில்லை!*

புதிர்ப்பள்ளிகளின் பணி, உலகம், மனிதன், மெய்ம்மை( கடவுள்) எனும்  முப்
பெரும்  புதிர்களை  விடுவிக்கும்  முயற்சியில் பெறப்படும் உயர் ஞானத்தை
சிந்திக்காத மனிதர்களிடம் வழங்குவதல்ல! மாறாக, அவர்களை சிந்திக்கத்
தூண்டுவதும், ஒவ்வொருவரும் நேரடியாக வாழ்க்கையின் கேள்விகளுக்குப்
பதில்களைக்  கண்டுபிடிப்பதன்  அவசியத்தையும்,   முக்கியத்துவத்தையும்
போதிப்பதுடன்;  சீரிய முறையில் விசாரத்தில் ஈடுபடுகிற  சீடர்கள், அல்லது
மாணவர்களுக்கு உதவிடுவதும்தான் இப்பள்ளியின் சீரிய பணியாகும்!

"விசார மார்க்கம்"  எனும் இந்த புதிர்ப் பள்ளியைப்பொறுத்தவரையில்,  அது
பிரதானப்படுத்தும்  ஐந்து  முக்கிய  சிந்தனைச் சவால்கள்,   அல்லது  வாழ்க்
கைச் சவால்கள் எவையெனில் :

• வாழ்க்கைப் புதிரைப் புரிந்து கொள்ளுதல்
    (வாழ்க்கையின் அசலான குறிக்கோள் என்ன?)

• மனிதன் எனும் புதிரை அவிழ்த்தல்
   ( நான் யார்?)

• பிரபஞ்சப்புதிரை விடுவித்தல்
    (மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ளதொடர்பு என்ன?)

• கடவுள் புதிருக்கு விடை காணுதல்
     (இறுதி மெய்ம்மை  எத்தகையது?)

• மரணத்தின் புதிரைப் புரிந்து கொள்ளுதல்
     (மரணத்தைக் கடக்கும் வழி என்ன?)

இவையே ஆகும்.    உண்மையில்,  இச்சவால்கள்   தனித்தனியானவையல்ல;
மாறாக,    இவை   ஐந்தும்   ஒரே  சவாலின் ஐந்து முகங்களேயாகும்!  ஆகவே,
இவற்றை ஒருங்கே ஒரே சமயத்தில் ஒருவர் தன்னுள் சந்திக்கவும்,  சிந்திக்க
வும் வேண்டும்!  ஏனெனில்,  மனிதனின் அகமே, உணர்வே அனைத்துப்புதிர்
களின் உறைவிடமும்,  முடிச்சும் ஆகும்!  ஆகவேதான்,  ஆரம்பக்கால  புதிர்ப்
பள்ளிகள் "உன்னை நீ அறிவாயாக!" என்று  உபதேசித்துச் சென்றன!

பொதுவான ஆன்மீகப்பள்ளிகள்,  ஆன்மீகத்தில்   ஒருவர்  வளர வேண்டுமா
னால்,  தனது அகந்தை மனத்தை அழித்து விடவேண்டும் என்று வலியுறுத்து
வதுண்டு! ஆனால், 'விசாரமார்க்கம்' எனும் இப்புதிர்ப்பள்ளி அகந்தை மனத்
தைப்புரிந்து  கொண்டு  அதைக் கடந்து  செல்லுமாறு  போதிக்கிறது!   ஏனெ
னில்,அகந்தை மனத்தை அழிக்க முடியாது மட்டுமல்ல; அதுதான் அனைத்து
வளர்ச்சிகளுக்குமான அடிப்படை ஆகும்! ஆனால்,ஆன்மீகசாதகர்கள் தமது
அகந்தை மனத்தைக்   கடந்து    வளர்ந்து செல்வதற்குப் பதிலாக    அதையே
"மையம்"  எனக் கொண்டாடுவதை ஆன்மீகமாகக் கொண்டுவிடுகின்றனர்!

உண்மையில்,   அகந்தை மனம்  என்பதுதான்   ஒருவனது   தொடக்க   நிலை
மையம் ஆகும்!ஆனால், ஒருவன் அதிலேயே தங்கி நிலைத்திருக்க வியலாது!
ஏனெனில், எல்லாத் தொடக்க நிலைகளும் தற்காலிக நிலைகளே! எப்போது
ஒரு மனிதன், "உண்மையில் 'தான்' யார்?" என்பதை அறியவிரும்புகிறானோ,
அப்போதே 'அகந்தை' எனும் மையம் வளரத்தொடங்கிவிடுகிறது,உருமாறத்
தொடங்கிவிடுகிறது!  வெகு பலர்  "நான் யார்!"  என்பதை ஒரு  கேள்வி வடிவ
மாகக்  கொண்டு  அதை  ஒரு மந்திரமாக உச்சரித்துப்பார்த்து சலித்துபோய்
ஆன்மீகத்தையே கைவிட்டுவிடுகின்றனர்!   ஆனால்,   "நான் யார்!"    என்பது
வெறும் கேள்வியோ,அல்லது அறிவு-ஜீவியப் பிரச்சினையோ அல்ல!அது ஒரு
மாபெரும் "விழைவு" ஆகும்! ஆம், இருப்பை உணர்வுகொண்டதன் ஆனந்தக்
களிப்பின் விளைவாக எழும் "தேடல்" ஆகும்!

பொதுவாக மனிதர்கள்  ஆன்மீகம்,  உயர்-ஞானம், விழிப்பு, விடுதலை என்ப
வைகளைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளக்கூடிய உடமைகளாகக் கருதிக்
கொண்டு,  தமது அகந்தையை பத்திரமாகத்  தக்க வைத்துக்கொண்டு ஆன்
மீகத்தில் ஈடுபடுகிறார்கள்! அதாவது, 'அகந்தையின் உருமாற்றமே ஆன்மீக
வளர்ச்சி' என்பதை அறியாமல்,  ஆழம் தெரியாமல்  காலை   விடுகிறார்கள்!
ஒரு  நேரம்  அவர்கள்  ஆன்மீகத்தை  விரும்பியிருக்கலாம்;   அந்த  விருப்பம்
அவர்களுக்குத் தெரியாமலேயே  வினைபுரிந்து  அகந்தையின்  உருமாற்றத்
தைத்  தொடங்கச் செய்யும் கணத்தில், அகந்தையின் அடித்தளம் நழுவுவது
போலத் தெரிந்ததும்,  உடனே  அவர்கள் அவசர அவசரமாக ஆன்மீகத்தைக்
கைவிட்டு  உலகியல் கரையில் ஏறி  ஆசுவாசமடைகிறார்கள்! அதாவது ஒரு
போதும், அகந்தையின் மேற்பார்வையில் ஆன்மீக வளர்ச்சியைக் கொண்டு
செல்லஇயலாது எனும் உண்மையை அவர்கள் இறுதிவரை உணர்வதில்லை!
தான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறுவதை ஒருபோதும் ஒரு கம்பளிப்புழு
வால் மேற்பார்வை செய்யமுடியாது;அவ்வாறு செய்யமுயன்றால் அது இறுதி
வரை அது ஒரு கம்பளிப்புழுவாகத்தான் நீடிக்கும்!

அடுத்து,  வழக்கமான ஆன்மீகப்பள்ளிகளில் ஒருவன் தனது அகந்தையைத்
தூய்மைப்படுத்த  வேண்டும்  என்று   வலியுறுத்தப்படுகிறது!  அதாவது,  ஒரு
புறம்  அகந்தை  அழிக்கப்பட வேண்டும்  என்று  போதிக்கப்படுகிறது;    இன்
னொரு புறம் அகந்தையைத் தூய்மைப்படுத்தவேண்டும் என்றும்  சொல்லப்
படுகிறது!    ஆனால்,   அகந்தையைத்  தூய்மைப்படுத்துவது என்றால் என்ன,
அது   எவ்வாறு செய்யப்பட வேண்டும்?      உண்மையில்,    அகந்தை   என்பது
அகந்தைதான், அது அழுக்காக இருந்தாலும், தூய்மையாக இருந்தாலும்!

அகந்தையை அழிப்பது,  மற்றும் அதைத் தூய்மைப்படுத்துவது எனும் இந்த
இரண்டுக்கும்  மாற்றாக,   இப்புதிர்ப்பள்ளி  முன்வைக்கும்  உபாயம்   என்ன
வென்றால், அகந்தையை "மாற்றமுறச்செய்வது" என்பதேயாகும்!  அகந்தை
உணர்வாகத்தொடங்கும் ஒருவன்,தனது உண்மையை, "உண்மையில் 'தான்'
யார்?" என்பதை அறிய அடங்கா ஆவல்கொள்ளும்பட்சத்தில் மாற்றமுறுதல்
தொடங்கிவிடுகிறது!   அதாவது  மாற்றமுறுதல் என்பதுதான் அகந்தையின்
அழிப்பும்,தூய்மைப்படுத்துதலும் ஒருங்கே நிகழும் அற்புத இரசவாதமாகும்!
அகந்தை கொள்ளும் தீவிர "மெய்ம்மை நாட்டம்",அல்லது "உண்மை நாட்டம்"
மட்டுமே அகந்தையைத் தூய்மைப்படுத்தும் அமிலம் ஆகும்! எவ்வாறெனில்,
மெய்ம்மை நாட்டம்கொள்ளும் ஒருவன் ஏற்கனவே தன்னை(அகந்தையை)க்
கடந்து செல்லத் தயாராகி விட்டவனாகிறான்!  ஏனெனில்,   "மெய்ம்மை நாட்
டம்" என்பது அதைத்தான் குறிக்கிறது!

ஆனால், பொதுவாக மனிதர்கள்  'மெய்ம்மை நாட்டம்' கொண்டதால் ஆன்மீ
கத்தில்  ஈடுபடுவதில்லை!  மாறாக, அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக
வும், நோக்கங்களுக்காகவும் தான் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள்! மேலும்,
ஆன்மீகமும்  தற்காலத்தில் ஒரு புதுமைப்போக்காக மேலோட்டமான வகை
யில் தழுவிக்கொள்ளப்படுவதாய் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது!

விசாரமார்க்கம் எனும் புதிர்ப்பள்ளி எவ்வொரு மதத்தையும்,   அரசியல் சித்
தாந்தத்தையும்  பிரதி நிதித்துவம்  செய்வதில்லை!   மாறாக,   அது  முழுக்க
முழுக்க வாழ்க்கையின் அரசியலையே முன்வைக்கிறது, பேசுகிறது, செயல்
படுத்துகிறது!   குழப்பக் காடான இவ்வுலகில் இப்பள்ளி  ஆரவாரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது;   இங்கு, ஆர்வமுள்ள எவரும் தமக்கான வாழ்க்
கைப்பாடங்களை இலவசமாகவும், சுதந்திரமாகவும் கற்றுக்கொள்ளலாம்!

உண்மையான  ஆன்மீகத்தேடல்  உள்ள  தனிமனிதர்களும்,  தங்களது சுயத்
தைவிட   வாழ்க்கையைத்   தீவிரமாக   நேசிக்கும்  தனிமனிதர்களும்  இந்த
விசார  மார்க்கத்தில்    இணைந்து   கற்கலாம்.   இங்கு    நிர்வாணம்,    முக்தி,
மோட்சம், ஞானம் போன்ற எதுவும் வழங்கப்படும் என்ற எவ்வித வாக்குறுதி
யும் கொடுக்கப்படுவதில்லை!  முடிந்த வரை இங்கு வருபவர்களை நிராயுத
பாணியாக மட்டும் ஆக்கப்படும்!  அவர்கள் பற்றிக்கொள்ள எவ்வகைப்பட்ட
நம்பிக்கை  எதுவும்  இல்லாமல்  யாவும் பிடுங்கப்படும்! அவர்கள் ஆறுதலை
யும்,  ஆசுவாசத்தையும் தேடி  இங்கு வந்தால் தவறான இடத்திற்கு வந்துவிட்
டார்கள்  எனும்  நிஜம் அவர்கள் முகத்தில் அறையும்! அவர்கள்   சுவாரசியம்
தேடியும்,   கேளிக்கை நோக்கத்திற்காகவும் இங்கு வந்தால்,   நிச்சயம் அவர்
களுடைய   கொஞ்ச நஞ்ச  மன அமைதியையும்,   மகிழ்ச்சியையும்    இழந்து
விடுவது  உறுதி! அதாவது, எவ்வெவ்வழிகளிலெல்லாம் அவர்களை உலுக்கி,
அற்பமான   அவர்களது   திருப்தியுணர்வைக் குலைத்து,  அவர்களது  மட்டுப்
பாடுகளைச்சுட்டிக்காட்டி,அவர்களைச்சீண்டி,விழிப்பு நிலைக்குக் கொண்டு
வரமுடியும் என்கிற எல்லா உத்திகளும் அவர்கள் மீது பரீட்சார்த்தமாக  மேற்
கொள்ளப்படும்!

ஏற்கனவே  குறிப்பிட்டபடி,   "புதிர்"   என்றால்  'மர்மம்',   'புரிந்து கொள்ளமுடி
யாதது'   என்று  பொருளல்ல!    மேலும்,   புதிர்ப்பள்ளிகள்   வேண்டுமென்றே
உலகம்,  மனிதன்,  மெய்ம்மை (கடவுள்),  வாழ்க்கை  என  எல்லாவற்றையும்
புரியாத  புதிர்களாக  ஆக்குவதுமில்லை!   ஏனென்றால்,   புதிரான   ஒன்றை
மேலும்  புதிராக  ஆக்குவது சாத்தியமற்றது - நீர் நிரம்பிய குடத்தில் மேலும்
மேலும் நீரை ஊற்றி நிரப்பவியலாது!

உலகம்,  மனிதன் என  யாவும் "மூலமெய்ம்மை" எனும் மகாபுதிரின் வெளிப்
பாடுகளே! மூலமெய்ம்மையானது தன்னை மறைத்துக்கொண்டதன் விளை
வாக எழுந்ததுதான் இப்பிரபஞ்சம் எனும் புதிர்! இவ்வெளிப்பாட்டின் நிகழ்வு
முறையில், பிரபஞ்சத்தின் விசேடமானதொரு பகுதியாக வெளிப்பட்டவனே
மனிதன் எனும் புதிர்!தன்னை உணரும் மனிதனுடைய உணர்வின் உச்சயில்
தன்னை மீள்-கண்டுபிடிப்பு செய்வதே மூலமெய்ம்மையின் புதிராட்டத்தின்
திட்டம் ஆகும்!மேலே தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்ட மேற்கோளின்படி,

         "(மிக ஆழமானதொரு பார்வையில்), நாம் ஏதோ மண், கல்,
          மற்றும் நீரால் ஆன உலகில் (மட்டும்) வாழ்ந்துகொண்டிருக்க
          வில்லை! மாறாக, நாம் ஒரு மாபெரும் புதிருக்குள் வாழ்ந்து
          கொண்டிருக்கிறோம்!"

ஆம், பிரபஞ்சம் என்பது வெறும்  'இயக்கத்தில் உள்ள பருப்பொருளோ',  ஒரு
'மகா-எந்திரமோ' அல்ல!  அல்லது, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பௌதீக
வியல் விஞ்ஞானி ஸ்டீவென் வெய்ன்பெர்க்(Steven Weinberg)அவர்களது

  "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
   அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."

எனும் கூற்றுக்கிணங்க,பிரபஞ்சம் என்பது அர்த்தமற்றதும் அல்ல! இவ்விதப்
பார்வைகள்  யாவும்  கொச்சையானவையாகும்!   ஏனெனில்,  முதலிடத்தில்,
பிரபஞ்சம்   கல்லாலும்,  மண்ணாலும்  (அணுத்துகள்களாலும்)  ஆனதென்று
வரைமுறை  கற்பித்துவிட்டு, பிறகு அதனிடமிருந்து அர்த்தத்தை எதிர்பார்ப்
பது    அர்த்தமற்ற   செயல்   என்பதை    இவ்விஞ்ஞானிகள் எப்போது  புரிந்து
கொள்ளப்போகிறார்களோ!  ஆனால், உண்மை என்னவேன்றால், ஸ்டீவென்
வெய்ன்பெர்க்-ன்  கூற்றுக்கு மாறாக,   பிரபஞ்சத்தை  நாம்  எவ்வளவுக்கெவ்
வளவு   அதிகமாகப்  புரிந்து கொள்கிறோமோ,  அவ்வளவுக்கவ்வளவு அதன்
அர்த்தம் ஆழப்பட்டுக்கொண்டே போகிறது!   ஏனெனில்,  பிரபஞ்சம் என்பது
ஒரு அற்புதப்புதிர் ஆகும்! அது, கல்லாலும்,  மண்ணாலும்  (அணுத்துகள்களா
லும்)ஆனதென்பது அதைப்பற்றிய மிக மேலோட்டமானதொரு உண்மையே
தவிர, அதுவே முழு உண்மையும் அல்ல!

இத்தகையதே "வாழ்க்கை"  எனும் புதிரும்!  அது,  உணவு,  உடை,  உறையுள்,
உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'உயிர்-வாழ்தல்' எனும் மிகக்குறுகிய
நடைமுறை விவகாரம் அல்ல!  மாறாக, 'உயிர்-வாழ்தல்'  என்பது  வாழ்க்கை
எனும் புதிரின் ஒரு ஓரப்பகுதி மட்டுமே!

இவ்வாறானதே "மனிதன்" எனும் புதிரும்! அவன் இன்னுமொரு விலங்கினம்
அல்ல! ஆம், மனிதன் என்பவன் ஒரு கேள்விக்கான  பதிலாகவோ, ஒரு சிக்க
லுக்கான  விளக்கமாகவோ  பிறந்தவனல்ல!   அவன் புதிரால்  பிறப்ப்பிக்கப்
பட்டதொரு புதிராவான்!முள்ளை முள்ளால் எடுப்பதுபோல,புதிரைப்புதிரால்
விடுவிக்கும் புதிர்!

       * இக்குறியிட்ட பத்திகள் இக்கட்டுரையாசிரியரின் மூன்றாவது நூலான
            "கடவுள்புதிர்" (2014)  நூலின்,  "புதிர் குறித்த முன்னோட்டம்" எனும்        
                 முன்னுரை- அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.


மா.கணேசன்/ நெய்வேலி/ 28.02.2017
----------------------------------------------------------------------------

Saturday, 4 March 2017

சொற்களின் அசலான அர்த்தத்தை அகழ்ந்தெடுத்தல்!





மானுட  வாழ்க்கையானது   தவிர்க்கவியலாத  வகையில்,   சொற்களுடனும்,
மொழியுடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டு   சிக்கித்  தவித்துக் கொண்டிருக்
கிறது!    இச்சிக்கலிலிருந்து   வாழ்க்கையை  மீட்டெடுப்பது   யார்,  எவ்வாறு?
என்பதே  நம்முன்  உள்ள,   நம்மில்   பலரும்   இதுகாறும் உணராத மாபெரும்
பிரச்சினையாகும்!

இக்கட்டுரையில்   எழுப்பப்படும்  பிரச்சினை  மற்றும்  அதன்  தீர்வு  குறித்து,
பொதுவானதொரு  கருத்தொற்றுமை  எட்டப்படவேண்டும்  என்ற எந்த எதிர்
பார்ப்பையும்,    விருப்பத்தையும்  நான்  கொண்டிருக்கவில்லை!  ஏனெனில்,
அதற்கான சாத்தியப்பாடு மிக மிக மிகக் குறைவே!

நாம்  நம்மைச் சுற்றியுள்ள  உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அனைத்
திற்கும் பெயர் சூட்டியுள்ளோம் அதாவது ஒவ்வொன்றுக்கும்  ஒரு சொல்லை
ஒட்டுச்சீட்டுபோல ஒட்டியுள்ளோம்! இது தவிர்க்கவியலாத ஒன்றுதான்,அதே
நேரத்தில், எது தவிர்க்கப்படவேண்டியது என்பதை பிறகு பார்ப்போம்!

எவ்வொரு  வளர்ச்சியடைந்த  மொழிக்கும்  ஒரு  அகராதி  உண்டு!   ஆனால்,
பிரச்சினை என்னவென்றால், நாம் அகராதியை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்ந்திட முடியாது!   அதே நேரத்தில், அகராதியில்லாமலும் வாழ முடியாது!

ஆம்,  அகராதியின்  அவசியத்தை  மறுக்க முடியாது. அகராதியானது சொற்
களுக்கு    குறிப்பான,    ஆனால்,  மிகக்   குறுகிய  வரையறையில்  அமைந்த
அடிப்படையான  அர்த்தத்தை  மட்டுமே  தாங்கியுள்ளது.    உதாரணத்திற்கு,
'வாழ்க்கை'    என்ற   சொல்லை  எடுத்துக் கொள்வோம்.   "வாழ்க்கை " என்ற
சொல்லுக்கு  (பால்ஸ் -தமிழ் மின்)  அகராதி   (அகரவரிசைச்  சொற்பொருள்
நூல்)  தரும் பொருள் 'உயிர்வாழ்தல்' என்பது மட்டுமே.

அகில உலகிலும்,மனிதர்கள், 'வாழ்க்கை' என்ற பெயரில்,உயிர்வாழ்தலைத்
தான்   நடத்திக்  கொண்டுவருகின்றனர்!  ஆனால்,   'உயிர்வாழ்தல்'   என்பது
'வாழ்க்கை'  என்ற  சொல்லுக்குரிய ஒரு அடிப்படை அர்த்தம் மட்டுமே தவிர,
அதுவே    இறுதியானதும்,     முழுமையானதுமான    அர்த்தம்  அல்ல!       ஆம்,
உண்மையான   மானுட வாழ்க்கை   என்பது   உயிர்-வாழ்தலையும் கடந்தது
ஆகும்!    அது    வெறுமனே    உயிர்-வாழ்தலைக் குறிப்பதில்லை!    இவ்வாறு
சொல்லும் போது  'வாழ்க்கை'  என்ற சொல்லுக்கு என்னுடைய  அகராதியின்
படி நான் ஒருவகை அர்த்தத்தை வழங்குகிறேனா?

உண்மையில்,   ஒவ்வொரு   உண்மையான    ஆன்மீக ஞானியும்,    ஒரு  புதிய
அகராதியாகத்தான் விளங்குகிறார் என்றுதான் சொல்லவேண்டும்!அதாவது
அசலான மானுட வாழ்க்கை என்பது வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்ததாக
இல்லையெனில், இயேசு இவ்வாறு கூறிச்சென்றிருக்கமாட்டார் :

     "ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்,
      என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
      இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்.....
      முதலாவது  தேவனுடைய ராஜ்யத்தையும், அவரது நீதியையும்
      தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
      கொடுக்கப்படும்."     - (மத்தேயு 6 : 31-33)

அதாவது,   பிரச்சினை  இது தான்;    வாழ்க்கையின்   அசலான  அர்த்தத்தை
அறியாத, அறிய முயற்சிக்காத மனிதர்கள் அவரவர்க்கு எட்டிய அளவிலான
அர்த்தத்தை வாழ்க்கைக்கு வழங்கிக்கொண்டு  வாழ்ந்து செல்கின்றனர்!

அவரவர்  புரிதலுக்கு  ஏற்ப,   சொற்களுக்கு  நாம் தோராயமான, குத்துமதிப்
பான     அர்த்தத்தை   இட்டுப்  பேசிக் கொண்டும்,   உரையாடிக் கொண்டும்,
ஒருவரை  ஒருவர்  குழப்பிக் கொண்டும்,  ஒருவருடன்  ஒருவர்  முரண்பட்டுக்
கொண்டும்,  விவாதம் புரிந்துகொண்டும்,  சச்சரவு செய்துகொண்டும்,  வாழ்
வதாகச் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம்!

அகராதியைப்  பொறுத்தவரை,  சில  சொற்களுக்கு, உதாரணத்திற்கு, மரம்,
செடி,   கொடி,   பூமி,  வானம்,  சூரியன்,  சந்திரன்,  வீடு   போன்றவைகளுக்கு
குறிப்பான, முடிவான அர்த்தத்தை கொண்டிருக்கலாம். ஆனால், பிரபஞ்சம்,
வாழ்க்கை,  மனம்,  மனிதன்,  உணர்வு, கடவுள், மெய்ம்மை  போன்ற சொற்க
ளுக்கு, துல்லியமான, இறுதியான அர்த்தத்தை அகராதியில் காணமுடியாது!
இது  அகராதியின் தவறல்ல!  மாறாக,  மனிதனின் தவறே ஆகும். ஏனெனில்,
அகராதியை உருவாக்குபவனே மனிதன் தானே!

கிட்டத்தட்ட,    நமது   புலன்களுக்கும்,    நுட்பமிகு  கருவிகளுக்கும் புலப்பட்ட
அனைத்து  உலகப் பொருட்களுக்கும்,  நிகழ்வுகளுக்கும்,  விஷயங்களுக்கும்
நாம் பெயரிட்டுள்ளோம். அதாவது,  'மரம்'  எனும் சொல்  ஒரு குறிப்பிட்ட  வடி
வத்தைக்கொண்ட தாவரத்தைக் குறிக்கும் ஒரு "குறிப்பான்" ஆகும். ஆனால்,
அவ்வனைத்து  குறிப்பான்கள், அதாவது  சொற்களுக்குமான முழுமையான,
முடிவான அர்த்தத்தை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை!

ஆனால்,  நாம்  அர்த்தம்   கண்டுபிடிக்கத்  தவறியது  வெறும்  சொற்களுக்கு
மட்டுமல்ல!  ஏனெனில்,  'வாழ்க்கை'  என்பது  வெறும் சொல் அல்ல! அது ஒரு
நிகழ்வுமுறையும்,  வழிமுறையும்  ஆகும்.  அது  வெறும்  தானியங்கி  நிகழ்வு
முறையல்ல; ஒரு வழிமுறை ஆகும்; அதாவது, வழிமுறை என்பதன் அர்த்தம்,
ஒரு  குறிப்பிட்ட  இலக்கை  எட்டுவதற்கான  வழியாகும்!   மிகவும்  ஆழமான
தொருவகையில்,அனைத்துக்கும் அர்த்தம் கண்டுபிடிக்கும் (அர்த்தம் கற்பிப்
பது அல்ல) செயல்முறையே  வாழ்க்கையும், இறுதி அர்த்தத்தைக் கண்டடை
வதே வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

ஆக,  அர்த்தம்  கண்டுபிடிக்கத் தவறிய  இந்நிலையைக் கொண்டு நம்மைக்
காணும்போது  ஒரு  இனம்  என்கிற வகையில்  நாம் எவ்வளவு பின்தங்கியுள்
ளோம், அதாவது, இன்னும் ஆதிவாசி நிலையிலேயே உள்ளோம் என்பதைப்
புரிந்து  கொள்ளலாம்!   உயிர்-பிழைத்தலின்   நடைமுறைத்    தேவைகளின்
நிமித்தம் நாம் விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ளோம் என்ற
போதிலும் அகரீதியாக நாம் இன்னும் கற்காலத்திலேயே தான் உள்ளோம்!

மனித இனத்தின் மொழித்திறன் பற்றிப்பேசுகையில், மனித  இனத்திற்கும்,
விலங்கினத்திற்கும்  உள்ள  பெரியதொரு  வித்தியாசமாகக்கூறப்படுகிறது!
ஆனால்,   நம்முடைய  மொழிபேசும்  திறன்   நம்மை  அதிக  மனிதத்தன்மை
யுடையவர்களாக ஒன்றும் மாற்றிவிடவில்லை!"வாழ்க்கை" பற்றிய புரிதலில்
நாம்   கரப்பான்பூச்சிகளைவிட   அதிகமாக    முன்னேறி விடவில்லை!   ஒரே
வித்தியாசம், விலங்குகள் பேசுவதில்லை! நாம் பேசும் விலங்குகளாக  இருக்
கிறோம், அவ்வளவுதான்!

மொழியின்  உதவியின்றி  நம்மால்,  தகவல்,  மற்றும்   கருத்துப் பரிமாற்றம்
செய்யவியலாது;    மொழியின்றி  நவீன  வாழ்க்கை   சாத்தியமாயிருக்காது
என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், மொழி- வழிக் கருத்துப்பரிமாற்
றம்  மனித குலத்தை  ஒன்றிணைக்கவில்லை;  மாறாக, பல்வேறுபட்ட கருத்
துக்களும்,  சித்தாந்தங்களும்,  மதக்கொள்கைகளும், இனவாதக்கோட்பாடு
களும்  மனிதகுலத்தைத்  துண்டாடியதோடு,  இரத்தக் களறிகளை உருவாக்
கியதுதான் மிச்சம்!

உண்மையான  பிரச்சினை மொழியிலோ, அல்லது சொற்களிலோ இல்லை!
தனிமனிதனின்  உணர்விலும்,  புரிந்துகொள்ளும்  திறனிலும் தான் அடங்கி
யுள்ளது!மொழி என்பது ஒரு கருவி மட்டுமே!மோசமான,மந்தபுத்தி கொண்ட
'கலக மானிடப்பூச்சி'களிடம் சிக்கிய ஒரு கருவி!

மனிதசமூகம் தமது தேவைக்கு  ஏற்பவே எவ்வொரு கருவியையும், சாதனத்
தையும்   உருவாக்கிக் கொள்கிறது!   மொழி  என்பது  அர்த்தத்தை  வேண்டி
நிற்கும்  சொற்களைக்  கொண்டதொரு கருவியாகும்! மொழி என்பது அதன்
ஆதித்  தொடக்க  நிலையில்  அன்றாட  அடிப்படை உயிர்-வாழ்தலின் கருவி
யாகவே  உருவானது;    'உயிர்'  வாழ்தலைக்  கடந்த,  'உயர்'   வாழ்தலுக்கான
வாகனமாக  அது வளர்த்தெடுக்கப்படவில்லை!  ஏனெனில்,  வாழ்வின் அர்த்
தத்தை  அறிய   வேண்டியதன்  உன்னதத் தேவையை   உணரும்   அளவிற்கு
இன்னும் மனிதர்கள்  தங்கள் உணர்வில் வளரவில்லை!

எல்லா  மொழிகளும்,   அர்த்தத்தைச்  சுட்டுவதற்கான  கருவிகளே,   ஆகவே,
அர்த்தத்தை  எந்த மொழியும் சொந்தம் கொண்டாடிட முடியாது!  ஏனெனில்,
அர்த்தம் மொழியைக் கடந்தது!மொழி என்பது சொற்கள் எனும் அறைகளில்
அர்த்தத்தை  பத்திரமாக  தம்முள் வைத்துக் காக்கும்  ஒரு பெட்டகம்  அல்ல!
அர்த்தம்,  உண்மை  ஆகியவை  பரிமாறிக் கொள்ளக் கூடியவையல்ல!  ஆக,
எவ்வொரு   மொழிக்கும்   'பரிமாற்ற - வரம்பு' உள்ளது!   அன்றாட  அறிவைக்
கடந்த,   உயர்-ஞானத்தை  எவ்வொரு மொழியின் சொற்களைக்கொண்டும்
பரிமாற்றம் செய்திடவியலாது!

ஒரு மொழியில் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட எவரும்  எவ்வொரு நூலை
யும்  அல்லது  பிரதியையும்  வாசிக்க முடியும்;  ஆனால்,  வாசிக்கத்  தெரிந்த
எல்லோராலும் ஒரு நூல், அல்லது பிரதி சுட்டும்  அர்த்தத்தை முழுமையாகப்  புரிந்துகொள்ளவியலாது!  அதற்கு  உயர்-உணர்வின்  உதவி  அவசியமாகும்!
அதாவது  எவ்வாறு  'மரம்'  என்கிற சொல் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்டு
கிறதோ, அவ்வாறே, எவ்வொரு  நூல் அல்லது பிரதியும் அர்த்தத்தை சுட்டுகி
றதே தவிர,  அர்த்தத்தை  அவை  தம்முள்  கொண்டிருப்பதில்லை! சுட்டுவது
மட்டும்  தான் மொழியின்,  சொற்களின் பணியாகும்!  அர்த்தத்தை உள்ளீடு
செய்து  புரிந்து  கொள்வது  ஒவ்வொரு  மனிதனின் கடமையாகும்!  அர்த்தம்
"உயர்-உணர்வை" முன்-தேவையாகக் கோருகிறது!

மொழியை  அன்றாடத்தளத்தில் கையாளுவதற்கு அன்றாட உணர்வு போது
மானது!மேலும்,அன்றாட விஷயங்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு,
மிகச் சிக்கலான,  கடினமான சொற்களும்  தேவைப்படுவதில்லை!  "நேற்று
நீங்கள் ஏன் வரவில்லை?"  எனும்   வாக்கியத்தின்  அர்த்தம் நேரிடையானது.
இவ்வாக்கியத்திலுள்ள  சொற்களின்  அர்த்தம்   மேற்புறத்திலேயே  அமைந்
துள்ளது.  இவ்வாக்கியத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலளிக்கவும்
பெரிதாகச் சிந்திக்கத் தேவையில்லை!  ஆனால்,   "ஏன் இங்கே ஏதுமில்லாது
இருப்பதற்குப்பதிலாக ஏதோவொன்று இருக்கிறது?" எனும் இந்த வாக்கியம்
நேர்முறையானதல்ல! இதைப்புரிந்து கொள்ளவும், இதற்குப் பதிலளிக்கவும்
ஆழமாகச் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது!

இரு மனிதர்களுக்கிடையே முரண்பாடும், சச்சரவும் ஏற்படுவதற்குக் காரண
மாக அமைவது மொழியோ,அல்லது சொற்களோ அல்ல.மாறாக,ஒரே மொழி
யின்   சொற்களைப்  பயன்படுத்தும்  இருவர்  ஒரே  சொல்லுக்கு  வெவ்வேறு
அர்த்தங்களைக்  கற்பித்துக் கொண்டு  தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்
துவதே ஆகும்!   சொற்கள்   என்பவை  வெறும்  கூடுகளே, அவற்றினுள் அர்த்
தத்தை  உள்ளீடு  செய்து  பரிமாறுவது மனிதர்களின் கடமையாகும்! இருவர்
ஒரே   மொழியைப்  பேசினாலும்,   இருவரது   புரிதல் தளமும்   வெவ்வேறாக
இருக்குமானால், முரண்பாடுதான் எழுமேதவிர கருத்தொற்றுமை ஏற்படாது!
புரிதல்தளம் வேறுபடுவதற்குக் காரணம் உணர்வுத்தளம் வேறுபடுவதே!

உணர்வுத்தளம்   வேறுபடுவதற்குக்   காரணம்,   வேறுபட்ட   உணர்வு  நிலை
வளர்ச்சியே யாகும்.  தனிமனிதர்கள்  ஒரே மாதிரியாக உணரவில் வளர்வது
இல்லை!  ஏனென்றால்,  எல்லோரும்  ஒரே  மாதிரியாக  இருப்புக்கும்,  வாழ்க்
கைக்கும்  பதிலளிப்பதில்லை!  ஒரே  மாதிரியாகத்  தன்னையும், வாழ்க்கை
யையும்  உணர்வு கொள்வதில்லை!   எவ்வொரு   மொழியும்  மனிதர்களைப்
பிரிப்பதும் இல்லை, இணைப்பதும்  இல்லை! மாறாக, மனிதர்களின் சுயநல
நோக்கங்களும், அரை-உண்மைகளும், பாரபட்சமான பார்வைகளும், மேலா
திக்க   மனோபாவமும் தான்   மனிதர்களைப் பிரிக்கிறது!  ஒருவரை   தனது
மொழியே சிறந்தது, மேலானது என்று சொல்லச் செய்வதும், ஒரு குறிப்பிட்ட
மொழியை   பிற மொழி பேசும்  மக்களிடம்   திணிக்கச்  செய்வதும்  மொழி
யல்ல!     தமிழ் மொழி   இனிமையானது தான்;    ஆனால்,   எந்த மொழிதான்
இனிமையற்றது? எந்த மொழியில் தான் காதல் கவிதைகள் இல்லை?  அவர
வர்க்கு அவரவர் மொழி இனிமையானதே, அற்புதமானதே!

எல்லோரும்  ஒரு  மொழியின்  சொற்களைக்  கொண்டு  பேசவும், உரையாட
வும்  முடியும் என்பது ஒருவித போலியான சமத்துவத்தையும், சுதந்திரத்தை
யும்  வழங்குவதாக உள்ளது!  வாழ்வின் அர்த்தம் குறித்த அக்கறையும்,  தேட
லும்,  இல்லாத ஒரு சமூகத்தில் சமத்துவம்,  சுதந்திரம், போன்றவை சாத்திய
மில்லை! மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் சக்திகள் வர்க்கபேத
மின்றி ஒவ்வொரு மனிதனின் இயல்பிலேயும் பின்னப்பட்டுள்ளன! தன்னை,
தனது    உள்ளார்ந்த  மெய்ம்மையையும்,   வாழ்வின்  அசலான   குறிக்கோள்,
மற்றும் இலக்கினையும் அறியாத மனிதன் தனக்கும்,மனிதகுலம் மொத்தத்
திற்கும் தீமையாகத்தான் அமைவான்!

அர்த்தம் அறியப்படாத சொற்களைக்கொண்டு நிகழ்த்தப்படும் சொல்லாடு
தலால்  எவ்வித பயனும்  இல்லை!   மனிதர்கள்  எல்லாவிடங்களிலும்,  சொற்
களை அவற்றின் மேலோட்டமான பொருளைக்கொண்டும், பெரிதும்  ஊகிக்
கப்பட்ட   அர்த்தங்களைக்  கொண்டும்   சொல்லாடிக்  கொண்டும்,     வாதம்
புரிந்துகொண்டும்,  விதண்டாவாதம் பேசிக் கொண்டும் காற்றை ஒலி-மாசு படுத்திக்கொண்டிருக்கிறார்கள்!

ஆக, நம்முடைய பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், சொற்க
ளுக்கான  ஆழமான  அர்த்தத்தை  அறியாமல்  பேசுவதை  நாம் தவிர்த்தாக
வேண்டும்!   இதன்  அர்த்தம்  நாம்  ஊமையாகிட  வேண்டும்   என்பதில்லை!
மாறாக, எவற்றை நாம் துல்லியமாகவும், தெளிவாகவும் அறிந்துள்ளோமோ,
புரிந்து கொண்டுள்ளோமோ அவற்றை மட்டுமே பேசவும், பகிர்ந்து கொள்ள
வும் வேண்டும்! இன்னும் நாம் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும், புரிந்து
கொள்ளவும்    தீவிர  ஆர்வத்துடன்   முயன்று  சாதித்திட   வேண்டும்!  சொற்
களின்  ஆழமான   அர்த்தத்தைப்  புரிந்து  கொள்ளுதல்  என்பதன்  அர்த்தம்,
சொற்கள் சுட்டுகிற அம்சத்தை, விஷயத்தை முழுமையாகப்  புரிந்து கொள்
ளுதல் என்பதே!

உதாரணத்திற்கு,     "பிரபஞ்சம்"    எனும்   சொல்லை   எடுத்துக்கொள்வோம்.
பிரபஞ்சம் எனும் சொல்  பூமி, சூரியன், சூரியக்குடும்பம், நட்சத்திரக்கூட்டம்,
காலம்,  வெளி,  பருப்பொருள்  ஆகியவற்றை  உள்ளடக்கிய   ஒரு  மாபெரும்
அமைப்பைக் குறிக்கிறது.  அதாவது, ஒட்டுமொத்த உலகத்தைக்குறிக்கிறது
என்பதில்  சந்தேகமில்லை!   ஆனால்,   இந்த  விபரங்கள்  பிரபஞ்சத்தை  மிக
மேலோட்டமாக  மட்டுமே  விளக்குகிறது.  இன்னும் பிரபஞ்சத்தின் உள்ளடக்
கங்களான பூமி(கிரகம்), சூரியன்,நட்சத்திரம் என ஒவ்வொன்றைப்பற்றியும்
அதிக   விபரங்களைச்  சேர்த்தாலும்,  அவ்விபரங்கள்  'பிரபஞ்சம்'  என்பதன்
அர்த்தம் ஆகாது!அதாவது, 'பிரபஞ்சம் என்றால் என்ன?' என்பதற்கான பதில்
ஆகாது!   அதாவது,  மனிதனுக்கும்,  பிரபஞ்சத்திற்குமான  தொடர்பு  என்ன?
முதலிடத்தில் பிரபஞ்சம் ஏன்,எந்த நோக்கத்திற்காக இருக்கிறது?பிரபஞ்சம்
எவ்வாறு தோன்றியது? அதன் முடிவு எத்தகையது, அல்லது அது முடிவேயில்
லாமல்  இயங்கிக் கொண்டிருக்குமா? அப்படியானால்,  பிரபஞ்சத்தின் குறிக்
கோள்   தான்  என்ன?    இத்தகைய   பிரபஞ்சத்தில்   இடம்பெறும்  மனிதஜீவி
களின்  குறிக்கோள் தான்  என்ன?  என இக்கேள்விகளுக்கு மட்டுமல்லாமல்,
இவ்விசாரத்தில் தொடர்ந்து  எழக்கூடிய பிற  உப-கேள்விகளையும் சேர்த்து
அனைத்திற்குமான  பதில்களையும்  கண்டுபிடித்தால் தான்  பிரபஞ்சத்தின்
அர்த்தம்    என்ன  என்பதை  அறிந்து கொள்ளமுடியும்!   பிரபஞ்சத்தின்  அர்த்
தத்தை   அறிவதன்  நோக்கம்   என்ன வென்றால்,   அப்போதுதான் மனிதன்
தன்னையும்,  தனது   அர்த்தத்தையும்,   வாழ்க்கையையும்   புரிந்து கொள்ள
முடியும்!

மொழியை  உண்மையில்  வளர்ப்பது,  காப்பது யார்? ஒரு நாட்டின் அரசரோ,
அரசியல் வாதிகளோ,  செல்வந்தர்களோ  அல்ல!   இன்னும்,   இலக்கியவாதி
களும், எழுத்தாளர்களும் அல்ல! மாறாக,சீரிய சிந்தனையாளர்களும்,ஞானி
களும்  ஆன்மீகக் கவிஞர்களும் தான்! அதாவது, அர்த்தத்தை தம்முள் ஆழ்ந்
தகழ்ந்து  சென்று   கண்டடைபவர்கள் தான்   மொழியை  வளர்ப்பவர்களும்,
காப்பவர்களும்   ஆவர்!    மொழி  என்பது    மனிதனுக்கு  வெளியே   தனியே
எங்கும் இல்லை! மொழி என்பது மனிதனிலிருந்து,அவனது உணர்விலிருந்து
வேறானதல்ல!   மாறாக,  மொழி  என்பது  மனித  உணர்வின்  ஒரு கருவியே!
உணர்வுதான்   மொழியைத்  தோற்றுவித்தது;  மொழி  உணர்வைத் தோற்று
வித்தது என்று காண்பது தலைகீழ்ப் புரிதல் ஆகும்!

ஆக, அர்த்தம் அறியாமல் உச்சரிக்கக்கூடாத முக்கியமான சில சொற்களை
நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவையாவன:
          நான்
              அன்பு
                  உணர்வு
                        விழிப்பு
                      உண்மை
            பிரபஞ்சம்
          மனிதன்
      கடவுள்
          வாழ்க்கை.
       <>
மா.கணேசன்/ நெய்வேலி/ 01.03.2017  
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...