Monday, 15 August 2016

விஞ்ஞானம் தோற்றுவிட்டது! (1)





இது போகிற போக்கில் விசிறியடிக்கப்படும்
மேலோட்டமான விமர்சனக்கட்டுரையோ,
அல்லது வெறுமனே புகார்களைக்கூறி, தூற்றிப்
பேசும் எழுத்தோ அல்ல. இது சிரத்தையுடன்
எழுதப்பட்ட ஆய்வுப்பூர்வமான கட்டுரையாகும்.

"விஞ்ஞானம் தோற்றுவிட்டது!" என்கிற தலைப்பு விஞ்ஞானத்தின்
மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்துக்
காட்டும் முயற்சிகளின் வெற்றி அடையாளமாக இடப்பட்டதாகும்.

விஞ்ஞானத்தின் மீதான குற்றச்சாட்டுகள் :
---------------------------------
1.  விஞ்ஞானப்பார்வை மனித இனத்தை தவறான திசையில்
     வழி நடத்திச் செல்கிறது.
2.  விஞ்ஞானம் என்பது இயற்கைவாதம் எனும் ஒருவகை மூட
     நம்பிக்கையை வளர்க்கிறது.
3.  விஞ்ஞானமானது அனைத்துக்கேள்விகளுக்கும் தன்னகத்தே
     பதில்களைக் கொண்டிருப்பதான ஒரு மாயையைத் தோற்று
     விக்கிறது.
4.  விஞ்ஞானம் என்றாலே "சுருக்கல்வாதம்"(Reductionism)
     என்று சொல்லும் அளவிற்கு , உலகையும், மனிதனையும், . . .
     அனைத்தையும் சுருக்கி எல்லாம் அடிப்படை(அணு)த்துகள்
     களின் திருவிளையாடலே என்கிறது.

விஞ்ஞானம் எவ்வளவு விஞ்ஞானபூர்வமானது?
------------------------------------
எவ்வொரு விஷயத்தையும் நாம் விஞ்ஞானபூர்வமாக  அணுக வேண்டும்;
அணுகி,   அறிந்து,    நிரூபணங்களைக்  கண்டுதான்  ஒன்றை   'உண்மை'
அல்லது 'நிஜம்' என ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால்,  விஞ்ஞானபூர்வம்,  விஞ்ஞானஅணுகுமுறை, அல்லது வழிமுறை
என்பது ஏதோ மாயமந்திரம் அல்ல. விஞ்ஞானவழிமுறை (The Scienti
fic Method) என்பதுஒரு குறிப்பிட்ட அம்சத்தை, பொருளை, நிகழ்வை
ஆராய்ந்தறியும் ஒரு முறை மட்டுமே என்பதை துல்லியமாக அறியாதவர்
கள்தான்,  எதற்கெடுத்தாலும் விஞ்ஞானபூர்வம், விஞ்ஞானஅணுகுமுறை,
விஞ்ஞான வழிமுறை என்றெல்லாம் பிதற்றுகிறார்கள்!

உண்மையில்,  விஞ்ஞானபூர்வமாக  அணுகுவதற்கென்று  உள்ள உலகின்
(பிரபஞ்சத்தின்)   ஒரு  சிறு  பகுதியைக்  கடந்து,  விஞ்ஞான அணுகுமுறை
சிறிதும் பயன்படாது.

மனிதன்,  வாழ்க்கை,  உண்மை,  மெய்ம்மை,  அன்பு,  அர்த்தம், ஆனந்தம்,
உணர்வு, . . . .   ஆகியவை  விஞ்ஞான  அணுகுமுறைக்கு   எட்டாதவை,
அப்பாற்பட்டவை.

விஞ்ஞானம்  என்றால் என்ன?
-----------------------
விஞ்ஞானம் என்றால் என்னவென்று, அடிப்படையில் மிகச்சரியாகவும்
மிகத்துல்லியமாகவும்,  தெளிவாகவும்  அறிந்துகொள்வது  மிகவும்
அவசியமாகும் :

        விஞ்ஞானம் என்பது பௌதீகச் சடப்பொருளாலான உலகை,
        அதாவது, துல்லியமாகச்சொன்னால் மொத்தப் பிரபஞ்சத்தின்
        ஒரு சிறு பகுதியைப் பற்றிய ஆய்வு என்பதற்கு மேல் வேறில்லை.

ஆம், விஞ்ஞானம் என்பது பௌதீகச்சடப்பொருளாலான உலகைப்பற்றிய
ஆய்வு மாத்திரமேதவிர அதற்குமேல் அது வேறுஎதற்கும் உதவாது.    அதே
வேளையில், விஞ்ஞான அணுகுமுறையைக்கொண்டு சடப்பொருளாலான
உலகையும்கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில்,  உலகம்,  பிரபஞ்சம்  என்பது வெறுமனே சடப்பொருளாலானது
மட்டுமல்ல, வெறும் பௌதீகப்பண்புகளை மட்டுமே கணக்கில்  கொண்டு
புரிந்துகொள்வதற்கு.  ஏதோ,  பௌதீகப்  பண்பைத்தவிர  வேறு பண்புகள்
எதுவுமே  பிரபஞ்சத்தில்  இடம்பெறாதது போல  விஞ்ஞானிகள்  பேசுவதும்
கருத்து சொல்வதும்,  அவர்களது  விஞ்ஞான- மூளைகளின்   ஆரோக்கியம்
குறித்து  சந்தேகிக்கச்  செய்வதாயுள்ளது.  மனித -மூளையைப்   பொறுத்த
வரை,  அது  சடப்பொருளாலானதுதான்  என்பதில்  எவ்வித  ஐயமுமில்லை.
ஆனால், மூளையின் இயக்கத்தின் விளைவாகத்தோன்றும் மனம் அல்லது
உணர்வு என்பது நிச்சயம்  சடப்பண்பு கொண்டதல்ல.

இன்னும், ஒரு புழு, அல்லது, பூச்சி, அல்லது,  மனிதன்  என  உயிருள்ள  ஜீவி
எதுவாயினும்  அது சில  இரசாயணப்பொருட்களாலும்,  அடிப்படை அணுத்
துகள்களாலும்   தான்  கட்டமைக்கப்பட்டவை  என்றாலும்,  அதன்   "உயிர்"
எனும்  தன்மை அல்லது பண்பு என்பது  பொருண்மையானதல்ல, அதாவது
சடப்பண்பு  கொண்டதல்ல.    ஆம்,   பௌதீகச்  சடப்பண்பை  மீறிய பண்பு
களான உயிரும், உணர்வும் இப்பிரபஞ்சத்தில் உள்ளன என்பதுமட்டுமல்ல,
அவையும்   இதே  பிரபஞ்சத்தின்  பிரிக்கவியலா  பகுதிகளே, அம்சங்களே.
இன்னும்சொல்லப்போனால், சடப்பொருளைவிட, உயிரும், உணர்வும்தான்
முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் ஆகும்.

நோபல் பரிசு  பெற்ற  அமெரிக்க  பௌதீகவியல்   விஞ்ஞானி    ஸ்டீவென்
வெய்ன்பெர்க்  (Steven Weinberg)  அவர்களின் இரண்டு 'புகழ் பெற்ற
வாக்கியங்களாவன :

      "எல்லா விளக்கபூர்வமான அம்புகள் யாவும் எப்போதும் கீழ் நோக்கி
        பௌதீகவியலையே குறிக்கின்றன."  
 
      "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
       அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."

மேலேயுள்ள  முதல்  வாக்கியத்தை   ஒட்டுமொத்த    சுருக்கல்  வாதத்தின்
தலைமைப் பிரகடனம்   என்றே  சொல்லலாம்!   சுருக்கல் வாதம்  என்றால்
என்னவென்பதை  நாம்  ஒரு  உதாரணத்தைக்கொண்டு   புரிந்து கொள்ள
லாம். அதாவது, சமூகம் என்பதற்கான விளக்கமானது மக்களைக் குறிக்கி
றது; மக்கள் என்பது, தனி நபர்களையும், தனி நபர்கள் உடல்உறுப்புகளை
யும்,   உடல் உறுப்புகள்   ஸெல்களையும்,   ஸெல்கள்   உயிரியல்-ரசாயண
விஞ்ஞானத்தையும்,  உயிரியல்-ரசாயணம்,  ரசாயண விஞ்ஞானத்தையும்,
ரசாயண விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானத்தையும் பௌதீக விஞ்ஞானம்
அணுக்கருவியல் விஞ்ஞானத்தையும் சுட்டுகின்றன.     அதாவது,       இதன்
முடிவு  என்னவென்றால், அனைத்தும் - நாற்காலி, புழு, பூச்சி, எலி, தவளை,
மனிதன் என எல்லாவற்றையும் அடிப்படை அணுத்துகள்களுக்குச்சுருக்கி
விடலாம் என்பதே.

இது எத்தைகைய பார்வை என்றால், அனைத்தும் அணுத்துகள்களால் ஆன
வையே,  அவற்றுக்கிடையேயான பரஸ்பர வினையாற்றல்களே!     ஆகவே,
"யுரேகா! யுரேகா!" அனைத்தையும் அணுத்துகள்பௌதீகத்தைக்கொண்டே
விளக்கிப் புரிந்து  கொள்ளலாம்  என்பதே! அனைத்தும் அணுத்துகள் மயம்!

பௌதீக விஞ்ஞானி,  லீ ஸ்மோலின் (Lee Smolin)அவர்கள்,   இத்தகைய
பார்வையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார்:

     "நாம் அறிந்த இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும்  விளக்கிப் புரிந்து
      கொள்ள நமக்குத் தேவைப்படுவதெல்லாம், பன்னிரண்டு அணுத்
      துகள்களும், நான்கு விசைகள் (மின்காந்த விசை, ஈர்ப்பு விசை,
      அணுக்கருவின் வலுக்குறைந்த விசை, மற்றும் வலுமிக்க விசை)
      மாத்திரமே."

ஆனால்,   "எல்லா    விளக்கபூர்வமான  அம்புகள்   யாவும்  எப்போதும்   கீழ்
நோக்கி  பௌதீகவியலையே  குறிக்கின்றன."  எனும்   ஸ்டீவென்  வெய்ன்
பெர்க் அவர்களின் கூற்று,  பிரபஞ்சத்தின்  பொருளாலான பகுதியே ஒட்டு
மொத்தப் பிரபஞ்சமும் என்பதான தவறான புரிதலின், அல்லது   துவக்கப்
புள்ளியின் வெளிப்பாடாகும்.

சந்தேகத்திற்கிடமில்லாமல்,   இப்பிரபஞ்சத்தில்  உள்ள  அனைத்தும்  சடப்
பொருளால்,  குறிப்பாக, அணுத்துகள்களால்   ஆனவையே.   ஆயினும், ஒரு
உயிரற்ற     கூழாங்கல்லுக்கும்,     ஒரு    சிட்டுக்குருவிக்கும்  இடையேயான
வித்தியாசம் எவ்வகையிலும் சரிக்கட்டமுடியாததாகும். இன்னும் உயிரற்ற
இரண்டு பொருட்களுக்குமான,  உதாரணத்திற்கு,  ஒரு  கூழாங்கல்லுக்கும்
ஒரு  லட்டுவுக்கும்  உள்ள   வித்தியாசமும்  சமப்படுத்தவே முடியாததாகும்.
இரண்டும் அணுத்துகள்களால்  ஆனவையே. ஆனால், கூழாங்கல்லை நாம்
சாப்பிடமுடியாது;  லட்டுவை நாம் ருசித்துச் சாப்பிடமுடியும்.  ஆக, பொருட்
களின் அடியோட்டமான நிஜம், அவை அணுத்துகள்களால் ஆனவை எனும்
விபர உண்மை,  பொருட்களுக்கிடையே   நிலவும்    வித்தியாசங்களையும்,
விஷேடத் தன்மைகளையும் விளக்குவதில்லை!   ஆக,   ஸ்டீவென்  வெய்ன்
பெர்க் அவர்களின் கூற்று முற்றிலும் தவறானதுமட்டுமல்ல, அபத்தமானது.

முக்கியமாக,    அவரது  கூற்று  பரிணாம-விரோதமானது.  எந்தப் பரிணாம
நிகழ்வுமுறையானது  உயிரும், உணர்வும் அற்ற  அடிப்படை( அணு)த்துகள்
களை,  1500 கோடி ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களினூடாகச்
செலுத்தி,  தற்போது உணர்வுள்ள  சிந்திக்கும்  திறனுள்ள    ஒரு  விஞ்ஞானி
யாக, அவரை உருவாக்கியதோ அந்தப் பரிணாம நிகழ்வுமுறையை முற்றி
லுமாக மறுப்பவராக ஸ்டீவென் வெய்ன்பெர்க் விளங்குகிறார்.

முதலிடத்தில், அணுத்துகள்கள் என்பவை எக்காலத்திற்கும்  அணுத்துகள்க
ளாகவே இருப்பதற்காக உருவானவையல்ல. அவ்வாறிருந்தால்,பரிணாமம்
என்ற  வழிமுறை  தோன்றியிருக்காது;  நாமும் தோன்றியிருக்க மாட்டோம்;
இது போன்ற சர்ச்சைகளும் எழாது.   ஆனால்,   பரிணாமம்  என்பது   மறுக்க
வியலாத உண்மையாகும். இன்னும் பொருளும் பரிணாம நிகழ்வுமுறையும்
பிரிக்க முடியாதது.  பொருள்  என்பது  ஒரு  பரிணமிக்கும் பொருளே யாகும்.
அதாவது,   பொருள் ( அணுத்துகள்கள் ) தான்   பிரபஞ்சத்தின்   அடிப்படைக்
கட்டுமானப்பொருளாகும். அப்பொருளைக் கொண்டு என்னென்ன அமைப்
புகள், வடிவங்கள்(பரிணாம வழிமுறை மூலமாகக்) கட்டியெழுப்பப்படுகின்
றன;அவ்வமைப்புகள்,அல்லது வடிவங்களிலிருந்து என்னென்ன அம்சங்கள்  
புதிது புதிதாக வெளிப்படுகின்றன,அவ்வழிமுறையில் இறுதியாக  வெளிப்
படக் கூடிய  அம்சம்  எதுவாக  இருக்கும்  என்பது தான்  அனைத்தையும்விட
முக்கியமானது.

எல்லாம்  அணுத்துகள்களால் ஆனவை என்பது  ஒரு அடிப்படை   (தொடக்க
நிலை)உண்மை மட்டுமே,அதுவே இறுதி உண்மை அல்ல. ஒரு செங்கல் குவி
யலுக்கும், செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு மாளிகைக்கும் உள்ள  வித்தியா-
சத்தை எவ்வாறு ஸ்டீவென் வெய்ன்பெர்க் காணத்தவறினார்? ஒரு கட்டடம்
செங்கற்களால்  அமைக்கப்பட்டது எனும்பட்சத்தில், அவ்வுண்மை மறுக்கப்
படமுடியாது   என்பதைப்போலவே,  அச்செங்கற்களைக்கொண்டு  எழுப்பப்
பட்ட கட்டடம் எனும் புதிய பண்பையும், உண்மையையும் நாம்  மறுக்க முடி
யாது. ஆனால், ஒரு கட்டடம்  என்பது   வெறும்  செங்கல் குவியல் அல்ல, அது
ஒரு புதிய வடிவம்,  ஒரு புதிய உண்மை! மேலும்,  செங்கற்களைக் கொண்டு
எண்ணற்ற    வடிவமைப்புகளைக் கொண்ட  கட்டடங்களை எழுப்ப முடியும்.
அவ்வடிவமைப்புகளை   செங்கல்லின் பண்புகளைக் கொண்டு முன் அறிய
முடியாது.  கட்டுமானப்பொருள் என்பது  செங்கற்களோ அல்லது அடிப்படை
அணுத்துகள்களோ, அவை எவ்வகையிலும் இறுதியானவையல்ல.

ஸ்டீவென் வெய்ன்பெர்க்   போன்ற   விஞ்ஞானிகளும்,  பொருள்முதல்வாதி
களும், பௌதீகஅணுத்துகள்களை பிரபஞ்சத்தின் அடிப்படைப்பொருளாக
காண்பதில்   தவறேதுமில்லை.      ஆனால்,     பிரச்சினை   என்னவென்றால்,
அவர்கள்  பொருளுக்குத்தருகின்ற முக்கியத்துவத்தை பரிணாமம் என்கிற
அம்சத்திற்கு அளிக்கத்தவறிவிட்டதுதான்!ஆம், பரிணாமம் என்பதை நீக்கி
விட்டால்,  பொருளுக்கு யாதொரு அர்த்தமும், முக்கியத்துவமும் இல்லாமல்
போய்விடும்  என்கிற உண்மையை அவர்கள் எவ்வாறோ அறியத் தவறினர்
என்பது பேரவலமே.  ஏனெனில்,  பரிணாமம் என்பதற்கு வெளியே  பொருள்
என்பது இருந்தாலும்,  இல்லாவிட்டாலும்  ஒன்றுதான்! பொருளும் பரிணாம
மும் பிரிக்கமுடியாதது;   பரிணாமத்தின்   கருவி    அல்லது    ஊடகம்   தான்
பொருள்  என்பது.  பொருள்   என்றாலே  அது  பரிணமிக்கும்  பொருள் தான்.
முதலிடத்தில்,      பொருள்  ஏன்  பரிணமிப்பதாக   இருக்கிறது?     ஏனெனில்
உண்மையில்,    பொருள்  அல்லது  அதன்   பொருண்மைத் தன்மை  என்பது
இன்னதென்று  வரையறுக்கப்படாத, எவ்வித உள்ளார்ந்த அர்த்தமும் அற்ற
ஒரு   ஆற்றல்   மட்டுமேயாகும்.     முக்கியமாக,     பொருளானது   எத்தகைய
ஒப்பற்ற   இலக்கை   அடைவதற்கான   கருவியாக,  ஊடகமாகச் செயல்படு
கிறது என்றால், அது தனது அசலான பண்பை (தனது மூலத்தை)அடைவதற்
கான பரிணாமவழிமுறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

'பெரு-வெடிப்பு' எனும் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் தோன்றிய அணுத்
துகள்கள் பல்வேறு அமைப்புகளில் அமைந்து,  கேலக்ஸி எனப்படும் நட்சத்
திர   மண்டலங்களாகவும்,   சூரிய மண்டலங்களாகவும்,    கிரகங்களாகவும்
ஆனதோடு, ஒரு கட்டத்தில் உயிருள்ள ஜீவிகளாகவும், பிறகொரு மாபெரும்
பரிணாமத் தாவலில்,   உணர்வுபெற்ற,    சிந்திக்கும்  திறனுள்ள  மனித ஜீவி
களாகவும் அவதாரம் எடுத்துள்ளன. அதாவது, இன்றைய அளவில், பௌதீக
சடப்பண்பையடுத்து,  உயிர்,  மற்றும், உணர்வு எனும் பண்புகளையும் நமது
பிரபஞ்சம் கொண்டுள்ளது.

அதாவது,  பிரபஞ்சத்தை முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள
வேண்டுமானால்,  பொருண்மை,  உயிர்,  மற்றும் உணர்வு ஆகிய இம்மூன்று
பண்புகளின் சொற்கள் வழியாகப் புரிந்து கொண்டாகவேண்டும்.  இன்னும்
இறுதியான  புரிதலுக்கு,   பரிணாமத்தில்   இறுதியாக வெளிப்படவிருக்கும்
அப்பண்பையும்  கண்டறிந்து கணக்கில் கொண்டாக வேண்டும்.  எல்லாவற்
றுக்கும்  மேலாக,  பரிணாம வழிமுறையை, அதன் அடியோட்டமான திட்டத்
தையும்;  குறிப்பாக, பரிணாமத்தில் பரிணமிக்கும் அம்சம் எது என்பதையும்
முழுமையாகப்  புரிந்து  கொண்டாக வேண்டும்.  ஆம்,  பரிணாம  வழிமுறை
யைப் புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளமுடியாது.

ஏனெனில், ஒரு இறுதியும் முழுமையுமான புரிதலின்படி,  ஒரு அமைப்பு என்
கிறவகையில் பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் பரிணாமக்களமாகும். ஒரு
இயக்கம் என்கிறவகையில், அது ஒரு பரிணாமஇயக்கமாகும். இதைத்தவிர
அது வேறெதுவுமல்ல!

முதலிடத்தில்,   பிரபஞ்சத்தை  எதற்காக  நாம்  புரிந்து  கொள்ள வேண்டும்?
அதற்கான அடிப்படை, நோக்கம், பயன்பாடு என்ன என்பவற்றையெல்லாம்
நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும். முதலில், மனிதஜீவியா
கிய நமக்கும், இந்த மாபெரும் பிரபஞ்ச அமைப்புக்கும்  உள்ள தொடர்புறவு
என்ன,  எந்த அடிப்படையில்  நாம் பிரபஞ்சத்துடன்   பிணைக்கப்பட்டிருக்கி
றோம்?  நமக்கும், பிரபஞ்சத்திற்கும் பொதுவாக உள்ளது எது?   என்பவற்றை
யெல்லாம்   புரிந்து  கொள்ளாமல்;   அதாவது    பிரபஞ்சத்துடன்   நம்மையும்
இணைத்துக்கணக்கில்கொள்ளாமல், தனியே பிரபஞ்சத்தைமட்டும் புரிந்து
கொள்வது என்பது ஒரு விலங்கின் தலையைப் புரிந்து கொள்ளாமல்,  அதன்
வாலை மட்டும் புரிந்து கொள்வது போன்று அரைகுறையானதாகும்!

நம்மையும்,   பிரபஞ்சத்தையும்   இணைப்பதும்,    இருவருக்கும்  பொதுவாக
இருப்பதும் பரிணாமம் என்கிற வழிமுறையேயாகும்.பிரபஞ்சம் என்பது பிர
தானமாக ஒரு பரிணாமநிகழ்வுமுறையாகும். அதில் முதலாவதாக விளைந்
தது 'பொருள்' எனும் சடப்பண்பு ; இரண்டாவதாக விளைந்தது  'உயிர்' எனும்
பண்பு;  மூன்றாவதாக  விளைந்தது  ' உணர்வு'   எனும் பண்பு.  இந்த  மூன்றா
வது  பண்பைத் தாங்கியுள்ளவர்கள்  என்கிற   வகையில்தான்    மனிதஜீவிக
ளாகிய  நாம்  இப்பிரபஞ்சப் பரிணாம  இயக்கத்தில்  புகுத்தப்பட்டுள்ளோம்.  
பரிணாம  வழிமுறையைப்  பொறுத்தவரை,   முதலில்   வந்த   பண்பு  அல்ல
முக்கியமானது; மாறாக, அடுத்தடுத்து தோன்றிடும் பண்புகள்தான் முக்கிய
மானவை!    இவ்வகையில்,   இதுவரையில்  தோன்றியவற்றில் கடைசியாகத்
தோன்றிய  மனித-உணர்வும் கூட  இறுதியான  முக்கியத்துவத்தைப்  பெற்ற
தல்ல.

ஏனெனில்,  மனித - உணர்வைப் பற்றிய  ஒரு  உண்மை என்னவெனில்,  அது
உணர்வுநிலையின் உதயம்,  அதாவது,   உணர்வின்  தொடக்க நிலை  தானே
தவிர,   அதுவே  உணர்வின் முழுமையோ  அல்லது   இறுதி நிலையோ  அல்ல.
அதே நேரத்தில்,  மனித - உணர்வையடுத்து வெளிப்படவேண்டிய பண்பைக்
கொண்டு  வருகின்ற பெரும்  பரிணாமப் பணியில்  மனிதஜீவிகளின்   பங்கு
மிகவும் மையமானது என்கிற வகையில், மனிதஜீவிகளுக்கு ஒரு தனி முக்கி
யத்துவம் உள்ளது.

மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அந்த அம்சம், அதுவே இறுதி
யான  அம்சமும்  ஆகும்;  அதுவும் உணர்வுதான்,  ஆனால்  அது மனித உணர்
வைப்போல சிற்றுணர்வு அல்ல, அதுவே உணர்வின் (தர்க்க ரீதியான) இறுதி
யும் முழுமையுமான நிலை. அதுதான் "முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு"!
அந்தப்  பேருணர்வு  நிலைதான்  உணர்வின்  உதயமாக   எழுந்த  ஒவ்வொரு
மனிதஜீவியும்   அடைந்தாக  வேண்டிய   பரிணாம   இலக்கும்,  முழுமையும்;
அதுவே பிரபஞ்சத்தின் இலக்கும் முழுமையும்!

'பிரபஞ்சம்  என்பது  அடிப்படையில்  வெறும்  அணுத்துகள்களே'    என்பதும்,
இன்னும் அனைத்தையும் அணுத்துகள்களுக்குச் சுருக்கி  எல்லாவற்றையும்
பௌதீக விஞ்ஞானம்  கொண்டு  விளக்கம்  காண்பதும்  யாதொரு உருப்படி
யான புரிதலையும் தராது.   அதே நேரத்தில்,  எல்லாவற்றையும் அணுத்துகள்
களுக்குச் சுருக்கிக் காணும் விஞ்ஞானிகள், அணுத்துகள்களை மட்டும் எந்த
அடிப்படையில்  சுருக்காமல்   அப்படியே  வைத்துக்  கொண்டாடுகிறார்கள்?
அணுத்துகள்களை மட்டும் சுருக்க முடியாதா என்ன? ஒரு வகையில் அணுத்
துகள்களைச் சுருக்க முடியாதுதான்!    ஏனெனில்,  அவை     உருவானவிதமே
புதிரானது என்பதால்மட்டுமல்ல; முக்கியமாக அவை சுருக்கப்படுவதற்காக
உருவானவையல்ல,  மாறாக,   விரித்துப்  பெருக்கப்படுவதற்காக   உருவான
வையாகும்!

ஆகவே,  அனைத்தையும் அணுத்துகள்களுக்குச் சுருக்கிக்காண்பது என்பது
தவிர்க்கப்படவேண்டிய தவறாகும். அவ்வாறு சுருக்கிக் காண்பதால் எவ்வித
மேலதிகப்   புரிதலையும்   நாம்  பெறப்போவதில்லை.   அவ்வாறு    சுருக்கிக்
காண்பது  பெரும் சாதனையும் அல்ல!அணுத்துகள்கள் தான் பிரபஞ்சத்தின்
அடியும்  முடியுமான  உண்மை  என்பதாயிருந்தால்,   அவை  ஏன்  நெடிய  பரி
ணாமப்  பிரயத்தனத்தை  மேற்கொண்டு  உயிராகவும்  உணர்வாகவும்  உரு
மாற்றம் பெற்றாகவேண்டும்? பரிணாமத்தின் அனைத்து விளைவுகளையும்
அணுத்துகள்களுக்குச்  சுருக்கித்தான்  காண்போமெனில், பரிணாமத்திற்கு
என்ன தான் அர்த்தம் உள்ளது? அல்லது,  மனிதஜீவிக்குத்தான் என்ன மதிப்பு,
அர்த்தம் உள்ளது?

விஞ்ஞானி,   ஸ்டூவர்ட் எ. காப்மேன் (Stuart A. Kauffman, Complexity
Theorist), தனது  "புனிதத்துவத்தை மறுகண்டுபிடிப்புசெய்தல்"  (Rein-
venting The Sacred,2008) எனும் நூலில், விஞ்ஞான அணுகுமுறையில்
வேரோடிப்போன சுருக்கல்வாதம் பற்றிச் சொல்லும் போது:

    "  .... காதல் கொண்ட இருவர், ஒரு நதிக்கரையின் ஓரமாக நடந்து செல்கி
      றார்கள் என்பது, உண்மையில்,  காதல் கொண்ட இருவர், ஒரு நதிக்கரை
      யின் ஓரமாக நடந்து செல்கிறார்கள் என்பதைத்தான் குறிக்கிறதே, தவிர,
      இயக்கத்திலுள்ள வெறும் அணுத்துகள்களைக் குறிப்பதில்லை...."
   
என்பதாகச் சொல்லுகிறார். ஆம், விஞ்ஞானத்தைப் பீடித்திருக்கும்  சுருக்கல்
வாதம், மனித இருப்பின், வாழ்வின் கொஞ்சநஞ்சம் அர்த்தத்தையும்,  மகிழ்ச்
சியையும் அழித்துவிடக்கூடும்.

ஒருவகையில்,மனிதஜீவிகளும் அவர்களது உடலைப்பொறுத்தவரை அணுத்
துகள்களால் ஆனவர்களே. ஆனால், ஆதிஅணுத்துகள்கள் நெடியபரிணாமத்
தின் மூலமாக மனிதஜீவிகளாயிற்று; அதில் சிலர்,  ஸ்டீவென் வெய்ன்பெர்க்
போல பௌதீக விஞ்ஞானிகளாகவும் ஆனதிலும் பெரிதாகப்பிரச்சினை ஏது
மில்லை. பிறகு எதுதான் பிரச்சினைஎன்றால், விஞ்ஞானியாக மாறிய அணுத்
துகள்கள்  மீண்டும்  அணுத்துகள்களைப் பற்றியே  ஆராய்ந்து   கொண்டிருக்
கின்றன என்கிற விபரீதம் தான்!

அடுத்து, ஸ்டீவென் வெய்ன்பெர்க் அவர்களின் இரண்டாவது வாக்கியத்தை
ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்:

       "எவ்வளவு அதிகமாக நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்கிறோமோ
        அவ்வளவுக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது."

என்பதாக, ஸ்டீவென் வெய்ன்பெர்க் சொல்லியுள்ளார், இந்த அபத்தத்திற்கு
காரணம்  பிரபஞ்சம் அல்ல.  மாறாக,   பிரபஞ்சத்தை      அணுத்துகள்களின்
நிலைக்குச்சுருக்கிவிட்டபிறகு, அணுத்துகளின் பண்புகளான நிறை( mass)
மின்னூட்டம் ( charge),சுழற்சி(spin),அதிர்வு (resonance); துகள்கள்
இயங்கும் வெளி(space);அதனுடன்இணைந்த காலம்(time),ஈர்ப்பு விசை
(gravity),அணுக்கருவை நிலைக்கச்செய்யும் வலுமிக்கவிசை( nuclear
Strong force),துகள்களுக்கிடையேயான  பரிமாற்றத்திற்குதவும் வலுக்
குறைந்தவிசை (nuclear Weak force)ஆகிய பண்புகளின்  சொற்களில்
மட்டுமே  புரிந்து கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சிறுபிள்ளைத்தனமான
அவர்களது அணுகுமுறையில் அபத்தத்தைத் தவிர வேறு என்ன மிஞ்சும்?

பிரபஞ்சத்தைப் பற்றிய  இறுதியான உண்மை என்பது உண்மையில் பிரபஞ்
சத்தைக் கடந்த மெய்ம்மை பற்றியதாகும். அந்த மெய்ம்மையை அடைவதற்
கான  ஒரு  உபாயமே  பிரபஞ்சம் ஆகும்.  அந்த  (இறுதி) மெய்ம்மையின்  ஒரு
உள்-வெளியாக்கப்பட்ட(Turned Inside out)வடிவமே பிரபஞ்சம்.  பிரபஞ்
சத்தின்  வெளி-உள்ளாக்கப்பட்ட (Turned Outside in)மலர்ச்சி நிலையே
அந்த ஆதியும் அந்தமுமான  மெய்ம்மையாகும்.

திரு. ஸ்டீவென் வெய்ன்பெர்க் போன்ற சில பௌதீகவியல் விஞ்ஞானிகளின்
ஒரு பிரச்சினை என்னவென்றால்,  அவர்கள் அனைத்தையும் பௌதீக விதிக
ளுக்குள் அடக்கிவிட விரும்புவதுதான். சில கணிதவியலாளர்களின் நோயும்
இதுதான். மாபெரும் விஞ்ஞானி என பெயர்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்
கள்,   பிரபஞ்சத்தின் ஆற்றல் விசைகளை  ஒருங்கிணைத்திட  விரும்பி தனது
வாழ்க்கையின் கடைசி முப்பது ஆண்டுகளை அதற்கான ஆராய்ச்சியில் ஈடு
பட்டு முடிவில் தோல்வியைத்தழுவினார்.  இயற்கை முழுவதையும்  ஒற்றைக்
கோட்பாட்டின் வழியே விளக்கிவிட வேண்டும் எனத் தீவிரமாக விரும்பினார்.

ஆனால், நம் காலத்திலேயே வாழ்ந்துவரும் இன்னொரு மாபெரும் விஞ்ஞானி
யான, ஸ்டீபன் ஹாக்கிங்(Stephen Hawking)தனது  A Brief History of
Timeஎனும் நூலில், மிகவும் அரிய நுண்ணறிவுடன் கூறிய ஒரு முக்கியத்துவம்
வாய்ந்த கருத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாயிருக்கும் :

    "அனைத்தையும் ஒருங்கிணைத்திடும் (ஒரே) ஒரு கோட்பாடு(தான்)
     சாத்தியம் என்றாலும், அது வெறும் விதிகளாகவும், சமன்பாடுகளாகவும்
     மட்டுமே விளங்கிடும். எது அந்த சமன்பாடுகளுக்குள் நெருப்பை ஊதி
     அச்சமன்பாடுகளால் விளக்கிடும் வகையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்
     கிடும்? பிரபஞ்சத்தை விளக்கிட ஒரு கணிதவியல் மாதிரியை
     உருவாக்கிடும்  வழக்கமான விஞ்ஞான அணுகுமுறையால்  ஏன் இங்கே
     ஒரு பிரபஞ்சம் இருக்கவேண்டும் எனும் கேள்விக்கு பதிலளிக்க இயலாது.."

விஞ்ஞானி   ஸ்டீபன் ஹாக்கிங்-ன்   இந்தக்கருத்து  மிகவும்   சிந்தனைபூர்வ
மானதாகும்! அதே நேரத்தில் அவர் எல்லா நேரத்திலும், எல்லா விஷயங்களி
லும் இவ்வாறு சிந்தனைபூர்வமாகவும்,தர்க்க பூர்வமாகவும்,பொறுப்பாகவும்
இருப்பதில்லை என்பது வேறு விஷயம்! ஏனெனில், அடிப்படையில்அவர் ஒரு
விஞ்ஞானி, அதுவும் ஒரு பௌதீகவியல் விஞ்ஞானி!

           [இக்கட்டுரையுடன் இதற்கு முந்தைய , "பிரபஞ்சம் குறித்த
            இறுதிச்சமன்பாடு" எனும் கட்டுரையையும் சேர்த்து வாசிக்கவும்]

(தொடரும்)

மா.கணேசன்/ 11.08.2016
---------------------------------------------------------------------------

Wednesday, 10 August 2016

பிரபஞ்சம் குறித்த இறுதிச் சமன்பாடு






            C = E = mc2 = L = c`= C

இச்சமன்பாடு பிரபஞ்சத்தையும், அதிலுள்ள (மனிதன் உள்பட) அனைத்தையும், இன்னும் பிரபஞ்சத்திற்கு அப்பாலும் உள்ள மெய்ம்மையையும் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.

பிரபஞ்சம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது  பூமிக்கிரகம், சந்திரன், சூரியன், சூரியனைச் சுற்றிவரும் பிற கிரகங்கள், நமது சூரியன் இடம்பெறும் கோடாணுகோடி சூரியன்களை, அதாவது நட்சத்திரங்களைக் கொண்ட பால்வீதி மண்டலம்  (The MilkyWay Galaxy),நம் பால்வீதி மண்டலம் இடம்பெறும் கோடாணு கோடி உடுமண்டலங்கள், இன்னும் பலவித அண்டவெளி நிகழ்வுகளை உள்ளடக்கிய, எல்லையில்லா பெருவெளி யாகத் திகழும் ஒரு மாபெரும் அமைப்பு என்பதாக இருந்தால், நிச்சயம் நாம் நம் புரிதலில் வழிதவறித்தான் போவோம்!

மேற்குறிப்பிட்ட சித்திரம் ஒரு வெறும் முகப்புத்தோற்றம் மட்டுமே தவிர, அது
மட்டுமே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! நிச்சயமாக, பிரபஞ்சத்திற்கு பொருண்மையினாலான ஒரு முகம் (Material-Facet)உள்ளது; ஆனால், அதுவே
முடிவானதும் முழுமையானதும் அல்ல!

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் -உடைய, E=mc2 எனும் சமன்பாடு முற்றிலும் பிரபஞ்சத்தை பொருண்மை மயமானதாகச் சித்தரிக்கிறது. அது, பிரபஞ்சத்தை சக்திமயமானதாகவும், அச்சக்தியின் இன்னொரு வடிவமாக அது பொருண்மையைச் சுட்டுகிறது. E=mc2 எனும் இந்தச் சமன்பாடு, சக்தியானது பொருன்மையாகவும், பொருண்மையானது சக்தியாகவும் மாற்றமடையைக்கூடியது என்பதைக்குறிப்பது மட்டுமே. ஐன்ஸ்டீன்-ன் இச்சமன்பாடு உள்ள பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படையான பண்பைப்
பற்றியது மட்டுமே. அதற்கு மேல், அது அந்த சக்தி (அல்லது பொருள்) எங்கிருந்து, எப்படித் தோன்றியது என்பதுபற்றியும், அதன் எதிர்கால
நிலைகளைப் பற்றியெல்லாம்  எதையும் விளக்குவதில்லை!

ஆனால், நமது பிரபஞ்சத்தைப்பற்றிய ஒரு வெளிப்படையான உண்மை என்னவென்றால், நமக்குத் தெரிகிற வகையில், 'பொருள்' (அல்லது பொருன்மை) என்கிற பண்பை அடுத்து, 'உயிர்' மற்றும் 'உணர்வு' என்கிற பண்புகளையும் பிரபஞ்சம் கொண்டுள்ளது.

ஆக, நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், வெறும் பொருளின் சொற்களில் (in terms of matter)மட்டுமே புரிந்து  கொள்ளமுடியாது என்பது மிகவும் மையமானதொரு புதிய புரிதல் ஆகும். மாறாக,  நாம் நம் பிரபஞ்சத்தை  'பொருள்',  'உயிர்', மற்றும்  'உணர்வு'  என்கிற இம்மூன்று பண்புகளின் சொற்கள்  வழியாகப் புரிந்து கொள்வதுமட்டுமே தான் முழுமையான புரிதலைத்தரும்.

கிட்டத்தட்ட 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நம் பிரபஞ்சம் ஒரு  "பெரு-வெடிப்பு" (Big-Bang) எனும் நிகழ்வில் தோன்றியது   என்கிறவிஞ்ஞானப்புராணிகத்தை
இங்கு நாம் பயன்படுத்திக்கொள்வோம். அப்பெரு-வெடிப்பின் போது தான் காலம், வெளி, பொருள் (சக்திப்பொழிவாக) தோன்றியது. பிறகு அந்தச் சக்திப்பொழிவிலிருந்து மிக நுண்ணிய அணுக்கருத்துகள்கள் திடப்பட்டு அணுக்களின் வாயுத்திரள் மேகமாகி (நெபுலா-நிலை) சுழன்று அதிலிருந்து கேலக்ஸி எனும் உடு-மண்டலங்கள் திரண்டன. அவற்றிலிருந்து நட்சத்திரங்கள் அல்லது சூரியன்கள் வெளிப்பட்டன. சூரியன்களிலிருந்து பிரிந்த தூசுத்துண்டங்கள் அவற்றைச் சுற்றிச் சுழன்று கிரகங்களாக இறுகின. இன்று நாம் காணும் பிரபஞ்சம் உருவாவதற்கு கிட்டத்தட்ட 1000 கோடி ஆண்டுகள் பிடித்தன. ஆனால், இந்தப்பிரபஞ்சம் வெறும் சடப் பொருளாலான பௌதீகப்பிரபஞ்சம் மாத்திரமே!

பெரு-வெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 1100 கோடி ஆண்டுகள் கழித்து
(இன்றிலிருந்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்), கோடாணு கோடி உடுமண்டலங்களில் ஒன்றான "பால்-வீதி மண்டலத்தில்" உள்ள கோடாணு கோடி நட்சத்திரங்களில் ஒன்றான சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில், மூன்றாவது கிரகமான பூமியின் மீது பிரபஞ்சத்தின் இரண்டாவது வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது, அதாவது 'உயிர்' எனும் இரண்டாவது பண்பு வெளிப்பட்டது. 'அமீபா' எனும் ஒரு ஸெல் ஜீவி தான் பூமியின் மீது தோன்றிய முதல் உயிரி ஆகும். ஆக இந்த ஒரு ஸெல் ஜீவியானது தொடர்ந்து பரிணமித்து பலஸெல் ஜீவிகளாக பல இனங்களாகக் கிளை பிரிந்து;  ஊர்வன, பறப்பன, பாலூட்டி எனப்பரிணாமம் பெற்றது. 'உயிர்' எனும் இந்த இரண்டாவது பண்பை மையமாகக் கொண்ட இந்த
இரண்டாவது கட்டத்து பிரபஞ்சத்தை நாம்  "உயிரியல் பிரபஞ்சம்" என அழைப்பது மிகப் பொருத்தமாக அமையும்.

உயிரியல் பரிணாமத்தின்  கடைசியாக, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஆண்டுளுக்கு முன்னர் குரங்கு எனும் பாலூட்டி   இனத்திலிருந்து மாற்றம் பெற்று மனித இனம் தோன்றியது. ஆம், மனிதனுடன், பிரபஞ்சத்தின் மிக முக்கியமான மூன்றாவது வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது, அதாவது பிரபஞ்சத்தின்  'உணர்வு'  எனும் மூன்றாவது பண்பு  மனிதனுள் வெளிப்பட்டது. 'உணர்வு' எனும் இந்த மூன்றாவது பண்பை மையமாகக் கொண்ட பிரபஞ்சத்தின் இந்த  மூன்றாவது  கட்டத்தை  நாம்
"உணர்வியல் பிரபஞ்சம்" என அழைப்போமாக!

முதன் முதலாக பிரபஞ்சமானது பெரு-வெடிப்பில் சக்திப்பொழிவாகத்தான்
தோன்றியது, இந்த நிலையைத்தான்  ஐன்ஸ்டீன்-ன் சமன்பாட்டில் இடம்பெறும்  "E" என்பது குறிக்கிறது. சக்தியானது அணுத்துகள்களாக, அதாவது திடப்பொருளாக  மாறிய நிலையை ஐன்ஸ்டீன்-ன் சமன்பாட்டில் இடம்பெறும் "mc2" என்பது குறிக்கிறது. இத்துடன்  ஐன்ஸ்டீன்-ன் சமன்பாடு நின்று விடுகிறது, அல்லது விடைபெற்றுக்கொள்கிறது.

ஒரு வகையில், சக்தி அல்லது பொருள் என்பது தான் இப்பிரபஞ்சத்தின்
அடிப்படை வஸ்து என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சக்தி நிலையாக
வெளிப்பட்ட பிரபஞ்சம்,சக்தியாகவோ,அல்லதுபௌதீகச்சடப்பொருளாகவோ
நிலை பெற்றுவிட வில்லயே?

அதாவது, சக்தி பொருளாக மாறக்கூடும் என்பதன் தொடர் வளர்ச்சியாக
(சடப்) பொருளானது உயிராகவும்  ("L"= life), உயிரானது மனிதனுள்
உணர்வாகவும்  ( "c`"= human consciousness) மாறக்கூடும், ஆம்,உண்மையில், இந்தக்கிரமத்தில் தான் பிரபஞ்சமானது மாற்றம் பெற்றது என்பதைத்தான் இக்கட்டுரையின் "இறுதிச் சமன்பாடு" எடுத்துக் கூறுகிறது.

           E = mc2 = L = c`

இதையே பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களின் படிமுறையில்
அமைத்துக் காண்போம்: (கீழிலிருந்து மேல் நோக்கிக் காண்க)
 
                         உணர்வியல் கட்டம்
                               -------------------
                          உயிரியல் கட்டம்
                               ----------------------
                          பௌதீகக் கட்டம்
                           ---------------------------

அதாவது, பெரு-வெடிப்பு ---> சக்தி ---> பொருள் ---> உயிர் ---> (மனித) உணர்வு
என்கிற இந்த மேலெழுந்து செல்கிற வளர்ச்சிப்போக்கில், மனித உணர்வை
அடுத்து எது வெளிப்படவிருக்கிறது என்பதும்; பெரு-வெடிப்புக்கு முந்தைய
நிலை, பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதும் விடுபட்டுள்ளது!

இதோ முழுமையான சமன்பாடு:

            C = E = mc2 = L = c`= C

பிரபஞ்சத்தின் பரிணாம வரலாற்றில், தொடக்கக் கட்டமான பௌதீகச் சடப்
பொருளின் கட்டம் தான் மிக நெடியதாகும், கிட்டத்தட்ட 1100 கோடி ஆண்டுகள்.
அடுத்தது உயிரியல் கட்டம் , அது கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. கடைசியாக,  உணர்வியல் கட்டம் வெகு சமீபத்தில், உணர்வுள்ளமனிதஜீவியுடன், ஒன்று அல்லது  இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கியது. பிரபஞ்சப் பரிணாம இயக்கமானது தற்போது உணர்வியல்கட்டத்தில், அல்லது தளத்தில் மையம் கொண்டுள்ளது.

மனித உணர்வைப் பற்றிய ஒரு உண்மை என்னவெனில், அது உணர்வுநிலையின்உதயம், அதாவது, உணர்வின் தொடக்க நிலை தானேதவிர, அதுவே உணர்வின் முழுமையோ அல்லது இறுதி நிலையோ அல்ல. ஆகவேதான், மேலேயுள்ள சமன்பாட்டில் அதை, c`எனக்குறித்துள்ளோம். இனி மனித உணர்வு நிலையை அடுத்து வெளிப்பட
வேண்டிய மெய்ம்மை , அதுவே இறுதி மெய்ம்மை, அது  C எனக்குறிக்கப்பட்ட
பிரபஞ்சப்பேருணர்வு ( Cosmic Consciousness)என்பதுதான்.

மீண்டும் நாம் நம் புரிதலை தொகுத்துப் பார்த்துக்கொள்வோம். அதாவது பெரு-வெடிப்பில் சக்தியாக, பொருளாக (சக்தியும், பொருளும் ஒன்றுதான்) வெளிப்பட்ட பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் உயிராக எழுந்தது. உயிராக எழுந்த பிரபஞ்சம், தற்போது  மனிதனுள் சிற்றுணர்வாக உதித்துள்ளது. இவ்விடத்தில் நாம் தெளிவாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

அதாவது, பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியது, உணர்வு தோன்றியது எனக்காண்பது பழைய மட்டுப்பாடான பார்வையாகும். மாறாக, பிரபஞ்சமே உயிராகவும், மனிதனாகவும், மனிதனுள்  உணர்வாகவும் மாறியுள்ளது எனக்காண்பதே புதிய பார்வையும், புரிதலும் ஆகும்.

பிரபஞ்சத்தின் வரலாற்றில் உயிரும், உணர்வும் வெளிப்படாத காலக்கட்டங்கள்இருந்தன. அப்போது பிரபஞ்சமானது வெறும் பௌதீகச்சடப்பொருளாக மட்டுமே விளங்கியது. அதாவது, சடத்தன்னமை தான் பிரபஞ்சத்தின் அப்போதைய ஒரே பண்பு ஆகும். ஆனால், சடப்பொருள் தனது சடத்தன்மையிலேயே நீடித்திருக்கவில்லை. மாறாக, ஒரு கட்டத்தில் அது உயிராக மாற்றமடைந்தது, அதாவது,பிரபஞ்சமே உயிர் பெற்று எழுந்தது என்று தான் சொல்லவேண்டும். அக்கட்டத்தில்பிரபஞ்சம் என்பது பிரதானமாக உயிர்ப்பண்பு தான்.பிறகு உயிரானது மனிதனாகப்
பரிணமித்து அவனுள் உணர்வு உதயமாகியதும்  பிரபஞ்சமே உணர்வு பெற்ற
தாயிற்று!  தற்போது பிரபஞ்சம் என்பது பிரதானமாக உணர்வு என்கிற பண்புதான்.

ஆனால், பிரபஞ்சத்தின் இறுதியான பண்பு என்ன என்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்! ஏனெனில், அந்த இறுதியான பண்பு என்ன என்பதைக்கண்டு பிடித்தால்தான் பிரபஞ்சப்புதிர் முழுமையாக விடுபடும்!

விஞ்ஞானம் சொல்கிறது, இம்மாபெரும் விரிவடையும் பிரபஞ்சமானது ஒரு பெரு-வெடிப்பில் தோன்றியது என்கிறது. ஆனால், பெரு-வெடிப்பிற்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? காலம், வெளி, பொருண்மை யாவும் அந்த வெடிப்பில்தான் தோன்றியது என்றால், வெளி தோன்றுவதற்கு முன்னர், அந்த மூல-முதல் மெய்ம்மை எங்கே, எத்தகைய 'வெளி' யில் இருந்தது? அது ஏன் வெடித்தது?அதாவது, விஞ்ஞானம் விளக்கும் சித்திரத்தில், பிரபஞ்சத்தின் மூலமும், முடிவும்கேள்விக்குறிகளாக தொக்கி நிற்கின்றன.

    ? ---> பெரு-வெடிப்பு ---> சக்தி ---> பொருள் ---> உயிர் ---> (மனித) உணர்வு--->?

பெரு-வெடிப்பின் போது தோன்றியது சக்தியும், பொருளும் தான் என்பதால்
பெரு-வெடிப்பிற்கு முன் இருந்த மூலமெய்ம்மை, சக்தியும், பொருளும் தான் என்பதாக முடிவிற்கு வந்துவிடலாமா? அதாவது பிரபஞ்சத்தின் அடிப்படை மெய்ம்மை, சக்தி அல்லது பொருள் தான்என்றுமுடிவாகஅறிவித்துவிடலாமா? அப்படியானால், பெரு-வெடிப்பின் போது முதலில் தோன்றியது சக்தியும், பொருளும் தான் என்றாலும்பொருளையடுத்து, உயிரும், உணர்வும் தோன்றியுள்ளதைக் கொண்டு பார்த்தால்,
பெரு-வெடிப்பிற்கு முன் இருந்த மூலமெய்ம்மை உண்மையில் சக்தியோ, பொருளோ மட்டுமல்ல, மாறாக, உயிர்ப்பண்பும்,உணர்வுப்பண்பும் மூலமெய்ம்மையுள் உள்ளடங்கியுள்ள பண்புகளே எனக்காண இடமுண்டல்லவா?

அல்லது, பொருள்முதல்வாதிகள் கூறி வருவது போல, சக்தியும், பொருளும் தான்மூலமெய்ம்மையின் பிரதானப்பண்புகள்; உயிரும், உணர்வும் பொருண்மையிலிருந்து பெறப்பட்ட உப-பண்புகளே என்று முடிவு செய்துவிடலாமா? இவ்வாறு முடிவு செய்தால், 'பொருள்' தான்
மூலமெய்ம்மை ;  மற்றும் பொருளானது சுயம்புவாக தன்னில் தானே
தோன்றிய நித்திய வஸ்து எனும் பெருந்தவறான முடிவுக்கு நம்மைத் தள்ளிவிடும்!

பூமிக்கிரகத்தில் கிட்டத்தட்ட 80,000,000 க்கும் மேற்பட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மனித இனம். ஆனால், அவற்றுள் மனிதன் மட்டுமே முற்றிலும்வித்தியாசமான பண்பான உணர்வைப் பெற்றவனாயுள்ளான். மற்ற ஜீவிகளைப்போல மனிதனுக்கும் உடல் உள்ளது, அந்த உடலும் பல்வேறு வகைப்பட்ட இரசாயணப்பொருட்களாலும், அடிப்படை(அணு)த் துகள்களாலும் கட்டமைக்கப்பட்டதே. எனினும், மனிதனை, அந்த பௌதீக அடிப்படை(அணு)த் துகள்களைப் பற்றிய ஒட்டுமொத்த அறிவைக் கொண்டும், அல்லது அவனது உடலைப்பற்றிய ஒட்டுமொத்த உயிரியல், மற்றும் உடலியல்அறிவைக் கொண்டும் புரிந்து கொள்ளமுடியாத கையறு நிலையில் தான் நாம் உள்ளோம்!

ஏனெனில், மனிதனை  அவனது உடலுக்கோ, அல்லது உடலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் அடிப்படை(அணு)த் துகள்களுக்கோ குறைத்துச் சுருக்கிவிட முடியாது. ஏனெனில், மிகத் துல்லியமாக மனிதன் என்பவன் ஒரு உணர்வு தான்; உணர்வை, அதற்கு அடியோட்டமாக அமைந்திருப்பதான யாதொரு கீழ்த்தளத்திற்கும் ,காரணிக்கும்
குறைத்துச் சுருக்கிவிட முடியாது. உணர்வு என்பது உணர்வு தான், அதை விளக்குவது கடினத்திலும் கடினமானது! ஏனெனில், அதைக்கொண்டுதான் பிற யாவற்றையும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் விளக்குகிறோம், விளங்கிக்கொள்கிறோம்!

இப்போது நம்முடைய அதிமுக்கியமான கேள்வி என்னவெனில், ஒரு பெரு-வெடிப்பில், அடிப்படை(அணு)த் துகள்களாகத் தொடங்கிய பிரபஞ்சம், தமது 1500 கோடி ஆண்டுகள்நெடிய பரிணாம நிகழ்வு முறையின் முடிவாக தற்போது எத்தகைய பண்பு நிலையை வந்தடைந்துள்ளது என்பதுதான். ஏற்கனவே நாம் விளக்கிவந்துள்ள படி அது மனித உணர்வாக ஆகியுள்ளது. இனி மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அம்சம்அல்லது மெய்ம்மை எது அன்பதுதான் அடுத்த அதிமுக்கியமான கேள்வியாகும்.

மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அந்த அம்சம், அதுவே இறுதியான அம்சமும் ஆகும்; அதுவும் உணர்வுதான், ஆனால் அது மனித உணர்வைப்போல சிற்றுணர்வு அல்ல, அதுவே உணர்வின் (தர்க்க ரீதியான) இறுதியும் முழுமையுமான  நிலை. அதுதான் "முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு"! அந்தப் பேருணர்வு நிலைதான்உணர்வின் உதயமாக எழுந்த ஒவ்வொரு மனிதஜீவியும் அடைந்தாக வேண்டிய பரிணாம இலக்கும் முழுமையும் ஆகும். அதுவே பிரபஞ்சத்தின் இலக்கும் முழுமையும்ஆகும்.

ஆனால், பிரபஞ்சத்தின் முடிவும்  முழுமையும், அதன் தொடக்கத்தைப்போல ஒரேபுள்ளியில் அடையப்படுவதில்லை! மாறாக, ஒரு மரமானது தனது ஒவ்வொரு கனியின்வழியாகவும் தனது இலக்கையும், முழுமையையும் எட்டுவதைப்போல பிரபஞ்சமானது ஒவ்வொரு தனிமனித ஜீவியின் வழியாகவும் தனது ஒப்பற்ற இலக்கையும் முழுமையையும் எட்டுகிறது!

பிரபஞ்சமானது பெரு-வெடிப்பு எனும் ஒரு ஒற்றைப் புள்ளியில் தொடங்கினாலும், அது தொடங்கிதும் பல்வேறு வகைப்பட்ட அணுத்துகள்களாகச் சிதறிப்போனது. இந்த பன்மை நிலையிலிருந்து அது படிப்படியாக நெடிய பரிணாம வழிமுறையின் மூலமாக  தன்னை
ஒருங்கிணைத்து ஒருமை நிலையை எட்டும் முகமாக மனித உணர்வாகப் பரிணமித்தது. பிரபஞ்சமானது ஒரு கட்டத்தில், உணர்வு பெற்று எழாவிடில், நாம் இன்று பிரபஞ்சம் குறித்து இவ்வளவு விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

அதே நேரத்தில், பிரபஞ்சமானது மனிதனாக (மனிதனுள் உணர்வாக) மாறியதன் நோக்கம் பிரதானமாக தனது கடந்த கால நிலைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதற்காக அல்ல. மாறாக, உணர்வுப்பூர்வமாக முன்னேறிச்சென்று தனது ஒப்பற்ற இலக்கை விரைந்து  அடைவதற்காகத்தான். ஆனால், உணர்வுள்ள மனிதர்களோ (குறிப்பாக
விஞ்ஞானிகள்) இன்னும் தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்புறவைப் புரிந்து கொள்ளாமல்,உயிரும்,உணர்வும் அற்ற சடப்பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தப்பிரபஞ்சம் என்பது போல ஆராய்ந்துகொண்டுள்ளனர். இவர்கள் எப்போது பிரஞ்சத்தின்நீட்சியான மனிதனான தன்னை ஆராயப்போகிறார்கள்?

எப்போது மனிதன், பிரபஞ்சத்தின் நீட்சியாகவும், அதன் உயர்வளர்ச்சி நிலையாகவும் தோன்றியவனே தான் எனும் உண்மையைப் புரிந்து கொள்கிறானோ, அப்புரிதலின் தொடர்ச்சியாக, பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்வுமுறையையும்; அதில்துல்லியமாக, பரிணாமம் என்றால் என்ன? பரிணாமத்தில் பரிணமிப்பது எது? என்பதை
யும்; அதில் இன்னும் அதி முக்கியமாக, பரிணாம நிகழ்வு முறையில் தனது இட அமைவு, பணி, பங்கு, பாத்திரம் என்ன என்பதையும்  புரிந்து கொள்கிறானோ, அப்போதுதான் அவனால் பிரபஞ்சத்தையும், தன்னையும் உருப்படியாகப் புரிந்து கொள்ளஇயலும்.

ஆம், பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்வுமுறையைப் புரிந்து கொள்ளாமல்ஒருபோதும் பிரபஞ்சத்தை நாம் முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், உண்மையில் பிரபஞ்சம் என்பது ஒரு பரிணாம ஊடகம், அல்லது பரிணாமக்
களம் என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல! ஆனால், இந்த உண்மை மிக எளிமையாக இருப்பதால், விஞ்ஞானிகளுக்கு இது அதிர்ச்சியாகவும், திருப்தியளிக்காததாகவும் தெரியலாம்.இந்த உண்மைக்கு மாறாக, வெறுமனே காலம், வெளி, நிறை, அடிப்படைத்துகள்கள், ஒளி,
பொருள், நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், கிரகங்கள், வேற்று கிரகங்கள், வேற்று கிரகஜீவிகள், கேலக்ஸிகள், . . . . . என ஆராய்ந்து கொண்டிருப்பது  சிறுபிள்ளைத்தனமானதாகும்.

முதலிடத்தில், பிரபஞ்சத்தை எதற்காக நாம் புரிந்து கொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை, நோக்கம், பயன்பாடு என்ன என்பவற்றையெல்லாம் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். மிகவும் வெளிப்படையாக நாம் ஒரு மாபெரும் புதிரான அமைப்புக்குள் அமைந்திருக்கிறோம்; அதை நாம் 'பிரபஞ்சம்' என அழைக்கிறோம். அந்த
மாபெரும் அமைப்புக்குள் நம்முடைய இடம், பணி, பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வரை நமது நோக்கத்தில் பிழையேதும் இல்லை! பிரபஞ்சத்தில் நமது இட-அமைவைப் பொறுத்தவரையில், ஓரளவிற்கு துல்லியமாகவே அறிந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு நடுத்தரமான அளவுடைய நட்சத்திரத்தை (சூரியனை)ச் சுற்றிவருகின்ற ஒன்பது கிரகங்களில், சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள பூமிக்கிரகத்தில் நாம் வசித்துவருகிறோம். நமது சூரியமண்டலமானது, கோடாணுகோடி நட்சத்திரங்களைக்கொண்ட "பால்வீதி" மண்டலம் என்றழைக்கப்படும் ஒரு சுருள் வடிவ கேலக்ஸியின் ஒரு விளிம்புப் பகுதியில் அமைந்திருக்கிறது. நமது கேலக்ஸியானது தொடர்ந்து விரிவடைந்து
செல்லும்  எல்லைகாணமுடியாத பெரு வெளியில் இடம்பெறும் கோடாணுகோடி கேலக்ஸிகளில் ஒன்று மட்டுமே....  ஆனால், கால-வெளியில் நமது இடத்தை அறிந்து கொள்வதனால்பெரிதாக ஒன்றும் நிகழப்போவதில்லை. மாறாக, பிரபஞ்சத்தின் பரிணாம நிகழ்வு முறை
யில் நமது இட-அமைவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நமது இருப்பு மற்றும் வாழ்க்கையின் நோக்கம், இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொண்டு அர்த்தமுள்ளதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் இருவித அணுகுமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள். முதல் அணுகுமுறையில், ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்,அல்லது இரகசியம் , தொலைதூர நட்சத்திரத்தில், அல்லது கேலக்ஸியில்  மறைந்திருப்பதுபோல, தொல நோக்கி மற்றும் பிற கருவிகளைக்கொண்டு பேரண்டவெளியைத் துழாவிக்
கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது அணுகுமுறையில், ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்பொருளின் ஆகச்சிறிய கூறான அணுத்துகளின் உள்ளே சிற்றண்டத்தில் மறைந்திருப்பது போல, அணுவை உடைத்துப் பகுத்துப் பகுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவ்வகையில், அணுவை உடைத்துப் பகுத்துப்பார்ப்பதன் மூலம், 'அணு' அல்லது 'பொருள்' என்றால் என்ன என்பதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, அணுவைப் பரிணமிக்க விட்டு அது இறுதியாக என்னவாக, எத்தகைய மெய்ம்மையாகமாற்றமடைகிறது என்பதைக்கொண்டே பொருளின் அசலான பண்பை அறிந்து கொள்ள
முடியும். அதாவது பரிணாமத்தில் எப்பண்பு இறுதியாக வெளிப்படுகிறதோ அப்பன்புதான்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு ஆகும். அதே நேரத்தில் அணுவையோ, பொருளையோ நாம்புதிதாக பரிணாம வழிமுறையில் செலுத்தத் தேவையில்லை. வெறும் சடமாகத்தோன்றிய
பொருளானது ஏற்கனவே நெடிய பரிணாமத்தின் மூலமாக ஒரு கட்டத்தில் உயிராகி, பிறகொரு கட்டத்தில் (மனிதனுள்) உணர்வுமாகியுள்ளது. இன்னும் ஒரேஒரு படிதான் உள்ளது, அது தன் இறுதியான நிலையை , பேருணர்வை அடைவதற்கு!

உண்மையில், பிரபஞ்சம் என்பது,பேருணர்வுதன்னைமறைத்துக்கொள்ளவும், பிறகு வெளிப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஊடகம் அல்லது கருவி மாத்திரமே! ஆம், பேருணர்வின் வெவ்வேறு நிலைகள் தான் பொருளும், உயிரும், மனித உணர்வாகிய சிற்றுணர்வும் ஆகும். பேருணர்வு தான் ஒரு பெரு-வெடிப்பில் தன்னைச்சுருக்கிக்கொண்டு
உணர்வற்ற அணுத்துகள்களாக மாற்றிக்கொண்டது. அணுத்துகள்களாக மாறிய பேருணர்வு தன்னை மீள்கண்டுபிடிப்பு செய்யும் வழிமுறைதான் பரிமாணம் என்பது. உணர்வற்ற அணுத்துகள்கள் உணர்வை எட்டும் முயற்சியில், முதல் கட்டமாக ஒன்றிணைந்து உயிருள்ள ஜீவியாக (அமீபா நிலை) எழுந்தது. அமீபாவினுள் மெலிய உறுத்தல்- உணர்வைப் பெற்றது, பிறகு பல்வேறு உயிரினங்களின் வழியாக நன்கு வளர்ச்சியடைந்த புலன்கள் மூலமாக புலன்வழி-உணர்வைப் பெற்றது. பிறகு மனிதனுள் தனது
இருப்பை தெளிவாக உணரும் "சுய-உணர்வை"ப் பெற்றது.

இனி பிரபஞ்சத்தின் பரிணாம வருங்காலமும், முழுமையும் ஒவ்வொரு மனிதஜீவியையும்பொறுத்த விஷயமாகும். ஏனெனில், இனி பரிணாமம் என்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துவந்தது போல உணர்வற்ற ரீதியில்,தானியங்கித்தனமாக, அல்லது எந்திரத்தனமாக நிகழ
இயலாது!  இனி பரிணாமம் என்பது உணர்வுப்பூர்வமாக மட்டுமே நிகழமுடியும். ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வில் வளர்ந்துயர்ந்து முழு-உணர்வை அல்லது பேருணர்வை எட்டுவதில் தான் ஒவ்வொரு மனிதனுடைய முழுமையும், இன்னும் பிரபஞ்சத்தின் முழுமையும் அடங்கியுள்ளது.

ஆனால், இங்கு தான் சிக்கல் நிலவுகிறது. அதாவது உணர்வு இருந்தும் மனிதர்கள் உணர்வின் ஜீவிகளாக எழாமல், இன்னும் உடலின் ஜீவிகளாகவே நீடிக்கின்றனர். இதன் விளைவாக பிரபஞ்சப் பரிணாமம் பெரிதும் தேக்கமுற்று நிற்கிறது. இந்தப்பிரச்சினையை எவ்வாறு
தீர்ப்பது என்பது குறித்து பிறிதொரு கட்டுரையில் காண்போம்.

இப்போது நாம் மீண்டும் நமது சமன்பாட்டிற்கு வருவோம். பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்முறையில்,  முதலில் சடப்பொருளும், அதையடுத்து உயிரும்,  அதையடுத்து மனித-உணர்வும் வெளிப்பட்டுள்ளன. இனி, மனித-உணர்வைக்கடந்து அடுத்ததாகவும், இறுதியாகவும் வெளிப்படவேண்டிய அம்சம் அல்லது மெய்ம்மை "பேருணர்வு" தான் என
நாம் நமது ஆய்வில் விஞ்ஞானப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் எட்டியுள்ளோம். அதேநேரத்தில், இக்கட்டுரை ஆசிரியரைப்பொறுத்தவரை, இம்முடிவு, வெறுமனே விஞ்ஞானப்பூர்வமானதும், அல்லது தர்க்கரீதியானதும் மட்டுமல்ல; மாறாக, அவரது நேரடியானதும், உணர்வுப்பூர்வமானதுமான 'பேருணர்வு' அனுபவத்தின் வெளிப்பாடும் ஆகும். இதை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக அனுபவம் கொள்ள முடியும்; அவ்வாறு அனுபவம்
கொள்வதொன்றே மிகச் சரியானதும் இறுதியானதுமான நிரூபணமும் ஆகும்.அதுவரைஇச்சமன்பாட்டைஎவர்வேண்டுமானாலும்விஞ்ஞானப்பூர்வமாகவும்,  தர்க்கரீதியாகவும்தவறு என மெய்ப்பிக்க ( Falsify)முயலலாம்!

 பேருணர்வு-->பெரு-வெடிப்பு -->சக்தி-->பொருள்-->உயிர்-->(மனித)உணர்வு--    -->பேருணர்வு

                 C = (E = mc2) = L = c`= C

 இச்சமன்பாட்டில் சிறிய அடைப்புக்குறிகளுக்குள்  E=mc2      எனக்காணப்படுவது
 ஐன்ஸ்டீன் அவர்களுடய புகழ்பெற்ற சமன்பாடு ஆகும்.

மேலும்,  C = E = mc2 = L = c`= C எனும் இச்சமன்பாடு நேர்கோட்டு வடிவத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. இச்சமன்பாட்டையே வளைத்து வட்ட வடிவத்தில்   அமைக்கும் பட்சத்தில், இரண்டு பெரிய C தேவைப்படாது. மாறாக, வட்ட   வடிவ அமைப்பில் ஒரு C  மாத்திரமே இடம்பெறும். ஏனெனில், ஆரம்பமும் முடிவும் ஒரே மெய்ம்மை நிலை தான்! அதை பேருணர்வு என்று அழைக்கலாம், அல்லது அன்பு, கடவுள், மூலமும் முடிவுமான
மெய்ம்மை, மகத்தான ஒருமை,  உண்மை, நித்தியம், காலாதீதம் எனவும் அழைக்கலாம்.

 மேலும், இதே சமன்பாட்டை   இவ்வாறு   C = [E = mc2 = L = c`]= C என எழுதும்
 போது வேறு ஒரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது, இரண்டு பெரிய C-க்களும் பெரிய அடைப்புக்குறிகளுக்கு வெளியே இருப்பதன் அர்த்தம் கால-வெளி கடந்த காலாதீத மெய்ம்மை நிலையை அது குறிக்கிறது.  பெரிய அடைப்புக்குறிகளுக்கு உள்ளேயுள்ள அம்சங்கள் கால-வெளிக்குள் அடைபட்ட மட்டுப்பாடான நிலையைக் குறிக்கிறது.

பரவலாக இச்சமன்பாடு(அனுபவப்பூர்வமாக உணர்ந்து) புரிந்து கொள்ளப்படும் போது:

        *  பொருள்முதல்வாதம் (Materialism) என்பது வரலாற்றின்
            குப்பைக்குழிக்குள் போய்ச் சேர்ந்துவிடும்.  

        *  விஞ்ஞானமானது தனது பொருள்முதல்வாதச் சார்பையும்,            சுருக்கல்வாதத்தையும்விட்டொழித்து, அளவிட முடியாதவை  அனைத்தையும், உதாரணத்திற்கு உணர்வுபோன்றவற்றையும் கணக்கில்  கொள்ளும் ஆரோக்கியமான அணுகுமுறையைக்கைக்கொண்டு  முழுமையான அறிதல் முறையாக மாற்றம்பெறும்.

        *  மதங்கள், 'கடவுள்' எனும் மூலமும் முடிவுமானதும், அனுபூதிபூர்வமாக உணர்ந்து அடையக்கூடியதுமான உணர்வுமயமான மெய்ம்மையை, வெறும் குறியீடாகவும், ஒரு மந்திரச் சொல்லாகவும் கொண்டு, பூசை,சடங்கு, வழிபாடு என உதட்டளவு உபசாரத்தில்  ஈடுபட்டு வரும் நடைமுறையைக் கைவிட்டு அசலான ஆன்மீக வழிக்குத் திரும்பிடும்.

        * விஞ்ஞானத்தின் பொருள்முதல்வாதச் சார்பும், சுருக்கல்வாதமும், எந்திரவாதமும் அடி பட்டுப் போவதுடன், எல்லாக்கேள்விகளுக்கும் விஞ்ஞானத்திடம் பதில் இருக்கிறது எனும் விஞ்ஞானவகை மூட நம்பிக்கையும் அடிபட்டுப்போகும்; அதனுடன்சேர்ந்து, பிரபஞ்சம் விபத்துபோன்றது, அர்த்தமற்றது; பரிணாமம் குறிக்கோளற்றது;மனிதன் ஒரு உயர்வளர்ச்சியடைந்த விலங்கு, உயிர்-பிழைத்திருத்தலைக்கடந்து
மனித வாழ்க்கைக்கு வேறு இலக்கு ஏதுமில்லை . . . .என்பன போன்ற விஞ்ஞானப்பொய்ம்மைகளும் அடிபட்டுவிட மக்கள் அசலான அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத்திரும்பிடுவர்.

   
மா.கணேசன்/ 7.08.2016
---------------------------------------------------------------


Saturday, 6 August 2016

முற்றிலும் புதியது!





நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளது!
ஆனால், அதை நாம் கண்டு கொள்வதே
இல்லை!
நாம் நம் விருப்பப்படி  நம் சொந்த
விவகாரங்களில் மூழ்கித் திளைக்கிறோம்,
அல்லது விரக்தியுறுகிறோம்!
இயற்கையை  அழகு  எனப் பார்க்கும்படி
பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்;
அதனால், அதன் உண்மையை நாம்
பார்ப்பதில்லை!

*
நான் வலியில் இருக்கும் போது
உலகம் அந்நியமாய்த்தெரிகிறது!

நான் சுகத்தில் மிதக்கும் போது
உலகம் மறைந்து போகிறது!

வலியும் சுகமும் நம் இரு கண்களாக
இருக்கும் வரை உலகை உள்ளபடி
பார்க்கமுடியாது!

உலகம் அது இப்போது உள்ளபடியே
எப்போதும் இருந்ததில்லை!
இனி எப்போதும் இப்போது உள்ளபடியே
இருக்கப்போவதுமில்லை!

காரணம் உலகம் மாறிக்கொண்டே
இருப்பதால் அல்ல!
மாறாக, அது பரிணமித்துக் கொண்டே
இருப்பதால்!

மாற்றம், பரிணாமம் இரண்டும் ஒன்றல்ல!
மாற்றம் சாசுவதமானதல்ல;  வெறுமனே
வரையறை அற்றது, அவ்வளவே!
ஆனால், பரிணாமம் இலக்கை உடைய ஒரு
அர்த்தமுள்ள இயக்கம்!

"ஒன்றுமில்லாத நிலை என்றில்லாமல்
ஏன் ஏதோவொன்று இருக்கிறது?"
என்ற கேள்வி அபத்தமானது!
ஏதோவொன்று இருப்பதால் தான்
அதன் பகுதியாக இருந்துகொண்டு
ஒன்றுமில்லாத நிலை பற்றிய கற்பனையும்
கேள்வியும் எழுகின்றன!

அதே வேளையில், இருப்புக்கும்
இன்மைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
என்பதை உணர்ந்திருப்பதே ஞானம்!

*

உலகம், அல்லது பிரபஞ்சம் இருக்கிறது
என்பது அல்ல பிரச்சினை;
அது ஏன் இருக்கிறது என்பதுதான்!

நாம் இருக்கிறோம் என்பதும்
பிரச்சினை  அல்ல;
நாம் ஏன் இருக்கிறோம் என்பதுதான்!

'ஏன்'களுக்குக்கான பதில்களைக் கண்டு
பிடிக்காதவரை எல்லாம் சிக்கல்களே!

*
எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்ப்பது
என்றால் எப்படி?
எதற்கும் பழகிப்போய்விடாத
எப்போதும் புதிதாய் விளங்கும் மனத்தைக்
கொண்டு பார்ப்பதன் மூலம்!
எப்போதும் புதிதாய் விளங்கும் மனத்தைப்
பெற என்ன செய்ய வேண்டும்?
எதையும் பார்த்தாக வேண்டும் எனும் தேவையைக்
கடந்த இறுதியான மனமாக மாற வேண்டும்!

எல்லாவற்றையும் புதிராய்ப் பார்ப்பது
என்றால் எப்படி?
எதையும் குறைத்துச் சுருக்கிக் கொச்சைப்
படுத்தாமல் பார்ப்பதன்  மூலம்!
அவ்வாறு பார்ப்பதற்கு ஒருவன் என்ன
செய்யவேண்டும்?
எதுவும் புரியவில்லை என தன்னுள்
சுருங்கிவிடாமல் பரந்து விரிந்து எல்லாவற்றையும்
தழுவிக்கொள்ளும் பேரார்வம் வேண்டும்!

*

மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
உலகிடமிருந்து வேறானவனாக
இருக்க முடியுமா?
உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
புரிந்து கொள்ள முடியாது!
உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
தானே நீ !
மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
பெரிதும் உலகம் தான் உன்னைச்
சார்ந்திருக்கிறது!
உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
உய்விற்காக!
உலகின்   உயர்  வளர்ச்சி நிலையே நீ எனில்
உன்னுடைய உயர்  வளர்ச்சி நிலையே
உலகையும் உன்னையும் கடவுளையும்
ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
உண்மை!

*

மா.கணேசன்/ 6.08.2016
------------------------------------



உங்கள் விளக்கை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள்!




ஏற்றப்படாத மெழுகு வர்த்தி
இன்னும் தனது அர்த்தத்தை அடையாத
வெறும் மெழுகுத் துண்டு!

தான் உருவானதன் நோக்கத்தை
நிறைவேற்றாத வரை அதன்
இருப்பு அர்த்தமற்றது!

இன்னும் அது தனக்குத்தானேயும்
பயனற்றது!

ஒரு மெழுகுத்தண்டும், திரியும்
மட்டுமல்ல  மெழுகு வர்த்தி!

தன் தலையில் தீபத்தை ஏற்று
தன் உடலை  முழுவதுமாக உருக்கி
எரித்து ஒளிப்பிழம்பாக மாறிவிடுவது
மகா ஆனந்தம்!

*

ஒரு மெழுகுத்தண்டும், திரியும்
மட்டுமா மெழுகு வர்த்தி?

துருத்தி நிற்கும் திரி தீபத்தை
ஏற்கத் தயங்குவது தகுமோ?

மெழுகுத்தண்டு ஒளிக்கு
எரி பொருளாவதற்குத்தானே?

தன்னை முழுவதுமாக உருக்கி
எரித்து ஒளிர்ந்து ஒளியுலகம்
சேர்வது தான் விடுதலை!

*

இருட்டில் அமர்ந்து கொண்டு  ஒளியைப்பற்றி
நிகழ்த்தப்படும்  நெடிய பேச்சும், கலந்துரையாடலும்
விவாதமும்  ஒளிக்கு மாற்று  ஆகுமா?

ஒளியைக்கொண்டு வருபவன் எங்கிருக்கிறான் ?
எவ்வாறு அவன் தன் விளக்கை ஏற்றிக்கொண்டான்?
அந்த முதலாமவன் எவரிடமிருந்து ஒளியைப்பெற்றான்?

அவன் தன்னில் தானே பற்றி எரியும் உபாயம் அறிந்த
ஒருவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்!

ஒன்று, தீபமாய்த் திகழுங்கள் இல்லையென்றால்,
தீபமாய்த் திகழும் ஒருவனைத்தேடிக்கண்டுபிடியுங்கள்!

இந்த இரண்டுக்கும் இடையே  இருட்டில்
வாழ்ந்து கொண்டிருப்பது வீணே!

தீபமாய்த் திகழும் ஒருவனை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்
அந்த உபாயத்தைக் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்!

அல்லது உங்களால் முடிந்தால் இடறலடையாமல்
அவனுடன் ஒன்றி உங்கள் விளக்கை ஏற்றிக்கொள்ள
முயற்சி செய்யுங்கள்!

இதைத் தவிர  நீங்கள் ஈடுபடும் வேறு செயல்பாடுகள்
யாவும் அர்த்தமற்றதே!

*
விளக்கு, எண்ணெய், திரி யாவும்
ஒளியை எட்டுவதற்கான அமைப்பின்
கூறுகளே தவிர இவ்வெதையும்
ஒளி சார்ந்திருப்பதில்லை!
இவ்வெதுவும் ஒளியை
உருவாக்குவதில்லை!
ஒளி மட்டுமே ஒளியை ஏற்றும்!
விளக்கு, எண்ணெய், திரி, யாவும்
ஒளியின் வெவ்வேறு நிலைகளே!
ஒளி  இல்லாமல் உலகில் எதுவுமில்லை
உலகமும் இல்லை!

*
சுயமாக உங்களால் எழுந்து நிற்க
முடியா விட்டாலும்
பிறரைச் சார்ந்து நிற்க உங்கள் அகந்தை
இடம் தருவதில்லை!
உங்கள் அகந்தையின் தலையில் தீயை
வைக்க ஒருவன் வேண்டும்!
அப்போதுதான் நீங்கள் தீபமாய் ஒளிர
முடியும்!
நீங்கள் பார்வையற்றவர்களாக நீடிக்கும்
வரை பார்வையுள்ள வழிகாட்டி
ஒருவன் வேண்டும்!
தீயை விதைக்கும் வழிகாட்டியின்
தேவையை மறுக்கும் தீரன் எவனுமிருந்தால்
அவன் தன் தலையில் தானே தீயை
வைத்துக்கொள்ளட்டும்!

*

மா.கணேசன்/ 5.08.2016
--------------------------------------








Friday, 5 August 2016

முதல் விஷயங்கள் முதலில்!




ஞானமடைதல் என்பது வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டு பிறகு
எவ்வாறோ தேடி அடைந்திடக்கூடிய பலவித பொருட்கள், விஷயங்கள்,
நிலைகள் ஆகியவற்றைப் போன்ற ஒன்றல்ல. ஞானமடைதல் என்பது
நமது வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்திடக்கூடிய ஒரு விபத்தோ
அல்லது  கிரமப்படி நிகழ்ந்தேறிடக்கூடிய சம்பவங்களில் ஒன்றோ அல்ல!

மாறாக, ஞானமடைதலும், வாழ்தலும் பிரிக்கமுடியாதவை - அது
வாழ்தலின் மலர்ச்சியாகும். மேலும், வாழ்தலைத் தவிர்த்து நேரே
ஞானமடைதல் என்பதில்லை!

ஆகவே, வாழ்தலை முதலில் நாம் தொடங்குவோம் - முதன்மையான
விஷயங்களை முதலில் கவனிப்போம்.

      *   எவனொருவன் வாழ்க்கை மீது தீராத-நிரந்தர-நேசம்
          கொண்டுள்ளானோ, வாழ்வின் மேற்புற நிகழ்வுகளால்
          சிறிதும் திசை திருப்பப்படாமல் (கவனம் சிதறாமல்)
          வாழ்க்கையைக்காண்கிறானோ அவனுக்கு ஞானமடைதல்
          இயல்பாய் நிகழ்வதாகிறது. இத்தகைய ஒருவன் வாழ்க்கையை
          அடிப்படையில் ஒரு புதிராகக் காண்பவனாக உள்ளான்.

     *   எவனொருவன் தொடக்கத்திலிருந்தே தனது சுயத்தின்
         அடியாழத்திலிருந்து தோன்றும் கேள்விகளுக்கான பதில்களை
         கண்டுபிடிப்பதற்காக தனது வாழ்க்கையை முழுமையாக
         அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு ஞானமடைதல் என்பது
         அவனது விருப்பமின்றியே நிகழ்ந்தேறிவிடுகிறது.

     *   எவனொருவனுக்கு, "அர்த்தம்-தேடல்" என்பது தனது மதுவும்
          மாமிசமுமாக உள்ளதோ,  அவனுக்கு ஞானமடைதல் என்பது
          அன்றாட சூரியோதயம் போல் நிகழ்வதாகிறது.

     *   எவனொருவன் தனது இருப்பின் ('தான் இருக்கிறேன்!' எனும்)
         அற்புதத்தை தரிசித்தவனோ, அதைவிட்டு (சில சமயங்களில்
         மட்டும், சிறிது தொலைவு மட்டும் உலாவுதல் தவிர அதற்கு மேல்)
         அகலாமல் விடாப்பிடியாக இருக்கிறானோ, அவனுக்கு
         ஞானமடைதல் என்பது தனியே பிரத்யேகமாய்த்
         தேவைப்படுவதில்லை!
     
ஞானமடைதலுக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை. ஞானமடைதலை
உங்களது மனவுறுதியைக்கொண்டோ, அல்லது உங்கள் மனதின் உதவி
யின்றியோ அடையமுடியாது.

உங்களது அனைத்து முயற்சிகளும் - கடின முயற்சி, விடா முயற்சி, எதுவும்
அதைக்கொண்டு வர உதவாது. அதே வேளையில், அது இயற்கையாக
தானேயும் வராது.

ஞானமடைதல் என்பது நேரடியாக விரும்பி ஆசைப்பட்டு அடையக்கூடிய
விஷயம் அல்ல. குறிப்பாக முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்களை,
அம்சங்களை முதலில் கவனிக்காமல் வெறுமனே விரும்புவதன் மூலமும்
குறுக்கு வழியில் எதையேனும் பயிற்சி செய்வதன் மூலமும் ஒரு போதும்
அடையமுடியாது.

*
           "ஞானமடைதலின் புதிய சகாப்தம்" எனும் தொகுப்பிலிருந்து
             ஒரு சிறு பகுதி.

மா.கணேசன்/5.08.2016



Thursday, 4 August 2016

WHO BRINGS THE TRUTH?




This morning suddenly a question arose in me :" Who was the very
first enlightened man on this earth ?" Who would have shown him
the path to Enlightenment? Had he left any Teachings? How he would
have lived amidst the unenlightened people? What a torment he
might have undergone in communicating, sharing his understanding
with others? How lonelier he might have felt?

Though today we are surrounded by so many New Teachers with their
varied teachings, including the teachings of the Old Giants,
Buddha and Jesus, we are really left alone with our muddled heads
and shrunken hearts, to our own devices. And no Teaching can help
us in any way!

One can read and study Ramana, or Krishnamurti, or both side by
side; nothing will happen! Because we don't have the impetus from
within each of us, to propel us to understand the mystery called
LIFE! Also we don't have the Key, the penetrating consciousness to
decode the teachings,their revelations and deeper insights.Instead
we merely graze on the words and sentences of the teachings. Our
reading or studying of the religious or spiritual teachings is a
kind of linguistic exercise only!

The first enlightened man must have come upon it without any idea
or concept of enlightenment. And each of us is very much like that
first man, in his maiden voyage, left without any clues, maps,
guides on the way to his Enlightenment! Despite abound with all
the maps, teachings, and Gurus of every shade, we are as helpless
and perplexed as ever.

But what is a Teaching except an exposition of the Laws of Life,
the Laws governing Total Existence? Unlike science, spirituality
is replete with every kind of waywardness - anarchism, opportunism,
totalitarianism, and so on.

As far as the Laws of motion are concerned, the Greek philosopher
Aristotle first brought out his views on motion which were widely
accepted because they seemed to support what people observed in
nature. Then came Nicholaus Copernicaus with his views. Then came
Galilieo Galiliei. After Galilieo, came the great french philosopher
Rene Descartes, and following him came Newton. To the first law of
motion postulated by Descartes, Newton added the second and third
laws. Then came the giant one, Albert Einstein with his far out
theories of Relativity.

In science there is no hero-worship, nor any cult of personality
as in religious and spiritual circles. Those scientists who made
discoveries and breakthroughs get the credits and their names are
ascribed to their theories, as 'Newton's laws of motion' and
'Einstein's Theory of Relativity' and so on. It was Isaac Newton
who said:

    "If I have seen further than others, it is by standing upon
     the shoulders of giants"

Such qualities of acknowledging  and crediting the pioneers with
honor could not be found in the spiritual field. Instead, here
each one behaves as if he is a 'born-Buddha', or a 'born-Jesus'.
In the case of J.Krishnamurti, he went a great step further as if
he was the first one to have found out the Truth and so he has
got the whole rights for expounding it, meaning what all others
had found out were only half-truths or simply untruths!

As obsessed as he was with his own experiernce of enlightenment
and arrogantly pursuing his own style of expression he ignored
his contemporaries along with the Giants of the Golden past,
as if he was the one and only saviour of all humanity.

Here is the list of his contemporaries:

   Sri Sri Swami Sri Yukteswar 1855-1936
   Rudolf Steiner (Austria)    1861-1925
   Swami Vivekananda           1862-1902
   G.I.Gurdjief                1866-1949
   Sri Aurobindo               1872-1950
   Carl Gustav Jung (Swiss)    1875-1961
   P.D.Ouspensky (Russia)      1878-1947
   Sri Mother                  1878-1973        
   Sri Ramana Maharshi         1879-1950
   Albert Einstein             1879-1955
   Sri Yogananda               1893-1952
   (J.Krishnamurti             1895-1986)
   Sri Nisargadatta Maharaj    1897-1981
   Paul Brunton (British)      1898-1981
   Richard Rose (USA)          1917-2005
   Osho (Rajneesh)             1931-1990

These are the Great Individuals who lived around the time of
J.Krishnamurti. Individuals who had attained the highest level
of Consciousness and accessed Truth and brought forth their
Messages and Teachings to awaken the slumbering humanity.
 
In his obsession to promote his own Teachings, krishnamurti
somehow failed to understand the simple fact that the experience
of Truth is one and the same for all the individuals because of
its Timeless nature. That is, his truth cannot be more of a truth
than another's.

The insightless admirers and devotees of Krishnamurti say in
chorus that his teachings are so unique, so original and all
that. It was said that Krishnamurti was one of the most original
thinkers of our time who investigated fundamental questions about
the purpose of life, the true meaning of love, religion, time,
and death without seeking answers in any books or scriptures and
without accepting any belief, organized religion or system of
thought...and what he has said may have been said earlier by
others but he came upon the truth of it for himself and so on.

Truth may be a pathless land but neither Krishnamurti nor anyone
can claim exclusive ownership or the right to expound it.The line
'truth is a pathless land' is poetically a beautiful one, but truth
has nothing to do with any 'path' or 'land'. Well,if there is such
a thing as truth, in what relationship it stands with every
individual human being is the real question.

Truth is not just for any privileged or chosen few. Truth is the
Ultimate state of any man's consciousness that could grow into,
if only he cares and awakens to his own consciousness. And if the
majority of human beings do not care about truth, that is, about
their own highest self (the highest poit of one's own growth),
wholeness and so on, then it is no man's business to look into
or interfere with.

"Truth is a pathless land" is a poetical ruse employed by
Krishnamurti to free himself from the clutches of the Theosophists,
it was a startling opening line of his declaration (to disband the
Order) made by him on 3 Aug,1929; which he cooked up through
two years. And he effectively freed himself from them for good.
Apart from this successful personal escapade that line of poetry
had not revolutionized anything. In a way, it is true that truth is
really a pathless land. But it is an internal problem, that is,
when a man is separated from his truth by a chasm, what Krishnamurti
or anyone else can do about it from the outside?

Well, now let us turn to the question, "Who brings the truth?".
No one really brings the truth into the world. For truth is the
flowering of the world which blossoms outside the world, that is,
outside the world of space-time. Verily each individual human being
(by virtue of his consciousness) metaphysically represents the world,
like each apple represents the apple tree as the apple contains the
apple tree in itself,that is,in its seed. Because of this last fact,
man forms not just a part of the world but he is the very center or
heart of the world; a very important aspect of man which a lot of

Enlightened men including Krishnamurti have missed. Krishnamurti
came closer to a clear understanding when he said that 'in each one
of us that the whole of existence is gathered’, but when he said
that 'man is part of nature', he missed it again, which shows that
there are gaps in his metaphysics like his body-centric spirituality..


Well, truth is not a thing or an object lying on the outside, hidden
somewhere under the sea or at some mountain-top to be brought down
to the town by some rare hero-like individuals. On the contrary, it is
an inner reality to be attained only individually by undergoing a
metamorphosis in one's consciousness.

The state of butterfly is the truth of the caterpillar. If the
caterpillar wants to realize its truth it has to transform itself
into a butterfly! In the case of caterpillars, the transformation
is physical; in the case of humans it is spiritual, that is, the
transformation has to take place in man's consciousness. These are
not poetic renderings but metaphysical facts, not gleaned from any
books, ancient or modern but from the direct experience of truth.

Though Truth is one, each one has to directly access it individually.
It is like drinking water from a common source but each one has to go
to the source directly and drink from it to one's heart's content;
and no one can fetch even a drop of it and give it to another.

Perhaps after drinking from the wellspring of Truth one can come back
and tell others the importance of drinking from it, that is all one
can do about it.

And what is a Teaching except it is just beating about the bush.The
Truth-intoxicated man can discuss anything or everything under and
beyond the Sun for eternity but he can never ever come to the point.
Because, the point in question is not a point at all but an
experience that cannot be transmitted to or shared with another.
Hence all Teachings are utterly limited as far as the central thing
is concerned. But any teaching can be useful peripherally....

And what is a revelation? The revealing of something that is of
utmost importance and of ultimate significance. And the whole
phenomenon of revelation takes place inside one's psyche, that is,
something is revealed by the Highest Consciousness to the human

consciousness. What is revealed or communicated is not just a piece
of information or knowledge but it also involves a transmission of
spiritual energy of the Highest Consciousness, in all, it will be a
numinous experience. Thus a revelation is something one receives
from the innermost depths of one's self and hence the one who
directly receives it gets its benediction. And it is the same
with insight also.

And when a revelatory Teaching full of insights is written down,
that is, translated into words, it simply becomes a set of
instructions or a body of knowledge devoid of life. Hence an insight
always requires from us a heightened awareness to understand its
import. And anything that is not directly embraced by oneself in
one's consciousness cannot be assimilated and one will be a stranger
to that thing. And so we remain a stranger to Life, truth and our
deepest Self.

*
M.Ganesan/31.07.2016
--------------------





ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...