
'இறுதி விளக்கம்' சாத்தியமில்லை! என்பதை நான் ஏற்றுகொள்ளமுடியாது!
ஏனெனில், உலகை, என்னை, வாழ்க்கையை, அரை-குறையாகப்புரிந்து
கொண்டு, வாழ்ந்து, மாண்டுபோக நான் விரும்பவில்லை!
-மா.கணேசன்/10.12.2016
மனிதவாழ்க்கை, வாழ்தல் என்பது அறிதல்,புரிதல்,தெளிதல் ஆகியவற்றை
உள்ளடக்கியதல்ல வென்றால், நாம் எதையும் அறிந்துகொள்ள, புரிந்து
கொள்ளத்தேவையில்லாமல்,விலங்குஜீவிகளைப்போல கேள்வியேதுமின்றி
வெறுமனே உயிர்பிழைத்துச் சென்றால் போதும்! இதற்குமாறாக, அறிதல்,
புரிதல் என்பது மனிதனின் பிரத்யேகஅம்சம் என்றால்,நிச்சயம் மனிதனால்
அனைத்தையும் புரிந்து கொள்ளமுடியும்! அனைத்தையும் என்பது ஒவ்
வொரு சிறு சிறு விவரத்தையும் விடாமல் என்று அர்த்தமில்லை! மாறாக,
விஷயங்களை அவற்றின் சாரத்தில் புரிந்துகொள்வதைக்குறிக்கிறது.
என்னைப்பொறுத்தவரை, ஒட்டுமொத்தமும் ஒரு புதிர் தான்! அதில் உலகம்
ஒரு புதிர்! அதில் நான் ஒரு புதிர்! என்னையும், உலகையும் உள்ளடக்கிய
வாழ்க்கைஎனும் ஒட்டுமொத்தம் ஒரு மகாபுதிர்!நான் உலகை,பிரபஞ்சத்தை
பிரதானப் படுத்துவதில்லை! ஏனெனில், என்னால் புரிந்துகொள்ளப்பட
வேண்டிய ஒரு அம்சத்தை பிரமாதப்படுத்த வேண்டிய அவசியமில்லை!
இப்பிரபஞ்சத்தை முறையாகவும், சரியாகவும் புரிந்து கொள்வது என்பது
அதன் உள்ளார்ந்த விழைவை (Nisus)ப் புரிந்து கொள்வதொன்றே ஆகும்!
அதாவது, பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு அதில்
எத்தனை கோடி உடு மண்டலங்கள் (Galaxies), எத்தனை கோடி நட்சத்
திரங்கள் உள்ளன, ஒவ்வொரு நட்சத்திரத்தையும்சுற்றி எத்தனை கோள்கள்
உள்ளன என்பதையெல்லாம் துல்லியமாக எண்ணிக் கணக்கிட்டுக்கொண்
டிருக்கத் தேவையில்லை! இவ்வழியாகவெல்லாம் பிரபஞ்சத்தை நாம் ஒரு
போதும் புரிந்துகொள்ளமுடியாது!
அப்படியானால், வேறு எவ்வாறு நாம் இப்பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது?
அதாவது, பிரபஞ்சமானது அதன் அடிப்படையிலும், சாரத்திலும் என்னவாக
உள்ளது என்பதைப் புரிந்துகொண்டாலே போதும்! பிரபஞ்சத்தை ஒரு
மாபெரும் பௌதீக அமைப்பாகவும், எந்திரமாகவும் காண்பது என்பது மிக
வும் மேலோட்டமானதொரு பார்வையாகும்! இந்தக் கோணத்தில் தான் விஞ்
ஞானிகள் அனைவரும் பிரபஞ்சத்தைக் காண்கிறார்கள்! இன்னொரு
கோணத்தில், "இயக்கத்திலுள்ள பொருள்" (Matter in Motion)எனவும்
காண்கிறார்கள். பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது என்பதில் எவ்வித
சந்தேகமும், சிக்கலும் இல்லை! ஆனால், அது வெறும் எந்திர கதியிலான
இயக்கத்திலுள்ள பொருள் அல்ல! பௌதீகப் பிரபஞ்சமானது புறத்தே ஒரு
மாபெரும் எந்திரம் போலத் தோற்றம் தருவதும், அத்தகைய இயக்கத்தில்
இருப்பதும் என்னவோ உண்மை தான்! ஆனால், அதுவே முழு உண்மையும்
அல்ல! மாறாக, அதன் அடியோட்டமான, அசலான இயல்பில் அது ஒரு
பரிணாம இயக்கமே ஆகும்! ஆம், ஒரு அமைப்பு என்கிற வகையில் பிரபஞ்ச
மானது ஒரு மாபெரும் "பரிணாமக்களம்" (Evolutionary Field)ஆகும்!
ஒரு இயக்கம் என்கிற வகையில் அது ஒரு மாபெரும் "பரிணாம இயக்கம்"
ஆகும்!
பௌதீகப் பிரபஞ்சம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு முகம் மட்டுமே தவிர
அதற்கு வேறு முகங்களும் உள்ளன! பௌதீகச் சடப்பொருள் அல்லது பருப்
பொருள் என்பது பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படைக்கட்டுமானப் பொருளே
தவிர, பருப்பொருளும் பிரபஞ்சமும் ஒன்றல்ல! (Matter and Universe
are not synonymous!) அதாவது, அடிப்படைத்துகள்கள் (Fundamental
Particles)என அணுக்கருவியல் பௌதீகத்தில் குறிப்பிடப்படுவது மிகப்
பொருத்தமான ஒன்றேயாகும்! அவை அடிப்படையானவையே தவிர எவ்
வகையிலும் இறுதியானவையல்ல! அதாவது, சந்தேகத்திற்கிடமில்லாமல்,
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், ஏன், அனைத்துமே பருப்பொருளால்
(அணுத்துகள்களால்) ஆனவையே! அதாவது, ஒரு கருங்கல்லும், உயிருள்ள
ஒரு தவளையும், உணர்வுள்ள ஒரு மனிதஜீவியும் பருப்பொருளால் ஆனவை
தான்; ஆனால், இம்மூன்றும் ஒரே பண்பு கொண்டவையல்ல! ஒரு கருங்கல்
என்பது உயிரற்ற சடப்பண்பாகும்; ஒரு தவளை என்பது உயிருள்ள ஒரு ஜீவி
யாகும்; ஒரு மனிதஜீவி என்பவன் உயிரும் உணர்வும் உள்ள ஜீவியாவான்!
உண்மையில், உயிர்ஜீவிகள் என்பவை பௌதீகப் பிரபஞ்சத்தின் நீட்சியும்,
உயர்வளர்ச்சி நிலையும் ஆகும்! இந்த உயிர்ப்பண்புகொண்ட உயிர்ஜீவிகள்
தான் பிரபஞ்சத்தின் இன்னொரு முகம் ஆகும்! உண்மையில், உயிர்ஜீவி
களின் கோளத்தை "இரண்டாம் பிரபஞ்சம்" என்றுகூட அழைக்கலாம்!
அடுத்து, மனிதஜீவிகள் என்போர் உயிர்ஜீவிகளின் கோளமான "இரண்டாம்
பிரபஞ்சத்தின்" நீட்சியும், உயர்-வளர்ச்சிநிலையும் ஆகும்! இந்த உணர்வுப்
பண்புகொண்ட மனிதஜீவிகள்தான் பிரபஞ்சத்தின் மற்றொரு முகம் ஆவர்!
மனிதஜீவிகளின் கோளத்தை "மூன்றாம் பிரபஞ்சம்" எனவும்அழைக்கலாம்!
ஆனால், அதே நேரத்தில், "உயிர்" மற்றும் "உணர்வு" ஆகிய பண்புகளை
முறையே அவற்றின் தளத்தில், அவற்றின் சொற்களிலேயே புரிந்துகொள்ள
வேண்டுமே தவிர, அவற்றைப் பருப்பொருளின் விசேட பண்புகளாகவோ,
பருப்பொருளின் சொற்களிலோ சுருக்கிக் குறைத்துக் காண்பது கூடாது!
இவ்வாறு காண்பது அடிப்படையற்றதொரு வகையில்,பருப்பொருளைப் பிர தானப்படுத்துவதிலும், முதன்மைப்படுத்துவதிலும் தான் சென்றுமுடியும்!
ஏனெனில், பிரபஞ்சத்தின் ஒருமையும், அதன் சாரமான பண்பும் அதன்
பொருண்மைத் தன்மையில் (Materiality) அடங்கியிருக்க வில்லை;
மாறாக, பரிணாம இயக்கமான பிரபஞ்சம் இறுதியாக எத்தகைய பண்பை
எட்டுகிறதோ அப்பண்பில்தான் அடங்கியுள்ளது! பரிணாம வழிமுறை என்
பது (பருப்பொருள் உட்படுகிற) பண்புரீதியான மாற்றத்தைக்குறிப்பதாகும்!
"பொருண்மை" என்பது பருப்பொருளின் தொடக்க நிலைப்பண்பு மட்டுமே!
அது ஏற்கனவே தனது சடப் பண்பைக்கடந்து உயிர்-ஜீவிகளின் மூலமாக
உயிர் பெற்றெழுந்துள்ளது! தற்போதைய அளவில், அது மனிதஜீவிகளின்
முலமாக உணர்வும் பெற்றுள்ளது!அதாவது,உணர்வு எனும் பண்புநிலையை
எட்டியுள்ளது! உணர்வையடுத்து, அது இறுதியாக எப்பண்பு நிலையை எட்ட
இருக்கிறது என்பதே அதி முக்கியமான கேள்வியாகும்! பரிணாமத்தில்
பரிணமிப்பது "உணர்வு" (Consciousness) எனும் அம்சமே எனும் உட்
பார்வையின்படியும், அதன் தர்க்கரீதியான நீட்சியாக, மனித உணர்வைக்
கடந்த ஒரு முழுமையான உணர்வுதான் அந்த இறுதிப்பண்பு என்பது உணர்
வார்ந்த தனிமனிதர்களின் நேரடியான அனுபூதியனுபவம் மூலம் உணரப்
பட்ட உண்மையாகும்!
ஆம், இன்றைய அளவில், பிரபஞ்சத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்
எனில், "சடம்", "உயிர்", மற்றும் "உணர்வு" ஆகிய இம்மூன்று அம்சங்களின்
சொற்களில் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர, வெறுமனே பருப்பொருளின்
சொற்களில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியாது! மேலும், பிரபஞ்சத்தை முடி
வாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள வேண்டுமெனில், பரிணாமம்
(மனித) உணர்வையடுத்து இறுதியாக எட்டக்கூடிய பண்பைக் கொண்டு
மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்! ஏனெனில், அந்த இறுதியான பண்புதான்
பிரபஞ்சத்தின் சாரமும்,பிரபஞ்சத்தை ஒருமைப்படுத்தி முழுமைப்படுத்தும்
பண்புமாகும்!
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தை அவர்கள் "இயக்கத்தில்
உள்ள பருப்பொருள்" என்பதாகக் காண்பதால், பொருள் மற்றும் சக்தியின்
சொற்களில், பிரபஞ்சத்தின் பிறப்புக்கணத்தின், அதாவது,பெருவெடிப்பின்
போதான பௌதீகநிலைமைகளை அடிப்படை பௌதீகவிதிகளையும், சில
கண்-கவனிப்புத் தரவுகளையும் (Observational Data)கொண்டு கணக்
கிட்டு நான்கு அடிப்படை-விசைகளையும் ஒருங்கிணத்துக்காண்பதன் வழி
யாக பிரபஞ்சம் குறித்த இறுதிக்கோட்பாட்டை சாதித்துவிடலாம் என முயற்
சித்துவருகிறார்கள்! ஆனால், இவ்வழியாக பிரபஞ்சத்திற்குக் காரணமான
அந்த ஒருமையை ஒரு ஒற்றைச் சமன்பாட்டிற்குள் அடைத்துவிட முடியாது!
ஒருவகையில், "மாபெரும் ஒருங்கிணைப்புக் கோட்பாடு" (Grand Unifi
cation Theory) என்பது பௌதீக விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாமல்,
உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அது மிக மிக முக்கியமானதாகும்!
ஆனால், அவர்கள் தேடிக்கொண்டிருப்பது பிரபஞ்சத்தை விளக்கும் வகை
யிலானதொரு முடிவான இறுதிச்சமன்பாடு அல்லது கோட்பாட்டைத்தான்!
ஆனால், மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுள்ளே கண்டடைய
வேண்டியது, உணர்வுப்பரிணாமத்தின் உச்சமான,அனைத்தையும் தன்னில்
ஒருமைப்படுத்திடும் பேருணர்வு என்பதையே ஆகும்!
ஒருமையும் முழுமையுமான தொரு மெய்ம்மை வெடித்ததில் தோன்றியது
தான் இப்பிரபஞ்சம்! ஆம், எந்த ஒருமையின் மறைவில் இப்பிரபஞ்சம்
தோன்றியதோ, அந்த ஒருமையைக் கட்டமைப்பதே பிரபஞ்சப் பரிணாம
இயக்கத்தின் இலக்கு ஆகும்! அந்த ஒப்பற்ற இலக்கை அடைவதற்கான
உணர்வுப் பூர்வமான பரிணாமப் பிரதிநிதிகள் தான் மனித ஜீவிகள்!
உண்மையில், பரிணாமம் என்பது அணுத்துகள்களின் சுய-அமைப்பாக்க
வழிமுறையின் (Self-Organization)மூலமாக மகத்தான ஒருங்கிணை
வை (Grand Unification)அடைவதற்கான ஒரு வழிமுறையே ஆகும்!
பரிணாமம் என்பது, தனித்தனியே சிதறுண்ட நிலையில் தாறுமாறாக ஒன்
றோடொன்று முட்டி மோதிக் கொண்டு திரியும் அணுத்துகள்களை சுய-
அமைப்பாக்கத்திற்கு (Self-Organization)உட்படுத்துவதும்; அவற்றை
தனி-மையப்படுத்துவதும் (individualization), ஒருங்கிணைவிற்கு (Unification) உட்படுத்துவதுமான வழிமுறையே ஆகும்; இவ்வழியாக,
அதாவது, பரிணாமத்தின் இலக்காக, இறுதியாகச் சாதிக்கப்படவிருப்பது,
ஆதியில் தன்னைத்தானே சுய-மறைவுக்கு (Self-Disappearance) உட்
படுத்திக்கொண்ட அந்த மகா-ஒருமை எனும் பேருணர்வே யாகும்! இந்த
இலக்கைச் சாதிக்கும் பொருட்டுத்தான் அணுத்துகள்கள் உயிர்-ஜீவியாக
அவதாரம் எடுத்தன! உயிர்ஜீவிகளின் வழியாகப் பரிணமித்து சுய-உணர்வு
கொண்ட மனிதஜீவிகளாகவும் அவதாரம் எடுத்தன!
உயிர்ஜீவி என்பது அணுத்துகள்களின் சிக்கலான ஒருங்கிணைப்பு அல்லது
கட்டமைப்பின் உச்சியில்எழுந்த, தனி-மையப்பட்ட ஒரு தனிப்பண்பு ஆகும்!
A Living Organism is discrete particles of matter unified
and individualized!பிரபஞ்சப்பரிணாம வழிமுறையில் ஒரு கட்டத்தில்
உயிர்-ஜீவிகள் தோன்றியதும்,அதற்கடுத்தக் கட்டத்தில் உணர்வுள்ள மனித
ஜீவிகள் தோன்றியதும் தவிர்க்கவியலாத கட்டாய நிகழ்வுகள் ஆகும்! பல
விஞ்ஞானிகளும், உயிரியலாளர்களும், குறிப்பாக டார்வினிஸ்டுகளும்,
நியோ-டார்வினிஸ்டுகளும் கருதுவது போல, 'சம்பவிக்கும் சாத்தியமற்ற'
(Improbable-Events)நிகழ்வுகளோ,விபத்துபோன்றநிகழ்வுகளோ அல்ல!
மனிதன் என்பவன், உயிர் இருப்பையும், அணுத்துகள்களின் ஒன்றிணப்பு
மற்றும் தனி-மையப்பட்ட தன்மையையும் உணர்ந்த உணர்வு ஆவான்!
A human being is a living entity became conscious of
matter's unification and individualization in his conscious
ness!
இறுதி மெய்ம்மை, உண்மை, முழுமை, முக்தி, மோட்சம், வீடுபேறு, ஓமேகா-
புள்ளி (Omega-Point),பிரபஞ்சப் பேருணர்வு(Cosmic Consciousness),
மற்றும், கடவுள் என்றேல்லாம் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படும்
பரிணாமஇலக்கு என்பது,ஒவ்வொரு மனிதஜீவியும் தான் ஒரு உணர்வுதான்
என்பதையுணர்ந்து, உணர்வில் பெருகியுயர்ந்து அடையக்கூடிய, அடைந்தே
யாகவேண்டிய இறுதிப்பேருணர்வே ஆகும்!
"இறுதி மெய்ம்மை" அல்லது "உண்மை" பற்றிய ஒரு மிக முக்கிய விசேட
விபரம் என்னவெனில், அனைத்தின் சாரமான உண்மை என்பது முடிவான
ஒருமையாகும்! அதாவது, அனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னில்
ஒருமைப்படுத்தி உள்ளடக்கிடும் அந்த மெய்ம்மை என்பது உண்மையில்
இறுதியானதும், முடிவானதுமாகும்! அதாவது, உலகம், மனிதன், வாழ்க்கை,
என அனைத்தையும் முடிவிற்குக் கொண்டுவந்திடும் ஒன்றாகும்! உண்மை
என்பது சற்று விபரீதமானதே எனலாம்; குறிப்பாக, இந்தக்கரையைப்பற்றிக்
கொண்டு பாதுகாப்பாக, அற்பசொற்ப இன்பங்களைத் துய்த்துக்கொண்டு
வாழாமல் வாழ விரும்புகிறவர்களுக்கு இறுதிக்கரை போன்ற "உண்மை"
விபரீதமாய்த்தான் தெரியும்; அதாவது, இந்தக்கரையின் விபரீதப்பரிசான
மரணத்தைச் சந்திக்கும்வரை!
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, அவர்கள், இத்தகைய இறுதி உண்மை
யையோ, அனைத்தையும் முடிவுறச்செய்யும் முழுமையையோ முயன்று
தேடவில்லை; மாறாக, பிரபஞ்ச இருப்பை விளக்கக்கூடிய ஒரு இறுதியான
ஒற்றைச் சமன்பாட்டையே தேடிவருகின்றனர்!
சமயபூர்வமானவர்கள் (Religious People)எனக்கருதிக்கொள்பவர்கள்,
கடவுள் நம்பிக்கையாளர், ஆத்திகர் எனப்படுபவர்களும் உண்மையை
அதாவது உண்மையான கடவுளைத் தேடுவதில்லை! மாறாக, வெறும் ஆறு
தலையும், சுலப -அருளையும்(Easy Grace)தான் தேடுகிறார்கள்! அவர்கள்
கடவுளுக்காகத் தம்மை இழக்கத் தயாராயில்லை! ஆத்திகர்கள் என்பவர்க
ளும் ஒருவகை நாத்திகரக்ளே!ஆம், கடவுள் எனும் மெய்ம்மையை நேரே தம்
உணர்வின் உச்சத்திற்கு உயர்ந்து அனுபவம்கொள்ளாத,தரிசிக்காத எவரும்
நாத்திகரே!
ஆக, நம்முடைய உண்மையான பிரச்சினை அனைத்தையும் அறிவதல்ல;
மாறாக, அனைத்திற்கும் சாரமான உண்மையை அறிவது மட்டுமே! இதை
விடுத்து, 'காலம்' என்பது நிஜமா, மாயையா? 'வெளி' (Space)எவ்வளவு
விரிவானது? இருப்பது இந்த ஒருபிரபஞ்சம் மட்டும்தானா அல்லது வேறு பல
பிரபஞ்சங்கள் இருக்கின்றனவா? காலத்தில் பின்னோக்கிச் செல்வது சாத்
தியமா? வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா? ஏன் ஒன்றுமில்லாத நிலையைத்
தவிர்த்து ஏதோவொன்று(உலகம்) உள்ளது? என்பன போன்ற கேள்விகளும்,
ஆராய்ச்சிகளும் நம் கவனத்தைச்சிதறடிக்கும்,கோளாறான ஆர்வம்சார்ந்த
மேலோட்டமான விஷயங்களேயாகும்! ஆகவே, இவை போன்ற அனைத்துக்
கேள்விகளையும், அற்ப மர்மங்களையும் கோளாறானஆர்வத்தின் விஷயங்
களையும் வடிகட்டித் தவிர்த்து விலக்கிவிட்டு மையமான அம்சம் எதுவென
கண்டுபிடித்து அதை மட்டுமே நாடிடவேண்டும்! அப்போதுதான், நாம் நம்
வாழ்-காலத்திற்குள் உண்மையை, மெய்ம்மையை உணர்ந்து இறுதிக்கரை
ஏறிடமுடியும்! ஆம், மிகவும் அளவிற்குட்பட்ட, கச்சிதமான, நூறு ஆண்டு
களுக்கும் குறைவான மனித வாழ்-காலத்திற்குள் பதில் கண்டடைந்திட
வேண்டிய ஒரே சீரிய கேள்வி, "உலகம், இருப்பு, வாழ்க்கை, மனிதன் என
அனைத்தையும் உள்ளடக்கிய இந்த ஒட்டு மொத்தத்தின் "அர்த்தம்" என்ன?" என்பது மட்டுமே!
மா.கணேசன்/ நெய்வேலி/ 10.12.2016
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment