
"எது?" எனும் கேள்வி மனிதவாழ்வில் எது முக்கியமானது, இறுதியானது என்
பதைப் பற்றியதாகும். ஆம், எது முக்கியமானது, இறுதியானது, எது வாழ்வின்
இலக்கு என்பவற்றைப் பற்றிய கேள்வியும், சிந்தனையும் இல்லாமல் ஒரு
போதும் மனித வாழ்வு அர்த்தம் பெறவோ; மனிதத்தரத்துக்குரிய வாழ்வை
நம்மால் வாழவோ இயலாது.
வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது பொதுவாக பயணத்தை உவமையாகச்
சொல்வதுண்டு. ஆனால், எங்கு, எதை நோக்கிய, எத்தகைய இலக்கை அடை
வதற்கான பயணம் என்பது தெரியாமல் மேற்கொள்ளப்படும் பயணம் அர்த்த
மற்றதாகும்!சென்றடையும்இடம் தெரியாத பயணம் எவ்வாறு அர்த்தமற்றதோ
அவ்வாறே குறிக்கோளற்ற, இலக்கற்ற வாழ்க்கையும் அர்த்தமற்றதே யாகும்!
வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிக்கேட்டால், "வாழ்வது தான் வாழ்க்கையின்
குறிக்கோள்!" என்று நம்மில் பலர் பட்டென்று பதிலிறுப்பதை நாம் கேட்டிருக்
கிறோம். ஆனால், இப்பதில் எவ்வளவு பாமரத்தனமானது என்பதை நாம் சிறி
தும் உணர்வது கிடையாது! பொதுவாக நம்மிடம் பிரத்யேகமாக "வாழ்க்கைப்
பார்வை" என்று எதுவும் கிடையாது! அது குறித்து நாம் சிந்தித்த தேயில்லை!
உயிர்-வாழ்தல், அதற்குரிய தேவைகள், அத்தேவைகளின் நிறைவேற்றம் என்
பதற்கு மேல் வாழ்க்கையைப்பற்றி நாம் அறிந்தோமில்லை!
வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு
அறிந்துள்ளதாகவே கருதிக்கொண்டிருக்கிறோம்! நம்மில் சிலர், மிகத் தாராள
மாக "எல்லாமே முக்கியம்தான்!" என்று பசப்புகிறோம்! ஆனால்,அப்பட்டியலில்
"வாழ்க்கை" மட்டும் இடம்பெறுவதில்லை!
"வாழ்க்கை" என்பது ஒரு விசேட உணர்வு ஆகும்! அது இனிய தருணங்களின்
நினைவோ, அல்லது எதிர்காலத்தில் எட்டிப்பிடிக்கப்படவிருக்கும் இலட்சியக்
கனவோ அல்ல! இன்னும், நிகழ்காலத்தில் நீங்கள் விழுந்து புரண்டு ஆற்றும்
காரியங்களும், ஈடுபாடுகளும் அல்ல! ஆம், வாழ்க்கை என்பது இருப்பின்
மையத்தைக் கண்டடைந்த (மனித)உணர்வின் உணர்வு ஆகும்! வாழ்க்கை,அது
உணர்வார்ந்ததொரு இருப்பு நிலையாகும்! அதாவது, இருப்பு உணர்வு பெற்ற
துடன் தன்னையே உணர்ந்த நிலையாகும்! வாழ்க்கை என்பது ஒருமையாகும்!
அது பலவகைப்பட்ட விஷயங்களின், அம்சங்களின், பகுதிகளின் தொகுப்பு
அல்ல!
ஆக, "வாழ்வில் 'எது' முக்கியமானது"? என்ற கேள்வியில், இடம்பெறும் 'எது'
என்ற சொல் ஒருமையைக் குறிக்கிறது. ஏனெனில், முக்கியமானது என்பதில்,
பன்மைக்கு, பல விஷயங்களுக்கு, மூட்டை முடிச்சுகளுக்கு இடமில்லை!
முக்கியமானது என்று ஒன்று தான் இருக்கமுடியும், ஏனெனில், இறுதியானது
என இரண்டு அம்சங்கள் இருக்கமுடியாது!
அடுத்து, 'முக்கியமானது' என்பது எத்தகையதாக இருக்கும்; அதை எவ்வாறு
இனம் காண்பது? ஆம்,எது மனிதனை முழுமைப்படுத்துகிறதோ, முழுநிறைவு
அளிக்கிறதோ,எது எல்லாவகையிலும் இறுதியானதோ,அதுவே முக்கியமானது!
பெரும்பாலான மனிதர்களுக்கு அடிப்படை அம்சங்களுக்கும், இறுதியான அம்
சத்திற்கும் உள்ள வித்தியாசம் இன்னும் புரியவில்லை! ஆம், உள்ளவை
அனைத்தும் வாழ்க்கையை எட்டுவதற்கான ஏற்பாடுகளே, படிக்கட்டுக்களே
தவிர, அவை வாழ்க்கையல்ல! வழியைப் பற்றிக்கொண்டு இலக்கைத் தவற
விடுவது தற்கொலைக்குச் சமமானதே! அதாவது,உயிர்-பிழைத்திருத்தலுக்கும்
(Sruvival), உண்மையான வாழ்தலுக்கும் (Living) உள்ள வித்தியாசம்
அறியாத மனித-மந்தை தான் சமூகம் என்பதாகும். (உயிர்) பிழைப்புக்கான
பயன்களைத் தேடிடும் வழிமுறையில், பிறவிப் பயனைத் தொலைத்துவிட்ட
பெருங்கூட்டம்!
மனிதர்கள் விபரீதமான ஜீவிகள்! பலருக்கு வயிறு நிறைந்தாலே போதும்
வாழ்வின் அர்த்தத்தை அடைந்துவிட்டாற்போன்றதொரு திருப்தி ஏற்பட்டுவிடு
கிறது! இன்னும் பலருக்கு சௌகரிய சம்பத்துக்களை அடைவதிலேயே வாழ்
வின் இலக்கு அடையப்பட்ட உணர்வு கிடைத்துவிடுகிறது! சிலருக்கு சமூகத்
தில் பேரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டும்! சிலருக்கு பெரும்பதவி,அதிகார
நிலைகளை அடையவேண்டும்! பொதுவாக,மனிதர்கள் இயற்கையான தூண்டு
தல்களுக்குப் பதிலளிக்கும் ஜீவிகளாகவே ஜீவித்துவருகின்றனர்! உடனடித்
தேவைகள், உடனடி அலுவல்கள்,பிரச்சினைகள்,விவகாரங்கள் ஆகியவற்றைக்
கடந்து மனிதர்களால், வாழ்க்கையைக் காணவும், வாழ்க்கையின் அர்த்தம்,
குறிக்கோள், இலக்கு ஆகியன குறித்தெல்லாம் சிந்திக்கவும் முடிவதில்லை!
ஆக, உடனடி விவகாரங்களால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு அலைக்கழிக்
கப்படும் மனிதத்திரளினால் இறுதியான அம்சம் குறித்து சிந்திக்கமுடியாமல்
போவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! மேலும், மனிதகுலமானது
கடற்கரையில் விளையாடிக்கொண்டும், சிறு கிளிஞ்சல்களைப் பொறுக்கிச்
சேகரித்துக் கொண்டும் இருக்கும் சிறுவர்களை ஒத்ததாக இருக்கிறது! அவர்
களுக்கு, கடலின் ஆழம் குறித்த கற்பனையும் கிடையாது, ஆழத்திலுள்ள
அரிய முத்துக்களின் மகத்துவமும் தெரியாது! என்னசெய்வது? இறுதியான
தைப்பற்றி விசாரிக்க விசேட விழிப்பு தேவைப்படுகிறது! அறிந்த உலகையும்,
அறிந்த வாழ்க்கையையும், உடனடித் தேவைகளையும் கடந்த, அறியப்படாத
உலகையும், வாழ்க்கையையும், இறுதித் தேவையையும் பற்றி விசாரிக்க
கூருணர்வு தேவைப்படுகிறது!
மா.கணேசன்/நெய்வேலி/ 01-04-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment