
எவ்வொரு மனிதன் (தன்) இருப்பைச் சாதாரணமாக
எடுத்துக்கொள்ளாமல், புறவுலகின் பல்வேறு விஷயங்களால்
கவனச் சிதறலடையாமல், ஆழமாகவும், முழுமையாகவும் தன்னை
உணர்வு கொள்கிறானோ, அம்மனிதனே
தன்னைக் கண்டடைந்தவனாகிறான்!
தன்னைக் கண்டடைந்தவனே மனிதன் ஆவான்!
பொதுவாக, விலங்குஜீவிகள் தம்மை அறிவதோ, "தாம் இருக்கிறோம்!"
என்பதை, அதாவது, தனது இருப்பை உணர்வதோ இல்லை!
<•>
தன்னைக்கண்டடைதல் என்றால் என்ன?ஒருவன் தனதுஇருப்பை அவ்வளவு
நேரடியாகவும், முழுமையாகவும், தீர்க்கமாகவும் உணரும் பட்சத்தில், பகல்
வெளிச்சத்தில் தன்னைக் காண்பதைவிட ஆயிரம் மடங்கு தெளிவாக
உணர்வின் உள்ளொளியில் தன்னைக்காண்பவனாகிறான்;அதாவது அவன்
புதிய கண்களைப் பெற்றவனைப்போல, தன்னைப் புதியவனாகக் காண்
கிறான்! தன்னைக் கண்டடைதல் என்பது பொங்கி வழிவது போன்றதொரு
பரவசஅனுபவம் ஆகும்!அவ்வனுபவம் அம்மனிதனின் உணர்வைஅடியோடு
மாற்றமுறச் செய்துவிடுகிறது! அதன்பிறகு அவன் ஏற்கனவே இருந்த ஒரு
வன் அல்ல! அவனது பார்வை பிற மனிதர்களிடமிருந்து முற்றிலும் வித்தியா
சமாகத் திகழ்கிறது!
மேலும்,அவன் தன்னை மட்டும் புதியவனாகக் காண்பதில்லை; உலகையும்
புதியதாகக் காண்கிறான், சொல்லப்போனால், அவன் மட்டுமே உலகைக்
காண்கிறான், அதாவது, நிஜ உலகைக் காண்கிறான்! பிற யாவரும் உலகை
வெறும் பொருட்களின் உலகமாக, பல்வேறு நுகர்வுகளுக்கான வளங்களின்
மாபெரும் கிடங்காக மட்டுமே காண்கின்றனர்!
ஆனால், எவ்வாறு தன்னைக் கண்டடைவது? எவ்வாறு ஒரு மனிதன் தனது
மேற் புறச்சுயத்தின் தூண்டுதல்களுக்கு (தேவைகளுக்கு)ப் பதிலளிக்கிறா
னோ அவ்வாறே அவன் தன் சுயத்தின் ஆழத்திற்கும் பதிலளிக்கக் கடமைப்
பட்டவனாவான்! அது குறித்து அவனுக்கு எவரும் எடுத்துச் சொல்லவும்,
நினைவூட்டவும், போதிக்கவும் வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தனது
சுயத்தின் கனபரிமாணத்தை, நீள-அகல-உயரங்களை உணர்ந்தறிவது
அவசியமல்லவா? இவ்வாறு தனது கனபரிமாணத்தை அறியாமல் வாழ்வது
என்பது ஒருவன் தன்னுடைய மாளிகையில் உள்ளே சென்று பார்க்காமல்,
அம்மாளிகையின் தாழ்வாரத்தில் தங்கி வசிப்பது போலவே முட்டாள்தன
மானதாகும்!
ஆகவே, "எவ்வாறு தன்னைக்கண்டடைவது?" எனும் கேள்வி அர்த்தமற்றதா
கும்! தன் வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன என்பதையறியாமல் எவரும்
உளரோ? "எவ்வாறு எனது வீட்டின் அறைகளைக் கண்டுபிடிப்பது?" என்று
ஒருவன் கேட்பானேயானால், அவனுக்கு என்ன பதில் சொல்வது, எவ்வாறு
வழி காட்டி உதவுவது?ஆம், வீட்டின் முன்-கதவின் வழியாக உள்ளே சென்று
ஒவ்வொரு அறையிலும் நுழைந்து பாருங்கள் என்று சொல்லலாம்! இன்னும்
ஒருபடி சென்று அம்மனிதனை அவனது வீட்டிற்குள் அழைத்துச்சென்று ஒவ்
வொரு அறையாக காணச்செய்யலாம்!ஆனால், ஒருவனது சுயத்திற்குள் எவ்
வாறு இன்னொருவன் அழைத்துச்செல்வது?நேரடியாக அழைத்துச்செல்வது
சாத்தியமில்லை!
ஆனால், மறைமுகச்சாத்தியம் ஒன்று உள்ளது! அதாவது, தன்னுடைய சுயத்
தின் ஆழத்தை, கனபரிமாணத்தை உணர்ந்தறிந்தவன் எப்போதும் தன்
ஆழத்திலிருந்து தான் பேசுகிறான், உரையாடுகிறான்; குணப்படுத்தும் அவ
னது பேச்சை, உரையைக் கவனமாகக் கேட்கும் ஒருவனது ஆழம் தூண்டப்
படுகிறது! அத்தகைய ஒருவனது பேச்சுக்கு முழுமையாக செவிசாய்க்காத
வர்களை வேறு எந்தச்சக்தியாலும் உலுக்கி விழிக்கச்செய்யவியலாது! தன்
சுயத்தின் ஆழத்திற்கு விழித்த ஒருவனுடைய ஆழமான பேச்சைக்கேட்கும்
இன்னொருவனுடைய சுயம் அதற்கேற்ப ஆழத்திலிருந்து அதிர்வடைய
வில்லை யெனில், உயர்-உணர்வுத்தளங்களைப்பொறுத்த விஷயத்தில் அவ
னது சுயம் மூடுண்டதாகவுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்! அதாவது
தன் ஆன்மாவின் இசைக்கு அவன் அந்நியனாயிருக்கிறான்!அந்தஅளவிற்கு
அவன் தன் ஆழங்குறைந்த மேற்புறச்சுயத்தின் விருப்பங்களாலும், இச்சை
களாலும் கட்டுப்படுத்தப்பட்டவனாக, அடிமையாக இருக்கிறான்!
ஒருவன் தன்னைக் கண்டடைதல் என்பது பெரும் சுமையாக, இயலாத காரி
யமாக இருக்கமுடியும் எனும் கருத்து அடிப்படையற்றது, ஆகவே தவறானது!
ஏனெனில், தன்னைக் கண்டடைதல் என்பது தன்னை முழுமைப்படுத்தும்,
தனது சொந்த உயர்-சுயத்தை உணர்ந்தறிவதையும், தனது முழு -ஆகிருதி,
மற்றும் முழு-ஆற்றலையும் அறிவதையும் குறிப்பதாகும்! வாழ்க்கையின்
உண்மையான சந்தோஷம், நிறைவு, மனஅமைதி ஆகியன மட்டுமல்லாமல்
முடிவான, நிரந்தரமான பிறவிப் பயன்களும் ஒருவன் தன்னைக் கண்டடை
தலிலேயே அடங்கியுள்ளன!
தன்னைக் கண்டடைதல் என்பது அரிய பொக்கிஷங்களைக்கொண்ட புதை
யலைக் கண்டடைந்ததற்குச் சமமானது என்பதைவிட அனைத்தையும்
ஒருங்கே கண்டடைந்ததற்குச்சமமானதாகும்!தன்னைக்கண்டடைதலுக்கும்,
கண்டடையாதிருப்பதற்குமான வித்தியாசம் நித்திய வாழ்விற்கும், மரணத்
திற்கும் உள்ள வித்தியாசமே ஆகும்!
தன்னைக் கண்டடையாதவன் பல்வேறு உலகக்கவர்ச்சிகள், பொருட்கள்,
விஷயங்கள் மீதான விருப்பங்களாலும், ஆசைகளாலும் அலைக்கழிக்கப்
படுகிறான்! அதோடு, ஆன்மீகச்செல்வங்களான ஞானமடைதல், முழுமைய
டைதல்,முக்தி,மோட்சம்,வீடுபேறு, உயர்-உணர்வடைதல் ஆகியவை எதுவும்
தமக்கு வாய்க்கவில்லையே எனவும் துன்பமுறுகிறான்! ஒரு நேரம் இந்த
உலகியல் வாழ்க்கை, உறவுகள், உலகம் இனிமையாகவும், இன்பமாகவும்
நிறைவளிப்பதாகவும் தெரிகின்றது! ஒரு நேரம் இவை கசப்பாகவும், அர்த்த
மற்றதாகவும், வெறுமையாகவும் தெரிகின்றது! இத்தருணங்களில்,ஒருவன்
எல்லாச் சழக்குகளையும், மட்டுப்பாடுகளையும், மேலோட்டமானவைகளை
யும் விட்டுவிலகி ஆன்மீகக்கரையில் ஒதுங்கிவிடலாம் எனத் தோன்றுகிறது!
ஆனால், அடுத்த திருப்பத்தில் மீண்டும் உலகியல் இனிக்கிறது! இத்தகைய
ஊசலாட்டம் எதைக்குறிக்கிறது? பிரச்சினை இதுதான்; உலகியலில் ஆன்மீ
கத்திற்கு இடமில்லை! உலகியல் என்பது உலகியல் தான்! அதேவேளையில்,
ஆன்மீகம் உலகியலை மறுப்பதில்லை; அசலான வாழ்வில் உலகியலுக்கு
உரிய,முறையானஇடத்தை அனுமதிக்க ஆன்மீகம் தவறுவதில்லை!ஆனால்,
உலகியலுக்கு உரிய இடத்திற்கு மேல் அது அதிகமாக கோர ஆன்மீகம் அனு
மதிப்பதில்லை! அதாவது, அடிப்படையான உயிர்-வாழ்தல் என்பதற்குமேல்
உலகியல் நீட்டிக்கப்படும் பட்சத்தில், அது ஆன்மீகத்தை நிராகரித்துவிடுவ
தாகிறது! அதோடு அது உயிர்-வாழ்தலின் அர்த்தத்தையும் குலைத்துவிடுவ
தாகிறது!
உண்மையில் தான் யார் என்பது குறித்த சிறு வியப்பும், கேள்வியும், அதைத்
தொடரும் விசாரமும் இல்லாமல் தன் வழக்கமான அன்றாட வாழ்க்கையில்
மூழ்கித்திளைக்கும், அல்லது தடுமாறும் ஒருவனால் ஒருபோதும் தன்னைக்
கண்டடைதல் என்பது இயலாது! மேலும், தன்னை இன்னார் எனவும், இது
வெனவும்,அதுவெனவும் அடையாளப்படுத்திக்கொள்வதென்பது தன்னைக்
கண்டடைதலுக்கான வழியை நிரந்தரமாக மூடிவிடுவதாகும்! மேலும், ஒரு
வன் எத்தகைய சுயமாகத் தன்னைக் காண்கிறானோ, வரித்துக்கொள்கிறா
னோ, அதற்கேற்பவே அவனது வாழ்க்கையும் ஆழமற்றதாகவோ, அல்லது
ஆழமிக்கதாகவோ அமைகிறது! சுயத்தின் தன்மைக்கேற்பவே வாழ்க்கை
யும் அமைகிறது! புழுவிற்கு புழுவின் வாழ்க்கையும், பூச்சிக்கு பூச்சியின்
வாழ்க்கையும், எலிக்கு எலியின் வாழ்க்கையும் அமைகிறது! மேலும், வாழ்க்
கை பற்றிய கற்பிதங்களும் ஒரு போதும் அசலான வாழ்க்கையைத் தொடு
வதில்லை!
மனிதஜீவியைப் பொறுத்தவரை, தனது பிறப்பின் பரிசாகப் பெற்ற சுயமே
அவனது இறுதிச் சுயமோ, முழுச்சுயமோ அல்ல! மேலும், அவன் தன் பிறப்பி
னால் மனிதனாவதில்லை; மாறாக, தன் விழிப்பினால் மட்டுமே மனிதனாகி
றான்! ஏனெனில், மனிதன் என்பவன் வெறும் உயிர்-ஜீவி மாத்திரமல்ல!
பிரதானமாக அவன் ஒரு உணர்வு- ஜீவியாவான்; அதற்கெனவே உருவான
வன் அவன்! ஒரு உயிர்-ஜீவியாகப் பிறக்கும் அவன் உணர்வின்- ஜீவியாக
விழித்தாக வேண்டும், அதாவது அவன் தன்னைக் கண்டடைந்தாகவேண்
டும்! வெறும் உயிர்-ஜீவியாகத் தொடரும்வரை அவன் மனிதன் அல்ல;
இன்னுமொரு விலங்கே!
பொதுவாக, விலங்குஜீவிகள் தம்மை அறிவதோ, "தாம் இருக்கிறோம்!" என்
பதை, தனது இருப்பை உணர்வதோ இல்லை! அவை உணர்வற்ற வெறும்
உயிர்-இருப்பின் ஜீவிகளே! ஆனால், மனிதனோ தனது இருப்பை உணர்வு
கொள்வதன் வழியாக, உயிர்-இருப்பிலிருந்து, உணர்வு-இருப்பிற்கு உயர்ப
வனாகிறான்! ஆனால், பெரும்பாலான மனிதர்கள் தம் வாழ்-காலத்தில்
உணர்வு-இருப்பிற்கு உயர்வதேயில்லை! அதற்கான விழைவு அவர்களிடம்
துளிர்க்கவில்லை! தன்னைக்கண்டடையும் உள்ளமைந்த உன்னத நோக்கத்
துடனும், அனைத்து உட்பொதிவுகளுடனும் பிறக்கும் மனிதஜீவிகள் தம்
மைக் கண்டடையாதிருப்பது இப்பிரபஞ்சத்தின் பெரும் சோகமே!
மா.கணேசன்/ நெய்வேலி/ 08.01.2017
----------------------------------------------------------
No comments:
Post a Comment