
உங்களுடைய ஒவ்வொரு அசைவையும், பேச்சையும், சொல்லையும், செய்
கையையும் நான் விமர்சிப்பது குறித்து தயவுசெய்து ஆச்சரியப்படவோ,
அதிர்ச்சியடையவோ, வருத்தப்படவோ செய்யாதீர்! ஏனெனில், நான் உங்க
ளிடம் காண்பது உங்களுடைய உணர்வுத் தளத்தைத்தான் -எந்த வார்ப்பில்,
எத்தகைய சிந்தனைக்குழியில் நீங்கள் சிறைப்பட்டிருக்கிறீர் என்பதைத்
தான்! எவ்வாறேனும் உங்களது உணர்வை நீங்கள் மாற்றமுறச் செய்யாத
வரை எனது விமர்சனம் தொடரும்!!
எனது விமர்சனச் சொற்களை உங்களைப்பற்றிய சொந்த விஷயமாக எடுத்
துக்கொள்ளாதீர்! ஏனெனில், உண்மையான உங்களது சுயம் என்பது அப்ப
ழுக்கற்றது, பழியற்றது! ஆனால், நீங்களோ உங்களுடைய அசலான சுயத்
திற்கு வெகுதொலைவில் இருக்கிறீர்! ஆகவே, உங்களுடைய பிரச்சினை
குறித்து ஆக்கபூர்வமாக நீங்கள் ஏதாகிலும் செய்தாக வேண்டும், அதுவும்
உடனடியாக! அதாவது, உண்மையான உங்களைக் கண்டுபிடிக்கும் வகை
யில், உணர்வில் மாற்றம் ஏற்படும் வகையில் கடிதே நீங்கள் செயல்பட்டாக
வேண்டும்!
உங்களது பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கையில் உங்களுக்குத் தெரி
வுச்சுதந்திரம் உள்ளது என நீங்கள் எண்ணுவது தான்! நீங்கள் பல்வேறுபட்ட
கதம்பமான விஷயங்களின் பின்னே செல்கிறீர், அவ்வழியே நீங்கள் மிக
எளிதாக உங்களைத் தொலைத்து விடுகிறீர்! அதாவது உங்கள் கவனம் முடி
வில்லாமல் சிதறடிக்கப்பட்டு நீங்கள் சென்றடைய வேண்டிய இலக்கிற்கு
செல்லவியலாமல் போய்விடுகிறது!
உங்களுடைய பிரதான பிரச்சினை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட கார
ணத்திற்காக, இயற்கையால் 'முன்-தெரிவுசெய்யப்பட்ட', (Pre-selected
or Default condition) அல்லது பரிணாம இயற்கையால், 'முன்-நிரல
மைப்பு செய்யப்பட்ட'(Pre-Programmed),ஒரு 'அடிப்படை' வாழ்க்கையை
வாழ்ந்து வருகிறீர் என்பது தான்! பரிணாம ரீதியாக, வாழ்க்கை என்பது
ஒப்பற்றதொரு இலக்கைக் குறியாகக்கொண்டு பல்வேறு இடை நிலைக்
கட்டங்களைக் கடந்துசெல்லும் ஒரு நெடிய வழிமுறையாகும்! ஆனால், நாம்
அந்த ஆதித் தொடக்க நிலைக்கட்டத்திலேயே ஏனோ தங்கி விட்டோம்!!
அதே நேரத்தில், பரிணாம இயற்கையால் முன்-தெரிவுசெய்யப்பட்ட வாழ்க்
கையில் அடங்கியுள்ள குறைபாடு அல்லது மட்டுப்பாடு என்னவென்றால்,
அது வாழ்க்கைக்கான ஒரு அடிப்படை மாத்திரமே தவிர அதுவே முழு
வாழ்க்கையும் அல்ல!
உண்மையில், "வாழ்க்கை" என்பது, விலங்கு-ஜீவியோ, மனித-ஜீவியோ எவ்
வொரு தனிப்பட்ட ஜீவியின் சொந்தப்பிரச்சினை 'மாத்திரம்'அல்ல! மாறாக,
மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும், வாழ்வு-விருட்சத்தின்(Tree
of Life)பகுதிகளே ஆகும்; அதில் மனிதன் என்பவன் விசேடமானதொரு
பகுதியாவான்! ஏனெனில், அவனது பரிணாமப் பாத்திரம் (Evolutionary
Role) அத்தகையதாகும்! ஒவ்வொரு உயிரினமும் வாழ்வு-விருட்சத்தின்
ஒவ்வொருபகுதியின் பிரத்யேக வாழ்க்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும்
வகையில், பரிணாமப் படிமுறையில் அமைந்துள்ளன! ஆக, அதனதன் படி
நிலையில் இருந்துகொண்டு உயிரினங்கள் ஒட்டு மொத்த வாழ்வு-விருட்சத்
தின் ஒப்பற்ற இலக்கை அடையும்விதமாக,சிறிதோ, பெரிதோ, தத்தம் பணி
யையும், பங்கையும் ஆற்றிடவும், தமக்குரிய பரிணாமப் பாத்திரத்தை வகிக்
கவும் செய்கின்றன! இவ்வகையில் வெவ்வேறு படிநிலையில் இருக்கும்
உயிர்-ஜீவிகளின் வாழ்க்கையும் வெவ்வேறாக மாறுபடுவதாயுள்ளன!
ஆனால், ஒட்டு மொத்த வாழ்வு-விருட்சத்தின் அந்த ஒப்பற்ற இலக்குதான்
என்ன? எவ்வொரு விருட்சத்தின் இலக்கு என்னவோ அதுதான் வாழ்வு விருட்
சத்தின் இலக்கும் ஆகும்! ஆம், கனி கொடுப்பது தான் விருட்சத்தின் அந்த
ஒப்பற்ற இலக்காகும்! கனி என்பது ஒரு விருட்சத்தின் முக்கியத்துவமற்ற
ஏதோவொரு பகுதி அல்ல! அதுவே அவ்விருட்சத்தினை முழுமைப்படுத்தும்
பகுதியாகும்! இன்னும், அதுவே அவ்விருட்சத்தின் முழுமையும், உச்சமும்,
அதன் முடிவும் ஆகும்! இந்த இறுதியான அம்சத்தினால், கனி என்பது விருட்
சத்தின் பகுதியல்ல! ஏனெனில், கனியினுள் இருக்கும் வித்தினுள் விருட்சம்
அடங்கியுள்ளது! ஆம், மனிதனே (ஒவ்வொரு மனிதனுமே) பிரபஞ்சம் எனும்
வாழ்வு-விருட்சத்தின் கனியாவான்! கனியாக மாறக்கூடிய பரிணாம உட்
பொதிவைத் தன்னுள் கொண்டவனாவான்!
ஆனால்,மனிதன் தன் உட்பொதிவின் ஆழத்திலிருந்து தன்னை உணராமல்,
வாழ்க்கைக்கு பதிலளிக்காமல், தன் மேலோட்டிலிருந்து, வெறும் ஒரு உயிர்-
ஜீவியாகத் தன்னைக் கருதிக்கொண்டு வெறுமனே உயிர்-வாழ்ந்து செல்
லும் ஒரு பிராணியாகச் சுருங்கிப்போகிறான்! அதாவது, தன் பரிணாமப்
பொறுப்பை உணராமல்; முழுமை அல்லது, வாழ்வு- விருட்சத்தின், சாதார
ணப் பகுதியாக, சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து உதிர்ந்து (மாண்டு)
போகிறான்!ஆனால், தான் அடையக்கூடிய பரிணாமமுழுமையில் மீண்டும்
மீண்டும் விருட்சத்தை உயிர்ப்பிக்கிறவனாகிறான்!
உங்களுடைய பிரச்சினையை உங்களிடமே நான் எடுத்துச்சொல்லியபோது,
அதாவது, உங்களைப்பற்றி உங்களிடமே புகார் கூறிய போது, உங்களிட
மிருந்து நேர்மறையான யாதொரு பிரதிவினையும்,ஏன்,எவ்வித எதிர்வினை
யும், எவ்வித கலக்கமும், அல்லது ஆச்சரியமும், அதிர்ச்சியும், வருத்தமும்
வெளிப்படவில்லை; வெறும் எதிர்மறையான எதிர்வினையும், அதாவது,
ஏதோ நான் உங்களைத் தவறாகவும், தாறுமாறாகவும் பேசிவிட்டதாக,
காயப்பட்டமனத்தின் அடையாளமான கலக்கமும்,வருத்தமும்,எதிர்ப்புணர்
வும் வெளிப்படுவது தவிர!
ஒருவகையில், நீங்கள் எல்லோருமே அடிப்படைவாதிகளாகவே(Fundament
alists)இருக்கிறீர்! அதாவது, உயிர்-பிழைத்தல் (Survival)எனும் அடிப்
படை- வாழ்க்கையே முழு வாழ்க்கையும் என்பதாக வாழ்ந்து செல்லும் மிக
வும் மட்டுப்பாடானதொரு போக்கில்,பழக்கதோஷத்தில் கட்டுண்டுள்ளீர்!
முன்-தெரிவுசெய்யப்பட்டதொரு வாழ்க்கை (A LIFE OF DEFAULT)என்ப
தென்ன? பெரிதும் பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகிய இயல்
பூக்கிகளால் ( Instincts) செலுத்தப்படும் விலங்கு ஜீவிகளைப் போன்ற
எந்திரத்தனமானதும், தானியங்கித்தனமானதுமான தொரு ஜீவிதத்திற்கு
மேல் வேறு யாதொரு குறிக்கோளும், இலக்குமற்றதொரு வாழ்க்கைக்குப்
பெயர்தான் "முன்-தெரிவுசெய்யப்பட்ட" (Options by Default,அல்லது,
"முன்-நிரலமைப்பு செய்யப்பட்ட" (Pre-Programmed)தொரு வாழ்க்கை!
ஆனால்,இத்தகையவாழ்க்கை எதனால்,அல்லது எவரால் முன்-நிரலமைப்பு
செய்யப்பட்டது, முன்-தெரிவுசெய்யப்பட்டது? ஆம்,பரிணாம இயற்கையால்
முன்-தயாரிக்கப்பட்டது (Pre-Fabricated)தான் இத்தகைய வாழ்க்கை!
ஒரு "உயிர்-ஜீவி" அல்லது, "உடல்-ஜீவி" என்கிற வகையில், நாமும் விலங்கு ஜீவிகளைப்போன்றவர்களே!ஒரு உயிருள்ள,உடலுள்ளஜீவி என்றவகையில்,
பசி, தாகம், பாலுணர்வு ஆகியவற்றுக்கு உட்பட்டவர்களே நாமும்! ஆனால்,
நாம் விலங்கு ஜீவிகளல்ல! இயல்பூக்கிகளின் நச்சரிப்பான கோரிக்கை
களை நிறைவேற்றி, மிக இயல்பானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு!
ஏனெனில், நாம் வெறும் உயிருள்ள உடல்-ஜீவிகளல்ல! மாறாக,நாம் "மனம்"
எனும் அற்புத அம்சத்தையுடைய சிந்திக்கும் திறன் கொண்ட, உணர்வுள்ள
ஜீவிகள் ஆவோம்! இன்னும் துல்லியமாகச்சொன்னால், உடலல்ல, உணர்வு
தான் நாம்!
அதே நேரத்தில், பரிணாம இயற்கையால் முன்-தெரிவுசெய்யப்பட்ட வாழ்க்
கையில் அடங்கியுள்ள குறைபாடு அல்லது மட்டுப்பாடு என்னவென்றால்,
அது வாழ்க்கைக்கான ஒரு அடிப்படை மாத்திரமே தவிர அதுவே முழு
வாழ்க்கையும் அல்ல! உயிரற்ற சடப்பொருளிலிருந்து பண்புரீதியாக வேறா
னதாக எழுந்த உயிர்-ஜீவிகள் உள்-அமைந்த (Built-in) சில இயல்பு
களைக்கொண்டதாக உருவாவது தவிர்க்கமுடியாததும் மிகவும் அடிப்படை
யானதுமாகும்! உயிரற்ற சடப்பொருளுக்கு யாதொரு உள்ளமைந்த தேவை
யும், நோக்கமும் எதுவும் கிடையாது! ஆனால், உயிருள்ள ஜீவிகள் உயிர்ப்பு
டன் இயங்குவதற்கு சக்தி (Energy)தேவைப்படுகிறது! ஆகவே, பசி, தாகம்
ஆகிய இயல்பூக்கிகள் உருவாயின! அடுத்து, மிகத்தொலைவான பரிணாம
இலக்கை அடையும் விதத்தில் நிலைத்திருக்கும் பொருட்டு உயிர்-ஜீவிகள்
தம்மைத்தாமே பிரதியெடுத்துக் கொள்வதற்காக இனவிருத்தியை ஊக்கு
விக்கும் பாலுணர்வு (Sex) எனும் இயல்பூக்கி (Instinct)உருவாயிற்று!
ஆனால், உயிர்-ஜீவிகள் வெறுமனே உயிர்-ஜீவித்திருக்கும் பொருட்டு உரு
வானவையல்ல! அதே நேரத்தில், உயிர்-இருப்பைக்கடந்த மேலான இருப்பு
நிலைகளையும், இன்னும், இறுதியான முழு- இருப்பு நிலை எனும் பரிணாம
இலக்கையும் அடையவேண்டுமானால், அவை உயிர்ப்புடன் இருப்பது அவ
சியமாகும்! ஆகவேதான், மனிதஜீவி உட்பட அனைத்து உயிர்-ஜீவிகளுக்கும் 'உயிர்-பிழைத்திருப்பது' என்பது பொதுவான ஒரு அடிப்படையாக அமைந்
திருக்கிறது! ஆனால், அது எதற்கான, எத்தகைய இலக்கை எட்டுவதற்கான
அடிப்படை என்பதை உய்த்துணர்வது என்பது தான் மனிதவாழ்க்கையின்
குறிக்கோளும், அக்குறிக்கோளை நிறைவேற்றுவது தான் இலக்கும் ஆகும்!
இவ்வாறு 'உயிர்-பிழைத்திருப்பது' என்பது எதற்கான அடிப்படை என்பதை
உணர்ந்தறியாமல் வெறுமனே உயிர்-வாழ்வதுதான் விலங்கு ஜீவிகளின்
மட்டுப்பாடு ஆகும்!
ஆனால், சிந்தனையின்றி, எவ்வாறு நாம் இந்த அடிப்படை வாழ்க்கையுடன்
நம்மைப் பிணைத்துக்கொண்டு, அதிலே மூழ்கிக் காணாமல் போகிறோம்?
பசியை நாம் படைக்கவில்லை, தாகத்தையும் நாம் உருவாக்கவில்லை,
பாலுணர்வையும் நாம் தோற்றுவிக்கவில்லை! ஆனால், அவ்வப்போது, பசி
யையும், தாகத்தையும் போக்கிக்கொள்வதை, பாலுணர்வைத் தணித்துக்
கொள்வதை எவ்வாறு நாம் வாழ்க்கையெனத் தொடர்கிறோம்? உடல் என்
பது ஒரு ஊர்தியைப்போன்றது தான்; எரிபொருள் இன்றி எந்த ஊர்தியும்
ஓடாது! அவ்வாறே உடல் எனும் ஊர்தியும் உணவின்றி இயங்காது!
ஆனால், ஒரு ஊர்தியின் பயன் மற்றும் நோக்கம் வெறுமனே எரிபொருள்
நிரப்பி ஓடவிடுவதற்காகவா? இல்லை! நாம் ஒரு ஊர்தியை அல்லது ஒரு எந்
திரத்தை பல்வேறு நோக்கங்களை,காரியங்களை நிறைவேற்றுவதற்காகப்
பயன் படுத்துகிறோம்! ஆனால், உடல் எனும் ஊர்தியை, எந்திரத்தை ஒரே
ஒரு நோக்கத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம்; அது என்னவென்
றால், உடலுக்கு எரிபொருள் (உணவு) நிரப்புகிறோம்; மீண்டும் மீண்டும்
வயிற்றுக்கு எரிபொருள் (உணவு) நிரப்புவதற்காக உழைக்கிறோம்! உணவு
என்பது ஒரு நிர்ப்பந்தமாக, முதன்மையான விதியாக உள்ளது;அதே வேளை
யில், மிகவும் அடியோட்டமாக இனவிருத்தி (பாலுணர்வு) எனும் ஒரே ஒற்றை
இலக்குத்தான் உயிர்-ஜீவிகளின் மறைமுகமான, மையமான குறிக்கோள்
என்பதாகவும் உள்ளது!
மானுட வாழ்க்கை என்பது உழைப்பது, அதாவது, பொருட்களை உற்பத்தி
செய்தல் ( Produce), உட்கொள்ளுதல் (Consume) என்ற சுற்றுக்கு மேல்
வேறெதுவுமல்ல என ஐயமின்றி கூறிவிடலாம்! அந்த அளவிற்கு மனிதகுலம்
மனிதத்தரத்திற்குக் குறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து செல்கிறது!
உணவின்றி நாம் உயிர்-வாழ முடியாது என்பது ஒரு உண்மையே; ஆனால்,
எதற்காக, எந்த குறிக்கோளை அடைய நாம் உயிர்-வாழ்கிறோம் என்கிற
உண்மையை அறியாமல் எவ்வாறு நாம் அர்த்தமின்றி,இலக்கின்றி வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்? இவ்விஷயம் குறித்து, எனது நண்பர்களிடம் பல
வருடங்களாகப்பேசிவருகிறேன்!என்ன அருமையான,அற்புதமான விஷயம்
என வியந்து கூறிவிட்டு, விடைபெற்றுச் சென்று, மீண்டும் அதே அசம்பாவித
மான அன்றாடத்தின் சுழலில் சிக்கிக்கொண்டுவிடுகின்றனர்!
சிலர், மிகச்சாதுரியமாக, தங்கள் சொந்த விருப்பங்களை,இலட்சியங்களை,
அல்லது சமூகத்தினால் பெரிதாகக் கருதப்படும் மதிப்பீடுகளைத் துரத்திச்
செல்வதை வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர்! இம்மதிப்பீடுகள் யாவும்
செயற்கையானவை, அல்லது கற்பிதமானவை; அவற்றுக்கும் அசலான
வாழ்க்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை!
சிலர், 'இதற்குமேல் என்ன செய்யச்சொல்லுகிறீர்கள்?' 'நீங்களும் தான் ஒரு
அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள்'; 'நீங்களும் அதே வாழ்க்கையைத்தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?' 'மனிதத் தரத்திற்குரிய வாழ்க்கையை
வாழ்வது எப்படி, அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்கின்
றனர்!ஆனால், என்ன செய்யவேண்டுமென அவர்கள் தங்களையே கேட்டுக்
கொள்ளும் பட்சத்தில், அவர்களுடைய கேள்விகள் நியாயமானவையாயும்,
அர்த்தமுள்ளவையாயும் அமையும்!
"மனிதத்தரத்திற்குரிய வாழ்க்கையை வாழ ஒவ்வொருவரும் என்னசெய்ய
வேண்டும்? " ஆம், இக்கேள்வியை ஒவ்வொருவரும் தம்முள் கேட்டுக்
கொண்டு அதற்கான பதிலைக் கண்டுபிடிக்கவேண்டும்! இந்த யோசனை
அப்படியொன்றும் சுவாரசியமான விஷயமாகத் தெரிய வாய்ப்பில்லை
தான்! ஏனெனில், வாழ்க்கை என்றாலே விழுந்துபுரண்டு காரியமாற்றும்
விவகாரமாகத்தான் நாம் பழகியுள்ளோம்!
அதே நேரத்தில், வாழ்க்கை பற்றிய கேள்வி மேற்குறிப்பிட்ட வடிவத்தில்
தான் இருக்கவேண்டும் என்பதில்லை! மிக எளிமையாக, "வாழ்க்கை என்
றால் என்ன?" என்ற வடிவத்திலும் கேட்கலாம்;அல்லது, "ஒரு மனிதஜீவியாக
இருப்பதென்றால் என்ன?" எனவும் கேட்கலாம்! அல்லது, "வாழ்க்கையின்
அர்த்தம் என்ன?" அல்லது, "வாழ்க்கையின் அசலான குறிக்கோள் என்ன?",
"வாழ்க்கைக்கு பிரத்யேக இலக்கு ஏதும் உள்ளதா?" எனவும் கேட்கலாம்!
ஆனால், உங்களுடையதுமட்டுமல்லாமல்,பெரும்பாலான மனிதர்களுடைய
பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கை பற்றிய அடிப்படையான எந்தக்
கேள்வியும் உம்முள் எழுவதேயில்லை என்பதுதான்! நீங்கள் சிந்திக்கிறீர்,
ஆனால், பெரிதும் வாழ்வின் மிக மேலோட்டமான தேவைகளுக்குரிய
பொருட்களையும், விஷயங்களையும் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்; நீங்கள்
ஒருபோதும் வாழ்வின் உட்பொருளான அர்த்தம் பற்றிச்சிந்திப்பதேயில்லை!
ஆகவேதான், "ஆராய்ந்தறியப்படாத வாழ்க்கை வாழ்வதற்கு அருகதை
யற்றது." என சாக்ரடீஸ் கூறினார்! சிந்தனையின் மகத்துவம் யாதெனில்,
சிந்தனை மட்டுமே இயற்கையால் முன்-நிரலமைப்பு செய்யப்பட்ட,அல்லது,
முன்-திட்டமிடப்பட்ட, முன்-தெரிவு செய்யப்பட்ட பிராணித்தனமான உடல்-
மைய வாழ்க்கையிலிருந்து உங்களை விடுவித்து, வாழ்வின் உண்மையான
இலக்கு நோக்கிச்செலுத்த உதவிடும்!
சிந்தனை அல்லது சிந்திக்கும் மனத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்
பது "உணர்வு" (Consciousness)ஆகும்! தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்
றைப் பற்றியும் சிந்திக்கும், அறிய விரும்பும் மனிதன், தான் முக்கியமாகச்
சிந்திக்கவேண்டிய, தனது அடிப்படையைப்பற்றி, உணர்வைப்பற்றி மட்டும்
சிந்திப்பதில்லை!உண்மையில், 'தான்'எத்தகைய மெய்ம்மை என்பதை அறி
யாமல், மனிதன் மனிதனாகவும் முடியாது; மனித ஜீவிக்குரிய வாழ்க்கை
யையும் வாழ முடியாது!
நீங்கள் முக்கியம் எனக் கருதும் ஒரு செயலை, அல்லது ஒரு விஷயத்தைச்
செய்ய இறங்கும்போது, தற்காலிகமாக, பிறவிஷயங்கள் அனைத்தையும்
ஒதுக்கி வைத்துவிடுகிறீர்களல்லவா? ஆனால், அனைத்தையும்விட அதி
முக்கியமான வாழ்க்கை பற்றிய புரிதல், அர்த்தம், குறிக்கோள், இலக்கு,
உண்மை ஆகியவற்றை அறியும் விஷயம் வரும்போது, பிற விஷயங்கள்
அனைத்தையும் நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு முழுமூச்சாக இறங்கிச்
செயல்படத்தயங்குவதும்,வாளாவிருப்பதும் ஏன்? வெறுமனே உணவு, உடை,
உடை, உறையுள், உறவுகள் ஆகியவற்றால் குறுக்கப்பட்ட குறுகிய வட்டத்
திற்குள் வளையவருவது என்பது எவ்வாறு மனிதத்தரத்துக்குரிய வாழ்க்கை
யாக முடியும்?
உண்மையில், நீங்கள் வாழ்ந்து வருவது சற்றே மாறுபட்ட ஒரு எலியின்
வாழ்க்கையைத்தான்! மேலும், எவ்வகையிலும், உங்களது வாழ்க்கை ஒரு
எலியின் வாழ்க்கையைவிட மேலானதோ, சிறப்பானதோ அல்ல! அதாவது,
அடிப்படையில், எலிகளும் உயிர்-பிழைத்துச் செல்கின்றன; மனிதர்களும்
உயிர்-பிழைத்துச் செல்கின்றனர்! எலிகள் தமது உயிர்-பிழைத்தலைச்
சாதாரணமாகவும், மிக எளிமையாகவும் நடத்திச் செல்கின்றன; மனிதர்
களோ, அதே உயிர்-பிழைத்தலை மிகச்சிக்கலான வகையிலும், செயற்கை
யான அலங்கார - ஆடம்பரங்களைப் புகுத்தியும் நடத்திச் செல்கின்றனர்
என்பது மட்டுமே ஒரு வித்தியாசம்!
இன்னும் சொல்லப்போனால், எலிகள், மனிதர்களைப்போல, தமது உயிர்-
பிழைத்தல் குறித்து எவ்வித பிரமைகளையும், பிறழ்ச்சியான கற்பிதங்க
ளையும், வீண்- மதிப்பீடுகளையும் கொண்டிருப்பதில்லை! பொதுவாக
விலங்கு ஜீவிகள் யாதொரு மதிப்பீட்டையும், போலியான உன்னதத்தையும்
கற்பிக்காமலேயே உன்னதமாக உயிர்-பிழைத்துச் செல்கின்றன! ஆனால்,
மனிதர்களோ, தமக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து உன்னதத்திற்கு
உயராமல், தமக்களிக்கப்பட்ட அடிப்படையை துஷ்பிரயோகம் செய்து தமக்
கும், பிற உயிரினங்களுக்கும், ஒட்டு மொத்த பூமிக்கிரகத்திற்கும் கேட்டை
யும், அழிவையும் பரிசாகத் தந்துவருகின்றனர்!
உயிர்-பிழைத்தலின் உன்னதம், உயிர்-பிழைத்தலின் உண்மையான குறிக்
கோளை அறிந்து நிறைவேற்றுவதிலேயே அடங்கியுள்ளது!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14.01.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment