Tuesday, 21 November 2017

மக்களின் தேர்தல் அறிக்கை!



   ஒருவருடைய பசி இன்னொருவருடைய பசியைவிட அதிக
   மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக இருக்க முடியுமா?


தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நாம்
அறிவோம்! ஒரு மாறுதலுக்காக நாம் ஏன் "மக்களின் தேர்தல் அறிக்கை"யை,
அதாவது, நம்முடைய கோரிக்கைகளை ஒரு அறிக்கையாகத் தயாரித்து, 
வாக்கு சேகரிக்க வருகின்ற போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் கொடுத்து
எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதானால், உங்கள்
கட்சியைத்தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு உடன்பாடே என்று ஏன் சொல்லக்
கூடாது? எந்தக் கட்சி நம்முடைய "தேர்தல் அறிக்கை"யை ஏற்கிறதோ அந்தக்
கட்சியை நாம் தேர்ந்தெடுக்கலாமே! ......

அரசியல் கட்சிகளின் வழக்கமான ஒரு தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேனும் பாலும் தெருவில் ஆறாய் ஓடும்!
வறுமையை நாங்கள் முற்றாக ஒழித்துவிடுவோம்! வேலையில்லாத் 
திண்டாட்டத்தை அடியோடு அழித்து விடுவோம்! இடிந்து விழும் பள்ளிக்கட்ட
டங்களை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கட்டடங்களைக் கட்டுவோம்! கிராமத்
துச் சாலைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றுவோம்! சாலை ஓரங்களில்
நிழல் தரும் மரங்களை நடுவோம்! குடிநீர்ப்பஞ்சம் என்றால் என்ன என்று
கேட்கும்படி செய்வோம்! ஓட்டைப் பாலங்களை ஓரங்கட்டிவிட்டு அவ்விடங்
களில் புதிய பாலங்களைக் கட்டுவோம்! தலை நகரில் சாலைகளில் மழைநீர்
ஆறாய் ஓடுவதால் எல்லோருக்கும் மிதவை வீடுகளை வழங்குவோம்! அரசுப்
பேருந்துகளுக்குப் பதிலாக அரசுப் படகுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்து
வோம்! மீனவர் பிரச்சினையை உடனே தீர்க்குமாறு மத்திய அரசுக்கு கடிதம்
மேல் கடிதம் எழுதி கின்னஸ் சாதனை புரிவோம்! கடலில் எல்லை தாண்டும்
பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக எல்லைக்கோடுகளை வரைவோம்! இல்லை
யெனில், எந்தப் பிரச்சினையும் இன்றி  சொகுசாக மீன்பிடிப்பதற்கு வசதியாக
மெரினா கடற்கரை ஓரமாக புதிய கடல்களை உருவாக்குவோம்!  என்பன
போன்ற சாத்தியமற்ற அம்சங்களைக்கொண்ட அதே பழைய பல்லவி தானே!

ஆனால், "தேர்தல் அறிக்கை" என்பது தேர்தல் கால அறிக்கை தானே தவிர,
அவை வெற்று வாக்குறுதிகளே தவிர அவை நிறைவேற்றப்படுவதற்கானவை
யல்ல! ஆட்சிக்கு வந்த எவ்வொரு கட்சியும், பலமுறை மீண்டும் மீண்டும்
ஆட்சியைப் பிடித்த கட்சிகளும்கூட தமது தேர்தல் அறிக்கையை முறையாக
நிறைவேற்றியதில்லை! அவ்வாறு நிறைவேற்றினால், அடுத்தடுத்த முறை
தேர்தல் அறிக்கையை வெளியிட இயலாதல்லவா! அதாவது மக்களின் அடிப்
படைப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடும் பட்சத்தில், அடுத்தடுத்து
தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்; அரசியல்வாதி
களுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பதால் தானோ என்னவோ
ஆட்சியைப் பிடிக்கும் எந்தக்கட்சியும் தமது தேர்தல் வாக்குறுதிகளை ஒரு
போதும் நிறைவேற்றுவதில்லை போலும்!

வழக்கமான 'சாக்கடை' அரசியலுக்குப் பழகிப்போன நம்மில் பலருக்கு இந்த
"மக்களின் தேர்தல் அறிக்கை" என்பது ஒரு கிறுக்குத்தனமான, நடைமுறைச்
சாத்தியமற்ற  யோசனை என்பதாகத் தோன்றக்கூடும்! அந்த அளவிற்கு நாம்
மிகவும் தவறான, தலைகீழான அரசியல் நடைமுறைக்கு பழக்கப்படுத்தப்
பட்டுள்ளோம்! மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்ற
முடியாது என்றால், பிறகு "மக்களாட்சி", "ஜனநாயகம்" என்பதற்கான அர்த்தம்
தான் என்ன? அரசியல்வாதிகளைத் திருத்தமுடியாது என்று எவரேனும் சொல்
வாரெனில், திருத்தப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; உண்மை
யில் திருந்த வேண்டியவர்கள் நாம் தான்! நம்மை நாமே திருத்திக் கொள்ள
வேண்டும் என்பதுதான் சரியான பார்வை ஆகும்!

உண்மையில், பிரச்சினை, பலவீனம், குறைபாடு யாவும் மக்களாகிய நம்மிடம்
தான் உள்ளன! நன்றாகக் கவனித்தோமெனில், "மக்களால், நம்மால், நடப்பு
அரசியல் நடைமுறைகளை மாற்ற முடியாது!" என்பது எதைச் சுட்டுகிறது
என்றால், நாம் மக்களாக இல்லாமல் வெறும் உதிரிகளாக, உதவியற்ற தனித்
தனி நபர்களாக பிரிந்து கிடக்கிறோம்! அரசியல்வாதிகள் நம்மைப் பார்த்துப்
பேசும்போது, "மக்களே" என்று ஒருமையில் தான் குறிப்பிடுகிறார்கள்! ஆனால்,
நாமோ, "மக்களாக" ஒருமையில் (அதாவது கட்டுக்கோப்பாக) இல்லை; மாறாக,
நாம் பன்மையில், உதிரிகளாக நிற்கிறோம்! ஏனெனில், நமக்கிடையே எவ்வித
ஒற்றுமையுணர்வும், உறுதியான பிணைப்பும், மனம் ஒருநிலைப்பட்டதன்மை
யும் இல்லை! ஆகவே, "ஓநாயைப் பொறுத்தவரை எத்தனை செம்மறியாடுகள் 
இருக்கின்றன என்பது ஒரு பிரச்சினை யல்ல!"

அரசியல் ஆய்வறிஞர் கெல்ஸென் (Kelsen 1988: 29) அவர்கள், " தனித்
தனியே உதிரியாக நிற்கும் தனிநபர்களால் "பொது ஒப்புதலை" உருவாக்கும்
விஷயத்தில் யாதொரு விளைவையும் ஏற்படுத்த இயலாது; ஏனென்றால்,
தனி நபர்கள் கட்சிகளின் வாயிலாகத்தான் அரசியல் ரீதியான இருப்பைப்
பெறுகிறார்கள்." என்கிறார். ஆனால், கெல்ஸெனின் கூற்று பொருத்தமற்றது.
ஏனென்றால், எவ்வொரு அரசியல் கட்சியும் படிமுறை அமைப்பிலானதே;
கட்சிக்குள்ளும் தனிநபர்கள் (தொண்டர்கள்) குரலற்றவர்களே! கட்சித்தலைமை
யின் முடிவை குலவையிடமட்டுமே தொண்டர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்!
உள்கட்சி ஜனநாயகம் என்பது வெறும் கானல்நீரே ஆகும்! ஜனநாயகம் என்பது
கட்சிகளுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி உலகில் எங்கேயும் இல்லை!

மேலும், கட்சிகள் மக்களை(சமூகத்தை) இனவாரியாக, சாதிவாரியாக,அல்லது
'கொள்கை' என்ற பெயரில் துண்டாடுவதையே செய்கின்றன! மக்களைக் கட்சி
பிரிப்பதன் வாயிலாக அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தந்திரம் நிறைவேறு
கிறது! இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்கள்
மனித இனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்கள் ஆகும்! ஏனெனில்,
இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும் பண்பை வளரவிடாமல்
தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன! ஒருவருடைய பசி இன்
னொருவருடைய பசியைவிட அதிக மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக
இருக்க முடியும் என்றால், நாம் இனம், சாதி, மதம், இத்யாதி பாகுபாடுகளை
ஏற்றுக்கொள்ளலாம்! பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்தசாதியும் இல்லை,
மதமும் இல்லை! ஆகவே, மக்களின் "பொதுவான அடிப்படைப் பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சமாகும்!

ஆக,"மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்றமுடியாது!"
என்ற வாதம் மொன்னையான பொய்மையாகும்! அப்படியே நம்மால், அரசிய
லில் எவ்வொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது என்பதுதான் முடிவான
நிலையெனில், நமக்கு "வாழ்க்கை" என்பதே இல்லை என்றாவிடும்! அதாவது
தற்போது நாம் அனுபவித்துவரும் அனைத்து சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்
வுகளும், அநீதிகளும், அடிப்படை வாழ்வாதார நலிவும், யாவும் தொடர்ந்திடும்!

அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியைவிட இன்னொரு அரசியல் கட்சி
சிறந்ததாகவோ, ஒப்பற்றதாகவோ இருக்க வாய்ப்பில்லை! ஒரு கட்சியின்
கொள்கைகளைவிட இன்னொரு கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு பெரிதாக
சேவை செய்துவிடப் போவதில்லை! மக்களின் வாழ்க்கைத் தேவைகளைவிட
வேறு தனித்துவமான கொள்கைகள் எதுவும் தேவையா என்ன? அத்தேவை
களை சரிவர நிறைவேற்றுவதில் ஏன் இத்தனை சுணக்கம்? அலட்சியம்?

முக்கியமாக, மக்கள் என்போர் பிச்சைக்காரர்களோ, சும்மாயிருக்கும் சேமப்
படையோ அல்ல! மக்கள் என்போர் உழைப்பாளிகள்! ஒட்டுமொத்தப் பொருளா
தாரத்தின் ஆதாரமே மக்கள் தான்! அனைத்துப் பொருட்களும், பண்டங்களும்,
செல்வ வளங்களும் மக்களின் உடலுழைப்பு, மற்றும் மூளை உழைப்பின்
விளைபொருட்களே! மக்கள் இல்லாமல் நாடு, நகரம், மாடமாளிகைகள், 
குண்டூசி முதல் செயற்கைக்கோள்கள்வரை எதுவும் இல்லை! ஒட்டு மொத்தச்
சமூகத்தின் அனைத்துத்தேவைகளுக்கும் உரிய பொருட்களை மக்கள் தான்
உற்பத்தி செய்து தருகிறார்கள். அரசியல்வாதிகள் சமூகத் தேவைகளுக்குரிய
எப்பொருளையும், தம் பங்கிற்கு உருவாக்குவதோ, உற்பத்தி செய்து தருவதோ
இல்லை - வரிச்சுமைகளையும், தீராத வறுமையையும் தவிர!

உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி, தனது போக்குவரத்
துக்கான சாலைகளையும், பாலங்களையும் தானே கட்டிக்கொள்ள முடியாது
என்பதால் தான் அவன் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கிறான். தன்
தேவைகளுக்குரிய அனைத்துப்பொருட்களையும் அவனால் உருவாக்கிக்
கொள்ள முடிந்தால் அவனுக்கு அரசும் தேவையில்லை, அரசியலும், அரசியல்
வாதிகளும் தேவையில்லை! மக்கள் இலவசங்களுக்காக கையேந்திக்கொண்
டிருப்பவர்கள் அல்ல! அவ்வாறான நிலைமைக்கு மக்களைத் தள்ளியது ஆட்சி
யதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் செய்த நயவஞ்சக சூழ்ச்சி
யேயாகும்! இலவசங்கள் எனும் தூண்டில் புழுக்களைக் காட்டி, மக்களின்
நலத்திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய வரிப்பணத்தை கோடிக்கோடி
யாகக் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கும் அரசியல்வாதி
கள் தான் நம்முடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பிரதிநிதிகள்!
இத்தகைய ஜனநாயகத்திற்குப் பெயர்தான் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்!"

ஆனால், மக்கள் ஏன் இன்னும் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பிக்கொண்
டும், ஏமாந்துகொண்டும் இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களுக்குத் தங்கள்
வலிமை எத்தகையதென்று தெரியவில்லை; மக்கள் தங்களின் உண்மையான
வலிமை மற்றும் ஆற்றலைத்தெரிந்து கொள்ள விடாமல் அரசியல்வாதிகள்
மக்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி பகைமைத் தீயை வளர்த்து
அதில் குளிர்காய்ந்து வருகிறார்கள்! எல்லா வளங்களையும் உருவாக்கித்தரும்
மக்களுக்குத் தமது ஒன்றுபட்ட சக்தியின் மகிமை தெரியாமல் தமக்கிடையே
பூசல் கொண்டு பிளவு பட்டு நிற்பதால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக்
கொண்டாட்டம்!" என்பது போல அரசியல்வாதிகள் நடுவே புகுந்து தங்களது
குரங்குப்பஞ்சாயத்தை அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றி மக்களை ஏய்த்து
மேய்த்து ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள்!

உண்மையில், மக்கள் தான் உண்மையான தலைவர்கள், அவர்களுக்கு வேறு
மதத்தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ, இனத்தலைவர்களோ, எவரும்
தேவையில்லை! மக்களை எவரும் வழிநடத்தவும் தேவையில்லை; வழிநடத்
தப்படுவதற்கு அவர்கள் ஆடுகளோ, மாடுகளோ அல்ல! உழைக்கும் மக்கள்
தம் இயல்பிலேயே சுதந்திரமானவர்கள்! மக்கள் தம் சகமக்களுடன் பரஸ்பரம்
பொருளியல் ரீதியாகச் சார்ந்திருப்பது தவிர்க்க இயலாதது!  மக்கள் இணக்க
மாகக் கூடிவாழ்வதன் மூலமும், சுமுகமான பண்டமாற்றுப் பரிவர்த்தனையின்
மூலமும் தங்களுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு
சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியும்! மக்களுக்கிடையே எவ்வகையிலும்
யாதொரு இடைத்தரகரும், நாட்டாண்மையும், அரசரும், அமைச்சரும் எவரும்
தேவையில்லை!

தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை மக்கள் தெளிவாக உணர்வார்களேயா
னால், அவர்கள் இயற்கை, உழைப்பு, சகமக்கள் ஆகியவற்றைத் தவிர வேறு
எதற்கும், எவருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்ல! மேலும், மக்கள் என்போரே
ஒரு கட்சி தான், ஆகவே மக்களுக்குத் தனியே அரசியல் கட்சிகள் எதுவும்
தேவையில்லை! மக்களின் நலன்களையும், தேவைகளையும் பிரதிநிதித்துவம்
செய்வது என்பது தேவையா என்பது குறித்து நாம் எப்போதாவது சிந்தித்திருக்
கிறோமா? ஒருவரது பசியை வேரொருவர் பிரதிநிதித்துவம் செய்து உணவைப்
பெறுவதற்கான திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்திய பிறகுதான்
ஒருவர் தனக்கான உணவைப் பெறமுடியும் என்பதாயிருந்தால் அவர் உயிர்
வாழ முடியுமா? அவர் பட்டினியால் செத்துத்தான் போவார்!

பிறந்த குழந்தை கூட தனது பசியை தனது அழுகையின் மூலம் தெரிவித்து
தன்னைத் தானே பிரதிநிதித்துவம் செய்துகொள்வதில்லையா! ஆக, வளர்ந்த
மனிதர்களாகிய நாம் நம்முடைய தேவைகளையும், நலன்களையும் நாமே
நிறைவேற்றிக்கொள்வதை விடுத்து நாம் ஏன் அரசியல்வாதிகளை நமக்கான
பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நாமே ஏன் அரசியல் எனும் பொறி
யில் சிக்கித் தவிக்கவேண்டும்? அரசியல்வாதிகள் என்போர் யார்? அவர்கள்
எங்கிருந்து முளைத்தார்கள், அவர்கள் என்ன, வானத்திலிருந்து இறங்கி வந்த
வர்களா? நம்முடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நம் பிரச்
சினைகளை எடுத்துக்கொண்டு எங்கே எவரிடம்போய் முறையிட்டுத் தீர்க்கப்
போகிறார்கள்?

உண்மையில், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்பது என்ன? அவை மக்களின்
பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்ப்பதற்கான நீதிமான்களின் மன்றங்
களா என்ன? இல்லவேயில்லை! மக்களால், நம்மால், தேர்ந்தெடுக்கப்பட்ட
நம்முடைய பிரதிநிதிகளின் மன்றங்களே அவைகள்! அதாவது, நம்முடைய
பிரதிநிதிகளும் அவர்களே, நமக்குப் படியளப்பவர்களும், நீதி பரிபாலனம் செய்
பவர்களும் அவர்களேயாவர்! அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள் என்போர்
உண்மையிலேயே நம்முடைய, நமக்கான பிரதிநிதிகளே என்றால், நம்முடைய
பிரச்சினைகள், அவலங்கள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும் அல்லவா? இவ்விடத்
தில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும், அரசியல் கட்சிகளும்,தலைவர்களும்
மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடுமையாகத் தங்களுக்குள் போட்டிபோடு
கின்றனரா, அல்லது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றித் தங்களது சொந்த நலன்
களைச் சாதித்துக்கொள்வதற்காகப் போட்டியிடுகின்றனரா என்பதை!

உண்மையில்,அரசியல்வாதிகள் நமக்கான பிரதிநிதிகளா, அல்லது ஜனநாயகம்
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு, நம்மை பகடைக்காய்களாகப் பயன்
படுத்திக்கொண்டு, பெரு முதலாளிகளுடன் பேரம் பேசிக்கொண்டு தங்களை
வளர்த்துக்கொள்ளும் இடைத்தரகர்களா, (இன்னும் துல்லியமாகச்சொன்னால்)
இரட்டை உளவாளிகளா என்றால், இரண்டாவது குறிப்பிடப்பட்ட அம்சமே
அவர்களுக்கு மிகவும் பொருந்தும் எனலாம்! ஏனெனில், வெளிப்படையாகத்
தெரிகின்ற அரசாங்கத்தை ஒரு மறைப்பாகக் கொண்டு அதற்குப்பின்னால்
திரை மறைவிலிருந்து ஆட்சிபுரியும் கண்ணுக்குத்தெரியாத அரசாங்கம் ஒன்று
உள்ளது என கார்ல் மார்க்ஸிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி, தியோடர் ரூஸ்
வெல்ட், சமூகவியலாளர் சார்ல்ஸ் ரைட் மில்ஸ் (C. Wright Mills)வரை
குறிப்பிட்டுள்ளனர்!

உண்மையில், அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்துக்கும், கயமைத்தனத்
துக்கும் அவர்கள் மட்டுமே காரணமல்ல; அவர்கள் அதீதமான சுய-நலன்
கருதிகள் என்பதற்கான பொறுப்பைத்தவிர! .. ..  . . . ...

1956-ல் அமெரிக்க சமூகவியல் ஆய்வறிஞர், சார்ல்ஸ் ரைட் மில்ஸ், "ஆதிக்க
மேட்டுக்குடி" (The Power Elite) எனும் நூலை எழுதினார்; அதில்,
"அமெரிக்க ஜனநாயகம் என்பது பெருநிறுவன முதலாளிகள், உயர் இராணுவ
அதிகாரிகள், மற்றும், அரசியல் மேட்டுக்குடியினர் ஆகியோரைக்கொண்ட
ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சிக்கான ஒரு மறைப்புத்திரையே!"
என்றார். அதே நேரத்தில், அம்மேட்டுக்குடிகளின் ஆட்சியை சமூக இயக்கங்
களைக் கொண்டு முறியடித்திடமுடியும் என்று மில்ஸ் நம்பினார். ஆனால்,
ஆதிக்க மேட்டுக்குடிகளை அம்பலப்படுத்துவதன் மூலமும், அதன் சித்தாந்
தத்தை மதிப்பற்றதாகச் செய்வதன் மூலமும் மட்டுமே அது சாத்தியமாகும்
என்பதாக மில்ஸ் கருதினார்! சமூகவியலாளர் மில்ஸ்-ன் இக்கருத்துக்கள்
அமெரிக்க ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகம் எனும் போர்வையில்
எங்கேயெல்லாம் ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சி  நிலவுகிறதோ
அந்நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்!

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே கார்ல் மார்க்ஸ் கூறினார், அதாவது, "பிரதி
நிதித்துவ ஜனநாயகம் - அரசியல் சட்டங்கள், தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி
ஆகியன உள்ளிட்ட முறையான (வெளிப்படையான) அரசியல் பொறியமைப்
புக்களை உருவாக்குவது என்பதே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
மக்களுக்குக் கடமைப் பட்டவர்களாக இருப்பர் என்பதற்கான உத்திரவாதமாக
இருக்காது" என்றார்!

ஆம், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வருகிறார்கள்,
சந்திக்கிறார்கள், வாக்குகளைப் பெறுவதற்காக தாராளமாக வாக்குறுதிகளை
அள்ளி வழங்குகிறார்கள்! தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியிலமர்ந்த பிறகு,
அவர்கள் திடீரென முற்றிலும் வேறொரு இனமாக, தாம் வேறு, மக்கள் வேறு,
என்பதாக, அந்நியர்களாக மாறிவிடுகிறார்கள்! மக்களும் இத்தகைய ஏமாற்று
வித்தைக்குப் பழகிப்போனவர்களாக தம்தம் பிழைப்பைப் பார்க்கச் சென்றுவிடு
கின்றனர்!

அண்டோனியோ கிராம்ஸி,  20-ம் நூற்றாண்டின் ஆரம்ப கால இத்தாலிய
சமூகச் சிந்தனையாளர், முஸோலினியின் பாஸிச இத்தாலியச் சிறையில்
இருந்து எழுதினார், மக்கள் எவ்வளவுதான் துன்பப்பட்டாலும், நடப்பிலிருக்கும்
ஆட்சியின் சித்தாந்த மேலாண்மையை (hegemony) எதிர்ப்பின்றி ஏற்றுக்
கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணற்ற பல இத்தாலி
யர்கள் ஏன் முஸோலியின் அடக்குமுறை காரணத்திற்காக திரண்டுசென்றனர்
என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என கடுமையாகச் சிந்தித்தார் கிராம்ஸி!
காலதேச வர்த்தமானம் கடந்து எங்கும் இதே கதைதான் நிகழ்ந்தேறுகிறது!
சாதாரண மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் யாவரும் வரலாறு
முழுவதும் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும்தான் வந்திருக்கிறார்கள்! ஆளும்
அரசின் சித்தாந்த மேலாண்மை என்பது மக்களை மூளைச்சலவை செய்யும்
வகையில் திட்டமிட்டு இயற்றப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்
படுகிறது! அரசு இழைக்கும் எல்லாக் கொடுமைகளையும், அவலங்களையும்,
அநீதிகளையும், வரிச்சுமைகளையும், தாங்கிக்கொள்ளும் மக்களின் அலாதி
யான சகிப்புத்தன்மை தான் போலி-ஜனநாயகத்தின் வெற்றியாகும்!

அது ஒரு நிலாக்காலம் போல, அது ஒரு தேர்தல் காலம்! கா.கா.கூ.கி கட்சியி
னர் தங்கள் தலைவர், மக்களின் பாதுகாவலர், மக்கள் நலப் போராளி, ஓட்டுக்
கேட்க வருகிறார் என்பதை அறிவித்துக்கொண்டே சாரி சாரியாக பல்வேறு
ஊர்திகளின் அணிவகுப்புடன் ஆரவாரமாக அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்!
ஆனால், ஒரு தெருவிலும், ஒருவீட்டிலிருந்தும், ஒருவர் கூட எட்டிக்கூடப்
பார்க்கவில்லை! என்ன, திடீரென்று எல்லோரும் ஊரைக்காலி செய்துவிட்டு
எங்கோ போய்விட்டனரோ என்ற சந்தேகம் எழ, அந்த நேரம் ஒலி பெருக்கி
வழியே ஒரு அறிவிப்பு கேட்டது! ஊர் மக்கள் யாவரும் தண்ணீர் இல்லாத
வரண்ட ஏரியின் நடுவே கா.கா.கூ.கி கட்சியின் தலைவரை சந்திப்பதற்காக
காத்திருப்பதாக அந்த ஒலி பெருக்கி சொல்லிற்று! சிறிது குழப்பத்துடனும்,
சிறிது அச்சத்துடனும் கா.கா.கூ.கி கட்சியினர் தங்களது தலைவருடன் ஊர்தி
களை தொலைவிலேயே நிறுத்திவிட்டு ஏரிக்குள் சென்றனர்! ஊர்மக்கள்
அனைவரும் சலனமின்றி அமைதியாக ஏரியின் நடுவே அமர்ந்திருந்தனர்!
ஒரு சிறுவன் வெள்ளையும்-சள்ளையுமாக கரைவேட்டி சகிதம் இருப்பவர்தான்
தலைவர் என்று இனம் கண்டு அவரிடம் சென்று ஒரு துண்டு காகிதத்தை 
அளித்தான்! அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது! அதற்கு ஒரு தலைப்பும்
கொடுக்கப்பட்டிருந்தது : "மக்களின் தேர்தல் அறிக்கை!"

மா.கணேசன்/ நெய்வேலி/ 16-11-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...