
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய
ஒருவனாலும் கூடாது: ஒருவனைப்பகைத்து
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது
ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்
பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது."
- இயேசு (மத்தேயு 6:24)
இந்த வசனம் சாதாரணமாக பணியிடத்தில், அலுவலகத்தில் ஒருவரது
அதிகாரி, மற்றும் மேலதிகாரிகள் குறித்த விஷயத்திற்கும் பொருந்தும்.
பிரத்யேகமாக வாழ்க்கை என்று வரும்போது மனித ஜீவிகளாகிய நாம்
யாருக்கு, எதற்கு ஊழியம் செய்திடவேண்டும், சேவை புரிந்திட வேண்
டும் என்பதை அறிவுறுத்தும் விஷயத்திலும் இவ்வசனம் பொருந்தும்.
இயேசுவின் தனிச்சிறப்புமிக்க வாழ்க்கைப்பார்வை இந்த வசனத்தில்
மிக எளிமையாக வெளிப்படுவதாயுள்ளது. இயேசு உண்மையில் ஒரு
வன் இரண்டு எஜமான்களுக்குக்கீழ்பணிபுரிவதால் எழும் நடைமுறைச்
சிக்கலைப்பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடவில்லை. மாறாக, "இரண்டு
எஜமான்கள்" எனும் உதாரணத்தின் முலமாக அவர் மிக ஆழமான செய்
தியையே குறிப்பிடுகிறார். ஆம், இரண்டு எஜமான்களுக்கு ஒருவன்
ஊழியம் செய்யமுடியாது என்பதைப்போல தேவனுக்கும், உலகப்பொரு
ளுக்கும் ஊழியம்செய்யமுடியாது என்பதையே அவர் நமக்குத்தெரிவிக்
கிறார். 'ஆன்மீகமா?' 'லௌகீகமா?' என்கிறபிரச்சினையைத்தான் இந்த
வசனத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
எண்ணற்ற பல ஆன்மீக மார்க்கங்களும், நவீன கால குருமார்களும்
குறிப்பாக கிறித்துவமதப் பிரச்சாரகர்களும் இப்பிரச்சினைக்கு மிகவும்
மழுப்பலான பதிலையே தந்துள்ளனர்! அதாவது ஒரு பறவை பறப்ப
தற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும் என்பதைப்போல, மனிதன் வாழ்
வதற்கு லௌகீகம், ஆன்மீகம் இரண்டும் வேண்டும் என்று பசப்புகின்ற
னர். ஆனால் இயேசு இப்பிரச்சினையை ஒரே வெட்டில்தீர்த்துவிடுகிறார்!
பெரும்பாலான மனிதர்களுக்கு குறிப்பாக யாதொரு சிந்தனையும்,
உணர்வும் அற்ற மனிதர்களுக்கு லௌகீகமே மொத்த வாழ்க்கையாக,
வாழ்வின் இலக்காக இருக்கிறது. இத்தகைய மனித சமூகத்திடம் உருப்
படியான விஷயங்களை எடுத்துச் சொல்வதும், புரியவைப்பதும் மிகக்
கடினமே! இந்த சிந்தனையற்ற திரளிலிருந்து அநேகர் ஆன்மீகத்தை
நோக்கிப்படையெடுக்கின்றனர். தங்களது அர்த்தமற்ற அன்றாடஜீவிதத்
தின் வெறுமையிலிருந்து தப்பித்து சிறிது ஓய்வெடுக்கும்விதமாகவே
இவர்களது ஆன்மீக ஈடுபாடு அமைந்துள்ளது.
இவர்களுக்கு யாதொரு மெய்ம்மை நாட்டமோ, உண்மை தேடலோ,அர்த்
தம் பற்றிய கேள்வியோ, வாழ்க்கையின் அசலான நோக்கம் குறித்த
விசாரமோ எதுவும் கிடையாது! இவர்களது ஆன்மீகப் பயிற்சிகள், ஈடு
பாடுகள் யாவும் வெறும் பாவனை ரீதியானதும், சடங்கு பூர்வமானதுமே
யாகும்!
இவர்களது ஆன்மீக நாட்டம், "உணரப்பட்ட தேவை"யின் வெளிப்பாடாக
விளைவாக அல்லாமல், "சொல்லப்பட்ட தேவை"யின் அனுஷ்டானங்
களாக இருப்பதால் அது மிகவும் மேம்போக்கானது, பலனற்றது என்று
சொல்லத்தேவையில்லை! ஏனெனில், இவர்களது இதயங்களுக்கு மிக
வும் நெருக்கமானதும், அவர்களுடைய மாபெரும் பிடிப்பும் லௌகீகமே
என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்! இந்த பாசாங்குக்காரர்களுக்
கும், துளியும் ஆன்மீகம் பற்றி அறியாத மாபெரும் கும்பலுக்கும் பெரிய
வித்தியாசம் ஏதுமில்லை!
ஆன்மீக நாட்டத்தைப் பொறுத்தவரை, மனிதர்களில் மூன்று விதமான
வர்கள் உள்ளனர். அதாவது, மிகப்பெரும்பான்மையானவர்களுக்கு ஆன்
மீக வாசணை என்பது அறவே கிடையாது! இரண்டாவது வகையினர்,
ஆன்மீகம் பற்றிக் கேள்விப் பட்டுள்ளவர்கள்; இவர்கள் தேன் கூட்டில்
தேன் உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பவர்கள். ஆனால், மரத்தின்
மீது ஏறி தேனீக்களிடம் கொட்டுப்படாமல், அவைகளை விரட்டியடித்து
பக்குவமாக தேனடையை எடுத்து வந்து அதைப்பிழிந்து தேனைஎடுத்து
உண்டு மகிழாமல் வெறுமனே தேனைப்பற்றிச் சிலாகித்துக் கொண்டி
ருப்பர்!
மூன்றாவது வகையினர், இவர்கள் மிகச்சிலரே, விரல்விட்டு எண்ணி
விடக்கூடிய எண்ணிக்கையிலான இவர்கள் மட்டுமே ஆன்மீகத்தின்
தேவையை நேரடியாகத் தம்முள்ளிருந்தே உணர்ந்தவர்களாகவும், அது
குறித்து பசி தாகம் கொண்டவர்களாகவும், தீவிரத்தேடலில் ஈடுபடுகிற
வர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் மட்டுமே,(உணர்வு எனும்)மரத்தின்
மீது எவ்வாறு ஏறுவது; (ஆன்மா எனும்) தேனை மறைத்து மொய்த்துக்
கொண்டிருக்கும் (எண்ணங்கள் எனும்) தேனீக்களை எவ்வாறு விரட்டிய
டித்து தேனை அடைவது என்பதற்குரியவழிமுறைகளைத்தாமே கண்டு
பிடித்து அவைகளைக் கைக்கொண்டு தேனை உண்டு திளைப்பவர்
களாவர்! இவர்கள் மட்டுமே மாபெரும் ஆன்மீக ஆசான்கள், ஞானிகள்
சொல்கிறவைகளை, அவர்களுடைய உபதேசங்களை அப்படியே துளி
யும் பிசகாமல் பின்பற்றிச் செல்லும் துணிவையும், ஒழுக்கத்தையும்
பெற்றவர்களாவர்!
இயேசுவின் வாழ்க்கைப்பார்வை ஆழமானது, முழுமையானது; ஆகவே
முற்றும் அறுதியானது! அவருடைய அதி தீர்க்கமான பார்வை இடைவழி
யிலுள்ள அனைத்து தடைகளையும், மேலோட்டமான கவர்ச்சிகளையும்
'தவிர்க்கவியலாதவைகள்' எனத்தோற்றம் தரும் பல நிர்ப்பந்த நிலை
மைகளையும் கடந்து வாழ்க்கையின் சாரத்தை, அதன் கருவான
மையத்தைச் சென்றடைந்துவிடுகிறது! இயேசு சொல்கிற வாழ்க்கை
'அன்றாட வாழ்க்கை' எனும் உயிர்-பிழைத்திருக்கும் விவகாரத்தினால்
மட்டுப்படுத்தப்படுகிற ஒன்றல்ல!
உலகப்பொருட்கள் அல்லது லௌகீகம் என்பது மனிதவாழ்க்கையின்
மிகச்சிறியதோர் பகுதிக்கு உரியதேதவிர அவையே மொத்த வாழ்க்கை
யும் அல்ல! 'லௌகீகம்' என்பது உயிர்-வாழ்தல், ஜீவித்தல் எனும் அம்சத்
திற்குரிய வகையில் அனுசரிக்கப்படும் வரை அது அடிப்படையானதாக
வும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திடும்!அதுவே அத்தியாவசியம்எனும்
கோளத்தைக்கடந்து அலங்காரமாகவும், பகட்டாகவும் விரிவுபடுத்தப்
படும் போது, 'லௌகீகம்' என்பது ஜீவித்தலின் மிகவும் பிறழ்ச்சியான
தொரு வடிவமாக மாறிவிடுகிறது! இவ்வகையில், 'உயிர்-வாழ்தல்' என்ப
தும் 'லௌகீகம்' என்பதும் ஒன்றல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து
கொள்வது மிகவும் அவசியமாகும். 'உயிர்-வாழ்தல்' என்பது அடிப்படை
யானதாகும். 'லௌகீகம்' என்பது அத்தியாவசியம் என்பதைக் கடந்த
வீண் ஆடம்பரம் ஆகும்!
அதேநேரத்தில், ஒரு விஷயம் அல்லது அம்சம் அடிப்படையானது என்றால்
என்னவென்பதையும் நாம் தெளிவாகப்புரிந்துகொள்வது அவசியமாகும்.
அடிப்படையானது என்பது அத்தியாவசியமானது, அது இன்றி ஒரு குறிப்
பிட்ட விஷயம் அமையாது எனக்காணலாம். ஆனால், அடிப்படையானது
என்பதே அனைத்துமானதோ, இறுதியானதோ அல்ல. மாறாக, அதன் மீது
எழுப்பப்படவேண்டிய வேறு ஏதோவொன்றிற்கான ஒரு அடித்தளம் அது
என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதையே துல்லியமாக ஒரு
உதாரணத்தைக்கொண்டு சொல்லவேண்டுமென்றால், எவ்வொரு கட்ட
டத்திற்கும் அடித்தளம் என்பது அடிப்படை அவசியமாகும். ஆனால், அடித்
தளம் என்பதே கட்டடம் ஆகாது! மேலும், ஒரு கட்டடத்திற்கு அடித்தளம்
மிகவும் அவசியம் என்றபோதிலும், கட்டடத்திற்காகத்தான் அடித்தளமே
தவிர அடித்தளத்திற்காகக் கட்டடம் இல்லை! இதைப் போன்றதே மனித
வாழ்க்கையும்.
ஆம், 'உயிர்-வாழ்தல்' என்பது உண்மையான மனிதவாழ்க்கைக்கான ஒரு
அடிப்படையே, அடித்தளமே தவிர, அதுவே முழுமையான வாழ்தலும்,
வாழ்க்கையும் ஆகாது. (ஏதோ) நாம் பிறந்துவிட்டோம், உயிரோடு இருக்கி
றோம், ஆக, தொடர்ந்து உயிரோடிருப்பதற்காக என்னவெல்லாம் செய்ய
வேண்டுமோ அவற்றையெல்லாம் நாம் செய்தாக வேண்டும் என்பது
இயற்கையான, கொடுக்கப்பட்ட நிலையாகும். ஆனால், அத்துடன் மனித
வாழ்க்கை முற்றுப்பெறுவதில்லை, முழுமையடைவதில்லை! முதலிடத்
தில், நாம் உயிரோடு இருப்பது அவசியம்; அப்போதுதான் நாம் ஆன்மீகம்
பற்றியும், 'உண்மை' பற்றியும், தேவனுக்கு ஊழியம் செய்வது பற்றியும்
பேசவும் செயல்படுத்தவும் முடியும்.
உண்மையில், ஆன்மீகம் என்றால் என்ன? உயிர்-வாழ்தல் என்பது வாழ்க்
கையின் அடிப்படையைப்பற்றியது என்றால், ஆன்மீகம் என்பது வாழ்க்
கையின் இறுதிப்படியை, இலக்கைப்பற்றியது ஆகும்.வாழ்க்கை என்றால்
என்ன? உயிர்-வாழ்தலின் உண்மையான நோக்கம், குறிக்கோள், இலக்கு
என்ன? என்பதை அறிந்து, உணர்ந்து, அடைவது தான் ஆன்மீகம் ஆகும்.
இதற்கு மாறாக, ஒருசில பயிற்சிகளை- தியானம், யோகம், பிரணாயாமம்
போன்றவைகளை எந்திரத்தனமாகச் செய்வது அல்ல ஆன்மீகம் என்பது.
இன்னும், ஆலயங்களுக்குச் செல்லுதல், வழிபாடு, பூசை, புனஸ்காரம்,
சடங்கு, சாஸ்திரம் போன்றவைகளும் ஆன்மீகம் அல்ல.உள்ளதனைத்தின்
சாரமான உண்மையை உணர்ந்தறிதல், மெய்ம்மையைச் சேருதல், வாழ்க்
கையெனும் "புதிரை" விடுவித்தல், இச்செயல்பாட்டில் "உணர்வு-மாற்றம்"
பெற்று முழு-உணர்வை அடைதல் ஆகியவையே உண்மையான ஆன்மீக
மாகும்.அதுவே 'தேவனுக்கு ஊழியம் செய்தல்' என்பதுமாகும்.
அதாவது, நமது ஒட்டுமொத்த உயிர்-வாழ்தலும், தேவனுக்கு ஊழியம்செய்
வதற்காக, ஆன்மீகத்திற்காகப் பயன்படுத்தப்படவேண்டும். அதாவது, நம்
வாழ்க்கையின் இறுதிப்படியை, இலக்கை, முழுமையைஅடைவதற்காகப்
பயன்படுத்தப்பட வேண்டும்.
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் முடியாது" என்று
இயேசு கூறினார். உண்மையில், ஆன்மீகம், லௌகீகம் என இரண்டு எஜ
மான்கள் கிடையாது! நமது உண்மையான பிரச்சினை 'உயிர்-வாழ்தல்'
எனும் குறுகிய விவகாரத்தைக் கடந்து நம்மால் வாழ்க்கையைக் காண
இயலவில்லை என்பதுதான். அந்த அளவிற்கு நாம் விலங்குகளைப்போல
உணர்வற்ற தன்மையில் ஆழ்ந்துள்ளோம்! நம்மிடம் வாழ்க்கையைப்பற்றி
யாதொரு பார்வையும், புரிதலும் இல்லை!
"நாம் ஏன், எதற்காக உயிர்வாழ்கிறோம்?" என்ற கேள்வி நம்மிடம் இல்லாத
தால், உயிர்-வாழ்வதன் நோக்கத்தை இழந்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்
கிறோம்! இதன்விளைவாக, உயிர்-வாழ்தலை நாம் மிக அலங்காரமாகவும்
ஆடம்பரமாகவும், மிகச்சௌகரியமாகவும் ஆக்கிடுவதை வாழ்வின் இலக்
காகக்கொண்டுவிடுகிறோம்-அப்போது 'உயிர்-வாழ்தல்' என்பதுமிக அபத்
தமானவகையில் 'லௌகீகம்' என்றாகிவிடுகிறது! அதாவது 'லௌகீகம்'
என்பது மனிதவாழ்வின் அசலான இலக்கிற்குக் புறம்பாக செயற்கையும்
போலியுமான மதிப்புகளை இலட்சியமாகவும், இலக்காகவும் கொள்வ
தாகும்! இந்த லௌகீகம் தான் மனிதர்களை "உலகப்பொருட்களுக்கு"
ஊழியம் செய்திடும் அடிமைகளாக ஆக்கிவிடுகிறது!
'லௌகீகம்' எனும் தவறும், அபத்தமும், மட்டுப்பாடும் எப்போது நிகழ்கிற
தென்றால், இயல்பான தேவைகளை, அவை எழும்போது, முறையாக அவ்
வப்போது பூர்த்திசெய்து கொண்டு, அசலான மனிதவாழ்க்கை பற்றிய
விசாரத்தில் ஈடுபடாமல், 'தேவைகள்-தேவைகளின் நிறைவேற்றம்' எனும்
விபரீதச் சுற்றுக்குள்ளேயே சிக்கிக் கொண்டுவிடும் போது தான் நிகழ்
கிறது! ஆம்,'லௌகீகம்' என்பது வாழ்க்கை பற்றிய யாதொரு பார்வையும்
புரிதலும் அற்ற மனித சமூகத்தின் செயற்கையான கண்டுபிடிப்பு ஆகும்!
'லௌகீகம்' என்பது, நாகரிகமடைந்த 'விலங்கு-மனிதர்களின்' "எஜமான்"
அல்லது "தேவன்" ஆகும்!
பொதுவாக, வாழ்க்கை என்பது இருவிதங்களில் மட்டுமே அணுகக்கூடிய
தாயுள்ளது எனலாம். ஒன்று, உணர்வற்ற அணுகுமுறை, இன்னொன்று
உணர்வுப்பூர்வமான அணுகுமுறை. உணர்வற்ற அணுகு முறையானது
"சுய-உணர்வற்ற" விலங்குஜீவிகளுக்கு உரியதாகும். இந்த அணுகுமுறை
யின் வழியாக வாழப்படும் வாழ்க்கையை இயல்பான அல்லது 'இயற்கை
யான வாழ்க்கை' எனலாம். உயிருள்ள ஜீவிகள் யாவும் அவற்றின் 'இயல்
பூக்கி'களான, பசி, தாகம், பாலுணர்வு, மற்றும் பாதுகாப்புணர்வு ஆகிய
வற்றினால் செலுத்தப்படுபவையாகும். இவ்வாறு, இயல்பூக்கிகளினால்
செலுத்தப்படுவதனால் தான் அதை 'இயல்பான' அல்லது, 'இயற்கையான'
வாழ்க்கை எனக்குறிப்பிடுகிறோம்.
மனிதஜீவிகளும் உடலையுடைய ஜீவிகளாதலால், அவர்களுக்கும் பசி,
தாகம், பாலுணர்வு, . . . . ஆகிய இயல்பூக்கிகள் உண்டு! ஆகவே, மனிதஜீவி
களுக்கும், 'இயல்பான' அல்லது, 'இயற்கையான' வாழ்க்கை எனும் ஒரு
பக்கம் உண்டு! அதே நேரத்தில், மனிதஜீவிகள் விலங்குஜீவிகளைப்போல
வெறும் உடலை மட்டும் உடைய ஜீவிகள் அல்ல! அவர்களுக்கு "மனம்"
அல்லது "சுய-உணர்வு" எனும் அம்சமும் உள்ளது. ஆகவே, மனிதஜீவிகள்
தாங்கள் 'ஏன், எதற்காக வாழ்கிறோம்?' என்பதையறியாமல் பசி, தாகம்,
பாலுணர்வு . . . ஆகிய இயல்பூக்கிகளால் செலுத்தப்பட்டு விலங்குஜீவி
களைப்போல, அறியாமை இருளில் உழல வேண்டியதில்லை! ஆம், மனித
ஜீவிகள் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைக்கென்றே உருவானவர்கள்!இந்த
'உணர்வுப்பூர்வமான' அணுகுமுறையின் வழியாகவாழப்படும் வாழ்க்கை
இயல்பானதோ, இயற்கையானதோ அல்ல. மாறாக, அது வேறொரு வகை
இயற்கையைச்சேர்ந்தது. சொல்லப்போனால், அது மட்டுமே ஒட்டுமொத்த
இயற்கையின் மிக அசலான இயற்கையாகும்! அதுவே அனைத்தின்,
அனைத்துப்படைப்பின் "மூலம்" ஆகும்.
வாழ்க்கையை வாழும், அல்லது அணுகும் முறையில், இரு வித வாழ்க்கை
மட்டுமே சாத்தியம். ஒன்று: உணர்வற்ற விலங்குஜீவிகளின்இயற்கையான
வாழ்க்கை.இன்னொன்று: உணர்வுப்பூர்வமான மனிதஜீவிகளின்இயற்கை
மீறிய வாழ்க்கை அல்லது 'ஆன்மீகவாழ்க்கை'. ஆனால், இந்த இரண்டிற்
கும் நடுவே 'லௌகீகம்' என்பது எவ்வாறு நுழைந்தது?
இயற்கையான வாழ்க்கையில், லௌகீகம் என்கிற ஒன்றிற்கு இடமில்லை!
ஆம், உணர்வற்ற விலங்குஜீவிகளின் வாழ்க்கையில் லௌகீகம் என்பது
இல்லை. அதேபோல், உணர்வுள்ள மனிதஜீவிகளின் வாழ்க்கையிலும் அது
இடம் பெற யாதொரு அடிப்படையும் இல்லை! அப்படியானால், லௌகீகம்
என்பது எத்தகைய வாழ்க்கை? நாம் எத்தகைய ஜீவிகள்?
வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை
வாழ்க்கையின் குறிக்கோள், இலக்கு மற்றும் அதன் சாரமான உண்மை
அல்லது அதன் அர்த்தம் ஆகியவற்றை அறிய முற்படவில்லையெனில்,
ஒன்று, நாம் வெறுமனே அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து
கொண்டு உயிர்பிழைத்துச் செல்லும் உணர்வற்ற விலங்குஜீவிகளாகவோ,
அல்லது அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய அடிப்படையற்ற, தேவை
யற்ற தேவைகளை நாடிடும் லௌகீக -அடிமைகளாக, நாகரீகமடைந்த
பகட்டு விலங்குஜீவிகளாகவோ தான் விளங்குவோம்!
ஆம், நாம் உண்மையான வாழ்க்கையையும் அதன் ஒப்பற்ற இலக்கையும்
அறிய வில்லையெனில், செயற்கையும், போலியுமான தொரு இலக்கைத்
தான் நாடிச்செல்லுவோம்! அந்த போலியான தேவைகள் சுட்டுகிற "உலகப்
பொருட்கள்" அல்லது "லௌகீகம்" எனும் பொய்யான தேவனுக்குத்தான்
ஊழியம் செய்வோம்!
இதற்கு மாறாக, இயற்கையான வாழ்க்கை மற்றும் மனிதஜீவியின் உள்
ளார்ந்த பரிணாமவளர்ச்சி விதிகளின்படி , உணர்வின் அடுத்தடுத்தக்கட்ட
உயர்நிலைகளை எட்டுகிறவிதமாக உணர்வுப்பூர்வமாக வாழ்வோமெனில்
வாழ்க்கையின் மிக அசலானதும், ஒப்பற்றதுமான "முழு-உணர்வு" எனும்
இறுதி நிலையைச் சென்றடைவோம். மனிதஜீவியை முழுமைப்படுத்தும்
இந்த ஒப்பற்ற நிலைதான் நமது இலக்கு!ஆம், வாழ்க்கையின் இலக்குதான்
நாம் ஊழியஞ்செய்யவேண்டிய உண்மையான எஜமானனும், தேவனும்
ஆகும்!
வாழ்க்கைக்கு இலக்கு என்று ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தால் தான்
நம்முடைய உண்மையான எஜமான் யார் என்பதைக் கண்டடைய முடியும்!
மேலும், வாழ்க்கைக்கு முறையான இலக்கு என்று ஒன்று தான் இருக்கமுடி
யும். அதற்குக் கீழாகவோ, மேலாகவோ, அதற்குப் புறம்பாகவோ வேறு
இலக்கு எதுவும் இருக்கமுடியாது! வாழ்க்கையின் "முழுமை" தான் அந்த
இலக்கு. வாழ்க்கையின் சாரமான உண்மையும், முழுமையும், தேவன் என்
பதும் ஒன்றே.
"தேவனுக்கும் உலகப்பொருட்களுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடி
யாது" எனும் இயேசுவின் கூற்று இறுதியானது! அதுகுறித்து விவாதம்செய்ய
ஏதும் இல்லை! நம்மில் அநேகர், உலகப்பொருட்களுக்கு ஊழியம்செய்து
கொண்டு தேவனுக்கும் ஊழியம் செய்வதாக நம்பிக்கொண்டு வாழ்க்
கைக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! ஆம், இரண்டிற்கும்
ஊழியஞ்செய்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றது! ஒருவனுக்கு இரண்டு
இதயங்கள் இருந்தால் ஒருவேளை அது சாத்தியமாகலாம்! நம்மில் பலர்,
மிகச் சாதுர்யமாக, 'தேவனுக்கும் உலகப்பொருட்களுக்கும் ஊழியஞ்செய்ய
இயலாததாகையால்' நான் இரண்டில் ஒன்றைத் தெரிவ செய்திட விரும்பு
கிறேன்; அதாவது, நான் ' உலகப்பொருட்களுக்கு' ஊழியஞ்செய்யவே
விரும்புகிறேன் என்று சொல்லலாம், அது போலவே செய்யலாம். ஆனால்,
அது தற்கொலைக்குச் சமமானதாகும். ஏனெனில்,
" மனுஷன் உலகம் முழுவதையும்
ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்
ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு
லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு
ஈடாக என்னத்தைக்கொடுப்பான்?"
- இயேசு(மத்தேயு 16:26)
என்பதாக இயேசு கேட்கிறார்.
<><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.
மா.கணேசன்/18.07.2011 & 09.05.2016
No comments:
Post a Comment