
"வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?" என்ற கேள்வி அடிப்படையி
லேயே தவறானது! எனினும் மகிழ்ச்சி, துன்பம் இவ்விரண்டையும் கடந்து
"வாழ்க்கை" என்றால் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிப்போமாக!
வாழ்க்கை என்பது முற்றிலும் துன்பமயமானதல்ல!ஏனென்றால், வாழ்க்கை
யில் எவ்வளவோ இனிமையான அம்சங்கள், விஷயங்கள், தருணங்கள் உள்
ளன- நீலவானம், சூரிய உதயம், பறவையின் பாடல், மழலைப்பேச்சு, காதல்,
காமம், . . . என எவ்வளவோ உள்ளன! வாழ்க்கையில், துன்பகரமான அம்சங்
களும், நிகழ்வுகளும், விபத்துகளும், இழப்புகளும் உள்ளன வென்றாலும்,
நிச்சயம் வாழ்க்கை என்பது துன்பத்தை மட்டுமே தயாரித்து அளிக்கும்
தொழிற்சாலை யல்ல!
'வாழ்க்கை துன்பகரமானது' என்று புத்தர் சொல்லியதன் காரணம், நோய்,
மூப்பு, மற்றும் மரணம் எனும் இறுதித் துன்பத்தை மனதில் கொண்டும்,
அதாவது வாழ்க்கையின் நிலையாமையை முன்னிட்டும் தான்! ஆகவே
தான், அவர் நிர்வாணம்,அல்லது உயர்பேரறிவு எனும் இலக்கைப் பிரதானப்
படுத்திப் பேசினார்!
உப நிஷத்துகள் பிரம்மத்தைப் பற்றியே பேசின!அதாவது பிரம்மம்
மட்டுமே நிஜம் என்று பிரஸ்தாபித்தன!
இயேசு இங்குள்ள வாழ்க்கையைவிட தேவனின் ராஜ்யத்தைப் பற்றியே
பேசினார்!
இஸ்லாம் இம்மையைப் பற்றி மட்டுமல்லாமல் மறுமையைப் பற்றியும்
பேசியது !
தமிழ்ச் சித்தர்கள் வீடுபேறு பற்றியே பேசினர்!
ரமணர் ஆத்மசாட்ஷாத்காரம் பற்றியே பேசினார்!
அதாவது, வாழ்க்கையைப் புரிந்து கொண்ட எவரும் வாழ்க்கையின் குறிக்
கோள், இலக்கு, சென்றடையும் இடம் பற்றியே பேசினர்! எவரும் இங்கேயே
இருந்து குந்தித் தின்பதைப்பற்றிப் பேசவில்லை!
எவ்வொரு பயணத்திற்கும் போய்ச்சேருமிடம், இலக்கு முக்கியம்;அவ்வாறே
வாழ்க்கை எனும் பயணத்திற்கும் இலக்கு முக்கியம்; பயணத்தின் அர்த்தம்
இலக்கிலேயே அடங்கியுள்ளது! இலக்கில்லாத பயணம் அர்த்தமற்றது,
பயனற்றது! விருந்து சாப்பிடப்போகும் ஓருவன் விருந்தில் என்னென்ன
பரிமாறப்படும், எவ்வளவு ருசியான உணவு வகைகள் இடம்பெறும் என்ப
தையெண்ணி மகிழ்ந்தவாறே செல்வதைப்போல; காதலியைச் சந்திக்கச்
செல்பவன், காதலியை எதிர்நோக்கிய சந்தோஷத்திலேயே செல்வதைப்
போல, ஒவ்வொருவரும் வாழ்வின் ஒப்பற்ற இலக்கு குறித்த விசாரத்தில் ஈடு
பட்டவாறே வாழ்ந்து செல்லவேண்டும்! இலக்கின் அற்புதச்சுவை இறுதியில்
எட்டப்படுவது அல்ல; மாறாக, பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உணரப்
படும் வகையில், வாழ்க்கையை ஒருவன் அதி தீவிர நேசத்துடன் அணுக
வேண்டும்!
அதாவது, பயணிப்பவன், பயணம், பயணத்தின் இலக்கு இம்மூன்றும்
ஒருமைப்படும் விதத்தில், ஒருவன் தீவிர நேசத்துடன் அணுகவேண்டும்!
மேலும், ஒருவன் மிச்சம் மீதமின்றி தன்னை முழுமையாக வாழ்க்கைக்குக்
கொடுத்தாகவேண்டும்!
வாழ்க்கையின் மேற்புற இன்பங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட, பிணைத்துக் கொண்ட ஒருவனுக்கு சிறு அசௌகரியம் கூட
பெருந்துன்பமாகத் தெரிகிறது; ஒரு பொருள் தொலைந்து போனால், அது
பேரிழப்பாகத் தெரிகிறது!
வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் உள்ளது என்பது வெளிப்படை!
மேலோட்டமான (நிலைப்பற்ற) இன்பத்தில் முதலீடு செய்தவன் துன்பம்
கண்டு கலங்குகிறான்; ஐயோ, வாழ்க்கை எவ்வளவு துன்பமயமானது என்று
புலம்புகிறான்! ஆனால், இன்பம், துன்பம் இரண்டையும் கடந்தது தான் அச
லான வாழ்க்கை என்பதை அறிந்தவர் ஒரு சிலரே! ஆக, அசலான வாழ்க்கை
யில் முதலீடு செய்பவனே உண்மையான மனிதன்; அவனை ஞானி என்றும்
சொல்வர்!
உண்மையான மனித வாழ்க்கை என்பது ஒருவன் உணர்வுகொண்டு வாழ்க்
கையை உணர்ந்தறியத் தொடங்கும் போது தான் தொடங்குகிறது; அதற்கு
முன்புவரை அது வெறும் உணர்வற்ற பிராணிய இருப்பாக, அசலான வாழ்க்
கைக்கான (கட்டடச் சாரம் போன்ற) ஒரு ஏற்பாடாக மட்டுமே விளங்குகிறது!
இந்த உணர்வு பூர்வமான வாழ்க்கைக்கு முந்தைய உணர்வுக்குறைவான
வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது அதன் இயல்பான
தன்மையாகும்; அத்தகைய வாழ்க்கையைத்தான் அனைத்து விலங்குஜீவி
களும் புகார்களின்றி, அலுப்பு சலிப்பு இன்றி, விரக்தியின்றி, அங்கலாய்ப்
பின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன! விலங்குஜீவிகளின் வாழ்விலும் துன்
பங்களும், துயரங்களும், விபத்துகளும், இழப்புகளும், மரணங்களும் இருக்
கத்தான் செய்கின்றன; ஆனால், அவை குறித்து அவை யாதொரு புகாரும்
தெரிவிப்பதில்லை, அவ நம்பிக்கையும் கொள்வதில்லை!
ஆனால்,அதேநேரத்தில், மனிதஜீவிகளுக்கு உணர்வு (மூளை, மனம், சிந்திக்
கும் திறன், அறிவு யாவும்) இருப்பது புகார் தெரிவிப்பதற்கும், புலம்புவதற்
கும், அவநம்பிக்கை கொள்வதற்கும், விரக்தியடைவதற்கும் அல்ல என்பது
மட்டும் நிச்சயம்! அவ்வாறு அவன் புகார் தெரிவிப்பதென்றால், அவன் எவரி
டம் தெரிவிக்க முடியும்? புகார்களற்ற வகையில் தன்னையும், தனது வாழ்
வையும் நிர்வகிக்கவும், அனைத்துப் புதிர்களையும் விடுவிக்கவும் தோன்றி
யவனல்லவா அவன்!
வாழ்க்கையை இன்பம், துன்பம் இவ்விரண்டின் சொற்களில் காண்பது
என்பது வாழ்க்கைக்கு நாம் அளிக்கும் மிகவும் மட்டுப்பாடானதும் மேலோட்
டமானதுமான பதிலளிப்பு ஆகும்! ஏனெனில், வாழ்க்கை என்பது இன்பம்,
துன்பம் இரண்டையும் உள்ளடக்கியதும், இரண்டையும் கடந்ததுமானதொரு
முழுமையாகும்! அது ஒரு அற்புதப்புதிர் ஆகும்!அதை இன்பம்,துன்பம் எனும் நிலைகளுக்குச்சுருக்கிக் காண முயற்சிப்பது அதைக் கொச்சைப் படுத்துவ
தாகும்! ஏனெனில், இன்பம், துன்பம் இவ்விரண்டும் அநித்தியமான உலகின்
(பிரபஞ்சத்தின்) மாறி மாறி அமையும் இரு முகங்களாகும்! இருப்பு, இன்மை;
வாழ்வு, சாவு எனும் இரு விதிகளுக்குமான போராட்டத்தின் வெளிப்பாடே
இப்பிரபஞ்சம் எனும் இயக்கம்! அநித்தியமான இப்பிரபஞ்ச இயக்கத்தின்
இலக்கு நித்தியமே ஆகும்! ஆனால், அந்நிலை சார்புரீதியிலமைந்த பிரபஞ்
சத்துள் அடையமுடியாது! இருப்பா? இன்மையா? அல்லது, வாழ்வா? சாவா?
அல்லது, இன்பமா? துன்பமா? என்றால், முடிவில் இருப்பும், வாழ்வும், இன்ப
மும் தான் வெற்றி பெறும்!
அதாவது, நிலையாமை என்பது இப்பிரபஞ்சத்தைப்பீடித்த நிரந்த நோயல்ல!
மாற்றத்தை உள்ளடக்கிய வளர்ச்சி, பரிணாமம் எனும் பிரபஞ்ச இயக்கம்
முடிவில் அனைத்து மாற்றங்களையும் தீர்த்து முடித்து முழுமை நிலையை
அடைந்தாக வேண்டும்!
நமது சூரியன் இன்னும் நூறு கோடி ஆண்டுகளில், தனது எரிபொருளை
எரித்துத் தீர்த்துவிட்டு மடிந்துவிடும்; ஒட்டு மொத்த பிரபஞ்சமும் சில நூறு
கோடி ஆண்டுகளில் தனது முடிவைத் தழுவிக்கொள்ளும் என்று விஞ்ஞானி
கள் கூறுவதன் அர்த்தம் இப்பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் அழிந்து போகும் என்
பதல்ல! மாறாக, எந்த நோக்கத்திற்காக இப்பிரபஞ்சம் தோன்றியதோ அந்த
நோக்கம், குறிக்கோள் நிறைவேறியதும், பிரபஞ்சம் முழுமையை எட்டிவிடு
கிறது எனும் உண்மையை அவர்கள் அறியாததாலேயே பிரபஞ்சம் முடிவிற்கு
வந்துவிடும் அல்லது அழிந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள்! மேலும் பிறக்
கின்ற யாவும் ஒரு நாள் இறந்துபோகும்; தோன்றிய யாவும் ஒரு நாள் அழிந்து
போகும் எனும் கூற்றுகள் மேலோட்டமானவை! பாமரத்தனமானவையாகும்!
ஏனெனில், இப்பிரபஞ்சம் அழிவதற்காகத் தோன்றியதல்ல; அதே வேளை
யில், இப்பிரபஞ்சத்தில் உள்ளடங்கிய சில பொருட்கள், கூறுகள், பகுதிகள்,
நிகழ்வுகள் ஒட்டு மொத்தத்தின் வளர்ச்சி விதிகளுக்குட்பட்டு மாற்றத்திற்
குள்ளாகக்கூடும், மடியக்கூடும்; அவ்வளவு தானே தவிர, ஒட்டு மொத்தமும்,
அதன் உணர்வுப்பூர்வமான பிரதிநிதிகளான மனிதஜீவிகளும் ஒருபோதும்
அழிவதில்லை! ஆனால், மனிதஜீவிகள் தங்கள் உணர்வில் மேன்மேலும்
வளரவில்லையெனில், அவர்கள் ஏற்கனவே வீழ்ச்சியடையவும், அழியவும்
தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றிய உண்மை நிலை
யாகும்! அதைப் பொதுமைப்படுத்த முடியாது!
வயிற்றுவலியில் அவஸ்தைப்படும் ஒருவனுக்கு வாழ்க்கை என்பது, "வலி"
தான், வலியைத் தவிர வேறில்லை என்பதாகத் தெரியும்! தன் காதலியுடன்
தனியே அமர்ந்து அளவளாவிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு இப்பிரபஞ்சம்
ஒரு பெரிய காதல் பூங்கா, காதல் களிப்பு தான் வாழ்க்கை என்பதாகத் தெரி
யக்கூடும்! ஒருவன் தனது வாழ்க்கையில் இன்பம், துன்பம், விரக்தி,கலக்கம்,
ஏமாற்றம், குழப்பம், தெளிவு போன்ற பலவகைப்பட்ட உணர்ச்சிகளை, மன-
நிலைகளை அனுபவம் கொள்ளக்கூடும்; ஆனால், அவை யாவும் எவ்வாறு
ஒருவன் வாழ்க்கைக்குப்பதிலளிக்கிறான் என்பதைப்பொறுத்த விளவுகளே
தவிர,அவை வாழ்க்கையின் வெளிப்பாடுகள் அல்ல!ஆகவே,வாழ்க்கையை
இன்பமாகவோ, துன்பமாகவோ, அல்லது வேறெதுவுமாகவோ சுருக்கிவிட
முடியாது! அதாவது, எவனொருவன் வாழ்க்கைக்கு உணர்வார்ந்த முறையி
லும், முழுமையாகவும் பதிலளிக்கிறானோ, அவனே இன்பம், துன்பம் இரண்
டையும் கடந்த (இருமைகளைக் கடந்த) வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறான்!
எவ்வொரு மனிதனுக்கும் எண்பத்திமூன்று பிரச்சினைகள் இருப்பதாகவும்,
அவற்றைத் தீர்க்க தன்னால் உதவமுடியாது எனவும் புத்தரை நாடி வந்த
ஒருவனிடம் புத்தர் கூறினார்! "ஆனால், ஒருவேளை தனது போதனைகள்
உன்னுடைய எண்பத்தி நான்காவது பிரச்சினையைத் தீர்க்க உதவலாம்!"
என்று புத்தர் கூறினார். அது என்ன அந்த எண்பத்தி நான்காவது பிரச்சினை
என்று கேட்ட அந்த மனிதனிடம் புத்தர் சொன்னார் : "எந்தப் பிரச்சினையும்
இல்லாமலிருக்க வேண்டும் என நீ விரும்புவது."
ஆக, வலி, துன்பம், கஷ்டம், நஷ்டம், சோகம் . . . ஆகியவற்றின் சொற்களில்
வாழ்க்கையைக் காண்பது என்பது மட்டுப்பாடானது மட்டுமல்ல; மாறாக,
அது ( வலி, துன்பம், கஷ்டம், நஷ்டம், சோகம் ஆகியவற்றைக் கடந்து) வாழ்க்
கையை முழுமையாகக் காணத் தவறுவதும் ஆகும்! வலியோ, துன்பமோ;
இனிமையோ, இன்பமோ அவை அந்தந்த நேரத்தின் (மனோ) நிலைகளே.
அதாவது, வயிற்றுவலியில் துடிப்பவன் என்ன செய்யவேண்டுமெனில், அவ்
வலிக்கான காரணத்தை அறிந்து அதைப் போக்கக்கூடிய ஒரு மருத்துவரை
அணுகுவதுதான். அடுத்து, அதேபோன்ற வலி மீண்டும் ஏற்படாதவகையில்,
வலியை உருவாக்கும் காரணிகளைத் தவிர்க்கலாம். ஆனால், வயிற்றுவலி
போனால், தலைவலியோ, அல்லது பல்வலியோ, வேறு ஏதாவதொரு வலி ஏற்
படலாம்! ஆக, வலிகளிலிருந்து தன்னைப் பாதுகாப்பதே ஒருவனது வாழ்க்
கையாகிட முடியாது! ஏனெனில், வலிகளற்ற நிலை, அல்லது துன்பமற்ற
நிலை எதுவும் இறுதியானதல்ல; அதாவது வாழ்வின் இலக்கு நிலையல்ல!
சிலர் "சந்தோஷம்" தான் வாழ்வின் இலக்கு என்பர்! ஆனால், அது ஒரு பாதி
உண்மை மட்டுமே! ஏனெனில், மெய்ம்மையுடன் இணையாத, சம்பந்தப்
படாத சந்தோஷம் மலினமானது; அது உண்மையான, மேலான சந்தோஷம்
அல்ல! அதாவது, இருப்பும், உணர்வும் ஒருமைப்பட்ட, "சத் -சித் -ஆனந்தம்"
(இருப்பு - உணர்வு -ஆனந்தம்) எனும் உச்ச ( முழுமை ) நிலை அல்ல!
பொதுவாக மனிதர்கள் அறிந்துள்ள சந்தோஷம், இன்பம், மகிழ்ச்சி என்பன
யாவும் மட்டுப்பாடானவை, சாதாரணமானவை! ஏனெனில், அவர்கள் அடை
யக்கூடிய சந்தோஷம் அவர்களுடைய கீழான இச்சைகளையும், அடிப்படை
யான அன்றாடத் தேவைகளையும், பலவித புறப் பொருட்களையும், உறவு
களையும், போலியான மதிப்பீடுகளையும்,மாறுகின்ற அவர்களது விருப்பங்
களையும் சார்ந்தவையாகும்! ஆனால், உண்மையான சந்தோஷம் என்பது
ஒருவனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுவதாகும்! அது புறத்தே
எதையும் சார்ந்திருப்பதில்லை!உண்மையான சந்தோஷம்,மகிழ்ச்சி என்பது
எப்போதாவது தேடிக்கண்டடையக்கூடியதோ அல்லது இழக்கக்கூடியதோ
அல்ல! மாறாக, அது எவ்வளவு தான் செலவு செய்தாலும் குறையாத
கையிருப்பு போன்றதாகும்! ஆனால், ஒருவன் தன்னிடம், தனது உட்பொதி
வில் என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பதை அறியாவிடில், அவன்
ஒரு வறியவனைப்போலவே துன்புறுகிறவனாகிறான்!உண்மையில் எவரும்
ஏழையாகப் பிறப்பதில்லை; மாறாக, (தன்னை அறியாததால்) ஏழையாக
ஆகிறான்!
"வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?" என்ற கேள்வி அடிப்படையி
லேயே தவறானது! ஏனெனில், வாழ்க்கை என்றால் இன்னது என்று கண்டு
பிடிப்பதுதான் வாழ்க்கையாகும்! அது இன்பமானதா,அல்லது துன்பமானதா,
அல்லது, இவ்விரண்டையும் கடந்ததா, அல்லது வேறு ஏதோவொன்றா என்
பது ஒவ்வொரு மனிதனும் நேரடியாகஉணர்ந்தறிய வேண்டிய விஷயமாகும்!
"வாழ்க்கை துன்பமயமானது!" என்று புத்தர் சொல்லிச் சென்றதால், நாம்
துவண்டுவிடலாகாது! அல்லது, " நம் உண்மையான சொரூபமே ஆனந்தம்
தான்!" என ரமணர் சொன்னதாகக் கேள்விப்பட்டதும், "அடடா, தன்னால்
அதை உணர முடியவில்லையே?" என்று விரக்தியடைவதும் முறையன்று!
நாம் ஒவ்வொருவரும் நேரடியாகப் பதிலளிக்கவேண்டியது வாழ்க்கைக்குத்
தானே தவிர, புத்தரின், அல்லது ரமணரின் அல்லது வேறு ஒருவருடைய
கூற்றுக்கு பதிலளிப்பது அல்ல!
வாழ்க்கையானது நம் ஒவ்வொருவரிடமிருந்தும் நேரடியான, உணர்வுப்பூர்
வமான பதிலளிப்பையே கோருகிறது! இன்னும் துல்லியமாகச் சொன்னால்,
வாழ்க்கை உணர்வையே பதிலாகக் கேட்கிறது! எது கேள்வியாக உள்ளதோ
அதுவே பதிலாகவும் உள்ளது! தனக்குத் தானே கேள்வியாக மாறாதவன்
எந்தப் பதிலையும் கண்டுபிடிக்கப் போவதில்லை; அதாவது பதிலாக மாறப்
போவதில்லை!
வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை யல்ல; வாழ்ந்து
அவிழ்க்கப்படவேண்டிய ஒரு அற்புதப்புதிர் ஆகும்! தொடக்கத்திலும், இடை
யிலும், இறுதியிலும் அவிழ்க்க அவிழ்க்க ஆர்வமூட்டும், அள்ள அள்ளக்
குறையாது ஆனந்தம் தரும், மாறாத புதிரின் பெயர் தான் "வாழ்க்கை!"
மா.கணேசன்/ நெய்வேலி/ 08-03-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment