Friday, 24 March 2017

சுடுநீர்ப்பானைத் தவளை போல!


(கடைசியாகத் தேர்வதல்ல வாழ்க்கை!)

         வாழ்வின் நோக்கம் உணர்ந்த மனிதன், தானே
         வழியும் இலக்குமானவன்!
              -  மா.கணேசன்/பாதையற்ற பயணம் / 02.06.2016*
                 
குளிர்ந்த நீர் குளிர்ந்த நீராகவே இருப்பதில்லை!
வெதுவெதுப்பான நீரும் அப்படித்தான்!
கொதிநிலையில் தண்ணீர் தண்ணீராக இருப்பதில்லை!
தண்ணீர் அதிக வெப்ப நிலையில் மட்டுமல்ல
சாதாரண வெப்பநிலையிலும் ஆவியாகும்!
                 <•>

பலவற்றைப்  பரிசோதனை  செய்து  பார்த்துவிட்டு,  கடைசியாக  வாழ்க்கை
யைத்  தேர்வுசெய்வது  என்பது  பானை  கொஞ்சம்  கொஞ்சமாகச்  சூடேறிக்
கொண்டிருப்பது  தெரியாமல்  பானை நீருக்குள் வசித்துவரும்  தவளையின்
நிலையை    ஒத்தது   ஆகும்!    ஏனெனில்,   ஒருவன்   தனக்கு    வழங்கப்பட்ட  
"வாழ்க்கை"    எனும்   அரிய  வாய்ப்பைத்  தாறுமாறாகப் பயன்படுத்திவிட்டு
கடைசி நேரத்தில்  வாழ்க்கையைத்  தேர்வு  செய்வது  இயலாது!   ஏனெனில்,
தண்ணீர்   கொதிக்கத்  தொடங்கிய  பிறகே   தவளைக்கு    தான் ஆபத்தான
நிலைமையில்  சிக்குண்டிருப்பது புரியவரும்;    அது பானையிலிருந்து  தாவி
வெளியே குதிப்பதற்குள் அதன் கதை முடிந்து விடும்!

'வாழ்க்கை'   என்ற   சொல்லே   வாழ்க்கைக்கான   விளக்கமோ,  அர்த்தமோ
அல்ல! பலர் வாழ்க்கையை ஒரு பயணத்திற்கு ஒப்பிட்டுச்சொல்வர்!ஆனால்,
அப்பயணத்தின் இலக்கு குறித்து அறிந்தவர், அக்கறை கொள்பவர்;  வாழும்
போதே இலக்கை அடைந்தவர் வெகு சிலர் மட்டுமே!

வாழ்க்கையை  விளக்குவதற்கு  உதவும்  பல  பொருத்தமான உவமைகளில்
"பயணம்"    எனும்   உவமை   எளிதானது!   எவ்வாறு   பயணத்தின்   அர்த்தம்
போய்ச்சேரும் இடத்தைச்சார்ந்ததாக உள்ளதோ,அவ்வாறே வாழ்க்கையின்
அர்த்தமும்   வாழ்க்கையின்  இலக்கை  அடைவதில் தான்   அடங்கியுள்ளது!
இலக்கற்ற பயணமும், வாழ்க்கையும் அர்த்தமற்றதாகும்!

விருந்து  சாப்பிடப்போகும்  ஓருவன்  விருந்தில் என்னென்ன பரிமாறப்படும்,
எவ்வளவு   ருசியான   உணவு வகைகள்   இடம்பெறும்    என்பதையெண்ணி
மகிழ்ந்தவாறே    செல்வதைப்போல;     காதலியைச்   சந்திக்கச்  செல்பவன்,
காதலியை    எதிர்நோக்கிய    சந்தோஷத்திலேயே   செல்வதைப் போல,  ஒவ்
வொருவரும் வாழ்வின் ஒப்பற்ற இலக்கு குறித்த விசாரத்தில் ஈடுபட்டவாறே
வாழ்ந்து செல்ல வேண்டும்!  இலக்கின் அற்புதச்சுவை இறுதியில்  எட்டப்படு
வது அல்ல; மாறாக,பயணத்தின்  ஒவ்வொரு அடியிலும்  உணரப்படும் வகை
யில்,    வாழ்க்கையை   ஒருவன்   அதி தீவிர  நேசத்துடன்   அணுகவேண்டும்!

அதாவது,    பயணிப்பவன்,    பயணம்,     பயணத்தின் இலக்கு    இம்மூன்றும்
ஒருமைப்படும்  விதத்தில்,  ஒருவன்     தீவிர   நேசத்துடன்  அணுகவேண்டும்!
மேலும்,   ஒருவன் மிச்சம் மீதமின்றி  தன்னை முழுமையாக வாழ்க்கைக்குக்
கொடுத்தாகவேண்டும்!
(-மா.கணேசன்/வாழ்க்கை மகிழ்ச்சியானதா? துன்பமானதா?/11-03-2017)*

'உயிர்-வாழ்தல்'    என்பது    உண்மையான,   முழுமையான  வாழ்க்கையல்ல
எனும்  புரிதலில்  இருந்து  தொடங்குகிறது அசலான ஆன்மீகம்!   "வாழ்க்கை
என்றால் என்ன?"   எனும்  கேள்வியுடன்  தொடரும் இடைவிடா விசாரத்துடன்
மட்டுமே அசலான மனிதவாழ்க்கை தொடங்குகிறது!  அதற்கு  முன்னர் ஒரு
போதும் இல்லை!
(-மா.கணேசன்/விசார விளக்கு/ 25.12.2013)*

"உயிர்-வாழ்தல்   என்பது   உண்மையான   முழுமையான  வாழ்க்கையல்ல!"
எனும் புரிதலை  ஒருவர்  எளிய தர்க்க ரீதியான சிந்தனையின்  மூலமாகவே
கூடப் பெற்றுவிட முடியும்! ஆனால், தர்க்கரீதியான அறிவு மட்டும் போதாது!
ஏனெனில், தர்க்கரீதியான சிந்தனை  மறைந்திருக்கும்  உண்மையைச் சுட்ட
மட்டுமே    உதவும்;   அதனுடன்   ஒன்றிடவோ,   பொருந்திடவோ  உதவிடாது;
அதாவது அது உணர்வில் உறைக்கும் படியான அனுபவபூர்வமான அறிவாக
மலராது!

ஒருவன் வாழ்க்கையை அதி தீவிரமாக நேசிக்கையில், அவனது  நேசம் முழு
மைப்படும் பட்சத்தில், அவனுக்கும், அவனது நேசத்திற்குரிய அம்சத்திற்கும்
(வாழ்வின் இலக்கிற்கும்)இடையேயான தூரம் நீங்கிவிடும் அற்புதம் நிகழும்!
ஆனால்,  வாழ்க்கையை  நேசித்தல்  என்பது வாழ்க்கைப் பரப்பில் உள்ளவற்
றில்  சிலவற்றைத்  தெரிவுசெய்து விரும்புதல் அல்ல!  மாறாக,  மிக எளிதாக
மனதைக்கவரும்  மேலோட்டமான விஷயங்களையும், உடனடியாக மகிழ்வு
தரும்    துய்ப்புக்குரிய   அம்சங்களையும்   கடந்து  வாழ்வு  மொத்தத்தையும்
நேசித்தலே "வாழ்க்கையை நேசித்தல்"  என்பதாகும்!   அதாவது,   ஒருவனுள்
வாழ்க்கையைப்  புரிந்து கொள்ள வேண்டும்  எனும்  உணர்வு  பிறவனைத்து
விருப்பங்களையும், ஈடுபாடுகளையும் விட மேலோங்கி ஒருவனை முழுமை
யாக   ஆக்கிரமிக்கும்  வண்ணம்  அமைதல்  வேண்டும்!   மனிதனிடம் புனித
மான  எதுவும் தோன்றமுடியுமெனில், அது வாழ்க்கையைப்  புரிந்து கொள்ள
வேண்டும் எனும் தீவிர உணர்வு, அல்லது,  தூய விருப்பம், பேரார்வம் என்பது
மட்டுமே ஆகும்!

மனிதன் தன் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்கனவே அவனது உடலில் முன்
பதிவு செய்யப்பட்டுள்ள  இயல்பூக்கிகள்,  அதாவது  பசி,  தாகம்,  பாலுணர்வு
போன்ற  தூண்டுதல்கள்,  ஏவல்கள்  மட்டுமே போதாது!  பெரும்பாலான மனி
தர்கள் இயல்பான தூண்டுதல்களுக்குப் பதிலளிப்பதையே வாழ்க்கையென
(விலங்கு  ஜீவிகளைப் போல)   வெறுமனே   உயிர்-வாழ்ந்து   செல்கின்றனர்!
ஆனால்,  வெறுமனே  உயிர்- பிழைத்துச் செல்வதற்கு யாதொரு காரணமும்,
நோக்கமும், குறிக்கோளும், இலக்கும் எதுவும் தேவையில்லை! ஆனால்,  ஒரு
மனிதஜீவியாக வாழ்வதற்கு காரணம்,நோக்கம்,குறிக்கோள்,இலக்கு யாவும்
அவசியம்!   இவையில்லாமல்  மனிதன்  மனிதனாக  வாழ இயலாது!  எங்கே
செல்கிறோம்  என்பதே தெரியாமல் ஒருவர் பயணிப்பது அர்த்தமற்றதாகும்!
அதே வேளையில்,   வாழ்க்கையின்  குறிக்கோள் மற்றும்  இலக்கை ஒருவன்
அறிய விரும்பினால்,அதற்கு அளவிடமுடியாத அதீதமான ஆவல் வேண்டும்!

ஒருவர்    ஒரு  குறிப்பிட்ட செயலைச்செய்ய விரும்பினால், உதாரணத்திற்கு,
ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு
அவர் பிரத்யேக நாட்டத்தைச் செலுத்தியாகவேண்டும்!அதாவது, இசைக்கரு
வியை  வாசிப்பதென்பது  அவரது  வாழ்க்கையாகவே மாறியாக வேண்டும்!
அதேபோல,  வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் செயல்பாடு  என்பதும் ஒரு
வரது வாழ்க்கையாக ஆகிடவேண்டும்! ஆனால்,துரதிருஷ்டவசமாக மனிதர்
களின்  வாழ்வில்  உயிர்-பிழைத்தலுக்கான  உத்தியோகமும்,  பல்வேறு ஈடு
பாடுகளும், பாத்திரங்களை வகிப்பதும் . . . .வாழ்க்கையாக மாறியுள்ளன!

வாழ்வின் நோக்கத்தை அறியாத மனிதன் மனிதனல்ல,அவன் இன்னும் ஒரு
விலங்குதான்!  சொந்த நோக்கம் கொண்ட மனிதன் வழி தவறிப்போனவன்!
வழியைத்தேடி  அலைந்து கொண்டிருப்பவன் ஒருபோதும் ஊர் போய்ச் சேரு
வதில்லை! உயிர்த் துடிப்புள்ளவன்  வெறுமனே  உயிர் பிழைத்திருக்கிறான்!
உணர்வுத் துடிப்புள்ளவன்  மட்டுமே  உண்மையில்   வாழ்கிறான்!  உணர்வுப்
பெருக்கு கொள்ளாத  மனிதன்  உண்மையை  ஒருபோதும்  அறிய  முடியாது!
நோக்கம் உணர்ந்த மனிதன், தானே வழியும் இலக்குமானவன்!
( -  மா.கணேசன்/பாதையற்ற பயணம்  / 02.06.2016)*

"எல்லாம்   சேர்ந்தது  தான்  வாழ்க்கை!"    என்பார்   உண்மை   அறியாதோர்!
வாழ்க்கை என்பது ஒரு கூட்டுப்பொருளுமல்ல,அது கூட்டாஞ்சோறு விவகார
முமல்ல!  மாறாக,  எல்லாமும்,  ஒவ்வொரு  மனிதனின் உள்ளேயும் ஒருங்கே
மையப்படும் ஒருமை நிலையே வாழ்க்கை என்பதாகும்!  அந்த  ஒருமையை
நோக்கிய பயணமே  "வாழ்தல்"  என்பதாகும்!  மனித ஜீவிகளைப்  பொறுத்த
வரை  அப்பயணம்  உணர்வைக் கொண்டும்,  புரிதலைக் கொண்டும்  நிறை
வேற்றப்படும் ஒன்றாகும்!வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாதவனும் தவளை
யும் ஒன்றுதான்!

பயணமா? அல்லது பயணத்தின் இலக்கு நிலையா? எது முக்கியம் என நாம்
பட்டிமன்றம்  நிகழ்த்திக் கொண்டிருக்கலாம்!  ஆனால், இந்த ஒட்டு மொத்த
பிரபஞ்சமும்  ஒரு ஒற்றை இலக்கை நோக்கியே இயங்கிச் செல்கிறது! மிகத்
தொலைவிலுள்ள அந்த  இலக்கு நிலையை முன்வைத்துத்தான் இப்பிரபஞ்ச
மும்,  அதிலுள்ள ஒவ்வொன்றும், அனைத்தும் அர்த்தம் பெறுகின்றன!  அந்த
இலக்கை அடையும் வழிமுறையில் ஒவ்வொரு அம்சமும்,பொருளும்,நிகழ்வு
முறையும் அதுஅதற்கு உரிய இடத்தில், தம்தம்  பங்குபணியை ஆற்றுவதன்
வழியாக  தமது   இருப்புக்கான  நியாயத்தையும், அர்த்தத்தையும் வாழ்வை
யும் பெற்றிடுகின்றன! ஆகவே, இலக்கு நிலைதான் முக்கியம்;  அது பயணத்
தின்  முடிவை  மட்டும்   குறிக்கவில்லை,     மாறாக,    பயணத்தின்  மூலமும்,
ஆதாரமும் அதுவேதான்!

உண்மையில், வாழ்க்கை  (யின் சாரத்தைப் பொறுத்தவரை)  அது  ஒரு தனி
அம்சமே!  உள்ளவையனைத்தும்  "வாழ்க்கை"யை  எட்டுவதற்கான ஏற்பாடு
களே,  படிக்கட்டுகளே தவிர,   அவை  வாழ்க்கையல்ல!    வழியைப்    பற்றிக்
கொண்டு  இலக்கைத் தவற விடுவது என்பது தற்கொலைக்குச் சமமானதே!
மனிதன் நூறு ஆண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் உயிர்-வாழ்ந்தாலும்
வாழ்-காலம் என்பது வாழ்க்கையல்ல! இன்னும் வாழ்க்கைத்தேவைகள் என்
பவையும் வாழ்க்கையல்ல! நிலைமைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள்,சம்பவங்
கள், நிகழ்வுகள், விபத்துகள் உட்பட  எதுவும்  வாழ்க்கையல்ல! இவற்றையே
வாழ்க்கை  என  வாழ்ந்து செல்லும்வரை ஒருவன் வாழ்க்கையைத் தரிசிப்ப
தில்லை! உண்மையான வாழ்க்கையினுள் பிரவேசிப்பதுமில்லை!


'வாழ்-கால வரையறை விதி'  என்று ஒன்று உள்ளது!   அது  என்ன விதி என்ன
வென்றால்,  நீங்கள்  வாழ்க்கையை   முறையாக,   முழுமையாக   வாழ்கிறீர்
களோ  இல்லையோ  அவ்விதி  உங்கள் உடல், மனம், மற்றும் உணர்வு நிலை
களுக்கேற்ப;   ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப்பிறகு,  அது  ஐம்பது  ஆண்டு
களோ,அறுபது அல்லது, எழுபது,அல்லது ஒரு நூறு ஆண்டுகளுக்குப்பிறகோ
அல்லது    இடையிலோ     எப்போது   வேண்டுமானாலும்   உங்கள்  கதையை
முடிவிற்குக் கொண்டுவந்திடும்!  ஒரு  மனிதன்  எவ்வளவு ஆண்டுகள் உயிர்
வாழக்கூடும் என்பதை முன்னறிய முடியாததால்; ஒவ்வொரு மனிதனும் தம்
வாழ்-காலத்தை,  வீணான  விஷயங்களிலும்,   ஈடுபாடுகளிலும்,   வாழ்வின்
அசலான இலக்கிற்குப் புறம்பான இலட்சியங்களிலும் விரயம் செய்திடாமல்
முறையாக, முழுமையாக தம் வாழ்க்கையை வாழ்ந்திடுவது அவசியமாகும்!

இந்த விதி உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழச்சொல்கிறது!அதற்கு
வாழ்க்கை  என்றால்  என்ன  என்று விரைந்து புரிந்து கொள்ளச் சொல்கிறது!
ஏனெனில்,   அறிதல்,    தெளிதல்,   புரிதல் தான்   வாழ்தலும்,  வாழ்க்கையும்,
இலக்கும்   என்று   அது போதிக்கிறது!   அது சரி,   ஆனால்,   வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்  விஷயத்தில்  விரைவும் அவசரமும் ஏன் என்று கேட்கிறீர்
களா?   ஏனென்றால்,  வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை
ஒருவர்  மிக அரிதாகவே  தேர்வு செய்கிறார்;  மேலும், அவ்வாறு தேர்வு செய்
கிறவர்களின்   விகிதமும்   ஒரு   சதவீதத்திற்கும்  குறைவே  என்பதால்தான்
அவசரத்தின்  அவசியம் வலியுறுத்தப்படுகிறது!  வாழ்க்கை என்றால் என்ன
என்று  புரிந்து கொள்ளும்  விஷயத்திற்கு,  99 %  பேர்கள்  அந்நியர்களாகவே
இருக்கிறார்கள்!

வாழ்க்கையைப் புரிந்துகொள்வதன் அவசர-அவசியத்தை ஒருவர் தன்னுள்
உணர்ந்து  அதை  சிரமேற்கொள்ளத்தொடங்கிவிட்டால்,  அதன்பிறகு  அவர்
மிக நிதானமாகவும்,பரபரப்பின்றியும்,அமைதியாகவும் தன் வாழ்க்கையை
வாழும் கலையைத் தானே கற்றுக் கொள்வார்!  ஏனெனில், அசலான வாழ்க்
கைக்குப்  புறம்பான  மதிப்பீடுகள்,  நடைமுறைகள்,  விவகாரங்கள், செயல்
பாடுகள்,  ஈடுபாடுகள் ஆகியவற்றின் மட்டுப்பாடுகளையும்,  பொருத்தமின்
மையையும் அவராகவே புரிந்துகொண்டு, அவசியமான,மிகவும் அத்தியாவ
சியமான, அர்த்தமுள்ள தேவைகளை, விஷயங்களை மட்டுமே நாடித்தேடிப்
பெற்று தேவையற்ற அலைக்கழிப்பின்றி நிறைவுடன் வாழ்வார்!
( - மா.கணேசன்/ வாழ்-கால வரையறை விதி! / 20.12.2016)*

   * மேற்கோள் காட்டப்பட்ட பகுதிகளை அந்தந்த தலைப்புகளில் ஏற்கனவே
      வலைப்பதிவுகளாக வெளியான கட்டுரைகளுக்குச் சென்று அவற்றின்    
      பொருந்துமிடங்களில் முழுமையாகக் காணவும்.
          வலைத்தள முகவரி  vicharamarg.blogspot.in

மா.கணேசன்/ நெய்வேலி/ 21-03-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...