
•
நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவையெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை எதிர்கொள்கிறது என்பது போன்ற விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள், எவையும் முக்கியமல்ல! ஏனெனில், அவை எதுவும் இறுதி
யானவையல்ல! மாறாக, அவை யாவும், இறுதி அர்த்தத்தை நோக்கிய நதி
யின் பயணவழிச் சாட்சியங்கள், வேடிக்கைக்காட்சிகள், அவ்வளவே! நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச் செல்லச் செல்ல, தான் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும் அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!
- நான் யார்?/ மா.கணேசன்/21.02.2017
•
நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை அடைவது என்பதை ஒரு கணமும் மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக இல்லாமல்;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன் தன் வாழ்வின் ஒப்பற்ற ஒரே இலக்கான மெய்ம்மையை அடைவது
என்பதை ஒரு கணமும் மறப்பானெனில் அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!
- ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!/மா.கணேசன்/13.05.2017
•
வாழ்க்கை என்பது ஒரு நதியின் இயக்கத்தை ஒத்தது ஆகும்; சமுத்திரத்தை
சென்றடைவதே நதியின் ஒரே குறிக்கோளும் இலக்கும் ஆகும்!
அதேவேளையில்,ஒரு நதியானது தனது இலக்கை அடையவேண்டுமெனில்,
அதன் இயக்கம் தொடக்கத்திலிருந்தே சமுத்திரத்தை நோக்கியதாக
அமைந்திருப்பது அவசியமாகும்! அதாவது, நதியானது காடு மேடு என்று
சுற்றித் திரிந்துவிட்டு, திடீரென, சமுத்திரத்தை நோக்கிப்பாய்ந்து செல்ல
முடியாது! மேலும், நதியிடம் யாதொரு வரைபடமும் இல்லை என்றபோதி
லும், அது, புவி ஈர்ப்பை தனது வழிகாட்டியாகக் கொண்டு பாய்ந்து சென்று
முடிவில் சமுத்திரத்தை அடைந்துவிடுகிறது! அது போலவே, மனிதன் தனது
வாழ்க்கையின் இலக்கை, முழுமையை அடைவதற்கு வரைபடம் எதுவும்
தேவையில்லை! நதிக்கு புவி-ஈர்ப்பு போல, மனிதனுக்கு "உணர்வு-ஈர்ப்பு"
தான் வழிகாட்டியாகும்! நதியானது மேட்டிலிருந்து பள்ளத்திற்குப்பாயும்;
(மனித) உணர்வு பள்ளத்திலிருந்து மேட்டிற்கு உயரும்! இந்த அம்சம் தான்
பெரும்பாலான மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது! அதாவது மேட்டி
லிருந்து பள்ளத்திற்கு இறங்குவது எளிது; பள்ளத்திலிலிருந்து மேட்டிற்கு
உயருவது மிக்கக் கடினம்!
எவ்வாறு, நதியின் இயக்கமானது தொடக்கத்திலிருந்தே தனது இலக்கான
சமுத்திரத்தை நோக்கியதாக அமைந்துள்ளதோ, அவ்வாறே மனிதனின்
வாழ்வியக்கமும் தனது வாழ்வின் இலக்கான அர்த்தம், உண்மை, முழுமை
ஆகியவற்றை நோக்கியதாக அமைவது அவசியம்! நதியானது அது தொடங்
கிய இடத்திலிருந்து தன் அடைவிடம் சேரும்வரை ஓய்வில்லாமல் பாய்ந்து
சென்று கொண்டேயிருக்கிறது; அது தன் பாதைநெடுகிலும் தான் சந்திக்கும்
எதனுடனும் தங்கிவிடுவதுமில்லை, பிணைத்துக் கொள்வதுமில்லை, அடை
யாளப் படுத்திக்கொள்வதுமில்லை! நதியானது எத்தகைய நிலப்பரப்பின்
மீது பாய்ந்து சென்றாலும், அதன் உய்வும், முழுமையும் சமுத்திரத்தை அடை
வதிலேயே உள்ளது! நதிக்கும் அது பாய்ந்து செல்லும் நிலப்பரப்புகளுக்கும்
இடையேயான உறவு என்பது மிகத் தற்காலிகமானது! நதியின் ஒரே உறவு
சமுத்திரம் மட்டுமே! தன் இலக்கை அடையும் குறிக்கோளிலிருந்து வழுவா
மல், சிந்தாமல் சிதறாமல் செல்லும்பொருட்டு நதி தனது கரைகளை, கட்டுப்
பாடுகளைத் தானே உருவாக்கிக்கொள்கிறது!
ஆம், நதியைப்போலவே மனிதனுக்கும் கரைகள், சுய-கட்டுப்பாடுகள் அவ
சியமாகும்! அவற்றைவிட, இலக்கு குறித்த ஒற்றை மனம்கொண்ட தன்மை
(Single-Mindedness)மிகமிக அவசியமாகும்! இலக்கு குறித்த தீவிரமான
உணர்வு இல்லாமல் வெறும் கட்டுப்பாடுகளால் ஒரு பயனுமில்லை! மேலும்,
மனிதனுக்கு உண்மை குறித்த இடையறாத (ஓய்வில்லாத) விசாரமும் அவசி
யமாகும்! நதியைப்போலவே, மனிதனுக்கும் இவ்வுலகில் எதனுடனும் உறவு
என்பது இருக்கமுடியாது! எல்லா உறவுகளும் தற்காலிகமானவையே! ஏனெ
னில், உண்மை மட்டுமே மனிதனின் ஒரே நிரந்தர உறவாகும்! ஏனெனில்,
உண்மைதான் மனிதனது சாரம் அல்லது ஆன்மா ஆகும்! உண்மை என்பது
பூடகமானதொரு கருத்தோ, கோட்பாடோ, புரியாத நுட்பச் சொற்களைக்
கொண்டமைந்த தத்துவ விளக்கமோ அல்ல! மாறாக, உண்மை என்பது ஒவ்
வொரு மனிதனும் அடையக்கூடிய உச்ச நிலை உணர்வாகும்! அனைத்தும்
- இப்பிரபஞ்சம் முழுவதும் - ஒரு ஒற்றைப் புள்ளியில் குவிக்கப்பட்டு
அடையப்படும் ஒருமையும் முழுமையுமான உணர்வுமயமான மெய்ம்மை
தான் உண்மையாகும்! இது வித்திலிருந்து தோன்றிய மாபெரும் விருட்சம்
மீண்டும் வித்தினுள் அடங்குவதை ஒத்ததாகும்!
- வாழ்-கால வரையறை விதி! /மா.கணேசன் / 20.12.2016
•
சமுத்திரம் செல்ல வழிகேட்கும்
நதியும் உண்டோ?
சமுத்திரம் சென்றடைய நதிக்கு
வழி சொல்பவன் மூடன்!
தனது நோக்கத்தை இழந்த நதி
நதியல்ல, தேங்கிய குட்டை!
சேற்றுக்குட்டைக்கு சமுத்திரம்
சேரும் எண்ணம் தோன்றுமா?
வெள்ளப்பெருக்கெடுக்காத நதி
ஒருபோதும் சமுத்திரம் சேராது!
தன்னிலிருந்தே உத்வேகம்,விவேகம்
வேகம் மூன்றையும் நதி பெறுகிறது!
தன்னுள் வெள்ளம் கொண்ட நதிக்கு
தடைகள் ஒரு பொருட்டல்ல!
நதிமூலம் ஆராய்வதில்லை நதி!
தன் இலக்கு மறப்பதில்லை
தவறுவதுமில்லை!
*
தான் தோன்றிய கணத்திலிருந்து
இடைவழியில் என்ன நேர்ந்தாலும்
நேராவிட்டாலும் தங்காமல், தேங்காமல்
தடைகளைக்கண்டு தயங்காமல், மயங்காமல்
தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்
நதியின் எண்ணம், குறிக்கோள், இலட்சியம்,
இலக்கு யாவும் சமுத்திரச் சங்கமம் மட்டுமே!
*
நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
பற்பல அனுபவங்கள்!
எதிலும் சிக்கித் தேங்கிடாத நதியே
சமுத்திரம் அடையும்!
வற்றாத சமுத்திரமே நதியின் முற்றான
பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
இடைவழியிடங்களோ இன்னும்
நெடும் பயணமோ அல்ல முக்கியம்!
வெள்ளப் பெருக்கெடுத்திடும் வேகமே
வெற்றியின் ரகசியம் !
சமுத்திரச் சங்கமமே நதியினை
முழுமைப்படுத்திடும் , நிரந்திர
நிறைவு தந்திடும் இணையிலா
இறுதி அனுபவம்!
*
- பாதையற்ற பயணம் /மா.கணேசன் / 02.06.2016
•
நதியின் இலக்கு, முடிவு, முழுமை, அர்த்தம், நிறைவு . . . .யாவும் அது
சமுத்திரத்துடன் சங்கமிப்பதில் மட்டுமே அடங்கியுள்ளது. நதிக்கும்,
சமுத்திரத்திற்கும் உள்ள அதே ஒற்றுமையும், தொடர்பும், பொருத்தப்
பாடும், வித்தியாசமும் தான் மனிதப்பாசத்திற்கும், ஆழமான அன்பிற்கும்
ஆனதுமாகும்
மனித உணர்வு என்பது ஒரு நதியைப் போன்றது. நதியானது
இடைவழிகளில் எதனாலும் தடுக்கப்படவில்லை, தேக்கப்படவில்லை
என்றால் அது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைவது உறுதி.
உணர்வும் அவ்வாறே இடைவழிகளில் யாதொரு பொருளைக்கொண்டும்,
உறவைக்கொண்டும், கற்பனை அல்லது கோட்பாட்டைக் கொண்டும்
கட்டப்படவில்லை; எதனுடனும் பிணைக்கப்படவில்லை எனில் மனித
உணர்வானது "முழு-உணர்வு" எனும் பேருணர்வு நிலையைச் சென்றடைந்து
தனது முழுமையைத் தழுவிக்கொள்ளும் !
- அன்பு:மகத்தானதொரு இன்மை!/மா.கணேசன் /22.03.2016.
•
'நதி' மலையில் தான் தோன்றுகிறது
என்ற போதிலும் அது
மலைக்குரியதல்ல - உண்மையில்
நதியை மலை உற்பத்தி செய்திடவில்லை!
மாறாக, நதி உற்பத்தியாவதற்கு
உகந்த இடமாக மலை உள்ளது
அவ்வளவு தான்!
மற்றபடி நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது!
நதியைப்போலவே, மனித -உணர்வானது உயிருள்ள மனித-உடலில்
குறிப்பாக, மனித-மூளையில் தோன்றிய போதிலும், அது இக்கரையைச்
சேர்ந்த உடலையோ, உயிரையோ, இன்னும் உலகையோ சேர்ந்ததல்ல!
மாறாக, உணர்வு என்பது "முழு-உணர்வு" எனும் மறுகரையைச்சேர்ந்தது!
நதியானது பாய்ந்தோடிடக் கூடியது, அதைத் தேங்கிடச் செய்தால், அது
இக்கரையையே பிரதிபலிப்ப தாயிருக்கும் - அது சமுத்திரத்தைச்
சென்றடையாது! ஆனால், அது வெள்ளப்பெருக்கெடுத்திடும் பட்சத்தில்
பாய்ந்தோடிடக்கூடிய முடுக்கத்தையும் வேகத்தையும் பெற்றிடும் - பிறகு
நதியானது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைந்திடும்!
அது போல, உங்களது தொடக்க-நிலை உணர்வில் நீங்கள் தேங்கி விடும்
பட்சத்தில், உங்கள் உணர்வானது இக்கரைக்கு உரியதாக, இக்கரையை
மட்டுமே பிரதிபலிப்பதாக; இக்கரைக்குரிய உடலுடனும், அதனுடைய
பிராணித்தனமான இச்சைகள், பசிகள், மற்றும் மேலோட்டமான தேவை
களுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுவிடும் அபாயத்தில்
சிக்குண்டு விடும்! அதன் பிறகு, உங்கள் உணர்வை இக்கரையிலிருந்து
பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!
- மறு கரையிலிருந்து..... /மா.கணேசன் / 19.02.2010
•
ஒரு ஆறு என்பது ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பதால், ஒரு முறை
நாம் குளித்த அதே தண்ணீரில், இரண்டாவது முறை நாம் குளிக்க
முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும் இறுதியானதல்ல! ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல்
ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித வாழ்க்கைக்கும் இலக்கு உள்ளது. மனிதன் வெறுமனே வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை; அதில் அர்த்தமும் இல்லை! இன்னும் அவன்
எப்போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!
இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல இயங்கிக் கொண்டேயிருக்கும் ஒன்றல்ல! அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!
- மாற்றமனைத்தும் முடிவுறும்! / மா.கணேசன்/ 16.02.2017
•
நதி மலையில் உற்பத்தியாகிறதே
தவிர
மலை நதியை உற்பத்தி செய்வதில்லை!
நதி உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக மலை
இருக்கிறது - அவ்வளவு தான்!
நதி என்பது மலை, பள்ளத்தாக்கு, காடு, சமவெளி,
நாடு, நகரம்.... யாவற்றிலிருந்தும் வேறானது!
நதி பாய்ந்துசெல்லும் மலை மற்றும் பிற
அனைத்து இடப்பரப்புக்களையும் தற்காலிகமாகச்
சார்ந்துள்ளதே தவிர எவற்றையும் அது சேர்ந்ததல்ல!
நதி சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!
நதி மட்டுமே சமுத்திரத்தைச் சென்று சேரவேண்டுமே
தவிர - அது மலை, காடு, நாடு, நகரம் அனைத்தையும்
கொண்டு சேர்க்கத்தேவையில்லை!
*
நதியைப்போலவே,
மனித உணர்வும் உடலில் (மூளையில்)
உற்பத்தியாகிறதே
தவிர, உணர்வை உடலோ
(மூளையோ) உற்பத்தி செய்வதில்லை!
உணர்வு உற்பத்தியாவதற்கு உடலும், மூளையும்
ஏற்ற இடமாக இருக்கிறது - அவ்வளவு தான்!
மனித உடல், மூளை அல்லது மனம்
என்பது வேறு; உணர்வு என்பது இவற்றிலிருந்து
முற்றிலும் வேறான தன்மையுடையது!
உணர்வானது உலகம், உடல், புலன்கள், மனம், எண்ணம்
ஆகியவற்றைத் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே
தவிர உணர்வு இவற்றைச் சேர்ந்ததல்ல!
மனித உணர்வு மகா-உணர்வுச் சமுத்திரமாகிய கடவுளைச்
சேர்ந்தது, சென்று சேர வேண்டும்!
மனித உணர்வு மட்டுமே முழு-உணர்வாகிய கடவுள் எனும்
இறுதி மெய்ம்மையை அடைய முடியும், அடைந்தாக
வேண்டுமே தவிர, உடலுக்கு முக்தி தேவையில்லை!
*
"வாழ்க்கையை கணத்திற்கு கணம்
விழிப்புணர்வோடு வாழ வேண்டும்!"
என சிலர் சொல்கிறார்கள்.
இது சலிப்புட்டும் வேண்டாத வேலை!
கணத்திற்கு கணம் வேண்டாம்!
எப்போதாவது ஒரே ஒரு கணம் மட்டும்
முழுமையாக விழிப்புணர்வோடு
வாழ்ந்திடுங்கள் போதும் - ஏனெனில்
ஆற்றில் வெள்ளம் எப்போதும்
ஏற்படுவதில்லை!
*
வெள்ளப்பெருக்கு கொள்ளாத நதி
ஒருபோதும் சமுத்திரத்தைச்
சென்றடைவதில்லை!
உணர்வுப்பெருக்கு கொள்ளாத மனிதன்
ஒருபோதும் உண்மையை அறிவதில்லை!
*
- தலைக்குமேல் வெள்ளம் /மா.கணேசன்/ 23.12.2008
மா.கணேசன்/நெய்வேலி/23.02.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment