
குற்றங்களுக்குரிய தண்டனைகள் உள்ளன! ஆனால்,குற்றவுணர்வுக்கு தனியே
தண்டனை ஏதுமில்லை! ஏனெனில், குற்றவுணர்வே குற்றமும், அதற்கான
தண்டனையும் ஆகும்! ஆகவே ஒருவன் குற்றவுணர்வு கொள்ளாத வகையில்
வாழ்வது மிக மிக முக்கியம்! இதன் அர்த்தம், தவறே செய்யாமல் வாழ்வது
என்பது அல்ல! மாறாக, மிக முக்கியமானதை, அடிப்படையானதைச் செய்து
முடிக்கத் தவறாமல் இருப்பதும்; தவறு எனத் தெரிந்ததை மீண்டும் செய்யா
திருப்பதும் ஆகும்!
குற்றவுணர்வு என்பது இருத்தலியல் உண்மை (Existential fact)எனவும்
அதை நாம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதில் எவ்விதத் தெரிவுசெய்தலுக்கும்
(choice) இடமில்லை எனவும் சொல்லப்படுகிறது.
வாழ்வில் முக்கியமானது எது, மையமானது எது என்பவை குறித்து ஒருவன்
சிந்திக்கவில்லை; அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்று சொல்பவன் ஒரு
நாகரிக விலங்கு, அவன் மனிதன் அல்ல! வாழ்க்கையின் அர்த்தம் பற்றியும்,
குறிக்கோள், மற்றும் இலக்கு பற்றியும் சிந்தித்தறியாமல் வாழ்வது மனிதனுக்
குரிய வாழ்க்கையாகாது!
குற்றவுணர்வு என்பது பலவகைப்பட்டதாகும், அவை பலவழிகளிலும் ஏற்படக்
கூடும்!
ஒருவன் தனது உள்ளார்ந்த அசலான தன்மைக்கு உண்மையாக இல்லாததும்,
தனது உட்பொதிவை வெளிக்கொணரும் வகையில் வாழாததும் ஒருவனுள்
குற்றவுணர்வை ஏற்படுத்தக்கூடும்!
மேலும், 'வாழ்க்கைச் சவாலை' சிரமேற்கொள்ள விரும்பாத சோம்பேறித்தனத்
தினால், ஒருவன் தனது வாழ்க்கைச் சவாலை நிறைவேற்றத் தவறியதற்காக
குற்றவுணர்வு கொள்வதுடன், தன்னையே நொந்துகொள்ளும் 'சுய-வெறுப்பிலும்
வீழ்கிறான்!
குற்றவுணர்வுக்கான காரணத்தை ஒவ்வொருவரும் நேரடியாகத் தாமே கண்டு
பிடித்தால் மட்டுமே அதைக் களைய முடியும்! ஏனெனில், குற்றவுணர்வு நம்
முடைய தவறான செய்கைகளினால் ஏற்படுகிறது; தவறான செய்கைகள் நம்
முடைய தவறான எண்ணங்கள், மற்றும் குறைபாடுடைய சிந்தனைகளினால்
நிகழ்த்தப்படுகின்றன! குறைபாடுடைய சிந்தனைகள் நம்முடைய பொறாமைக்
குணத்தினாலும், தகாத ஆசைகள், அல்லது பேராசைகளினாலும், சுயநலத்தி
னாலும் தோன்றுகின்றன; இவை யாவும், நம்முடைய உணர்வுக் குறைபாட்டி
னால் விளைகின்றன! ஆம்,உணர்வுக்குறைபாடு,அல்லது உணர்வின்மை தான்
அனைத்துவிதக் குற்றங்களுக்கும், தீமைகளுக்கும், குற்றவுணர்வு ஏற்படுவதற்
கும் காரணமாயுள்ளது! ஆக, உணர்வுள்ள மனிதனானவன் மிக்க கவனத்துட
னும், பொறுப்புடனும் சிந்தித்துச் செயல்படுவானேயானால், குற்றங்களும் நிக
ழாது, குற்றவுணர்வுக்கும் இடமிராது!
ஆம், மனிதவாழ்வில் எது முக்கியமானது, மையமானது என்பதையும்; எது
உண்மையான சந்தோஷம், மற்றும் நிறைவு என்பதையும் அவை எவற்றில்
அடங்கியுள்ளன என்பதையும்; வாழ்வின் மிக அசலான குறிக்கோள், இலக்கு
எது என்பதையும் ஒருவன் கண்டுபிடித்து ( இவை அனைத்தும் ஒரே மெய்ம்
மையைத்தான் சுட்டுகின்றன!) அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து
வாழும் ஒருவனுக்கு குற்றங்கள் புரிவதற்கோ, அவை குறித்து குற்றவுணர்வு
கொள்வதற்கோ, கலக்கமடைவதற்கோ, மனம் வருந்துவதற்கோ நேரமிராது!
எனினும், வாழ்க்கை என்பது கத்தி முனையில் நடப்பது போன்றதாகும்!
எவ்வொரு சிறு உணர்வுக்குறைவும், எண்ணமும், சொல்லும், செயலும் சற்று
பிசகினாலும் போதும் அது ஒருவனுள் குற்றவுணர்வை ஏற்படுத்தக்கூடும்!
அதே நேரத்தில், குற்றவுணர்வு இல்லாமலும் ஒருவன் வாழமுடியாது,
சமநிலையையையும், சமநிலை தவறுவதையும் காட்டும் தராசு முள் போல
குற்றவுணர்வு ஒருவனை நெறிப்படுத்தும் விதி (Principle) போன்றதாகும்!
அச்சவுணர்வு எவ்வாறு ஒரு உயிரியின் உடலிலேயே பின்னப்பட்டுள்ளதோ
அவ்வாறு குற்றவுணர்வு என்பது, நன்மை தீமை உணர்த்தும் உணர்வான மன
சாட்சி போல, மனத்தின் அடிப்படையிலேயே பின்னப்பட்டதாக உள்ளது என
லாம்! ஆக, குற்றவுணர்விலிருந்து முற்றிலுமாக, ஒரேயடியாக விடுபடுவது
என்பது இயலாது! அதாவது, குற்றவுணர்வு எழும் போதெல்லாம், நாம் செய்த
தவறென்ன, அல்லது, செய்யத்தவறியதென்ன என்பதை இனம்கண்டு நம்மைச்
சரிப்படுத்திக்கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடியதாகும்!
மேலும், எல்லாப் பிரச்சினைகளும், குற்றங்களும், தீமைகளும் மனிதனின்
உணர்வின்மையால், அல்லது, உணர்வுக்குறைவினால் தான் விளைகின்றன
என்பதால், உணர்வார்ந்த தன்மையையும், உணர்வுக்குறைவையும் எவ்வாறு
சமநிலைப்படுத்துவது என்பதை ஒவ்வொருவரும் அனுபவரீதியாக கற்றுக்
கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து செல்லவேண்டும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment