
தற்கால மனிதர்களின் வாழ்க்கையை உத்தியோகம், உணவு, உல்லாசம் என்ற
இந்த மூன்று சொற்களுக்குள் அடக்கிவிடலாம்! இத்தகைய வாழ்க்கை கற்கால
மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பெரிதாக வேறுபட்டதல்ல என்பதை நாம்
வெகு சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்! கற்கால மனிதனுக்கு வேட்டையா
டுதல் தான் உத்தியோகம், தொழில், வேலை எல்லாம் ஆகும்! நாம் உத்தியோ
கத்திற்குச்செல்கிறோம் என்பது உணவு,மற்றும் பிற அடிப்படைத்தேவைகளைப்
பெறுவதற்காக வேட்டைக்குச் செல்கிறோம் என்பதல்லாமல் வேறென்ன?
'உணவு' என்று இங்கு நாம் குறிப்பிடுவது உணவை மட்டுமல்லாமல் உணவு,
உடை, உறையுள் மற்றும் பிறவனைத்துத் தேவைகளையும் குறிக்கும் ஒரு
ஒற்றைச் சொல் ஆகும்.
'உல்லாசம்' என்பது உள்ளக்களிப்பு தரும் கேளிக்கை, பொழுதுபோக்கு, விளை
யாட்டு, மது, மாது, ஆடல், பாடல், தொலைகாட்சி, 'ஆண்ட்ராய்ட்' கைப்பேசி,
கலை, இலக்கியம், பக்தி, கோயில், குளம், தலயாத்திரை, சுற்றுலா, அரசியல்,
சினிமா, அரட்டை, ஆன்மீகம், சத்சங்கம், சும்மா சோம்பியிருத்தல்....இன்னபிற
வற்றையும் உள்ளடக்கியதாகும்! உல்லாசம் என்பது வாழ்வின் அர்த்தத்தைத்
தேடும் தன்னைக் கடந்து செல்லும் உணர்வார்ந்த முயற்சிக்கு மாற்றாக மேற்
கொள்ளப்படும் தன்னை மறந்திருப்பதற்கான உணர்விழக்கும் உபாயங்களாகும்!
ஆம், அர்த்தம் தேடலுக்கு அர்ப்பணிக்கப்படவேண்டிய காலத்தையும், சக்தியை
யும், சிந்தனையையும் தான் நாம் எதைத்தேடுகிறோம் எனும் புரிதலில்லாமல்
பல வழிகளிலும் 'உல்லாசம்' தேடி பொழுதைக்கழித்து வாழ்க்கையை விரயம்
செய்கிறோம்! ஆனால், அர்த்தத்தின் இடத்தை வேறெதையும்கொண்டு பதிலீடு
செய்ய இயலாது என்பதன் நிரூபணமாக விளைவதுதான் வாழ்வில் அலுப்பும்,
சலிப்பும், நீங்காத வெறுமையும், நிறைவின்மையும், விரக்தியுணர்வும் ஆகும்!
ஆம், அனைத்து உல்லாசங்களும், பொழுதுபோக்குகளும், ஆர்வக்கோளாறான
ஈடுபாடுகளும் மிகத் தற்காலிக விடுவிப்பையும், மகிழ்ச்சியையும் மட்டுமே
அளிக்கும்! ஆக,அர்த்தமறியும் செயல்பாட்டைத் தவிர்த்து வேறு ஈடுபாடுகளை
நாடுபவன் தற்கொலைவாதியே ஆவான்!
தற்கால மனிதர்களின் சுருங்கிய மனங்களுக்கேற்ப அவர்களது உலகமும்
சுருங்கியதாகவே உள்ளது. அல்லது, அவர்கள் புழங்குகிற இடங்களுக்கேற்ப
அவர்களுடைய மனமும், சிந்தனையும் சுருங்கிவிட்டன எனலாம்.பெயரளவில்
தான் நாம் பரந்த இப்பூமியின் மீது வாழ்கிறோம்; ஆனால், உண்மையில் நாம்
வாழ்வது கருத்தியலான, நம் வாட்டத்திற்கேற்ப வடித்தெடுக்கப்பட்ட ஒரு
செயற்கை உலகில் ( Abstracted world) தான் வாழ்கிறோம்! அதை நாம்
நுணுக்கச் சொற்களில் சொன்னால், 'சமூக- பொருளாதார- அரசியல்' உலகம்
எனலாம். இதை ஒரு சிறு உலகம் என்றுகூட சொல்லமுடியாது; மாறாக, அது
ஒரு சிறு தீவு போன்றதே ஆகும்!
நாம் அன்றாடம் புழங்குகிற இடங்களான வீடு, அலுவலகம், தொழிற்சாலை,
கடை வீதி, பொழுதுபோக்கு விடுதி, மதுவிடுதி, கோயில் ஆகியவற்றுக்கு
அப்பால் யாதொரு உலகமும் இல்லை என்பதுபோல வாழ்ந்து கொண்டிருக்
கிறோம். நம்முடைய சிந்தனைகள், நாம் அன்றாடம் புழங்குகிற இடங்களுக்
குரியவைகளாகவும், அவ்விடங்களுடன் தொடர்பு கொண்டவைகளாகவும்
மட்டுமே விளங்குகின்றன! வீடு, குடும்பம், பலவகைப்பட்ட வீட்டுத்தேவைகள்,
உத்தியோகம், பதவி உயர்வுக்கான போட்டி, அதிகாரிகளின் விரட்டல்கள்,
அவர்களைச் சமாளித்தல், சக-பணியாளர்கள், கொடுக்கல்-வாங்கல்,விலைவாசி,
கடன் பெறுதல், வீடு கட்டுதல், பிள்ளைகளைப் படிக்கவைத்தல், போன்றவைத்
தவிர வேறு எதைப்பற்றியும் நாம் சிந்திப்பதில்லை; அவ்வாறு சிந்திப்பதற்கு
ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை, சக்தியும் இல்லை! அவ்வாறு சிந்திப்
பதற்கான அவசியத்தை எல்லா வகைகளிலும், வழிகளிலும் தவிர்ப்பதை
ஊக்குவிக்கும் சூழலுக்குப் பெயர் தான் சமூகம்!
இத்தகைய சமூகத்தில், 'பொருள்' தான் ஆதாரமும், எல்லாமும். ஆகவே,
பொருளாதாரம், சந்தை ஆகியவை மனிதர்களின் வாழ்வினைத் தீர்மானிக்கும்
மையச் சக்திகளாகிவிட்டன! "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!"
ஆகவே, இவ்வுலகில் இடம் பிடிக்க, அல்லது, இருக்கும் இடத்தைத் தக்க
வைத்துக்கொள்ள பொருள் வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், அதிகதி
மாகப் பணம் சம்பாதிக்க வேண்டும்! அப்போதுதான் வாழ்க்கையை மகிழ்ச்சி
யாகவும், நிறைவாகவும் வாழமுடியும் என்று குருட்டுத்தனமாக நம்புகிறோம்!
சனநாயகம் என்பது குதிரைப் பந்தய சூதாட்டம் போலாகிவிட்டது! 'எல்லாரும்
இந்நாட்டு மன்னர்' என்பது சனநாயகத்தின் சாபக்கேடாகிப் போய்விட்டது!
ஆள்பவர் ஆளப்படுபவர் என்ற பிரிவினை இல்லாத ஆட்சி மட்டுமே உண்மை
யான சனநாயகம், அல்லது மக்களாட்சி ஆகும்! ஆள்பவரை நெறிப்படுத்த
வழியில்லாத ஆட்சிமுறை மக்களாட்சியாக இருக்கவியலாது! தகுதியற்றவர்
முதல்-மந்திரியாக மட்டுமல்ல கடைசி-மந்திரியாகவும் கூட ஆக அனுமதிக்க
லாகாது! பெரியளவில் தொண்டர்-படையைக்கொண்ட ஒருவரை, பிரபலமான
ஒருவரை, தகுதியுள்ளவர் என்று கூறிட முடியாது! "எது தங்களை ஆட்சி
செய்யவேண்டும்?" என்பதை மக்கள் துல்லியமாகவும்,தெளிவாகவும் அறியாத
வரை உண்மையான மக்களாட்சி என்பது ஒருபோதும் மலராது!
அரசியல்வாதி என தன்னை அறிவித்துக்கொள்பவன் முதலீடு செய்யாமலேயே
லாபம் தேடும் வியாபாரி! அரசியல்-ஞானம், அரசியல்-அனுபவம், ராஜதந்திரம்
என்று எதுவும் அரசியலில் கிடையாது! முதலில், 'அரசியல்' என்று எதுவும்
தனியே இல்லை! இருப்பது, அனைத்தையும் உள்ளடக்கிய "வாழ்க்கை" என்பது
மட்டுமே! வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல், அல்லது ஞானம் மட்டுமே
நம்மை ஆள முடியும்! தன்னையும், வாழ்க்கையையும் நன்கு புரிந்தவனால்
மட்டுமே தன்னையும், தன்னையறியாத பிறரையும் ஆள முடியும்! ஏனெனில்,
வாழ்க்கையைப் புரிந்தவனுக்கு அரசியலும் புரியும்! தன்னையறியாதவன்
ஆள்பவனாக, தலைவனாக அமைவது என்பது குருடன் ஒருவன் பிற குருடர்
களை வழி நடத்துவது போன்றதாகும்!
முதன்மையாக மனிதன் வாழ்க்கைக்கு (முழுமைக்கு)அர்ப்பணிக்கப்பட்டவனாக
இருக்கவேண்டும், அடுத்ததாகத்தான் தொழில், அல்லது பகுதியம்சமான வேறு
எதற்கும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்!
வாழ்க்கை என்பது பிரதானமாக இரண்டே இரண்டு அம்சங்களைக் கொண்டது
மட்டுமேயாகும்! ஒன்று : உயிர்-பிழைத்தல் எனும் அடிப்படையான அம்சம்.
இரண்டு : உயிர்-பிழைத்தலின் அர்த்தத்தை அறிதல் எனும் உச்சம்! இந்த
இரண்டில் நாம் முதலாவதை மட்டுமே நிறைவேற்றுகிறோம். இரண்டாவது
அம்சத்தை நாம் தொடுவதேயில்லை! அப்படியொரு அம்சம் இருக்கிறது
என்பதே நம்மில் அநேகருக்குத் தெரிய வாய்ப்பில்லை! தெரிய வாய்ப்புக்
கிடைத்தாலும் அதைப்பயன்படுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் நம் அநேகரிடம்
இல்லை! ஆனால், இரண்டாவது அம்சமான வாழ்வின் அர்த்தத்தை அறிதல்
என்பதை நிறைவேற்றாமல் முதல் அம்சமான உயிர்-பிழைத்தல் என்பது
அர்த்தம் பெறாது! ஏனெனில், "அர்த்தம்" தான் மனிதனின் உயிரின் உயிர்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 07-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment