
"இந்த சந்திரசூரியர், நட்சத்திரங்கள் முழுதுக்கும், பூமண்டலத்துச்சாமான்கள்,
பிரபஞ்சம் முழுதுக்கும் அடிப்படையான மூலவஸ்துவை விசாரிக்கிறாய்.
இதுதான் கடைசி விஷயம். இதுதான் மற்ற எதையும் செய்யுமுன் நீ
செய்யவேண்டிய முதல் காரியமும்.
- சாது அப்பாதுரை / தியானதாரா
-•-
இக்கட்டுரை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது டாக்டர் நாகூர் ரூமி
அவர்களால் எழுதப்பட்டு,சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இரண்டாம்பதிப்பாக
2017-ல் வெளியிட்ட 'சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்-ஸ்டீஃபன் ஹாகிங்
- சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்' எனும் நூல் ஆகும்.
டாக்டர் நாகூர் ரூமி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் மிகச்
சிறப்பான நூல் என நான் அவருடைய "சூஃபி வழி" நூலையே கூறுவேன். அந்
நூலில், சூஃபித் தத்துவம் பற்றியும், சூஃபிக்கள் பற்றியும் தமிழ் வாசக உலகத்
திற்கு அறிமுகப்படுத்தியதற்காக நான் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்
துக்கொள்கிறேன்.
அதேவேளையில், 2015-ல் முதல் பதிப்பாகவும்,2017-ல் இரண்டாம் பதிப்பாகவும்
வெளிவந்த, விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் பற்றி 'சக்கர நாற்காலியில் சிக்கிய
பிரபஞ்சம்' எனும் தலைப்பில் டாக்டர் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய நூலில்
காணப்படும் ஒரு சில பலவீனமான அம்சங்களை இங்கே குறிப்பிடுவது அவசி
யமெனப்படுகிறது. முதலில், பாராட்டுக்குரிய ஒரு அம்சம், அதாவது, 'சக்கர
நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்' எனும் தலைப்புப்பற்றிச் சொல்லியாக வேண்
டும். இத்தலைப்பு மிகவும் பொருத்தமானதும் கவிதைப் பூர்வமானதுமாகும்!
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குறும்பிரபஞ்சமே ஆவான்; ஆனால்,
இவ்வுண்மை வெறும் கவிதைப்பூர்வமானது அல்ல! நிச்சயம் பிரபஞ்சத்தைப்
பற்றி மிக ஆழமாகவும், விரிவாகவும் ஆராய்ந்து வரும் விஞ்ஞானி ஸ்டீஃபன்
ஹாக்கிங் அவர்களுக்கேகூட இவ்வுண்மை தெரியுமா என்பது சந்தேகமே.
ஏனெனில், மனிதன் வேறு, பிரபஞ்சம் வேறு என்று காணும் பிளவு பட்ட
பார்வையைத் தொடக்கப்புள்ளியாகக்கொண்டே ஹாக்கிங் போன்ற விஞ்ஞானி
கள் தங்கள் ஆய்வுகளைச் செய்துவருகிறார்கள்! [மனிதன் ஒரு குறும்பிரபஞ்சம்
என்பது குறித்து விரிவாக "கடவுள்புதிர்" (2014) எனும் எனது நூலில் எழுதியுள்
ளேன்]
அடுத்து, டாக்டர் நாகூர் ரூமியின் நூலின் அட்டையில் மூன்றாவதாக ஒரு
தலைப்பும் உள்ளது! அதாவது, 'சரித்திரம் படைக்கும் தன்னம்பிக்கை மனிதர்'
என்பதுதான் அது. ஆனால், உண்மையில், ஸ்டீஃபன் ஹாகிங் எனும் நபர்,
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி, பிரபஞ்சவியல் கோட்பாட்டியலாளர், என்றெல்
லாம் போற்றப்படக்கூடிய அவர் ஒரு அதிசயம் அல்ல! அவர் ஒரு விபத்து!
அவர் மிகவும் வித்தியாசமான நிலைமைகளின் சேர்க்கை ஆவார். ஹாகிங்கை
பீடித்தது போன்ற பல வித்தியாசமான, விநோதமான நோய்கள் பலரைப் பாதித்
துள்ளன; பலர் தங்களது துறைகளில் சிறந்துவிளங்கியவர்களாகவும் சாதனை
படைத்தவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். ஹாக்கிங்-கைப் பொறுத்தவரையில்
அவர் ஒரு பிரபஞ்சவியல் விஞ்ஞானியாக அறியப்பட்டது தான் அவர் இந்த
அளவிற்கு வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவியுள்ளது! மேலும், அந்நோய்
பீடிப்பதற்கு முன்னேயே அவரது ஆர்வம் பிரபஞ்சம் பற்றியதாக இருந்தது.
அதோடு. அவரது ஆர்வம் அவரைச் சிறந்த மாணவனாகவும், பின்னர் பல
விருதுகளைப் பெறத்தக்க கோட்பாட்டுரீதியான கண்டுபிடிப்புகளைச் செய்யும்
விஞ்ஞானியாகவும் மாற்றியது எனலாம்.
விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங்-கைப் பாதித்த நோய், எல்லோரையும் போல்
அவரைச் சாதாரணமாக இயங்கவிடாது அவரது உடலியக்கத்தை முடக்கிவிட்
டது; இதன் விளைவாக அவரது அன்றாட வாழ்க்கை சிரமம் மிகுந்ததாகியது;
யாவற்றுக்கும் மேலாக, அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளை வெளிப்படுத்து
வதற்கு அது பெரும்தடையாக அமைந்துவிட்டது! ஆனால், நிலைமைகள் பல
வகைகளிலும் அவருக்குச் சாதகமாகவே அமைந்து வந்துள்ளன! மற்றபடி
அவர் ஒரு அதிசயமுமல்ல! அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கோட்பாடு
களும் பெரும்சாதனையும் அல்ல! அவரது கண்டுபிடிப்புகள் நியூட்டன், ஐன்ஸ்
டீன் போன்றவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்தவைகளின் தர்க்கரீதியிலான
வளர்ச்சி நிலைகளே தவிர வேறல்ல!
இப்பிரபஞ்சம் எப்போது எப்படித் தோன்றியது? அது இன்னும் எவ்வளவு காலத்
திற்கு இருக்கும்? எப்போது, எவ்வாறு முடிவிற்கு வரும்? இப்பிரபஞ்சம் தோன்
றியதில் கடவுளுக்கு ஏதேனும் பங்கிருக்கிறதா? இப்பிரபஞ்சம் ஏன் ஒழுங்கில்
விதிகளுக்குட்பட்டதாக அமைந்துள்ளது? இவைபோன்ற பல கேள்விகளுக்கு
விடை காண்பதுதான் சிந்தனை துளிர்த்த காலத்திலிருந்து தத்துவச் சிந்தனை
யாளர்கள், விஞ்ஞானிகள், சில கவிஞர்கள் ஆகியோரது பிரதான விசாரமாக
இருந்து வந்துள்ளது, அதன் தொடர்ச்சியில் வந்த ஒருவர்தான் ஹாக்கிங்.
ஆனால், ஹாக்கிங்-ன் கண்டுபிடிப்புகள் யாவும் அவரது துறைக்குள் மட்டுமே
பிரமாதமானவை, பெருமைக்குரியவை; மற்றபடி அக்கண்டுபிடிப்புகளினால்
மனிதகுலத்திற்கு எவ்வொரு உதவியும்,பயனும் கிடையாது! இதற்குக்காரணம்
பிரபஞ்சம் தொடர்பான எல்லா கேள்விகளையும் அவர் கேட்கவில்லை, கணக்
கில் கொள்ளவில்லை. குறிப்பாக, பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும், அதாவது,
உணர்வு (Consciousness)க்கும், உள்ள தொடர்பு பற்றியுமான கேள்விகளை
அவர் கேள்விப்பட்டதாகவோ, கணக்கில்கொண்டதாகவோ தெரியவில்லை!
ஆனால், டாக்டர் நாகூர் ரூமி, தனது நூலில், ஹாகிங் கிட்டதட்ட எல்லாக்
கேள்விகளுக்குமான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டார் என எழுதியுள்ளார்!
அதேநேரத்தில்,அவை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா? அல்லது
மனிதகுலத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கைகளையும் தகர்க்கக்கூடியவையா?
என்று கேள்விகளை எழுப்பிவிட்டு, உடனே, இக்கேள்விகளுக்கான பதில்கள்
நமக்கு இப்போது முக்கியமல்ல என்று சொல்லி தான் ஒளியூட்டவிரும்பிய
அம்சத்திற்குச் சென்று விட்டார்! அதாவது, ஹாகிங்-கை புகழ்பாடச் சென்று
விட்டார்! உடல் முழுக்க இயங்க முடியாத நிலையில்,மனம்,மூளை மட்டுமே
தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு மனிதன், தன் சிந்தனைகளின் மூலம்
இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியாக விளங்க முடியும் என்பது
ஒரு மனிதனால் செய்ய முடிந்த உச்சகட்ட சாதனை என்று சொல்கிறார்!
ஆனால், உடல் முழுக்க இயங்கினாலும், இயங்காமல் போனாலும்,மனிதனின்
மூளையும், மனமும் வேறொரு பரிமாணத்துடன் தொடர்பு கொண்டிருப்பதற்
காக மட்டுமே உருவாக்கப்பட்டவையாகும்! எத்தனையோ யோகிகள், வலியத்
தாங்களே தங்களது உடலை சலனமற்ற நிலையில் ஒரே இருப்பாக இருத்திக்
கொண்டு சமாதி நிலையில் ஆழ்ந்து போயுள்ளனர். ஏன், டாக்டர் நாகூர் ரூமி
யின் குருநாதரான ஜலாலுதீன் ரூமியும் இவ்வாறு சமாதி நிலையில் (ஸமாஃ)
ஆழ்ந்து போனதும், ஒருமுறை ஷம்ஸ் தப்ரேஸ் அவர்களுடன் கூடி நாற்பது
நாட்கள் வரை உண்ணுதலும், பருகுதலும் முற்றிலுமாகத்துறந்து சில்லாவிலே
அமர்ந்திருந்ததும் பதிவுசெய்யப்பட்டுள்ளனவே!
அடுத்து, ஹாகிங் அவர்கள் தன்னம்பிக்கை கொண்ட மனிதரும் அல்ல! அவர்
செய்ததெல்லாம், வேறுவழியில்லாமல், நிகழ்வுகளின் போக்கிலேயே சென்றது
மட்டுமே! உண்மையில், ஹாகிங்கை நிலை நிறுத்தியது எதுவெனில், டாக்டர்
நாகூர் ரூமியின் குருநாதர் சொல்லிய அந்த விஷயம் தான். அதாவது, 'வாழ்க்
கையில் நமக்கு ஒரு தீவிரமான நோக்கமிருக்குமானால், அந்த நோக்கத்தை,
லட்சியத்தை அடையவேண்டும் என்பதற்காகப் போராட நாம் முயற்சி செய்
வோமானால், அந்த லட்சியத்தை அடையும்வரை நம் உடல் ஆரோக்கியமான
தாக இருக்கும், அதுவரை இறப்பும் வராது' எனும் இந்த உண்மை மட்டுமே!
விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங்-கைப் பொறுத்தவரையில், பிரபஞ்சம் பற்றிய
கேள்விகளில் அவருக்கிருந்த தீவிர ஆர்வமே அவரை இவ்வளவு தூரம் நிலை
நிறுத்தி வருகிறது! அதேவேளையில், பிரபஞ்சம் பற்றிய அவரது ஆராய்ச்சிகள்
பெரிதும் பிரபஞ்சவியல் எனும் விஞ்ஞானத்துறையின் மரபுகளை ஒட்டி மேற்
கொள்ளப்படுபவையே, அதாவது அவை பெரிதும் எந்திரத்தனமானதும்,வெறும்
பொருண்மைவாத (Materialistic) அடிப்படையைக் கொண்டவையுமே
ஆகும்! அதாவது பௌதீகச் சடப்பொருளைத் தவிர வேறு மெய்ம்மை எதுவும்
இல்லை என்பதே அதன் சாரம் ஆகும்! இதன் அர்த்தம், இப்பிரபஞ்சத்தில்
கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதப் பிரக்ஞைக்கும் (Human Consciousness)
கூட இடமில்லை என்பதே! ஆக,விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங்-ன் விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகள் மகத்தானவையோ, பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான,
ஒருங்கிணைவு கொண்ட புரிதலை (Integral Understanding) அளிப்ப
வையோ அல்ல!
சொல்லப்போனால், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோரைவிட ஆன்
மீகச் சிந்தனையாளரும், நூலாசிரியருமான எக்ஹார்ட் டாலியின் பிரபஞ்சம்
பற்றிய உட்-பார்வைகளும் (Insights), வெளிப்பாடுகளும் மேலானவை,
கிட்டத்தட்ட முழுமையானவை எனலாம். [ காண்க: எக்ஹார்ட் டாலியின்
நூல்கள், "இப்பொழுதின் சக்தி" (The Power of Now), மற்றும் "ஒரு புதிய
பூமி" (A New Earth)]
அடுத்து, டாக்டர் நாகூர் ரூமி தனது நூலில், பால் உணர்வு பற்றி எழுதியுள்ள
ஒரு கருத்துரை பெரிதும் பொருத்தமற்றதாக (Out of Place) உள்ளது.
அதாவது, ஹாக்கிங்-ன் மனைவி ஜேன் இரண்டாவது முறையாக கர்ப்பிணி
யானார் எனும் செய்தியைத் தன் நூலில் குறிப்பிடுகையில் ( ஹாக்கிங்-ன்
முற்றிலும் செயலிழந்த உடலை மனதிற்கொண்டவராக) "ஒரு மனிதனின்
உடல் நிலை என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு ஆளான போதும் அவனது
பால்உணர்வுகள் மட்டும் சதாகாலமும் ஒரே மாதிரியான வீச்சு கொண்டதாகத்
தான் இருக்கும் போலுள்ளது! எதில் பிரச்சினை இருந்தாலும் அதில் மட்டும்
பிரச்சினை இருப்பதில்லை!" எனக் கூறியுள்ளார். இத்தகைய குறிப்பை அவர்
எத்தகைய வாசகர்களை மனதிற்கொண்டு எழுதினார் என்று தெரியவில்லை!
ஆனால், பால் உணர்வைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எல்லாவகை
உயிர்-ஜீவிகளுக்கும் அடிப்படையான அம்சம் ஆகும்! பால் உணர்வு என்பது
இனத்தக்கவைப்பு என்பதன் பிரதான கருவியாகும். இனத்தக்கவைப்பு என்பது
மிகத்தொலைவான பரிணாமஇலக்கை அடையும்பொருட்டு ஒரு இனம் இற்று
அழிந்து போகாதிருப்பதை உறுதிசெய்வதற்கானதாகும்! அதாவது, ஒரு உயிரி
யின் உடல்நிலை என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு ஆளானபோதும் அதன்
பால் உணர்வுகள் முறையாகச் செயல்படும்வகையில் அமைந்திருப்பது இயற்
கையானதாகும்! இவ்விதிக்கு மனிதஜீவி விலக்கு அல்ல! ஆகவே, ஹாக்கிங்
அவர்களும் விலக்கு அல்ல! ஹாக்கிங் என்னதான் பெரிய விஞ்ஞானி என்று
சொல்லப்பட்டாலும், அவர் அடிப்படையில் ஒரு உடல்-ஜீவியே எனும் அம்சம்
அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து அவரைப் பயன்படுத்திக்கொண்டு வாரிசு
களை உருவாக்கும்படிச் செய்வித்துவிட்டது! அதாவது, ஒட்டுமொத்த பரிணாம
வழிமுறையின் உச்ச இலக்கான ஆன்மீக உண்மையை ஹாக்கிங் அவர்கள்
தமது பிரபஞ்ச ஆராய்ச்சிகளின் மூலம் கண்டடையாவிட்டாலும், மனித இனத்
தின் ஒரு கிளையான அவர் வழியாக மேலும் சில கிளைகளைத் துளிர்க்கச்
செய்யும் இனத்தக்கவைப்பு எனும் உயிரியல் கடமை அவரால் நிறைவேறியது!
விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்- ன் உதாரணத்திலிருந்து நாம் அறிந்து கொள்
ளக்கூடிய முக்கிய விஷயம் அவரது தன்னம்பிக்கை அல்ல, ஏனெனில், அப்படி
எதுவும் அவரிடம் தனிச்சிறப்பாக இருந்ததாகத்தெரியவில்லை! கடந்த வருடம்
அவர் BBC யிடம் சொல்லிய செய்தியின்படி,1980 களின் மத்தியில் மூச்சு விடு
வதற்காக கழுத்தில் ஒரு குழாய் பொருத்துவதற்காக அவருக்குச் செய்யப்பட்ட
ஒரு அறுவைச் சிகிச்சைக்குப்பிறகு அவர் மூச்சு விடாதிருந்து தற்கொலைக்கு
முயன்றதாகவும், ஆனால்,சுவாசித்திட வேண்டுமெனும் இயல்புணர்ச்சியானது
மிக வலுவாக இருந்ததால் அவரது முயற்சி தோற்றுவிட்டது என்பதாகவும்
கூறியுள்ளார். ஆக அவர் தன்னம்பிக்கை கொண்ட மனிதர் அல்ல. அவர் ஒரு
விஞ்ஞானி தான் என்றாலும் சாதாரண மனிதரே, மகான் அல்ல!
மேலும், உயிர்-பிழைத்திருக்க வேண்டும் எனும் உந்துதல், தன்னம்பிக்கை
என்பதைவிட ஆழமானதும், அதிகத்தொலைவிற்கு வீச்சு கொண்டதுமாகும்!
முக்கியமாக, 'உயிர்-பிழைத்திருக்க வேண்டும்' என்பது வெறும் உந்துதல் மட்டு
மல்ல, அது ஒரு உயரிய, ஒப்பற்ற இலக்கைக்கொண்ட பெருவிழைவு ஆகும்!
ஆனால், அந்தப் பெருவிழைவு ஹாக்கிங் எனும் நபரின் உள்ளமைந்ததாயுள்
ளதா அல்லது படைப்பின், முழுமையின், அல்லது, ஒவ்வொரு அணுவினுள்
ளும் அமைந்த உள்ளார்ந்த அம்சமா? என்பது அதிமுக்கியமான கேள்வியாகும்.
ஹாக்கிங் பதிமூன்று வயதாயிருக்கும் போது வெளிப்படத்தொடங்கிய ALS
என்று சொல்லப்படும் விநோத நோயின் தாக்கத்தினால் அவரது உடலியக்கம்
அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலற்றுப்போன நிலையில், எவ்வொரு விஷ
யத்திற்கும் அவர் பிறரைச் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும்; அவரால் பேச
முடியாது, எழுதமுடியாது; வேறு எதுவுமே செய்யமுடியாது - சிந்திப்பது என்ற
ஒன்றைத்தவிர எனும் நிலையில், அவரது விருப்பமான பிரபஞ்சவியல் துறை
சார்ந்த சவால்களைப்பற்றிச் சிந்திப்பது, ஆராய்வது என்பதை அவர் தன் வாழ்க்
கையாகக் கொண்டுவிட்டார். பிரபஞ்சம் குறித்த விஞ்ஞானப் பிரச்சினைகளைத்
தீர்த்து புதிய கோட்பாடுகளை உருவாக்கிடவேண்டும் என்ற உத்வேகத்தீ தான்
அவரை நிலை நிறுத்தி வருவதுடன், அவரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
வும் பேணிவருகிறது! அவரது கோட்பாட்டியல் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான
உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்தது, தொடர்ந்து உலகம் முழுவதையுமே
திரும்பிப் பார்க்கவைத்துள்ளது!
அடுத்து, ஹாக்கிங்-ன் A Brief History of Time எனும் நூலைப்பற்றிச்
சொல்லியாக வேண்டும். ஹாக்கிங்-ன் இப்புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள்
விற்றுத் தீர்ந்த, ஆனால் அதிகம்பேர் படிக்காத சாதனையைப் புரிந்ததாகச்
சொல்லப்படுகிறது. சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்தான் இது
என்றபோதிலும், வாசகர்களுக்கு கொஞ்சமாவது பிரபஞ்சத்தைப்பற்றித் தெரிந்து
கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இருக்க வேண்டும், அது பற்றிய வேறு சில
சிறு புத்தகங்களை அவர்கள் வாசித்து விஞ்ஞானப்பிரபஞ்சவியலின் அடிப்படை
களை அறிந்திருக்கவேண்டும்; முக்கியமாக, பிரபஞ்சம் என்றால் என்ன என்று
வியந்து அது குறித்து முடிந்தவரை சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்திருக்க
வேண்டும்! எதுவுமில்லாமல் ஹாக்கிங்-ன் புத்தகம் மட்டுமல்ல, ஃப்ராய்டின்
உளவியல் பகுப்பாய்வு பற்றிய நூல்களையும், அல்லது, அரிஸ்ட்டாட்டிலின்
தத்துவம் என எந்தத் துறை சார்ந்த புத்தகத்தையும், சிந்தனைப்பயிற்சியும்,
கேள்வியும் விசாரமும் இன்றி படித்துப்புரிந்து கொள்வது சாத்தியமில்லை!
அதேவேளையில், சாரமான (Essential) பிரபஞ்சவியலுக்கும், விஞ்ஞானத்
துறை சார்ந்த பிரபஞ்சவியலுக்கும் வித்தியாசம் உள்ளது. சாரமான பிரபஞ்ச
வியலில், ஆர்வமிருந்தால் எவ்வொரு சிந்திக்கும் மனிதனும் ஈடுபடவியலும்;
அதற்கு தொலை நோக்கிகளும், கடினமான, மண்டையைப் பிளக்கும் கணித
அறிவும் தேவையில்லை! முக்கியமாக, பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்து
கொள்வதற்கு அண்டவெளியில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன
என்று எண்ணிப் பட்டியலிடவும் தேவையில்லை! அதாவது எவ்வொரு மனித
னும் புரிந்துகொள்ளவேண்டிய பிரபஞ்சம் தழுவிய பிரதான கேள்விகள் எவை
யென்றால், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? பிரபஞ்சம்
ஏன் இருக்கிறது, அல்லது ஏன் தோன்றியது? பிரபஞ்சத்தின் நெடிய பரிணாம
வரலாற்றில் ஒரு கட்டத்தில் உயிர் ஏன் தோன்றியது, பிறகு மனிதன் ஏன்,
எதற்காகத் தோன்றினான்? பிரபஞ்சத்தின் மூலம் எது? அல்லது அது தன்னில்
தானே தோன்றியதா? என்பன போன்ற அடிப்படையான கேள்விகள் மட்டுமே
முக்கியமானவையாகும். இவை துறை சாராத தத்துவம் மற்றும் ஆன்மீகப்
பூர்வமானவையாகும்!
ஆனால், விஞ்ஞானத்துறை சார்ந்த பிரபஞ்சவியலின் கேள்விகளும்,பிரச்சினை
களும் வேறானவையாகும்! அவை விரிவானவை, விலாவாரியானவை! ஆம்,
விஞ்ஞானிகளின் கேள்விகள் எண்ணிறந்தவை; அவற்றிற்கு முடிவு என்பதே
இல்லை எனலாம்! ஆகவே அவை ஒரு கட்டத்திற்கு மேல் தேவையற்றவை!
ஏனெனில், "அணு" என்றால் என்ன என்பது குறித்து மட்டுமே முடிவுக்காலம்
வரை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டேயிருப்பர்! அப்படியானால், பிரபஞ்சம்
குறித்த ஆராய்ச்சிகளுக்கு அனந்த காலமும் போதாது! ஆக, ஹாகிங்-ன் நூலை
சாதாரண வாசகர்கள் படிக்க முடியாததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!
நானும் ஒரு சாதாரண வாசகன் ( A Lay Reader)தான்; ஆனால், நான் அவ
ருடைய A Brief History of Time எனும் புத்தகம் மட்டுமல்ல, அவரும்
Leonard Mlodinow-ம் இணைந்து எழுதிய The Grand Design எனும்
நூலையும் முழுவதுமாகப் படித்தேன்; அதாவது எனக்குத் தேவையில்லாத
அம்சங்களை,விபரங்களை ஒதுக்கிவிட்டுப் படித்துமுடித்தேன். எனக்கு மிகவும்
வியப்பாக இருந்த விஷயம் எதுவென்றால்,தேவையில்லாத கேள்விகளையும்
பிரச்சினைகளையும் எழுப்பி, அவற்றைத் துரத்திக்கொண்டு எவ்வ்வ்வ்வளவு
தொலைவு அவர்கள் செல்கிறார்கள்!
ஆனால், இத்தகைய நீண்ட நெடிய அணுகுமுறை அடிப்படையிலேயே தவறா
னது என்று மனிதனின் "வாழ்-கால வரையறை விதி" சொல்கிறது! அதாவது,
ஒரு மனிதஜீவியானவன் அர்த்தபூர்வமான வாழ்க்கையை வாழ வேண்டுமா
னால், அவன் தனது குறுகிய வாழ்-காலத்திற்குள்ளாகவே வாழ்க்கையை
யும், அதன் பகுதியான பிரபஞ்சத்தையும், மையமான தன்னையும்,அனைத்திற்
கும் ஆதாரமான மெய்ம்மையையும் புரிந்து கொண்டாகவேண்டும்! இப்புரிதல்
ஒருவன் தனது பசிக்கு உணவு உண்பதைப் போன்று, ஒவ்வொருவரும் நேரடி
யாக தாமே முயன்று அடையப்படவேண்டிய ஒன்றாகும்! பிரபஞ்சத்தைப்பற்றி
நியூட்டன் கண்டுபிடித்துச் சொல்லாதவற்றை, ஐன்ஸ்டீன் வந்து சொல்வார்
எனவும், ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கத் தவறியவற்றை, ஹாக்கிங் கண்டுபிடித்துச்
சொல்வார் எனவும் காத்திருப்பது அர்த்தமற்றதாகும்!
மேலும், பிரபஞ்சம் குறித்த விஞ்ஞான அணுகுமுறை, "எப்படி", "எவ்வாறு"
எனும் கேள்விகளை அடிப்படையாகக்கொண்டது. ஆனால், முறையான சார
மான - இதை நாம் தத்துவ அணுகுமுறை எனக் கொள்வோமெனில் - இதில்
"ஏன்" எனும் கேள்வியே மையமானது. விஞ்ஞானிகளுக்கு பிரபஞ்சம் என்பது
ஒரு 'பொருள்', அல்லது 'இயக்கத்திலுள்ள பொருள்' மட்டுமே! ஆனால்,தத்துவ
சிந்தனையாளனுக்கு பிரபஞ்சம் என்பது ஒரு அற்புதப் "புதிர்" ஆகும்!
அதே வேளையில், விஞ்ஞானத்துறை சார்ந்த வானவியல், பிரபஞ்சவியல்
நூல்களிலிருந்து பௌதீகத்தனமான பிரபஞ்சம் பற்றிய பல ஆர்வமூட்டக்கூடிய
விபர உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்! ஆனால், பிரபஞ்சத்தின்
பௌதீகத் தளம் என்பது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மூன்றில் ஒரு பகுதி
மாத்திரமேயாகும்! பிரபஞ்சத்திற்கு ஒரு உயிரியல் தளமும், உணர்வியல்
தளமும் உள்ளது! மேலும், பிரபஞ்சம் பற்றிய, பலராலும் நம்பமுடியாத ஒரு
உண்மை என்னவெனில், பிரபஞ்சத்தின் ஒருமையும் முழுமையும் பிரபஞ்சத்
திற்கு ( வெளி-காலத்திற்கு) வெளியே உள்ளது என்பதுதான்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 05-07-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment